ஹாலோகாஸ்ட் என்னும் ஆறாண்டுகால திட்ட இனப்படுகொலை


ஹாலோகாஸ்ட் என்பது மகாக்கொடியவன் ஹிட்லரின் நாஜிப்படையால் போலந்து  நாட்டில் தன்னிச்சையாக 1933 ஆம் வருடம் தொடங்கி 1939 ஆம் வருடம் வரை நடந்த மனிதத்தன்மையற்ற இனப்படுகொலை ஆகும். வரலாற்றில் ரத்தத்தால் எழுதப்பட்ட கறுப்பு காவியம்.கடவுள் என ஒருவர் உண்மையிலேயே உண்டா? என கேட்க வைக்கும் அருவருக்கத்தக்க மிருகத்தனமான பெருங்குற்றங்கள் , அரசியலின் பெயரால் அரங்கேறிய கருப்பு நாட்கள் அவை . மொத்தத்தில் காலமும் காலனும் கைகோர்த்து  போட்ட மகா கேவலமான மேடை நாடகம்.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 3000 பேர் என தோராயமாக கணக்கிட்டு  6வருடங்கள் தொடர்ந்து மொத்தம் 60 லட்சம் பேர் கொல்லப்பட்டு ,இந்த பஞ்சமகா பாதகத்தை  நாஜிப்படையினர் வெற்றிகரமாக வெட்கமின்றி நடத்தியுள்ளனர்.

மிகக் கொடூரமான இனவெறி கொண்ட ஜெர்மானிய நாஜிப்படை ,யூதர்களையும் இன்னபிற இனத்தவரையும் கொன்றழிக்க சதித்திட்டம் தீட்டி மூன்று நிலை கட்டமைப்பு திட்டங்களை , தாங்கள் கைப்பற்றிய ஐரோப்பாவில் தோற்றுவித்தது. இனப்படுகொலையை கட்டவிழ்க்க உருவாக்கப்பட்ட அடிப்படை மூன்று அடுக்கு  நிலை திட்டவியூகம் பின் வருமாறு:-


நிலை-1
மெய்ன் சிட்டி வித் கெட்டோ:- (லோக்கலாக சொன்னால் அகதி குடியிருப்புக்கள்)


இந்த அகதிகள் முகாம்கள் போலந்து நாட்டில் கானாஸ் (kaunas),  வில்னியஸ் (vilnius), பியலிஸ்டொக் (bialystok) வார்ஸா (warsaw), லொட்ஸ்( lodz) க்ரகொவ் (krakow) ல்வொவ் (lwow) என மொத்தம் 7 இடங்களில் மின்னல் வேகத்தில் நிறுவப்பட்டன.

யூத மக்கள் குடும்பம் குடும்பமாக இந்த முகாம்களில் வரவழைக்கப்பட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பெற்றனர். யூத இன ஆண்களும் பெண்களும் இந்த முகாம்களில் வழங்கப்படும் 20செ,மீ X 20செ,மீ  நட்சத்திர குறியீட்டு லேபில் போன்ற பட்டையை தங்கள் ஆடைகளில் வலது தோள்பட்டையில் தைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக  அமல் படுத்தப்பட்டனர்.
ஹோமோ செக்சுவல்களுக்கு பிங்க் வண்ண லேபில்கள் தைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர்.பாரம்பர்ய போலீஷ் இன ஆண்களும் பெண்களும் இந்த முகாம்களில் வழங்கப்படும் 20செ,மீ X 20செ,மீ  "P" என்னும்  குறியிட்ட துணிப்பட்டையை தங்கள் ஆடைகளில் வலது தோள்பட்டையில் தைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக  அமல் படுத்தப்பட்டனர்.அவர்களிடம் இருந்த வீடுகள், நிலங்கள்,கால் நடைகள், தொழிற்சாலைகள் , வங்கிகள், யூத பொது நிறுவனம் என மொத்தமாக கபளீகரம் செய்யப்பட்டன.


