நீதியரசர்களா?நிதியரசர்களா?


மூன்று தீர்ப்புகள்:-
முதல் தீர்ப்பு:-[பாரதம்]

லகின் மிக மோசமான ரசாயன பேரழிவாய் பேசப்படும் போபால் விஷவாயு வழக்கு கால் நூற்றாண்டுகளாக நடந்து ,இறுதிக்கட்டத்தை அடைந்து, உலகே  எதிர்பார்த்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது, இம்முறையும் நீதியரசர்கள், நாங்கள் சிறந்த நிதியரசர்களும் கூட  என்பதை  நிரூபித்து விட்டனர்.
தாமதிக்கப்பட்ட அரசநீதியாக யூனியன் கார்பைட்டின் அப்போதைய சேர்மனான கொலைகாரன் கேஷுப் மகேந்திராவுக்கு 2 வருடம் விஐபி சிறையும், ஐந்து லட்சம் ரூபாய் பிச்சைக்காசு அபராதமும் , பின்னே அன்று மாலையே பெயிலும் வழங்கப்பட்டது, கூடவே கைதான அல்லக்கைகள் ஏழு பேருக்கும் அதே 2 வருடம் விஐபி சிறையும், தலா ஒரு லட்சம் ரூபாய் பிச்சைக்காசு அபராதமும் , பின்னே அன்று மாலையே பெயிலும் வழங்கப்பட்டது, 
னி அநீதி இழைக்கப்பட்ட ஏழை பொது மக்கள்  குற்றம் சாட்டப்பட்ட கயவனை கோர்டு வாசலிலேயே அடித்துக்கொல்லுவது ,அல்லது குழுவாய் தற்கொலை செய்துகொள்வது தான் உத்தமம்,அவர்கள் எக்கேடு கெட்டாலும் அரசியல்வாதிகளுக்கு கவலையில்லை, கவர் கொடுத்து வேறு மாநிலத்திலிருந்து  கூட ஆட்களை அழைத்து வந்து ஓட்டு வாங்கத் தெரியும்
அப்பாவி மக்கள் இப்படி 26 வருடம் நீதியரசர்களுக்காக பொறுத்திருந்தால் குளுகுளுவென கோடை விடுமுறை முடித்து வந்த கையோடு எழுதும் அவர்கள் பேனா இப்படி தான் தீர்ப்பு எழுதும்.
ந்த கொலை பாதகத்தை ஒருவன் இஸ்ரேலில் நிகழ்த்தியிருந்தால் கொலைகாரர்கள் எங்கே போய் பதுங்கினாலும் முனிக் படத்தில் வருவது போல அவனை தேடிப்போய் கருவருத்திருக்கும் அந்த அரசாங்கம்,22000 பேரை கொன்ற கயவன் வாரன் ஆண்டர்சன்னை இன்னும் ஹவாய் தீவில் ஓவ்வெடுக்க விட்டிருக்கிறோம் நாம். இது பாரத தேசமாயிற்றே! ஃப்ரீ கண்ட்ரி ஃபார் ஆல் சார்ட் ஆஃப் க்ரைம். பெஸ்ட் ஆஃப் லக்,கரப்டட் கார்பொரேட்ஸ்.
=========
இதையும் வலியுடன் படித்து விடுங்கள்,என் மனதுக்குள் அசிங்க அசிங்கமாய் திட்டுவதற்கு எந்த கொம்பனும் புடுங்கமுடியாது.

இரண்டாம் தீர்ப்பு:-[அமீரகம்]

போன வருடம்,நவம்பர் மாதம் அமீரகத்தில்,  பாகிஸ்தானை சேர்ந்த 4வயதுசிறுவன் ஒருவன் 30 வயது உள்ளூர்-எமராத்தி ஒருவனால் மசூதியின் கழிவறையிலேயே வன்புணர்ச்சி செய்து சாகடிக்கவும் பட்டான்,அவனுக்கு துபாய் உச்சநீதி மன்றம் நிபந்தனை,மேல்முறையீடு அற்ற மரண தண்டனை விதித்துள்ளது. சீக்கிரமே அவன் சாவதை அச்சிறுவனின் ஆன்மா பார்க்கும், சிறுவனின் பெற்றோருக்கு அடிமனதின் வலியும் குறையும், கொலை, கொலைக்கு தீர்ப்பாகாது! என சொல்லும் மகாத்மாக்கள் பேருந்தில் தன் காலை மிதிக்கும் நபரை திருப்பி மிதிக்காமலாவது இருக்க முடியுமா? என முயன்று பார்க்கவும்.தனக்கு ஏற்பட்டால் இழப்பு,அடுத்தவனுக்கு ஏற்பட்டால் செய்தி.

