திருட்டு விசிடியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?



திருட்டு விசிடியை ஒழிக்க,நடிகர்கள் பர்மா பஜாரில்,பாண்டி பஜாரில் ரெய்டு செய்தால் மட்டும் போதுமா?,அது நிரந்தரத் தீர்வா?இல்லவே இல்லை,

வெளிநாட்டு உரிமை என்ற பெயரில் விற்கப்படும் படங்களை, இங்கே படம் வெளியான அதே நாளில், அங்கேதியேட்டரில் படம் ஓடுகையில் எடுத்த மட்டி ப்ரிண்ட் இணையத்தில், படம் வெளியான 2 நாட்களில் டிசி ரிப்பாக டவுன்லோட் செய்யக் கிடைக்கிறது, ஒரே வார காலத்தில் அங்கே நல்ல டிவிடி வெளியானதும்  5.1 சேனல் சரவுண்ட் டிவிடி ரிப்பே இணையத்தில் டவுன்லோட் செய்யக் கிடைக்கிறது,

இணையத்தில் அப்லோட் டவுண்லோட் சர்வர்கள் இதற்கென்றே 50க்கும் மேலே வெற்றிகரமாக இயங்குகிறது, அவர்களுக்கு சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் காவல்துறை மற்றும் சட்ட வல்லுனர்கள் மூலமாக முறையான கடுமையான எச்சரிக்கை மின்னஞ்சல் சென்ற ஒரே நாளில் யாரோ ஒருவர் அவர் தளத்தில் அப்லோட் செய்த புதிய தமிழ் படத்தை அந்த தளம் அழித்துவிடும்,

 இது தான் நடைமுறையில் அந்த சர்வர்கள் பின்பற்றும் தொழில்தர்மம், இதைக்கூட தமிழ்சினிமா பிரமுகர்கள் செய்வதில்லை, இதே போல எங்கெங்கேயெல்லாம் புதிய தமிழ்படம் அப்லோட் செய்யப்பட்டிருக்கிறதோ, அந்த தளத்துக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பப்படவேண்டும்,இது முதலாம் உத்தி

இது சிரங்கை சொறிதல் போன்றது, எரிச்சலான அதே சமயம் சுகமானது, அப்படி பலன் தராத பட்சத்தில் தமிழ் திரையுலகினரே ஃபேக்[fake] டாரண்டை தங்கள் கம்ப்யூட்டர் சவ்வி[savvy] உதவியாளர்கள் மூலம் மேற்கண்ட இணையதளங்களில் லோட்டஸ், உயிர்வாணி, ஐங்கரன்,என்ற பெயரில் அப்லோட் செய்து  புதுப்படம் டவுன்லோட் செய்து பார்ப்பவர்களை எரிச்சலுறச் செய்ய வேண்டும் இது இரண்டாம் உத்தி.

அப்படியும் பலன் தராவிட்டால், பிஎஸ் என் எல், ஏர்டெல்,டொக்கோமா, ஆக்ட் ப்ராட்பேண்ட் + காவல்துறை + சட்ட வல்லுனர்கள் துணையுடன் யார்? உள்ளூரிலிருந்து டவுன் லோட் செய்து புதிய படத்தைக் கண்டு களித்து, 
யூ எஸ்பி ட்ரைவில் காப்பி செய்து சக நண்பர்களுக்கு வழங்கி இன்புருகிறார் என்பதை ஐபி அட்ரெஸ் கொண்டு கண்டறிந்து ,அவர்களுக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும்,

இது மூன்றாம் உத்தி,  இவை எல்லாம் கேரளாவில், ஆந்திராவில், கர்நாடகாவில், பாலிவுட்டில்   வெற்றிகரமாக சாத்தியமாகியிருக்கிறது, ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இது குறித்து ஒன்றும் தெரியாதது போல எல்லோரும் கள்ள மௌனம் சாதிப்பது வேடிக்கையளிக்கிறது,  இத்தனை விஷய ஞானம் கூட இல்லாதவர்களா? இங்கே படம் எடுக்கின்றனர் ?என ஐயமுறச் செய்கிறது.

இப்படித்தான் மற்ற மாநிலங்களில் திருட்டு விசிடியை அறவே ஒழித்திருக்கின்றனர்[அதாவது படம் வெளியான 5 மாதத்துக்கேனும் நல்ல ப்ரிண்ட் டவுன் லோட் செய்யக் கிடைக்காது] , சராசரியாக 100 பேரில் 50 பேர் திருட்டு விசிடியில் புதிய படம் பார்த்தால்,50 பேர் டவுன்லோட் செய்து தான் பார்க்கின்றனர்,அந்த சர்வர்களில் இருந்து தான் திருட்டு விசிடி,டிவிடிக்கள் தயாராகின்றன,அது தான் திருட்டு விசிடியின் ஊற்றுக்கண்,எனவே அதை கண்டறிந்து அகற்றும் வழியை தான் இங்கே சொல்லியிருக்கிறேன்.

