பரதேசி [Paradesi ] [2013] [இந்தியா]


தொடர்ந்து தமிழின் நம்பிக்கை இயக்குனர்கள் காலிபெருங்காய டப்பாக்களாக மாறிவரும் காலகட்டத்தில் பாலா அவன் இவனில் இருந்து மீண்டு வந்திருக்கிறார் , அவன் இவனில் வாழ்ந்துகெட்ட ஜமீன்,அம்பிகா, அவரின் சக்களத்தி என அந்த  சில பாத்திரங்கள் மட்டும் நிஜமானதாக இருக்கும், ஆனால் மற்ற பாத்திரங்கள் மிகுந்த செயற்கையாக இருக்கும் அதனாலேயே அப்படம் பாலாவின் படமாக இல்லை , தமிழ் சினிமா வரலாற்றின் முக்கிய முயற்சியுடன் பாலா குறைந்த நாட்களில் ,சொந்தத் தயாரிப்பில் பரதேசியை உலக சினிமாவாகத் தந்திருக்கிறார் .

தமிழர்கள் எவ்வளவு இம்பீரியலிஸ்டாக வாழ்ந்திருக்கிறார்கள் என நாலடியார் பாடலை மேற்கோள் காட்டி , தமிழன் தென் கிழக்கே ஜாவா, கம்போடியா, இண்டோநேசியா,பாலி என எல்லை தாண்டி சென்று நாடுபிடித்ததை சாரு அகம் புறம் என்னும் இக்கட்டுரையில் எழுதியிருந்தார், அதன் பின்னர் சுமார் 600 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழனுக்கு என்ன நேர்ந்தது?!!! , எப்படிப் பொறுக்கி பரங்கியப் பயல்கள் நம்மை வீட்டு விலங்குகளாக அடிமைத்தளையில் சிக்க வைத்திருக்க முடியும்?!!!, என்ன ஒரு முரண் பாருங்கள்? 

பரங்கியப்பயல்கள் உப்புக்கு விதித்த கட்டுப்பாட்டால் செத்து மடிந்த ஒரு தலைமுறையை வைத்து நூறு படம் இயக்க முடியும், 1803முதல் 1930கள் வரையான மேற்கே பஞ்சாப் துவங்கி ஒரிஸ்ஸா வரை 4000 கிலோமீட்டருக்கு உப்பு வேலி அமைத்து தங்கத்தின் மீதான இறக்குமதி வரி வாட் வரி போல  இந்தியர் வாழ்வின் இன்றியமையாத உப்புக்கும் வரி போட்டு, கடும் உழைப்பால் வெளியேறும் வியர்வையால் அனுதினம் அயோடின் இழக்கும் உழைப்பாளிகள், உப்பு வாங்கிட வக்கின்றி செத்து மடிந்த துயரக்கதைகள் எத்தனை எத்தனை?!!!

அதுபோன்றே இன்னொரு துயரவரலாறான தேயிலை தோட்ட அடிமைத்தளையை உலகுக்குச் சொன்ன இப்படத்தை தமிழ் சினிமாவில் பதிவு செய்தமைக்கும், தமிழ் சினிமாவின் அரிய பாங்கான இலக்கியத்தை அடுத்தடுத்து சினிமாவா எடுத்து வருவதற்கும் பாலாவுக்கு சிறப்பு நன்றிகள்.

படம்  பி.ஹெச்.டேனியல் எழுதிய ரெட் டீ [தமிழில்-எரியும் பனிக்காடு] என்னும் நாவலையும் எடலக்குடி ராசா என்னும் நாஞ்சில் நாடனின் சிறுகதையையும் வைத்து உருவாக்கப்பட்டதாக படித்தேன்.உலகத்தரமான டார்க்ஹ்யூமர் வசனங்கள் நாஞ்சில் நாடன் எழுதியவை,ஆனால் படத்தில் வரும் ஆங்கில துரை,கங்கானி பாத்திரம்  கிருத்துவ மத மாற்றம் மற்றும் பகடிக்காட்சிகள் போன்றவை ஜெமோவின் ஊமைச்செந்நாய் ,காடு நாவல் எல்லாம் சேர்த்து கலந்து செய்யப்பட்டிருக்கிறது.

 அல்லது எனக்கு படம் பார்க்கையில் அதன் தாக்கம் உணர முடிந்தது, வழமையான பாலாவின் க்ளிஷே இல்லாமலும் இல்லை, இசைஞானி இல்லாத பாலா இனி அரைக்கிணறு தான், ஊனை உருக்கும் இசையை வேறு யாரால் தரமுடியும், என்பதை இந்நேரம் பாலா உணர்ந்திருப்பார். இசைஞானியின் குரலில் இளவல் கங்கை அமரன் ஒரு பாடலை பாடி தன்னளவில் முயன்றிருக்கிறார், ஆயினும் அந்த காந்தக்குரலுக்கு மாற்று ஏது?!!! பாலா அமைத்திருந்த இப்படத்தின்  க்ளைமாக்ஸ் அவர் ரசிகர்களுக்கு புதியது. 

இரண்டாம் உலகப்போர் துவங்கி முடியும் ஆண்டு வரையான டைம்லைன். ஆனால் எங்கும் போரின் சுவடே இல்லை என்பது குறை, வசனங்களூடாகவேனும் உணர்த்தியிருந்தால் படம் டீடெய்லிங்கில் ஒரு படி உயர்ந்திருக்கும். ஆனால் படத்தில் விஷக்காய்ச்சல் தீவிரம் மட்டும் சற்று உணர்ந்தேன்.  கிராம மக்கள் விவசாயமின்றி வாடுவதாக வசனத்தில் மட்டுமே வருகிறது,காட்சிப்படுத்தியிருந்தால் இவர்கள் பஞ்சம் பிழைக்க போவதை ஏற்றுக்கொண்டிருக்கலாம். காடு நாவலில் விஷக்காய்ச்சல் தீவிரம் உணர்த்தப்பட்டிருக்கும்,படிக்கையில் நாமும் அங்கே விஷக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருப்போம், அதர்வா ராசாவாக மிக நன்றாக நடித்திருக்கிறார், இவரின் தலைமுறை இனி இவரை வியந்து பார்க்கும்,பாலா படத்தில் எக்ஸ்ட்ராடினரி ஹீரோயிசம் தரப்படாத ஒரே நடிகர் அதர்வாவாகத்தான் இருப்பார்.

படத்தில் இவர் தப்பித்து செல்லும் காட்சிகளில் இயக்குனர் பாலாவுக்கு திருப்தியாக வரும் வரை சுமார் 20 முறையேனும் விழுந்திருப்பார் போல, அதிலும் படத்தின் கடைசிக்காட்சியில் விழுந்தபின்னர் புறப்படும் அந்த அழுகை எல்லாம் உண்மையிலேயே உடம்பில் அப்படி அடிபட்டால் மட்டுமே அப்படி வேதனையில் கேவமுடியும். இவருக்கு பாலிடிக்ஸ் ஏதும் இல்லாவிட்டால் தேசிய விருது கிடைக்க வாய்ப்புகள் பிரகாசம். படத்தில் துவக்க காட்சியில் இவர் தோன்றும் அந்த தண்டோரா காட்சி சுமார் 15 நிமிடம் நீளுகிறது, அதிலேயே அந்த கிராமத்தின் சூழலும், இவரின் உறவுகளும் நமக்கு அறிமுகமாகின்றனர். அவரின் அப்பா முரளி போல நல்ல நடிகராக வருவார். 

படத்தின் கதையை நான் சொல்ல விரும்பவில்லை, அது படம் பார்க்க இருக்கும் ரசிகர்களுக்கு ஸ்பாய்லராக இருக்கும். போலி டாக்டர் குரிசுவாக வரும் சுப்ரமணியபுரத்தின் சவுண்ட் சர்வீஸ் சித்தன் தூளாக செய்திருக்கிறார், அதர்வாவின் பாட்டி தூள், ஒருசில காட்சிகளில் நல்ல டார்க் ஹ்யூமர் வசனங்களும் உண்டு,படம் ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்,ஆனால்ரொம்ப எதிர்ப்பார்ப்பும் கூடாது, அரவான் வசந்தபாலனின் டீடெய்லிங் லெவலில் படம் இல்லாதது எனக்கு குறையே. லைட் ஹார்ட்டட் கார்பொரேட் ரசிகளுக்கு இப்படம் பிடிக்குமா? என்றால் டவுட் தான். ஆனால் உலகசினிமா ரசிகர்கள் நிச்சயம் குறைகளை மறந்து எற்றுக்கொள்வார்கள்.

