ஹாஸ்டல்-பாகம்-1(18+)

  ஹாஸ்டல்-1(2005)
ஸ்க்ரீன் ஜெம்ஸ், லையன்ஸ் கேட் ஃபீளிம்ஸ் வெளியீடு,
எலி ரொத் எழுதி இயக்கிய திகில் திரைப்படம், ஹாலிவுட்டின் திகில் பட வரலாற்றில் இப்படம் ஒரு மைல் கல், படம் ஆம்ஸ்டர்டம் நகரில் குதூகலமாக துவங்குகிறது, பேக்ஸ்டன்,ஓலி,ஜோஷ் மூவரும் பேக் பேக்கிங்க் என்னும் விடுமுறையில் பெண்கள் மற்றும் போதை மருந்து தேடி ஆம்ஸ்டெர்டம் வருகின்றனர், அங்கு கிளப்பில் ரகளை ஆகி வெளியேற்றப்படுகின்றனர்,
அதில் ஓலி என்பவன் மணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தகப்பன், இருந்தும் பெண் சுகம் அவனை இங்கு அழைத்து வருகின்றது, 


ஓலி அன்று மற்ற இருவரையும் அவன் செலவிலே விபசார விடுதிக்கு அழைத்து செல்கின்றான், மூவரும் பின்னிரவு ஹாஸ்டலுக்கு திரும்ப கதவு அடைக்கப்பட்டுள்ளது, ஆத்திரமடைந்த மூவரும் கதவை திறக்க சொல்லி கத்த மேனேஜெரும் திரும்ப கத்த போலீஸ் சைரன் ஒலிக்கிறது, மூவரும் அருகில் உள்ள வீடு ஒன்றின் பால்கனி வழியே ஏறி விடுதி அறைக்குள் நுழைய அலெக்ஸ் என்னும் பெண் தரகன் அறிமுகமாகிறான், 


அவன் தான் ஐரோப்பாவின் எல்லா தேசத்து பெண்களையும் அனுபவித்துள்ளதாகவும் அதில் இருப்பதிலேயே அழகானவர்கள் ஸ்லோவாக்கிய நாட்டில் இருப்பதாகவும் காமெராவில் தான் அவர்களுடன் நிர்வாணமாக எடுத்துக் கொண்ட படங்களை காட்ட ,ஓலி மிக ஆர்வமாகிறான், அலெக்ஸ் மேலும் அவர்களிடம் அங்கு போரின் காரணமாக ஆண்கள் குறைவு என்றும், அயல் நாட்டவர்,குறிப்பாக அமெரிக்கருக்கு அவர்கள் மயங்கி விழுவர் என்று சொல்ல , ஓலி உடனே அறை பதிவு செய்கிறான், 


ஓலி மூவரும் ஸ்லோவக்கியாவிற்க்கு ரயில் ஏறுகின்றனர், ரயிலில் ஓலியின் புட்டத்தில் பேக்ஸ்டன் மார்க்கர் கொண்டு ஸ்மைலி வரைகிறான், ஓலி தூங்கும் ஜோஷின் முகத்தின் அருகே நின்று போட்டோவிற்கு போஸ் கொடுக்க, திகைத்து ஜோஷ் விழித்து அவனை பொய்க் கோபம் கொண்டு வைகிறான், ஓலியோ புட்டதை பார்க்க நீ விரும்பாவிட்டால் இன்று நான் ஷேவ் செய்த என் கொட்டைகளை பார் என்று ஸ்லேடை செய்கிறான், அப்போது தன் செல்ல மகளிடம் செல்போன் பேசியபடியே இவர்கள் கூபெக்குள் நுழையும் ஒரு ஆள்,ஜோஷின் அருகில் அமர, 


பேச்சு வளர்ந்து தாங்கள் ஸ்லோவக்கியா செல்வதாகச் சொல்ல, அந்த ஆள்,புருவம் உயர்த்தி ஸ்லோவாகியா, நீங்கள் என்ன வேண்டுமானலும் காசிற்க்கு வாங்கலாம்,,என்ன வேண்டுமானாலும் என்று குறிப்பால் உனர்த்துகிறார், மேலும் அவர் அங்கு இளம் பெண்கள் ஜோஷ் போன்ற இளம் அமெரிக்கனுக்காக என்ன வேண்டுமனாலும் செய்வார்கள், என்று சொல்ல மூவரும் புன்னகைக்கின்றனர், அப்போது அந்த ஆள் பையில் இருந்து மாட்டு இறைச்சி போன்ற ஒரு பண்டத்தை எடுத்து மூவரையும் பார்க்க வைத்து வெறும் கைகலாலேயே உண்ண ஆரம்பிக்க மூவரும் திகைத்து ஜோஷ் மட்டும் உங்களிடம் ஃபோர்க் இல்லையா? என்று கேட்க , 


அவர் என் பசிக்காக ஒரு ஜீவன் உயிரை தந்துள்ளது,அதனை மதித்து கவுரவிக்கும் வகையில் தான் வெறும் கைகளால் உண்பதாக சொல்ல, பேஃஸ்டன் தான் ஒரு வெஜிடேரியன் என்று சொல்ல,அந்த ஆள் தான் ஒரு அசைவ விரும்பி,இது மனித இயல்பு என்று சொல்ல, பேஃஸ்டன் நான் ஒரு மனிதன்,உயிர் வதை என் இயல்பல்ல என்று சொல்ல, அந்த ஆள் ஜோஷின் தொடையில் கை வைத்து உன் இயல்பு என்ன?. என்று கேட்க,
அருவருப்பு அடைந்த ஜோஷ் என்னை தொடாதே,என்று எரிந்து விழ, அந்த ஆள் பெட்டியை எடுத்துக்கொண்டு வேறு இடம் போக, மற்ற இருவரும் ஜோஷைப் பார்த்து சிரிக்க,
ரயில் பொரிகொனி என்ற ஸ்டேஷனில் நிற்கிறது, 


மூவரும் சப்வேயில் இறங்கி டாக்ஸி மார்கமாக ஹாஸ்டலுக்கு விரைகின்றனர், டாக்ஸி காரரிடம் வழியில் தாம் பார்க்கும் கட்டிடங்கள் என்ன? என்று கேட்க அவர் ப்ளாஸ்டிக் தொழிற்சாலை என்கிறார், அவர்களை டாக்சி கோட்டை வாசல் அருகே ஆற்று பாலத்தில் இறக்கி விட, ஹாஸ்டல் வருகின்றது, மூவரும் ரிசெப்ஷன் பெண்ணிடம் வர, அவள் அவர்களை அடையாளம் கண்டு வரவேற்று, பாஸ்போர்டுகளை கேட்கிறாள், 