இங்கே போய் பாருங்கள் நேற்று வரை எத்தனை புதுப்படங்களை கூவி கூவி டவுன்லோட் செய்ய அழைக்கின்றனர் என்று?
https://torrentz.eu/search?f=tamil

இங்கே சென்று பாருங்கள் எத்தனை இணையதள சர்வர்களில் ஞ்சான் படம் கிடைக்கிறது என்று?
https://torrentz.eu/ba694d15e1fff6668907b95a4e352874787b4504
இது சர்வரின் முதல் பக்க ஸ்க்ரீன் ஷாட் தான்
மலையாள திரைப்படங்களின் டிவிடி ரிப் படம் வெளியாகி 3 முதல் 5 மாதம் வரை அங்கே வெளியாவதில்லை,அதற்கு நல்ல உதாரணம் த்ருஷ்யம்,நல்ல டிவிடி ரிப் வர 5 மாதம் ஆனது,அதை இன்றும் இங்கே ஹைப்பர் மார்கெட்டுகளில் ஒரிஜினல் டிவிடி 30 திர்காமுக்கு குவித்து வைத்து விற்கின்றனர்,வாங்கியும் செல்கின்றனர், அதே போலவே இப்போது ஓடிகொண்டிருக்கும் பெங்களூர் டேஸ்,எங்கும் டிவிடி ரிப் கிடைக்காது,வைரஸ் ப்ரிண்ட் அல்லது ஃபேக் டாரண்ட் தான் கிடைக்கும்,அல்லது மூன்றாம் தரமான மழை பெய்வது போன்ற விசிடி தான் கிடைக்கும், அதன் நல்ல 5.1 சேனல் சவுண்ட் டிவிடிரிப் படத்தின் ஒரிஜினல் டிவிடி வந்து 1வாரம் கழித்தே டாரண்டுகளில் வரும்,

ஆனால் தமிழ் படத்தின் நிலை என்ன? லோட்டஸ்  நிறுவனத்தின் 5.1 சேனல் சவுண்ட் தரம் கொண்ட டிவிடி ரிப்கள் எந்த தமிழ்ப் படமும் வெளியான ஒரே வாரத்தில் டாரண்டில் கூவிக்கூவி கத்தரிக்காய் விற்பதுபோல கிடைக்கிறது,இதை ரசிகர்கள் தரவிறக்கிப்பார்க்காமல் என்ன செய்வார்களாம்?

இதை ஏன் தமிழ் திரையுலக தயாரிப்பாளர்,இயக்குனர் நடிகர் சங்கங்களால் தடுக்க முடியவில்லை? எங்கே தவறு நடக்கிறது? என்று கண்டுபிடிக்க இத்தனைக் காலம் ஏன்? ஏன் அதற்கு யாரும் குரல் கொடுக்கவில்லை?

இன்றைய காலகட்டத்தில் ஒருவரின் வீட்டில் பிஎஸ் என் எல் அன்லிமிட்டட் கனெக்‌ஷன் இருந்தால் போதும் 8 ஜிபி வரை 2 எம்பிபிஎஸ் வேகம் தருகின்றனர், அதில் மாதத்துக்கு சுமார் 8 புதிய தமிழ்ப்படங்கள் வரை தரவிறக்கிப் பார்க்க முடியும்?

இவர்கள் அதை தடுப்பதில்லையே ஏன்?திருட்டு விசிடி,டிவிடி பார்ப்பது மற்றும் தான் குற்றமா?இப்போது அதிநவீன செல்போன்களில் நேற்று ஒளிபரப்பிய நாதஸ்வரம் சீரியலைக்கூட யூட்யூப் டவுன்லோடர் மூலம் தரவிறக்கி பஸ் பயணத்தில் பார்த்துக்கொண்டு செல்கின்றனர்.யாராலாவது தடுக்க இயலுமா?

இனியேனும், மலையாள சினிமா நண்பர்களிடம் இதை எப்படி ஒடுக்குவது என உதவி கேளுங்கள். திருட்டு விசிடியை ஒழிக்க இறங்கும் முன் திருட்டு டிவிடி ரிப்பை ஒழியுங்கள்.இணைய அப்லோடிங் டவுன்லோடிங்கை புதியபடம் தியேட்டரில் ஓடும் காலம் வரையிலேனும் வெளியாகாதவாறு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்.