தமிழின் முக்கியமான முயற்சி இது, எரியும் பனிக்காடு நாவலை நான் இன்னும் படிக்கவில்லை, படம் பார்த்த பின்  நிச்சயம் படிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது, செழியனின் இருள் காட்சிகள் பொன்னோவியம், இதற்கு முன்னர் ஆடுகளம் படத்தில் இதே போல வேல்ராஜ் இருளுக்கு ஒளியமைத்திருந்தார், படத்தின் முற்பாதி முழுக்க சேபியா டோனிலும், பிற்பாதியில் பசுமை கலந்த டோனும்,நேர்த்தியான ஜிம்மி ஜிப் ஷாட்டுகளும் மிக அருமை. ஆர்ட் டைரக்‌ஷன்  டீடெய்லிங் லெவல் பப்படக்கட்டிலும் குரிசுவின் ஒற்றைக்கண்ணாடியிலும்,கங்காணியின் உடை, வெள்ளைக்கார துரை உடையிலும் மட்டுமே உணர முடிந்தது.

இசை அமைத்த ஜிவி பிரகாஷ்குமார் பிண்ணணி சத்தம் தேவையே இல்லாத இடங்களில் கூட ஒரே சத்தம், லிட்ரலாக டேய் நிறுத்துடா என ரசிகர்களை கத்த வைக்கிறார்.  செம கடுப்பான தருணம் அது,  இவருக்கு  சீப் ரேட் ஆதலால், நல்ல பல உலகசினிமா வாய்ப்புகள் இவரிடம் கிடைத்தும் அதை ஓவர் குக்,அல்லது அண்டர் குக்காக சமைத்து வைக்கிறார்  எனத் தெரிகிறது.

இன்னும் மெச்சூரிட்டி லெவல் வேண்டும். அதுவரை இவர் மசாலா படங்களிலேயே கவனம் செலுத்தினால் நமக்கு நல்ல படைப்பானுவம் மிஞ்சும், பழசிராஜா படத்தில் இசைஞானியின் இசையை ஒருவர் அனுபவிக்க வேண்டும், எத்தனை வீர்யம் மிகுந்தது தெரியுமா?  அது படத்தின் ஒவ்வொரு தீமுக்கும் ஏற்றாற் போல வித்தியாசங்கள் கையாளப்பட்டிருக்கும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாஸ் ஆடியன்ஸ் வசம் அப்படம் செல்லவில்லை.

பிதாமகனில் அந்த கஞ்சா காட்டை காட்டுகையில் ஒரு தீம், சித்தனுக்கு ஒரு தீம், அநாதைகளின் ஒன்று கூடலுக்கும் மகிழ்ச்சியான காட்சிகளுக்கும் ஒரு தீம். என அப்படி ஒரு அற்பணிப்பை தந்திருப்பார் இசைஞானி.அப்படத்தில் உள்ள கஞ்சா தோப்பும் அதன் வளர்ப்புமுறையும், அதை கடத்தும் பாதையும், அதன் சிரமங்களும் அத்தனை டீடெய்லாக ஆர்ட் டைரக்டரால் கையாளப்பட்டிருக்கும். அந்த வாசுதேவன் செல்லும் டோலி காட்சியும், கழுதைகள் மீது ஏற்றப்பட்ட மூங்கில் பொதிகளுடன் பயணிக்கும் கஞ்சா தோப்பு  பணியாளர்களும், காவலுக்கு ஆற்றின் நீரில் நீந்தி வருகின்ற கோம்பை ரக நாய்கள் என அப்படி ஒரு டீட்டெயிலிங் இருக்கும். இதில் அதெல்லாம் எதிர்பார்த்து போனால்...........

படத்தின் நீளம் 2மணிநேரம் தான், ஏன் பாலா இப்படி நகம் வெட்டுவது போல வெட்டி எடிட்டிங் செய்தார் எனப் புரியவில்லை, வைரமுத்துவின் ரத்தத்தால் எழுதிய வரிகள் மிக அருமை, இசையும் குரலும் அதற்கு இடையூறாக இருந்தது சத்தியம். இடைவேளைக்கு பின்னர் தான் படத்தின் ஜீவனான தேயிலை தோட்டத்துக்குள்ளேயே நாம் நுழைகிறோம்,வேதிகா சொல்ல ஒன்றுமில்லை, தனிஷ்கா டல்மேக்கப்பிலும் மிளிர்கிறார், நல்ல பெர்ஃபார்மன்ஸ், இருவருக்கும் உள்ளே பிதாமகன் சித்தனுக்கும் கஞ்சா கோமதிக்கும் நிகழுமே அந்த பாசப் பிணைப்பு அதை உணர்ந்தேன், அது இன்னும் கூட நீண்டிருக்கலாம், கடல்,டேவிட்,தொடர்ந்து இந்தப் படத்தில் கிருஸ்துவர்கள் மீதான் பகடி தொடர்கிறது, இது அகஸ்மாத்தாக நிகழ்ந்ததா?,காடு கதையில் வருவதால் அதுபோலவே இப்படத்திலும் வலிய திணிக்கப்பட்டதா? தெரியவில்லை!!!. 

காடு நாவலில் இதுபோல பைபிளையும், போதனையும், மதமாற்றத்தையும் குறிவைத்து பொட்டில் அடித்தால் போல பகடி இருக்கும், அதே போல இங்கும் ரோம் நகரமே பற்றி எரிகையில் நீரோ பிடில் வாசித்ததற்கு இணையாக வரும் அந்த டாக்டர் பரிசுத்தம் பாடும் தன்னைத்தானே என்னும் பாடல் உண்டு, ஆனால் அந்த பாடல் படமாக்கியது செயற்கையாக உள்ளதை உணர்ந்தேன். 

கங்காணிக்கும் துரைக்கும் நிகழும் அந்த ஆண்டான் அடிமை கெமிஸ்ட்ரியை நான் ஊமைச்செந்நாயில் படித்திருக்கிறேன், எங்குமே விலைபோகாத மூளையை கொண்டிருக்கும் அற்ப துரைமார்கள் தான் இங்கே இந்தியாவுக்கு கம்பெனி ஆட்களாக வந்தனர் என நான் படித்திருக்கிறேன், இதில் ஒரு வசனமாக துரையம்மாவின் உடம்பு சூட்டுக்கு நீயெல்லாம் தாக்கு பிடிப்பாயா? என ஒரு பகடி உண்டு, ஆக துரைகள் இங்கே வந்த இடத்தில் கிடைத்த கொத்தடிமைகளை புணர்ந்தால், துரையம்மாக்கள் அவர்கள் பங்குக்கு அடிமைகளைக் கூடியதை உணரமுடிகிறது,

ராசாவின் பெரியப்பாவாக வரும் விக்ரமாதித்யனுக்கு எத்தனை மனைவி என்று அவருக்கே தெரியாதாம், அவளுடன் இப்போது குடும்பம் நடத்துபவளுக்கும் தெரியாதாம், ஆனால் அவரின் புடுக்கு [மந்திரி] மட்டுமே அறியும் என்னும் லஜ்ஜையில்லாத வசனங்கள் தமிழ் சினிமாவில் முதல் முயற்சி, கிராவின் எழுத்துச் சாயல் கிராமவாசிகளின் வெள்ளந்தி விகல்பமில்லாத வசனங்களில் நன்கு தெரிகிறது.ஆக இலக்கியவாதிகளின் கலம்பமாக இப்படம் மிளிர்கிறது.

அடிமை மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை கூலி தரும் ஒரு சம்பவம் படத்தில் வரும்,நிச்சயம் நாடி நரம்புகளை முறுக்கேற்றி வீறு கொண்டெழ வைக்கும் காட்சி அது,அடிமையாக இருப்பவன் அவன் உடம்பில் உழைக்கும் வலு இருக்கும் வரை ஒரு போதும் தன் ஊர் திரும்ப இயலாது என்பதை உணர்த்தியிருப்பர்,அடிமைகளின் நம்பிக்கைக்கு ஏற்றார் போல நோய்க்கு மருந்து தர ஒருவன்,மந்திரித்து தாயத்து கட்ட ஒருவன்,ஆக இரண்டு வித வைத்தியத்துக்கும் காசு அவனின் கணக்கிலேயே அடித்துப் பிடுங்கப்படுவதை நாம் கண்ணுறுகிறோம்.

கங்காணியாக புதுமுகம் ஜெர்ரி, பிதாமகன் வாசுதேவன் போல இவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு, இவர் தேயிலை தோட்ட கொத்தடிமையின் மனைவி ஒருத்திக்கு மிகுந்த மன உளைச்சலையும் மூளைச்சலவையையும் தந்து அவளை துரைக்கு கூட்டிக்கொடுக்கும் காட்சிகள் ஜெமோவின் ஊமைச்செந்நாய் நாவலை எனக்கு நினைவூட்டியது, அதில் கொத்தடிமைப் பெண்களின் வாழ்வியல் மிகுந்த வலியுடன் சொல்லப்பட்டிருக்கும். 

