உலக சினிமாபார்வை (68) சமூகம் (68) சினிமா (27) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (18) சினிமா விமர்சனம் (15) திரைப்படம் (12) அயல் சினிமா (7) கலை (7) நட்பு (7) உலகம் (6) கோயன் பிரதர்ஸ் (6) பதிவுலகம் (6) chennai (4) ஆக்கம் (4) இந்தியா (4) அமீரகம் (3) இசைஞானி (3) இளையராஜா (3) ஓவியம் (3) சிந்தனை (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) தொடர் பதிவு (3) அஜய் தேவ்கன் (2) அரசியல்வாதி (2) ஆன்மீகம் (2) ஈழம் (2) உலகின் மிகசிறந்த விளம்பரங்கள் (2) கற்பழிப்பு (2) காடு (2) கொலை (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) துபாய் (2) ரிசெஷன் (2) அபர்ணா சென் (1) அமெரிக்க நகைசுவை (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) அவலம் (1) இன அழிப்பு (1) இனப்படுகொலை (1) இனவெறி (1) இயற்கை அன்னை (1) இலவசம் (1) உயிர் காக்க உதவுங்கள் (1) எந்திரன் (1) எல்லாமே என் ராசாதான் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கண்காட்சி (1) கதை (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) குழந்தை தொழிலாளி (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கோவில்கள் (1) சத்யஜித் ரே (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சிந்தனைகள் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சிறுவர்கள் (1) சீட்டிங் (1) செய்தி (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜெயமோகன் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டார்க்ஹ்யூமர் (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) தன்னம்பிக்கை (1) நரபலி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பெங்களூரு (1) பேரழிவு (1) போபால் (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முதலீடு (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) மோசடி (1) மோட்டார் கண்காட்சி (1) யதார்த்த சினிமா (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) வாழ்த்துக்கள் (1) விந்தை (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹவ் டு நேம் இட் (1) ஹாலிவுட் (1) ஹிட்லர் (1) ஹிந்தி (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)

ஒழிந்தது குடும்ப ராஜாங்கம்!!!மக்கள் சக்தி மகத்தான சக்தி!!!

| More
ருமை நண்பர்களே!!!
நேற்றைய நாளான மே13ஐ தமிழர் ஒருவர் வாழ்நாளில் மறக்கமுடியுமா?!!! தீயசக்தியை,குடும்ப அரசியலை, துயரத்தை, ஐந்து வருட நீண்ட அநீதியை மக்கள் சக்தி ஒன்று திரண்டு விரட்டிய நாள்.அடேங்கப்பா!!!ஒரு மாத காத்திருப்பு, என்னா சஸ்பென்ஸ்?!!!என்னா சஸ்பென்ஸ்?!!!,மக்கள் ஆட்சி என்றால் இதுதான்,அறுதிப் பெரும்பான்மை என்றால் இது தான்!!! என்ன ஆட்டம் போட்டார் கருணாநிதியும் அவரது மனைவி, துணைவி,மகள்கள், மகன்கள், மருமகள்கள், மருமகன்கள், கொள்ளு எள்ளு பேரன் பேத்திகள்,... அவரின் கறை படிந்த கவுன்சிலர்கள்,எம் எல் ஏக்கள், அமைச்சர்கள், என்ன விதமான எத்தனை விதமான ஆணவ பேச்சுக்களை நாம் ஐந்து வருடமாக தாங்கிக்கொண்டோம்!!!

ல்லாவற்றிற்கும் பிறந்தது விடிவுகாலம், எல்லாவற்றிற்கும் மேலாக மன்னிக்க முடியாத குற்றம் உண்டென்றால் தமிழன் அங்கே அனுதினமும் மடிந்து கொண்டிருக்க ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை ஒருகையால் எண்ணிக்கொண்டே கழக அல்லக்கைகள் எழுதித்தரும் இரங்கல் கவிதையை மறுகையால் வெளியிட்டுக்கொண்டே,கூட்டணியில் இருக்கும் மத்திய அரசு பிரதமருக்கு அவருக்கு புரியாத மொழியில் வெறும் கடிதம் எழுதிவிட்டு இதோ நான் பதிலுக்கு காத்திருக்கிறேன், வேறென்ன நான் செய்ய?!!! என்று அசிங்கமான முகபாவத்தில் நம்மிடம் பசப்பியதும்!!?மறந்துவிடுவாரா தமிழக மக்கள்?,எல்லாவற்றிற்கும் மேலாக 1000 ரூபாய் பணத்தை முகத்தில் அடித்தால் அடித்து பிடித்துக் கொண்டு ஓட்டு போடுவான் தமிழன் என்று எத்தனை கேவலமாக எண்ணிவிட்டனர் தமிழக கிராம மக்களை, அந்த மனநிலைக்கு வைத்தனரே வேப்ப மரத்தில் பெரிய செய்த ஆப்பு?!!

