அம்மா திரும்ப வந்தாள்-சிறுகதை






















ம்மா  தவசத்துக்கு ஒரு வாரம் தான் இருக்கு,நிமிஷமா மூணு வருஷம் ஓடியே போச்சு,யார் தான் நினைத்திருக்கக் கூடும்?அவ்வளவு நல்ல‌ஆத்மா!நல்ல என்னும் சொல்லுக்குள் அவளை அடைத்துவிடுவது ஒரு பேதமை,”சூரியன் சுடும் என்பது போல.”

மிக வைராக்கியமான பெண்மணி,தன் சுக துக்கங்களுக்கு  சிறிதும் முக்கியத்துவம் அளிக்காமல் ,குழந்தைகளுக்காகவும்,பிற‌த்தியாருக்காகவும் வாழ்ந்த மிக நல்ல ஆத்மா.


என்னதான் இருந்தாலும் நான் ஒரு கோழை போல‌
அவளிடம் என் புதிய வெளி நாட்டு கம்பெனி என்னை நடத்தும் விதம் குறித்து
கூகிள் சாட்டில் சொல்லியிருக்கக்கூடாது தான்,அதுவும் இரண்டாயிரம் மைல்கள் தள்ளி வந்துவிட்டு அம்மாவிடம் புலம்பியது தவறே!

வெகுளி,உடனே கிளம்பிவிட்டாள்,அவள் அம்மாவிடம் முறையிட.
மருவத்தூருக்கு,முட்டி போட்டு மூன்றுக்கும் மேல் பிரதஷனம் செய்த்ததாக‌
போன வருடம் கோவிலுக்கு போன போது  தெரிந்த‌செக்யூரிடி சொன்ன போது
அவள் சாவுக்கு வராத கண்ணீர் கண்களில் முட்டியது.அவரிடம் அம்மா போன விஷயம் சொல்ல அவரும்  கைகூப்பி கருவறையை பார்த்தார்.

வினுவை டெல்லியில் கல்யாணம் செய்து கொடுக்க முதலில் ஜாதகம் பார்த்து ஓகே சொன்னது,அவள் அலுவலகத்தில் லோன் போட்டது, எல் ஐ சி யில் 1லட்சம் ரூபாய் பாலிசி முதிர்வடைய ,அதை வாங்க என் ஸ்கூட்டரில் என்னிடம் திட்டு  வாங்கிக்கொண்டே அமைதியாக வந்தது,என்ன மகன் நான் ஒரு இளநீர் கூட அந்த  வெயிலில் வாங்கிக் கொடுக்கலையே?அம்மா மீது ஏன் எனக்கு அவ்வளவு கோபம்? இவ்வளவு கோபத்தை மூணு வயசில் விட்டுப்போன அப்பாமீது கூட காட்டலையே?

வினுவை பிரிந்தது தான் அம்மா போக காரணமோ? இருக்காது,பானுவும் ,குழந்தை சம்யுக்தாவும் தான் வாரா வாரம் வந்து பேசிவிட்டு போகிறார்களே?
அப்புறம் ஏன்? நல்ல குடும்பத்தில் கொடுத்திருக்கேன் என திருப்திபட்டாளே?
திவ்யாவுக்கும் அம்மாவுக்கும் சிறிது மாமியார் மருமகள் பூசல் இருந்தது உண்மைதான். அந்த மாதம் நான் அம்மாவுக்கு கொடுத்த பணத்தை திவ்யா கையில் தராமல் கிழே வைத்து எடுத்துக்கோங்க‌, என்றதனால் இருக்குமோ?

திவ்யாவை நான் பானு என திட்டி தீர்த்தாகிவிட்டது,அமிர்தா குட்டிக்கு பாட்டி ஐஸ் பெட்டிக்குள் தூங்குகிறாள். என வந்த  ஜனங்களுக்கு சொல்லுவதே பெரிய வேலையாயிருந்தது.அம்மா கடைசியாக அவளை பற்றி தான் பேசினாளாம்.மீண்டும் கண்ணீர் முட்டியது.பெரியம்மா சொன்னார்கள்,யாரோ மாத்திரை ஓவெர்டோஸ்,அது தான் நெஞ்சு வலி வந்து போய்டா என்றனர்.