எயிட்ஸ் நோய் என்று ஆங்கிலப் பெயரிடப்படாத அந்த காலக்கட்டத்தில் இது போல பொறுக்கி துரைமார்களால் பெண்டாளப்பட்டு ஏப்பு நோய்க்கும், மேக நோய்க்கும் ஆளான கதையின் வலிகள், அத்தனை வீர்யமாக இதில் சொல்லப்படவில்லை, இதில் ஒரு காட்சியில் துரை எப்போது வருவான்? என அங்கே நன்கு சீசன் செய்யப்பட்ட துரையின் வைப்பிடம், கங்காணியும் அவனது ஆட்களும் கேட்டு தெரிந்துகொள்கின்றனர், மானை சிங்கம் சாப்பிடும், பின்னர் ஓநாய் ,பின்னர் நரிகள்,போன்றே அடிமைப்பெண்கள் பெண்டாளப்பட்டனர், காடு நாவலில் இதுபோல கண்க்காணிகளின் அடக்குமுறை வீர்யம் இருக்காது, ஆனால் விஷக்காய்ச்சல் தீவிரம் உணர்த்தப்பட்டிருக்கும், மருந்து இல்லா திண்டாட்டம் உணரத்தப்பட்டிருக்கும்.

படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் மிக அருமையான சார்க்கோல் ரெண்டரிங்  ஸ்டோரி போர்டுகள் தயாரிக்கப்பட்டு படமாக்கியிருக்கின்றனர், அவை படத்தின் பெயர் போடும் காட்சியில் பிண்ணணியில் வருகின்றன.  மிக அருமையான டீடெய்ல்டு ஸ்டோரி போர்டுகள் அவை.

பாலாவின் டைஹார்ட் ரசிகர்களை ஏமாற்றாத படம்.படத்துக்கு பட்ஜெட் 36.5 கோடி என சொல்வது நம்புவது போல இல்லை,ஒருவேளை பாலா அந்த 5 ஏக்கர் டீஎஸ்டேட்டையே விலைக்கு வாங்கி படமெடுத்தார்  என ஸ்கூப் நியூஸில் படித்தேன், அந்த விலையையும் சேர்த்தா? 36.5கோடிகள்? யார் விளக்குவார்?!!!
பரதேசி படத்தின் டீசரில் டம்மி கொம்பால் அடிமைகளை அடித்து வெளுத்து வாங்கும் பாலாவின் மீது நான் முன் வைத்த கருத்துக்களில் எந்த மாற்றமும் இல்லை. அது உண்மையாக இருந்தால் சிக்.நிச்சயம் கண்டிக்கத்தகுந்தது.

படத்தின் படமாக்கத்தின் போதான டீசர் காணொளி (நன்றி விக்கீப்பீடியா, யூட்யூப், கூகுள்)

டெல்லி பெல்லி [Delhi Belly][18+][2011]


டெல்லி பெல்லி படத்தை தமிழில் எடுக்கப்போவதாக கேட்ட உடனே, இதென்ன டெல்லிக்கு வந்த சோதனை? என்றிருந்தது,படத்தை கொத்துகறி போட்டு கந்திரகோலம் செய்து விடுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை, இது வழமையான பாலிவுட்டின் திருட்டு மசாலா படம் இல்லை, தனித்துவமான டார்க் காமெடி ஜானர் படம்,அபூர்வமாக வரும் வகை. படத்தை தமிழில் ஒரிஜினாலிட்டியுடன்  இயக்க எந்தக் கொம்பனாலும் முடியாது என்பேன்,ஏனினில் இங்கே கலாச்சாரக்காவலர்கள் கொண்டே புடுவர்,மேலும் டார்க் ஹ்யூமரை எதிர்கொள்ள திராணியில்லாத ரசிகர்க் கூட்டமே இங்கே அநேகம் உண்டு.

டெல்லி பெல்லி படத்தை பாலிவுட்டில் வெளியிட்டதற்கே  அத்தனை கெடுபிடி, படத்தின் உள்ளடக்கம் அப்படிப்பட்டது, நான் கதையெல்லாம் சொல்லப்போவதில்லை, சர்ச்சைக்குள்ளான காட்சிகளை மட்டும் இங்கே பகிர்கிறேன், அவை எப்படியும் சேட்டை என்னும் மலினமான நகலில் வரப்போவதே கிடையாது, ஏற்கனவே இதன் இயக்குனர் கண்ணனுக்கு என்ன ப்ரிக்வாலிஃபிகேஷன் என எனக்கு தெரியவில்லை,  ஆனால் தமிழுக்கு திரைக்கதையை இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் எழுதியுள்ளதாக விக்கி சொல்கிறது. நான் சேட்டை எப்படியும் பார்க்கப்போவதில்லை, பாடல்கள் கேட்டேன் எனக்கு எதுவும் ஒட்டவில்லை.

சரி ஒரிஜினலை பார்ப்போம்,படத்தின் மூன்று நண்பர்கள் கூட்டணியாக டஷி [இம்ரான் கான்] சினிமா நிருபர், நிதின்[குனால் ராய் கபூர்] ஒரு பிலிம் ரோல் போட்டு போட்டோ பிடிக்கும் சினிமா போட்டோக்ராபர்,மேலும் சோடா புட்டி கண்ணாடி அணிந்த, புதர் போல சுருள் முடி கொண்ட அப்பாவித்தனமான அருப் [வீர் தாஸ்] இவர் ஒரு அட்வர்டைசிங் கம்பெனியின் காப்பிரைட்டர். மூவர் கூட்டணியிலேயே கொஞ்சம் சீரியஸ் ஆசாமி என்றால் இவர்தான். இவர்களுக்குள் நடக்கும் நான்,நீ போட்டியில் தான் படமே நகரும்.டெல்லி பெல்லி என்பது டெல்லி வாசிகளுக்கு உஷ்ணத்தால் வரும் கடும் வயிற்றுப்போக்கு தான்.

படத்தில் கெட்டவார்த்தைகள் மிகச் சரளமாக புழங்கும்,காம்ப்ரமைசே கிடையாது, இலை மறைவு காய் மறைவு சோலியே இல்லை,இதில் போட்டொகிராபர் நிதினுக்கு டஷியின் காதலி சோனியா மீது ஒரு கண் உண்டு, செல்லமாக டஷியை லக்கி பாஸ்டர்ட் ஷீ ரியல்லி லவ்ஸ் யூ மேன் என்பான். ஒரு சமயம் இவர்கள் குடியிருக்கும்  வீட்டு ஓனர் ஜெயினுக்கு வாடகை கொடுக்காமல் ஏய்ப்பதற்கு வேண்டி, அவர் விலைமாதுவின் வீட்டுக்கு விஜயம் செய்கையில் ஜன்னல் வெளியே கேமரா வைத்து படங்களாக சுட்டுத்தள்ளுவான் நிதின்,அங்கே ஒரு பாடலும் உண்டு,பாடல் முடிந்தவுடன் கேமராவை எடுத்து வைத்து விட்டு விலைமாதுவுக்கு 100 ரூபாய் கொடுப்பான் நிதின். அவள் விலை ஏறிப்போச்சு என்று சலித்துக்கொண்டே வாங்கிவைப்பாள், நிதின் இல்லை ஸ்வீட் ஹார்ட் என்று விலைமாதுவின் மார்பகத்தை பிசைந்துவிட்டு வருவார்.இது போல தமிழில் காட்சி வைக்க முடியுமா?

இன்னொரு காட்சியாக டஷியின் காதலி சோனியாவின் பணக்கார பெற்றோர் டஷிக்கும் சோனியாவுக்கும் சேர்த்து சொகுசு அபார்மெண்டை பரிசாகத் தருவர், அங்கே திருமணத்துக்கு முன்பே இருவரும் சேர்ந்து உறவு கொள்வர், அப்போது சோனியாவின் முனகல் மட்டும் உச்சஸ்தாயியில் காட்டப்படும்,தஷி போர்வைக்குள் இருந்த படி வாய்ப்புணர்ச்சி தருவான், அப்போது படத்தில் இரண்டாம் முறையாக ,உன் தாடி என்னை கிழிக்கிறது, டஷியை சோனியா நீ தாடியை ஷேவ் செய்தே ஆகனும் ஹனி என்று செல்லமாய் கடிந்துகொள்வாள், இது போல தமிழில் காட்சி வைக்க முடியுமா?

சோனியாவின் பெற்றோர் டஷிக்கு திருமணப்பரிசாக ஹுண்டாய் ஐ10 ரக கார் ஒன்றையும் பரிசளிப்பர். அதை அருவருப்புடன் வாங்கும் டஷி தன் நண்பர்களிடம் "This car is so bad that it looks like something that would result if a donkey f**ked a rickshaw." அதாவது கழுதை ஆட்டோ ரிக்‌ஷாவை புணர்ந்து உண்டான ஜந்து போல இது உள்ளது என்று ஒரு வசனம், இதற்காக அமீர்கான் வழக்கு ஒன்றை சந்தித்தார் என கேள்விப்பட்டேன், இது போல தமிழில் காட்சி வைக்க முடியுமா? சொல்லுங்கள்?

இப்போது இன்னொரு காட்சியாக அருப் தன் காதலியால் ஏமாற்றப்படுகிறான், ஒருநாள் அவளின் வீட்டுக்கு போய் பெல் அடிக்க ஒரு அமெரிக்க மாப்பிள்ளை கதவை திறக்கிறான், இவனுக்கு கையறுநிலை,காதலியோ மிக ஈசியாக குட்லக் வித் யுவர் கார்டூன் என எள்ளி நகையாடி குட்பை சொல்லுகிறாள், கதவும் சாத்திவிட்டாள். உடனே ஒரு ப்ரில்லியண்ட் கனவுக்காட்சி பகலில் நின்றபடிக்கே அருப் காணுகிறான்.

