அருமை நண்பர்களே!!!
நலம் தானே?இங்கே சென்னை வந்து 21 நாட்கள் ஆகின்றன,நேரம் பறக்கிறதை உணரமுடிகிறது,பதிவெழுத அமர முயன்றும் முடியாதபடிக்கு வேலை கழுத்தை நெரிக்கிறது,மிகுந்த மன அழுத்தத்தில் வேலை இழந்து திரும்பி வந்தவனுக்கு 4 கம்பெனிகளில் வேலை தயாராக இருந்தது,அதில் மனதுக்கு பிடித்தமான வேலை ஒன்றை தி.நகரில் தேடிக்கொண்டு சேர்ந்தும் விட்டேன்.இவ்வளவு நாள் ஆட்டோகேட் மென்பொருளில் படம் வரைந்தவனுக்கு,இனி நீ ரெவிட் என்னும் மென்பொருளை கற்றுக்கொண்டு இதில் தான் வரைய வேண்டும் என்றிருக்கின்றனர்.இரண்டு நாள் வேலைக்கு சென்றதில் கண்கள் சிவக்க வீடியோ டுடோரியல் தான் பார்த்தும்,கேட்டும் கொண்டிருக்கிறேன்.சென்னையில் இப்படி வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்குப் போய் 4.5 வருடமாகிறது,சென்னை என்னமாய் மாறியிருக்கிறது,முன்பு இருந்ததை விட வேலைக்கு செல்லும் நேரத்தில் 10 மடங்கு வாகன பெருக்கத்தையும் நெரிசலையும் பார்க்கிறேன்.குற்றம் கூறாமல் ,எரிச்சல் படாமல் வாகனத்தை ஓட்டிக் கொண்டு போய் வந்தால் ,இதய நோயாளியாகாமல் தப்பலாம்,இல்லாவிட்டால் ரத்தக்கொதிப்பு,உட்பட எல்லா நோய்களும் வரிசை கட்டி வந்தேவிடும்.
ஜெயலலிதா பதவியேற்று அடுத்தடுத்த கசப்பு மருந்துகள் தரப்பட்டுள்ளன,சமீபத்திய கசப்பு மருந்து உணவுப்பொருட்களின் மீதான 15 சதம் சேவை வரி தான் அதில் ஹைலைட்,அதற்கு உதவிய நொட்டை காரணம் கஜானா காலி என்பதே,நான் பேருந்தில் போகாததால் முன் அறிவிப்பே செய்யாமல் உயர்த்தப்பட்டு நிலுவையில் இருக்கும் பேருந்துக்கட்டணம் பற்றி தெரியாது,அதில் என்ன ஒரு கொடுமை என்றால் என்ன தான் குடிகாரன் என்றாலும்,என்னதான் மதுபானங்கள் மீதான அதிக பட்ச வரி விதிக்கப்படவேண்டியது தான் என்றாலும்,முன் அறிவிப்பில்லாமல்,ஒரே ஒரு போன் கால் மூலம் டாஸ்மாக் கடைகளுக்கு அறிவித்து விட்டு ஒரே மணி நேரத்தில் விலையை ரூபாய் 5 முதல் 20 வரை உயர்த்தியிருப்பது அக்கிரமம். இதன் மூலம் குடிமகன்களின் வயிற்றெரிச்சலை ஏகத்துக்கு கொட்டிக்கொண்டிருக்கிறது,தினம் தினம் அவர்களிடம் வசவுகள் வாங்கப்போவது கண்க்கூடு.
விற்கும் விலைவாசியில் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் போதாது தான். இதாவது பரவாயில்லை அத்தியாவசியமான பொருட்களான பால் விலையை அரைலிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்தியிருப்பது, குடும்பத்தலைவிகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டிருக்கிறது, மக்களுக்கு இந்த செயல் நிச்சயம் மறக்காது, பால் வாங்கி வரும் ஒவ்வொரு தலைவியுமே சாபம் கொடுத்த படியே தான் வாங்கி வருகின்றனர்.இது நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் பாருங்கள்.
