மகாநதி | எங்கேயோ திக்கு திசை காணாத | மகாநதி | 1994 | கமல்ஹாசன்











https://youtu.be/Ze-VovuJh7I

மகாநதி திரைப்படத்தின் தமிழ் வடிவ பாடல்கள் அனைத்தும் கவிஞர் வாலி எழுதினார்,பிறர்வாடப் பல செயல்கள் கவிதை  மட்டும் மகாகவி பாரதி எழுதியது,  

எத்தனை வலி தோய்ந்த சக்தி மிகுந்த வரிகள் இவை, இப்படத்தை சோகப் படம் என்று பார்க்காமல் தவிர்த்து விட்டவர்களை அறிவேன், இது மனதை புடம் போடுகிற படைப்பு, அனைவரும் பார்க்க வேண்டும், கண்ணீர் விட்டு ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். இந்த எங்கேயோ திக்கு திசை பாடலின் prelude பற்றி தனிப்பதிவாக இட்டுள்ளேன், பல்லவி சரணத்தில் இரண்டு வேற்று மொழிப் பாடல்களில் கங்கையையும் காவிரியையும் சங்கமிக்க வைத்த வியத்தகு சாதனை இது.

படகில் போகையில் துவங்கும் மாதங்கி தாரா ஹோ மா பாடல் நிறைவு பெற்றதும் அங்கு ஹவ்ரா பாலத்தின் மீது செல்லும் ரயிலை மகள் காவேரி , கிருஷ்ணாவுக்கு கைகாட்டுகிறாள், அவள் சோனாகாச்சி வந்த பின் பார்க்கும் முதல் வெளியுலகம்,  பார்க்கும் முதல் ரயில், இன்னும் மனதளவில் குதூகலத்துடன் தந்தை கிருஷ்ணாவிடம் காட்டுகிறாள் , திரு நாகேஸ்வரத்தில் கிருஷ்ணா பார்க்கும் பாசெஞ்சர் ரயில் நமக்குள் மகிழ்ச்சியை தோற்றுவிக்கும், சென்னை மத்திய சிறையில் பார்க்கும் local ரயில் பிரிவினைத் துயரைச் சொல்லும்,   இந்த கல்கத்தா ரயில் நம்பிக்கை ஒளியைச் சொல்கிறது.

எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்
எம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம்தான்

காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி

கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனது
கண்ணாற நானும் காண இத்தனை நாள் ஆனது

இரு கண்ணே செந்தமிழ்த்தேனே தந்தையின் பாசம் வென்றதடி
பசும் பொன்னே செவ்வந்திப்பூவே இத்துடன் சோகம் சென்றதடி
நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது

இப்பாடலில் எடிட்டர் N. P. Satish ஆற்று நீருக்கடியில் மூச்சடக்கி  சுழன்று நீந்தும் கிருஷ்ணாவைக் காட்டியவர் , அடுத்த காட்சியில் சீட்டுக்கம்பெனியில் முதலீடு செய்த மக்கள் கிருஷ்ணாவை அதே போல சுழற்றி பந்தாடுவதை தொகுத்திருக்கிறார் Technical brilliance editing .

 நம்மூரில் 1994 ஆம் ஆண்டு மகாநதி திரைப்படத்தை ஊன்றிப் பார்த்த யாரும் 1996 ல் புற்றீசலாக பரவிய தேவி கோல்ட் ஹவுஸ், ரமேஷ்கார்ஸ், PTBF, RBF  போன்ற நிதி நிறுவனங்களில் பணத்தை முடக்கியிருக்க மாட்டார்கள், கமல்ஹாசன் ஒரு தீர்க்கதரிசி.

பாடலின் வங்காள மொழி prelude இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159635424461340&id=750161339

#மகாநதி,#கமல்ஹாசன்,#இசைஞானி, #கங்கை, #C_Ashwath, #Jaanapada,#Baul_sangeet,#MS_பிரபு_DOP,#NP_Satish_editor


எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com