க்வில்ஸ்-2000 தூரிகைகள் Quills (18+)

க்வில்ஸ்- எழுத்தாளர் டோஹ் ரைட்  எழுதிய அருமையான நாடகத்தையும் அதைத்தொடர்ந்த  நேர்த்தியான திரைக்கதையையும்   கொண்டு    பிலிப் காஃப்மேனின்  பிரம்மாண்டமான  இயக்கத்தில் , 2000 ஆம் ஆண்டு , வெளிவந்த பீரியட் ட்ராமா வகைப்படம்,  இலக்கிய சினிமா காதலர்களும் கலைரசிகர்களும் வாழ்வில் நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.

பிரெஞ்சுப்புரட்சியின் ரீன் ஆஃப்  டெரர் காலகட்டத்தில் மாவீரன் நெப்போலியன் தோற்றுவித்த அடக்குமுறையால் ஜில்லேடின் எந்திரத்திற்கு பலியானோர் ஏராளம், அரசியல் எதிர்ப்பாளர்கள், ஹோமோசெக்சுவல்கள்,கடவுள் எதிர்பாளர்கள்,  விலைமாதர்கள், ஒபேரா பாடகிகள் என யாரும் விதிவிலக்கின்றி கொல்லப்பட்டனர்.    அத்தகைய  கொடூர காட்சிகளுடன் துவங்கும் இப்படம் மேலும் பயணித்து விசித்திரமான, காமக்களியாட்டங்கள், தாராளமான பாலுறவுகள், லஜ்ஜையில்லாத காட்சியமைப்புகள், குறும்புத்தனமான, துடிப்பான  அதிர்வலைகளையும் உங்களுள்  ஏற்படுத்தும்    என்றால் மிகையில்லை ,படம் முடிந்தவுடன் ஏற்படும் அந்த பரவசம் வார்த்தைகளால் விளக்கமுடியாதது. சோ , வொர்த்தி வாட்ச்.



படத்தின் கதை :-
 
மார்க்கஸ் டெ சேட்   ( Marquis de Sade,) (ஜெஃப்ரீ ரஷ்)  17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காமரசம், குரூரம்,வன்புணர்ச்சி  சொட்டசொட்ட கதைகள், நாடக இலக்கியங்கள் படைக்கும் எழுத்தாளர் ஆவார். (இன்னாளில் நாம் உபயோகிக்கும் சேடிஸம் என்னும் சொல்லே இவரின் பெயரில் இருந்து வந்தது தானாம், இதைவிட இவருக்கு அறிமுகம் தேவையில்லை.)


ன்னாரின் கடைசி ஒருவருட ஆக்கங்கள் , அவை உருவான கெடுபிடியான சூழல், அது உருவாக உயிர்கொடுத்து கலை வளர்த்தவர்கள். என இது உண்டாக்கும் தாக்கம் உன்னதம்.

காதல் களியாட்டம் கோலோச்சும் ஃப்ரான்ஸில் இவரின் எழுத்துக்களை படித்த மக்கள் மேலும் மிருகத்தனமான வன்கலவியில் ஈடுபட,  இவரின் எழுத்துக்கள் மாவீரன் நெப்போலியனால் தடை செய்யப்படுகின்றன, எழுத்தாளர் "செரண்டன்" என்னும் ஆஸிலத்தில் (மனநோய் மருத்துவமனை)  சேர்க்கப்பட்டு இவரின் செல்வாக்கான மனைவியின் அளவுக்கதிகமான வரிப்பணத்தால் சிறப்பான தனி கவனிப்புகள், சுவையான உணவுகள். ஆடம்பரமான உடைகள், வைன்கள், படிக்க புத்தகங்கள், பாலுறவு சிற்பங்கள் கொண்ட காண்ட்ராபேண்டுகளை வைத்துக்கொள்ளவும்   அனுமதிக்கப்படுகிறார்.  இவரால் எழுதாமல் மட்டும் இருக்கமுடியாது. அவரின் எழுத்துக்கள் அரசால் தடை செய்யப்பட்டிருந்தாலும் எதிர்கால இலக்கிய களஞ்சியத்துக்காக சகொதரர் அபே (ஜோக்வின் ஃபினிக்ஸ் ) மற்றும்  மதர்த்த மார்புகளுடைய சல‌வைக்காரி மேடலினாலும்  (கேட் வின்ஸ்லேட்)  பாதுகாத்து வரப்படுகின்றன. மேடலின் இவரின் கதைகள் மூலமே எழுதவும் படிக்கவும் அபே வின் உதவியால் கற்கிறாள்.

