நாம் வாழும் சமுதாயம் தான் எத்தகைய கீழ்தரமான மனிதர்களை கொண்டுள்ளது? என்று தினமும் வியந்தும் அருவருத்தும் கோபப்பட்டும் வந்திருக்கிறேன், மனித மனத்தின் குரூர வெளிப்பாடான பெடோஃபைல்கள் பற்றி முன்பே என் சிலபதிவுகளில் எழுதியுமிருக்கிறேன்,இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது இன்செஸ்டுகள் [incest] பற்றி, அதாவது பெற்ற மகள், மகனையே புணரும் தந்தை, பெற்ற மகள், அல்லது மகனையே புணரும் தாய் இன்செஸ்டுகள் என அழைக்கப்படுவர். இது மனித குலத்தின் மிகமோசமான அருவருக்கத்தக்க செய்கைகளுக்கு மோசமான ஓர் உதாரணமாக காட்டப்படுகிறது,
ஆனாலும் அதீத குடிப்பழக்கம், நாள்பட்ட மனநோய், ஆழ்மன வக்கிரம் இவற்றின் உச்சக்கட்ட வெளிப்பாடாக இந்நோய் சமூகத்தில் அனுதினமும் குரூரமாக வெளிப்படுகிறது.!!! அதெல்லாம் இல்லை, இந்தியாவில் எங்கே இதுபோல் நடக்கிறது?!!! என்று மறுப்பவர்கள் இன்றைய தினத்தந்தி செய்தியை எடுத்து பாருங்கள், அதில் நிச்சயம் பெற்றமகளை கற்பழித்து கர்ப்பமாக்கிய குடிகார தந்தை என்னும் வழமையான செய்தி வந்திருக்கும்.
=====0000=====
இந்த டச்சு மொழிப் படம் ஃபெஸ்டென் என்னும் பெயரில்1998ஆம் ஆண்டு டென்மார்கில் வெளியாகி,பின்னர் த செலிப்ரேஷன் என்னும் பெயர் மாற்றத்துடன் உலகெங்கும் வெளியானது, பரீட்சார்த்தமான முயற்சிகளுடன் குறைந்த செலவில் தரமான சினிமா செய்ய விழைவோர் சிலர்,இயக்குனர் லார்ஸ் வோன் ட்ரையர் [Lars von Trier ] தலைமையில் ஒன்றுகூடி ஏற்படுத்திய டாக்மி-95 கோட்பாடுகளை பின்பற்றி எடுக்கப்பட்ட முதல்படம் என்னும் பெருமையையும் இது பெற்றுள்ளது.
படத்தின் சிறப்பம்சங்கள், ட்ரைப்பாடில் கடைசி வரை அமராத டிஜிட்டல் கேமரா, அனாவசியமான ஒளியமைப்பே இல்லாத உள்புற, வெளிப்புற காட்சிகள், காட்சிக்கு காட்சி நடிகர்களின் வசன உச்சரிப்பு முகம் மற்றும் உடற்பாவனைகளுக்கே முக்கியத்துவம் தந்து இயக்கியவிதம், படத்துக்கு சம்பந்தமில்லாமல் பிற படங்களில் நாம் காணக்கூடியது போன்ற பிண்ணனி இசையோ, கொசுவர்த்தி சுற்றும், நினைத்து பார்க்கும் காட்சிகளோ, நினைத்து பார்க்கும் காட்சியில் வரும் குத்து, டூயட்,சோகப் பாடல்களோ, சென்னையில் நடக்கும் படத்துக்கு நியூசிலாந்து சென்று ஆடிவரும் பாடல் காட்சியோ!!!,
=====0000=====
இந்த டச்சு மொழிப் படம் ஃபெஸ்டென் என்னும் பெயரில்1998ஆம் ஆண்டு டென்மார்கில் வெளியாகி,பின்னர் த செலிப்ரேஷன் என்னும் பெயர் மாற்றத்துடன் உலகெங்கும் வெளியானது, பரீட்சார்த்தமான முயற்சிகளுடன் குறைந்த செலவில் தரமான சினிமா செய்ய விழைவோர் சிலர்,இயக்குனர் லார்ஸ் வோன் ட்ரையர் [Lars von Trier ] தலைமையில் ஒன்றுகூடி ஏற்படுத்திய டாக்மி-95 கோட்பாடுகளை பின்பற்றி எடுக்கப்பட்ட முதல்படம் என்னும் பெருமையையும் இது பெற்றுள்ளது.