அருப்பின் காதலியின் திருமணத்தன்று அருப் மண்டபத்துக்கு போய் கல்யாணத்தை நிறுத்து, நான் அவளின் காதலன், நான் மில்லேனியம் மேன், நான் அவளுக்கு வாய்ப்புணர்ச்சி அளித்து ஆர்கசம் வரவழைத்துள்ளேன். அவள் எனக்கு வாய்ப்புணர்ச்சி தந்து விரைப்பூட்டியவள். என்று நடனம் ஆடுகிறான், ஆச்சாரமான அந்த பெற்றோர் வெட்கி தலைகுனிகின்றனர், காதலி கெஞ்சுகிறாள், மன்றாடுகிறாள் என நினைத்து சிரிக்கும் அருப் மீது மழை பெய்கிறது. இது போல தமிழில் காட்சி வைக்க முடியுமா? சொல்லுங்கள்?

மேலும் சோமையாஜுலு என்னும் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரமாக விஜய் ராஸ் [டெல்லி6 ல் வரும் எலும்பு போலீஸ்] கலக்கியிருப்பார், வெல்வெட் துணியில் வைரம் என்று நினைத்து புட்டியை கவிழ்க்க, வைரத்துக்கு பதில் மலம் கொட்டுகிறது. என்ன ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார் பாருங்கள்?,கூடவே வரும் அல்லக்கைகள் கொட்டம் வேறு,இவர் ஒன்று சொல்ல அவர்கள் வேறு செய்ய என்று,கலாசலாக இருக்கும்.இதை நாசர் செய்வார் என நினைக்கிறேன். நல்ல தேர்வுதான்.

அப்படி அந்த கேங்ஸ்டர் கேங் ஒரு நட்சத்திர ஓட்டல் ரூமில் தங்கியிருக்கும் ரஷியக் கடத்தல்காரன் விளாடிமிரை வைரம் எங்கே எனக்கேட்டு விசாரிப்பார்கள், அப்போது விளாடிமிரின் வாயின் அருகே  போன் இருக்கும், ஆசன வாயில் ஒரு பட்டாசு சொருகப்பட்டிருக்கும், எரியூட்டப்பட்டும் விடும், இவர் ஒவ்வொரு எண்ணாக முயன்று கடைசியில் சரியாக விமானப் பணிப்பெண் சோனியாவின் எண்ணை சொன்னவுடன், சூடான காபியை சோமையாஜுலுவின் சகா ஒருவன் விளாடிமிரின் ஆசனவாயில் எரியும் பட்டாசை நோக்கி விசிறுவான், அப்படி துடிப்பார் விளாடிமிர்,

அங்கே அறையின் ஒரு கோடியில் சோமையாஜுலுவின் கேங் ஆட்கள் விளாடிமிர் தனக்கு ஆர்டர் செய்த பண்டத்தை மிச்சம் வைக்காமல் தின்றுவிடுவர், இதைப் பார்த்து டென்ஷன் ஆகும் விஜய் ராஸ்,அப்படி ஒரு ரியாக்‌ஷன் தருவார். இதை எல்லாம் தமிழில் சரியாக பயன்படுத்துவரா? பார்ப்போம்.

மேலும் நண்பர்கள் மூவர் இருக்கும் அழுக்கு அபார்ட்மெண்டின் மாடியில் கதக் வகுப்பெடுக்கும் ஒரு மஹ்ராஜ் ,கூரையில் ஏற்பட்ட விரிசல்,அதன் மேலே தய்யாதக்கா என குதிக்கும் பெண்கள்,கீழே இருந்து நண்பர்கள் மஹ்ராஜை பார்த்து உதிர்க்கும் கெட்டவார்த்தைகள்,எழுத முடியாது.அதற்கு மஹ்ராஜ் சொல்லும் பதில் எல்லாம்,சான்சே இல்லை.

இம் மூவரும் மாடிவீட்டு மஹ்ராஜின் நடன வகுப்பால் கடைசி காட்சியில் காப்பாற்றப்படுவர்,அப்போது கூரை உடைந்து நடனமாடும் பெண்ணின் கால் மட்டும் கீழே கூரையில் மாட்டிக்கொள்ளும்,மேலே அவளை மஹ்ராஜ் பிடித்து இழுக்க,ஒட்டு மொத்த கூரையும் கொட்டும் காட்சி,அமேசிங்.இதையெல்லாம் நல்ல படியாக எடுக்க முடிந்தால்,சிறப்பு தான்.

இதில் ஒரு துணிவான வசனம் ஒன்றை நிதின் பேசுவான், நீ ஏன் இன்னும் ஃப்லிம் போட்டு படம் எடுக்கிறாய்?டிஜிட்டல் உபயோகிப்பது தானே?என ஒருவன் கேட்க , அதற்கு நிதின், டிஜிட்டல் கேமரா எல்லாம் சூத்தியாக்களுக்கு தான்  என்று முடிப்பான், இப்படி எல்லாம் தமிழில் எடுக்க முடியுமா?   தமிழில் டீசரில் ஆர்யா நிகான் டிஜிட்டலில் படமெடுக்கிறார்,ஆக யார் போட்டொக்ராபர்? சந்தானம் இல்லையா? பின்னர் ஒரு காட்சியில் சந்தானம் லாம்பி ஸ்கூட்டரை வயிற்றுப்போக்குடன் ஒட்டிவருவதை பார்த்தேன், ஆக படத்தின் தலையாய அடிப்படையே மீறப்பட்டிருக்கிறது,

ஒரிஜினல் படத்தின் நித்தின் கேரக்டரை பாருங்கள்,குளிக்காமல் அழுக்கு வடிந்து ஒரு பழைய நம்பர் ப்ளேட் கூட இல்லாத ப்ரியா ஸ்கூட்டரை உதைத்து ஸ்டார்ட் ஆகாமல், பிரம்ம பிரயத்தனத்துடன் தள்ளி ஏறி ஸ்டார்ட் ஆனவுடன் அதற்கு முத்தம் வைப்பார். எங்கே போனது அந்த கண்டினியூட்டி?.நம் ஆட்கள் ஒன்று திருடுகிறார்கள், அல்லது அதிகப்பிரசங்கித்தனம் செய்கிறார்கள் என்று வருத்தத்துடன் இங்கே எழுதவேண்டியிருக்கிறது.

படத்தில் ஆர்யாவுக்கும் ஹன்சிகாவுக்கும் அல்லது அஞ்சலிக்கும் மேலே சொன்ன போர்வைக்குள் வாய்ப்புணர்ச்சி காட்சிகள் வைக்க முடியுமா? நம்மாட்கள் நேராக ஸ்விட்சர்லாந்துக்கு ஆடப்போய்விடுவார்கள், நிஜ வாழ்க்கையில் லட்டு போல ஃபிகர் கிடைத்தால் ஆடவா போவோம்?சும்மா  டவுட்டு தான் சார்.


படத்தில் டஷியுடன் வேலை பார்க்கும் விவாகரத்தான பெண் மேனகா என்னும் கதாபாத்திரம் உண்டு,அவளை உடன் பணிபுரியும் பெண்கள் பொறாமை மிகுதியால் லெஸ்பியன் என வதந்தியை பரப்புவர்.அது அவளின் முன்னால் கணவனுக்கும் எட்டும், அவள் டஷிக்கு ஒரு பார்ட்டியில் வைத்து  நூல்விடுவாள், தன் முன்னாள் கணவனை வெறுப்பேற்ற, டஷி தான் இப்போது கம்பேனியன் என புழுகப்போய், அந்த ரியல் டெல்லி எருமை, துப்பாக்கியுடன் டஷியையும் மேனகாவையும் காரின் பின்னே துரத்துவான்,இது போல மேனியாக்குகள் டில்லியில் சகஜம்,சென்னையில் உண்டா துப்பாக்கி கலாச்சாரம்?,

 மறு காட்சியில் டஷியும் மேனகாவும் நட்சத்திர ஓட்டலுக்குள்ளே யாருடைய அறைக்கோ போய் தஞ்சம் புகுந்து போனில் காஃபி ஆர்டர் செய்துவிட்டு, அந்த அறையில் தங்கும் வயதான வெளிநாட்டு ஜோடி கதவை வெளியே இருந்து திறக்க, மேனகா சத்தமாக யெஸ்ஸ் யெஸ்ஸ் யெஸ் ரைட் தேர் என பொய்யாய் முழங்கிக் கத்துவாள், வெள்ளைக்கார கிழவர்,இது நம் ரூம் தான் எனக்கு தெரியும்  என்பார், கிழவியோ உன் அல்செய்மருக்கு அளவில்லை, என்று வெளியே கூட்டிப்போவாள், அது போன்ற இன்னோவேட்டிவ் காட்சிகள் தமிழில் இருக்கவே இருக்காது என நினைக்கிறேன், அதற்கு பதிலாக குத்தாட்டப் பாடலும் உபரி நம்பர்களும் இடைச்சொருகலாக இருக்கும்,

மேலும் மேனகாவுக்கும் டஷிக்கும் கடைசியில் காருக்குள் வைத்து ஒரு ஈர்ப்பு வரும், இருவருமே  முஸ்லீம் பெண்மணி போல பர்தா அணிந்திருப்பர், அப்போது தான் ஒரு குறும்பான கொள்ளையை வேறு நிகழ்த்தியிருப்பர், மேலும் சாதிக்க நினைத்து இருவரும் பர்தாவை விலக்கிவிட்டு நீண்ட முத்தம் தருவர், இதை தமிழில் படமாக்க முடியுமா? நீங்களே சொல்லுங்கள். படத்தின் நிறைய வசனங்கள் பார்க்கும் போது மட்டுமே நினைவில் நின்று சிரிக்கவைக்கும், அவற்றையும் மிஸ் செய்யாதீர்கள்.

