அடேய் மார்க்கு!!!

மனிதர்களில் வக்கிரம் மிகுந்தவர்களை சமூக வலை தளங்களில் நிறைய  பார்க்கலாம், ஃபேஸ்புக் நிறுவனர் தன் பக்கத்தில் தன் மூன்றாவது குழந்தை படத்தை பதிவிட்டதில் வாழ்த்த கூட வேண்டாம், எத்தனை கீழான கருத்துகளை பதிவிடுகின்றனர் என போய் பாருங்கள்,அவர் அடுத்து நான்காவது குழந்தைக்கு அடிபோடுகிறார் என மலினமான கிண்டல், அடேய் மொழி விளி வேறு,அவர் ஹார்வர்ட் ட்ராப் அவுட்,அது சரி  ஹார்வர்ட் என்றால் என்ன தெரியும்? பெருமுதலாளிகள் எத்தனை குழந்தை பெறுகிறார்களோ அத்தனை எதிர்கால நிறுவனங்கள் என்பது கண்கூடு, எத்தனையோ பேருக்கான வேலைவாய்ப்பை தருபவர்கள் அந்த குழந்தைகள்.

முகப்புத்தகம்  நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ? அப்படி பலனை அள்ளித் தரும்,
நல்லதற்கும் பயன்படுத்தலாம், கெட்டதற்கும் பயன்படுத்தலாம், எத்தனையோ பேருக்கு ஆயிரக்கணக்கில் வாடிக்கையாளர்களை வழங்கி உள்ளது முகப்புத்தகம், அந்த நன்றி துளி கூட இல்லாமல் அவரின் குழந்தை படத்தை பகிர்கையில்  வக்கிர சேற்றை பயனாளிகள் வாறி அடிக்கின்றனர்.

புதிய வேலைக்கு ஆள் எடுக்கையில் HR 3rd party check என ஒரு வழக்கம் உள்ளது, அவர்களின் பணி சமூக இணைய தளங்களில் அந்த profile ஐ ஆராய்வர், சமூக இணையதளத்தில் ஒரு மோசமான கருத்து போதும் நல்ல எதிர்காலம் பாழாகி விடும்.