படத்தின் சிறப்பம்சங்கள், ட்ரைப்பாடில் கடைசி வரை அமராத டிஜிட்டல் கேமரா, அனாவசியமான ஒளியமைப்பே இல்லாத உள்புற, வெளிப்புற காட்சிகள், காட்சிக்கு காட்சி நடிகர்களின் வசன உச்சரிப்பு முகம் மற்றும் உடற்பாவனைகளுக்கே முக்கியத்துவம் தந்து இயக்கியவிதம், படத்துக்கு சம்பந்தமில்லாமல் பிற படங்களில் நாம் காணக்கூடியது போன்ற பிண்ணனி இசையோ, கொசுவர்த்தி சுற்றும், நினைத்து பார்க்கும் காட்சிகளோ, நினைத்து பார்க்கும் காட்சியில் வரும் குத்து, டூயட்,சோகப் பாடல்களோ, சென்னையில் நடக்கும் படத்துக்கு நியூசிலாந்து சென்று ஆடிவரும் பாடல் காட்சியோ!!!,
சென்னையில் கைது செய்யப்படும் கதாநாயகன் போலீஸ் வண்டியில் இருந்து தப்பி, திடீரென காட்டுக்குள் ஓடி குற்றால அருவியில் இருந்து குதிக்கும் காட்சியோ இல்லாத, டாக்மி-95 கோட்பாடுகளின் படி எடுத்த படம். இது பற்றி மேலும் படிக்க இங்கே செல்லவும், இதை தமிழில் மொழிபெயர்த்து இங்கே எழுதினால் ஜெயமோகன் போன்ற அசிடிட்டி பிடித்த ஆட்கள் விக்கியில் இருந்து உருவி உலகசினிமா எழுதுகிறோம் என்பார்கள். கேட்டால் அங்கதம் என்று மழுப்புவார்கள். தமிழில் எழுதுவதை பெருமையாக கருதி எழுதிக்கொண்டிருக்கும் வலைப்பூ எழுத்தாளர்களை பாராட்டாவிட்டாலும் குத்திக்குதறாமல் இருந்தால் உங்களுக்கு நல்லது ஜெயமோகன். ஹாலிவுட் பாலாவும் ஏற்கனவே இரண்டு டாக்மி-95 படங்கள் பற்றி எழுதியுள்ளார்,அவரின் இந்த இரண்டு பதிவுகள் உங்களுக்கு உபயோகமாயிருக்கும்.
ஆண்ட்டி க்ரைஸ்ட்
ஆல் அபவ்ட் அன்னா
=====0000=====
படத்தின் கதை:-
பாரம்பரியமாக வீட்டுடன் கூடிய சிறிய நட்சத்திர ஹோட்டல் நடத்திவரும் 60வயது ஹெல்ஜ், ஒரு பசும்தோல் போர்த்திய புலி, இவரின் 60 ஆம் பிறந்த நாள் விழாவை மனைவி எல்ஸ் விமரிசையாக எடுத்து நடத்த திட்டமிடுகிறாள், செல்ல மகள் ஹெலன் தன் கறுப்பிண காதலனுடன் வருகிறாள்.
ஆண்ட்டி க்ரைஸ்ட்
ஆல் அபவ்ட் அன்னா
=====0000=====
படத்தின் கதை:-
பாரம்பரியமாக வீட்டுடன் கூடிய சிறிய நட்சத்திர ஹோட்டல் நடத்திவரும் 60வயது ஹெல்ஜ், ஒரு பசும்தோல் போர்த்திய புலி, இவரின் 60 ஆம் பிறந்த நாள் விழாவை மனைவி எல்ஸ் விமரிசையாக எடுத்து நடத்த திட்டமிடுகிறாள், செல்ல மகள் ஹெலன் தன் கறுப்பிண காதலனுடன் வருகிறாள்.
பிழைப்புக்காக பிரிந்து பாரீஸ் போய் உணவகம் வைத்திருக்கும் மூத்த மகன் க்ரிஸ்டியன், இளைய மகன் மைக்கேல்,மைக்கேலின் மனைவி மக்கள், சுற்றம், உற்றார் உறவினர் எல்லோரும் ஹோட்டலில் குழுமுகின்றனர்,அந்த ஹோட்டலின் எல்லா அறைகளுமே வந்த விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டு நிரம்பி வழிகின்றன.