  
குட்லக் ஆடியன்ஸ், ஆனால் தமிழில் படம் பார்ப்பதற்கு முன்னர் ஒரிஜினலை பார்த்துவிடுங்கள். டோண்ட் மிஸ் இட். டார்க் ஹ்யூமர் ரைடுக்கு உடனே தயாராகுங்கள்.

படத்தின் முன்னோட்ட காணொளி ( நன்றி விக்கிப்பீடியா, ஐஎம்டிபி, கூகுள், யூட்யூப்)


ட்ஜாங்கோ அன்செய்ண்ட்[Django Unchained][ஹாலிவுட்][2012]


அருமை நண்பர்களே,
நலம் தானே?பதிவுகள் எழுதியே நாளாகிறது,வழக்கமான பல்லவிதான்,படிக்கவும் பின்னூட்டவும் கூட முடியவில்லை,நல்ல படங்களை பார்த்தபின் பதிய விரும்பினாலும் நேரமில்லை,இருந்தும் மாதத்துக்கு ஒரு பதிவேனும் எழுதுவது என்று வைத்திருக்கிறேன், பார்ப்போம், ட்ஜாங்கோ அன்செயிண்ட் படம் பற்றி எழுத நினைத்தும் உடனே முடிய வில்லை,என்னளவில் பல்ப்ஃபிக்‌ஷனுக்கு அடுத்த க்வெண்டினின் பெஸ்ட் என்றால் ட்ஜாங்கோ தான்,மிக அற்புதமான பாத்திரப்படைப்பு, மல்டி டைமென்ஷன் கதாப்பாத்திரங்களின் கலவை, வெள்ளையரும் கருப்பரும் கலந்த நல்லவர்கள் ஜோடி ஒருபுறம் ,வெள்ளையரும் கருப்பரும் கலந்த கெட்டவர்கள் ஜோடி இன்னொரு புறம் என என்றும் மறக்க இயலாத படம் ட்ஜாங்கோ அன்செய்ண்ட்.

டார்க் ஹ்யூமரில் நான் வியக்கும் இரு இயக்குனர்கள் என்றால் கோயன் சகோதரர்களும்,பின்னே க்வெண்டினும் தான்,ஹாலிவுட்டில் நிறைய டார்க் ஹ்யூமர் ஸ்பெஷலிஸ்ட் இயக்குனர்கள் இருந்தாலும் தரம் என்றால் இவர்கள் தான்,இந்தப்படம் துவக்கம் முதலே அசத்தலான் டார்க் ஹ்யூமர் ப்லெண்டட் வசனங்கள்,வசனம் புரிந்தது என்றால் வெடிசிரிப்பை சிரிக்காமல் இருக்க முடியாது.

குறிப்பாக டாக்டர் ஷுல்ட்ஸின் பல் டாக்டர் வண்டியின் மேலே ஸ்ப்ரிங்கில் இணைந்து ஆடிக்கொண்டிருக்கும் ஒரு பல்லின் மாதிரி,அது ஒரு பருக்கை பதம் தான்,அது என்ன ஒரு இன்னோவேட்டிவ் கான்செப்ட் பாருங்கள்,அதே போல டாக்டர் ஷுல்ட்ஸாக வரும் க்றிஸ்டோப் வால்ட்ஸ் ஆரம்பக்காட்சி முதலே தன் அதகளத்தை ஆரம்பித்து விடுகிறார்.
டாக்டர் கிங் ஷூல்ட்ஸின் வண்டி நான் வரைந்தது

இவரின் இங்லோரியஸ் பாஸ்டர்ட்ஸ் பிடித்ததா அல்லது ட்ஜாங்கோ பிடித்ததா என்றால் பதில் சொல்லுவது கடினம் ,அப்படி ஒரு அற்பணிப்பு,மனிதர் பின்னியிருக்கிறார், குதிரையேற்றத்தின் போது கீழே விழுந்து இடுப்பு எலும்பு நகர்ந்து விட்டபடியால் ஆரம்பக்காட்சிகள் அவரது இடுப்பெலும்பு குணமாகும் வரை அந்த பல் டாக்டர் வண்டியிலேயே அமர்ந்து பயணிப்பது போல அமைக்கப்பட்டது எனப் படித்தேன், வாவ்.இந்த மனிதர் அடிமை ட்ஜாங்கோ மீது காட்டும் வெள்ளைய கரிசனம் மிகஅருமை,மனிதர் மீது இதனாலும் கூட நம்மை அறியாமல் பிடிப்பு வந்து விடுகிறது. வழக்கொழிக்கப்பட்ட நிக்கர் என்னும் இனவெறி வார்த்தை படம் முழுக்க உச்சரிக்கப்படுகிறது,ஆனால் அது இன்றி இனவெறி படம் எடுக்க இயலாது.

ஆரம்பக்காட்சியில் கோபக்கார முட்டாள்கள் ஸ்பெக் சகோதரர்களிடமிருந்து ட்ஜாங்கோவை 120 டாலர் கொடுத்து வலுக்கட்டாயமாக வாங்கிவிட்டு,ட்ஜாங்கோவை நோக்கி நானாக இருந்தால் அந்த இறந்து போன வெள்ளையனின் குளிர்கால கோட்டையும் கபளிகரம் செய்திருப்பேன்,போய் எடுத்துக்கொள்,என்று சொல்லிவிட்டு,அதற்கு உண்டான டாலர்களை செத்துக்கொண்டிருக்கும் வெள்ளையனிடம் விட்டெறிவதும், அடிமை ட்ஜான்கோவை வாங்கிவிட்டு செத்துக்கொண்டிருக்கும் வெள்ளையனிடம் பில் ஆஃப் சேல் கொடுப்பாயா? எனக்கேட்கும் காட்சியும், ட்ஜான்கோவின் கூட இருக்கும் இதர அடிமைகளிடம் கால்விலங்குகளின்  சாவியை அவர்களிடம் எறிந்துவிட்டு, 2 யோசனைகள் தருவேன்,ஒன்று, இந்த பாதி செத்தவனை கூட்டிக்கொண்டு திரும்பவும் நீங்கள் வந்த 36 மைல் நடந்து போய் அங்கே இவனை மருத்துவமனையில் சேர்ப்பது,இரண்டு இவனையும் இவன் சகோதரன்  உடம்பை நன்கு ஆழக்குழிதோண்டி புதைத்துவிட்டு நீங்கள் விரும்பும் ஊருக்கு திரும்பி புது வாழ்க்கை வாழ்வது,உங்களில் அநேகமாக வானசாஸ்திர நிபுனர் யாரும் இருக்க வாய்ப்பு குறைவுதான்,பை த வே அது தான் நார்த் ஸ்டார்,டாட்டா என்று நடையை கட்டும் காட்சி டாப். 

க்றிஸ்டோப் வால்ட்ஸ் அதிலேயே நம் ரசிகர் உள்ளங்களை கொள்ளை கொண்டு விடுகிறார்,அப்படி ஒரு ஸ்க்ரீன் ப்ரெசென்ஸை 30 வருட நடிப்பு வாழ்க்கைக்கு பின்னர் மனிதர் பெற்று விட்டார்,ஜேவியர் பர்டமின் படம் ஏதுமில்லா டைம் லைனும்[ஸ்கை ஃபால் எனக்கு திருப்தி இல்லை] இவருக்கு யோகம் என்றாலும்,மனிதருக்கு கெபாசிட்டி மிக மிக அதிகம். எந்த வேடம் கொடுத்தாலும் மனிதர் தாங்குவார். மிக அற்புதமான ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் விட்டி கதாபாத்திரத்துடனான வில்லத்தனம் செய்வது இவருக்கு இப்படி கைவந்திருக்கிறது.

