ஸீபிஸ்கட்-ஆங்கிலம்-Seabiscuit (2003)

”லாரா ஹில்லன்ப்ராண்ட்” எழுதிய ஸீபிஸ்கட் என்னும் நாவலைத் தழுவி 2003 ஆம் ஆண்டு கேரி ரோஸ்ஸின் திரைக்கதை இயக்கத்தில்   வெளிவந்த இப்படம் ஒரு குள்ளமான முரட்டுத்தனமான ,சோம்பேறித்தனமான ,தான்தோன்றித்தனமான பந்தயக்குதிரை ஸீபிஸ்கட்டையும்,அதன் முதலாளி சார்லஸ் ஹாவர்ட் (ஜெஃப் ப்ரிட்ஜஸ்) ,அதன் பயிற்சியாளர் டாம்  ஸ்மித் (க்ரிஸ் கூப்பர்) ,அதன் ஓட்டுனர் ரெட் பொல்லார்ட்(டோபி மாகுய்ர்), பின்னர் அதன் எண்ணிலடங்கா ரசிகர்கள் இவர்களை சுற்றி பின்னப்பட்ட அற்புதமான உணர்ச்சிகாவியம்.
குடும்பத்தினருடன் விடுமுறை நாட்களில் பார்க்க ,வாழ்வில் அலுப்பு  தட்டியவர்கள் பார்க்கவும் ஏற்ற படம்.தன்னம்பிக்கை தானாய் வரும்.இது போல மனதை நகர்த்தும் படங்கள் எப்போதாவது தான் வரும்.இதை நான் லீனியராகவே எடுத்திருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும்.பெரிய படம் போல தெரிந்திருக்காது.

ஸீ பிஸ்கட் என்பது கப்பல் மாலுமிகள் சுவைக்கும் ஒருவகை பிஸ்கட்டாம் ,இக்குதிரை அதே வண்ணத்தில் இருந்ததால் இதற்கு இந்த பெயர் வந்ததாம்.அமெரிக்காவில் இன்னும் இந்த குதிரைக்கு சாண்டா அனிடா ரேஸ் மைதானத்தில் சிலை இருக்கிறதாம். May 23, 1933 பிறந்த இக்குதிரை May 17, 1947 வரை உயிர் வாழ்ந்து பல வெற்றிகளை குவித்ததாம், உலக மகாப்பஞ்சத்தில் வீடு வாசல் இழந்து சந்திக்கு வந்த மனதை தளரவிட்ட, வாழக்கையை வெறுத்த பலருக்கு இது ஒரு கிரியா ஊக்கியாய் இருந்ததாம்.

ப்பொது அமெரிக்க மக்களுக்கு தொழிற்புரட்சி மேல் கவனம் போய் குறுக்கு வழியில் பணம் ஈட்ட கவனம் திரும்பியது,அப்போது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த தேவ தூதன்,ஆபத்பாண்டவன் தான் இந்த ஸீ பிஸ்கட்.வைரத்தை மண்ணில் இருந்து வெட்டி எடுத்தவுடன் அதற்கு மதிப்பு வந்து விடுவதில்லை,அதை பட்டை தீட்ட தீட்டத்தான் அதற்கு பொலிவும் விலைமதிப்பற்ற தன்மையும் கூடிவரும்.
ப்படி இந்த குதிரைக்கு மூவர் கிடைத்தனர்,அந்த மூவருக்கு இந்த ஸீபிஸ்கட் கிடைத்தது,இவர்கள் தளர்ந்த போது ஸீபிஸ்கட்டும் ,ஸீபிஸ்கட் தளர்ந்தபோது இவர்களும் பரஸ்பரம் உதவிக்கொண்டனர், உதவி வாங்கிக்கொண்டனர்.