அவரகள் மூவருக்கும் செமி ப்ரைவேட் அறை ஒதுக்கியுள்ளதாகவும், அது தான் அங்கு வழக்கம் என்றும் சொல்ல, இவர்கள் ரூமுக்குள் அலுப்புடன் நுழைய , அங்கே அவர்கள் அழகான இரு பெண்கள் உடை மாற்றுவதை பார்த்து சாரி என்று சொல்ல, அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் , தாங்கள் ஸ்பா விற்க்கு செல்வதாகவும் நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள், என அழைக்க மூவரும் ஸ்பாவில் ,கூடி அரட்டை அடித்து மகிழ, ஓலி தான் ஐஸ்லாந்திலேயே அழகான வழுவழுப்பான கொட்டைகளை உடையவன் என்று சொல்லி ஜோஷுக்கு காட்டப்போக அனைவரும் சிரிக்க , ஜோஷ் தான் அமெரிக்கன் எனவும் ஓலி போல அல்லாமல் சிறு வயதிலேயே தன் பிறப்புறுப்பின் முன் தோல் நீக்கப்பட்டவன் என்று சொல்ல , பேஃஸ்டனும் தன்னை அறிமுகம் செய்கிறான் , 


ஒருத்தி தான் வெத்லானா , பிரேக்கில் பிறந்து வளர்ந்தவள் என்றும் , இன்னொருத்தி தான் நடால்யா என்றும் ,ரஷ்யாவில் பிறந்து வளர்ந்தவள் . என்றும் சொல்ல , ஓலி உற்சாகமாகி ரஷிய மொழி பாடல் ஒன்றை பாட, நடால்யாவும் சேர்ந்து பாட இடமே களை கட்டுகிறது,
அவர்கள் இரவு கேசினொவில் கூடி நடனமாடுகின்றனர், அப்போது பேக்ஸ்டனுக்கும் ஓலிக்கும் போதை மாத்திரையை நடால்யா ஊட்டி விட, ஓலிக்கு அதற்குள் ரிசெப்ஷன் பெண் வாலா இரவுத் துணையாக கிடைத்து விடுகிறாள், ஜோஷ் நடால்யாவின் அருகே அமர்ந்து பேசிகொண்டிருக்கிறான், அவள் சிகரெட் பற்ற வைக்க அவன் முகம் சுளிக்க, அவள் அவனை பார்த்து சிகரெட் புகை உனக்கு தொல்லையாக உள்ளதா? என கேட்கிறாள் ,
அவன் மறுத்து காற்று வாங்க வெளியே வர, அங்கு வரும் பப்பிள் கம் பாய்ஸ்,ஜோஷைப் பார்த்து டாலர் என்று கத்துகின்றனர், 


ஜோஷ் வியப்போடு நீ சிறுவனா?என்று கேட்க, அவர்கள் ஏதோ விபரீதத்துக்கு தயார் ஆகின்றனர், அதற்க்குள் ரயிலில் ஜோஷால் அவமானப்படுத்தப்பட்ட ஆள் வந்து இந்தா ,பிடியுங்கள் என்று சில்லரைகளை தூக்கிப் போட , சிறுவர்கள் அதை பொறுக்கிச் செல்கின்றனர், ஜோஷ் வெட்கி தலை குனிந்து அவரை பார்த்து நன்றியுடன் நான் உங்களுக்கு மது பானம் வாங்கட்டுமா? என்று கேட்டு பாருக்கு அழைத்து போகிறான், அங்கு வைத்து அவரிடன் ஜோஷ் ரயிலில் நடந்ததற்காக மன்னிப்பு கேட்கிறான் அப்போது அவன் அவர் தொடையின் மேல் இயல்பாக கை வைக்க அவர், அவனை பார்த்து சிரித்து தானும் சிறு வயதில் ஜோஷைப் போன்றே நடந்து கொண்டதாகவும்,இப்போது அவர் மாறி விட்டதாகவும் , தனக்கு இப்போது குடும்பம் தான் எல்லாம் என்று கூற, 


அவர் கையில் வேட்டை நாய் படம் பச்சை குத்தப் பட்டுள்ளதை பார்க்கிறான் , அங்கு வரும் நடால்யா இப்போது இவன் என் சொத்து என்று சொல்லி , ஜோஷை ரூமிற்க்கு அழைத்துப் போகிறாள், அங்கு ஒரே அறையில் ஜோஷ்,நடால்யா,பேஃஸ்டன் மற்றும் லெத்வானா உடலுறவு கொள்கின்றனர், அங்கு வரும் ஓலி ,அவர்கள் மேலே விழுந்து விளையாடுகிரான்,
அவனை வாலா வா நாம் ஸ்பாவுக்கு போவோம் என இழுத்து போகிறாள் .காலையில் கண்விழிக்கும் இருவரும் முன் இரவு நடந்த கூடலை எண்ணி மகிழ்கின்றனர், குளியல் அறையில் நீர் விழும் ஓசையும் பேச்சுக் குரலும் கேட்டு, அவர்கள் சிலாகிக்கிறார்கள், இங்கேயே இருந்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள், ஓலி யின் நினைவு வர அவனை நீண்ட நேரம் தேடி அலுத்து , ரிசெப்ஷனில் கேட்க கண்ணாடி அணிந்த ஆள் அவன் வேலைக்கு வரும் முன்பே ஓலி ரூமை காலி செய்து விட்டு சென்றுவிட்டான் என்று கூறுகிறான், 


லெட்ஜெர் புத்தகத்தில் அப்படி தான் உள்ளது என்கிறான் , இருவரும் துருவி கேட்க நாளை விபரம் வாங்கி கொடுப்பதாக சொல்கிறான், இதற்கிடையில் கானா என்னும் ஜப்பானிய பெண் அவர்களிடம் வந்து அவள் தோழியும்,ஓலியும் ஒன்றாக ஊரை விட்டு போய்விட்டதாக தன் செல்லுக்கு ஒரு எம் எம் எஸ் வந்ததாக கூறி செல்லை காட்ட, அவர்கள் அதை ஜோஷின் செல்லுக்கு அனுப்ப சொல்லி, வாங்கிக்கொண்டு ஓலியை தேடச் செல்கின்றனர், அந்த படத்தில் ஓலியும் ஜப்பானிய பெண்ணும் ஒன்றாக இருக்கின்றனர்,
பின்னால் ஒரு புகை போக்கி தெரிகின்றது,ஜோஷ் அது போன்ற இடம் எங்கு உள்ளது ?. எனத் தேடி அலைய அந்த புகை போக்கி தூரத்தில் தெரிகிறது, அவர்கள் அங்கு விரைகின்றனர், அபோது ஓலி,போன்ற தோற்றம் உள்ள ஒருவன் கடந்து போக, இவர்கள் அவனை பார்த்து கத்த, அவன் திரும்பாமல் சந்துக்குள் நுழைந்து,ஒரு போர் மியூசியதுக்குள் நுழைய, இவர்களும் டிக்கெட் வாங்கி உள்ளே போகின்றனர், 


