ஆக்ரோஷ்[Aakrosh][இந்தியா][ஹிந்தி][2010]

ண்பர்களே!!!
நேற்று தான் ஆக்ரோஷ் படம் பார்த்தேன். மிரட்டியிருக்கிறார் இயக்குனர் ப்ரியதர்ஷன்.  வெகுநாட்களுக்கு பின்னர் அவரிடமிருந்து காஞ்சிவரத்தைப் போல, சிறைச்சாலையைப் போல மிகத் தரமான படைப்பு, இந்த முறை இயக்குனர் ப்ரியதர்ஷன்  கையில் எடுத்துக்கொண்ட தலைப்பு கௌரவக்கொலை [Honour Killing] இது இந்தியாவில் கிராமம் நகரம் எனும் பேதமின்றி பட்டி தொட்டியெங்கிலும் விரவிக் கிடக்கிறது . தங்கள் குடும்பத்தின் புகழ் மங்கும் வகையில் நடந்து கொண்ட பெண்ணையோ ஆணையோ மனிதாபிமானமின்றி கொலை செய்யும் வழக்கமாகும். இதில் பொதிந்துள்ள பெண்ணடிமைத்தனத்தையும் ஒருவர் கண்கூடாகப் பார்க்கலாம்.  

னக்கு தெரிந்த 40வயதான ஒரு தமிழ்நாட்டை சேர்ந்த சார்ட்டட் அக்கவுண்டண்டுக்கு இணைய மேட்ரிமோனியல் மூலமாக டெல்லியில் 35 வயதில் பெண் கிடைத்தது. பெண்வீட்டாரும் ஆண்வீட்டாரும் எளிய திருமணத்துக்கு முடிவுசெய்தவர்கள். பழைய டெல்லியில் ஒரு சார் பதிவாளர் அலௌவலகத்தில் திருமணம் செய்யச் சென்றால் அங்கே சாதிவெறி தலை விரித்து ஆடியிருக்கிறது, அங்கே இருந்த   சாதிவெறி கொண்ட அரசு அதிகாரிகள்,  பெண்ணின் சாதி தாகூர் என்பதை அறிந்தவுடன், பெண்ணையும் பெண்ணை பெற்றோரையும் அடிக்காத குறை தான். கண்டபடி ஏசியிருக்கின்றனர். உனக்கு டெல்லியில் மணமகன் கிடைக்கைவில்லையா?!!!, போயும் போயும் ஒரு மதராசிக்கு அதுவும் ஒரு அய்யருக்கு போய் கலப்புத் திருமணம் செய்கிறாயே?!!! போ போ இதை நான் பதிவு செய்யமாட்டேன், தன்மானமுள்ள எந்த ஒரு டில்லிவாலா தாகூரும் இந்த திருமணத்தை பதிவு செய்யமாட்டான், ஆனதைப்பார்  என மறுத்து விட, அவர்கள் மெத்தபடித்தவர்கள் போக்கிடமின்றி அப்படியே விமானம் பிடித்து சென்னை வந்து பதிவு திருமணம் முடித்தனர்.  ஒரு இன்னொரு உயர்சாதிக்கே பெண் தர மறுக்கும் சாதி தாகூர்களின் சாதிவெறி. ஒரு தலித் மாணவன் தங்கள் தாகூர் சாதி உயர்குடிப் பெண்ணை விரும்பினால், அவர்கள் கலப்புத் திருமணமும் செய்யப்போகிறார்கள் என்று தெரிந்தால் சும்மா விட்டு விடுவார்களா?!!! கொலையே விழும். ஒருக்கால் அங்கே பெற்றோர்கள் இவர்களின் காதலை பரிதாபப்பட்டு ஒத்துக் கொண்டாலும் சமூகம் அவர்களை சுற்றிநின்று செருப்பால் அடிக்கும் நிலை நிதர்சனம்.