ன்ன ஒரு அப்பட்டமான நயவஞ்சகம் இவருடையது?!!!இவருக்கு பெயர் தமிழின தலைவராம்,இவர் செய்த தமிழின துரோகத்துக்கு இவருக்கு பெயர் தமிழின தலைவலி என்று தானே இருக்க வேண்டும்?!!! தமிழகத்தில் எல்லாத்துறைகளிலும் கொடிகட்டிப் பறந்த குடும்ப ஆதிக்கம்.... தமிழ் நாடே இவர்களிடம் பகுதி,தொகுதி வாரியாக முழுக்கஅடிமை பட்டு கிடந்தது என்றால் மிகையில்லை.. மதுரையில் அண்ணன் பெயரை படத்தை போட்டு போஸ்டர் அடித்து விட்டால் என்ன அராஜகம் வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் இழிநிலை,கையறு நிலையில் இருந்த பொது மக்கள் கிடைத்த வாய்ப்பை சிக்கென பற்றினர்.கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே தமிழக மக்கள் கருணாநிதிக்கு எதிர்ப்பு ஓட்டுக்களை தான் அளித்திருந்தனர்,அதை அப்போதைய தேர்தல் கமிஷனின் திறமையில்லாத அதிகாரிகளாலும்,அரசியல்வாதிகளுக்கு வளைந்து கொடுக்கும் காவல்துறை அதிகாரிகள்,ஆட்சித்தலைவர்கள் வசம் வாக்குச்சாவடிகள் இருந்ததாலும் எண்ணிலடங்காத கள்ள ஓட்டுக்களை போட்டும் வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லு முல்லு செய்தும் திமுகவும் காங்கிரஸும் வெற்றி பெற்றன,அது ஜனநாயக வெற்றி அல்ல,பணநாயக வெற்றி!!!
தலைவரின் 4மணிநேர வரலாற்று சம்பவம்
ன்று முதல் எல்லோருக்கும் நிம்மதி... இந்த ஊழல் அரக்கர்கள் ஒழிந்த நாளான இன்று தான் நமக்கு எல்லாம் தீபாவளி. தமிழக வாக்காளர்கள் அதுவும் அதிக கிராம வாக்காளர்கள் இந்த ஊழல் பேய்களை,கொலைகார அமைச்சர்களை ஓடஓட விரட்டி அடித்து விட்டார்கள்!!! மக்கள் ஆட்சி என்னும் தத்துவம் மீண்டும் நிலை நாட்டப்படிருக்கிறது.வாக்குகளை பணம் கொண்டு வாங்கி விடலாம் என்ற மட்டமான சூத்திரம் தவறென்று ஊழல் செய்பவர்கள் தலையில் விஷக்கொட்டு கொட்டி நிருபிக்கப்பட்டிருகிறது!!!. வாழ்க ஜன நாயகம்!! வாழ்க நேர்மையான தேர்தல் கமிஷனும் திறமையாக செயல்பட்ட அதிகாரிகளும், இன்று நள்ளிரவு பெட்ரோல் மீண்டும் 5ரூபாய் விலை கூடப்போகிறதாம்!!!, என்றைக்கு  மத்தியில் இந்த இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி  வாரிசின் கைக்கூலி நிழல் ஆட்சி ஒழிகிறதோ அன்று தான் நம் பாரத திரு நாட்டுக்கே நிம்மதி!!!

தில் நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால், பல இணைய மசால் வடைகளும் தயிர்வடைகளும் என்ன? என்ன? கருத்து வெற்றி நிலவர கணிப்பெல்லாம் எழுதி பதிவுகளாக விட்டனர் என்று நாம் நன்கு அறிவோம், அதற்கு எல்லாம் ஒரே தண்டனை அவர்கள் எழுதியதை அவர்களே மீண்டும் மீண்டும் படித்து பார்ப்பது தான்,செய்வியா?செய்வியா?தேவையா உனக்கு?!!! என்று ஆட்காட்டி விரலை முகத்தை நோக்கி தம்மை தாமே கேட்டுக்கொள்வது தான். அவர்களுக்கே சகிக்காது அது .ஸ்பெக்ட்ரம் பிரச்சனை படித்தவர்கள் மட்டுமே கவலைப்படும் விஷயம் ,ஈழ தமிழர் பிரச்சனை ,மீனவர் பிரச்சனை படிக்காத பாமரன் மட்டுமே கவலைப்படும் ஒரு விஷயம் அவை நிச்சயம் ஓட்டுக்களை சிதறடிக்காது,என்ற அபூர்வ சிகாமணிகள் அதை இப்போதாவது தவறு என்று உணர்ந்தால் மதி, ஒரு வெற்றுப் பதர் ஒரு படி மேலே போய் இப்போது நிலவும் மின் தடைக்கு காரணமே ஜெயலலிதா தான்!!! என்று கழக பேச்சாளர்   பேசுவது போல் விஷம ஜால்ரா பதிவை போட்டது தனி காமெடி.