போலந்து,ஜெர்மனி,ஆஸ்ட்ரியா, ஹங்கேரி இன்னபிற நாடுகளிலிருந்து வீடுவாசல்களை பிடுங்கிக்கொண்டு சுத்தமாக காலிசெய்து விரட்டப்பட்ட  யூதர்கள் மற்றும் இன்ன பிற இனத்தவரான ரோமாக்கள், யெகோவா விட்னெஸ்ஸுகள், ஹோமோ செக்சுவலிஸ்டுகள்,கும்பல் கும்பலாக நடத்தியோ ரயிலிலோ,அல்லது வாகனங்களிலோ புளிமூட்டைகள் போல அடைத்து அழைத்துவரப்பட்டு  இந்த கெட்டோ மையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.


இதில் மின்வசதி, குளிர்பிரதேசத்தில் குளிர்காய மேண்டல் வசதி எதுவுமே இராது, ஒரே அறையில் நான்கு முதல் ஐந்து யூத குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டனர். இங்கே தான் அடையாள அட்டை வழங்கப்பட்டு அருகில் உள்ள மேஜர் கான்செண்ட்ரேஷன் கேம்ப்ஸ்களில் சாகும் வரை வேலை வாங்கப்பட்டு வதைக்கப்பட்டனர்.

இந்த மையங்களில் வைத்து தான் யூத இனத்தவரின் அன்றாடஉபயோக,அறிய பொருட்களை பிடுங்கிக்கொண்டு கிடங்கு போல குவித்து வைத்து அதை கருவூலத்துக்கு எடுத்து சென்றனர்.யாரும் தப்பிப்போகமுடியாத வண்ணம் 20 அடிக்கு சுவர் எழுப்பி அதன் மேல் மின் கம்பிகளும் அமைக்கப்பட்டு வெளியுலக தொடர்பே இல்லாமல் ஈழதமிழர் முகாம் போல அடைத்து வைக்கப்பட்டனர்.

நிலை-2
மேஜர் கான்செண்ட்ரேஷன் கேம்ப்ஸ்:- (லோக்கலாக சொன்னால்  தொழிற்பேட்டைகள்)

ப்லாஸ்ஸொவ்(plaszow) ஸாஸ்லாவ்(zaslaw) க்ராஸ் ரொஸென் (gross-rosen) பொட்டுலைஸ்(potulice) ஸ்டட்தாஃப்(stutthof) சொல்டாவ் (soldau)  என மொத்தம் 6 இடங்களில் மின்னல் வேகத்தில் நிறுவப்பட்டன.ஏற்கனவே இருந்த போலந்துக்காரர்களின் தொழிற்சாலைகளும் சிறை பிடிக்கப்பட்டு  நாஜி அரசுக்கு வேண்டியவர்களுக்கு வசதியாக கைமாற்றப்பட்டன.

"Arbeit Macht Frei" ழைப்பே சுதந்திரம் பெற்றுத்தரும்.
இது தான் ஒவ்வொரு கான்செண்ட்ரேஷன் கேம்ப்பின் வாசல் வளைவில் எழுதப்பட்ட வாசகம்,ஒவ்வொரு நாளும் கெட்டோவிலிருந்து வரும்
மக்கள் இதைத்தாண்டிதான் உள்ளே அமைந்துள்ள ஆயுத தொழிற்சாலை,
பீங்கான் தொழிற்சாலைகள், சமையல் பாத்திர தொழிற்சாலைகள்.மற்றும் சாய தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்றனர்.



பெரும்பாலான நேரங்களில்  சாலையில் மலைப்போல் குவிந்த ஐஸ்கட்டிகளை வாரிக்கொட்டுவது , சாலைகள் போடுவது, கட்டிடம் கட்டுவது, பிணங்களை அப்புறப்படுத்துவது, பிணங்களை எரியூட்டுவது போன்ற வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டனர்.இதில் நிறைய பேர் தப்பிக்க முயன்று மின்வேலியில் மாட்டியும், சிலர் நாஜிப்படைக்கு எதிராக குழு அமைத்து துப்பாக்கி எடுத்து போராடி பின்னர் பிடிபட்டு திறந்த வெளிகளில் தூக்கு போடப்பட்டும், மண்டியிடப்பட்டு முன்னந்தலையிலோ, பின்னந்தலையிலோ சுடப்பட்டும் கொல்லப்பட்டனர்.

