2 ஸ்டேட்ஸ் [ 2 STATES] [2014]


2ஸ்டேட்ஸ் படத்தின் இயக்குனர் அபிஷேக் வர்மன் ஒரு ஆர்கிடெக்டாகத் தான் இருக்க வேண்டும் என யூகித்திருந்தேன், ஆம் அவர் ஆர்கிடெக்டேதான் மும்பை krvia கல்லூரி மாணவராம் . படத்தில் அவர் அமெரிக்க ஆர்கிடெக்ட் ஐகான் லூயிகான் வடிவமைத்த இந்திய பின்னவீனத்துவ கட்டிடக்கலை அதிசயமான ஐஐஎம் அகமதாபாதின் அழகை ரசித்து அள்ளி வந்திருந்தார்.ஒரு ஆர்கிடெக்டின் கண்ணோட்டத்தில் தான் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான கட்டிடத்தின் துல்லியமான டீடெய்ல்கள் வெளிப்படும்.

இன்றும் எந்தக் கட்டிடக்கலை பயிலும் மாணவரும் படிக்கும் காலத்தில் கல்விச் சுற்றுலா செல்லும் கட்டிடம் இது, ஐஐஎம் பெங்களூரும் இதே வடிவமைப்பைப் பின்பற்றி லூயிகானின் மாணவரான பிவி தோஷியால் [இந்தியாவின் ப்ரீமியர் ஆர்கிடெக்ட்] பின்னாளில் வடிவமைக்கப்பட்டது, லூயிகான் பற்றி நான் ஏற்கனவே எழுதிய சுவையான டாகுமெண்டரி பற்றிய பதிவான  மை ஆர்கிடெக்ட்

சினிமா வரலாற்றிலேயே ஒரு படம் ஐஐஎம் வளாகத்தில் எடுக்கப்பட்டது என்றால் அது 2 ஸ்டேட்ஸ் மட்டுமே. இத்தனைக்கும் இந்த கட்டிடம் கட்டி 53 வருடங்கள் [1961] நிறைவு பெற்று விட்டது, இன்னும் இந்த வளாகத்தை ஹெரிடேஜ் காம்பஸ் என்று போற்றிப்பாதுகாத்து வருகின்றனர். அதன் இணையதள சுட்டி

அந்தப்பாடலை இங்கே கண்டு களியுங்கள்:-


படத்தில் ப்ரிமேரிட்டல் செக்ஸை மிகவும் சாதாரணமாக பிரயோகித்திருந்தார் இயக்குனர்,படத்தில் இதைப் பார்ப்பதற்கு குஜாலாக இருந்தாலும் இக்கால சந்ததிகளை மெட்ரோ லைஃப் ஸ்டைலும், பணக்கார கல்வி மையங்களும் , மது குடிப்பதும் ,சிகரட் புகைப்பதும்,திருமணத்துக்கு முந்தைய உடலுறவு தவறே இல்லை என்ற நிலையில் வைத்திருப்பதை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.

 இதை எனக்கு சுமார் 10 வருடம் முன்பே அங்கு IIM மற்றும் CEPT ற்கு கல்விச் சுற்றுலா சென்று வந்து நேரில் பார்த்துவிட்டு கதை கதையாக சொன்ன ,என் ஆர்கிடெக்ட் நண்பனை இங்கே நினைத்துப் பார்க்கிறேன்.அங்கே எந்நேரமும் மாணவிகள் மாணவர்களின் ஹாஸ்டலுக்குள் வந்து க்ரூப் ஸ்டடி[!] செய்ய முடியும்,நல்ல குளிர்காலத்தின் ஒரு விடிகாலையில் என் நண்பன் அவனுடைய நண்பனின் அறைக்குச் சென்று பெட்டியை வைத்து விட்டு,போர்வையை விலக்கி நண்பனை எழுப்பினால் உள்ளே இருந்தது நண்பனின் தோழி,இது ஒரு உதாரணம் தான்.  அங்கே அபோதே ப்ரீமேரிடல் செக்ஸ் எல்லாம் மிகச்சாதாரணம். கேவலம் உடலுறவுக்காக வாழ்க்கை முழுவதும் கூட வருவேன் என்னும் காதலன் காதலி வேடம் எல்லாம் எடுபடாதவை,அதை இந்த 2 ஸ்டேட்ஸ் படத்தின் அனன்யா பாத்திரம் பிரதிபலிக்கிறது.
சேட்டன் பகத்தை இதைவிட கலாய்க்க முடியாது