எப்படித்தான் ரெஸ்டாரண்டுகளில் மக்கள் சென்று சாப்பிடுகின்றனரோ?ஒரு குழுவாக ட்ரீட் கொடுப்பதற்கு ரூபாய் 1000 க்கு சாப்பிட்டால்,150 ரூபாய்க்கு சேவை வரியும் சேர்த்து வருகிறது,கோவிலுக்கு போவதற்கு அர்ச்சனை தட்டு வாங்கினால் ஆறு மாதம் முன்பு 30 வரும்,இப்போது 60 ரூபாய் வருகிறது,இதன் மூலம் அனைத்து பொருட்களுமே விலை உயர்ந்துள்ளது தெரிகிறது,நான் வெளியே டீ ,குளிர்பானம் குடிப்பதில்லை,நல்ல வேளை.
இப்போது தானே வந்திருக்கிறேன்,போகப்போக என்னைச்சுற்றி நடக்கும் விஷயங்களை அழகாக ரிப் செய்யப்பார்க்கிறேன்.ஒவ்வொரு சனிக்கிழமையும் திருநீர்மலை கோவிலுக்கு செல்வதை பழக்கமாக ஆரம்பித்திருக்கிறேன்,மிக நல்ல அனுபவமாக இருக்கிறது, மலை மீதிருந்து பார்த்தால் ஆறே மாதத்தில் காக்னிசண்ட் என்னும் ஐடி பார்க்கை மெப்ஸ் வளாகத்தில் முடித்திருப்பதையும், அருகே ஒரு மலையை கிரஷர் காரர்கள் முக்கால் பாகம் கரைத்திருப்பதையும் உணரமுடிகிறது,ஒரு பக்கம் வளர்பிறையாக கட்டிடவேலைகளும்,மறுபக்கம் தேய்பிறையாக இயற்கை சீரழிவுகள். எல்லோருக்கும் மாசு இலவசம்.
சென்ற வாரம் ஞாயிறு அன்று குரோம்பேட் டைம்ஸில்,திருப்பதி,திருமலா சென்றுவர 1500 நபருக்கு,காலை5-30க்கு வீட்டிலே பிக்கப்,மாலை 6-30 மணிக்கு வீட்டிலேயே ட்ராப். என்னும் விளம்பரம் பார்த்து ,அடுத்த நாள் எங்களை கூட்டிப்போக முடியுமா? என்று அதன் உரிமையாளர் அலெக்ஸ் என்பவரிடம் கேட்டேன், அவர் விடியற்காலை 5-30 க்கு சரியாக வந்தார்.ஒரு டாட்டா இண்டிகா ஏசிகாரில் நான் என் மனைவி,என் மகள் மட்டுமே பயணிக்தோம்,2 மினரல் வாட்டர் பாட்டில்கள் குடிக்க வைத்திருந்தார்.படிக்க ஹிந்து பேப்பரும்,தினத்தந்தி பேப்பரும் வைத்திருந்தார்,நம்பமாட்டீர்கள் எஃப் எம்மை அலறவிடாமல் ஸ்வாமி ஸ்லோகங்களை தொடர்ச்சியாக பாட விட்டபடி வந்தார். 8-30 மணிக்கு கீழ் திருப்பதி,அவரே நல்ல உணவகத்தில் எங்களை சாப்பிட வைத்து விட்டு,பணம் கொடுத்துவிட்டார்,மேலே திருமலையில் 9-30க்கு சென்று விட்டோம்,அங்கே 300 ரூபாய் டிக்கெட் கவுண்டரில் நிறுத்தி,எங்களிடம் 600 ரூபாய் பணம் தந்து அனுப்பிவிட்டார்.என் மகளுக்கு டிக்கெட் இல்லை,அதற்கு 300 ரூபாயை நான் தந்த 4500ல் அவர் அதை திருப்பி கொடுத்து விட்டார்,12-30 மணிக்கு சாமி தரிசனம் முடிந்து வெளியே வருகையில் எங்களை கூட்டிச்சென்று புஷ்கரிணிக்கு அருகே நிறுத்தியிருந்த காரில் ஏசி போட்டு அமர வைத்துவிட்டு லட்டு வாங்கி வந்தார்,கீழே போய் அதே உணவகட்தில் உணவு சாப்பிட வைத்து விட்டு அதற்கும் பணம் தந்து விட்டார்,எல்லாம் சேர்த்து தான் 1500 என்றார்.,திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 40 ரூபாய் டிக்கெட் எடுக்க பணம் கொடுத்து விட்டார்.