யூதர்கள் மற்றும் இன்ன பிற இனத்தவரை இங்கு வைத்து தான் சாகும் வரை வேலை வாங்கியது, திறந்த வெளி மருத்துவ சோதனையில் குழந்தைகள்,சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோர் இன்னபிற நோய்வாய்பட்டோரை உடனடியாக சுட்டுக் கொன்றோ அல்லது மந்தை போல லாரிகளில் ஏற்றி ரயில் நிலையம் சென்று அங்கிருந்து ரயிலில் மந்தை மந்தையாக எற்றி  இறுதியாக எக்ஸ்டெர்மினேஷன் கேம்ப்களில் இறுதி தண்டனைக்கு கொண்டு வந்து விடுவர்.

யாரும் தப்பிப்போகமுடியாத வண்ணம் மின் வேலி அமைக்கப்பட்டு வெளியுலக தொடர்பே இல்லாமல் ஈழதமிழர் முகாம் போல அடைத்து வைக்கப்பட்டனர்.என்ன கொடுமை என்றால்? முகாமில் தண்ணீர்,மற்றும் உணவு சப்ளையே சரிவர கிடையாது,சேறும் சகதியுமாக இருக்கும்.

குப்பையில் போடப்படும் ரொட்டிகளும், அழுகிய முட்டைகளும், ஒன்றுக்கும் உதவாத அழுகிய காய்கறிகளும், குப்பை கீரைகளும்,புழத்துப்போன தானியங்களுமே என்றாவது தரப்படும்,அதீத பட்டினி,சுகாதாரமின்மையால் உண்டான தொற்று நோய்கள். மிருகத்தனமான மருத்துவ பரிசோதனைகள் ,தூக்கிலிட்டு கொல்லுதல்,துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல் மற்றும் ஓய்வில்லாத வேலையின் காரணமாகவே எண்ணிலடங்கா மனித உயிர்கள் பலியாயின.

குளிக்க வழியில்லாததால் எல்லோரும் அழுக்காகவும்,
சிரங்கு சொறியுடனும், தலையில் பேணும் பொடுகுடனுமே வாழ்ந்தனர்.
ஒரு பங்கருக்கு 4 பேர்கள் என ஆண் பெண்,பெரியவர்கள் என பேதம் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டு எந்நேரமும் மரண பயம் காட்டியே
முகாமில் அடைத்து வைக்கப்பட்டனர்.பெரும்பான்மையான மக்கள் மன அழுத்தத்தால்  பீடிக்கப்பட்டே உலவினர்.


நிலை-3
எக்ஸ்டெர்மினேஷன் கேம்ப்ஸ்:-(லோக்கலாக சொன்னால் கசாப்பு கடைகள்)




இந்த வகை கொலை கள மையங்கள்  ஆஷ்விட்ஸ் 1, 2 மற்றும் 3 ( auschwitz 1,2 & 3), பெல்ஸெக் (belzec), மஜ்டனெக் (majdanek) சொபிபொர் (sobibor) செல்ம்னோ (chelmno) ட்ரிப்லின்கா (trblinka) என மொத்தம் 6 இடங்களில் நிறுவப்பட்டன, இருப்பதிலேயே பெரியதாக ஆஷ்விட்ஸ் என்னும் கொலை கள மையமே கருதப்படுகிறது.இந்த இடத்தில் மட்டும் மூன்று எக்ஸ்டெர்மினேஷன்  கேம்ப்கள் அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் துவங்கப்பட்டு இரவு பகலாக இயங்கி வந்ததாம் .

