இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அஞ்சலி


டிசம்பர் 23 2014, இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்கள் இன்று மறைந்து விட்டார்,தமிழ் சினிமாவில் யாராலும் நிரப்பவோ எட்டவோ முடியா உயர்ந்த இடம் அது, ஈடு செய்ய முடியா பேரிழப்பிது,

கே.பாலச்சந்தர் அவர்கள் அளவுக்கு சக படைப்பாளிகளை, கலைஞர்களை பாராட்டி ஊக்குவித்த ஒருவர் தமிழ் சினிமாவில் யாரும் இலர். அவர் எத்தனையோ முறை தன்னைவிட சினிமாத்துறை அனுபவத்தில் ஜூனியர்களான பாரதிராஜா, பாலுமகேந்திரா,மகேந்திரன்,மணிரத்னம், பாக்யராஜ் போன்ற சக படைப்பாளிகளை மனதாரப் பாராட்டிஅவர்கள் படைப்புகளை பொதுவெளியில் வியந்து பேசியிருக்கிறார்,

காலம் கனிகையில் அவர்களுடன் இணைந்து பணியாற்றியுமிருக்கிறார். தன் தள்ளாமையிலும் புதிய கலைஞர்களின் படைப்புகளைத் தேடிப் பார்த்து,கேட்டு,படித்து ஊக்கம் அளித்து வந்தது கண்கூடு, தான் சாதித்து விட்டோம் என்ற இருமாப்போ வித்யாகர்வமோ இன்றி அடுத்தவர் படைப்பை பாராட்டி சிலாகிப்பது ஒரு உயர்ந்த குணம், அதை ஒவ்வொருவரும் இவரிடமிருந்து கற்க வேண்டும்.

அவர் அன்று இட்ட விதைகள் இன்று கை தேர்ந்த நடிகர், நடிகைகளாக, இயக்குனர்களாக, பாடலாசிரியர்களாக, கதாசிரியர்களாக, இசையமைப்பாளராக , ஒளிப்பதிவாளர்களாக ,நடன இயக்குனர்களாக, பாடகர்களாக கற்பக விருட்சமாக வளர்ந்துள்ளது,

அவர் மறைந்தாலும் அவரது சாதனைப் படைப்புகள் எல்லோர் மனதிலும் என்றும் நீங்காமல் வாழும், பெண்ணினத்துக்கு அவர் கொடுத்த உரிமைக்குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும். அவருக்கு அஞ்சலிகள், அவர் வீட்டாருக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.

1971ல் மறு ஜென்மம் கண்டது போல இப்போதும் மீண்டு வருவார் என்று நம்பியிருந்தேன்.அது நிகழவில்லை.

இத்தருணத்தில் பாப்லோ நெருதாவின் கவிதை வரிகளை நினைவுகூருவது இங்கே பொருத்தமாயிருக்கும்.

சுஜாதா தன் நிறமற்ற வானவில் நாவலில் எத்தனை ரத்தினச் சுருக்கமாக ,நாம் வாழ்வில் எச் சூழ்நிலைக்கும் பொருத்திப் பார்க்கக் கூடிய பாப்லோ நெருதாவின் கவிதையை மேற்கோள் காட்டுவதைப் பாருங்கள்.

கடவுள் ஒருவனுடைய சுகதுக்கங்களை பிரத்யேகமாக அமைக்கிறாரா என்ன ...

பிரபஞ்சத்து விதிகள் மனிதனை மதிக்காதவை.....
அவனுக்கு அப்பாற்பட்டவை...
அவன் அழிந்த பின்னும் நீடித்திருப்பவை...

=====
அவர் குறித்து நான் முன்பு எழுதியவை இந்த லேபிளில் படிக்கலாம்
http://geethappriyan.blogspot.ae/…/%E0%AE%95%E0%AF%87.%E0%A…
ஏக் துஜே கேலியே திரைப்படப் பாடல்களின் ஜூக் பாக்ஸ்,அப்படியே டைம் மெஷினில் ஏறி 80 களுக்குச் சென்று வாருங்கள்.