மூன்றாம் தீர்ப்பு:-[அமீரகம்]

சென்ற வருடம்,தன் 36 வயது தென் ஆப்பிரிக்க காதலியை பேஸ்பால் மட்டையால் அடித்துக்கொன்று,கல்லைக்கட்டி கடலில் எறிந்த இங்கிலாந்தை சேர்ந்த 43 வயது ஜாக்சன் துரைக்கு, துபாய் உயர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை,மேல்முறையீடு,பெயில் அற்ற 15 வருட கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. அவன் தண்டனையை பூரணமாய் முடித்துவிட்டு போக 58 வயதாகியிருக்கும், அதன் பின் அவன் நாடு கடத்தப்படுவான், அவனுக்கு அதுவரை குடும்பம்,குடி,கூத்தி,கும்மாளம் அறவே கிடையாது, தண்டனைக்கு பின்னான அந்த நடைபிண வாழ்க்கை எவ்வளவு பெரிய தீர்ப்பு,? அமீரக நீதியரசர்களை வணங்குகிறேன்.
=========
இது குறித்து நான் முன்பு எழுதிக்கிழித்தது இங்கே


இன்று நண்பர் கருந்தேள் வேதனையுடன் எழுதிய பதிவு:- 

வேரைத் தேடி வெட்டு, இல்லை குறட்டை விட்டுத் தூங்கு…

 இது நண்பர் சுபதமிழினியன் அவர்களால்  இதே போபால் அவலத்தை பற்றி எழுதப்பட்ட சமூக விழிப்புணர்வு இடுகை.

சென்னை அருகே பெரும் ஆபத்து!

இது திரு.சொக்கன் அவர்களால் கல்பாக்கம் அணுக்கதிர்வீசினைப் பற்றி எழுதப்பட்ட சமூக விழிப்புணர்வு இடுகை.ஆபத்து வெகு தொலைவில் இல்லை என காட்டும்.

கொல்பாக்கம் - கதிர்வீச்சு பயங்கரம்

 இது மரக்காணம் பாலா அவர்களால் உள்ளக்குமுறலுடன் எழுதப்பட்டது, கைகா அணுமின் நிலையத்தில் வெளிச்சத்துக்கு வந்த சீர்கேடுகள், கல்பாக்கத்தில் இன்னும் நடந்து கொண்டிருப்பதை புடம் போட்டு காட்டியிருக்கிறார்.

இது எழுத்தாளர் ஞானியின் கேன்சர் கல்பாக்கம் என்னும் கட்டுரையின் கேள்விகளும் விஞ்ஞானி ஒருவரின் சப்பைக்கட்டு பதில்களும்

 

 இன்னும் வரும்

 

30 comments:

ஜோதிஜி சொன்னது…

இப்போது நான் கொடுக்கும் விமர்சனம் சற்று எரிச்சலாக இருக்கும். வேறு வழியில்லை. ஹாலிவுட் பாலா கொடுத்த தாக்கம்.

ஒரு படத்தில் வடிவேல் நகைச்சுவையில் நீ சொல்லி யார் கேட்டா? இல்ல நான் சொல்லி யார் கேட்கப் போறா ன்னு ஆரம்பித்து கடைசியில் வடிவேலை புரட்டி எடுப்பாரே அது தான் இந்த செய்தியை படித்தவுடன் மனதில் வந்து நின்றது.

அதிகபட்சம் தினமணி தலையங்கம் தீட்டும். மற்ற பத்திரிக்கைகளுக்கு இதுவும் கடந்து போகும்.