இன்றும் சென்னையின் ஒரு சில உயர் அந்தஸ்து கல்லூரிகளில் ப்ரொஃபெஷனல் துறைகளின் , ஹாஸ்டல்களில் இது சகஜமான போக்கு தானாம், அவர்களின் லேப்புக்குள் 24 மணி நேரமும் மாணவர்கள் சென்று வர முடியும். நினைத்தவுடன் குற்ற உணர்வின்றி கலவி கொள்ள வசதியாகவே இருக்கும் அடர்ந்த வன சூழலும்.சில வருடங்களுக்கு முன்னர் திருமணத்துக்கு முந்தைய உடலுறவு தவறே இல்லை என்று வாதிட்ட நடிகை குஷ்பூவை கட்டம் கட்டி அடித்தனர், ஆனால் அது கோவிலின் அருகே இருக்கும் டாஸ்மாக் கடையைப் போல மிகச்சாதாரணமாக கருதும் காலம் தொலைவில் இல்லை என்றே எண்ணுகிறேன்.

படத்தில் சென்னை பற்றியும் பிராமணர் கலாச்சாரம் பற்றியும் சில தகவல் பிழைகள் இருந்தாலும் சென்னை எக்ஸ்ப்ரஸ் போல இல்லை, தென் இந்தியர் என்றாலே நாயகிகளை கேரளா ஸ்டைல் கசவு புடவை அணிய வைத்து விடுகின்றனர்.இதிலும் அது நடந்தது.

அப்புறம் நம்முடைய பட்டினப்பாக்கம் - பெசண்ட் நகர் வரை இருந்த ப்ரோக்கன் ப்ரிட்ஜை யாரும் இத்தனை அழகாக காட்டியிருக்கமாட்டார்கள் ,அதை 1960களில் இருந்தது போன்றே , இன்றும்  மக்கள் உபயோகத்தில் உள்ளது போல காட்டி , அதில் ஒரு திருமண ஊர்வலத்தையே நடந்து போக வைத்து விட்டார்.மிக அழகான காட்சி, சென்னை வாசிகளுக்கு மட்டும் தான் தெரியும்,அது எப்படிப்பட்ட இடம் என்று.
அந்தப்பாடலை இங்கே கண்டு களியுங்கள்:-

மஹாபலிபுரம் கடற்கரைக் கோவில்கள் புராதான சிறப்பு மிக்க இடம்,என்பதால் படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்திருப்பார்கள் போலும் ஆகவே அந்த கடைசி திருமணப் பாடலை , பாண்டிச்சேரியில் செட் போட்டு எடுத்திருக்கின்றனர். கடற்கரைக் கோவிலின் தோற்றத்தை  தழுவி அமைத்த செட் மிக அருமையாக வந்திருந்தது.இந்த தகவலுக்காக படத்தை கடைசி க்ரெடிட் ஸ்க்ரோல் வரைப் பார்க்க வேண்டியிருந்தது.

அந்தப்பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்:- 
படத்தின் அந்த முக்கியமான உள்ளம் பாடும் பாடல் என்னும் திருமணப் பாடலின் வீடியோ எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை,இந்த மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் அரங்கக் காட்சி செட்டிங் ஆகும்.இதன் ப்ரொடக்‌ஷன் டிசைனர்  Amrita Mahal Nakai என்னும் பெண்  ஆவார். மிகச்சிறந்த வேலைபாடுகளால் பிரமிக்க வைத்திருந்தார்.


 இப்படம் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டிய படைப்பு, அலியா பட்டின் சொக்க வைக்கும் அழகுக்காகவும். அர்ஜுன் கபூரின் ஸ்மார்ட்னெஸ்ஸுக்காகவும், சேட்டன் பகத்தின் கதைக்காகவும்,அபிஷேக் வர்மனின் க்யூட் இயக்கத்துக்காகவும், நம் காலத்தைய கட்டிடக்கலைக்கு இவர் தந்த முக்கியத்துவத்துக்காகவும், சங்கர் எசான் லாயின் இசைக்காகவும், பினோத் ப்ரதானின் கேமராவுக்காகவும் பார்க்க பரிந்துரை செய்கிறேன்.