பிறந்த நாள் விழா அன்று உணவு மேசையில் இவரது மூத்த மகன் க்ரிஸ்டியன் டோஸ்ட் என்னும் உணவு நேர முன்னுரை வழங்க, |Here's to the man who killed my sister... to a murderer.| என தொடங்கி அவன் பேசியது கேட்டு எல்லோரும் திடுக்குறுகின்றனர். அவன் அப்பா மட்டும் அங்கே கூசிக்குறுகிப்போகிறார். அது ஏன்?
ஹெல்ஜுக்கு அழகிய மனைவி எல்ஸ் வாழ்க்கை துணையாக அமைந்தும், அழகிய நான்கு பிள்ளைகள் பிறந்தும், இன்செஸ்ட் என்னும் மிருக குணம் தலைதூக்க, இவர் மூத்த மகனையும், அவனின் இரட்டைபிறவியான தங்கையையும் அவர்களின் சிறு பிராயத்திலிருந்தே தன் காம இச்சை தீர்க்க பயன்படுத்தி வந்திருக்கிறார்.
ஹெல்ஜுக்கு அழகிய மனைவி எல்ஸ் வாழ்க்கை துணையாக அமைந்தும், அழகிய நான்கு பிள்ளைகள் பிறந்தும், இன்செஸ்ட் என்னும் மிருக குணம் தலைதூக்க, இவர் மூத்த மகனையும், அவனின் இரட்டைபிறவியான தங்கையையும் அவர்களின் சிறு பிராயத்திலிருந்தே தன் காம இச்சை தீர்க்க பயன்படுத்தி வந்திருக்கிறார்.

அப்பாவின் மேல் தீராத வன்மத்துடன் இருக்கிறான். அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவன் சகோதரி லிண்டாவின் அறையை சோதிக்க, அவளின் தற்கொலை குறிப்பு கடிதம் கிடைக்கிறது,அதில் சிறுவயதில் தான் அனுபவித்த அப்பாவின் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்கள் இப்போது தாம் காணும் கனவுகளிலும் தொடர்வதால் தாம் இந்த முடிவுக்கு வந்ததாக சொல்லியிருக்க, இன்னோரு சகோதரி ஹெலனையும் அழைத்து கடிதத்தை காட்டி அப்பாவின் சுயரூபத்தை புரியவைக்கிறான்.
இப்போது உணவு மேசையில் அப்பாவின் மீது குற்றங்களை அடுக்கியவன், செய்த தவறுக்கு உறவினர் நண்பர்கள் முன் மன்னிப்பு கேட்குமாறு சொல்ல,உறவினர்கள் இதை கேட்டு முனுமுனுக்கின்றனர். இதை ஒரு மனம் பிழறியவனின் ஹாஸ்யமோ?!!, இவனுக்கு கலாச்சார சீர்கேடு ஏதும் நிகழ்ந்திருக்குமோ ? என்றும் குழம்புகின்றனர். க்ரிஸ்டியனின் அம்மா எல்ஸ் , அதை வன்மையாக மறுக்கிறாள், கண்டிக்கிறாள். அப்பாவுக்கு சார்பு நிலையாய் இருக்கிறாள், ஆனால் க்ரிஸ்டியன் விடுவதாயில்லை, அம்மாவையும் அப்பாவின் கைப்பாவை என்கிறான். அப்பாவின் தவறுகளை கண்டும் காணாமல் இருந்த ஒரு ஜென்மம் என்று சபையினர் முன் அவளை சாடுகிறான்.
உணவுமேசையில் இதையெல்லாம் கேட்டு கொதித்த மைக்கேல்,அண்ணனை ஹோட்டல் பணியாளர்களுடன் சேர்ந்து குண்டுகட்டாக தூக்கி சென்று,ஊருக்கு ஒதுக்கு புறமாய் இருக்கும் தோப்பில்,ஒரு மரத்துடன் கட்டிவைத்து விட்டு வருகிறான்.ஆனால் சிறிது நேரத்தில் க்ரிஸ்டியன் உள்ளே வந்தும் விடுகிறான், மீண்டும் விட்ட இடத்திலிருந்து அப்பாவை நோண்டி நுங்கெடுத்து மன்னிப்பு கேட்டே தீரவேண்டும் என்கிறான்.