அடுத்ததாக என்னை மிகவும் கவர்ந்த காட்சியாக ட்ஜாங்கோவும் இவரும் ஒரு சிற்றூருக்குள் வந்து பாருக்குள் சென்று ட்ரிங்க் கேட்க,அங்கே ட்ஜாங்கோவை பாருக்குள் பார்த்த பார் மேனின் பதைபதைப்பு இருக்கிறதே,அதிலேயே நாம் கருப்பர்கள் எந்த அளவுக்கு வெறுக்கப்பட்டனர்,எப்படி லின்ச் என்னும் தூக்கில் ஏற்றியும் தீவைத்தும் கொள்ளப்பட்டனர் என புரிந்து கொள்கிறோம், படத்தில் அருமையான் ஒரு லின்ச் காட்சியும் உண்டு.1800 களின் பிற்பாதிகளில் துவங்கிய இந்த கு க்ளக்ஸ் கான் என்னும் அமெரிக்க நிறவெறி கும்பலின்  சம்பவத்தை சரியாக  படத்தில் எள்ளல்களுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார் க்வெண்டின்.இதற்கு முன்னர் கோயன் சகோதரர்களின் ஓ ப்ரதர் வேர் ஆர்ட் தோ என்னும் படத்தில் இதே போன்ற லின்ச் காட்சி எள்ளலுடன் உண்டு. நண்பர்கள் அதையும் பார்க்க வேண்டுகிறேன். அங்கே பாரில் இருந்து விறுவிறுவென வெளியேறிய பார் மேனிடம் ,டாக்டர் ஷூல்ட்ஸ் ஷெரிஃபை கூட்டிவா, மார்ஷல் வேண்டாம் என லந்தாக சொல்லி அனுப்பும் காட்சி உண்டு அது பிரமாதமான ஒன்று,

ஷெரிஃப் வந்ததும் அதிரடித் திருப்பமாக வீரவசனம் பேசிய ஷெரிப்பை பாயிண்ட் ப்ளான்கில் வைத்து டாக்டர் போட்டுத்தள்ளுகிறார்,அந்த காட்சியிலேயே டாக்டரின் ஸ்டைல் நமக்கு க்வெண்டினால் சொல்லப்படுகிறது, அவரின் கோட் கஃப்ஃபுக்குள்ளே ஒரு டெரிங்கர் ரக சிறிய பிஸ்டல் வைத்திருக்கிறார்,கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியை இயக்கி வயிற்றில் சரியாக துளைக்கிறார் டாக்டர். இன்னும் திருப்தியில்லை டாக்டருக்கு, மண்டக்கும் ஒரு குண்டை அனுப்புகிறார். அதகளமான காட்சியது, அதே கணம் ஒரு பெண்மணியும் பொத்தென மயங்கி விழுகிறார் பாருங்கள்.ரியல்லி சூப்பர்ப்,

கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படத்துக்கு அடுத்தபடியாக ஸ்ட்ரீட் ரியலான வன்முறைக்காட்சிகள் என்றால் இது தான், தரத்துக்கு வேண்டி சொன்னேன். க்வெண்டின் இஸ் த பெஸ்ட் என அடிக்கடி சொல்ல வைக்கிறார் க்வெண்டின், இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் மனிதர் செய்யும் பழமையில் புதுமை, ஸ்பாகெட்டி வெஸ்டெர்ன் படத்தின் ஜானரை எடுத்துக்கொண்டு அதை சதர்ன் என மாற்றி முழங்கியது புதுமை, படத்தின் பிற்பாதியில் அறிமுகமாகும் ஃப்ரான்கோஃபைலான கால்வின் கேண்டி கதாபாத்திரம் ,தன்னை ஒரு சதர்ன், தெற்கத்தி ஆள் என்கிறது. இது வரை ஹாலிவுட் வெஸ்ட்,வெஸ்ட் என முழங்கியதை ஒரே படத்தில் சதர்ன் என மாற்றுவதில் எத்தனை பெரிய தைரியம் மனிதருக்கு?

ஏற்கனவே வந்து நீங்காப் புகழும் வெற்றியும் பெற்ற என்னியோ மாரிக்கோனியின் ஒரிஜினல் இசைசேர்ப்பையே படத்தில் பயன்படுத்தி அதற்கு மதிப்பும் மரியாதையும் செய்துள்ளார், பழமையை அதன் புராதானம் குலையாமல் பயன்படுத்தி சிலாகித்து அழகு பார்க்கும் ஒரே மனிதர் க்வெண்டின் தான் என்பேன், ஒரு சில்லை கூட சிதிலப்படுத்தமாட்டார், ஏன் எழுத்து வடிவத்தை(காமிக்கல் ஃபாண்ட்) கூட இவர் எப்படி சிறு பிராயத்தில் ரசித்தாரோ அதை அப்படியே தன் ரசிகர்க்கு வழங்குவார்,இதில் இன்ஸ்பையர் ஆனேன் அதை அப்படியே பயன்படுத்துவேன்,க்ரெடிட் கொடுப்பேன்,என்னும் இவரின் பிடிவாதமும் நேர்மையும் மெச்சத்தக்கது.

இதில் ட்ஜாங்கோ என்னும் பெயரும் கூட இன்ஸ்பிரேஷன் தான்,அதில் நடித்த 60களின் கதாநாயகனை மரியாதை செய்ய இங்கே பார் காட்சியில் கேமியோவாக தோன்றவைத்தார் எனப் படித்தேன்.மேலும் அமெரிக்கரின் ஆரம்ப வரலாறு அசிங்கம் மிக்கது,அது நாறும் என்றாலுமே துணிந்து காலால் மிதித்திருக்கிறார் இயக்குனர், கருப்பர்கள் கடந்து வந்த வரலாறும் பட்ட வேதனையும் சொல்லில் வடிக்க முடியாதது,2ஆம் உலகப்போரில் யூத இனம் பட்ட சொல்லொணாத்துயரை 100 வருடம் முன்பே அமெரிக்காவில் அனுபவித்த இனம் கருப்பர் இனம்.

அதை வேற்று நாட்டவனா படமாக எடுக்க முடியும்?,ஒரு அமெரிக்கன் தன் அமெரிக்க சினிமாவில் தானே அந்த அசிங்கத்தை காட்டி ஆவணப்படுத்த முடியும்? எனக் கேட்கிறார் இயக்குனர். இந்த அளவுக்கு எள்ளலுடன் டார்க்ஹ்யூமர் கோட்டிங்கோடு சீரியஸ்தன்மை குறையாமல் காட்டியிருப்பது மிக அற்புதம், திரைக்கதை என்றால் இப்படி இருக்க வேண்டும், குறை கண்டு பிடிக்க முடியாத படைப்பு, நட்புக்கு இலக்கணமாக முற்பாதியில் டாக்டர் ஷூல்ட்ஸையும்  (ஜெர்மானிய வெள்ளையர்) ட்ஜான்கோவையும் (கருப்பர்) நாம் பார்த்தால் பிற்பாதியில் மிஸிசிப்பியில் கேண்டிலேண்டில் நாம் கேல்வின் கேண்டியையும் (ஃப்ரென்சு வெள்ளையர்) வீட்டு தலைமை அடிமை ஸ்டீவன்(கருப்பர்)ஐயும் பார்க்கிறோம், என்ன பக்காவாக ஒரு பாத்திரப்படைப்பு என அட போட்டு வியக்க வைக்கிறது. இரண்டே முக்கால் மணி நேரப்படத்தின் நீளம் முப்பது நிமிடம் போல கரைகிறது, அவ்வளவு நேர்த்தியான் எடிட்டிங்.

டாக்டர் ஷூல்ட்ஸும் ட்ஜான்கோவும் நல்ல நண்பர்களான பிறகு ட்ஜான்கோவிடம் ஒரு ஃபிட்னஸும் ஆட்டிட்யூடும்  வந்திருப்பதை நாம் உணர்வோம், கதாப்பாத்திரமான உருமாறுவது என்பது இது தான், கருப்பர்களுக்கு அப்படியான ஒரு கொடிய காலக்கிரமத்தில் டாக்டர் ஷூல்ட்ஸுடன் சேர்ந்து சென்று ட்ஜான்கோ பவுண்டி ஹண்டிங் செய்யும் காட்சிகள் அதகளம்,அவை எல்லாம் நம்பும் படியாக படமாக்கப்பட்டுள்ளது, ட்ஜான்கோவாக வந்த ஜேமி ஃபாக்ஸ், மிக பண்பட்ட நடிகர்,இவர் பார்வையற்றவராக தோன்றி நெஞ்சை அள்ளிய ரே படம் எனக்கு மிகவும் பிடிக்கும், அதற்கு இவர் ஆஸ்கர் பெற்றிருந்தார், இந்தப்படத்தில் இவருக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பு வில்ஸ்மித்துக்கு போக வேண்டியது அவர் அடிமை கோளத்தில் நடிக்க விரும்ப்பாமல் தவிர்த்தார்,எனப்படித்தேன்.இவர் இப்பாத்திரத்துக்கு செய்த நீதி மிக அருமை என்பேன்.

இவரின் மனைவியாக நடித்த நடிகை கெர்ரி வாஷிங்டன் ஏற்கனவே ரே படத்திலும் இவருக்கு மனைவியாக வந்திருந்தார்.க்வெண்டினின் காஸ்ட்ங் என்றுமே சோடை போனதில்லை,இதிலும்.