 மேலே சொன்ன ஒவ்வொரு மேஜர் கான்செண்ட்ரேஷன் கேம்ப்களில் இருந்தும் இந்த எக்ஸ்டெர்மினேஷன் கேம்ப்ஸ் எனப்படும் கேஸ் சாம்பர் அல்லது கொலை செய்யும் கூடம் வருவதற்கு 24 மணி நேரமும்  நீராவி ரயில் விட்டிருந்தனர், அவசர அவசரமாக இருப்புபாதைகளும் , ரயில் நிலையங்களும்  அமைக்கப்பட்டன.இடைவிடாமல் யூதர்களும் இன்னபிற இனத்தவரும் ஆட்டு மந்தைகள் போல அழைத்துவரப்பட்டு இறக்கி, ஆடைகளை களைய வைக்கப்பட்டு, தலை முடியை வெட்டவைக்கப்பட்டு , மிகக் குளிர்ந்த நீரில் ஷவரில் ஒரு பெரிய குளியல் அறைபோன்ற கூடத்தில் குளிக்க வைக்கப்பட்டு, பின்னர் கூடத்தின் கூரையின் வழியே கொடிய சயனைடு வாயுவை (Zyklon B) செலுத்தி மணிக்கு 125 பேர் என கணக்கிட்டு கொல்லப்பட்டு , உடனடியாக சூளையில் எரியூட்டப்பட்டு பரலோகம் சென்ற ஒன்வே ட்ராஃபிக் இது என்றால் மிகை ஆகாது.

கடைசியில் செம்படையினர் கைப்பற்றியவை :- லட்சக்கணக்கான மூக்கு கண்ணாடிகள், லட்சக்கணக்கான லெதெர் சூட்கேசுகள், லட்சக்கணக்கான வரி வரியான பைஜாமாக்கள் (சீருடைகள்) லட்சக்கணக்கான தலை வாரும் ஹேர் ப்ரஷுகள். லட்சக்கணக்கான ஜோடி காலணிகள், பதினாயிரம் மூட்டை தலைமுடிகள்(பெயிண்ட் ப்ரஷ் செய்ய) யூதர்களை எரியூட்டிய பதினாயிரம் சாம்பல் அடங்கிய பீங்கான் ஜாடிகள்(ஹிட்லர் பின்னொரு சமயம் அந்த சாம்பலை விளை நிலங்களில் எருவாக இட எண்ணி இருந்தானாம்)

இதில் மிக வேதனையான விஷயம் என்னவென்றால் செம்படையினர் நாஜிப்படையை தோற்கடித்து நெருங்கும் முன்னரே இந்த கொலை கலன் அறைகளை அழித்தும் , இடித்தும் சேதப்படுத்தியும் விட்டனர்.

பதிவேடுகளை கொளுத்தியும் விட்டனர்.கொன்றவர் விபரம் 15 லட்சம் வரை இதனால் கணக்கிலேயே வரவில்லை என பெரும் சர்ச்சையும் இன்று வரை உண்டு. இன்றைய நவ நாகரீக இஸ்ரேலிய யூதர்கள் ஜெர்மனியிடம் கற்ற கொடிய பாடத்தை எளியார் மீது பிரயோகிக்கும் பொருட்டு பாலஸ்தீனிய அப்பாவி குடிமக்கள் மீது பாஸ்பரஸ் குண்டுமழை பொழிந்தும் எந்திர துப்பாக்கியால் சுட்டும் பீரங்கி தாக்குதல் நடத்தியும் தீர்த்துக் கொள்கின்றனர்.

தான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் என நினைக்கும் ஒரே ஜீவன் இவர்களாகத்தான் இருக்கும்.
-----------------------------------------------------------------


-----------------------------------------------------------------
டிஸ்கி:-

இன்றைய தேதியிலும் இனப்படுகொலை ஓய்ந்த பாடில்லை.
ஈழத்தில் இதை எழுதும் ,படிக்கும் கன நேரத்தில் எத்தனை அப்பாவி சகோதர,சகோதரிகள்  கொல்லப்பட்டனரோ?

கடவுளே? ஏஸி அறையில் இருந்து சுகமாய் எழுதவும் படிக்கவும் செய்து விடுகிறோம், அந்த கேம்பில் ஒருவனாக இருந்தால் தெரியும் நமக்கு சங்கதி!

கடவுளிடம் தினமும் கதறி மன்றாடுவோம். நல்ல காலம் உண்மையிலேயே பிறக்க, அவர்களுக்கு விடுதலை உண்மையிலேயே கிடைக்க.

செய்திகள், படங்கள், சுட்டிகள் தந்து உதவிய விக்கிபீடியா, கூகுளுக்கு நன்றி








Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)