ஆனால் அப்பாவோ கல்லுளிமங்கன் கணக்காய் இடித்தபுளி போல அமர்ந்திருக்கிறார், அவருக்கு இன்று நாளே சரியில்லை என புரிகிறது, விருந்தும் டோஸ்ட் இல்லாமலே ஆரம்பிக்க சொல்கிறார். நடப்பவற்றை எல்லாம் ஆரவமாக ஒலிபெருக்கியில் ஹோட்டல் சமையலறை பணியாளர்களும் மேலேயிருந்து கேட்கின்றனர்.
முதலாளியின் சுயரூபம் எல்லோரும் அறிந்தமையால் முதலாளி மன்னிப்பு கேட்கப்போவதை கேட்டுவிட்டு வேலையைப்பார்க்கலாம் என காதை தீட்டுகின்றனர். க்ரிஸ்டியனின் மேல் தீராக்காதல் கொண்ட சமையல் காரப்பெண் பியாவும் அவனுக்கு துணை நிற்கிறாள்.
நடக்கும் சச்சரவால் உறவினர்கள் இரவு உணவு முடிந்து வீடுகளுக்கு திரும்பி விடக்கூடாது, ஹெல்ஜ் மன்னிப்பு கேட்பதை, கூனிக்குறுகுவதை பார்த்துவிட்டே போக வேண்டும் என்று எண்ணிய பணியாளர்கள், எல்லோரின் அறைக்குள்ளும் க்ரிஸ்டியன் தலைமையில் சென்று கார் சாவிகளை கைப்பற்றி அதை குளிர்சாதன பெட்டிக்குள்ளும் ஒளித்தும் வைக்கின்றனர்.

இனி என்ன ஆகும்?
1.அப்பா ஹெல்ஜ் சபையினரிடமும் பிள்ளைகளிடமும் மன்னிப்பு கேட்டாரா?
2.மகன் மைக்கேல் அப்பாவை குற்றவாளி என உணரந்தானா?
3,மகன் மைக்கேல் நிறவெறி விட்டானா?சகோதரியின் காதலனிடம் மன்னிப்பு கேட்டானா?
4.க்ரிஸ்டியன் அப்பாவை மன்னித்தானா?காதலி பியாவை கைபிடித்தானா?
போன்றவற்றை பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் டிவிடி வாங்கி பாருங்கள், உலகசினிமா காதலர்கள் வாழ்வில் நிச்சயம் காணவேண்டிய படம். முழுநிர்வாணமான உடலுறவு காட்சிகள், மற்றும் பாலியல் வார்த்தை பிரயோகங்கள் உள்ளதால் நிச்சயம் சிறுவருக்கான படம் அல்ல.படத்தில் குறைகளும் உண்டு இருந்தாலும்,மிகக்குறைந்த செலவில் பரீட்சார்த்தமான முயற்சிக்கு பிள்ளையார் சுழியிட்டிருப்பதால் பெரிதாகத்தோன்றவில்லை.
தாமஸ் விண்டர் பர்கின் இயக்கம் மிகவும் நேர்த்தி, டாக்மி95 கோட்பாடுகள் நம்மை பெரிதும் கவருகின்றன, இது வரை இக்கோட்பாடுகளை பின்பற்றி சுமார் 38 படங்கள் வந்திருக்கின்றனவாம், இயக்குனர் பெயர் படத்தின் துவக்கத்திலோ அல்லது முடிவிலோ போடக்கூடாது என்பது முக்கியவிதியாகும். என்ன? a film by :-போடாமல் தமிழ் படமா? நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை என்னால்.:))
போன்றவற்றை பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் டிவிடி வாங்கி பாருங்கள், உலகசினிமா காதலர்கள் வாழ்வில் நிச்சயம் காணவேண்டிய படம். முழுநிர்வாணமான உடலுறவு காட்சிகள், மற்றும் பாலியல் வார்த்தை பிரயோகங்கள் உள்ளதால் நிச்சயம் சிறுவருக்கான படம் அல்ல.படத்தில் குறைகளும் உண்டு இருந்தாலும்,மிகக்குறைந்த செலவில் பரீட்சார்த்தமான முயற்சிக்கு பிள்ளையார் சுழியிட்டிருப்பதால் பெரிதாகத்தோன்றவில்லை.