ங்களுக்கு தரமான ஹிந்திப்படங்களை பார்க்க ஆவல் எழுந்தால் தைரியமாக அஜய்தேவ்கன் நடித்த திரைப்படங்களை தெரிவு செய்து பார்க்கலாம், மனிதர் ஏமாற்றவே மாட்டார். மிகப் பண்பட்ட நடிகர். பாலிவுட்டின் பேரலல் சினிமா ரசிகர்களும், மெயின்ஸ்ட்ரீம் சினிமா ரசிகர்களும் நம்பிக்கை கொள்ளும் முக்கிய ஆளுமை இவர்.  ஹல்லா போல் படத்தில் அவரது நடிப்பை வெகுவாய் சிலாகித்தவன், ஒன்ஸ் அபான் ய டைம் இன் மும்பையில் அவர் ஏற்று நடித்த மாஃபியாத் தலைவன் மிர்ஸா என்னும் வேடத்தை மிகவும் ரசித்தேன். அதைப் பார்த்து விட்டு வேலு நாயக்கரைப் பார்த்தால் யாரும் ஓவர்ரேட்டிங் செய்யவே மாட்டார்கள். தயவு செய்து யாரும் இனியும் வேலுநாயக்கரை ஓவர்ரேட்டிங் செய்ய வேண்டாம் என்பதற்காகவே சொன்னேன். 

தில் இவர் பிரதாப்குமார் என்னும், ஒடுக்கப்பட்ட தலித் இனத்தில் பிறந்து, சிறுவயதிலேயே பெற்றோர்கள் சொந்த கிராமத்தின் உயர்சாதியினரான தாகூர்களின் சூழ்ச்சியினால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள, அன்று இவர் மட்டும் விஷம் குடித்தும் உயிர்பிழைக்கிறார். அதன் பின்னர் ஆசிரியரின் தயவில் லட்சியத்துடன் நன்கு படித்து சிபிஐ கமாண்டராகவும் உயர்கிறார். உயர்சாதிப்பெண்ணான கீதாவின் காதலை குரு தட்சனைக்காக கை கழுவவேண்டிய நிர்ப்பந்தம் வேறு . செம வேடம், கோபக்கார இளைஞர் என்றால் இவருக்கு வெல்லக்கட்டி. மனிதர் மகாநடிகர் இவர்.  இவரின் இயல்பான சிபிஐ அதிகாரியான நடிப்பை பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

டத்தின் மிக முக்கியமான ஒரு பாத்திரம் அஜத்சத்ரு சிங் என்னும் கெட்ட போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பரேஷ் ராவல்,என்ன நடிகர் இவர்?!!! , இதுவரை இவரை கவனிக்கவில்லை என்றாலும் இன்மேல் இவரை தேடிப்பார்க்க வைக்கும் ஆளுமை. என்ன வில்லத்தனம்? !!! கடவுளே!!! படத்தில் இவர் ஒரு  பட்டேல் பிராமண சாதி  போலீஸ் இன்ஸ்பெகடர், கிரிக்கெட்டில் இந்திய விளையாட்டு வீரர்கள் மீது பணமும் கட்டி சதா ஸ்கோர் கேட்டுக்கொண்டே கட்ட பஞ்சாயத்து செய்யுமிடமெல்லாம் செம ஆரவாரம், இவருக்கு மனைவியாகவும்,அஜய் தேவ்கனுக்கு முன்னாள் காதலி கீதாவாக வரும் பிபாஷா பாசுவுக்கு கட்டுப்பெட்டியான குடும்பத்தலைவி பாத்திரம், கணவனின் சாதிவெறியை, பணத்தாசையை, அக்கிரமங்களை கண்டும் காணாமலும் போகும் ஒரு கதாபாத்திரம், சொல்ல மறந்தது ரீமா சென் இதில் தாழத்தப்பட்ட சமூகத்தின் ஒரு ஏழைப் பெண்ணாக வருகிறார். போலீஸ்காரர் வீட்டில் பத்துப்பாத்திரம் தேய்க்கும் வேடம்.சிபிஐ அதிகாரிகள் என்ன கேட்டாலும், அழுத்தமாக கல்லுளி மங்கத்தனமாக இருக்கிறார்,காலம் காலமாக அடிமைப்பட்டிருக்கும் அவலத்தை கண்ணில் காட்டியிருக்கிறார். கணவனையும்,மகனையும் உயர்சாத்திக்காரர்கள் இரவு கலவரத்தை  தூண்டி , ஒரு மரத்தில் தூக்கில் ஏற்றுவதை தூரத்தில் இருந்து பார்த்தும், கிட்டே நெருங்கிசெல்லவிடாமல் ஊரார் தேற்றி தடுக்க,  கதறி அழும் ஒரு பாத்திரம். மிக பண்பட்ட நடிப்பு. இவர் நல்ல நடிகை என்று  ஆயிரத்தில் ஒருவனுக்கு அடுத்து இதிலும் நிரூபித்த படம்.