மிழக மின்துறை அமைச்சர் அரைவேக்காடு வீராசாமி, கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இந்தப் பொறுப்பில் இறுக்க ஒட்டிக்கொண்டு இருந்தாலும்கூட, அவரின் நோய்கள் காரணமாகவும் கருணாநிதிக்கு ஐந்து வருடத்தில் நடத்தப்பட்ட 1000க்கும் மேற்பட்ட பாராட்டு விழாக்களுக்கு அவரே முன்னின்று அழைப்பிதழ்,மேடை அலங்காரம், அனுமதி போன்றவை தயார் செய்தமையாலுமே மின் துறை நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளமுடிய வில்லை என்பது தானே நிதர்சனமான உண்மை?!!!. ஏற்கெனவே இருக்கும் மின் பற்றாக்குறை பிரச்சனையோடு இந்தச் கையாலாகாத்தனமும் சேர்ந்துகொண்டதில், தமிழகத்தில் மின்சாரம் இல்லாமல் மக்களும், குறிப்பாக தொழிற்கூடங்களும் பல இழப்புகளைச் சந்திக்கும் நிலைமை உருவாகியே விட்டது.இதற்கு பொறுப்பு ஆளும்கட்சியா இல்லை ஐந்து வருடம் முன்பு ஆண்ட கட்சியா?ஒரு குழந்தையை கூப்பிட்டு மின்சாரம் யாரால் தடைபடுகிறது என்று கேட்டாலும் ,அது சொல்லுமே ஆற்காடு வீராசாமியால் என்று,அவர் குடும்பத்தலைவிகளிடம் வாங்கிய சாபமும் வசவும் அப்படி?

இதில் கருணாநிதி செய்த மகா கேவலமான காமெடி என்றால் தமிழகத்தின் ஒரே கற்புக்கரசி பதிவிரதை வாழும் அசல் தமிழச்சி குஸ்புவை,கொபசெவாக அறிவித்து வீதிவீதியாக அலையவிட்டது தான்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!

கருணாநிதியின் கூட்டணியை அதன் தலைவர்களின் முகங்களை மக்கள் மறக்கவே போவதில்லை,அவ்வளவு வெறுப்பு. ராமதாஸுவின் காமெடி தானய்யா உச்சம்,ஐயகோ,செம காமெடி,எழுதக்கூட லாய்க்கில்லாத நிலை,இவரது நிலை, எனவே லூஸ்ல விடுவோம். அவ்வளவு ஏன் வீரமணி? ஐயகோ,ஐயா தரித்திரரே உம்ம நிழல் கூட மீண்டும் போய்ஸ் கார்டன் பக்கம் படவே வேண்டாம். திருமாவழவழவன் எல்லாம், ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ,வேண்டாம்!!!உமக்கு உம் அடிவருடிகள் வைத்த பேனருக்க்கு ஈடு செய்ய கூட நீ ஒரு சீட் கூட ஜெயிக்கலையேய்யா?உம்ம வெயிட்டை காட்டலையே?ஐயகோ?!!!

அடுத்த உச்ச பச்ச காமெடி பொடிவேலு சீ!! வடிவேலு!!!உனக்கு இருக்குடி இனி ரத்தபேதி,டங்கு வாரை இனி போகுமிடமெல்லாம் கழற்ற போறாங்க!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!

என்னவெல்லாம் பேசின?.உன் தலைவன் கூட இது போல இண்டீசண்டா பேசலையே!!! நீயே நல்லா சரக்கை ஃபுல்லா ஏத்திகிட்டி அடுத்தவனை குடிகாரன் என்று சொன்ன அயோக்கியத்தனதுக்கு பாடம் படிச்சிட்டியா?!!!வக்காலி. உனக்கு ஏற்ற தொழில் ஒன்னு இருக்கு, வைரமுத்து கூடவே அசிஸ்டெண்டா ஒட்டிக்கிட்டு அண்ணா அறிவாலயத்துல சுக்கு காபி தலைவருக்கு ஊத்தி குடுப்பியாம் சரியா?!!!உனக்கு இனி டீவி சீரியல்லயாவது வாய்ப்பு கிடைக்குதான்னு பாரு!!!நாக்கை அடக்கு,ஏன் பேசவே பேசாதே!!!.