அங்கே சாமி பார்த்து விட்டு ,பத்திரமாக அழைத்து வந்து வீட்டில் விட்டார்,எதாவது குறைகள் இருந்தால் சொல்லும்படி சொன்னார்,பின்னர் வருகையில் சரிசெய்து தருவதாக சொன்னார்,சென்னை போன்ற ஒரு ஊரில் இப்படி கஸ்டமர் சாட்டிஸ்ஃபாக்ஷனுக்கு மதிப்பளித்து நடந்த செயல் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை வழங்கியது.யாருகேனும் பணம் பிடுங்கிகளிடம் சிக்காமல் நிம்மதியாகபோய் வர வேண்டுமென்றால் இவரை நிச்சயமாக சிபாரிசு செய்கிறேன்.அலெக்ஸின் போன் நம்பர்:-98414 11832
சரி ,இப்போதாவது பதிவின் தலைப்புக்கு வருகிறேன்,அன்னா ஹாசரே மூலம் லஞ்சம் ஊழலுக்கு முடிவு கட்ட இப்போது சற்று மேலே வந்து கொண்டிருக்கும் லோக்பால் மசோதா தாக்கல் செய்ய வேண்டுமென்றால் 25 லட்சம் மக்களின் ஆதரவு தேவை என்ற புதிய விதிமுறை ஒன்றை இந்திய அரசாங்கம் உருவாக்கியுள்ளது.உதவாக்கரை விதிமுறை தான்!!!!
இதற் காக ஒரு தொலைபேசி எண் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்.+91 22 615 50 789 . இந்த எண் மூலம் நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். மேலும் இந்த அழைப்புக்கு கட்டணம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (டோல் ப்ரி)
உங்கள் அழைப்பு சென்றதும் உங்கள் ஆதரவு எடுத்துக் கொள்ளப்பட்டது என்ற குறுஞ்செய்தி உங்கள் கைபேசிக்கு வந்துவிடும்.இதன் தொடர்பான வலைதளம் www.indiaagainstcorr upiton.org .எந்த நாட்டில் இருந்தாலும் உங்கள் ஆதரவை இந்த கைபேசி எண்ணுக்கு அனுப்பலாம் 09212472681
இதற்
உங்கள் அழைப்பு சென்றதும் உங்கள் ஆதரவு எடுத்துக் கொள்ளப்பட்டது என்ற குறுஞ்செய்தி உங்கள் கைபேசிக்கு வந்துவிடும்.இதன் தொடர்பான வலைதளம் www.indiaagainstcorr
வழக்கம் போல கைது நாடகங்கள் ஆரம்பமாகிவிட்டன,இதற்கு தினமணி விகடன் உள்ளிட்ட ஏனைய பத்திரிக்கைகளும் விலைவாசி உயர்வை கண்டிக்காமல் தூபம் போடுவதைப்போன்று நடந்து கொள்வது வருத்தமளிக்கிறது, மக்களின் அவஸ்தை யாராலுமே விடிவுக்கு வராது என்பதில் ஐயமே இல்லை,
சமச்சீர் கல்விக்கு கொடுத்ததை போன்ற ஒரு சூட்டை உச்ச நீதி மன்றம்,சட்டசபை விவகாரத்திலும் வழங்கிடவேண்டும் என்பதே நியாயமாய் வரி கட்டும் குடிமகன்களின் கோரிக்கை ,நிறைவேறுமா பார்ப்போம்?!!!.
தி.நகர்,ஆலையம்மன் கோவிலுக்கு அடுத்த காம்பவுண்டில் இந்த கண்டெம்பரியான அரசு அலௌவலகத்தை பார்த்தவுடன் ஆச்சர்யத்தில் உறைந்தேன்,அதுவும் தகவல் உரிமை சட்ட அலுவலகத்துக்கான கட்டிடத்துக்கு தான் இப்படி,கார்பொரேட் லுக்கில் ஆஃபீஸ் கட்டியிருக்கிறார்கள்,போட்டோவை க்ளிக் செய்து பாருங்கள். ஆஃபீஸ் விட்டதும் இந்த சிக்னலில் வண்டி நிற்கையில் எடுத்த போட்டோ.
