த இன்ஃபார்மர்ஸ்(18+)2009 காயமே இது பொய்யடா!


ந்த படம் முன்பு ஒருமுறை அவசரகதியில் பார்த்தபோது மிகவும் நளினமாக எடுக்கப்பட்ட நான்-லீனியர் கரைம்-ட்ராமா-த்ரில்லர்  எனக் கண்டேன்,இரண்டாம் முறை பார்க்க வேண்டிய பட்டியலில் சேர்த்த இதை போன வாரம் தான்  பார்த்தேன்.,பிரமித்தேன்,அடடா!!,வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை, திரைக்கதை, வித்தியாசமான, பரீட்சார்த்தமான திரைப்படங்களின் ரசிகர்களுக்கு நிச்சயமாய் ஒரு விஷுவல் ட்ரீட்டே.  படத்தின் கதாசிரியர் அமெரிக்கன் சைக்கோ,லெஸ் தன் ஸீரோ நாவல்கள் புகழ் ப்ரெட் ஈஸ்டெர்ன் எல்லீஸ் .அவர் எழுதிய எட்டு சிறுகதைகளின் தொகுப்பான த இன்ஃபார்மர்ஸ் என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தபடம் நிச்சயம்  பாராட்டப்படவேண்டிய முயற்சியே.
ஸ்திரேலிய இயக்குனர் க்ரிகோர் ஜோர்டன் 1983ஆம் ஆண்டு சில வார கால கட்டத்தில் ஏழு வெவ்வேறு கதைகளின் ஊடே 13 வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களை ஒவ்வொரு கிளைக் கதைக்குள்ளும் வரும் இன்னொரு கதாபாத்திரத்துடன் தொடர்பு கொடுத்து  (இண்டர் கனக்டட் )காட்சிகளை நகர்த்திச் செல்கிறார். கதையின் ஒரு சம்பவத்தில் முடித்த காட்சியில் அடுத்த கதையில் முடிக்கப்பட்ட காட்சியின் தொடர்போடு   ஆரம்பிக்கிறார்.  கவனித்து பார்க்கவும்.  ( உதாரணம் ஒரு காட்சி மாறுகையில் ஒருவர் காரில் புறப்பட்டால் அடுத்தகாட்சியில் வேறொருவர் காரில் வந்து இறங்குவார்.)

1.எண்பதுகளில்  லாஸ்ஏஞ்ஜலஸில் ஹெராயின்,கோக்கெய்ன்,மற்றும் மதுவின் போதைக்கும் வரைமுறையில்லா பாதுகாப்பற்ற க்ரூப் செக்ஸிற்கும் அடிமையாகி சீரழிந்து  வரும் பணம்படைத்த சமூக அந்தஸ்த்து உள்ள   பைசெக்ஸுவல் இளைஞர்கள் க்ரஹாம் (ஜான் ஃபாஸ்டர்), மார்டின், டிம் (லூ டெய்லர் ), ரேமாண்ட், அவர்களுக்கு பொதுவான செக்ஸ் பார்ட்னர் க்ரிஸ்டி (ஆம்பர் ஹியர்ட்) . சமீபத்தில் இவர்களுக்கு பொதுவான நண்பன் ப்ரூஸ்  கார் மோதி இறந்து விட.நினைவுஅஞ்சலி கூட்டம் நடக்கிறது. பின்னர் அவரவர் மேலே சொன்ன இயல்பு வாழ்கைக்கு திரும்புகின்றனர்.வாழும் வரை பார்ட்டி அனிமல்களாய் உல்லாசமாய் அனுபவித்து வாழ எண்ணுகின்றனர்.

