ரங்கம் |(அரங்கேற்றம்) |மலையாளம்| M.T.வாசுதேவநாயர் | ஐவி சஸி

 ரங்கம் (அரங்கேற்றம்) மலையாள திரைப்படம் M.T.வாசுதேவநாயரின்









கதை,  1985 ஆம் ஆண்டு ஐவி சஸி இயக்கத்தில் வெளியான திரைப்படம் , 


இதில் கதக்களி கலைஞர் அப்புண்ணியாக மோகன்லால் நடித்திருந்தார், பரதநாட்டியம் பயில விரும்பும் சந்திரிகாவுக்கு (ஷோபனா) நல்ல வழிகாட்டியாக இருந்து முன்னின்று உதவுகிறார், 


அவரை விரும்புகிறார்,ஆனால் அதை வெளிப்படுத்த தயங்கி மிகவும் தாமதிக்கிறார் , இச்சந்தர்ப்பத்தில் நடனப்பள்ளியின் உரிமையாளரான கதக்களி நடனக்கலைஞர் ரவீந்திரன் தன் காதலை  ஷோபனாவிடம் தக்க தருணத்தில்  வெளிப்படுத்தி மணமுடிக்கிறார் , 


கால ஓட்டத்தில் அப்புண்ணியின் எல்லா கனவுகளும் கலைந்து போகிறது.ஆனால் அவர் தன் குருவின் நடனப் பள்ளியே சாஸ்வதம் என்று கதக்களி பயிற்றுவிக்கிறார், 


ரவீந்திரன் ஒரு குடிகேடி ஸ்திரி லோலன் என்பதை இப்போது தெரிந்து கொண்ட சந்திரிகா அவரைப் பிரிந்து வந்து அப்புண்ணியின் நடனப் பள்ளியில் தங்கி சிறுமிகளுக்கு பரதநாட்டியம் பயிற்றுவிக்கிறார், 


அங்கும் வந்து ரவீந்திரன் சல்லியப்படுத்துகிறார், தன்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ அழைக்கிறார், ஆனால் சந்திரிகா மறுக்கிறார், தன்னுடன் வந்து வாழாவிட்டால்  அவளை கொன்று விடுவேன் என மிரட்டுகிறார் ரவீந்திரன்.


அன்று நடனப் பள்ளி மேடையில் நடந்த  கதக்களி நடனத்தில் அப்புண்ணி  அர்ஜுனனாகவும் ரவீந்திரன் துச்சாதனனாகவும் வேடமிட்டு உக்கிரமாக கதக்களி  நடனமாடுகின்றனர், 


ஆட்டத்தின் முடிவில் அப்புண்ணி ரவீந்திரனை நிஜமாகவே  வதம் செய்து விடுகிறார், முன்பு காதலியின் வசதியான வாழ்வுக்காக தன் காதலைத் தியாகம் செய்தவர் இப்போது காதலியின் நிம்மதிக்கு வேண்டி தன் வாழ்க்கையை நசித்துக் கொண்டு சிறை செல்கிறார்.


படத்தின் இசை K.V. மகாதேவன் அவர்கள், கமலதலம் படத்திற்கு முன்னோடியான திரைப்படம். இப்படத்தில் தொடர்ந்து மோகன்லால் கதக்களி கலைஞராக வானப்ரஸ்தம் படத்திலும் நடித்திருந்தார்.


படத்தின் பாடல்களை S.ரமேஷன் நாயர் எழுதினார்,படத்தின் ஒளிப்பதிவு N. A. Thara


இசை ஆல்பம்


https://youtu.be/-rYJHiAIr4Y


https://youtu.be/mfV525J57lc


https://youtu.be/DBPmVDvRv5U


https://youtu.be/38r7paQfF54


https://youtu.be/1akPHB-ujog


#ரங்கம்,#மோகன்லால்,#ஷோபனா,#ஐவி_சஸி,#MT_வாசுதேவநாயர்,#KV_மகாதேவன்