ப்போது மிகப்பெரிய தொகையாக 7500 டாலர்களுக்கு ஸீபிஸ்கட்டை வாங்கிய , மகனை இழந்த, விவாகரத்தான, சமீபத்தில்  காதல் திருமணமான சார்லஸ் ஹாவர்டுக்கோ பந்தயக் குதிரை வளர்ப்பு  முற்றிலும் புதிய தொழில். அவர் அந்த குதிரைக்கு தேர்ந்தெடுத்த பயிற்சியாளர் டாம் ஸ்மித்திற்கோ முதிர்ந்த வயது.வீடற்ற அவருக்கு வீடு கொடுத்து உணவளித்து தன்னுடனே அழைத்து வருகிறார். சரி இப்போது இக்குதிரைக்கு நல்ல“ஜாக்கி” கிடைக்க வேண்டுமே,அதுவும் “ஜாக்கியின்”  உயரம் 5அடிக்கு குறைவாகவும் 50கிலோவுக்கு குறைவாயும் இருக்க வேண்டும்.

னால் ஸீபிஸ்கட் தன்னை அலட்சியமாக ஓட்ட வந்த ஜாக்கியின் சட்டையை கடித்து கிழித்துஎறிந்து விட நல்ல ஜாக்கியே கிடைக்கவில்லை. உயரமான எடை அதிகமான ரெட் பொல்லார்ட் என்னும் ஜாக்கி சாதுர்யமாக ஸீபிஸ்கட்டை தட்டிக்கொடுத்து,அதனுடன் பேசி கொஞ்சி, அசந்த வேளையில் ஏறி சுற்றி வர அனைவருக்கும் ஆச்சர்யம்,அவரையே ஒரு ஜாக்கி குள்ளமாய்,எடை குறைவாய் இருக்க வேண்டும்,என்ற விதியையும் மீறீ ஜாக்கியாய் நியமிக்கிறார் ஹாவர்ட்.இவருக்கு தன் புத்திர சோகம் அடியோடு மறைந்து ஸீபிஸ்கட்டையே தன் மகனாய் நினைக்கிறார்.