2.மனைவி மக்களைப்பற்றி நினைக்காமல் ஸ்டுடியோவிலேயே வாழும் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் வில்லியமும் (பில்லி பாப் தார்ண்டன்), செய்திவாசிக்கும் பெண் செரிலுடனான (வினோனா ரைடர் ) அவரது கள்ளக்காதலும்,விரைவில் பிரியப்போகும் மனைவிக்கு  ஜீவனாம்சமாக தன் பாதி சொத்தை கொடுக்க மனமின்றி அவளுடனே ரீகவுன்சிலிங் செய்து கொண்டு மீண்டும் சேரவருவதும். சேர்ந்த பின்னும் தொடரும்  அவரின் கள்ளக் காதலும், அவரின் போதைமாத்திரைக்கு அடிமையான மனைவி லாரா (கிம் பாசிங்கர்) அவள் மகனின் நண்பன் மார்டினுடன் (ஆஸ்டின் நிக்கோல்ஸ்) வைத்திருக்கும் உடல் தொடர்பும்.குடும்பத்தினரிடம் நிலவும் வெறுமையும் எப்படி ஒரு குடும்பம் இருக்க கூடாது என்பதற்கு உதாரணம். அதில் ஒரு விந்தையாக ,வில்லியம்  தனக்கு இருக்கும் ED குறைபாட்டுக்கு மனைவி லாராவின் கையாலேயே விதைபகுதியில் ஊசி போட்டுக்கொண்டு விரைவில்  பிரிய இருக்கும் மனைவியையே கூடுவது மிருகத்தனத்துக்கும் கீழான செயல்.அதை நேர்த்தியாய் சொல்லும் இந்த இழை.

3.ஹெராயின் போதைக்கு அடிமையான பெடோபைல் தன்மை கொண்ட புகழ்படைத்த ராக் பாடகன் பரையன் மெட்ரோ (மெல் ரெய்டோ) பதினம வயதுள்ள ஆண் பெண்ணுடன் த்ரீசம் ஆர்கி தினமும் வைத்துக்கொள்பவன். இவனுக்கு நினைவிருப்பது இவன் பெயரும், போதையும்,பின்னே செக்ஸும் மட்டுமே.இவனுக்கு புகழ் கிடைத்த அளவுக்கு அன்பு கிடைக்கவில்லை,இவன் மனதில் குடிகொண்ட வெறுமை அதை சொல்லும் மற்றொரு இழை.அவன் இரவெல்லாம் கூடிவிட்டு காலையில் கண் விழித்து அருகே நிர்வாணமாய் தூங்கும் 15வயதுக்கும் குறைந்த ஆணையும் பெண்ணையும் பார்த்து கடுப்பாகி தன் முரட்டு உதவியாளனை அழைத்து அவர்களை முரட்டுத்தனமாய் வெளியே தூக்கி போட செய்யும் வினோத கிராக்கு.இவனைப்பற்றி இந்த இழை.
4.வாழ்வில் முன்னேற சினிமாவில் சேர  கடத்தல் மற்றும் கொலைபாதகம் செய்யும்  குடும்பத்தை விட்டு ஓடிவந்து வாட்ச்மேன் வேலைபார்க்கும் சிற்றூர் இளைஞன் ஜாக் (ப்ராட் ரென்ஃப்ரோ),அவனை தேடி வந்து அடைக்கலம் கேட்ட்டு தொல்லை தரும்  பிள்ளை பிடிக்கும் சித்தப்பன் பீட்டர் (மிக்கி ரூர்கி) ,அவனுடன்  போதைக்கு மயங்கிய இளம் பெண் கூட்டாளியும். பீட்டர்  6000 டாலருக்கு டர்க் என்னும் மாஃபியா ஆளுக்கு விற்க பிடித்து வரும் தெருவில் விளையாடிய அப்பாவி சிறுவன் என இன்னொரு விந்தையான இழை .

5.நான்கு நண்பர்களில் ஒருவனான டிம்(லூ டெய்லர்) ன் விவாகரத்தான பெற்றோரில் அப்பா லெஸ் ப்ரைஸ் (க்ரிஸ் ஐசக்) மகனுடன் திடீர் பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள கோர்ட் ஆர்டருடன் டிம்மை ஹவாய் தீவுக்கு அழைத்துச் செல்வதும். மகனுடன் மது குடிப்பதும்,பாரில் சந்தித்த இரண்டு இளம் பெண்களை தனக்கும் மகனுக்கும் சேர்த்தே பிக்கப் செய்யப்பார்ப்பதும்.தனக்கு பிடித்தவற்றை மகன் மீது திணிப்பதும் ,ஏவுவதும் வேடிக்கை.மகன் ஹவாய் தீவில் ஒரு அழகிய பெண்ணை டேட்டிங் செய்வதைப்பார்த்து அவனுக்கு உதவ நினைத்தும்,மகன் போதை மற்றும் பைசெக்சுவல் தன்மை உள்ளதால் தடுமாறுவதைப் பார்த்து திகைக்கும் இன்னொரு இழை.