அம்மா ஒரு காலையில் வேலைக்கு போக என்னிடம் பத்து ரூபாய் பணம் கேட்டாள்.நான் அம்மா ஐம்பது வயதில் இன்னும் வேலைக்கு போகுதே இந்த சனியன்,என்று அசிங்கமாக திட்டி விட்டு,வேலைக்கு வந்து விட்டேன். எப்படியோ பக்கத்து வீட்டில் காசு வாங்கி வேலைக்கு போய் திரும்பிய அம்மா,ராஜப்பா என கதவை சத்தம் செய்ய‌,அலுவலக கடுப்பில் இருந்த நான் என்ன?என கத்த.இந்தாப்பா என ஐநூறை நீட்டி,உனக்கு சம்பளம் போட நாளாகுமோல்யோ?எனக்கு சம்பளம் போட்டுட்டா,இந்தா வச்சிக்கோப்பா! கண்ணா என்றாள்.உடனே வாங்கிக்கொண்டேன்.வினு கல்யாணம் ஆனதும் வேலையை விட்டுடறேன்,இல்லாட்டி நீ சிரமப்படுவியோல்யோ! என்றாள்,
இதைவிட எனக்கு ஒரு வெட்கி தலைகுனிய தருணம் வரவும் வாய்புள்ளதா?

அன்று நைஃப் ரோடு அருகே கோல்டு சவுக்கில் அவ்வளவு கூட்டத்தில் அம்மாவுக்கு நகை வாங்க போக வேண்டிய அவசியம் தான் என்ன?மனசுக்குள் அம்மா சாகப்போகிறாள் என பட்சி சொன்னதாலோ?அப்போதே புதிதாய் போட்ட போனஸை ஏடிஎம்இல் எடுத்துக் கொண்டு அம்மாவுக்கு மூணு பவுனிலாவது சங்கிலி வாங்க  ,ஜனசந்தடியில் விரைவாய் கலக்க, ஜீன்ஸ் பின் பாக்கெட்டிலிருந்து லாவகமாக உருவப்பட்ட பர்ஸ்.வாழ்வில் முதல் முறையாக அவ்வளவு பணம் (இந்திய மதிப்பு 24000 ரூபாய்)போனசாக பெற்றது அதை நொடியில் யாரோ அடித்தது,ரூம்மேட் என்னடா நகை குடுக்கறென்னு சொன்னியே?குடுடா,என்று சொல்ல, நான் எதுவும் பேசமுடியாமல் தொண்டை அடைத்தது.

இந்த கொடுமையையுமா?அம்மா காதில் மடத்தனமாக போடுவது?
சரியான கோழைத்தனம்,இந்தமுறையும் என் அம்மா அவள் அம்மாவை பார்க்க மேல்மருவத்தூர்  சென்றாள்.கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி நேர்கிறது?என வேண்ட,மறு நாள் நான்கு முறை மனைவி அழைத்ததும்,அவசர வேலையில் இருந்த நான் ,என்ன இழவுக்கு ஆபீஸ் நேரத்தில் போன்?சொல்லித்தொலை!என சீற.

நீங்க கூகிள் சாட்ல வாங்க,யாஹூல வெப்கேமில உங்கம்மாவை பாருங்க.
எனக்கு அம்மாவை பார்த்ததும் வயிறு பற்றி எரிந்தது.மொட்டை தலையுடன் அம்மா.வழக்கம் போல திட்ட வாங்கிகொண்டாள்.திரும்ப பதில் பேசு என திட்ட. சைகை காட்டினாள்,எச்சில் கூட விழுங்காத விரதமாம்.

இப்போது நன்கு புரிந்தது,தன் காலில் நின்று சம்பாதித்த அம்மாவை வேலையில் இருந்து கட்டாய ஓய்வு பெறசொன்னது  எவ்வளவு பெரிய பிழை என்று?என்னை மதித்து வேலையை விட்டு விட்டாலும் அவள் தன்மானம்  வீட்டில் இருக்க இடம் கொடுக்கவில்லை

இப்போது தலைக்கு மேலே வெள்ளம்.

ஓஹ் கிம்மி ஒன் டைப் ஸ்டயில் என போன் விடியகாலையில் அலற,
திவ்யா விசும்புகிறாள்,அம்மா பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கா என்றாள்,வலிக்கோசரம் பல்லை கடிச்சிண்டாபோல  இருக்கு, திவ்யா காலையில் தான் ஊரிலிருந்து குழந்தைக்கு முடி இறக்கி விட்டு வந்தாளாம்.எனக்கு பயந்து பெரியம்மாவிடம் போனை கொடுத்தாள்.
ராஜப்பா,அம்மா பேச்சு மூச்சில்லாம இருக்கா கோந்தே!