ஜாக்கி ரெட் பொல்லார்டின் அப்பா,அம்மா குடும்பம் மகா பஞ்சத்தில் வீடுவாசல்,தொழில் இழந்து வீதிக்கு வர,ரெட் பொல்லார்டிற்கு குதிரைகள் பற்றிய அறிவு இருந்ததால் ஒரு செல்வந்தர் தன் குதிரையை பார்த்துக்கொள்ள ஆள் தேவை என் இவரின் பெற்றோரிடம் கேட்க,அவர்களும் ஒரு பிள்ளைக்கு சாப்பாடு செலவு மிச்சம் என மகனை அவரிடம் பணத்துக்காக அனுப்பி விடுகின்றனர்.அங்கே எடுபிடி வேலை செய்து சொல்லொனாத் துயரம் அனுபவிக்கும் ரெட் பொல்லார்ட் தன் அதீத உயரத்தினால் ஒரு ஜாக்கியாக ஆக முடியாமலே போக, பணத்துக்காக சட்டவிரோதமான குத்துச்சண்டையில் பங்கெடுக்கிறார், அங்கும் இவருக்கு ஏமாற்றமே கிடைக்கிறது. குத்துசண்டையில் விழுந்த அடியில்  இவருக்கு வலப்பக்க பார்வை பறிபோய்விடுகிறது, வறுமையினால் மருத்துவமும் செய்யமுடியவில்லை. எப்போதுமே திறமையும் செல்வமும் எதிர் துருவம் தானே?
ரு கண்ணில் மட்டுமே பார்வை என்ற உண்மையை முதலாளி ஹாவர்டிடம் மறைத்து ஜாக்கியாய் ஓட்டி முதல்  பந்தயத்தை கோட்டை விடுகிறார்.இரண்டாம் பந்தயத்தில் கடைசி வரை ஸீபிஸ்கட் மிக வேகமாய் ஓடியும் இவருக்கு வலப்புறம் மற்றொரு வார் அட்மைரல் என்னும் முதல் தர ரேஸ் குதிரை ஓடியும் ,இவருக்கு கண் தெரியாமல் முதலில் ஓடுகிறோம் என நினைத்து குதிரையை ஊக்கம் கொடுக்காமலே அதே வேகத்தில் ஓட்ட ஸீபிஸ்கட் தோற்றுவிடுகிறது.
முதலாளி ஹாவர்டுக்கு தோல்வியாலும்  இவருக்கு வலது கண் தெரியாது  என அறிய வரும்போது கோபம் வந்தாலும் மனிதாபிமானத்தால் ரெட் பொல்லார்டை வேலையிலிருந்து தூக்க மனமில்லை.அவரும் அவரின் இளம் மனைவி மார்சிலாவும் ( எலிசபெத் பேங்க்ஸ்) நன்கு ஊக்கமளித்து,சிறப்பு பிரத்யேக பயிற்சியளித்து மேலும் பல பந்தயங்களில் பங்கு பெறச்செய்து  வெற்றி பெறுகின்றனர். இவர்களின் குதிரையை ரயிலில் ஏற்றி  அமெரிக்காவின் எல்லா மாகானங்களுக்கும் சென்று பந்தயம் வைத்து வெற்றிவாகை சூடுகின்றனர். மக்கள் சென்றஇடமெல்லாம்  கூடி ஆரவாரம் செய்து வரவேற்கின்றனர்.இந்த மூவரின் முரண்பாடான கூட்டணி அனைவருக்குமே விசித்திரமாக தெரிகிறது.
ஸீபிஸ்கட்டின் தேய்ந்த பழைய இரும்பு லாடம் கூட நல்ல விலைபோகிறது, ஒருபடி மேலே போய் ஸீபிஸ்கட் தன் குளம்பை மையில் நனைத்து ஆட்டோக்ராஃபும் போடுகிறது,மக்கள் ஒரு மார்க்கமாய் ஸீபிஸ்கட்டை கொண்டாடுகின்றனர்.கதை இப்படியாக இருக்க ஸீபிஸ்கட் இன்னும் வெற்றிகொள்ளாதது “த அட்மைரல்” என்னும் குதிரையுடன் தான்.அதன் எஜமானர் சாம் என்னும்  பணக்காரர் ஹாவர்டின் தொடர்ந்த அறைகூவலுக்கு  இறுதியாக செவிசாய்த்து தன் ஹோம் கிரவுண்டான பிம்லிகோவிலேயெ பந்தயத்தை நவம்பர் 1 ஆம் தேதி வைக்க சம்மதிக்கிறார்,பந்தயத்துக்கு 15 நாட்களே இருக்கும் நிலையில் பயிற்சியாளர் டாம் ஸீபிஸ்கட்டுக்கு பயிற்சி முறையை மாற்றுகிறார்.ஸீ பிஸ்கட் இன்னும் மிளிர்கிறது,வெற்றி நமதே என ஆரவாரம் செய்கிறது.
ஸீ பிஸ்கட்டை மக்களிடையே கொண்டு சேர்த்ததில் முக்கிய பங்கு  டிக்டாக் மெக்டாலின் (வில்லியம் ஹெச் மாசி) என்னும் வானொலி தொகுபாளரையே சேரும்,இவர் சுவையான தொனியில் தொகுத்து வழங்கிய ரேஸ் அப்டேட் மிகவும் பிரசித்தி பெற்றதாம்.

ந்நிலையில் ரெட் போலார்ட் தன் பெற்றோர் நினைவு வரும்போதெல்லாம்  சிறுவயதிலிருந்தே தன்னுடன் வைத்திருக்கும் ஒரு மூட்டை புத்தகங்களை ஒவ்வொன்றாய் படிக்கிறார். ஸீபிஸ்கட்டின் மேல் உயிரையே வைத்து போற்றி பாதுகாக்கிறார். இவரின் பழைய முதலாளி இவரை ஒருநாள் பார்த்து நான் உன்னை அப்போதே ஜாக்கி ஆக்கியிருக்க வேண்டும்,நான் உனக்கு தவறு இழைத்துவிட்டேன்,இப்போது மிகவும் கஷ்டப்படுகிறேன். எனக்கு நல்ல ஜாக்கி கிடைக்கவில்லை,இந்த தொழிலையே விட்டுவிடலாம் என இருக்கிறேன்,குதிரையை விற்க வேண்டும் ஆனால் இது முரட்டுக்குதிரையாயுள்ளது,இதை உன்னால் ஓட்டி பழக்கி பயிற்சி  தர முடியுமா?எனக் கேட்க, இவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்து குதிரை மேலமர்ந்து சவாரி செய்தபடி வேகமெடுக்க தூரத்தில் இருவர் ரேஸ் மைதானத்தை உழுது கொண்டிருக்க,ட்ராக்டரை  இயக்க,அந்த சத்தம் கேட்டு குதிரைக்கு மதம் பிடித்து ரெட்பொல்லார்டை கீழே தள்ளி , இவரை நீண்ட தூரத்துக்கு இழுத்துக்கொண்டே சென்று கடாசுகிறது,அதில் இவருக்கு இடுப்பில் பலத்த அடியும்,வலது கால் எலும்பு முறிவும் ஏற்படுகிறது.