ஆட்டுவிப்பவர்கள் நாட்டுக்கு வெளியே
ஆடுபவர்கள் இங்கே.

ஜோதிஜி சொன்னது…

தனக்கு ஏற்பட்டால் இழப்பு. அடுத்தவருக்கு நடந்தால் செய்தி.

அப்பட்டமான இந்திய ஜனநாயகம்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஜோதிஜி,
எரிச்சல் ஊட்டும் படி நீங்கள் எதையுமே சொல்லவில்லை,நீங்கள் சொன்னது தான் அங்கே நடக்கிறது,உள்ளக்குமுறல் அதுதான் பதிவிட்டேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஜோதிஜி,
தலைவ்ரே,
இதே சட்டமேதைகள்,அவர்கள் குடும்பத்தாருக்கும் இதே போல நேர்ந்தாலும் பொறுமையுடன் நீதியை -உச்ச தண்டனை இன்றி நிலைநாட்டோனும்.
அதை மக்கள் பாக்கோனும்.அப்ப கிடைக்கும் ஆனந்தமிருக்கே...அடடா..

Sabarinathan Arthanari சொன்னது…

//என் மனதுக்குள் அசிங்க அசிங்கமாய் திட்டுவதற்கு எந்த கொம்பனும் புடுங்கமுடியாது.//

//கொலை, கொலைக்கு தீர்ப்பாகாது! என சொல்லும் மகாத்மாக்கள் பேருந்தில் தன் காலை மிதிக்கும் நபரை திருப்பி மிதிக்காமலாவது இருக்க முடியுமா?//

உடன்படுகிறேன்

ஜீவன்பென்னி சொன்னது…

இன்னோரு விசயம் அமீரகத்தில் நடந்தது கொலை குற்றம் நடந்து நான்கு மாதங்களுக்குள் செய்த இருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இருவருமே தமிழர்கள். நான் வியந்தேன் இத்தனை சீக்கிரமாக விசாரனை செய்து தண்டனையும் வழங்குகிறார்களே நம் நாட்டில் இது என்று நடைமுறைக்கு வருமென்று.

ஜீவன்பென்னி சொன்னது…

தமிழிஸ்ல வாக்கு செலுத்த முடியல. எங்கயோ போகுது.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@Sabarinathan Arthanari
நண்பரே கருத்துக்கு மிக்க நன்றி

@ஜீவன் பென்னி,
ஆமாம் ஜீவன் நானும் படித்து வியந்தேன்,இதை கல்ஃப் ந்யூஸில் போட்டு இந்திய சட்டத்தின் குருட்டு நிலையை வெளிச்சமிட்டுள்ளார்கள்.
எவ்வளவு வேற்று நாட்டோர் பார்த்திருப்பார்கள்?
இந்தியாவில் சுற்றுலாவுக்கு வரக்கூட பயப்படுவர்,எந்த நீதியும் கிடைக்காது,ஏற்கனவே கோவாவில் நிறைய சம்பவங்கள் நிகழந்தன.ஃபாரின் டூரிஸ்டுகள் வந்து செய்யும் அக்கிரமத்துக்கும் இதே நிலை தான்,

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

தமிழிஷ் பட்டையில் ஏதோ கோளாறு தொழில்நுட்ப கோளாறு இருக்கிறது போல.

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

சாட்டையடி தல...வெட்கம் கெட்ட அரசாங்கம்....இலவசத்துக்கு வாயை பிளக்கும் பொதுஜனம்... வௌங்கிரும்...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ பிரதாப் ,வேதனை வெட்கம் அவமானம்.
எங்கிட்டு விளங்குறது?இந்த லட்சனத்தில் மலேசியாவில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்களை கொலை செய்யுறாங்கன்னு பீதிய கிளப்புவது.அவன் எப்படி நம்ம உயிரை மதிப்பான்,இனி நம் கருநீல பாஸ்போரடை சுத்தமாய் மதிக்கமாட்டான் எவனும்.இந்திய உயிர்கள் கிள்ளுக்கீரை.

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

நண்பா . . மிக மிக அவசியமான பதிவு . . முழுமையாக உடன்படுகிறேன் . .

