என்னை அறிந்தால் முதுகெலும்பு கொண்ட கலைஞன் விவேக் தோன்றும் சென்னை ஏர்போர்ட் காட்சி



என்னை அறிந்தால் படத்தில் விவேக் சென்னையின் அவமானமான புதிய [?!!!]விமான நிலையத்தை செம கலாய் கலாய்த்திருக்கிறார்,ஒரு காட்சியில் அஜீத்தை வரவேற்க விமான நிலையத்துக்குள் வரும் அவர் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வருகிறார், ஏனென்று எல்லோரும் விழிக்க, இப்பொதெல்லாம் விமானத்தில் வருவது கூட ரிஸ்க் கிடையாது,இந்த விமான நிலையத்துக்குள் வருவது தான் ரிஸ்க், இது வரை 28 முறை இதன் மேற்கூரையின் ஃபால்ஸ் சீலிங் கீழே விழுந்திருக்கிறது என்கிறார்.

ஆனால் இன்றைய நிலவரப்படி ஜன 13 2015 அன்று 32 ஆம் முறையாக மேற்கூரையின் ஃபால்ஸ் சீலிங் கீழே விழுந்தது,

இந்த மாலைமலர் செய்தியை பாருங்கள்,
http://www.maalaimalar.com/2015/01/13013646/Glass-door-breaks-in-chennai-a.html
இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த காலத்துக்குள்ளாக 4 முறை விபத்து நடந்திருக்கிறது பாருங்கள். அடுத்த முறை ஃபால்ஸ் சீலிங்கோ கண்ணாடி பேனலோ உடைந்து விழும் போதும் வெட்கம் கெட்ட ஊழல் அதிகாரிகள் வழக்கம் போல நான் இல்லை அவன் என்று சாக்கு போக்கு சொல்லி தப்பிப்பார்கள்.

இந்த சமூக சிந்தனை பொருந்திய அவல நகைச்சுவையை வெட்டாமல் அனுமத்த சென்சார் அதிகாரிக்கு முதன் முறையாக நன்றி,இதை துணிந்து பேசி நடித்த விவேக்கிற்கும் ,துணிந்து இயக்கிய கௌதமிற்கும் நன்றி.இது நாளை நாம் போய் வரவேண்டிய இடமாயிற்றே,தேவையில்லாமல் நம்மை அதிகாரிகள் அலைகழிப்பார்களே என்று பயப்படாமல் இப்படி ஒரு காட்சி வைப்பது அபூர்வமானது,இதை தான் முதுகெலும்பு கொண்ட படைப்பாளியின் படைப்பு என்பார்கள்.