ருத்துவர்கள் இனி ரெட் பொல்லார்ட் நடக்க வேண்டுமானால் முடியும்,ரேஸ் குதிரைக்கு ஜாக்கி ஆக லாயக்கு இல்லை என கையை விரித்துவிட.இவருக்கு வாழ்வே இருள்கிறது,இவர் பார்க்காத துயரமே இல்லை ஆதலால் சிறிதும் தாமதியாமல் தன் நண்பன்  ஜார்ஜை (கார்ரி ஸ்டீவன்ஸ்)வரவழித்து ஸீபிஸ்கட்டை எப்படி கையாளவேண்டும் என்ற  வித்தையை உரைக்க ஜார்ஜுக்கு ஸீபிஸ்கட்டின் குணாதிசயம்  பிடிபடுகிறது,பயிற்சியாளர் டாம் ஸ்மித்தின் அற்புதமான் கடினமான பயிற்சியமைப்பும் சேர்ந்துகொள்கிறது.

  • ஸீபிஸ்கட் வார் அட்மைரலை வெற்றிகொண்டதா?
  • ரெட் பொல்லார்ட் கால் எலும்பு முறிவு குணமாகி திரும்ப ரேஸுக்கு வந்தாரா?அவரின் நிதி நிலை முன்னேறியதா?
  • ரெட் பொல்லார்ட் தன் பெற்றோரை மீண்டும் சந்தித்தாரா?
  • ஜார்ஜுக்கு ரெட் பொலார்டின் அறிவுறைகள் பலனளித்ததா?
  • அது என்ன அந்த ஸீபிஸ்கட்டை வீறுகொண்டு எழச்செய்யும் ராஜ ரகசியம்?போன்றவற்றை  டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
    .படம் தொய்வில்லாமல் பயணிக்கும்.ராண்டி ந்யூமேனின் மிக அற்புதமான இசை ரேஸ் குதிரைகள் ஓடுகையில் நாமே அதன் மீது பயணிக்கும் பிரமையை தோற்றுவிக்கும்.என்ன ஒரு ஒளிப்பதிவு?என்ன ஒரு ஆர்ட் டைரக்‌ஷன்?இந்தபடத்தை தயாரித்த கேட்லின் கென்னடியை போற்றத்தோன்றுகிறது.
  •   இந்தபடம் 7 ஆஸ்கர் நாமினேஷன்களை பெற்றபோதும்,எந்த ஆஸ்கர் விருதையும் பெறவில்லை,நல்லபடங்கள் விருது பெறாமல் போவது என்ன அதிசயமா?என்ன? 
இந்த படம்  பெற்ற நாமினேஷன்கள்:-

   * Best Picture: Kathleen Kennedy, Frank Marshall, and Gary Ross
    * Best Adapted Screenplay: Gary Ross based on the novel by Laura Hillenbrand
    * Best Art Direction: Jeannine Claudia Oppewall and Leslie A. Pope
    * Best Cinematography: John Schwartzman
    * Best Costume Design: Judianna Makovsky
    * Best Film Editing: William Goldenberg
    * Best Sound Mixing 
இப்படத்தின் முன்னோட்ட காணொளி:-




அசல் சீ பிஸ்கட் வார் அட்மைரலை 1938ஆம் ஆண்டு பிம்லிகோவில் வெற்றி கொண்டு ட்ரிபிள் கிரவுன் வென்ற போது எடுக்கப்பட்ட வரலாற்று காணொளி

இந்த 2-35 மணி நேர படம்=பயனுள்ள பொழுதுபோக்கு