டத்தில் ஏனைய காட்சிகள் காரைக்குடி செட்டிநாடு கிராமங்களில் எடுக்கப்பட்டுள்ளன, கலை இயக்குனர் சாபு சிரில் இதில் ப்ரொடக்‌ஷன் மேனேஜராக அவதாரம் எடுத்திருக்கிறார். மிகவும் பிரயத்தனப்பட்டு, எங்கும் TN ரெஜிஸ்ட்ரேஷன் வண்டிகள் தெரியாமலும், தமிழர்கள் தலைகள் தென்படாமலும் போக ஆனவரையில் யதார்த்தம் கொண்டுவர பாடுபட்டிருக்கிறார். அந்த கிராமத்தின் தலித் மக்கள் நடத்தும் அமைதி ஊர்வலத்துக்கு எங்கேயிருந்து? தான் அப்படி  வட இந்திய முகங்களை காரைக்குடி வீதியில் கொணர்ந்து காட்சி எடுத்தனரோ?!!! மணிரத்னத்தின் ராவணன் பார்த்துவிட்டு யாரேனும் நொந்திருந்தால் அதற்கு பிராயச்சித்தமாக இப்படத்தின் காட்சியாக்கத்தை பார்க்கலாம். வட இந்தியாவில் இத்தனை வீர்யமான உயர்சாதிக்கொடுமையை படமாக்க இடர்கள் வருமென்று யோசித்து தான் அவர் இங்கே படமாக்கியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.ஆனால் வட இந்தியர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என தெரியவில்லை ?!!! கோவிலின் தூண்களின் சிற்பவேலைபாடுகள், தெப்பக்குளங்கள்.காரைக்குடி அலங்கார வளைவுகள் காட்டிக்கொடுத்து விடுகின்றன.

ங்கே ஆத்தங்குடி ஆயிரம் சன்னல் வீட்டில் ஒரு திருமணப் பாடலும் அதன் பின்னான மணப்பெண் கைது சம்பவமும் காட்சியாக்கியுள்ளனர்.நிறைய காட்சிகள் கோனாப்பட்டு, கண்டனூர் புதுவயல், கானாடுகாத்தான் கிராமங்களில் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு சேசிங் சண்டைக்காட்சி மிகவும் அருமை. 15 அடி அகல சந்துகளை கடக்க  நம்பும்படி கட்டிடத்திலிருந்து மறு கட்டிடத்துக்கு குதிக்கின்றனர். மீதமுள்ள அநேகம் காட்சிகள் டையு[diu] என்னும் ஊரில் எடுக்கப்பட்டுள்ளன. ப்ரியதர்ஷனின் காஞ்சிவரம் மிகவும் ரசனையான  கைதேர்ந்த படைப்பு . அந்த வகையில் இப்படத்திலும் முத்திரையை அழுத்தமாய் பதித்திருக்கிறார் மனிதர்.
ட இந்தியாவில் உயர்ந்த பிராமண சாதிகளான தாகூர்கள், படேல்கள், பூமிஹார்கள், பாண்டேக்கள். ஜோஷிக்கள், சிந்தியாக்கள் எந்த அளவுக்கு தலீத்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுகின்றனர் என்று காட்சியமைப்புகளை வைத்து ஒருவர் புரிந்துகொள்ள முடியும். படத்தில் வரும் சிவசேனா வகை திரிசூல் கேங்கை ஒருவர் ஆயுளுக்கும் மறக்கமுடியாது.தமிழ்நாட்டில் , நகரத்தில் பிறந்தவர்களான நாம் தான் எத்தனை அதிர்ஷ்டசாலிகள்    என நினைக்கத் தோன்றுகிறது!!!!. சாதி அடக்குமுறையா?!!! அதெல்லாம் இன்னும் இருக்கா?!!!  என்று கேட்கும் அப்பாவிகள் இதைப்பார்த்தேனும் புரிந்துகொள்ளுங்கள். சாதிகளை தூக்கி எறியுங்கள்.