எழுத்தாளர் தினமும் தான் எழுதும் விரச கதை எழுத்துப்பிரதிகளை  யாரும் அறியாமல் அழகிய புத்திசாலி சலவைக்காரி மேடலின் உதவியால் வெளியே அனுப்பி சட்டவிரோதமாக புத்தகங்களாக அச்சிட்டு வெளியிடுகின்றார். மேடலினால் இவரின் எழுத்துக்களை படிக்காமல் இருக்க முடியாது, அதற்காக என்ன விலை? வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறாள். மன நல மருத்துவமனையின் அருட்தந்தையும் மருத்துவருமான அபே எழுத்தாளரிடமும் ஏனைய நோயாளிகளுடனும்  முக்கியமாக  மேடலினிடமும் மிக அன்பாக இருக்கிறார்.


மேடலின் எழுத்தாளருக்கு சட்டவிரோதமாக உதவுவது அபே அறிந்திருக்கவில்லை.வெளியான ஜஸ்டின் என்னும் ரசாபாசமான புத்தகம் மஞ்சள் பத்திரிக்கையையும் விட விரசமான  காமரசம் சொட்டும் சொற்களை கொண்டிருக்க, இது மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்து மாவீரன் நெப்போலியனின் (ரோன் குக்) காதுகளுக்கு எட்டுகிறது,  வெளிவந்த புத்தகப்பிரதிகள் கைப்பற்றப்பட்டு தீக்கிரையாக்கப்படுகின்றன. எழுத்தாளரின் மனைவி ரெனீ பெலகி (ஜேன் மெனாலசஸ்) கட்டும் வரிப்பணம் இந்த முறையும் இவரின் உயிரை காப்பாற்றுகின்றது.


நெப்போலியனின் அவை ஆலோசகரின் சிபாரிசால் இப்போது மிககண்டிப்பான முதிய தலைமை மருத்துவர் ரயான் (மைக்கேல் கேய்ன் ) இந்த செரண்டன் ஆஸிலத்தை மேற்பார்வையிடவும் தலைமை பொறுப்பை ஏற்கவும் வருகிறார், வந்த கையோடு  நேராக பாரீஸ் சென்று தான் திருமணம் செய்துகொள்ளவே கான்வென்டில் கன்னியாஸ்திரிகளால் வளர்க்கப்பட்ட‌ பதினம வயது அழகுப்பதுமை சிமோனை (அமீலியா வார்னர் ) மணமுடிக்கிறார், பின்னர் மன்னர் தந்த நான்கு குதிரைகள் பூட்டிய‌ ரதத்தில் அவளை பாதுகாத்து அழைத்துவந்து ஒரு பழைய சிதிலமடைந்த மியூசியத்தை பரிசாகப்பெற்று, அரசவை இளம் கட்டிடக்கலை நிபுண‌ன் ப்ரியோக்ஸ் ( ஸ்டீஃபன் மோயெர் ) மூலம் தன் இளம் மனைவியின் விருப்பத்திற்க்கேற்ப புதுப்பிக்க ஆரம்பிக்கிறார். 




லங்கார மாளிகையில் மனைவியை கூண்டுக்கிளியாக நினைத்து பூட்டி வைக்கிறார் , மனைவியின் அறைக்கு வெளியே பூட்டும் போடுகிறார். சன்னல்களுக்கும் சிறை கம்பியிடுகிறார். இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவி செரண்டனுக்கும் எட்டுகிறது, எழுத்தாளர் நெப்போலியனையே தன் நையாண்டித்தனமான குரூர எழுத்துக்களால் கலாய்ப்பவர், இந்த கிழ மருத்துவரையும்  அசவரின் இளம் மனைவியின் படுக்கை அறை நிகழ்வுகளையும்  செரண்டன்வாசிகள் நடத்தும் நாடகத்தில்  புனைவுக்கலவி காட்சி மூலம் அம்பலப்படுத்துகிறார்.