உள்ளே போரில் செய்யும் சித்ரவதைகளை அப்பட்டமாக காட்டுகின்றனர், அதை பார்த்துக் கொண்டே உள்ளே சென்று அந்த ஆளின் தோள் பிடித்து திருப்ப, அவன் முறைக்க, இவர்கள் குழம்பி,இந்த கோட் உன்னிடம் எப்படி வந்தது? இது என் நண்பன் ஓலியுடையது,எனக்கூற,
அவன் இவர்களிடம் இது என்னுடைய கோட் என்று கோபமாக சொல்லி விட்டு போகிறான்,
அப்போது ஓலியிடமிருந்து மீண்டும் எம் எம் எஸ் 'நான் வீட்டுக்கு போகிறேன் என்று வர,
இவர்கள் மேலும் குழம்புகின்றனர். காட்சி மாறி ஒரு இருண்ட அறைக்குள் மேசை மேல் ஓலியின் தலை இருக்க,அதை போட்டோ எடுத்து பேக்ஸ்டன் செல்லுக்கு அனுப்பிய ஆள், 



அடுத்த அறைக்கு சென்று,நாற்காலியில் கைகால்கள் கட்டப்பட்ட ஜப்பானிய பெண்ணின் கால் விரல் ஒன்றை அவள் கதற கதற பெரிய இரும்பு திருப்புளி கொண்டு நசுக்கி உடைக்கிறான், காட்சி மாறி,இருவரும் அலுப்புடன் ஹாஸ்டலுக்கு நுழைந்து ஓலி வந்தானா? என்று கேட்க, இன்னும் வரவில்லை என்று சொல்கிறான், அப்போது நடால்யாவும்,வெத்லானாவும்,அவர்களை,டிஸ்கோதேக்கு அழைக்க, ஜோஷ் அலுப்போடு மறுக்கிறான், பேக்ஸ்டன் அவர்களை காத்திருக்குமாறு சொல்லிவிட்டு, 


ஜோஷை தேற்றி டிஸ்கோதேக்கு அவர்களுடன் அழைத்து போகின்றான், கானா வருகிறாளா என்று கேட்க,அவள் மறுக்கிறாள், டிஸ்கோ கிளப்பில் ஜோஷும் பேக்ஸ்டனும் நன்றாக மது அருந்துகின்றனர், அவர்களுக்கு போதை தலைக்கு ஏற , ஜோஷால் அங்கு இருக்க முடியாமல் ரூமுக்கு கிளம்ப, பேஃஸ்டன் மட்டும் அங்கு இருக்கிறான், கை ஜாடையால் புஸ்ஸி வேண்டாமா ?என்று முத்திரை காட்ட, பதில் கூட சொல்லமுடியாமல் அவனுக்கு போதை வேலை செய்ய ஆரம்பிக்கிறது, ஜோஷ் தள்ளாடியபடியே ஹாஸ்டலுக்கு வர, அங்கு வாலா ரெசெப்ஷனிஸ்ட் அவனை கைதாங்கலாக ரூமுக்கு அழைத்து சென்று படுக்க வைக்கிறாள் , அவளிடம் ஜோஷ் ,ஓலி எங்கே? என்று கேட்க.,நீ களைத்து போயுள்ளாய், தூங்கு என்று அவன் தூங்குவதை வேடிக்கை பார்க்கிறாள், அவள் அருகே இருந்து ஒரு கருப்பு லெதெர் ஜாக்கெட் அணிந்த ஆளும் அவனையே பார்க்க, காட்சி மாறுகிறது, கிளப்பில் பேக்ஸ்டன் தனித்து விடப்படுகிறான், 


மியூசிக் டீஜே ஒருவன் அவர்களை அர்த்தத்தோடு மேலே இருந்து பார்க்கிறான்,இவர்கள் அவனுக்கு போதை தலைக்கு ஏற காத்திருந்து விட்டு ஏமாந்து போய், 2 பெண்களும் உள்ளூர் மொழியை பேச ஆரம்பிக்க, பேக்ஸ்டன் வெறுப்பு அடைகிறான், டாய்லெட் எங்கே? என கேட்கிறான், அவர்கள் வழி சொல்ல, போதையில் தடுமாறி, பார் ஸ்டோர் ரூமிற்க்குள் நுழைந்து , சுதாரித்து திரும்புவதற்க்குள் கதவு வெளியே பூட்டப்பட ,உள்ளேயே கூக்குரலிடிகிறான், 2 பெண்களுக்கும் டயல் செய்தும் கிடைக்காமல் மொபைலில் மெஸ்ஸேஜ் அனுப்ப ,யாரும் திறக்காமல் நொந்து போய் தூங்கி விடுகிறான், காட்சி மாறி, இருண்ட அறை தெரிய, அங்கு மையப்பகுதியில்,தரையோடு ஸ்குரு கொண்டு பிணைக்கப்பட்ட இரும்பு நாற்காலி, அதில் தலையில் துணிப்பை போர்த்தப்பட்ட ஜோஷ் மெல்ல போதை தெளிந்து, கண் ரப்பைகளை அவஸ்தையோடு திறந்து, 


துணியின் ஓட்டை வழியே, அறையை நோட்டம் விட, முகம் சுளித்து,டேபிள் மேலே பார்வை போக அதில் அறுவை சிகிச்சைக்கான சாதனங்கள் , கத்தி,கத்தரி,ஊசி,திருப்புளி,சுத்தியல்,கொரடு, கோடாரி,சிரிஞ்சி,முகமூடி,ட்ரில்லிங் மெஷின்,போன்றவை குவிந்து கிடக்கின்றன, அவன் எழ முயன்று தோற்க, கை கால்கள் விலங்கிடப்பட்டுள்ளதை உணர்ந்து,துடிக்கையில் , இரும்பு கதவு திறந்து முகமூடி அணிந்த ஆள் அருகில் வந்து , அவன் மேல் போர்த்தப்பட்ட துணிப்பையை கழட்டுகிறான், அவன் நீ யார்?நான் என்ன செய்தேன் உனக்கு? இது என்ன கொடுமை ?நீ என்ன செய்ய போகிறாய்?
என்று கேட்கும் போதே அவன் டேபிள் மேலே வைக்கப்பட்ட ஆயுதக்குவியலில் இருந்து ட்ரில்லிங் மெஷினை எடுத்துக் கொண்டு அவன் அருகே வந்து , அவன் இரு தொடைகள்,இரு மார்புகளில் ட்ரில்லிங் மெஷினால் ஓட்டை போடுகிறான், 


அதையும் முகமூடியையும் டேபிள் மேல் வைத்து விட்டு அவன் அருகில் சென்று ஸ்டூலில் அமர்ந்து துடித்து சாகும் அவனை அன்போடு பார்க்கிறான், ஜோஷ் அவன் முகத்தை பார்த்து நீயா? ஏன்?என்கிறான்? அவன் ட்ரெய்னில் ஜோஷ் தொடையில் கை வைத்த ஆள் தான், இப்போது அவன் தொடையில் ஒரு கை வைத்து, மறு கையால், நான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக தான் ஆசைப்பட்டேன், ஆனால்,என்னை போர்ட் ஃபெயில் ஆக்கி விட்டது, நான் வேறு வழியில்லாமல் பிசினெஸ் பண்ண போனேன், அது அலுத்து விட்டது, நீ பொருளை வாங்குவாய்,விற்ப்பாய்,செலவு செய்வாய், என்ன வாழ்க்கை அது? சர்ஜென், அவனே மனித வாழ்க்கையின் இன்ப துன்பங்களை தன் கைகளில் வைத்துள்ளான் என ஆபரேஷன் கத்தியை ஆட்டி,ஆட்டி,சொல்ல, ஜோஷ் ரத்த வாந்தி எடுக்க, அவன் உடம்பில் குருதி ஆறு ஓடுகிறது, இப்போதும் அவன் உயிர் பிச்சை வேண்டி கெஞ்சுகிறான், 


எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்னை விட்டு விடு,என்கிறான், உன் வாழ்க்கை, அதை அவன் தொடலாம், யாரும் ஒன்றும் செய்ய முடியாது, அவனுக்கு அதில் சொந்தம் உள்ளது, அவன் அதில் ஒரு அங்கம் என்று சொல்லி தொடையில் கை வைத்து தேய்க்க, ஜோஷ் அருவருத்து முகம் திருப்பி, பின் கெஞ்சும் குரலில் என்னை போக விடு என சொல்ல, அவன் ஓ நீ போக வேண்டுமா? என தலை ஆட்டி, அது தான் உனக்கு வேண்டுமா? என்று மீண்டும் கேட்க? அவன் தலையை வேகமாக கண்களை மூடியபடி ஆட்ட, அவன் குனிந்து ஆபரேஷன் செய்யும் ஸ்டில்லட்டோ கத்தியால் அவன் இரு பின்னங்கால் எலும்புகளையும் ஆழமாக அறுத்து விடுகிறான், அவன் விடுபடமுடியாமல் துடிக்க , இப்போது அவன் கை , கால் , விலங்குகளின் பூட்டைத் திறந்து கழற்றி விட்டு, நீ போகலாம்,எனச் சொல்ல, ஜோஷ் எழுகிறான், ஆனால் அவன் உடலை தாங்கும் கால்கள் மட்டும் எழ, பாதம் தரையிலேயே இருக்கிறது, 


அவன் விபரீதம் புரிந்து ,திறந்திருக்கும் வாசலை நோக்கி ஊர்ந்து செல்ல , அந்த ஆள் அவனைத் தாண்டி வந்து, அவன் தலை முடியை கொத்தாகத் தூக்கி பிடிக்க, ஜோஷ் என்னிடம் பணம் உள்ளது,10 மடங்கு கூட தருகிறேன், என்னை விட்டு விடு,என சொல்ல, அவன் அதற்க்கு நீ எனக்கு பணம் தருகிறாயா? யாரும் எனக்கு பணம் தருவதில்லை, உண்மையில் நான் தான் இவர்களுக்கு(எலைட் ஹன்டிங்க்)பணம் தருகிறேன், என்று அவன் துடிக்க ,துடிக்க கழுத்தை அறுத்து கொலை செய்கிறான்.


காட்சி மாறி 

காலையில் வேலையாள் எழுப்ப பேக்ச்டன் ஹாஸ்டலுக்கு திரும்புகிறான், அங்கு அவன் அறை காலி செய்யப்பட்டுள்ளது, கண்ணாடி போட்ட ஆள் அவன் உடமைகளை கொடுக்கிறான், அவன் வேலைக்கு வரும் முன்பே ஜோஷ் அறையை காலி செய்து விட்டான் என்றும் , பணிப்பெண் அவன் உடமைகளை வெளியே கொண்டு வந்து வைத்துவிட்டாள் என்றும் சொல்ல , அவன் கோபமாகி கத்துகிறான், ஜோஷ் சொல்லாமல் காலி செய்து செல்லும் ஆள் இல்லை என்றும் , என்ன நடந்தது என்றும் கேட்க , அவன் கவலை படாதே ,நீ திரும்ப அறை எடுத்துக்கொள் என சொல்ல, அவன் அறைக்குள் நுழைகிறான், அங்கு வேறு இரு அழகிய பெண்கள் உடை மாற்றுகின்றனர், அவனை அவர்களும் ஸ்பாவுக்கு அழைக்கிறார்கள், அவனுக்கு எங்கோ பொறி தட்ட, மறுக்கிறான், அவர்கள் வெளியே போகும் வரை நின்று ரிசெப்ஷன் வந்து கானா எங்கே என கேட்க? 


அவளும் அறையை காலி செய்து விட்டதாக சொல்கிறார்கள், அவன் சந்தேகப்பட்டு வெளியே வந்து தேடுகிறான் , புகைபோக்கி தூரத்தில் தெரிய அதை நோக்கி நடக்க , பபிள் கம் பாய்ஸ் எதிர்படுகின்றனர், அவன் செல் போனை பிடுங்கிக்கொண்டு மின்னலாக மறைகின்றனர், அவன் கோபத்தில் ஒருவனை மட்டும் துரத்தி பிடித்து கழுத்தை நெரிக்க , சிறுவன் மூச்சு திணற , அவன் இரக்கப் பட்டு,அவனை போ என்று விட்டு விடுகிறான், அவனுக்கு துக்கம் தொண்டை அடைக்க, போலிஸ் ஸ்டேஷன் செல்கிறான், 


அங்கு பல கேள்விகள் அந்த வழுக்கை போலிஸ்காரன் கேட்க, அவன் பொறுமையாக பதில் சொல்கிறான், அவன் போட்டோவும் புகாரும் வாங்கிக்கொண்டு அவனை ஹாஸ்டலிலேயே இருக்கும் படி சொல்கிறான், ஜோஷும் ஓலியும் கிடைத்தவுடன் தகவல் சொல்லுவதாக சொல்ல்கிறான், போலிஸ் காரன் மேலும், நீ எங்கிருந்து வருகிறாய்? என கேட்க, இவன் கலிஃபோர்னியா என்று சொல்ல, அவன் நீ உன் ஊரில் இருந்து மிகத் தொலைவில் இருக்கிறாய், என சொல்லி குறிப்பால் எதையோ உணர்த்த, பேக்ஸ்டன் அங்கிருந்து கிளம்பி ஹாஸ்டல் வருகிறான், 

அங்கு நடால்யாவும் வெத்லானாவும் காரில் புறப்படுவதை கண்டு அவர்களை பார்த்து கத்திக்கொண்டே ஓட, கார் போய் விடுகிறது, அவன் மெல்ல நடந்து முன்னிரவு வந்த டிஸ்கோ கிளப் வருகிறான், அங்கு வாசலில் வேலை இல்லாத ஆண்கள் கும்பலாக நின்று புகை பிடிக்க, இவன் கடக்கையில் இவனை பார்த்து முறைக்கிறார்கள், அவன் முன்னேறி,கிளப்பில் நுழைய ஒரு இழவு இசை தட்டில் சுழல்கிறது, அவன் அங்கு நடால்யாவும் வெத்லானாவும் ஒரு டாக்ஸி டிரைவரும் அமர்ந்து மது குடிப்பதை பார்த்து , அங்கு சென்று,ஏன் என் மெஸ்ஸேஜுக்கு நீ பதில் தரவில்லை, ஏன் கதவை திறக்க வில்லை,
எனக் கோபமாக கத்த, அவள் என் செல் பேட்டரி டவுன்,நான் உன் செல்லுக்கு பல முறை தொடர்பு கொண்டதாகவும் சிறுவன் எடுத்து பேசுவதாகவும் , யாரோ பேக்ஸ்டன் புதிய பெண்ணுடன் சென்றதாகச் சொன்னார்கள் . என்றும் சொல்லி, மது குடிக்க நிர்பந்திக்கிறாள், 