கதையின் சுருக்கம் :- புதுடெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூவர்  தசராவிடுமுறைக்கு சக மாணவனுடைய கிராமத்துக்கு வருகின்றனர். வந்தவர்கள், ராம் லீலா வைபவத்தை கண்ணுறுகின்றனர். அதன் பின்னர்  அந்த மாணவர்கள் இரண்டு மாதங்களாகியும் கல்லூரிக்கு திரும்பவேயில்லை!!! அவர்களைப்பற்றி எந்த தகவலும் அவர்களின் உயர்ந்த அந்தஸ்திலிருக்கும் பெற்றோருக்கோ? கல்லூரிக்கோ மேற்கொண்டு கிடைக்கவேயில்லை, எந்த அரசும் இதைக் கண்டுகொள்ளவேயில்லை!!! காணாமல் போன  மூவரில்  ஒருவன் அதே  கிராமத்தின்   தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்.  அவனது வீட்டினர் தந்த புகாருக்கும் போலீசாரிடமிருந்து எந்த விசாரணையுமில்லை. ஒரு கட்டத்தில் மாணவர்களின் மத்தியில் போராட்டம் கலவரமாக வெடிக்க, மத்திய அரசு ஒரு கண்துடைப்பு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறது!!! அதன் பின்னர் அக்கமிஷனில் இரண்டு சி பி ஐ அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு விரைகின்றனர்.. அதில் உயர் அதிகாரி  சதுர்வேதி,உயர்ந்த சாதி பிராமணர் [அக்‌ஷய் கண்னா] ,எல்லா சிக்கல்களையும்  உணர்ச்சிரீதியாக அனுகாதவர். மற்றொருவர் ப்ரதாப் குமார் [ அஜய் தேவகன்] எளிதில் உணர்ச்சிவச்ப்படுபவர். இவர்களது படிப்படியான விசாரணையில் பல மர்ம முடிச்சுகள் விலகுகின்றன.முதலில் மெதுவாக ஆரம்பித்து த்ரில்லர் போல வளர்ந்த இப்படம் அப்படியே ஒரு சமூக சிந்தனை , சீர்திருத்தப் படமாக உயர்கிறது.

யக்குனர் ப்ரியதர்ஷனிடமிருந்து யாரும் இப்புடி ஒரு படைப்பை எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். கடைசியாக அவரின் கட்டா மிட்டாவை பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டேன். ஆனால் இதில் பலமான திரைக்கதை, கதாபாத்திரங்களின் அணிவகுப்பு என அற்பணித்த இயக்கம். சொல்ல வந்த செய்தியை நெற்றிஅடியாக உரைத்திருக்கிறார் மனிதர். பல காட்சிகள் சினிமாத்தனமாக இருந்தாலும் அட்டகாசமான ஆக்‌ஷன் த்ரில்லர் படையல் நிச்சயம்!!!. சமீபகாலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் படும் இன்னல்களை மையமாகக் கொண்டு நல்ல படங்கள் வருகின்றன, இதுபோன்ற உணர்வை எனக்கு கடைசியாகக் கொடுத்த படம் என்றால் சேகர் கபூரின் பாண்டிட் க்வீன், பின்னர் லகான், ஸ்வதேஸ், ஹசரொன் க்வாஹிஷென் அய்சி, தமிழில் பாரதிகண்ணம்மா எனலாம் பேராண்மை படத்தில்   கூட இந்த அளவுக்கு தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது உயர்சாதியினரின் அடக்குமுறைகளை வெளிச்சமிட்டு காட்டியதில்லை . அந்த வகையில் ஆக்ரோஷ் மிக முக்கியமான  படம் என்பேன்.