6.மேலே சொன்ன ஹாலிவுட் தயாரிப்பாளர் வில்லியம் & லாரா தம்பதியரின்   பைசெக்ஸுவல் தன்மையுள்ள மகன் க்ரஹாம் (ஜான் ஃபாஸ்டர்) பணத்துக்காக செய்து வரும் போதைமருந்து பரிமாற்றமும்,அவனின் அழகிய காதலி க்ரிஸ்டி (ஆம்பர் ஹியர்ட்) ஹெராயின் போதையுடன்  தன் ஹோமோ செக்ஸுவல் பார்ட்னர்களுடன் வைத்துக்கொள்ளும் செக்ஸும்,  அந்த  ஓப்பன் செக்ஸ் நடவடிக்கையினால் திடுக்குற்ற இவனுக்கு ஃப்ரீசெக்ஸ் கலாச்சாரத்தின் மீது ஏற்படும் வெறுப்பையும், அப்பாவுக்கும் அம்மாவுக்கும், சீரழிந்த அண்ணனுடன் இடையே சிக்கித்தவிக்கும் ஒழுக்கமான பதின்ம வயது மகள் சூசன் (கேமரான் குட்மேன்) கொள்ளும் துயரங்கள் என  வினோதமான இழையும் உண்டு.

7.தாய் தந்தையர் பாசம் அறவே அற்ற க்ரிஸ்டி (ஆம்பர் ஹியர்ட்) ஓப்பன் செக்ஸில் நம்பிக்கை வைக்கிறாள்,தன் உயர்தர அடுக்குமாடி வீட்டில் எந்நேரமும் ஹெராயின் உட்கொண்டும் க்ரூப் செக்ஸில் ஈடுபட்டும் வருகிறாள்.இல்லறம் என்பதை வெற்றிடமாக கருதி இருக்கும் வரை உல்லாசமாய்,பலருடன் கூடி குலவுவதிலேயே லயிக்கிறாள்,இதை வருத்தத்துடன் தட்டிக்கேட்ட காதலன் க்ரஹாமுக்கு பதிலடியாக அவன் ஒரு பைசெக்சுவலாக அவன் நண்பன் மார்டீனுடன் உடல்தொடர்பு வைத்துக்கொள்வதை தான் கண்டுகொள்ளாதது போல, அவனும் இவளின் உடல் தொடர்புகளை கண்டும் காணாமல் இரு என உரைப்பது. விஷவிதை போன்ற ஒப்பன் செக்ஸ் கலாச்சாரத்தைப் பற்றிய பயத்தை நம்முள் கிளறாமல் இல்லை.

க்ரிஸ்டியுடைய அப்பாவின் புதிய இளம் காதலி இவள் அப்பாவின் கடற்கரை வீட்டுக்கு தன் மூன்று வயது மகனுடன் குடிபெயர்கிறாள். அவளின் முன்னாள் கணவன் அந்த வீட்டின் தொலைபேசி எண்ணில் போன் செய்து மகனுடன் பேசவேண்டும் என மிரட்ட, அந்த பெண் அவனை போலீசில் பிடித்து கொடுப்பேன் என பதில் சொல்கிறாள்.கண் முன்னே இருக்கும் உறவை விட்டு புதிய உறவை தேடிப்போய் அதிலும் ஏமாந்து தோற்றுப்போகும் பிகமிஸ்டுகளைப்பற்றிய வித்தியாசமான இழையை இதில் காணலாம்.

