புதுப்பாடகன் | 1990 | தாணு


புதுப்பாடகன் (1990) திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இசை , பாடல்கள் இயக்கம் என ஆறு துறையும் கலைப்புலி S.தாணு செய்தார்,  

திரைப்படத்தின் பூஜை ஆடியோ விளம்பரம் இவற்றுக்கு  பயன்படுத்திய பெயர் தெருப்பாடகன், ராவுத்தர் ஃபில்ம்ஸில் பெயர் சென்டிமெண்ட் தோல்வி பயத்தால் இறுதி நேரத்தில் பெயர் மாற்றி வெளியிட்டனர்.

1990 ஆம் ஆண்டு இசைஞானி இசையில் சுமார்  32 தமிழ் படங்கள் வெளியானது,இருந்தும் இப்படத்தின் 12 பாடல்களில் 5 பாடல்கள் 

(1.மலைய குடைஞ்சு பாதைய வச்சேன்
2.அத்த பொண்ணு வாடி
3.அதிகாலை நான் பாடும் 
4.ஏபுள்ள எங்கிருக்க?
5.காதோரம் கனகாம்பரம் )

மிக  இனிமையாக அமைந்து ஒளியும் ஒலியும் ஒளிபரப்பில் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது, 

படத்தின் கதை அப்போதைய டி.ராஜேந்தர் காலத்து ஓவர் சென்டிமெண்ட் காதல் தோல்வி படங்களின் பஞ்சாமிர்த கலவை என்பதால் படம் ஓடவில்லை, 
 தாணுவுக்கும் இசை அமைப்பாளர் என்ற பெயரை பின்னாளில் வாங்கித் தரவேயில்லை,இன்றும் கூட தாணு ஒரு இசை அமைப்பாளர் என்றால் பலரால் நம்ப முடியாது, இன்றும் இந்த பாடல்களை சந்திரபோஸ் ஹிட்ஸில் அடக்கி விடுவர், தாணுவின் கூலிக்காரன் திரைப்படத்துக்கு டி.ராஜேந்தர் இசை என்பதும் குறிப்பிடத்தக்கது.