வெற்றி தோல்வி நிலவரம்:-
அதிமுக கூட்டணி வெற்றி தோல்வி
அ.தி.மு.க. 147 13
தே.மு.தி.க., 29 12
மா. கம்யூ. 9 3
இ. கம்யூ., 9 1
மூ.மு.க. 0 1
ம.ம.க., 2 1
ச.ம.க., 2 0
பு.த., 1 0
பா.பி., 1 0
இ.கு.க., 1 0
கொ.இ.‌பே 1 0

 
திமுக கூட்டணி வெற்றி தோல்வி
தி.மு.க. 23 96
காங்., 5 58
பா.ம.க., 3 27
வி.சி. 0 10
கொ.மு.க., 0 7
இ.யூ.மு.லீக் 0 3
மூ.மு.க., 0 1
பெ.ம.க 0 1
 
மற்றவை வெற்றி தோல்வி
பா.ஜ., 0 0
இ.ச.ஜ.க., 0 0
ஐ.ஜ.த., 0 0
யா.ம., 0 0
ஜனதா 0 0
இ.ஜ.க., 0 0
நா.ம.க., 0 0
பு.பா., 0 0
பகுஜன் 0 0
மக்கள் சக்தி 0 0
பா.பி 0 0
சுயேட்சை 0 0
கடந்த 4 முறை நடந்த சட்ட மன்ற தேர்தலில் கட்சிகளின் வெற்றி தோல்வி நிலவரம்
 ---------------
திமுக கூட்டணி மொத்தமே - 31 தான்.ஸ்டாலின் வெற்றி பெற்றது ஒப்புக்கு சப்பான வெற்றியே,எனவே ரவுண்டாக வெறும்=30 ,நம் சாரு சொன்ன 30 என்னும் மேஜிக் கணிப்பு பொய்க்கவில்லையே?!!!என்ன ஒரு தீர்க்க தரிசனம்?!!!
---------------
 

18 கருத்துரைகள்:

பெயரில்லா சொன்னது…

விஜயகாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் தனியாக நிற்பேன் என்று அடம் பிடித்திருந்தால், நீங்களும் கெட்டு, அதிமுகவையும் கெடுத்து விட்டிருப்பீர்கள், உங்களுக்கு இந்த 30 MLA கள் கிடைத்திருக்க மாட்டார்கள். எதோ உங்களால் அதிமுகவுக்கு sweep , அதிமுகவால் உங்களுக்கு எதிர் கட்சி தலைவர் பதவி.... ஒரே ஒரு MLA இருந்த உங்கள் கட்சிக்கு இத்தனை பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளார் அம்மா, அதனால் இந்த கூட்டணி வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் தொடர வேண்டும். நீங்கள் இருவரும் ஆக்க பூர்வமாக சட்டசபையில் மக்களின் பிரச்சனைகளை ஒன்றாக அனல் கிளப்பி, தீர்த்து வைக்க பாருங்கள். உங்களின் இந்த கூட்டணியை மக்கள் ஏற்று கொண்டு விட்டார்கள். பாமக செல்லாத காசாகி விட்டது. வீரமணி கட்சியை போன்றதாகி விட்டது. இப்போ பாருங்கள், ஒரு 33 MLA கள் இருந்தால் ஒரு ராஜ்ய சபா MP கிடைக்கும், அதன் படி, 4 MP கள் அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது, மீதம் உள்ள பன்னிரண்டு MLA களில் மூன்று MLA கள் ஆதரவு இருந்தால் போதும், உங்களுக்கு ஒரு MP கிடைக்க வாய்ப்பு உள்ளது, அதே போல் இந்த கூட்டணி அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நீடித்தால், 40 / 40 அடிக்கலாம். எதையாவது சொல்லி வைகோ அவர்களை போல உங்கள் தலையில் மண்ணை வாரி போட்டு கொள்ளாதீர்கள். அம்புடுதேன். ஒற்றுமையாக இருந்து மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள், இது தான் நாங்கள் உங்களிடம் எதிர்பார்த்து வாக்களித்தது.