அவன் மறுத்து,ஜோஷ் எங்கே எனக் கேட்க் அவள் ஏளனமாக அவன் ஓலியோடு பார்த்ததாகச் சொல்ல, இவன் புருவம் சுருக்கி,ஓலியுடனா?எங்கே?என கேட்க, அவள் ஆர்ட் எக்ஜிபிஷனில் என்று சொல்ல, அவன் வாய்ப்பே இல்லை,அவர்கள் கலை ரசிகர்கள் அல்ல என்று சொல்லி, அது எங்கே உள்ளது?வா காட்டு,எனச் சொல்ல, பின் நடால்யா மர்மப்புன்னகையுடன் பேக்ஸ்டேனுடன் கூட இருந்த டிரைவரின் காரில் எக்ஜிபிஷன் நோக்கி பயணிக்கின்றனர். 


வழியில் பபில் கம் பாய்ஸ் எதிர்ப்பட்டு காரை மறிக்க, இவள் ஒரு பாக்கெட் நிறைய பபில் கம் இருக்க , அதில் ஒரு கை அள்ளி அவர்களிடம் தர, அவர்கள் வழி விடுகின்றனர். கார் செக் போஸ்டை தாண்டி எக்ஜிபிஷன் உள்ளே நுழைகிறது. இவன் பாழடைந்த கட்டிடத்தை பார்த்து குழம்பி நிற்க, இவள் உள்ளே கூட்டி செல்கிறாள். அங்கு வாசலில் கணினியில் எதோ பார்த்துக்கொண்டிருக்கும் காவலாளியிடம் சென்று டிக்கெட் எவ்வளவு? என்று கேட்க. அவன் உனக்கு இலவசம் என்று உள்ளே அனுப்புகிறான். இவன் ஆர்வமாக உள்ளே செல்ல,
இவள் வரவில்லை,இவன் மேலும் முன்னேறி உள்ளே செல்ல, 


இவன் பார்க்கும் காட்சிகள் அவனுக்கு ரத்தம் உறைய வைக்கிறது. அங்கு ஜோஷின் தலை டேபிளில் இருக்க , அங்கு ஒரு லேதேர் மேலாடை அணிந்த கொலையாளி நெஞ்சு கூட்டை உரித்து எடுக்கிறான். இவனை திரும்பிப் பார்க்கிறான். ட்ரைனில் வந்த டச்சுக்காரன். இவனுக்கு ஆத்திரத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அடுத்த அறையில் ஒருவன் கோடரியால் ஒருவனின் தலையை துண்டாக்குகிறான். அதற்கு அடுத்த அறையில் ஒருவன் எலெக்ட்ரிக் ரம்பத்தால் ஒருத்தியை அறுக்கிறான். இவன் வாசலுக்கு ஓட அங்கே நடால்யா சிரித்தபடி நிற்கிறாள், 

இவன் அவளைப்பார்த்து தேவடியா,(WHORE)பெட்டைநாயே (பிட்ச்) என்று திட்ட அவள் நான் அமெரிக்கன் உனக்காக நிறைய பணம் வாங்கியுள்ளேன், அது உன்னை என் பிட்ச் ஆக மாற்றியது, கோபக்கார அமெரிக்கனே. என்று அசிங்கமாக சிரிக்கிறாள், அதற்குள் இவனை இரு லெதர் ஜாக்கெட் ஆசாமிகள் பிடித்து , இழுத்துக்கொண்டுபோய் தரையுடன் பிணைக்கப்பட்ட இரும்பு நாற்காலியில் கால்களை கை கால்களை விலங்கிட்டு அமர வைக்க, உள்ளே ஒரு ஜெர்மானியன் நாஜி யூனிபாரத்துடன் வருகிறான், அவன் ஒரு யுத்த சைக்கோ , இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வென்றதற்கு பழி தீர்க்க அமெரிக்கனை கொல்ல கேட்க இவனை அவனுக்கு விற்று இருக்கின்றனர். அவன் இவனை எப்படி கொல்லலாம் என யோசிக்கிறான்,? ஒரு சிரிஞ்சி எடுத்து இவன் ரத்தம் எடுக்கிறான், 


அப்புறம் கத்தரிக்கோலால் இவன் கண்ணை குத்துவது போல பயமுறுத்தி இவன் கண் இமைக்கும் நேரத்தில் தலை முடியை வெட்டி , பத்திரமாக பிளாஸ்டிக் பையில் போட்டு, சட்டைப் பையில் வைக்கிறான். அமெரிக்கனின் மயிரை பிடிங்கியதால் பெருமை பொங்க, செயின் சா என்னும் எந்திர மரம் வெட்டியை எடுக்க, இவனை பார்த்து நீ அமெரிக்கனா? என்று ஜெர்மனியில் கேட்க.. இவன் இல்லை நான் ஐரோபியன் என்று சொல்லுகிறான். மேலும் இவன் அவனிடம் ஜெர்மன் மொழியிலேயே கெஞ்சுகிறான், என்னைக் கொன்றுவிட்டால் நான் உடனே இறந்துவிடுவேன், ஆனால் ஒரு உயிரை கொன்ற பாவத்திற்காக நீ தினமும் இறப்பாய், என்று சொல்ல அவன் இவனை ஓங்கி அறைந்துவிட்டு வெளியே போய் காவலாளியிடம் சண்டை பிடிக்கிறான், நீ எனக்கு அமெரிகனை தரவில்லை என்று, அவர்கள் இவன் பாஸ் போர்டை காட்டி இவன் அமெரிக்கன் தான் என நிரூபித்து மீண்டும் அந்த அறைக்குள் அனுப்புகின்றனர், 


அவன் பேசாமல் இருக்க பால் கேஜ் (BALL GAUGE) இவன் வாயில் அடைக்கின்றனர். இப்போது ஜெர்மானியன் கூரிய இரும்பு கோணி ஊசியால் இவனை குத்துகிறான். இவனுக்கு வாந்தி வருகின்றது. மூச்சும் அடைக்கின்றது, அதைப்பார்த்து இவன் நாம் கொல்ல வாங்கியவன் , நம் கையால் தான் சாகனும் என்ற நல்ல எண்ணத்தில், பால் கேஜ் அதை உருவி வெளியே போடுகின்றான். பின்னர் செயின் சா வை எடுத்து இவன் காலை துண்டாக்க எண்ணி , இவனை நெருங்க ,இவன் துள்ள, அவன் தடுமாறி இவனது கை விரல்கள் மேல் செயின் சா பட்டு இரண்டு விரல்கள் துண்டாகி விடுகின்றன. 