தாமஸ் விண்டர் பர்கின் இயக்கம் மிகவும் நேர்த்தி, டாக்மி95 கோட்பாடுகள் நம்மை பெரிதும் கவருகின்றன, இது வரை இக்கோட்பாடுகளை பின்பற்றி சுமார் 38 படங்கள் வந்திருக்கின்றனவாம், இயக்குனர் பெயர் படத்தின் துவக்கத்திலோ அல்லது முடிவிலோ போடக்கூடாது என்பது முக்கியவிதியாகும். என்ன? a film by :-போடாமல் தமிழ் படமா? நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை என்னால்.:))
=====0000=====
படத்தின் முன்னோட்ட சலனப்படம் யூட்யூபிலிருந்து:-
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by | Thomas Vinterberg |
---|---|
Produced by | Birgitte Hald Morten Kaufmann |
Written by | Thomas Vinterberg Mogens Rukov |
Starring | Ulrich Thomsen Henning Moritzen Thomas Bo Larsen Paprika Steen Birthe Neumann Trine Dyrholm |
Music by | Lars Bo Jensen |
Editing by | Valdís Óskarsdóttir |
Release date(s) | May 1998 |
Running time | 105 minutes |
Country | Denmark |
=====0000=====
30 comments:
http://cablesankar.blogspot.com/2010/08/blog-post_20.html?showComment=1282249845949#c2396105130675951949
நோ கும்மி ஃபார் ஒன் வீக்-னு இராமசாமி கண்ணன் மேல சத்தியம் பண்ணியிருக்கேன்
////லார்ஸ் வோன் ட்ரையர் [Lars von Trier ] தலைமையில் ஒன்றுகூடி ஏற்படுத்திய டாக்மி-95 கோட்பாடுகளை பின்பற்றி எடுக்கப்பட்ட முதல்படம் ////
http://www.hollywoodbala.com/2009/11/antichrist-2009-18.html
ஒன் மோர்
http://www.hollywoodbala.com/2009/12/z-18-extras.html
நோ கும்மி ஃபார் ஒன் வீக்-னு அம்சு மேல சத்தியம் பண்ணியிருக்கேன்
//கேட்டால் அங்கதம் என்று மழுப்புவார்கள். //
??????????????????????????????
============
leave that ****sucker!!! lets move on!!
இராமசாமி ஹியர்???
மீ நோ கும்மி ராமசாமி. ஜஸ்ட் ரெஃபரன்ஸ்கள் எக்ஸ்சேஞ்.
வொய் த பதிவு, ஸோ ஸ்மால் கார்த்திக்கேயன்? கீபோர்ட் ப்ராப்ளம்??
தல.. கும்மிக்கு வரச்சொல்லி கமெண்ட் போட்டுட்டு உங்களை காணாமே?
என்னங்க ஆச்சி... எல்லோருக்கும்??? ஒருத்தரையும் காணாம்?
நானும் பத்து தபா வந்து பார்த்துட்டேன். மீ கமிங் டுமோ
உறவுகளைப் பின்னியே உலகப் படங்கள் வருவதைப் போல தெரிகிறதே கார்த்திக். ஆமா.. இந்தப் படங்களைப் பற்றிய அறிமுகங்கள் எப்படிக் கிடைக்கின்றன?
டாக்மி95 itha pathi konjam solunga
கார்த்தி, நல்ல விமர்சனம்.
நீங்க 18+ன்னு தலைப்பு போட்ருக்கறதே படம் பார்க்க தூண்டுகிறது
//நோ கும்மி ஃபார் ஒன் வீக்-னு இராமசாமி கண்ணன் மேல சத்தியம் பண்ணியிருக்கேன்//
வொய்...ஹாலி பாலி உடம்பு கிடம்பு ஏதும் சரியில்லையா?
தல வோட் பட்டனை காணோம் ????!!!!!!!!!!!!!!!!
தல.
