ரோட் டு லடாக் குறும்படம்[2003][இந்தியா] [15+] [Road To Ladakh]

ண்பர்களே!!! சமீபத்தில் டாரண்ட் தளத்தை நோண்டிக்கொண்டிருந்த போது இந்த குறும்படம் கண்ணில் பட்டது,பெயர் நன்றாயிருக்கிறதே!!! என்ற ஆவல் மேலிட தரவிறக்கினேன், பார்க்க ஆரம்பித்தேன், நல்ல ஈர்ப்பு, அபாரமான காட்சியாக்கம், படபடப்பை எகிறவைக்கும் பிண்ணனி இசை, தவிர இர்ஃபான் கான் என்னும் இந்திய பேரலல் சினிமாவின் தலைக்கல் வேறு , மனிதர் இதிலும் கலக்கியிருக்கிறார், படத்தில் 7 வருடம் முன்பே துணிச்சலாக உடலுறவுக்கு பின்னான அசதியில் தன் புட்டத்தையும்  கேமராவுக்கு காட்டியிருக்கிறார்.

னிதர் சலாம் பாம்பே படத்தில் சிறுவன் சாய்ப்பாவுக்கு காசுக்கு கடிதம் எழுதித்தரும் வேடத்தில் அறிமுகமானவர்,அதில் ஒரு வார்த்தைக்கு 50 பைசா என்று சிறுவனிடம் கேட்டு, அவன் அம்மாவுக்கு என்னை நினைத்து கவலைப்படாதே!!! என எழுத எக்ஸ்ட்ரா 1.50 ரூபா ஆகும் என்று கதிகலங்க வைப்பார். சிறுவன்  சாய்ப்பா போனதும், இதெல்லாம் எங்கே போய் சேரப்போகிறது?  என்று அதை கசக்கி எறிவார். அதில் அழுத்தமாக பதிந்தவர், சரசரவென அகில உலக கவனத்தை, பேரலல் சினிமாவில் தன் உழைப்பை ஈந்ததின் மூலம் பெற்றிருக்கிறார். இவரின் உடல்மொழி, பார்வை, வசன உச்சரிப்பு  எந்த கதாபாத்திரம் செய்தாலும் இவருக்கு கைகொடுத்திருக்கிறது.

ஸ்லம்டாக் மில்லியனரில் இன்ஸ்பெக்டர் வேடம், நேம்சேக்கில் அமெரிக்கவாழ் வங்காள குடும்பதலைவன் வேடம், மைக்ரேஷன் என்னும் எயிட்ஸ் பிரச்சார குறும்படத்தில் ஒரு ஹோமோசெக்சுவல் ஆசாமி கணவன், மைட்டி ஹார்ட் படத்தில் பாகிஸ்தானிய இன்ஸ்பெக்டர்,கதை பறையும் போல் aka குசேலன் ஹிந்தி ரீமேக்கான பில்லுவில் தமிழ் பசுபதியின் வேடம் என்று நீங்காமல் மனதில் நிற்பார்.
 =====0000=====
ந்த படத்தின் இயக்குனர் அஸ்வின் குமாருக்கு முதல்படம், மிகக்குறைந்த பட்ஜெட், படத்துக்கு இரண்டே பிரதான  பாத்திரம், அருமையான ரோட்மூவி + ரொமாண்டிக் த்ரில்லர் குறும்படம்,  இதற்கு இர்ஃபான் கானும் அமெரிக்க மாடல் நடிகை கோயல் புரியும் பணமே வாங்கிக்கொள்ளவில்லையாம்,  தவிர அட்வென்சர் டூரிசம் செல்வதாக நினைத்துக்கொண்டு தங்கள் வாகனங்களிலேயே அந்த லே என்னும் இந்தியாவின் கடல்மட்டத்தின்  மிக உயரமான  மலைத்தொடருக்கு வந்து  போனார்களாம்.

ந்த லடாக் செல்லும் சாலை, எதிர்படும் சிறு தொங்கு பாலங்கள், சிற்றாறுகள், மிகக்குறுகலான ஹேர்பின் பெண்டுகள், அபாயகரமான பள்ளத்தாக்குகள் , தேநீர்கடை , இரவு தங்கும் தார்பாய் டெண்டு லாட்ஜுகள், அங்கே தங்கி ஓயாமல் சரணம் சொல்லும் புத்தலாமாக்கள்,  சிடுக்கெடுத்து பேன் வாரும் சீக்கியர்கள், மூனு சீட்டாடும் மங்கோலிய நாடோடிகள் என்று நாம் அதிகம் பார்த்திராத ஒரு லொக்கேஷன்.

குறும்படம் என்பதாலும் முழு சுவாரஸ்யத்தையும் நீங்கள் உணர வேண்டும் என்பதாலும் கதை சொல்லாமல் செல்கிறேன்.  இதில் அகோர தனிமையாலும் கோகெய்ன் போதையினாலும் வேட்டையாடப்பட்டு எதைத் தேடிப்போகிறோம்?!!!   என்றே தெரியாத,    மாடல் அழகி கோயல் புரி [ Koel Purie] செமத்தையான அழகு, என்னமா? துணைக்கு மிகவும் ஏங்கி, தேக்கிவைத்த விரகதாபத்தை கட்டுடைத்த வெள்ளமாய் பிரதிபலிக்கிறார்?!!! அருமையான நடிப்பு,   இவரை நான் சாமுராயில் வந்த அனிதா என்றே நினைத்தேன். அப்படி ஒரு உருவ ஒற்றுமை.  படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

து இந்திய பாகிஸ்தானிய எல்லை, கார்கில் போர் நடந்த  இடத்துக்கு மிக அருகில் வேறு இருப்பதால்,  அந்த இடங்களில் சென்று படம் பிடிக்க குழுவினர் மிகவும் பிரயத்தனப்பட்டிருக்கவேண்டும், படம் முழுக்க கேமரா மேன் ராஜ்ஜியம் தான்.  தவிர கதையிலும் இராணுவ கேம்ப் சம்மந்தப்பட்டுள்ளது, ஒரு சிறந்த ஆர்மி ஆஃபிசர் வேடமும் உண்டு.  மொத்தம் 12 நாட்களில் எடுக்கப்பட்ட படம்,  லைவ் ரெகார்டிங்,  டப்பிங் இல்லை,  இதே இயக்குனரின் அடுத்த குறும்படமான த லிட்டில் டெரரிஸ்ட் 2005 ஆஸ்கர் நாமினேஷனுக்கு தெரிவு செய்யப்பட்டதாம்.  அதையும் பார்த்துவிட்டு பகிர்கிறேன்.

இது யூட்யூப் முன்னோட்ட காணொளி:-

=====0000=====