இவன் துடிதுடித்து அலற, இவன் நாற்காலி போல்டுகள் பெயர்ந்து விடுகின்றன. அவன் மீண்டும் செயின் சாவை எடுத்து வர , கீழே இருக்கும் விரல் பட்டு வழுக்கி விழுகிறான். செயின் சா வை நழுவ விடுகிறான், அது திசை மாறி அவனது காலையே வெட்டி விடுகிறது. ஜெர்மானியன் ரத்த வெள்ளத்தில். இவன் சிறிதும் தாமதிக்காமல் நாற்காலியை பெயர்த்து எழுந்து மேசை மேலிருந்து பிஸ்டலை எடுத்து பொட்டு பொட்டு என்று சுட்டுவிடுகின்றான். 



அவன் சுருண்டு விழ, அவன் சட்டை பையிலிருந்து சாவியை எடுத்து, கை கால் விலங்குகளை திறந்து கொண்டு , நாற்காலியில் ,அமர்ந்து ஜெர்மன் மொழியில், உதவி உதவி என்று கூப்பாடு ,போட , வெளியில் போர்ன் பார்த்துக்கொண்டிருந்த காவலாளிகள் இருவர் ஓடி வருகின்றனர். இவன் அவர்களுக்கு முதுகை காட்டி அமர்ந்திருக்க இவர்கள் அறைக்குள் நுழைந்து ஜெர்மானியன் பிணத்தை பார்த்து அதிர்ந்து, இவன் அருகில் வர இவன் அவர்கள் இருவரையும் கண்ட மேனிக்கு சுட்டுவிட்டு வெளியேறுகிறான், போகும் வழியே காரிடாரில் நிறைய அறைகளில் நடக்கும் கொலைகளை பார்க்கிறான். விதவிதமான மனித மிருகங்கள். 


ஒரு அறைக்குள் நுழைந்து பதுங்க அங்கு ஒரு அரக்கன் போன்ற ஒரு கூன் விழுந்த கசாப்பு காரனை (butcher) பார்க்கிறான். அவன் தள்ளிவந்த வண்டி நிறைய பிணங்கள் , எரியூட்ட எடுத்து போகிறான்,அவன் அந்த அறையில் இருக்கும் பிணத்தை எடுக்கும் போது. இவன் அந்த அரக்கன் தள்ளி வந்த பிண வண்டியில் பிணம் போல படுத்துக் கொள்ள , மேலே ஜோஷின் பிணம், இவனுக்கு குமட்டிக் கொண்டும் ,அழுகையாகவும் வருகிறது. ஆனாலும் எப்படியாவது தப்பிக்கவேண்டும் என்ற வெறியும் இருக்கிறது. 


இந்த அரக்கன் இவனையும் வைத்து வண்டியை தள்ளிக்கொண்டு போய் லிப்டில் நுழைந்து வண்டியை உள்ளே தள்ள, சக்கரம் ஒரு துண்டுபட்ட கையில் மாட்டிக் கொண்டுள்ளது. அந்த ரத்தம் தோய்ந்த கையை எடுத்து இவன் மேல் வைக்க , இவன் அருவருப்பில் துடிக்கிறான். லிப்ட் கடைசி தளம் போய் நிற்க, அரக்கன் அந்த வண்டியை தள்ளிக் கொண்டு போய் கசாப்பு பலகை மேலே வைத்து,பிணங்களின் ஒவ்வொரு அங்கமாக துண்டு போடுகிறான். இவனது துண்டான விரல்கள் அவனது சட்டை பையிலிருந்து கிழே விழ , அந்த அரக்கன் அவற்றையும் பொறுக்கி,துண்டு போட்டு உலை கலனில் போடுகிறான். ஒவ்வொரு உடலையும் கூறு போட்டு நெருப்பில் போட, இவன் விரல்கள் போன கோபத்தில் வீறு கொண்டு எழுந்து ஒரு எலும்பு நொறுக்கும் சுத்தியலை எடுத்து அவன் தலையில் ஒரே போடு. அவன் தலை சரிய.
இவன் எஸ்கேப், 


இதற்குள் இவனைத்தேடி அங்கும் இங்கும் கருப்பு சீருடை வெறிநாய்கள் எந்திரத் துப்பாக்கியுடன் அலைய, இவன் cctv காமிராவில் படாத வண்ணம் ஓடிச் சென்று. கஸ்டமர் லவுஞ்சிற்க்குள் நுழைந்து , அங்கு மாட்டப்பட்டிருக்கும் கஸ்டமரின் உயர்தர சூட்டுகளை அணிகிறான். கைகளுக்கு கிளவுசுகள் அணிந்து கொண்டு. திரும்ப, அங்கு எலைட் ஹன்டிங் என்னும் விசிடிங் கார்டை பார்க்கிறான். அதில் அமெரிக்கர்களுக்கு =50000 டாலர் . ஐரோப்பியர்களுக்கு =30000 டாலர் ,ஆசியர் மற்றும் ரஷியர்களுக்கு - 10000 டாலர் என்று போட்டிருக்கிறது. கீழே ஈமெயில் முகரியும் "www.elitehunting.ru" (ஒரு வேலை ருஷ்யாவில் இப்படி நடப்பதை சித்தரித்திருக்கலாம்) என்று போட்டிருக்கிறது. 


இவன் அந்த கார்டையும் எடுத்துக் கொண்டு, ஜன்னல் வழியே கீழே பார்க்க, அங்கு இவன் புகார் அளித்த போலீஸ் காரன் சிரித்துக் கொண்டே அங்கு நின்ற டிரைவர்களிடம் பேசிவிட்டு காரில் புறப்படுகிறான்(லஞ்சம் வாங்கிக் கொண்டு)இவனுக்கு நன்கு புரிகின்றது.
போலீசை நம்பி பலனில்லை என்று..


அப்போது அறைக்குள் நுழையும் இன்னொரு அமெரிக்க கஸ்டமர் இவனிடம் வந்து"என்ன புறப்பட்டு விட்டாயா?"என்று கேட்கிறான். இவன் ஆம் என்று சொல்லி நகர, அவன் இவனை தோளை திருப்பி "எப்படி இருந்தது? கொன்ற அனுபவம்? எப்படி கொன்றாய்? சீக்கிரமா?அல்லது நிதானமாகவா?என்று வினவ? இவன் சீக்கிரம்,என்று சொல்லுகிறான். அது..... என்று சொல்லி.. சரி இதோ பார் என்னுடைய வேட்டை நாய் டாட்டூ.. உன்னுடையதை காண்பி என்று கேட்கிறான். 