தன் மூலம் கிழ டாக்டர் இன்னும் கோபமுறுகிறார்.வெளியேறவும் முடியவில்லை,  நாடகத்தினை மேடலின் பின்  நின்று நடத்தும்போது சக மன நோயாளி பொவ்ச்சன் ( ஸ்டீஃபன் மார்க்கஸ்) மேடலினை பின் புறமாக தழுவி வெறியுடன் முயங்க எத்தனிக்கிறான், நாடகம் உச்சகட்டத்தை எட்டும் போது இவளின் கூச்சல் யாருக்கும் கேட்கவில்லை, அருகே இருந்த சூடான இஸ்திரி பெட்டியை எடுத்து அவன் கன்னத்தில் சூடு வைக்கிறாள், அப்போது தான் அந்த அரக்கன் தன் நிலை தடுமாறி இவளை தழுவிய கைகளை விடுவிக்கிறான். விரச நாடகம் இவர்கள் போட்ட கூச்சலால் தடைபடுகிறது, மருத்துவர் ரயான் இனி செரண்டனில் நாடகமே இல்லை என கடும் உத்தரவிடுகிறார்.




சிமோன் சீனாவில் இருந்து பட்டும், இங்கிலாந்திலிருந்து மெத்தையும், பெருவில் இருந்து பளிங்கு கற்களும் இறக்குமதி செய்கிறாள், இதற்கு பெரும் பணம் தேவைப்பட  மருத்துவர் ரயான் எழுத்தாளரின் மனைவியை அழைத்து கணவனின் நலனை காரணம் காட்டி மேலும் மிரட்டி பணம் கறக்கிறார்.




செரண்டனில் கிழ
மருத்துவர் ரயானின் அடக்குமுறை  நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, சட்டவிரோதமாக வெளியான  எழுத்தாளரின் "ஜஸ்டின்" என்னும் புத்தக பிரதி அபேவிடம் காட்டப்பட, அபே கொதித்து எழுந்து எழுத்தாளரின் எழுதுபொருட்களான பீலிகள், மசி, காகிதம் போன்றவற்றை கைப்பற்றுகிறார். இது எழுத்தாளருக்கு கோபத்தையும் பெருந்துயரத்தையும்  கொடுக்கிறது, சிறிதும் மனம் தளராமல் படுக்கை விரிப்பை காகிதமாகவும்,உணவாக வந்த கோழித்தொடை குருத்தெலும்பை பீலியாகவும் ,குடிக்க வந்த ஒயின் பானத்தை மசியாகவும் உபயோகித்து மீண்டும் ஒரு வக்கிர கதையை  ஒரே இரவில் எழுதியும் விடுகிறார். 


தையும் மருத்துவர் ரயான் கண்டுபிடித்து போர்வை, தலையனை திரைச்சீலைகளை பிடுங்கிக்கொள்ள கண்ணாடியை மோதி உடைத்து, தன் பத்து விரலகளை கிழித்துக் கொண்டு தன் உடைகளையே காகிதமாக்கி குருதியையே மசியாக்கி அதில் கதை வடிக்கிறார். செருப்பிலும் கூட கதை எழுதி வைக்கிறார். 


காலையில் அழுக்கு துணி எடுக்க வந்த  மேடலின் மிகுந்த கவனத்துடன் அவற்றை காகிதத்தில்  பெயர்த்து எழுதி , வழமையாக வரும் குதிரைவீரனிடம் கொடுத்து அவனின் மிக நீண்ட நாளாக  தனது பெயர் அறியும் ஆசையையும் தீர்த்துவைக்கிறாள். இதில் இன்னும் வினோதம்  என்னவென்றால் இந்த காமக்கதைகளை சலவைசாலையிலிருக்கும் சக பணியாளர்களுக்கு படித்துகாட்டினாலும் இவள்  இன்னும் யாரிடமும் சோரம் போகாமல் கன்னியாகவே இருக்கிறாள்,


Sade_1கோதரர் அபே மீது ஒருதலைபட்சமான  காதலுடன் இருக்கிறாள். எழுத்தாளர் எவ்வளவோ? முயன்றும் மேட்லினை தன் படுக்கைக்கு விருந்தாக்க முடியவில்லை. மிஞ்சிப்போனால் இவரின் ஒரு பக்க காகித  எழுத்துக்கு  தலா ஒருமுத்தம் மட்டுமே  அவளிடமிருந்து பரிசாக கிடைக்கிறது. ஒரு முறை அப்படி எழுத்தாளர் தன் ஆடையில் எழுதிய எழுத்துக்களை அவளை படிக்க அனுமதிக்க , எழுத்தாளர் அவளை துகிலுரிய துவங்கி உதட்டு முத்தத்தில் நின்று, அவளை தன் மடியில் கிடத்தி முயங்க எத்தனிக்க , சட்டென சுதாரித்த மேடலின் எழுத்தாளரின் கன்னத்தில் அறைந்துவிட்டு வெளியேறுகிறாள்.