எனக்கு தெரிந்தே விட்டது,அம்மா போயாச்சு.இருந்தாலும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக சொல்லிவிட்டு  ஜெபமாலையை எடுத்து சாண்டிங் பண்ண ஆரம்பித்தேன். 20 ரவுண்டு முடிந்திருக்கும்,மீண்டும் ஓஹ் கிம்மி ஒன் டைப் ஸ்டயில்-விஷயம் கேட்டதும் உடம்பு சில்லிட்டது, நிதானமாக ரிங் டோனை மாற்றினேன்.

விட்டுக்கு வந்த டாக்டர் உதட்டை பிதுக்க,ஆஸ்பத்திரிக்கு கொண்டுப்போய் அவசர சிகிச்சையை செய்திருக்கிறார்கள்.போகும் போது வந்த கால் டாக்ஸி அம்மா செத்து விட்டதை அறிந்து மீட்டர் கட் பண்ணீ எஸ்கேப் ஆகி விட. ஆம்புலன்சிலேயே ஏற்றி வீடு திரும்ப வந்திருக்கிறார்கள்.கூடவே ஐஸ் பெட்டியும் வந்துவிட்டது.என் உறவுகள் நான் வருவேனோ மாட்டேனோ என பயந்திருந்தது அங்கு இறங்குகையில் புரிந்தது.

நான் போன் சார்ஜர் மட்டும் கொண்டுபோயிருந்தேன். ஆபீஸில் வெள்ளிகிழமையாதலால் பாஸ்போர்ட் லாக்கரை கட்டிக்காக்கும் அரபி அதிகாரிக்கு வார விடுமுறை.என் லைன் மேனேஜருக்கு போன் செய்தால் இவன் அழாமல் பேசுறானே? என அவருக்கு சந்தேகமோ என்னவோ?

அப்படித்தான் போன வாரம் ஒரு சக நண்பன் திருமணம் என்று பொய் சொல்லிவிட்டு வேலை பிடிக்காமல் ஓடிப்போனான்,இவனும் ஓடிவிடுவான் என நினைத்திருக்கலாம்.அப்போது தான்  எகனாமிக் பூம் உச்சத்தை தொட்டிருந்தது,ஆளை விட்டு விட்டால் பிடிக்க முடியாது,எங்கு போனாலும்  நல்ல வேலைக்காரனுக்கு டபுள் சம்பளத்தில் வேலை கிடைத்தது.

அந்த ஆள் என் வீட்டு நம்பர் வாங்கி அழைத்து ,ஒப்பாரி சத்தம் கேட்டு,சீரியசாகி களத்தில் இறங்கி பாஸ்போர்ட் ஆஃபிசரை உருவி வரவைக்க அந்த ஆபீசர் தொழுகை முடித்து வந்தார்.என் இந்திய லைன் மேனேஜர் அப்போதும் என்னை நம்பாமல் என் சர்டிஃபிகேட்டை பிணையாக‌ வாங்கிக் கொண்டார்.யாகூப் சேட்டனா? கொக்கா?

1-00 மணிக்கு எனக்கு பாஸ்போர்ட் கிடைக்க உயிர் நண்பர்கள் மூலம் நேராக டனாட்டாவில் 1800திர்காம் டிக்கெட் , க்ரெடிட் கார்டில் தேய்த்து வாங்கி,முதல் முறையாக பிசினெஸ் க்ளாஸில் தண்ணீர் கூட அருந்தாமல், ஒண்ணுக்கு கூட போகாமல் வந்தேன்,

நல்ல வேளை ஃப்ளைட் லேட் இல்லை,1-45 க்கு எடுத்தது 6 -45 க்கு சென்னை இறங்க. நண்பன் பைக்கில் ஏறி வீட்டுக்குள் நுழைய,உயிரோடிருந்த என் அனைத்து நண்பர்களும் வந்திருக்க, அவர்களை பார்த்து பேச நாவெழ அவர்கள் என்னை உள்ளே அழைத்து சென்றனர்.,அம்மாவை 7 மணிக்கு பார்த்தேன். அழுகையே வரவில்லை, விமானத்திலேயே அழுதாகிவிட்டது.இனி யாரை உரிமையோடு  திட்டமுடியும்?தாயிழந்த துன்பம் எனக்கும் வந்தே விட்டதே?.