பெயரில்லா சொன்னது…

விஜயகாந்த் அவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது.வெறும் சினிமா கவர்ச்சியால் வந்தது அல்ல இந்த அந்தஸ்து,பதவி.இது மக்கள் உங்கள் மீது வைத்து இருக்கும் நம்பிக்கை,எதிர்பார்ப்பு.எடுத்த எடுப்பிலேயே முதல்வர் பதவி கொடுத்துவிடகூடாது,சற்று காலம் எதிர் கட்சி பெறுப்பில் வைத்து ஆளும் கட்சியை தட்டி கேட்கவைத்து,நீங்கள் என்ன செய்ய விரும்புகின்றிர்களோ அதை ஆளும் கட்சியிடம் கேட்கவைத்து,கேள்வி கேட்க தெரிந்தவன்தான் நாளை பதில் சொல்லவும் கடமை பட்டவனவான் என்பதை உங்களுக்கு உணர்த்தி ஆளும் பெறுப்பை கொடுக்கத்தான் இந்த எதிர் கட்சி அந்தஸ்து உங்களுக்கு மக்கள் கொடுத்து உள்ளார்கள்.மக்களின் நம்பிக்கையை பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல,சமகாலத்தில் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பலர் உள்ள நாடு நம் தமிழ் நாடு,அவர்களை எல்லாம் ஜார்ஜ் கோட்டை வாளகத்தின் பக்கமே அனுப்பாத நம் தமிழ் மக்கள் உங்களை எதிர் கட்சியாக அந்த ஜார்ஜ் கோட்டையில் அமர்த்தி இருப்பது உங்களை சோதிக்கவும் பதப்படுதவும்தான் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.சட்ட சபையில் இருக்கபோகும் யாரையும் நண்பன் என்று நம்பிவிடவும் முடியாது,விரோதி என்று விலக்கிவிடவும் முடியாது.குறிப்பாக ஜெயலலிதாவோடு ஒவ்வரு விசயத்திலும் ஜாக்கிரதையாக அதாவது எந்த ஒரு திட்டத்தையும் ஆதரிப்பதோ அல்லது எதிர்பதோ எதுவாக இருந்தாலும் கவனமாக இருக்கவும்.நமது கழக உறுப்பினர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துகொள்ளவும்.மற்றவை பிறகு.

பெயரில்லா சொன்னது…

தொண்டை கிழிய பிரசாரம் செய்தீர்கள். வெயில்ல வறண்டு மக்கள் திரண்டு வந்தாங்க. வடிவேலு என்ற ஒரு நிஜ வாழ்கை காமெடி பீஸை வைத்து மக்களை கவர நினைத்தீர்கள். பாலம் கட்டினோம், 1 Re அரிசி என்று சொன்னதே திரும்ப திரும்ப ஒடஞ்ச ரெக்கார்ட் போல சொல்லிகிட்டே இருந்தீர்கள். ஓடாத படத்தை ஓஹோ என்று என்று சொல்லி நீங்கள் ஓடவைப்பது போல உங்கள் [குடும்ப]நல திட்டங்களை மார்கெட்டிங் செய்தீர்கள். 108 Technology வழியாக, பணம் குடுத்தீர்கள். ஆனால் மக்கள் OKOK என்று சொல்லி விட்டார்கள். OKOK என்றால் உங்கள் பேரன் நடிக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி அல்ல, ஒரே குத்து ஓங்கி குத்து.

