பி.ஏ.பாஸ் [B.A. Pass ] [बीए पास][2013][18+]


பி ஏ பாஸ், மோஹன் சிக்கா எழுதிய  ரயில்வே ஆண்டி என்னும் நெடுங்கதையை அப்படியே சாரம் கெடாமல் தழுவி வெளியான நியோ நுவார் வகை இந்திப்  படம், டாரண்டில் சப்டைட்டிலுடன் கிடைக்கிறது, Ajay Bahl-ன் சற்றும் தொய்வற்ற இயக்கமும்  ஒப்பற்ற ஒளிப்பதிவும் படத்துக்கு இரு கண்கள், ஒரு நல்ல சிறுகதையை இவர் அளவுக்கு யாரும் இம்மி பிசகாமல் தழுவி நான் பார்த்ததேயில்லை, கதையில் வரும் வர்ணனைகள், சித்தரிப்புகள் அப்படியே படத்திலும் வருகிறது, 

நிகழ்கால தில்லியில் நடக்கும் மிகவும் யதார்த்தமான ஒரு படம், நாம் இங்கே அனுதினமும் சாலை விபத்துக்களில் குடும்பத்தினர் முழுமையாகவோ பாதியாகவோ  உயிரிழக்கும் கதைகளை கண்டும் கேட்டும் இருப்போம் [உதாரணத்திற்கு ராமேஸ்வரத்துக்கு தீர்த்தயாத்திரைக்கு  சாலை மார்க்கமாக வந்து கார் விபத்துக்குள்ளாகி இறந்து போன எத்தனையோ கதைகளை அறிவேன்]

 அந்த கோர விபத்துக்குப் பின்னர் ஒரு குடும்பம் எப்படி சின்னா பின்னமாகிறது? உயிர் நீத்தாரின் குழந்தைகள்,அவரது உறவினர்களால் எப்படி பந்தாடப்படுகின்றனர்?,சமுதாயத்தில் பருவ வயதில் ஆண்,பெண் குழந்தைகளை ஒரு நல்ல நிலைக்கு வளர்த்து கொண்டு வருவது எத்தனை பெரிய  அசகாய சாதனை? எனப் புரியும்.

பதின்ம வயது குழந்தைகளை சூறையாட சமூகத்தில் எததனை கோரமான இன்செஸ்டுகள், பீடோஃபைல்கள் காத்துக்கொண்டுள்ளனர் ,என்பதும்  நிதர்சனமாகப் புரியும். ஆகவே வாகனப் பயணத்திலும் , வாழ்க்கைப் பயணத்திலும்  ஒருவரின் அவசரமான  ,ஆவேசமான முடிவுகளிலிருந்தும் ஒருவரை  மிகவும் கவனமாக இருக்க வைக்கும் படம்.

ஜானி என்னும் சவப்பெட்டி தொழிலாளியின் பாத்திரத்தை மூலக்கதையில் ஹோமோசெக்சுவலாக சித்தரித்திருந்தார் மோஹன் சிக்கா,இயக்குனர் படத்தில் அவரை ஸ்ட்ரெய்ட்டாக சித்தரித்திருக்கிறார், பஞ்சாப்பில் அனாதைகள் பள்ளியில் படிக்கும் நாயகன் முகேஷின்  இரு சகோதரிகளும், அங்கு பள்ளியின் வார்டன் ஒரு லெஸ்பியனாக இருப்பதால் தாக்கு பிடிக்க முடியாமல்,சகோதரனிடம்  தஞ்சம் தேடி பஞ்சாபிலிருந்து தில்லிக்கு பஸ்ஸில் தப்பி வருவர்,அது மோஹன் சிக்காவின் மூலக்கதையில் இல்லை,படத்தின் க்ரிஸ்பான ஓட்டத்துக்கும் , ட்விஸ்டுக்கும் வேண்டி அந்த  முடிவை மட்டும் சிறிது மாற்றியிருந்தார் இயக்குனர்,கொஞ்சம் பிசகியிருந்தாலும் இது ஒரு மலையாள பிட்டுப் பட ரேஞ்சுக்கு மாறியிருக்க வேண்டியது,

இயக்குனரின் உலகத்தரமான ரசனை, ஆக்கத்திறன், படத்தில் அலோக்நந்தா தாஸ் குப்தா [அமித் த்ரிவேதியின் மானசீக சிஷ்யை] வின் பிண்ணனி இசை சேர்ப்பு,நடிகர்களில் சரிகா ஆண்டியாக தோன்றிய ஷில்பா ஷுக்லா,ராஜேஷ் ஷர்மா, முகேஷாக தோன்றிய ஷதப் கமல், ஜானியாக தோன்றிய திப்யேந்து பட்டாச்சார்யா போன்றோரின் ஒப்பற்ற நடிப்பு இவை  எல்லாம் சேர்ந்து படத்துக்கு கல்ட் அந்தஸ்தை  தந்துள்ளது,

படம் பற்றி நான் இங்கே மேலும் எழுதுவதை விட மோஹன் சிக்காவின் கதையை ஆங்கிலத்தில் ஒருவர் படித்துவிட்டு,அதற்கு சரவணனின் அற்புதமான தமிழாக்கத்தையும் படிப்பதே சிறப்பாக இருக்கும்,படத்தை உங்கள் விருப்பப்படி கதை படிக்கும் முன்னரோ பின்னரோ பாருங்கள்,

இந்த படம் வயதுவந்தோர் அனைவருமே அவசியம் பார்க்க வேண்டும் , இந்தியாவில் முதன் முதலாக வந்த ஜிகிலோவின் கதை இதுவாகத் தான் இருக்க வேண்டும் , அதை ஆபாசம் இன்றி எடுத்த விதத்தில் இதை  இலக்கியத் தரத்திற்கு உயர்த்தியிருக்கிறார் இயக்குனர் .  டோன்ட் மிஸ் இட்!!! ...

நான் தமிழில் சமீபத்தில் படித்த மிகச்சிறப்பான ப்ரொஃபெஷனலான தமிழாக்கம்    இதன் ஆங்கில மூலம் இங்கே

இந்த படம் பார்க்காவிட்டாலும் அந்த மொழிபெயர்ப்பு கதையை படித்து முடிந்தால் சரவணனுக்கு ஊக்கம் கொடுங்கள் ,

படத்தின் ட்ரெய்லர் யூட்யூபில் இருந்து