குழந்தை பயத்துடன் என்னிடம் தாவிக் கொண்டு என் முகத்தையே பார்த்தது.என் மேல்  எனக்கே கோபம் வந்தது,ஒரு வயசு குழந்தையை போய் விட்டுப் போனேனே? என்று. பாட்டி,பாட்டி என்று கண்ணாடி பெட்டியை காட்டியது. நான் அணைத்துக் கொண்டேன்.

ஒரு வழியாக நன்றாக அம்மாவின் காரியங்கள் செய்து ஃப்ளைட் ஏறியாகிவிட்டது. யாகூப் சேட்டனிடம் நேரே பார்க்கையில் நீயே அனுப்பினாலும் இப்போ நான் போவது போலில்லை.மீன் வரும் வரை இந்த கொக்கு காத்திருக்கும் என பார்வையாலேயே சொன்னேன்.

ட்ரிங் ட்ரிங்
ஹலோ எனக்கு மூணு மடங்கு அதிக சம்பளத்தில் வேலை கிடைச்சாச்சு

ஒருவழியாக எமிரெட்ஸில் டிக்கெட் போட்டாச்சு, 18 ஆம் தேதி வீடு ரெஜிஸ்ட்ரேஷன்  ஒருவழியாக முடிச்சாச்சு, முதல் வெகேஷனும் முடிஞ்சாச்சு.எமிரெட்ஸில் துபாய்க்கு டிக்கெட் போட்டாச்சு,20 ஆம் தேதி வேலையில் இருக்கனும்.

ட்ரிங்,ட்ரிங்.ஹலோ.
2மாசமா சம்பளம் வரலை,பாத்து செலவு பண்ணுங்க‌

ட்ரிங்,ட்ரிங்.ஹலோ.
எனக்கு வேலை போய்டுச்சு.

ட்ரிங்,ட்ரிங்.ஹலோ.
எனக்கு வேலை கிடைச்சிடுச்சு.

வலையபட்டி தவிலே,தவிலே,ஜுகல்பந்தி வைக்கும் ...
ஹலோ நம்ம வினுவுக்கு அம்மாவே வந்து வெள்ளிகிழமை பிறந்திருக்கா.
சுகபிரசவம்,நாங்க புண்ணியாஜலத்துக்கு டெல்லி போறோம்.

அறியாத வயசு,புரியாத மனசு ...
ஹலோ நம்ம பானு அக்காவுக்கு  ,பையன் பிறந்திருக்கு,சுகபிரசவம், புண்ணியாஜலத்துக்கு  வருவீங்களா?

பறவையே எங்கு இருக்கிறாய்?,பறக்கவே என்னை அழைக்கிறாய்.
என்னங்க 20 ஆம் தேதி அம்மா  தவசம் வர்றது, பொண்ணு நீச்சல் கத்துகிட்டா,கம்ப்யூடர்ல டைப் பண்றா..

ட்ரிங் ட்ரிங்

எனக்கு இங்க விசா போட இழுத்தடிக்கறாங்க,தவசத்துக்கு வர முடியுமான்னு தெரியலை,ஒரே கவலையா இருக்கு,
இருங்க பாட்டி பேசனுமாம்.
ராஜா,கண்ணப்பா,
தவசம் நீ போடலைடா,அவளே போட்டுக்கறாடா கோந்தே,அவளுக்கு நன்னா தெரியும் உன் கஷ்டம்,அவ தான ஒன்னோன்னா பாத்து நடத்திண்டு வரா!!
அம்பதுபேர்ல உனக்கு மட்டும் வேலை கிடைச்சதோன்னோ?

டிரிங்,ட்ரிங்
ஹலோ,எனக்கு விசா போட்டாச்சு. நான் 18 ஆம் தேதி வரேன்.ஊருக்கு வர‌ பர்சேஸ் பண்ண ஆரம்பிக்கணும்.அம்மா  தவசத்துக்கு ஒரு வாரம் தான் இருக்கு,

டிஸ்கி:‍‍‍-
ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே,என் மகள் அதற்கடுத்தபடியாய்
எந்த உறவினர் வீட்டு துக்கத்திற்கு செல்லும் போதும் கண்ணாடி ஐஸ் பாக்சை
கண்ட உடனே சாமியாடி உள்ளேயே வரமாட்டேன் என்கிறாளாம்.
கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டவர்கள் திரும்ப வருவதில்லை என நன்கு உணர்ந்திருக்கிறாள் போல‌.


Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)