க்ரோஷ் முழு நீள ஆவணப்படமும் இல்லை, வர்த்தக ரீதியாக நிறையவே சமாதானங்கள் செய்து கொண்டிருக்கிறார் இயக்குனர். சமீரா ரெட்டியின் குத்துப்பாட்டும் கூட உண்டு, புழுதிக்காட்டுக்குள் கார் சேசிங்குகள், அஜய்தேவ்கனும் , அக்‌ஷய்கண்ணாவும் எதிகளிடமிருந்து தப்பிக்க முகத்தில் பாலீத்தீன் சுற்றிக்கொண்டு போடும் மிளகாய்ப்பொடி சண்டை என இதுபோல ஏகம் உண்டு, ஆனால் நம்பும் படி சொல்லப்பட்டது தான் இதன் பலம். வெல்டன் டீம்!!!. இந்தப் படத்தின் சம்பவங்கள் யாரையும் குறிப்பிடுபவை அல்ல!!! என்று டைட்டில் கார்டில் போட்டாலும், இன்றளவில் நம் பாரத தேசத்தின் மூளை முடுக்கெங்கிலும் தயவுதாட்சன்யமின்றி கௌரவக்கொலைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது, ஒரு கிராமவாசி சாதிபாகுபாடு இன்னல்களுக்கு பயந்தே விவசாயத்தையும்  கை விட்டுவிட்டு விட்டு  நகரத்துக்கே போய் கூலிவேலை செய்ய அனுதினம் படையெடுக்கிறான் என்று எண்ணத்தோன்றுகிறது எனக்கு.

சாதி இல்லை என்று சொல்வதற்கு கூட சாதியை வைத்துத்தான் படம் எடுக்க வேண்டும், இது வன்முறை அல்ல, களையெடுத்தல் தான், சமூகத்தில் சினிமாவால் சீர்திருத்தம் கொண்டு வர முடியும் என்றால் இது போன்ற படங்கள் தாராளமாக எடுக்கப்படலாம். படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை, நம் தமிழ்நாட்டுக்காரரான திருவின் ஒளிப்பதிவு. கண்களில் ஒற்றிக்கொள்ளத் தூண்டும். இருட்டில் படம் பிடிப்பது, தலையில் ஓட்டைபோட்ட கோணி மாட்டி ,கத்தியுடன் வரிசையில் வந்து குத்தப் பாய்வது, காலை மட்டும் காட்டுவது, அக்குளை தூக்கி ஆட்டம் ஆடிக் காட்டுவது. வானத்தையே  காட்டுவது, கண்ணு கூசுவது போல சூரியனையே கேமராவில் சுடுவது, ஒரே ஆப்ஜக்டையே  ஒரு நிமிடம் காட்டி எங்கயோ கொண்டு போய் ஃப்ரீஸ் பண்ணுகிற மிஷ்கின் சேட்டைகள் எல்லாம் அறவே இல்லை. ப்ரீதம் சக்ரவர்த்தியின் பிண்ணணி இசையும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. ராபின் பட் & ஆகாஷ் குரானாவின் தொய்வில்லாத திரைக்கதை மிக அருமை,. அருண்குமாரின் கை தெர்ந்த எடிட்டிங் சொல்லவேண்டிய ஒன்று. படத்தின் இறுதிகாட்சியான ரயிலடி காட்சி மிகவும் பாந்தம், பெண்ணின் மறுமணம் தவறல்ல என்ற ரீதியில் இப்போது நிறைய படங்கள் வருவது போற்றுதலுக்குரியது . சாதிகள் மறைய நிறைய கலப்புத் திருமணங்கள் நடக்க வேண்டும் ,அதை நான் பலமாக ஆதரிக்கிறேன்.
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
====0000====