கிழ மருத்துவரின் இள மனைவி சிமோனுக்கு இரவு வேளைகள்  நரகமாகிறது, தாத்தா போன்ற ஸ்தானம் கொண்ட கிழட்டு மிருகத்தின் வன்புணர்ச்சி மூலம் சிமோன் கலவியை கற்றுக்கொள்கிறாள்.அது அவள் இளம்மனதில் வடுவாகி பழிவாங்கும் உணர்வு கொழுந்துவிட்டு எரிகிறது, தடை செய்யப்பட்ட மஞ்சள் புத்தகமான  ஜஸ்டினை மாறுவேடத்தில் பாரீஸ் சென்று வாங்குகிறாள்,அதை கவிதை புத்தகத்தின் அட்டைக்குள் ஒட்டி தினமும் படித்து காம வேட்கை கொள்கிறாள்.அந்த புத்தகத்தில் உள்ள குரூரமான கலவி முறைகளை எவரிடமாவது? சோதித்து பார்க்க எண்ண ; அவளின் வேட்கைக்கு வடிகாலாக இளம் கட்டிடக்கலை நிபுண‌ன்
ப்ரியோக்ஸ் வசமாக கிடைக்கிறான்,


வெளியே உள் அலங்கார வேலைகள் நடக்கும் போதே இவர்கள் இருவரும் அந்த புத்தகத்தை கரைத்து குடித்து முயங்கி மதிமயங்கி கிடக்கின்றனர். அந்த புத்தகம் விவரிக்க முடியா கிளர்ச்சியையும் அசாத்திய தைரியத்தையும் கொடுக்க இருவரும் கடிதம் எழுதிவைத்துவிட்டு , அந்த புத்தகத்தையும் அங்கேயே விட்டுவிட்டு ஓடிப்போகின்றனர். இந்த ஒரு காரணமே   கிழ மருத்துவரை சொல்லொனா பழிவாங்கும் வேட்கைக்கு தள்ள போதுமானதாயிருக்கிறது, இவரின் அதிரடியான உத்தரவால், எழுத்தாளருடைய அறையில் பொருட்கள் காலி செய்யப்படுகின்றன, வெறும் தரையில் நிர்வாணமாக சிறை வைக்கப்படுகின்றார். மேலும் அவரை ஒரு ஊசலாடும் தண்டனை நாற்காலியில் கட்டி நீரிலும் முக்கி முக்கி எடுக்கப்படுகிறார்.  

மேடலின் இவருக்கு தொடர்ந்து உதவியதை இன்னொரு மருத்துவ தாதி எலிசபெத் மூலம் அறிந்து மேடலினுக்கு 50 கசையடிகள் மிகக்கொடூரமான முறையில் வழங்கப்படுகின்றன. அவளை காப்பாற்ற அபே முன்வந்து கசையடி ஏற்க முதுகை  காட்ட  , தண்டனை முற்று பெறுகிறது. அபே  மேடலினை சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு அவளை வேறு அமைதியான இடத்திற்கு நாளை மாற்றப்போகிறேன் , தயாராக இரு என  சொல்கிறார், மேடலின் அவரிடம் தன் காதலை சொல்கிறாள், சகோதரர் அபேவோ கடவுளுக்கு எதிரான காரியத்தை நாம் செய்யக்கூடாது, ஒரு சில ஆசைகள் எப்போதுமே நிராசைகள் தாம், அதுதான் யதார்த்தம் என அறிவுறை சொல்ல அவள் வெடித்து அழுகிறாள்.வாழ்வே இருண்டு விடுமோ? என்று மருள்கிறாள்.



மார்க்கஸ் டெ சேட்  விடுதலை ஆகி  தன் மனைவியுடன் சேர்ந்தாரா?

* அபே மேடலினின் காதலை ஏற்றுக்கொண்டாரா?
* கிழ மருத்துவர் ரயான் ஓடிப்போன இளம் மனைவி சிமோனை மீண்டும்  கண்டுபிடித்தாரா?
உடனே டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
முழுக்கதையும் படிக்க நினைப்போர்  இந்த கானொளியை தாண்டி வந்து படிக்கவும்.இப்போதே ஸ்பாய்லர் அலர்டு கொடுத்துக்கறேன்.


