ஹல்லாபோல் [Hallabol][ஹிந்தி][2008] உரக்க கத்து

ந்த படம் பாலிவுட், கோலிவுட், டோலிவுட்,மோலிவுட் என எல்லா வுட்டுக்குமே பொருந்தும் என்னுமளவுக்கு அம்சமான ஒரு டெம்ப்ளேட் கொண்டது. ஏனென்றால் நாமும் இந்தியர்தானே!!!,அடுத்தவனுக்கு நடந்தால் செய்தி !நமக்கு நடந்தால் விபத்து, என நினைப்போர் தானே!! இதில் செமையாக அந்த மனநிலை மனிதர்களை  சுளுக்கெடுத்துள்ளனர்.

நான்,ரேஸ்,டஷன்,சிங் இஸ் கிங்,மிஷன் இஸ்தான்புல், ஹை ஜாக், பூத் நாத், தோஸ்தானா  போன்ற பல மரண மொக்கைகளை நண்பர்களுக்காக வெண்திரையில் பார்த்து தொலைத்ததால் இனி ஹிந்திப்படமே தியேட்டரில் பார்ப்பதில்லை, என்றிருந்தேன்,  சரி ப்ரிண்ட் நன்றாய் இருக்கே!!! என்று, இந்த  படத்தை நம்பிக்கையுடன் பார்க்க ஆரம்பித்தேன்,  சும்மா சொல்லக்கூடாது, செம வேகம்,உண்மை ஒளி காட்சிக்கு காட்சி ,வசனத்துக்கு வசனம் வீசுகிறது. அஜய் தேவ்கனுக்கு பிவோட்டலான ரோல், கரணம் தப்பினால் அவர் தான் வில்லன் என்னும்படியான பாத்திரம், இந்த மனிதரின், ஓம்காரா, பகத்சிங், யூ மீ அவ்ர் ஹம்  பார்த்திருக்கிறேன். இதிலும் நன்றாக தன் நடிப்பு முத்திரையை  அழுத்தமாய் பதித்துள்ளார். காமெடிக்கென தனி ட்ராக் வைக்காமல் அதையும் தானே அடித்து ஆடியுள்ளார், இவரின் எடுப்பாக வரும் சஞ்சய் மிஸ்ராவுடன் இணைந்து கலக்குகிறார்.

பிற்பாதியில் சிறிது நாடகத்தனமிருந்தாலும், நம்ப முடிகிறது. வசனங்கள் செம கூர்மை, நட்ராஜ் சுபரமணியனின் கதையோடு ஒன்றிய  ஒளிப்பதிவு அட்டகாசம்,சுக்விந்தர் சிங்கின்  இசையும் அருமை, அதிகம் பாடல்களில்லை,, அப்படியே  வந்தாலும் லாஜிக்கலாய் வருகிறது, இந்த படத்திலும்  இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி சாதித்திருக்கிறார்.ய ஒர்த்திவாட்ச். 

ஜய் தேவ்கனின் குருவாய் வந்த பங்கஜ் கபூருக்கு தன் கலைவாழ்வில் சொல்லிக்கொள்ளக்கூடிய வேடம் இதில், முன்னாள் சம்பல் கொள்ளைக்காரன், ராஜா அரிச்சந்திரா நாடகம் பார்த்து ஆயுதம் கீழே போட்டு, சரணடைந்து, தண்டனை அனுபவித்தவர் இந்நாள் வரை சமூகவிழிப்புணர்வு தூண்டும்  ஹல்லாபோல் என்னும் வீதிநாடகங்கள் போட்டு வருகிறார்,  வயிற்றுக்காக  மெக்கானிக் ஷாப்பும் வைத்துள்ளார். [இந்த சித்து கதாபாத்திரம் 1989 ஆம் ஆண்டு அரசியல்வியாதிகளின் அடியாட்களால் சுட்டுகொல்லப்பட்ட சஃப்தார் ஆஷ்மியின் பிரதியேயாகும்.]