====0000====
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Priyadarshan
Produced by Kumar Mangat Pathak
Screenplay by Robin Bhatt
Akash Khurana
Story by Robin Bhatt
Akash Khurana
Starring Ajay Devgn
Akshaye Khanna
Bipasha Basu
Paresh Rawal
Reema Sen
Music by Pritam Chakraborty
Cinematography Tirru
Editing by Arun Kumar
Distributed by Big Screen Entertainment Pvt. Ltd.
Zee Motion Pictures
Release date(s) October 15, 2010
Country India
Language Hindi

6 comments:

இராமசாமி சொன்னது…

இது வரைக்கும் டவுன்லோடு போட்டு வச்சுட்டு பாக்காம வச்சுருக்கற படத்துல இதுவும் ஒன்னு.. பார்துட்டறேன்.. நல்ல விமர்சனம் நண்பா :)

இராமசாமி சொன்னது…

பரேஷ் ராவல் ஒரு அற்புதமான நடிகர் நண்பா.. சீனிகம் முடிஞ்சா பாருங்க.. அமிதாப்புக்கு மாமனாரா , தபுக்கு அப்பாவா ஒரு கேரக்டர் பன்னிருப்பாரு.. இன்னும் நிரைய படம் இருக்குங்க அவர பத்தி சொல்றதுக்கு.. சீனிகம் பாருங்க.. நம்ம ஊரு பால்கி இயக்கினது வேர.

உலக சினிமா ரசிகன் சொன்னது…

நண்பரே....சாதிப்பேயை வளர்க்க நம் அரசியல்வாதிகள் யூரியா போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.சினிமாவும்,
காதலும்தான் சாதியை அழிக்க...தொடர்ந்து வேப்பிலை அடித்து வருகிறது.திருப்பற்றி எழுதியதில் ஒரு சின்ன சந்தோஷம்.திரு ஹேராம் முடித்துவிட்டு வந்த நேரம்.நான் எடுத்த விளம்பரப்படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்ய வந்தார்.சூட்டிங் துவங்கும் நேரம் என் மாமியார் இறந்த செய்தி வந்தது.திகைத்து நின்றேன். “நீங்கள் செல்லுங்கள் எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன்”எனக்கரம் கொடுத்தார்.விலை மதிக்க முடியாத உதவி.

மைதீன் சொன்னது…

நன்றி நண்பரே! சிறந்த படங்களாக அறிமுகம் செய்வதற்கு, படம் தரமிறக்கி கொண்டிருக்கிறேன் பார்த்ததும் பகிர்கிறேன்.

நாஞ்சில் பிரதாப்™ சொன்னது…

தல அஜய்தேவகன் நடிச்ச கங்காஜல் பாத்திருக்கீங்களா--? செம படம், அதுல தேவ்கனின் நடிப்பை பாருங்க..

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@இராமசாமி
நண்பரே விரைவாக பாருங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
பரேஷ் ராவலின் சீனிகம்மும்,ரோட் டு சங்கம்,பா,ஃபிராக் பார்த்திருக்கிறேன் நண்பா,எப்போதும் காமெடி,குணச்சித்திரத்தில் கலக்குபவர். இதில் வில்லனாக கலக்கியிருக்கிறார்.பாருங்க நண்பா

@உலகசினிமா ரசிகன்
நண்பரே,உங்களுக்கு திரு உதவியதைப்பற்றி படிக்க மகிழ்ச்சியாக இருந்தது.அது என்ன விளம்பரப்படம் என்று பகிருங்களேன்?
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

@மைதீன்
நண்பரே,நலம் தானே?
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

@நாஞ்சில் பிரதாப்
எலே மக்கா செம படத்தை நினைவு படுத்தினாய்,எனக்கு
ஆல்டைம் ஃபேவரிட் கம்பெனி,வீரசாத்,ஹல்லாபோல்,ரெய்ன்கோட்.,அப்புறம் ஓம்கார்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)