பிற்பாதியில் கேண்டிலேண்டில் வரும் மாண்டிங்கோ சண்டையில் வைத்து கேல்வின் கேண்டி [லியார்னடோ டிகார்பியோ] நமக்கு அறிமுகமாவார், பார்க்க சாஃப்டான ஆனால் நிஜத்தில் டெரரான ஃப்ரான்கோஃபைல் வில்லனாக டிகாப்ரியோ, இவர் ஏற்கனவே ஒரு படத்தில் வில்லனாக பார்த்ததுண்டு,படம் பெயர் நினைவில்லை, மனிதர் துவம்சம் செய்துள்ளார், இவரை டிரக்டர்ஸ் டார்லிங் என்பார்கள், மனிதர் எந்த பாத்திரத்துக்கும் அம்சமாக பொருந்துவார். இதில் நிறவெறி கொண்ட கெட்டவன் கதாபாத்திரம், சும்மா பிரித்து மேய்ந்திருக்கிறார்,

தன் விதவைத் தங்கை லாராவிடம் இன்ஸெஸ்ட் ரிலேஷன்ஷிப் வைத்திருப்பாரோ ? என்ற சந்தேகம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது, ஆனால் உறுதியாக தெரியவில்லை, தவிர படத்தில் இன்னொரு பெண்  சிகப்பு முகமூடிக்குள் கோடாரியுடன் அந்த நாயை ஏவிவிடும் காட்சியில் பிண்ணணியில் தோன்றுவார் அவர் க்வெண்டினின் டெத்ப்ரூஃப் படத்தில் வந்த ஸோ பெல் [Zoë Bell]ஆவார்,

நாயை ஏவிவிடும் காட்சியில் முகமூடியுடன் Zoe Bell

அவர் கடைசிக் காட்சியில் 2 குழந்தைகள் இருக்கும் புகைப்படத்தை ஸ்டீரியோப்டிகான் கருவியில்  வீடியோ போலப் பார்பார்,அதில் பெரிய தூண்களுக்கு அடியில் இரு குழந்தைகள் இருப்பர்,அதில் ஒரு வெள்ளைய சிறுமியும்,ஒரு கருப்பின சிறுவனும் இருப்பர்,
கடைசியில் Zoe Bell  ஸ்டீரியோப்டிகானில் பார்க்கும் புகைப்படம்

என் புரிதலின் படியும் இணைய விவாதங்களின் படியும் பார்த்தால் அது அந்த சிகப்பு முகமுடி அணிந்த பெண்மணியும்,ட்ஜாங்கோவும் ஆகும்.இயக்குனர் ஒருவேளை இரண்டாம் பாகத்துக்கு குறியீடாக வைத்தாரா?அல்லது ரசிகர்கள் மண்டையை பிய்த்துக்கொள்ளட்டும் என விட்டாரா?அல்லது அன்கட்,டிரக்டர் கட் ஒரிஜினல் டிவிடி 5 மணிநேரம் ஓடுமாம்,அதில் கட் செய்யப்பட்ட காட்சிகள் கிடைக்குமா?என குழம்பியிருக்கிறேன்.

அங்கே கடைசிக் காட்சியில் அந்த மர வீட்டுக்குள்ளே  ட்ஜான்கோ அப்போது வந்து விட அங்கே குழுமி இருக்கும் அல்லக்கைகள் அத்தனை பேரும் துப்பாக்கிக்கு இரையாகின்றனர், ஆனால் அவள் ஒன்றும் செய்யப்படவில்லை. அல்லது கொல்லபட்டுவிடுகிறாள்,[அந்த காட்சியை நன்கு உன்னிப்பாக பார்த்தும் குழப்பம்]  இந்த குறியீடுகளுக்கு அர்த்தம் தேடிக்கொண்டிருப்பவர்கள் இணையத்தில் தேடவும். இந்த சுட்டி பயனளிக்கும்.

தங்கை லாராவை  கேண்டி அறிமுக காட்சியில் டயர்டான விழிகளுக்கு நான் பருகும் டானிக்கே என வர்ணிக்கிறார், பின்னர் கட்டி அணைத்து கீழ் கன்னத்தின் இரு புறமும்,பின்னர் உதட்டில் நேருக்கு நேராகவும் முத்தமிடுகிறார், இதில் தான் எனக்கு இருவரும் இன்ஸெஸ்டோ என சந்தேகம் வலுத்தது,ஏற்கனவே க்ளாடியேட்டர் படத்தில் ஜோக்குவின் பினிக்ஸுக்கும் கோனி நீல்சனுக்கும் இருக்கும் இன்ஸெஸ்ட் ரிலேஷன்ஷிப் நினைவுக்கு வந்தது.

பின்னர் நான் வியந்த ஒரு டைரக்டர் டச் என்ன என்றால்,கேண்டி  டாக்டர் ஷூல்ட்சையும், ட்ஜாங்கோவையும் பிக் ஹவுஸுக்கு வரவேற்று கூட்டி வருகையில்  தொகை 6500 டாலருக்கு ஒரு செக் எழுதுவது போல திரையில் காட்டப்படும்.பின்னர் கால்வின் கேண்டி என கையெழுத்தும் போடப்படும், ஆனால் கேண்டி விக்டோரிய குதிரை வண்டியில் வந்து கொண்டிருப்பார்.அங்கே கையொப்பமிடுவது ஸ்டீஃபன்,ஆம் கருப்பின வீட்டு தலைமை அடிமை ஸ்டீவனே தாம்,

சாமுவேல் ஜாக்சன்!!!!!ஐயோ  என்னா அதகளம்?,மனிதர் நாராசமான இந்த கருப்பின கிழ சொம்பு வேடத்துக்கு அப்படி பொருந்திப் போகிறார்,கேண்டி லேண்டின் பிக் ஹவுசில் இவரின் ரேஞ்ச் எத்தகையது என்பதை உணர்த்தவே அந்த காசோலை வரையும் காட்சியை இயக்குனர் வைத்திருப்பார் என நினைக்கிறேன், என்னா வஞ்சம்,என்னா தெனாவட்டு,வெட்டு ஒன்று துண்டு இரண்டு என இவர் பேசும் வசனம்,சக கருப்பின ட்ஜான்கோ மீது இவர் உமிழும் வெறுப்பு என எழுத வார்த்தை இல்லை . ஸ்பீச்லெஸ்.டெரிஃபிக்கான கேரக்டர், இத்துடன் க்வெண்டினின் கூட்டணியில் இவர் 6 படம் செய்ததாகப் படித்தேன், பல்ப் ஃபிக்‌ஷனின் ஜூல்ஸ் வேடம் எப்படி வாழம் காலத்தில் நம்மனதுள் பதிந்ததோ இந்த ஸ்டீவன் வேடமும் அப்படித்தான்.வாவ்வி.

உணவு மேசையில் என்னை லைப்ரரியில் வந்து பார் என அதிகாரமாக கேண்டியிடம் கிசுகிசுத்துவிட்டு, உள்ளே ஒயினை மெல்ல கலக்கி ருசித்து தினவுடன் பருகிக்கொண்டே,வெளியே வந்திருப்பவர்கள் டுபாகூர்கள் என முடிச்சை அவிழ்க்கும் காட்சி ரொம்பப் பிரமாதமான ஒன்று.

ட்ஜான்கோவும் ப்ரூம் ஹில்டாவும் கணவன் மனைவி தான் என்பதை கண்டு பிடிக்க இந்த 80 வயது கிழம் ஸ்டீஃபன் ஆடும் நாடகம் அடேங்கப்பா?!!!,உணவு நேரத்தின் போது கேல்வின் கேண்டி,ப்ரூம் ஹில்டாவிடம் பிக் ஹவுசில் உணவு மேசையில் சர்வ் செய்வது உனக்கு பிடித்திருக்கிறதா?எனக் கேட்க, சொம்பு ஸ்டீஃபன் ஒரே கல்லில் 2 மாங்காய் அடிப்பது போல , உக்கும் கசக்குமா பின்னே?!!!.... இல்லாவிட்டால் இவள் மாண்டிங்கோ ஃபைட்டர்களின் காமவெறியாட்டத்துக்கு கம்ஃபர்ட் கேளாக தினம் தினம் ஈடுகொடுக்க வேண்டியிருக்குமே? ஆனால் இவள் அந்த சுகத்துக்கும் மயங்குபவள் என அவளின் நிலையை நக்கலாக  அடித்துவிடும் காட்சி க்ளாஸ் என்பேன். அங்கே மேசையில் அமர்ந்து இதைக்கேட்டு மனதுள் பொருமும் ட்ஜான்கோவின் எரியும் கண்களை பார்த்து உண்மையை இவர் கண்டறியும் இடமெல்லாம் சான்சே இல்லை.மிக அற்புதம்.