படத்தின் கதை:-
மசரெட்டி கார் வைத்திருக்கும் பாலிவுட்டின் உச்ச நடிகர் சமீர்கான் ஒரு கதாநாயகன் எப்படியெல்லாம் இருக்க கூடாதோ அப்படியெல்லாம் இருக்கிறார்.
1.காசு வாங்கிக்கொண்டு கண்ட ,கண்ட விளம்பரங்களிளும் நடிக்கிறார்.தன் அஷ்ஃபக் என்னும் இயற்பெயரை சமீர்கான் என மாற்றிக்கொள்கிறார்.
2.ஷூட்டிங் நேரத்திலேயே கேரவனில்,ஆடிஷன் என்று சொல்லி வாய்ப்பு கேட்டு வலிய வந்து விருந்தாகும் இளம் பெண்களை அனுபவிக்கிறார். அவர்களையே  புதிய படத்துக்கு நாயகியாய் பரிந்துரைக்கிறார்.
3.தன் கௌரவத்துக்கு பாதகம் வருமென்று எந்த உதவியும் யாருக்கும் செயவதில்லை. முடிந்தவரை கால்ஷீட் தொதப்புகிறார்.
4.தன்னை யாரும் முந்திவிடக்கூடாது என்று .சக நடிகர் நன்கு நடித்த காட்சிகளை கூசாமல் நீக்கச் சொல்லுகிறார்.
5.பழத்த பழமான இயக்குனர் ஒருவருக்கு நடிக்க கால்ஷீட் தருவதாய் நீண்டகாலம் அலையவிட்டு ஏமாற்றுகிறார்.
6.தன் கூத்துப்பட்டறை குரு  சித்து இவரிடம் ஓர் ஏழைப்பெண் கற்பழிக்கப்பட்ட சமூகபிரச்சனைக்கு தெருக்கூத்து நடத்த இரண்டு நாள் கால்ஷீட் கேட்கிறார். இவர் பழசை மறந்து !!!நன்றிகெட்டு வர முடியாது என்று விடுகிறார்.
7.காதல் மனைவி ஸ்னேகாவுக்கு [வித்யாபாலன்] துரோகம் செய்கிறார். மகனுக்கு தந்தையாய் எந்த கடமையையும் செய்வதில்லை.என அடுக்கலாம்.
8.எல்லாவற்றுக்கும் மேலாக அழகிய பெண் எழுத்தாளர் ஒருவரை அமர்த்தி, அண்டப்புழுகுகளுடன் சூப்பர் ஸ்டார் சமீர் கான் என்னும் சுயசரிதையும் வெளியிடுகிறார்.
=========0000==========
இவர் போடுவது சூப்பர் ஹீரோ வேடம்,ஆனால் பக்கா பயந்தாங்கொள்ளி என்பதாய் ஒரு சம்பவம் நடக்கிறது, [ஜெசிக்கா லால் சம்பவத்தை இதில் அழகாய் கோர்த்துள்ளனர்]
பாலிவுட்டின்  புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஒருவர் பெரிய மதுபான விருந்து கொடுக்க, அங்கே மிகப்பெரிய திரைப்பிரபலங்கள், சாமியார்கள்,அரசியல்வியாதிகள்  குழுமுகின்றனர், கிளப்பில் பார் மெய்டாக  நடனமாடும்    பெண்ணிடம் பெரிய அரசியல்வியாதியின்  மகனும்,  சாராய ஆலை அதிபர் மகனும் வம்பு செய்து படுக்கைக்கு அழைக்க, அவள் மறுத்து ஒதுங்கியவள், அங்கே விருந்தில் இருந்த சமீர்கானிடம் தங்கையுடன் சென்று ஆட்டொக்ராப் வாங்குகிறாள்,

மீர்கான் அவளுக்கு ஷிம்லா காட்டன் காலேஜ் நாடகத்தில் தான் முதல் பரிசு வழங்கியதை நினைவுகூர்ந்து கனிவாய் பேச, சகோதரிகள் மகிழ்கின்றனர், தங்கை  மறுநாள் பரிட்சை என்பதால் முதலில் வீட்டுக்கு போக, சமீர் அவளை சினிமாவில் முயற்சிக்க சொல்கிறார். பின்னர் கழிவறை சென்றவர், அங்கே இருவர் கோகெய்ன் உட்கொள்வதை பார்க்கிறார், 