கேஷுப் மகேந்திரா, கஸாப் போன்றவர்களை, பொதுவிடத்தில் அம்மணமாக்கி நிற்கவைத்து, கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான். ஆனால், நமது நாட்டில், அது நடக்காது. அரசியல் !

மட்டுமல்லாது, மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்று முட்டாள்களின் அழுகை வேறு . . இவர்கள் இப்பதிவைப் படிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அந்த தினமலர் லின்க் வேலை செய்யவில்லை நண்பா . . செக் செய்து, அந்தச் செய்தியைப் பற்றி மெயில் அனுப்புங்கள் . .

ஹாலிவுட் பாலா சொன்னது…

ஆஹா.. இதைத்தான் ஜோதிஜி சொன்னாரா? ஸாரிங்க தல. நம்மூர் செய்தியெல்லாம் நான் படிக்கறதை நிறுத்தி வருசக் கணக்காச்சி.

இவங்களுக்கு மரண தண்டனை கொடுக்கறதை விட முக்கியம், பாதிக்கப் பட்டவங்களுக்கு நிவாரணம். அதுக்கான நீதியே கிடைக்கலை.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

எப்பொழுதுதான் விழித்துக்கொள்வோமோ நாம் . சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

M.S.R. கோபிநாத் சொன்னது…

சரியான சாட்டையடிப் பதிவு..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஹாலிவுட் பாலா,
தல நிவாரணமா?அதை ஏற்கனவே சொற்பமாய் கொடுத்திருக்கறதா படிச்சேன்,ஆனால் அது வெறும் 500டாலர் இறந்தவங்களுக்கு மட்டும்.(வெறும் 23ஆயிரம் சொச்சம்)அதுகூட வந்ததான்னா?தெரியாது தான் என் பதில்.

தல , நீங்களும் ஓய்வு நேரத்தில் இதுக்கு ஒரு பதிவு போட்டீங்கன்னா அமோக ரீச் கிடைக்கும்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@பனித்துளி சங்கர்,
கருத்துக்கு மிக்க நன்றி நண்பா

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@M.S.R. கோபிநாத்
வருகைக்கு நன்றி நண்பரே

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கருந்தேள்-ராஜேஷ்
நண்பா மிகுந்த வேலை பளுவிலும் இந்த அநீதிக்கு பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.மரண தண்டனை ஒழித்துவிட்டால்,நம்ம வீடு நமதல்ல,பல இன்னல்களை வாழும் சமூகத்தில் சந்திக்க வேண்டி வரும்.

பின்னோக்கி சொன்னது…

கொடுமை. 20,000 பேர் உயிருக்கு நீதி இப்படி கிடைக்கிறது. போட்டோவைக் கூடவா பார்த்திருக்க மாட்டார்கள் நீதிபதிகள் ?. கேட்டால், வழக்கு சரியாக வாதாடப்படவில்லை அல்லது ஆதாரம் இல்லை அல்லது நம் சட்டம் அப்படி என்று எதாவது ஒரு காரணம் சொல்லுவார்கள். 3000 பேர் இறந்த போது அமெரிக்கா காட்டிய வேகம், 20,000 பேர் இறந்தும் நமக்கு வரவில்லை. இது ஒரு பெரிய சோகம். வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது :(

ILLUMINATI சொன்னது…

நண்பா,ரத்தக் கண்ணீர் படத்துல வர்ற டயலாக் தான் நினைவுக்கு வருது இந்த மனித உரிமை பற்றி பேசுரவங்கள நினச்சா..

"ஜீவ காருண்ய சங்கமா? மூட்டைப்பூச்சி கடிச்சா என்னப்பா செய்வ? "

கிரிமினல்களுக்கு வக்காலத்து வாங்கும் இவர்கள்,பாதிக்கப்பட்டவர்களை 'வசதி'யாக மறப்பது எப்படி?தனக்கு வந்து இருந்தா இல்ல தெரிஞ்சு இருக்கும்.