இவன் திகைக்க.. சரி நான் எப்படி கொல்லப்போகிறேன் என்று சொல்லு? மேலும் அவனே..மெதுவாக சித்தரவதை செய்து..கொள்ளுவேன். ஹி ஹி .. நான் அமெரிக்கண்டா.. என்று சொல்ல..வெளியே கதவை தட்டும் ஓசை கேட்கிறது.. இதோ வருகிறேன் என்று அவன் தன சில்வர் பிஸ்டலை அங்கேயே விட்டுச் செல்கிறான். இவன் அதை எடுத்துக்கொண்டு , 

லாவகமாக பல சோதனைகளையும் கடந்து வெளியே நின்ற கார்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து ஏறும் சமயம். ஒரு பயங்கர அலறல் கேட்கிறது.. இவன் தான் இருக்கும் ஆபத்தையும் பற்றி கவலை படாமல் மீண்டும் கொலை செய்யும் அறைக்கு செல்கிறான். அங்கு அந்த அமெரிக்கன் , கானா(ஜப்பானிய பெண்)வை எரி சாராய விளக்கை கொண்டு கண்களை சுட்டு பொசுக்க.. இவனுக்கு தூக்கி வாரி போட்டாலும், சுதாரித்து , அங்கு அருகே சென்று அமெரிக்கனை சுட்டு தள்ளுகிறான். 


அவள் இவனும் நல்ல உடையில் இருப்பதை கண்டு கஸ்டமர் என்று நினைக்க இவன் அவளிடம் தானும் மாடிக் கொண்டதை சொல்லி, அவள் விலங்கை அவிழ்த்து விட, அவள் இவனிடம் தன்னை கொன்று விடும் படி சொல்கிறாள், இவன் வெளியே வந்து தொங்கிக் கொண்டிருக்கும் அவள் வெந்து போன கண்ணை அங்கு இருக்கும் கத்தரிக்கோல் கொண்டு மிகுந்த வேதனையுடன் அறுக்கிறான். அப்போது சீழ் வடிகிறது..அவள் துடிக்க. இவன் தேற்றி அவளை காருக்கு கூட்டி வந்து, வேகமாக சோதனை சாவடி ,அங்கு நின்ற காவலாளி எல்லோரையும் அடித்து நொறுக்கி விட்டு பறக்க, 

இவன் காரை பின் தொடர்ந்து இன்னொரு காரில் அந்த கொலைகாரர்கள் துரத்த, இவன் கார் ஒரு சந்துக்குள் நுழைகையில் முன்னால் ஒரு வேன் நின்று எதையோ இறக்க ,இவன் ஹாரனை அடித்துக் கொண்டே இருக்க , அந்த வேன் காரன் வண்டியை திட்டிக் கொண்டே நகர்த்தி வழி விட , இவன் அடுத்த ரோடில் திரும்பும் போது அங்கே பபிள் கம் பாய்ஸ் எதிர்ப்பட்டு, பபிள் கம் என்று கத்த , நல்லவேளையாக அங்கே ஒரு பை நிறைய பபிள் கம் இருக்கிறது , 


(நடால்யா வந்த கார்) அதை அவர்களிடம் தூக்கிப் போட,சிறுவர்கள் வழி விடுகின்றனர். இவன் போகும் வழியில் நடால்யா,வெட்லானா ,மற்றும் அலெக்ஸ் மூவரும் சாலையில் நின்று பணத்தை பங்கு போட்டு சிரித்தபடி நிற்பதை பார்க்கிறான். அவர்களும் இவனை ஒரு கணம் நோக்க. இவன் காரை அதீத வேகத்தில் கொண்டு போய்,அப்படியே ஒரே ஏத்து. இன்னும் வெறி தீராமல் அலெக்ஸ் என்பவனை சுவற்றில் வைத்து நசுக்கி கூழாகி மீண்டும் அந்த பெண்களை ரிவர்சில் வந்து இன்னொரு ஏத்து. 

மூவரும் கூழாக. இவனை துரத்தி வந்த காரை இப்போது பபிள் கம் பாய்ஸ் வழி மறிக்க. காரில் இருந்தவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்ட , மேலே இருந்து பெரிய கற்கள் பறந்து வந்து சரமாரியாக தாக்க.ஒவ்வொருவரின் மண்டையையும் நசுக்கி கொல்கின்றனர். (அலுமினியம் தட்டு போல நசுங்குவதை எப்படித் தான் எடுத்தார்களோ?) இப்போது இவன் காரை ரயில்வே ஸ்டேஷேன் நோக்கி விரட்ட, கானா ஒரு கண்ணையும், பாதி பக்க முகத்தையும் இழந்ததால் வழியில் கதற. இவன் போலீசார் அங்கு செல்லும் வாகனங்கள் ஒவ்வொன்றையும் சோதனை இடுவதை கண்டு (போலீசும் கூட்டு) காரை அங்கேயே நிறுத்தி விட்டு பதுங்கி பதுங்கி ரயில்வே ஸ்டேஷேன் வந்து சேர. 


அங்கே போலீசாரும் கொலைகாரர் படையும் இவர்களை தேடி அலைய , கானா அறிவிப்பு பலகை கண்ணாடியில் தன் முகத்தை கண்டு குலை நடுங்குகிறாள். அழகிய தன் முகம் இப்படி சிதைக்கப்பட்டதை அவள் நினைத்து வாழும் வைராக்கியத்தை விட்டு, தன்னை காப்பாற்றிய இவனை காப்பாற்ற ஒரு சந்தர்ப்பம் என கருதி, பக்கத்து தண்டவாளத்தில் மிக வேகமாக வந்த ஒரு ரயில் எஞ்சின் முன்னே பாய்கிறாள். 


அது இவளை அடித்து நொறுக்கி,சிதைத்து.எதிர் பிளாட்பாரத்தில் இருந்த அனைவரின் மீதும் ரத்த சகதியை தெளித்து விட்டு போக, போலீஸ்காரர்களும்,கொலைகாரர்களும் திகைத்து நிற்க, பெரும் கும்பல் கூடுகின்றது. இவன் அதை சரியாக பயன்படுத்தி அங்கு வந்த ஜெர்மனி செல்லும் ரயிலில் ஏறுகின்றான். அங்கு அமைதியாக அமர்ந்து இளைப்பாற. இரண்டு இருக்கைகளுக்கு முன்னால்,அந்த டச்சு தொழிலதிபரின் குரல் கேட்கிறது."அதே வசனம்" அதே மாட்டுக்கறியை வெறும் கையால் தின்ன. எதிர் சீட் ஆள் "போர்க்" இல்லையா?என கேட்க.
அதற்கு விளக்கம் கொடுக்கையில் இவன் கவனிக்க நேரிடுகிறது. 