நான் கூப்பிட்டு அரைமணி வெயிட் செய்து தூங்க போய்ட்டேன்,தல,முன்பே உங்க ஆண்டி க்ரைஸ்ட் படம் விமர்சனம் இதை படிச்சிருந்தாலும்,மீண்டும் ரெஃப்ரெஷ் பண்ண சுட்டி குடுத்தீங்க தல,நன்றி.இந்த படம் ரொம்ப இலக்கியதரமா,பின்நவீனத்துவ பாணியில எடுத்துருக்காங்க,இதை ஜெயமோகன் பாத்தா தன் எரியும் பனிக்காட்டில் இருந்து உருவி எடுத்த படம் ஆண்டிக்ரைஸ்ட் என்று சொல்லவும் செய்வார்.யார் கண்டார்?
தல ஆல் அபவ்ட் அன்னாவும்,படிச்சேன்,தல லார்ஸ் வோன் ட்ரையர் மேல நீங்களும் பித்து பிடுச்சு போய் இருக்கீங்க போல?:))
தல,
கும்மி தானுங்க அடிக்ககூடாது,படத்துக்கு சம்பந்தமா நீங்க குடுக்கும் தகவல்கள் கும்மியில் சேராது.
@செந்தில் குமார்.
நண்பரே,ஏற்கனவே ஹாலிவுட் பாலா மிக அருமையாக தன் இரண்டு பதிவில் இதைப்பற்றி சொல்லியிருக்கார்,தவிர விக்கியிலேயும் போய் படிக்கலாம்.நன்றி
http://www.hollywoodbala.com/2009/11/antichrist-2009-18.html
http://www.hollywoodbala.com/2009/12/z-18-extras.html
@செந்தில்வேலன்
நண்பரே,உலகசினிமாக்களை தேடிப்பார்த்தால் இதுபோல புதுமையான கதைகள் காணகிடைக்கும்.:)
@கண்ணா,
படம் பாருங்க பிடிக்கும்.
ஓட்டுப்பட்டையை இரவிலிருந்தே காணோம்,வருகிறது போகிறது,போய் தொலையட்டும்,இதே ஒவ்வொரு பதிவுக்கு வேலையாகிவிட்டது நண்பா
நல்ல அறிமுகம் தல, ஆனா இந்த மாதிரி மனற்பிழைகள் ஏற்பட காரணம் என்னவா இருக்க முடியும்னு தெரிஞ்சிக்க மனசு குறுகுறுக்குது, அது சம்பந்தமா எழுதினாலோ, லிங்க் தந்தாளோ ரொம்ப உத்தமமா இருக்கும்... :-)
மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளீர்கள்..தங்களது அறிவு திறனை காட்டாமல், சொல்ல வந்த விஷயத்தை மிக சுருக்கமாகவும்.. புரியும்படியாகவும்.. எழுதியுள்ளீர்கள். நன்றி.. வாழ்த்துக்கள்.
//மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளீர்கள்..தங்களது அறிவு திறனை காட்டாமல், சொல்ல வந்த விஷயத்தை மிக சுருக்கமாகவும்.. புரியும்படியாகவும்.. எழுதியுள்ளீர்கள். நன்றி.. வாழ்த்துக்கள்//
கன்னாபின்னவென்று வழிமொழிகிறேன்..
நண்பரே,
சிறப்பான பதிவு. தமிழ் சினிமாவிற்கும் இடையிடையே கிச்சு கிச்சு காட்டியிருக்கிறீர்கள்.
படத்துக்கு சம்பந்தமில்லாமல் பிற படங்களில் நாம் காணக்கூடியது போன்ற பிண்ணனி இசையோ, கொசுவர்த்தி சுற்றும், நினைத்து பார்க்கும் காட்சிகளோ, நினைத்து பார்க்கும் காட்சியில் வரும் குத்து, டூயட்,சோகப் பாடல்களோ, சென்னையில் நடக்கும் படத்துக்கு நியூசிலாந்து சென்று ஆடிவரும் பாடல் காட்சியோ!!!,
தமிழ் சினிமாவை நக்கலடித்த உங்களுக்கு நக்கல் நாரதர் விருதும்,சிறந்த விமர்சனத்திற்கு துக்ளக் விருதும் உண்டு
ணா..
ஆளாளுக்கு இப்படி 18+ போட்டா..நா லாம் என்ன பண்றது. வேற வழியில்ல..இன்னும் எட்டு வருஷம் கழிச்சுதான் படிக்கணும். (நான் சட்டத்தை மதிக்கும் ஒரு சிறந்த குடிபையன்)
நல்ல விமர்சனம் கார்த்திக்கேயன்.
