தாம்பரம் சானட்டோரியம் பற்றிய சுவையான வரலாறுஇப்போது தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சித்தா வளாகம் உள்ள இடத்தில் 1990கள் வரை இந்த படத்தில் இருக்கும் குடில்களின் எச்சங்கள், சிதிலங்களை நான் பார்த்திருக்கிறேன். எதனால் இக்கட்டிடங்கள் பாழடைந்து கிடக்கின்றன என அங்கே சாலைக்கு மறுபுறம் இருக்கும் அமரர் ஜீவா தெருவின் சிறிய துவக்கப் பள்ளியில் படிக்கையில் மிகவும் குழம்பியிருக்கிறேன், அவை பேய்வீடுகள் என உடன் படித்த நண்பர்கள் கதை கட்டி விட பயந்திருக்கிறேன்.இன்று தான் அதற்கு விடை கிடைத்தது,

1928ஆம் ஆண்டு டிபி நோய்க்கு சானிட்டோரியம் ஆரம்பித்த இங்கிலாந்தில் மருத்துவம் படித்த சவுரிமுத்து அவர்கள் அமைத்த 12 குடில்கள் இவை.அவரின் மனைவி மார்கரெட் இங்கிலாந்து நாட்டவர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் இங்கே வந்து இந்த பச்சைமலை அடிவாத்தில் டிபி சானிட்டோரியத்தை துவக்கினாராம்,

இயற்கையே சிறந்த மருத்துவர் என்னும் சித்தாந்தத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட சவுரிமுத்து அவர்கள் மகாத்மா காந்திக்கும் நண்பராம். இங்கிலாந்து சென்ற இவர் மனைவியின் திடீர் மரணத்தால் இந்த சானிட்டோரியத்தை கவனிக்கும் ஆர்வம் குன்றியவர், 1937ல் இந்த 250 ஏக்கர் நிலத்தை அரசிடம் தந்து விட்டு  இங்கிலாந்திலேயே போய் நிரந்தரமாக தங்கி விட்டதாக படித்தேன்.

இதில் முதலில் சிகிச்சை பெற்ற நோயாளிகளில் தன் 98ஆம் வயதில் சமீபத்தில் மறைந்த நீதியரசர் கிருஷ்ணய்யரும் ஒருவர்.

மேலும் சவுரிமுத்து அவர்கள் இங்கிலாந்தில்  Isle of Wight என்னும் இடத்தில் Longford சானிட்டோரியத்தில் தலைமை மருத்துவராக பணியாற்றுகையில் அவரிடம் 1918 ஆம் ஆண்டில் கணிதமேதை ராமானுஜமும் தன் காசநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாராம்.

1946ஆம் ஆண்டில் 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இது மாற்றப்பட்டதாம். 1950ஆம் ஆண்டு ராயபுரத்தில் இருந்த காசநோய் மருத்துவமனையும், ராயப்பேட்டையில் இருந்த காசநோய் மருத்துவமனையும் இங்கே மாற்றப்பட்டதாம். 1986 ஆம் ஆண்டு இந்த சானிட்டோரியம் நெஞ்சகநோய் மருத்துவமனையாக பெயர்மாற்றம் செய்யப்பட்டதாம்.1993ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே பெரிய எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவருக்கான சிறப்பு சானிட்டோரியமாகவும் இது மாற்றப்பட்டது.

முக்கியமான ஆங்கில  மூலக்கட்டுரைகளின் சுட்டி 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சுவாரஸ்யமான தகவல்கள்... நன்றி...

மோகன்ஜி சொன்னது…

இப்போது தான் கேள்விப் படுகிறேன்... நல்ல தகவலுக்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)