லை கோதி ,வெளியேறியவர், அங்கே உதவி என்று சற்றுமுன் தன்னிடம் ஆட்டோக்ராஃப் வாங்கிய பெண்,கண்ணாடி சுவரை அடித்து இவரிடம் கெஞ்ச, வியர்க்கிறார். இவருக்கு கையறுநிலை, உதவிசெய்து பிரச்சனையில் சிக்க மனமில்லை, எனக்கென்ன?!!! என இவர் இருக்க, அவள் தலையில் குண்டடி பட்டு  ஹீரோ தன்னை காப்பாற்றுவான்,  என்ற நம்பிக்கை பொய்க்க துடிதுடித்து சாகிறாள். அந்த கோகெய்ன் போதை ஆசாமிகள் கொன்ற திமிருடன் கிளப்பிலிருந்து நெஞ்சை நிமிர்த்தி வெளியேற, சாமியார் உட்பட அத்தனை பிரமுகர்களும் அதை வேடிக்கை பார்க்கின்றனர்.
=========0000==========
மறுநாள் இந்த கொலை குறித்து ஸ்டுடியோவில்,முகேஷ் திவாரி [போக்கிரி இன்ஸ்பெக்டர்] மற்றும் ஜாக்கி ஷெராப் பேசும் நீண்ட வசனம் படு யதார்த்தம்,
சுருக்கமாக சொன்னால் ஜாக்கிஷெராஃப், கொலையை ஒருவன் பார்த்திருந்தாலும் இன்றைய சாக்கடை அரசியல் சமூகத்தில் வெளியில் சொல்லாமலிருப்பதே உத்தமம்,இல்லையென்றால் சாட்சி சொன்னவன் பெயர்  கெடும், குடும்பத்துக்கும் பாதுகாப்பில்லை,  என்கிறார். பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளை பற்றிய செய்தி என்றால் ஒப்புக்கு 2 நாள் பேசுவார்கள், அடுத்த நாளே அது கார்பெட்டுக்கு அடியில் போய்விடும், 

ல்மான்கானுக்கு சம்மன், அமீர்கானுக்கு பிடி வாரண்ட் என பிரபல நடிகர்களை தான் தொடர்ந்து உருவுவார்கள், அவர்கள் தான் ஈஸி டார்கெட் ,என்கிறார்.இதைக் கேட்டு இன்னும் குழம்பும் சமீர்கான்,

போலீஸ் விசாரணையிலும் நடிக்கிறார்,தனக்கு அந்த கொலையான பெண்ணை முன்னமே தெரியாது என்கிறார், அவளின் தங்கை வந்து அருகில் நிற்க பொய் சொல்லமுடியாமல் கண்ணாடியை அணிந்துகொள்கிறார். எத்தனையோ பேருக்கு ஆட்டோக்ராஃப் போடுவதால் தான் யாரின் முகத்தையும் பார்ப்பதில்லை, பேனா,பேப்பர், கைகளை மட்டுமே பார்ப்பேன் என்கிறார்,

செத்தவள் நொடியில் செத்தாள்,இவருக்கோ மனநிம்மதி போயிற்று,ஆறுதல் சொல்ல வீட்டில் கூட ஆளில்லை,மனைவி இவரின் பிறபெண்களுடனான உடல்தவறுகளால் நொறுங்கியவள், ஒப்புக்கு இவர் மகனுக்கு மட்டுமே அவள் தாயாய் இருக்க, இவரின் குருவை அவமதித்து துரோகமும் செய்தமையால் இவரின் அப்பா அம்மாவும் கோபித்துகொண்டு சொந்த ஊருக்கே சென்றவர்கள் இவரிடம் மட்டும் பேசுவதில்லை. அனாதையாய் விடப்படுகிறார். தான் தன் குடும்பத்தினரிடமிருந்தும் உண்மையான நண்பர்களிடமிருந்தும் எவ்வளவு அந்நியப்பட்டுவிட்டோம் என கதறுகிறார்.
காப்பாற்றாத குற்ற உணர்வு குறுகுறுக்க, இறந்த பெண்ணின் தங்கையை அழைத்து பணம் 10லட்சம் தந்து நடந்ததை மற, இதை கொண்டு நன்றாய் படி , மன அமைதி கொள், என்று அறிவுரை சொல்கிறார், அவள் பணத்தை ஏற்காமல் திருப்பிகொடுத்து உங்களால் முடிந்தால் இதைவைத்து மன அமைதி பெற பாருங்கள்.  என்கிறாள்.போனவள் தன் ஒரு கிட்னியை விற்று பணம் பெற்று பெரிய வக்கில் வைத்து,வழக்காடுகிறாள்,இருந்தும் சாட்சிகள் யாருமே இல்லை. அவர்கள் இருவர் தான் குற்றவாளி என தெரிந்தும் அவர்களை தண்டிக்கமுடியா நிலை!!!.

வரால் இப்போது நாடகத்தனமான, யதார்த்தமில்லாத, வாழ்வியலுக்கு ஒவ்வாத வசனங்களை  படப்பிடிப்பிலும், டப்பிங்கிலும் பேசமுடியவில்லை, நிறைய டேக்குகள் வாங்குகிறார். எல்லோரிடமும் எரிந்து விழுகிறார். இவருக்கு இந்த வருடமும் சிறந்த இளம் நடிகருக்கான விருது ஸ்ரீதேவி,போனிகபூரால் தரப்படுகிறது,அந்த விழாவில் இவர், தாம் பெற்ற விருது தனதல்ல, அந்த நடிகனுடையது என இவரின் பெரிய படத்தை சுட்டிக் காட்டுகிறார் . உண்மையில் தான் ஒரு போலி,சாதாரணன் என்கிறார்,கூட்டம் இதற்கும் கைதட்டுகிறது, விருதை வீட்டில் கொண்டு வைக்க வந்தவர், தான் அணிந்திருக்கும் முகமூடி மீது வெறுப்படைந்து எல்லா விருதுகளையும் கீழே தள்ளிவிட்டு கதறுகிறார்.