தாமஸ் வின்டெர்பெர்க்கின் 'இட்ஸ் ஆல் அபவுட் லவ்' பார்த்திருக்கிறேன். இந்தப் படமும் எனது லிஸ்ட்டில் உண்டு. பகிர்வுக்கு நன்றி நண்பா.
இலுமி என்னும் பச்சைப் புள்ளையை கெடுக்க முனைந்த கார்த்தி ஒழிக! :)
jokes apart,இந்தப் படத்தை சீக்கிரம் பார்க்க முயற்சிக்கிறேன் நண்பா.
அருமை அருமை....முகப்புத்தகத்துல இணைச்சுட்டேன். பார்மாலிட்டி டன். ஜெமோவ விட்டுத்தொலை...அந்தாளோட உண்மை முகம் தெரிஞ்சிருச்சு.. பொழைச்சி போறான்.. நாமெல்லாம் சவளை பிள்ளைகளாவே இருந்திட்டு போவோம்.
நான் மலேசியாவில் இருக்கும்போது வாரத்தில் நாலு நியூஸ் மோசமான தந்தைப்பற்றி செய்திகள் வரும்.நம்ம ஊரில் அவ்வளவு மோசமாகவில்லை.தங்கள் விமர்சனத்தில் அரியசெய்தி ஒன்றை தெரிந்து கொண்டேன்[டாக்மி95]மிக மிக நன்றி...ஒரே நாளில் லார்ஸ் வான் ட்யர் இரண்டு படங்கள் போட்டார்கள் கோணங்கள் பிலிம் சொசைட்டியில்...அங்கு கூட “டாக்மி95”பற்றிக்கூறவில்லை.ஆயிரமாயிரம் நன்றி...
@டுபாக்கூர் கந்தசாமி
நண்பரே,எனக்கும் இதுபோல ஆச்சர்யமான குறுகுறுப்பு இருக்கிறது.
நான் அவசியம் தேடி லின்க் குடுக்கறேன் நண்பரே.
@ராஜா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
@வினோத்
வாய்யா குரு
நன்றி
@கனவுகளின் காதலன்
தலைவரே’இல்லாததையா சொல்லிட்ட்டோம்:)
இந்திய சினிமா பலவருடங்களாக ஊறிப்போன சம்பிரதாயங்கள் தானே!?
@சிபி செந்தில்குமார்
வாங்க நண்பா நக்கல் நாரதர் விருதுக்கு நான் ஒர்த் இல்லைங்க
தல ஹாலிபாலாக்கு ,கருந்தேளுக்கு தான் தான் அவ்வளவு கெர்த் இருக்கு,நன்றி
@கொழந்த
இதே வேலையா போச்சி,
சட்டத்தை பத்திரமா வச்சிக்கோங்க கொழந்த
@சரவணகுமார்
வாங்க நண்பரே
இட்ஸ் ஆல் அபவ்ட் லவ்வும் சிறந்த படம்தான்.
நன்றி நண்பா
@இலுமி
வாங்க நண்பா
படம் பாருங்க பிடிக்கும்
@மயில் ராவணன்
ஆமா மக்கா நாம எல்லாம் சவளைபிள்ளைகளாவே இருப்போம்.
எப்புடியும் என்ன படம் எழுதிருக்காங்கன்னு மேயும் அது.
அப்போ படிச்சா படிக்கட்டும்னு தான் பேர் போட்டேன். முதல்ல ஜெயமோகன் தம்பின்னு தான் போடலாம்னு நினைச்சேன்.போட்டும்னு விட்டுட்டேன்.
நம்ம ஊரில தான் பொடிசுங்க கிழவரைகூட டேய் தம்பின்னு கூப்பிடும் தெரியுமா?
சென்னைல.!!!
@உலக சினிமா ரசிகன்.
தலைவரே
நல்ல கருத்துக்களுக்கு நன்றி
அவ்வளவு சிறிய ஊரான மலேசியாவில் அவ்வளவு இன்செஸ்டு கேஸுகளா?
கடவுளே!!! என்ன கொடுமை.இந்தியாவின் சன தொகை 118கோடி ,நீங்க சொன்னாமாதிரி குறைவுதான் இன்செஸ்டு குற்றங்கள்.டாக்மிக்கு போய் நன்றியா தலைவரே!!:))
கருத்துரையிடுக