தண்டனை குறித்து: இந்த மாதிரியான குற்றங்கள் செய்த நாய்களுக்கு இருப்பதிலேயே கொடூரமான சித்திரவதையின் மூலம் மரணம் தரப்பட வேண்டும்.அப்ப தான் அடுத்து வர்றவன் திருந்துவான்.ஆனா,தண்டனையா?நோ,நோ....
This is a demo crazy country!!!

மேலும்,நான் ஒருமுறை படித்தேன்:

"The next worst thing to anarchy is democracy."
அதுவும் இந்த மாதிரி துப்புக்கெட்ட நாட்டில்...

வினோத்கெளதம் சொன்னது…

குரு நம்ம என்ன பண்ண முடியும் வருத்தப்படுவதை தவிர..

எங்கயோ தப்பு நடந்து இருக்கு..இனிமேல் இதுப்போல் நடக்காமல் இருக்கவேண்டும் அவ்வளவு தான்..

ஹாலிவுட் பாலா சொன்னது…

//தல , நீங்களும் ஓய்வு நேரத்தில் இதுக்கு ஒரு பதிவு போட்டீங்கன்னா அமோக ரீச் கிடைக்கும்//

இந்த நேரத்திலும்.. ஜோக்கடிக்க எப்படி முடியுது?? :)

ILLUMINATI சொன்னது…

//குரு நம்ம என்ன பண்ண முடியும் வருத்தப்படுவதை தவிர..
//

ஆங்!இது தான்!இதே தான்!இப்புடியே தான்!

நம்மள செத்தாலும் திருத்த முடியாது!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@வினோத்,
குரு நீயும் ஓய்வு நேரத்தில் நீங்களும் ஓய்வு நேரத்தில் இதுக்கு ஒரு பதிவு போட்டீன்னா எல்லோரையும் ரீச் ஆகும்,சீரியஸா தான் சொல்றேன்.எதோ நம்மால் ஆன பங்களிப்பு,நினைச்சு பார்,தமிழ்நாட்டுல இருக்கும் ரசாயன ஃபேக்டரில ஒண்ணு இப்படி ஆனா இன்றைய தேதிக்கு என்ன ஆகும்னு?கல்பாக்கம் அனுமின் நிலையம் சுத்தி உள்ளவர்களுக்கே இப்போ நிறைய குறைகள் இருப்பதாய் படிக்கிறேன்.விழிப்புணர்வு நிச்சயம் வேண்டும்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ILLUMINATI,
ஆழ்ந்த கருத்துக்களுக்கு நன்றி நண்பா,
வேறென்ன கேட்க போறேன்,உங்க தமிழ் ஆங்கில பதிவுகளில் இதை பதிந்தால் போபால் மக்கள் பட்ட துயரம் வேறு சில பேருக்காயினும் தெரிய வரும்.நண்பர்களிடம் இது தான் கேக்குறேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஹாலிவுட் பாலா,
தல,சீறியஸா சொன்னா விளையாட்டுன்னுக்கிட்டு எடுத்துக்கிட்டு,அண்ணன் அழகிரியிடமும் இதையே கேட்டிருக்கேன்.:))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@பின்னோக்கி,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,பெருகி வரும் வாகன புகையாலும் கூட எதிர்பாராத சீர்கேடுகள் நடக்க வாய்ப்புள்ளதா படித்தேன்,நம்ம நாட்டுலவரும் முன் காப்போம் கொள்கை கிடையாது ”வந்தபின் தான் பாப்போம்” என்னும் கொள்கைதான்.

கண்ணா.. சொன்னது…

தல..இவங்க திருந்தவே மாட்டாங்க தல.. ஆனா போபால் மாதிரியான உலகின் கவனத்தை ஈர்த்த முக்கியமான விஷயத்திலும் இது போன்று கேவலமான தீர்ப்பு அளிக்க முடியும்னு நிரூபிச்சுட்டு வாராங்க.

உங்களோட முந்தைய பதிவ பாத்துதான் நான் நிறைய விவரங்களை தெரிஞ்சுகிட்டேன். அவசியமான பதிவு. என்னுடைய கண்டங்களும்..

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

கண்ணா,
நலமா?புது வேலை எப்படி?கண்டனத்துக்கு மிக்க நன்றி நண்பா

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)