இங்கு ஆஃபீஸில் மின் தடைக்கு நடுவே தான் வேலையே நடக்கிறது.கம்ப்யூட்டர்கள் யூபிஎஸ்ஸில் இணைக்கப்பட்டிருந்தாலும் விளக்குகள், ஏசி போன்றவை ஜெனரேட்டர் இணைப்பில் தான் உள்ளது.பாவம் ஜெனரேட்டர் இயக்கும் கட்டிட வாட்ச்மேன்,மின்சாரம் வந்துவிட்டதே என்று ஜெனரேட்டரை நிறுத்தியவுடனே மீண்டும் மின்சாரம் தடைபடுகிறது,மின்சார தடைக்கு நடுவே தான் அலுவலகத்துக்கு மின்சாரமே வழங்கப்படுகிறது.
தி.நகர்,ஆலையம்மன் கோவிலுக்கு அடுத்த காம்பவுண்டில் இந்த கண்டெம்பரியான அரசு அலௌவலகத்தை பார்த்தவுடன் ஆச்சர்யத்தில் உறைந்தேன்,அதுவும் தகவல் உரிமை சட்ட அலுவலகத்துக்கான கட்டிடத்துக்கு தான் இப்படி,கார்பொரேட் லுக்கில் ஆஃபீஸ் கட்டியிருக்கிறார்கள்,போட்டோவை க்ளிக் செய்து பாருங்கள். ஆஃபீஸ் விட்டதும் இந்த சிக்னலில் வண்டி நிற்கையில் எடுத்த போட்டோ.
![]() |
| தகவல் உரிமை சட்ட அலுவலகம் |
======000000======




13 கருத்துரைகள்:
எப்படி இருக்கீங்க? நலமா?
மிஸ்டு கால்தானே கொடுப்போம்!!:-)))
தல.. சொல்றேன்னு தப்பா எடுக்காதீங்க.
சாமீ எங்கயும் போகாது. எப்பவும்.. தான் இருக்கற இடத்துலயே இருந்துகிட்டு வசூல் எவ்ளோ ஆச்சின்னு கணக்கு போட்டுகிட்டேதான் இருக்கும்.
இப்ப உங்களுக்குத் தேவை.. சேமிப்பு.
@எஸ்கே,
நண்பா,நலமா?உங்கள் மொபைல் நம்பரை எனக்கு அனுப்புங்க,இல்லாட்டி எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்க,ஒரு நாள் வந்து பார்க்கிறேன்.
டேக்கேர் நண்பா.
@எலிக்குஞ்சு
தல,
நாங்க மட்டும் லேசுப்பட்ட ஆளா,1000 போட்டு லட்சத்தை கேக்கும் ஆளுன்னு அவருக்கு தெரியாதா?!!!
ஆயிரம்னா.. $25 டாலர். அய்யோ.. அய்யோ.. அய்யோ..அய்யோ.. அய்யோ..!!
தல... அப்புறம் எங்காபீஜுலயும் ரெவிட்’தான். ஆட்டோகேடை விட அட்டகாசமா இருக்கும்னு எங்க டிஸைனர் சொல்லுவார்.
புதிய வேலை...புதிய சாப்ட்வேர்...புதிய அனுபவமாக இருக்கும்...வாழ்த்துக்கள்.
தாங்கள் பதிவெழுத சென்னை ஏராளமான விசயங்களை தாராளமாக வழங்கும்.
எங்களை மேலும் விசாலப்படுத்தும் அனுபவமாக அமைய காத்திருக்கிறேன்.
'ஒரு பைசாகூட செங்கல் விலை குறையவே இல்லை!''
ஜெயலலிதாவிடம் சொன்னது என்ன ஆச்சு?
முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை காரணமாக, செங்கல், ஜல்லி விலைகள் மளமளவென்று குறைவதாகச் செய்திகள் வந்தன. ஆனால், ''விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவே இல்லை. மணல் உட்பட அனைத்துக் கட்டுமானப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் பழைய மணல் மாஃபியாக்கள்தான் மீண்டும் விஸ்வரும் எடுத்து இருக்கிறார்கள்!'' என்கிறார்கள் கட்டுமானத் தொழிலில் இருப்பவர்கள்.