இவன் பழி தீர்க்க எண்ணி திட்டம் தீட்டி அவன் இறங்கிய ரயில் நிலையத்திலேயே இறங்கி பின் தொடர்கிறான். அந்த ஆள் கூட்டம் இல்லாத கழிப்பறைக்குள் நுழைய , இவன் பின் தொடர்ந்து கதவை சாத்தி, ,"cleaning in progress" போர்டை கதவில் மாட்டி,உள் தாழ் இட்டுக்கொண்டு. இந்த ஆள் மலம் கழிக்கும் கழிவறை பிளைவூட் தடுப்பு சுவரின் கீழே உள்ள திறப்பின் வழியே எலைட் ஹன்டிங் விசிடிங் கார்டை போட, 


இந்த ஆள் திகைத்து, ஒ ஜீசஸ்,என்று சொல்லி எடுக்க இவன் விருட்டென்று கையை பிடித்துக்கொண்டு தன் விரல் போனதற்கு பதிலுக்கு பதிலாக, ஆபரேஷன் செய்யும் ஸ்டில்லடோ கத்தியால், இரண்டு விரல்களை நறுக்கி துண்டாக்குகிறான். பின் அந்த ஆளின் கழிவறை கதவை அந்த ஆளின் தலையில் , பலமாக மோதி திறந்து உள்ளே சென்று , 

அந்த ஆளின் பின் பக்கமாக இறுக்கிக் கொண்டு கழுத்தை கோழியை அறுப்பது போல அறுக்கிறான். கழுத்து துண்டாக, அப்படியே கழிவறை கோப்பையில் முக்குகிறான். பின் தலை முடியை பிடித்து தூக்கி தன் முகத்தை அந்த ஆள் கழிவறையின் பெரிய எவர் சிவர் flush வால்வ் பொத்தானில் பார்க்கும் படி செய்துவிட்டு , அந்த ஆள் நீயா? என்று முனக,கழிவு நீரில் அமுக்குகிறான். கழிவு நீர் குருதி நீராகிறது...


இவன் சுப்ரமணியபுரம் சசிகுமார் மாதிரி வஞ்சம் தீர்த்த நிம்மதியில் கிளம்பி, அங்கு தயாராக நின்ற வியன்னா போகும் ரயிலில் ஏறி அமர்ந்து களைப்பிலும்,அயர்ச்சியிலும் மயங்கி சரிய. ரயில் மறுநாள் வியன்னா போகின்றது. அங்கு வியன்னாவின் நல்ல போலீஸ் இவனை மருத்துவ உதவிக்கு அழைத்து செல்வது போல படம் முடிகிறது.

நட்புக்கும்,,மனித நேயத்திற்கும் சிறந்த உதாரணமாக இந்த பேக்ச்டன் பாத்திரம் இந்த பார்ட்-1 இல் தப்பி பிழைப்பது போல சித்தரித்தாலும் அடுத்த ஹாஸ்டல் பார்ட்- 2 இல் முதல் ரீலிலேயே சாஷாவின்( எலைட் ஹன்டிங் முதலாளி) ஏவுதலின் படி ஒரு மோட்டார் சைக்கிள் ஆசாமியினால் கழுத்தை அறுத்து கொல்லப் படுவான். (அவன் வீட்டு பூனை துண்டு பட்ட கழுத்தை நக்கும்) அந்த பார்ட்டில் முழுவதும் மூன்று பெண்களை வைத்து எலி ராத் இயக்கியிருப்பார். அது இந்த அளவு கோரம் கிடையாது. 


(அதில் எலைட் ஹன்டிங் எப்படி மனித மிருகங்களை தன் கிளப்பில் சேர்க்கிறது?எப்படி மனித உயிர்களை ஈ பே போன்ற எஸ் எம் எஸ் மூலம் ஏலம் விடுகிறது?அதன் கொள்கைகள் போன்றவை..) 


இந்த படத்தை பார்த்து விட்டு எந்த "slaughter" வரிசை படங்கள் எதைப் பார்த்தாலும் எறும்பு கடித்தது போல தான் இருக்கும். டெக்சாஸ் செயின் சா மசாக்ரே கூட.ஏன் இப்போது பார்த்த 3d கொலைபடம் "மை டியர் வேலண்டின்"(படத்தில் ஒருவரின் சிதைக்கப்பட்ட தாடை பறந்து வந்து நம் மேல் விழுகிறது..நல்ல கூத்து.(திரை அரங்கே தாடையை கைகளை கொண்டு தட்டி விடுகிறது) 


படம் சொல்லும் பாடம்:- 

 
போதை மனிதனை மயக்கும் ,போகப் போக உயிரை குடிக்கும்.
முன் பின் அறிமுகமில்லாத பலவிதமான பெண்களை புணர நினைத்தால்,இப்படியும் நடக்கும். பொதுவாய் விழிப்போடு இரு. இப்படி பல. படம் சக்கரையில் முக்கி எடுக்கப்பட்ட சயனைடு விஷம். 


இந்த படம் இயக்கிய எலி ரோத் குவென்டின் டோரோன்டிநோவின் சிஷ்யர்.(எப்படி படிக்கிறது?பேரை)குருவை வைத்தே தயாரித்திருக்கிறார்.
டோரோன்டிநோவின் படங்கள்
pulp fiction , grind house death proof (இதில் எலி ரோத்தும் குவேண்டினும் நடித்திருப்பார்)
Inglourious Basterds(aug2009)cannes இல் நல்ல வரவேற்பை பெற்றது (டிரைலர் பாருங்கள்)
Kill Bill Volume 1
Kill Bill Volume 2
Reservoir Dogs
போன்றவை,நான் பார்த்ததில் பிடித்தது. இசை பற்றி சொல்லவேண்டும், ரத்தம் கழுவி விடப்படும் ஓசை. ஆட்டோ மேடிக் இரும்புக்கதவு சாத்தும் ஓசை,ஆரம்பக் காட்சியில் துள்ளல் ஓசை.ஹாஸ்டலில்,ஸ்பாவில் என்று.நம்மை புரட்டிப்போட்டுவிடும்.அதில் அந்த பஸ்செர் ஓசையும்.ரத்தம் கழுவுபவன் விசிலடித்துக் கொண்டே சுத்தம் செய்வது.என்று...
என்னை தயவு செய்தது யாரும் சைக்கோ என்று எண்ணிவிடாதீர்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி இதோ.

நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி கூகுள்

தாழ்மையான விண்ணப்பம் :-

இங்கு முழு படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி தந்திருக்கிறேன் என்று
நினைப்பவர்கள்,நினைப்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்.


காரணம்:-
முன்பு நான் ஆங்கில படத்தின் உச்சரிப்பு புரியாமல் அதை முழுமையாக புரிந்து ஊன்றி பார்க்க முடியாமல் போனது.அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்னும் சிறு முயற்சி. இதை குறை சொல்லி நான் எடுக்கும் இந்த நல்ல முயற்சியையும் கெடுக்க வேண்டாம்.எல்லாவற்றிர்க்கும் மேல் பாணி என்று ஒன்றிருக்கிறது.
இது என் பாணி.


இது எனக்கு எழுத்து பயிற்சியும் அளிக்கிறது.
imdb தளத்தில் விசிறிகள் ஒரு படத்தில் லயித்தால் அதை பற்றி "trivia" மற்றும்
faq,goofs,synopsis,plot எழுதி அந்த படத்தின் வெற்றிக்கு உதவுவதுண்டு.
அது போல ஒரு சிறு முயற்சி தான் இது.
ஒரு படத்தை விமர்சனம் படித்துவிட்டு போய் யாரும் கட்டாயம் பார்ப்பதில்லை.
நாம் லயித்ததை பிறருக்கு சொல்கிறோம் அவ்வளவே.
நன்றி












Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)