மாண்டிங்கோ ஃபைட் என்பதை நான் இந்த படத்தில் தான் கேள்வியுற்றேன், இதே பெயரில் ஒரு படமும் வந்துள்ளதாம்,ஆக இதுவும் இன்ஸ்பிரேஷன் தான், இதன் மூலம் ஒரு படத்தில் ஓராயிரம் இன்ஸ்பிரேஷன்கள் இருந்தாலும் அவற்றிற்கு மரியாதை செய்யும் கலை ஒருவருக்கு கைவந்து விட்டால், அப்படைப்பு காவியமாகிவிடும் என உணர்ந்தேன். க்ரெடிட் கொடுத்து சிலாகிப்பது க்வெண்டின் பாணி, க்ரெடிட் கொடுக்காமல் சுருட்டி சொருகிக்கொள்வது ப்ளேகாரிஸ்டுகள் பாணி.இந்த படம் பார்த்த ப்ளேகாரிஸ்டுகள் உணர்ந்தால் அதுவே க்வெண்டினுக்கு கிடைத்த வெற்றி.

பதிவுக்கு சம்மந்தமில்லாத செய்தி, இயக்குனர் அனுராக் காஷ்யபின் கேங்ஸ் ஆஃப் வாசிபூர் மற்றும் தேவ் டி ஒரிஜினல் டிவிடிகளை பெற்றுக்கொண்ட மார்ட்டின் ஸ்கார்சஸி பாராட்டுக்கடிதம் ஒன்றை அனுராக்குக்கு  அனுப்பி இருந்தார்,தேவ் டி பார்த்ததாகவும் அமேசிங் எனவும்.கேங்ஸ் ஆஃப் வாசிபூர் விரைவில் பார்ப்பேன்.எப்போது நியூ யார்க் வந்தாலும் அங்கே இவருக்காக காத்திருப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.மிகவும் மகிழந்த தருணம் அது,கற்றாரை கற்றாரே காமுறுவர் என்னும் கூற்றுக்கேற்ப மனமகிழ்ந்த தருணம் அது,ஒரு நிஜ படைப்பாளிக்காக நானும் கர்வம் கொள்கிறேன்,அவரை சிலாகிப்பதற்காக,அனுராக் யூ ரியல்லி ராக்ஸ்,அண்ட் டிசர்வ் இட்!!!

கடைசியாக மிகவும் ரசித்த காட்சி ஒன்று ,இங்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் போலவே இப்படமும் மிக நீண்ட வசனங்களால் நகரும் படமே, இங்கே டாக்டரிடமும் ட்ஜாங்கோவிடமும் உண்மைய வெளிக்கொணர வேண்டி கேல்வின் கேண்டி ஜோ என்னும் தன் கருப்பின வேலைக்காரனின் பின் மண்டை ஓட்டில் நடத்தும் மூன்று குழிகள் (3டிம்பிள்ஸ்) என்னும் பாடம் மிகப் பிரசித்தி பெற்றது என்பேன், அந்த தியரி உண்மையா?என எனக்குத் தெரியாது?
ஆனால்!!! அதே குழிகள் டிஜாங்கோவுக்கும் ப்ரூம் ஹில்டாவுக்கும் நான் சொல்லும் அதே இடத்தில் சத்தியமாக இருக்கும் பார்க்கிறாயா?என கேட்டு முழங்கும் இடத்தில் ஒரு கணம் நம் நெஞ்சே நின்றிருக்கும்.இது போல படம் முழுக்க வியப்பிலாழ்த்தும் காட்சிகளுக்கு பஞ்சமில்லை.

Auf wiedersehen என்னும் ஜெர்மானிய சொல் மீண்டும் சந்திக்கும்வரை என இதற்கு அர்த்தமாம் அதை பவுண்டி ஹண்டின்கின் போது டாக்டர் ஷுல்ட்ஸ் சொல்வது மிக மிக அழகு.இதே வசனத்தை வைத்து ஒரு வசனம் கடைசியில் உண்டு.

"I miss you like a baby misses mammy titty" என்று கருப்பின தலைமை அடிமை ஸ்டீஃபன் கேல்வின் கேண்டியை பிக் ஹவுஸின் வாசலில் வைத்து எப்படி இவரை மிஸ் செய்தேன் என்பதற்கு உதாரணமாக சொல்லுகிறார், குழந்தை இழந்த அம்மாவின் பாலூட்டும் முலைபோல என்று, அதி பயங்கரமான உருவத்துக்குள்ளே இருந்து இப்படி ஒரு லந்தை கொடுத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கப்போய்விடுகிறார் சாமுவேல் ஜாக்சன்,இப்படி ஒரு அட்டகாசமான சொம்பு பாத்திரம் நான் வாழ்வில் பார்த்ததேயில்லை.மிகவும் ரசித்த ஒன்று.

டாக்டர் ஷூல்ட்ஸ் கடைசியில் ஒருவித விரக்திக்கு ஆளாகிவிடுகிறார்,அவர் அங்கே கேண்டியிடம் ,உன் அடிமைக்கு The Three Musketeers எழுதிய அலெக்ஸாண்டர் டுமாஸின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரை வைத்திருந்தாய் இல்லையா? இன்று நீ நாயை ஏவிவிட்டு ஒரு கருப்பின அடிமையை கொன்றதை பார்த்திருந்தால் டுமாஸ் என்ன செய்திருப்பார் ?என வினவ , கேண்டி, டுமாஸ்?!! மெல்லிதயம் கொண்ட ஃப்ரென்சுக்காரன் ,என பதில் சொல்ல, அதற்கு தலையை மறுப்பது போல ஆட்டி, டுமாஸ் ஒரு கருப்பர். என முற்றுப்புள்ளி வைப்பார்.அந்த காட்சி எல்லாம் எக்ஸலண்டாக இருந்தது. காட்சி எப்படி ஃப்ரேம் செய்யவேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அக்காட்சி.

இயக்குனர் அட்மோஸ்பியர் ஆர்டிஸ்டுகள் தோன்றும் காட்சிகளில் அதிகவனம் செலுத்தி செதுக்கியுள்ளார்,அந்த சிற்றூருக்குள் வரும் காட்சியில் இவர்கள் குதிரையில் ட்ஜாங்கோ அமர்ந்து வர, அதை எத்தனை விழிகள் வியந்து பார்க்கும்?அங்கே ஒரு டாக்டர் பேஷண்டுக்கு ப்ரிஸ்க்ரிப்ஷன் சொல்லுவார். மேலே சன்னலில் ஒரு பெண் ட்ஜாஙோவை பார்த்து ஆச்சரியப்படுவாள், அங்கே டாப் ஆங்கிளில் ஒரு தூக்கு மரம் கயிற்றுடன் காட்டப்படும்.  ஒரு ஆடு மேய்ப்பவன் முன்னே போவான்.அதன் மூலம் அங்கே நிலவும் டெரர் காட்டப்படும்.

கேண்டிலேண்டில் ஷீபா என்னும் கருப்பின  காஸ்ட்லி கம்ஃபர்ட் கேளின் ஆட்டிட்யூட் ஒருவர் பார்க்க வேண்டும் ? தனக்கு பார்பன் பாட்டிலை தனியே கொண்டு சென்று அமர்ந்து குடிப்பாள்,ட்ஜாஙோ மீது ஒரு அசூயை பார்வை விடுவாள்.அவளை கேண்டி அப்படி ஒரு செல்லம் கொஞ்சுவான்.

மற்றொரு காட்சியில் இவர்கள் பிக்டேடியின் பண்ணைக்கு பவுண்டி ஹண்டின்கிற்கு போவார்கள்.அங்கே வீட்டு வெளியே இருக்கும் ஒரு கருப்பு பணிப்பெண்ணிடம், பிக்டேடி விளக்கமாக , ட்ஜான்கோ ஒரு அடிமை இல்லை, அவனை எப்படி நடத்த வேண்டும் என புளி போட்டு விளக்கும் காட்சி கவிதை, அதற்கு அவள் அவனை வெள்ளையன் போல ட்ரீட் செய்யவா? எனக் கேட்க, அங்கே டாக்டர் ஹூல்ட்ஸ் ஆமாம் என மண்டையை ஆட்டுவார்,அதே நேரத்தில் பிக் டேடி இல்லை என மண்டையை ஆட்டுவார்.அது போல பல சிக்னேச்சர் காட்சிகள் படத்தில் உண்டு.

நண்பர்கள் தவறாமல் இந்தப் படம் பார்க்க வேண்டும்,சப்டைட்டிலோடு பார்க்கவேண்டும்,அப்போது தான் ரசமான பல வசனங்களை கேட்டு களிப்புற முடியும்,டாக்டருக்கும் ட்ஜாங்கோவுக்கும் , கேண்டிக்கும் இடையில் படத்தில்  பறிமாறப்படும் வசனங்கள் மிக மிக அற்புதமானவை, முக்கியமானவை.ஆக யாரும் மிஸ் செய்யக்கூடாத ஒரு படம்.நான் இங்கே நண்பர்கள் படம் பார்த்து ஒன்றவேண்டும் என்பதற்காக கதையை சொல்லவேயில்லை.மன்னிக்கவும்.

படத்தின் முன்னோட்ட காணொளி ( நன்றி விக்கிப்பீடியா, ஐஎம்டிபி, கூகுள், யூட்யூப்)
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)