''கடந்த ஆட்சியில் ஒரு லோடு மணல் சுமார் 18,000 வரை விற்றார்கள். கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமியும், தென் மாவட்டத்து காங்கிரஸ் பிரமுகரான படிக்காசுவும்தான் பெரும் லாபம் அடைந்தார்கள். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் நிலைமை மாறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், மொத்தம் இருக்கும் 183 மணல் குவாரிகளில், சென்னை, திருவள்ளூர், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 80 குவாரிகளை கோவைப் பிரமுகருக்கே மீண்டும் தாரை வார்த்துவிட்டார்கள். தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குவாரிகள், மன்னார்குடி உறவு மூலம் ஒருவருக்கு கை மாறி இருக்கிறது. இவர் தொழிலுக்கு புதுசு என்பதால் கட்டி மேய்க்க முடியவில்லை. இதனால், ஏற்கெனவே தென் மாவட்டங்களில் கோலோச்சிய ஒருவருக்கே, அவை மீண்டும் தரப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கடந்த ஆட்சியில் இவர்கள் அனைவரும் அழகிரியின் நிழல் நபராக இருந்தவருக்கு, மாதம் 50 லட்சம் கப்பம் கட்டினார்கள். இப்போது கப்பம் திசை திரும்பி மன்னார்குடிக்குச் செல்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம்!'' என்று இந்த மணல் தொழிலில் வலம் வரும் மனிதர்கள் சொல்கிறார்கள். 'ஆட்சி மாறியது. காட்சி மாறவில்லை’ கதைதான் மணல் விஷயத்தில்!
இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள லாரி உரிமையாளர்களிடம் பேசினோம். ''மணல் ஒரு லோடுக்கு 627 கட்டணம் செலுத்த வேண்டியதற்குப் பதிலாக, தென் மாவட்டக் குவாரிகளில் 1,500-ம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் குவாரிகளில் 2,500-ம், திருச்சி குவாரிகளில் 3,500-ம் வசூல் செய்கிறார்கள். 10 குவாரிகளில் ஏழு குவாரிகளை மூடிவிட்டு செயற்கையான மணல் தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை உயர்த்துகிறார்கள். இதனால், லாரி டீசல் செலவு, சுங்க வரி, டிரைவர் பேட்டா, லோடு மேன் கூலி, ஊர்க் காசு என்றே 10,000 வரை செலவு ஆகிறது. இதனால் ஒரு லோடு மணலை 13,000-க்குக் குறைவாக விற்க முடியாது'' என்கிறார்கள்.
மணல் அள்ளுவதிலும் ஏகப்பட்ட விதிமுறை மீறல்கள். ஆற்றில் நிர்ணயம் செய்த இடத்தில், அதுவும் மூன்று அடி ஆழம் வரை மட்டுமே மணல் அள்ள வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி.
கரையின் இரு புறமும் 60 அடி தள்ளித்தான் மணல் அள்ள வேண்டும். ராட்சத இயந்திரங்களைக்கொண்டு அள்ளக் கூடாது. ஆற்றின் குறுக்கே தரைப் பாலம், மேம்பாலம் இருந்தால், அங்கே இருந்து 100 அடி தள்ளி மணல் அள்ள வேண்டும். குடிநீர் தண்ணீர் கிணறு இருந்தாலும், அதைச் சுற்றி ஒரு கி.மீ. தொலைவுக்கு மணல் அள்ளக் கூடாது. ஆனால், இதுபோன்ற விதிமுறைகள் எதுவுமே கண்டுகொள்ளப்படுவது இல்லை. காரணம், எந்த ஆட்சி வந்தாலும் வருவாய்த் துறை, கனிம வளத் துறை மற்றும் போலீஸாரை மணல் மாஃபியாக்கள் செமத்தியாகக் கவனித்துவிடுகின்றன.
அடுத்து செங்கல், ஜல்லி விவகாரம். முதல்வர் ஜெயலலிதா சொன்னதால், செங்கல் ஒரு லோடுக்கு 3,000, ஜல்லி ஒரு லோடுக்கு 700 குறைத்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், கட்டுமானத் தொழில் செய்பவரான ராமமூர்த்தியோ, ''நேத்துகூட ஒரு லோடு செங்கல் வாங்கினோம். கல்லுக்கு ஒரு ரூபாய்கூட குறையலை. மூணு வருஷம் முன்னாடி 3,000 செங்கல்கொண்ட ஒரு லோடு செங்கல் 6,000. இன்றைக்கு 21,000. 4,000-க்கு வித்த ஒரு லோடு ஜல்லி இன்னைக்கு 5,500.
