நீதியரசர்களா?நிதியரசர்களா?


மூன்று தீர்ப்புகள்:-
முதல் தீர்ப்பு:-[பாரதம்]

லகின் மிக மோசமான ரசாயன பேரழிவாய் பேசப்படும் போபால் விஷவாயு வழக்கு கால் நூற்றாண்டுகளாக நடந்து ,இறுதிக்கட்டத்தை அடைந்து, உலகே  எதிர்பார்த்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது, இம்முறையும் நீதியரசர்கள், நாங்கள் சிறந்த நிதியரசர்களும் கூட  என்பதை  நிரூபித்து விட்டனர்.
தாமதிக்கப்பட்ட அரசநீதியாக யூனியன் கார்பைட்டின் அப்போதைய சேர்மனான கொலைகாரன் கேஷுப் மகேந்திராவுக்கு 2 வருடம் விஐபி சிறையும், ஐந்து லட்சம் ரூபாய் பிச்சைக்காசு அபராதமும் , பின்னே அன்று மாலையே பெயிலும் வழங்கப்பட்டது, கூடவே கைதான அல்லக்கைகள் ஏழு பேருக்கும் அதே 2 வருடம் விஐபி சிறையும், தலா ஒரு லட்சம் ரூபாய் பிச்சைக்காசு அபராதமும் , பின்னே அன்று மாலையே பெயிலும் வழங்கப்பட்டது, 
னி அநீதி இழைக்கப்பட்ட ஏழை பொது மக்கள்  குற்றம் சாட்டப்பட்ட கயவனை கோர்டு வாசலிலேயே அடித்துக்கொல்லுவது ,அல்லது குழுவாய் தற்கொலை செய்துகொள்வது தான் உத்தமம்,அவர்கள் எக்கேடு கெட்டாலும் அரசியல்வாதிகளுக்கு கவலையில்லை, கவர் கொடுத்து வேறு மாநிலத்திலிருந்து  கூட ஆட்களை அழைத்து வந்து ஓட்டு வாங்கத் தெரியும்
அப்பாவி மக்கள் இப்படி 26 வருடம் நீதியரசர்களுக்காக பொறுத்திருந்தால் குளுகுளுவென கோடை விடுமுறை முடித்து வந்த கையோடு எழுதும் அவர்கள் பேனா இப்படி தான் தீர்ப்பு எழுதும்.
ந்த கொலை பாதகத்தை ஒருவன் இஸ்ரேலில் நிகழ்த்தியிருந்தால் கொலைகாரர்கள் எங்கே போய் பதுங்கினாலும் முனிக் படத்தில் வருவது போல அவனை தேடிப்போய் கருவருத்திருக்கும் அந்த அரசாங்கம்,22000 பேரை கொன்ற கயவன் வாரன் ஆண்டர்சன்னை இன்னும் ஹவாய் தீவில் ஓவ்வெடுக்க விட்டிருக்கிறோம் நாம். இது பாரத தேசமாயிற்றே! ஃப்ரீ கண்ட்ரி ஃபார் ஆல் சார்ட் ஆஃப் க்ரைம். பெஸ்ட் ஆஃப் லக்,கரப்டட் கார்பொரேட்ஸ்.
=========
இதையும் வலியுடன் படித்து விடுங்கள்,என் மனதுக்குள் அசிங்க அசிங்கமாய் திட்டுவதற்கு எந்த கொம்பனும் புடுங்கமுடியாது.

இரண்டாம் தீர்ப்பு:-[அமீரகம்]

போன வருடம்,நவம்பர் மாதம் அமீரகத்தில்,  பாகிஸ்தானை சேர்ந்த 4வயதுசிறுவன் ஒருவன் 30 வயது உள்ளூர்-எமராத்தி ஒருவனால் மசூதியின் கழிவறையிலேயே வன்புணர்ச்சி செய்து சாகடிக்கவும் பட்டான்,அவனுக்கு துபாய் உச்சநீதி மன்றம் நிபந்தனை,மேல்முறையீடு அற்ற மரண தண்டனை விதித்துள்ளது. சீக்கிரமே அவன் சாவதை அச்சிறுவனின் ஆன்மா பார்க்கும், சிறுவனின் பெற்றோருக்கு அடிமனதின் வலியும் குறையும், கொலை, கொலைக்கு தீர்ப்பாகாது! என சொல்லும் மகாத்மாக்கள் பேருந்தில் தன் காலை மிதிக்கும் நபரை திருப்பி மிதிக்காமலாவது இருக்க முடியுமா? என முயன்று பார்க்கவும்.தனக்கு ஏற்பட்டால் இழப்பு,அடுத்தவனுக்கு ஏற்பட்டால் செய்தி.

மூன்றாம் தீர்ப்பு:-[அமீரகம்]

சென்ற வருடம்,தன் 36 வயது தென் ஆப்பிரிக்க காதலியை பேஸ்பால் மட்டையால் அடித்துக்கொன்று,கல்லைக்கட்டி கடலில் எறிந்த இங்கிலாந்தை சேர்ந்த 43 வயது ஜாக்சன் துரைக்கு, துபாய் உயர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை,மேல்முறையீடு,பெயில் அற்ற 15 வருட கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. அவன் தண்டனையை பூரணமாய் முடித்துவிட்டு போக 58 வயதாகியிருக்கும், அதன் பின் அவன் நாடு கடத்தப்படுவான், அவனுக்கு அதுவரை குடும்பம்,குடி,கூத்தி,கும்மாளம் அறவே கிடையாது, தண்டனைக்கு பின்னான அந்த நடைபிண வாழ்க்கை எவ்வளவு பெரிய தீர்ப்பு,? அமீரக நீதியரசர்களை வணங்குகிறேன்.
=========
இது குறித்து நான் முன்பு எழுதிக்கிழித்தது இங்கே


இன்று நண்பர் கருந்தேள் வேதனையுடன் எழுதிய பதிவு:- 

வேரைத் தேடி வெட்டு, இல்லை குறட்டை விட்டுத் தூங்கு…

 இது நண்பர் சுபதமிழினியன் அவர்களால்  இதே போபால் அவலத்தை பற்றி எழுதப்பட்ட சமூக விழிப்புணர்வு இடுகை.

சென்னை அருகே பெரும் ஆபத்து!

இது திரு.சொக்கன் அவர்களால் கல்பாக்கம் அணுக்கதிர்வீசினைப் பற்றி எழுதப்பட்ட சமூக விழிப்புணர்வு இடுகை.ஆபத்து வெகு தொலைவில் இல்லை என காட்டும்.

கொல்பாக்கம் - கதிர்வீச்சு பயங்கரம்

 இது மரக்காணம் பாலா அவர்களால் உள்ளக்குமுறலுடன் எழுதப்பட்டது, கைகா அணுமின் நிலையத்தில் வெளிச்சத்துக்கு வந்த சீர்கேடுகள், கல்பாக்கத்தில் இன்னும் நடந்து கொண்டிருப்பதை புடம் போட்டு காட்டியிருக்கிறார்.

இது எழுத்தாளர் ஞானியின் கேன்சர் கல்பாக்கம் என்னும் கட்டுரையின் கேள்விகளும் விஞ்ஞானி ஒருவரின் சப்பைக்கட்டு பதில்களும்

 

 இன்னும் வரும்