=================================================

=================================================


பேவுக்கு மேடலின் மீது காதல் இருந்தாலும் தான் இருக்கும் ஸ்தானம் காரணமாக காதலை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.தனிமையில் புழுங்குகிறார். அன்றிறவு மேடலின் எழுத்தாளரின் அறைக்கதவின் துவாரம் அருகே நின்று , தான் கண்காணா தொலைவு செல்லப்போவதாகவும், அவளுக்கு நியாபகார்த்தமாக ஒரு கதை சொல்லுமாறும் கேட்க, எழுத்தாளர் இன்னும் நொறுங்குகிறார், துக்கத்தில் அவருக்கு கதை சொல்ல வரவில்லை, நா தழுதழுக்கிறது, ஆனால் மேடலினோ ஆத்திரப்படுகிறாள்.அவளை எழுத்தாளர் தேற்றி , இன்றிர‌வு  சிறையின் சுவற்றில் உள்ள துவாரம் வழியே ஒவ்வோரு வரியாக சொல்லுவேன்.அதை பக்கத்து அறை மன நோயாளிகள் வாய் வழியே கடத்தி சலவை சாலை சுவற்றின் துவாரம் அருகே கொண்டு சேர்ப்பர், அதை நீ எழுதிக்கொள் என்று தேற்றிஅனுப்புகிறார்.

மிகவும் குரூரமான ஒரு காமக்கதையை இவர் சொல்ல சொல்ல ஒவ்வொருவராக அதை கடத்தி அடுத்த நபருக்கு உரைக்க கதை உருவாகிறது, கடைசியாக கதையின் ஒவ்வொரு வரியும்
மன நோயாளி பொவ்ச்சன்  காதுகளில் சொல்லப்பட , அவன் அந்த கதையின் வரிகளால்  குரூரமான வெறியும் காம வேட்கயும் கொண்டு மேடலினிடம் அதை உரைக்கிறான். மேடலின் காகிதத்தில் அப்படியே குறிப்பெடுக்கிறாள். ஒரு கட்டத்தில் சக மன நோயாளி  க்ளெண்டே  மெழுகுவர்த்தியை கொண்டு தன் படுக்கைக்கு தீவைக்கிறான், செரெண்டன் முழுவதும் தீ பரவுகிறது, மிகப்பெரிய கலவரமும் வெடிக்கிறது, மன நோயாளிகள் தாக்குதலில் ஈடுபட, காவலர்கள் அவர்களை போராடி வழிக்கு கொண்டு வருகின்றனர்.


தை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பொவ்ச்சன்  தன் முழு பலம் கொண்டு மேடலினின் சலவை சாலை கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறான், அந்த மிருகத்திடமிருந்து தன்னை காத்துக்கொள்ள போராடுகிறாள், எதுவும் பலனளிக்காமல்  பொவ்ச்சன்   கத்தரிக்கோலால் மேடலினை கிழித்து  சலவை நீர் தொட்டிக்குள் வீசி விட்டு ஓடி விடுகிறான், கூக்குரல் கேட்டு ஓடிவந்த அபே மேடலினை  தண்ணீர் தொட்டியிலிருந்து மேலே தூக்கி முதலுதவி செய்ய, முயற்சி பலனளிக்காமல் மேடலின் இறந்துவிடுகிறாள்.மேடலினின் கண்பார்வையற்ற தாயின் வெடித்த அழுகை அபேவின் செவிகளில் ரீங்காமிடுகிறது.


ப்போது மருத்துவர் ரயான் அபேவுக்கு மேடலின் எழுதிய காமக்கதையை  காட்டி மூளைச் சலவை செய்கிறார், மார்க்கஸ் டெ சேட்   நாக்கால் கூட கதை சொல்லி தீங்கிழைப்பார் என நிரூபனமாயிற்று, இதன் மூலம் உன் விருப்பத்திற்குறிய மேடலினை இழந்தாய், அவள் தாய் இப்போது அனாதையாகிவிட்டாள், என அடுக்க. கோபத்தின் உச்சத்தில் சிறை அறைக்கு சென்று எழுத்தாளரை அபே சந்திக்கிறார். அநியாயமாக உன் கொடுர எழுத்தாலும் பேச்சாலும் ஒரு வாழவேண்டிய இளம் பெண்ணை கொன்றுவிட்டாயே?  என‌ ஆக்ரோஷப்பட,