செங்கல் சூளை, கல் குவாரி, சிமென்ட் இந்த மூணு விஷயத்துலயும் அரசியல் இருக்குது. உள்ளூர் அரசியல்வாதிகளுக்குக் கப்பம் கட்டாமல் செங்கல் சூளை நடத்த முடியாது. குவாரி நடத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட லஞ்சத் தொகையைக் கேட்டு, குவாரி அதிபர்களே குலை நடுங்கிப்போய் இருக்கிறார்கள். சிமென்ட் முதலாளிகளின் கூட்டணியால், ஆந்திராவில் 165-க்கு விற்கும் ஒரு மூட்டை சிமென்ட் இங்கு 300-க்கு விற்கப்படுகிறது. இவை தவிர, கிராவல் மண், கம்பி, பெயின்ட், பிளைவுட், மின்சார ஒயர்கள், ஆட்கள் கூலி எல்லாமே பல மடங்கு எகிறிப்போயிடுச்சு. நிலைமை இப்படியே நீடித்தால், ஒட்டுமொத்தக் கட்டுமானத் தொழிலும் படுத்துடும்!'' என்கிறார் கவலையுடன்.
மத்தியப் பொதுப் பணித் துறை அதிகாரியும் சென்னை மாநகரத் தொழில் சங்கங்களின் பிரசாரக் குழுப் பொதுச் செயலாளருமான பாஸ்கரிடம் பேசினோம். ''மணல் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா நேரடியாகத் தலையிட்டு நியாயமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். மணல் குவாரிகளில் வெளிப்படையான ஏலம் நடக்க வேண்டும். மணல் தேவை எவ்வளவு என்பதை கட்டுமானத் தொழில் சங்கங்கள் உதவியுடன் கணக்கு எடுத்து அதற்கு ஏற்ப குவாரிகளைத் திறக்க வேண்டும். மணலுக்கு மாற்றாக கருங்கல் குவாரிகளின் கழிவு மண்ணையும் பயன்படுத்தலாம். அனல் மின் நிலையங்களில் கழிவுப் பொருளாகக்கிடக்கும் கறுப்பு துகளைப் பயன்படுத்தி செங்கல் தயாரிக்கலாம். சமீபத்தில், சென்னை விருகம்பாக்கத்தில் இப்படி தயாரிக்கப்பட்ட செங்கல்லைக் கொண்டுதான் பெரிய ஷாப்பிங் மால் கட்டி இருக்கிறார்கள்!'' என்றார்.
எந்த ஆட்சி வந்தாலும், மணல் கொள்ளைக்கு மட்டும் விடிவே வராதா?
அக்கறைச் சீமை என்ற பிளாகை சில நாட்கள் முன்தான் பார்த்தேன். அந்த பிளாகின் ஆசிரியர் hollywood bala என்று போட்டுள்ளது. அந்த பிளாகை கூகிள் ரீடரில் ஆட் செய்தேன். அதன் பின் பார்த்தால் அப்பிளாகின் கட்டுரைகளின் தலைப்புகளுக்கு கீழ் கீதப்பிரியன் என்று போட்டுள்ளது. அக்கரைச்சீமை கட்டுரைகளை எழுதுவது நீங்களா ஹாலிவிட் பாலா என்ற மனிதரா? அவருக்கு தற்போது உடல் நலமில்லாமல் போய் விட்டதா? அவர் தற்போது ஏன் எழுதுவதில்லை??...d...
//அவருக்கு தற்போது உடல் நலமில்லாமல் போய் விட்டதா?//
அவர் மண்டையை போட்டு மாதம் நான்காகிறது அய்யா.
@பிதாமகன்
Shall i know about hollywood bala? what was his age when he died? how did he die? I don't know whom to ask this...
I like him...I'm reading his pixar essays in google document...
@d
நண்பா,
ஹாலிவுட் பாலா தான் பிதாமகன் என்னும் பேரில் கமெண்ட் போட்டது,அவர் குத்துகல்லு போல இருக்கார்.கவலை வேண்டாம்.
அவருக்கு 40 வயது தான் ஆகிறது.
அவரை கூகிள் பிளஸ்ஸில் பாலமுருகன் சோமசுந்திரம் என்னும் பேரில் பார்க்கலாம்,அவரிடம் வீடியோ ஹாங் அவுட் செய்யலாம்.குட்லக்
என்னக் கொடுமை கீதப்ப்ரியன் இது? 40 வயசா? உங்க வாய்ல கொள்ளிக்கட்டையை வைக்க.
கருத்துரையிடுக