பெயரில்லா சொன்னது…

முதலில் நாம் ஒன்றை புரிந்துக் கொள்ளவேண்டும். ஒரு அரசின் தலையாயப் பணி வளர்ச்சி திட்டங்களை தீட்டுவதும், பராமரிப்பதும் இரு கண்கள் போல... இவற்றை சாதனை என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு திமுகவினரின் நிர்வாகத் திறன் சீரழிந்திருப்பது வேதனைக்குரிய விஷயம். திமுகவினர் சொல்லிக் கொள்ளும் இந்த அரசின் சாதனைகளை பார்ப்போம். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி - நல்ல திட்டம் என்றாலும், அரிசியின் தரம் மிகக் குறைவாக இருந்ததால் பலர் கால்நடை தீவனமாகவே உபயோகித்தனர். மேலும் கடத்தல் அதிகரிப்பும் நடந்தது. அரசு இதன் மீது நடவடிக்கை எடுப்பது போல காட்டிக் கொள்ளக் கூட இல்லை. இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - இதுவும், கருணாநிதியின் குடும்பத்திற்கு பணம் சேர்க்கும் திட்டமாகவே இருந்தது துரதிஷ்டம். இந்தப் பணத்தில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி இருந்திருக்கலாம். இலவச ஆம்புலன்ஸ் திட்டம் - இது மத்திய அரசின் திட்டம். மேலும் ஆந்திர அரசால் முதலில் அறிமுகப் படுத்தப் பட்ட திட்டம். அதை தனக்கு சொந்தம் கொண்டாட நினைத்தது நடக்கவில்லை. ஆனாலும், இந்தத் திட்டம் நிச்சயமாக ஒரு சாதனைதான். இலவச கலர், "டிவி' - கருணாநிதி குடும்பத்தின் வருமானத்தை பெருக்க கொண்டுவரப் பட்ட திட்டம்.இது ஏழைகளுக்கென அறிவிக்கப் பட்டது அப்படியே இருந்திருந்தால், இது கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும்.ஆனால் சுண்டல் விநியோகிப்பது போல பணக்காரர்களுக்கும் வழங்கியது இந்த அரசு பொது மக்களின் வரிப் பணத்தை வீணடித்ததற்கு ஒரு சான்று.மேலும் சொந்தக் காசிலேயே சூனியம் வைத்தது போல, 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் கிராமப் புற மக்களையும் சேர்ந்தடைய மிகவும் வசதியாகப் போனது. ஜெயலலிதா இதற்காகவே கருணாநிதிக்கு கடைமைப் படவேண்டும். இலவச, "காஸ்' அடுப்பு - இது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி. திமுக இதில் கிட்டத் தட்ட வெற்றி பெற்றது என்றே கூறலாம். இலவச கான்கிரீட் வீடு திட்டம் - இதனால் பலர் கடனாளியாயினர் என்பதே உண்மை.மேலும் இது 2G oozhalai maraikka kondu varap பட்ட திட்டம். பல்வேறு அரசுத் துறைகளில் ஐந்து லட்சம் பேருக்குg வேலை வாய்ப்பு , தலைநகர் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் மேம்பாலங்கள், சாலைப் பணிகள், குடிநீர் திட்டங்கள் - இது அரசின் kadaimai..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

அருமை நண்பா :-)))))))))))))

மக்களை taken for grated ஆக எவன் நினைத்தாலும் இந்த வேப்ப மர ஆப்பே ஓவரால் செய்து வைக்கப் படும்!


//இதில் பல இணைய மசால் வடைகளும் தயிர்வடைகளும் என்ன என்ன கருத்து கணிப்பெல்லாம் லைன்ல விட்டனர் என்று நாம் அறிவோம்,அதற்கு எல்லாம் தண்டனை அவர்கள் எழுதியதை அவர்களே மீண்டும் படித்து பார்ப்பது தான்,சகிக்காது.ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை,ஈழ தமிழர் பிரச்சனையை,மீனவர் பிரச்சனை ஓட்டுக்களை சிதறடிக்காது,என்ற சிகாமணிகள் அதை இப்போதாவது தவறு என்று உணர்ந்தால் மதி,///

ஹா ஹா :))

பெயரில்லா சொன்னது…

கருணாநிதியின் நிஜ பெயர் "தெட்சினாமூர்த்தி".
அவர் மனைவிகளில் ஒருவரான ராஜாத்தி யின் நிஜ பெயர் "தர்மாம்பாள்".

மதுரை சரவணன் சொன்னது…

அம்மா விற்கு வாழ்த்துக்கள்.. நல்ல பதிவு.. பகிர்வுக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

இப்படிப்பட்ட கொள்ளையர்கள் கடைசிகாலத்தில் படப்போகும் இடர்பற்றி பழைய பாடலொன்று இப்படிச்சொல்லுக ிறது,

பேய் கொள்ளும் பிணியொடொரு
பிரிவுஞ்சேரும்.
பித்தொடு பிடாரிகளும் துணயாயாவர்.
தாய் கண்டும் சேய் என்று
சொல்லாலுன்னை.
தரித்திரமே உருத்திரமாய்
கொள்வார் காண.
பாயில்லை சதியில்லை இல்லுமில்லை.
படுந்துயரம் நீ செய்த பாவம்தானே.

பெயரில்லா சொன்னது…

ஸ்டாலின் மகன் உதயநிதி..செங்கல்பட்டில் 1800 கோடி ரூபாய் முதலீட்டில் ஸ்டீல்பிளாண்ட் தொழிற்சாலை நிறுவுகிறார்..இது அவங்கப்பா சம்பாதிச்ச பணமா..தாத்தா சம்பாதிச்ச பணமா..இது எந்த பத்திரிகையிலும் வரவே இல்லை..நடுங்குறாங்க..மக்களே...