வர்  கொஞ்சமும் கவலையே படாமல் அவளை நான் தினமும் என் அறைக்குள் வைத்து புணர்ந்திருக்கிறேன். அவள் ஒரு காமவேட்கை கொண்டவள் , அவளுக்கு இது போல நடந்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை ! என பிதற்ற , கோபம் கொண்ட அபே அவளை இப்போது தான் சோதித்து விட்டு வருகிறேன், அவள் கன்னியாகவே இறந்து போயிருக்கிறாள், உன் எழுத்துக்களை சிலாகித்ததை தவிற ஒன்றும் அவள் தவறு செய்யவில்லை ! என சொல்லி எழுத்தாளர் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு , இதற்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆக வேண்டும் ! என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறார், உடனே உள்ளே நுழைந்த காவலர்கள் இவரை அறுவை சிகிச்சை கூடத்துக்கு கூட்டிச் செல்ல,  அங்கு இவரின் நாக்கு வெளியே இழுக்கப்பட்டு முழுவதும் துண்டிக்கப்படுகிறது.


ந்த நாக்கை ஒரு கண்ணாடி புட்டியில் திரவத்தில் போட்டு மருத்துவர் ரயானிடம் தர,  ரயான் அபேவை ஆரத்தழுவி பாராட்டுகிறார். கொலைகாரன் பொவ்ச்சனை டம்மி என்னும் இரும்பு கவசத்திற்குள் அடைத்து சிலை போல அமர வைத்துவிடுகின்றனர், அவனால் அசையக்கூட முடியாது. எழுத்தாளர் மார்க்கஸ் டெ சேட்டை  இப்போது பாதாள சிறையில் அடைத்துவிடுகின்றனர்.  எழுத்தாளரை பார்வையிட வந்த அபே பாதாள சிறைக்குள் படிகளில் இறங்க முற்பட , மல  நாற்றம் குடலை பிடுங்குகிறது,


சுதாரித்து கீழே இறங்கி வந்து பார்த்தால் எழுத்தாளர்  மார்க்கஸ் டெ சேட் சுவரெங்கும் தன் மலத்தால் காமக்கதைகளை எழுதி வைத்திருக்கிறார். படிக்க படிக்க இவருக்கு தலை சுற்றுகிறது, குற்றுயிராக‌ கீழே விழுந்து கிடக்கும் எழுத்தாளரை அணுகி இனியாவது செய்த குற்றத்திற்கு பாவமன்னிப்பு பெற்றுக்கொண்டு  திருந்துங்கள். மனிதனாகுங்கள். என்று சொல்லி இதோ இந்த சிலுவையை முத்தமிடுங்கள் என மன்றாட, எழுத்தாளர் சிலுவையை விருட்டென‌ கடித்து விழுங்கி தொண்டை கிழிபட்டு உயிர்விடுகிறார்.



பேவால் தன் காதலி மேடலினின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை, பிணவறை சென்று  அவளின் நிர்வாண உடலை நோட்டமிடுகிறார். ஆசையாக தடவுகிறார். அவள் உயிரோடு இருந்த போது தான் அவளை அவளின் விருப்பத்திற்கிணங்க கூடமுடியவில்லை, கன்னி கழியாமல் இறந்துபோனவளை நினைத்து கண்ணீர் விட்டு அழுகிறார். அவளை  நெக்ரோபீலியா வால் பீடிக்கப்பட்டவன் போல முயங்குகிறார். அட ! கனவு கலைகிறது, நினைவு திரும்ப,  தான் மன நிலை பிழறியிருப்பதை உணர்கிறார். வித்தியாசமாக தனக்கு தானே பேசிக்கொள்கின்றார். இவர் இப்படி பிதற்றுவதை பார்த்த காவலர்கள் இவரை எழுத்தாளர் மார்க்கஸ் டெ சேட் இருந்த அறையிலேயே நிர்வாணமாக அடைத்து வைக்கின்றனர்,



