எழுத்தாளன், கட்டிடக்கலைஞர் பின்னணியில் சென்னையில் பத்து வருடங்கள் அமீரகத்தில் பதினைந்து வருடங்கள் பணியில் இருந்தேன், தற்போது மூன்று வருடங்களாக சென்னையில் கட்டிடக்கலை வாஸ்து ஃபெங் ஷூய் வடிவமைப்பாளராக DFD Dial for Design என்ற online design சேவையைத் துவக்கி கட்டிடக்கலை வாஸ்து ஃபெங்ஷூய் குறித்த சிறப்பு ஆலோசனைகள் வரைபடங்கள் வழங்கி வருகிறேன் . ஓய்வில் அரிய உலக சினிமாக்களையும், கலை, சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியம், வாஸ்து,கட்டுமானத்துறை கட்டிடக்கலை பற்றி அதிகம் எழுதுகிறேன்.
BBC Storyville India's Daughter
https://www.youtube.com/watch?v=1Tfaurfg7EQ
இந்த India's Daughter பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பானது நல்லதற்குத் தான்,இதன் மூலம் அந்த கொடிய வன்புணர்வு குற்றவாளிகளுக்கு இனியும் தாமதிக்காமல் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் நல்லதே!!!
இவர்களுக்கு பரிந்து வாதாடிய வழக்கறிஞருக்கும் கடும் அபராதம் விதிக்க வேண்டும்.அவர் மீடியாவில் நல்ல பெண்ணுக்கு நடுராத்திரியில் என்ன வேலை? என்று பெண்கள் பற்றி இழிவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
எனக்கு மரண தண்டனையில் முழுஒப்புதல் இல்லை,ஆயினும் இது போன்ற கொடிய மிருகங்களுக்கு மரண தண்டனைய விட அதிகமான தண்டனை ஒன்றில்லை என்பதால் அதையே கேட்கிறேன்.ஒவ்வொரு பெண் குழந்தையை பெற்றவனின் கவலையும் அதுவாகத்தான் இருக்கும்.