கழனி பானைக்கு எருமையை காவலா போடலாமா...கொய்யாதோப்புக்கு குரங்கை காவலா போடலாமா..?கரும்பு தோட்டத்துக்கு யானையை காவலாபோடலாமா...அது மாதிரிதான் மக்களே...தமிழ்நாட்டுக்கு கலைஞரை முதல்வர் ஆக்கலாமா..?

பெயரில்லா சொன்னது…

ரத்தக் கோப்பை!

அகிலன் சித்தார்த்
இந்த உலகில் ஒரு பயங்கரமான அரக்கன் இருந்தான்
என்று அந்த நீதிக் கதை ஆரம்பித்தது.
நீதிக் கதைகள் எப்போதும் தொடர்கதை என்பதால்
அந்த அரக்கன் இன்னும் இருக்கிறான்
என்று அதை நிகழ் கதை ஆக்கலாம்.

அவனிடம் ஏராளமான செல்வம் உண்டு.
அதைவிட ஏராளமாக ஆயுதங்கள் உண்டு.
பூவுலகம் முழுக்க அவனுக்குக் கப்பம் கட்ட
குறுநில மன்னர்கள் மண்டியிட்டார்கள்.

எல்லாவற்றையும்விட, எதை, எப்படி, எவ்விதம்,
கச்சிதமாகச் செய்து முடிக்க வேண்டும் என்று வழி நடத்த
சதியாலோசனைக் கூட்டமொன்று அவனிடம் இருந்தது.

அவர்கள் அந்த அரக்கனுக்குப் பல முகமூடிகளை
முதலில் செய்து கொடுத்தார்கள்.

ஒரு முகமூடியின் பெயர் சுதந்திரம்.

இன்னொன்றின் பெயர் தீவிரவாதத்துக்கு எதிரான போர்.

மற்றொன்றின் பெயர் போர்க் குற்றம்.

ஜனநாயகம், மனித உரிமை, சர்வாதிகாரத்திலிருந்து விடுதலை
என்கிற பெயர்களில் அமைந்திருந்த அந்தப் பல்வேறு
முகமூடிகளை அந்த அரக்கன் அடிக்கடி அணிந்துகொண்டான்.
ஆனால், கையில் கொலை வெறி ஆயுதங்களை
வைத்துக்கொள்ள மட்டும் எப்போதும் மறக்க மாட்டான்.

அவனுடைய காலை உணவுக்கு இனப் படுகொலை,
நடுவில் இளைப்பாறக் கொஞ்சம் அணு உலைகள்,
மதியத்துக்கு அரபியில் பெருகும் எண்ணெய்,
மாலையில் புத்துணர்வு பெற விஷ வாயுக்கள்,
இரவு உணவுக்கு குண்டு வீச்சில் இறந்த அப்பாவி மக்களின் உயிர்கள்.

''வெள்ளையாக இருந்தாலும் கறுப்பாக இருந்தாலும்
உன் பணி இது மட்டுமல்ல. நீ உலகம் முழுவதும் மேலும்
பல குட்டி அரக்கர்களை உருவாக்க வேண்டும்'' என்றார்கள்
மதியாலோசனையோடு சதியாலோசனை செய்யும் மந்திரிமார்கள்.

''ஏன்?'' என்றான் 'தீவிரவாதத்தை வென்ற விடிவெள்ளி’ என்கிற
புதிய முகமூடியை அணிந்திருந்த அந்தக் கறுப்பு அரக்கன்.
''அப்போதுதான் உனக்கு தினசரி உணவுகள் தடையின்றி
கிடைக்கும். உலகின் பாதுகாவலன் என்கிற இன்னொரு
புதிய முகமூடியையும் உலகம் வழங்கும்'' என்று பதில் வந்தது.

''அப்படியென்றால் அடுத்த குட்டி அரக்கன் யார்?'' என்றான்
உலக அரக்கன் இறுமாப்புடன். மந்திரிமார்கள் தங்களுக்குள்
விவாதித்துக்கொண்டு விடை அளித்தார்கள்.

''அவன் இரானில் இருக்கலாம், சீனாவில் இருக்கலாம்,
கியூபாவில் இருக்கலாம், வெனிசுலாவில் இருக்கலாம். அல்லது
வட கொரியாவிலோ ஆப்பிரிக்காவிலோ இருக்கலாம்...''