ஒரு வருடம் கழித்து;-
செரண்டன் இப்போது அச்சுக்கூடமாக ஆகியிருக்கிறது, மறைந்த எழுத்தாளர் மார்க்கஸ் டெ சேட் டின் பாதுகாக்கப்பட்ட எழுத்துக்கள் இங்கிருக்கும் அச்சுக்கூடத்திலேயே மன நோயாளிகளின் அற்பணிக்கப்பட்ட ஈடுபாட்டுடன் அச்சடிக்கப்பட்டு அழகிய புத்தகங்களாக உருமாறுகின்றன. இப்போது எலிசபெத் தலைமை தாதியாகிவிடுகிறாள். கிழட்டு மருத்துவருக்கும் வைப்பாட்டியாகி விடுகிறாள், புத்தகங்களுக்கு தங்க முலாம் பூசப்பட்டு, பதனிடப்பட்டு வண்ண மெருகூட்டப்பட்ட கன்றுக்குட்டியின் தோல் கொண்டு அட்டை போடப்பட்டு , பணம் ஒன்றே பிரதானம் என்று அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இவற்றை மேற்பார்வையிட்டுக்கொண்டே புதிய மத குருமாரான மாப்பாஸை அழைத்துக்கொண்டு செரணடனை சுற்றிக்காட்டும் ரயான். அபேவின் அறை வாசலுக்கு சென்று அபேவை அருகேஅழைக்கின்றார்.
 
வர்களை பார்த்த அபே தன் வேலைக்கான மாற்றை கண்டுபிடிக்கிறார். கதவின் துளை வழியே கைவிட்டு மருத்துவர் ரயானின் கழுத்தை நெறிக்கிறார். சுதாரித்த ரயான் பிடியிலிருந்து இறுதியாக விலகிவிட, இவருக்கு அன்ன ஆகாரம் கூட கொடுக்ககூடாது என ஆணையிட்டு அகல்கிறார்.  இப்போது அபேவும் போகும் வருவோரிடம் தூரிகையும் மசியும் காகிதமும் கேட்டு பிதற்றுகிறார். 



ங்கு வந்த மேடலினின் கண்பார்வையற்ற தாய் இவருக்கு நிறைய காகிதங்களும் தூரிகைகலும்
மசியும் கொடுத்துவிட்டு நன்றாக எழுது என்கிறாள். இப்போது பிண்ணனியில்  மார்க்கஸ் டெ சேட் சொல்லச் சொல்ல  வீறு கொண்ட அபே எழுத ஆரம்பிக்கிறார். அதோ இன்னொரு சரசகாவிய எழுத்தாளர் உருவாகியே விட்டார்.


================================================


டிஸ்கி:-

ன்ன அருமையான படம் , என்ன அருமையான கதை, திரைக்கதை , நடிப்பு, இயக்கம், ஓப்பனை கலை இயக்கம், உடைகள் வடிவமைப்பு,இசை, ஒளிப்பதிவு என  இந்த பிரம்மாண்டமான சரித்திரப்படம், ப்ரெஞ்சுப்புரட்சி காலகட்டத்திற்கே நம்மை இட்டுச் செல்லும் என்றால் மிகையில்லை,  கேட் வின்ஸ்லேட் ,மற்றும் ஜெஃப்ரி ரஷ்ஷின் நடிப்பு அப்படியே நம்மை கட்டிப்போட்டுவிடும், சிமோனாக வந்த அமீலியா வார்னரின் அழகு சொல்ல வார்த்தைகளில்லை. பதிவின் நீளம் கருதி இங்கேயே முடிக்கிறேன். உங்களிடம் 2-04 மணி நேரம் இருக்கிறதா? ப்ளீஸ் கோ ஃபார் இட்!. எண்டர்டெயின்மெண்ட் நிச்சயம்.



=================================================
 படக்குழு விபரம் விக்கீபீடியாவிலிருந்து:-



Directed by Philip Kaufman
Produced by Julia Chasman
Peter Kaufman
Nick Wechsler
Written by Doug Wright
Starring Geoffrey Rush
Kate Winslet
Joaquin Phoenix
Michael Caine
Music by Stephen Warbeck
Cinematography Rogier Stoffers
Editing by Peter Boyle
Distributed by Fox Searchlight Pictures
Release date(s) Telluride Film Festival:
September 2, 2000
United States:
November 22, 2000
Canada:
December 15, 2000United Kingdom:
January 19, 2001
Australia:
March 1, 2001
New Zealand
March 1, 2001
Running time 124 minutes
Country United States
United Kingdom
Language English
Gross revenue $17,989,227


===========================
இந்த படத்தின் காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி ,இந்த படத்தினைப் பற்றிய தொழில்நுட்ப தகவல்களை தந்து உதவிய ஐ எம் டி பி மற்றும் விக்கிபீடியாவுக்கும் நன்றிகள் பல.
-------------------