றுநாள் காலையில் போலீஸ் ஸ்டேஷன் சென்றவர், அந்த அரசியல்வியாதியின் மகன் மீதும், சாராய ஆலை மகனுக்கு எதிராயும்  சாட்சியம் சொல்கிறார். இவர் மீது வெளியே வருகையில் முட்டை அடிக்கப்படுகிறது, போலீசாரே இவரை சாட்சியத்தை திரும்ப பெறுமாறு வற்புறுத்துகின்றனர், அன்று இரவே இவரின் மகனின்  அறை தீவைக்கப்பட்டு மகனின் கையிலும் தீக்காயம்படுகிறது. 

ப்போது குடும்பத்தினருக்கு ஆபத்து,என்னும் பயம் ஆட்டிப்படைக்க நாளை காலை அடையாளம் காட்டபோகவேண்டும் என்ற நிலை, சாலையில் இவர் காரில்  போகையிலேயே மிரட்டல் அழைப்புவர, காரை,சிக்னல் விழுந்ததும் வீட்டுக்கு திருப்ப சொன்னவர், அங்கே சன்னல் வெளியே டூவிலரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தங்கையின் வாடியமுகத்தை பார்க்கிறார். சிக்னல் விழ, அவள் இவர் கார் முன்பே வண்டியை போட்டுக்கொண்டு சாலையிலேயே மயங்கி விழுகிறாள், அவளை மருத்துவமனையில் சேர்த்து அவள் கிட்னி தானம் செய்ததையும் அதனால் நோய்தொற்று ஆனதையும் தெரிந்து கொள்கிறார். நொறுங்கிப்போகிறார். இனி என்ன நேர்ந்தாலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தர வேண்டும் என முடிவு செய்தவர், போலீஸ் ஸ்டேஷன் சென்று அந்த இரண்டு கயவர்களையும் சரியாக அடையாளம் காட்டுகிறார்.

இனி என்ன ஆகும்?!!!.
இன்னும் 1.5 மணி நேரம் படம் இருக்கிறது, இனி மேல் வரும் சுவாரஸ்யங்களுக்காக படத்தின் முழுக்கதையை சொல்லவில்லை.
1,சமீர்கான் அந்த கயவர்களுக்கு தண்டனை வாங்கித்தந்தாரா?
2,தன் குரு சித்துவிடம் மன்னிப்பு கேட்டாரா?
3.தன் மனைவி,மகன் பெற்றோருடன் சேர்ந்தாரா?
போன்றவற்றை நெகிழ்ச்சியான காட்சிகளுடன் டிவிடியில் பாருங்கள்.ஒரு சோற்றுப்பதமாக சமீர்கான் , ஒரு கொலையாளியின்  அரசியல்வாதி அப்பன் வீட்டிற்குள் சென்று, அவன் கண்முன்பே,விலைஉயர்ந்த பெர்சிய கார்பெட்டில் மூத்திரம் போகும் காட்சி, யாரும் தவறவிடக்கூடாத காட்சி அது!!!! அதை ப்ரில்லியண்டாய் எடுத்திருப்பார்கள்.[“கார்பெட் பிஸ்ஸர்” என்னும் இதே போல ஒரு யுக்தியை கோயன் பிரதர்ஸின் |த பிக் லபோவ்ஸ்கி| என்னும் படத்திலும்  உபயோகித்திருப்பர்]


நிஜவாழ்வில் அந்த கிளப்பில் வைத்து கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட ஜெசிக்கா லாலின்,கோகெய்ன் கொலையாளிகளுக்கு ஒன்பது ஆண்டுகள் வழக்கு நடந்த பின்னர் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது ,உங்களுக்கு நினைவிருக்கலாம்!!!

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
=========0000==========

=========0000==========
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Rajkumar Santoshi
Produced by Samee Siddiqui
Written by Rajkumar Santoshi
Starring Ajay Devgan
Vidya Balan
Pankaj Kapoor
Music by Sukhwinder Singh
Cinematography Nataraja Subramanian
Editing by Steven Bernard
Release date(s) 11 January 2008
Running time 150 mins
Language Hindi
Budget 210,000,000 INR
=========0000==========