யக்குனர் தன் நுட்பமான படைப்பால் மேலே சொன்ன அத்தனை கதாபாத்திரங்களுக்கும்  உயிரூட்டி அவர்களையும் படம் பார்க்கும் நம்மையும்  ஒரே நேர்க்கோட்டில்   சந்திக்கவைக்கிறார். துள்ளலான திரைக்கதை,எண்ணில்லா கதாபாத்திரங்களை வைத்து பின்னபட்ட கிளைக்கதை மற்றும் ஏகப்பட்ட ட்விஸ்டுகளாலும் சற்றே குழம்ப வைத்தாலும் ,  பிரபல நடிகர்கள் பில்லிபார்ப் தார்ண்டன் (த மேன் ஹூ வாஸ் நாட் தேர் ), மிக்கி ரூர்க்கி (த ரெஸ்லர்) நடிகைகள்  கிம் பேசிங்கர் (எல் ஏ கான்ஃபிடென்ஷியல்) வினோனா ரைடர் (லிட்டில் வுமேன் )போன்றோரின்  மிகப்  ப்ரொஃபெஷனலான நடிப்பாலும்,மிக நேர்த்தியான இசை,ஒளிப்பதிவினாலும் .

பைனாப்பிள் எக்ஸ்ப்ரெஸ் புகழ் இளம் நடிகை  ஆம்பர் ஹியர்ட்  இதில் துணிந்து இரண்டு டாப்லெஸ் கலவி காட்சிகளில் லயித்து நடித்துள்ளதாலும் இப்படம் நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது. படத்தில் வரும் 50% காட்சிகளில் இவர் பிறந்த மேனியாகவே வருகிறார்.

டம் அந்த இரண்டு காட்சிகளுக்கே  பார்க்கலாம். இனியாவது இந்த பெண்ணுக்கு பெரிய படங்களில் வாய்ப்பு கிடைக்கட்டும். படத்தை லிமிட் ரிலீசில் வெளியிட்டதால் 300,000 அமெரிக்க டாலர்கள் தான் கல்லா கட்டியதாம். வைட் ரிலீஸ் விடுவார்களா? தல ஹாலிவுட் பாலாவுக்கே வெளிச்சம்.

டத்துக்கு இன்னொரு சிறப்பு  இது அமெரிக்கர்களாலேயே கன்னறாவி படம் என காறி துப்பப்பட்ட படமாம். இது ஒன்று போதாதா? படத்தில் காண்ட்ராவர்ஸிக்கு பஞ்சமே இல்லை என்பதற்கு? நாவலில் இன்னொரு சிறுகதையாக ஒரு வாம்பையர் (ரத்தக்காட்டேரி) கதாபாத்திரமும் வருமாம், அதை இதில் எங்கே சேர்ப்பது? சேர்த்தால் லாஜிக்கான இந்த படத்தில் இடைச்செருகலாய் தெரியும் என இயக்குனர் அதை தூக்கி விட்டாராம், நல்ல வேளை.
=============
சரி படத்தில் மேலே சொன்ன ஏடாகூடமான கதாபாத்திரங்களுக்கு என்ன ஆனது? இயக்குனர் யதார்த்தமான முடிவைத்தான் வைத்துள்ளார்.  அது என்ன?
சன்டிவி தொலைக்காட்சி சீரியல்களில் வரும் கள்ளத்தொடர்பை விட இடியாப்ப சிக்கலாய் உள்ள  1-30 மணி நேர படத்தை 
டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
அப்புறம் வாருங்கள் பேசுவோம்.
===============================
படத்தின் முன்னோட்டக் காணொளி:-


===============================
டிஸ்கி:-
படத்தை இவ்வளவு கலைத்தன்மையுடன் எடுத்த இயக்குனர் படத்தின் போஸ்டரை ஏன் உயிரற்ற முகமாய் வைத்தார். என யோசித்தேன்.  படத்தின் போஸ்டரில் இருப்பது ஒரு மானிக்குய்ன். (நகைக்கடை & ஜவுளிக்கடை பொம்மை) மேலே சொன்ன மனிதர்களை குறிக்கிறது,அவர்கள் வெளித்தோற்றத்தில் அழகாய் இருந்தாலும் உள் மனதில்  எதிலும் பிடிப்புமற்ற வெறுமையே இருக்கிறது. அதைத் தான் அந்த குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்.
===========