''சரி இப்போதைக்கு லிபியாவில் எனக்குக் கப்பம் கட்டிய
அந்தச் சிறிய அரக்கனைக் குடும்பத்தோடு வேட்டையாடலாம்...
அந்தக் கொலை சாசனத்தில் இப்போது
கையப்பம் இடுகிறேன்... அதற்கு அடுத்த வேட்டைக்கு விரைவில்
ஏற்பாடு செய்யுங்கள்'' என்றான் உலக மகா அரக்கன்
இராக்கிலிருந்து வரவழைக்கப்பட்ட ரத்தக் கோப்பையை உறிஞ்சியபடி!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

veldon post

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இந்த கல்லுளி மங்கனை மக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

திருடவும் பொய் சொல்லவும் ஒரு அளவு வேண்டும்...மக்களை ஆட்டு மந்தை..ஒரு ரூபா அரிசி,கிரண்டர் கொடுத்து வாங்கிடலாம்னு நினைச்சிருக்காரு

பெயரில்லா சொன்னது…

ஜெயா டிவியை விட, திமுக வின் மீதான தாக்குதலை சன் டிவி பெருமளவில் நடத்தியதால், அவர்களுக்கு போட்டியாக ஊடக பலம் வேண்டுமென்பதை உணர்ந்த, கருணாநிதி கலைஞர் டிவியை தொடங்கினார்.



டிவி நிகழ்ச்சி உள்ளாக்கத்தை வடிவமைப்பதிலும், நிகழ்ச்சிகளுக்கு பெயரிடுவதிலும் கருணாநிதி தனிப்பட்ட முறையில் ஆர்வத்தை செலுத்தி, நிறைய நேரத்தை செலவிட்டார் என்று தகவல்கள் வெளிவந்தன. 2007 அக்டோபர் 15 அன்று தனது ஒளிபரப்பை கலைஞர் டிவி தொடங்கியது. அன்று விநாயகர் சதுர்த்தி என்பது குறிப்பிடத் தகுந்தது. விநாயகர் சதுர்த்தி தினம் அன்று தொடங்கும் காரியங்கள் பெரிய வெற்றி பெரும் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது போலவே கலைஞர் டிவியும் பெரிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தான் செய்தது. கலைஞர் டிவி தொடங்கிய நாளன்றே, ‘மொழி’ மற்றும் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படங்களை ஒளிபரப்பி, சன் டிவிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது கருணாநிதி டிவி. அதில் வரும் ‘மானாட மயிலாட’ போன்ற நிகழ்ச்சிகளை கருணாநிதியே ரசித்துப் பார்க்கிறார் என்ற செய்திகள் அந்த டிவிக்கான முக்கியத்துவத்தை மேலும் அதிகப் படுத்தின. மானாட மயிலாட பார்த்திருக்கிறீர்கள் தானே ? “ரம்பா மேம்.. நீங்க எத்தனை மார்க் சொல்லுங்க…. நமீதா மேம்…. நீங்க எத்தனை மார்க் சொல்லுங்க…. குஷ்பூ மேம், குந்தாணி மேம் என்று, அதில் வரும் கூத்துகள் சொல்லி மாளாது… இந்த நிகழ்ச்சியை கருணாநிதியே வடிவமைத்தாராம் …..

பெயரில்லா சொன்னது…

கருணாநிதி எந்நேரமும் பணத்தை பற்றியே யோசிப்பவர் என்பதற்கு ஒரு உதாரணம். அண்ணா காலத்தில் கலைஞரை ஒரு கூட்டத்துக்கு பேச கூப்பிடுகிறார்க ள். அப்போது அவர் அரசியலில் அவ்வளவு வளர்ந்திருக்கவி ல்லை. இருந்தாலும் வரமுடியாது...அது..இது என்று பிகு பண்ணுகிறார். உடனே ஏற்பாட்டாளர்கள் 'பணம் தருகிறோம்' வாருங்கள் என்று அழைக்கின்றனர். மு.க முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பலப். அவர் உடனே உதிர்த்த முத்துக்கள் இதோ: "நீங்கள் காசு கொடுப்பதால் நான் வர சம்மதிக்கவில்லை . எனக்கு அந்த பக்கம் ஒருவரை சந்திக்கவேண்டி உள்ளது. எனவே 'வரும்படி' இருந்தால் கூட்டத்திற்கு நான் 'வரும்படி' இருக்கும். அட்வான்சை கொடுங்க"...!!! எப்பூடி?

Joe சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
R. Kamal சொன்னது…

:D nice post, really a great day for Tamil Nadu...finally karuna can rest.

Joe சொன்னது…

பல வருடங்களுக்க்குப் பிறகு, உண்மையிலேயே தமிழர்கள் பல பேர் குதூகலமா கொண்டாடியது சென்ற வெள்ளியிரவு தான். Good Riddance!

Related Posts Plugin for WordPress, Blogger...

சினிமா/இலக்கிய வலைப்பூக்கள்

இதர வலைப்பூக்கள்

MyFreeCopyright.com Registered & Protected