போபால் விஷவாயு பேரழிவு-மரித்த உயிர்களுக்கு 25 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

போபால் விஷவாயு கசிவு சம்பவம் இந்த நூற்றாண்டு பாரதத்தின் பெருந்துயரம் என்றால் மிகை ஆகாது, சுதந்திர இந்தியாவில் மக்கள் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் எத்தகைய தொழிற்சாலையையும் நிறுவிவிட்டு கொள்ளை லாபம் உடனடியாகப் பார்க்க முடியும், அப்படிப்பட்ட பொதுச்சந்தை இது. ஒருவேளை அந்த நிறுவனத்தால் பேரழிவு ஏற்பட்டாலும் மந்தமான அரசியல் மற்றும் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் , லஞ்ச லாவன்யம் இவைகள் மூலம்  நிறுவனத்தின் முதலாளிகள் எளிதாய் தப்பிக்க முடியும் என்பதை விரிவாய் உலகுக்கு உரைத்த துயரசம்பவம்.

1984ஆம் ஆண்டில் டிசெம்பர் 3 ஆம் தேதி நள்ளிரவில் வெடித்த யூனியன் கார்பைட் நிறுவனத்தின் பாய்லரில் இருந்து வெளிப்பட்ட  மெத்தில் ஐசோசயனைடு (எம் ஐ சி ) methyl isocyanate (MIC)  வாயு காற்றில் கலந்து இந்த கொடிய பேரழிவுக்கு பிள்ளையார் சுழி போட்டது. முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட  அரசின் அதிகாரபூர்வமான இறப்பு 2,259 பேர்களாம்.

முதல் கட்டமான இறப்பு விகிதம்  புயல் வேகத்தில் உயர்ந்து 72மணி நேரத்தில் 10000 ஆக உயர்ந்ததாம் இது ஊடகங்களில் வந்த செய்தி. மத்திய பிரதேச அரசு வழக்கம் போல சுணக்கத்துடன் செயல் பட்டு இறுதியாய் கணக்கு காட்டியது வெறும் 3,787 இறப்புகளாம் . இதில் என்ன ஒரு துயரம் என்றால்?மருத்துவமனைகளில்  இறப்பு சான்றிதழ் தராததாலும் அரசு அவசர அவசரமாக அனாதை பிணங்களை ஒன்றாக கொட்டி சவ அடக்கம் செய்ததாலும் 10000 பேர்களுக்கும் மேலான இறந்தோர் பெயர்கள் கணக்கிலேயே வரவில்லை என்பது வருத்தமான உண்மை.

ரண்டாம் கட்டமாக இறப்பு விகிதம் இதுவரை 25000 மேல் என்கின்றன ஊடகங்கள். இவர்கள் அனைவரும் விஷவாயு தாக்கி அதன் பக்கவிளைவுகளால் பீடிக்கப்பட்டு இதுவரை அற்ப ஆயுளில் உயிர்விட்டவர்கள். 40000 பேர்களுக்கும் மேலாக உடல் ஊனம். மனச்சிதைவால்  பாதிக்கப்பட்டவர்களாம்.

ன்னும் இந்த போபால் விஷவாயு கசிவு பேரழிவுக்கு காரணமான  வாரன் ஆண்டர்சனும் மற்றும் எந்த ஒரு கார்பொரேட் நயவஞ்சகனும் தண்டிக்கப்படாததை விட ஒரு அவலம் உண்டா? இவர்களா இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண்பர்?  அந்த யூனியன் கார்பைட் நிறுவன சண்டாளன் தன் மொத்த நிர்வாகத்தையும் வசதியாக Dow Chemical ற்க்கு 2001 ஆம் ஆண்டில் விற்று விட்டானாம்.இது எப்படி இருக்கு?லகின் எந்த மூலையிலாவது இது போல பேரழிவை நிகழ்த்திவிட்டு தப்பிக்க முடியுமா? பாதிக்கப்பட்ட  521,000  பேர்களுக்கு கால் நூற்றாண்டுகளுக்கு பின்னர் கிடைத்த இழப்பீடு எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்? தலைக்கு வெறும் 500 டாலர்கள் பிச்சைக்காசு (சுமார் 23000ரூபாய்) இதை வைத்து போன உயிரை திரும்பப் பெறமுடியுமா? இழந்த பார்வை கிடைக்குமா? செயழிழந்த உடல் அங்கங்கள் செயல் பெறுமா ? புற்று நோயால் பீடிக்கப்பட்டவர் ,குணமடைவரா? 20 வயதிலும் பூப்பெய்தாமல்  போன இளம் பெண்கள் பூப்பெய்துவரா? கருப்பை கோளாறுகளை பிறப்பிலேயே கொண்ட 20 களிலுள்ள பெண்கள் தாய்மை அடைவரா? இழந்த சுகாதாரம், நல்ல சுற்றுச்சுழல் திரும்பவருமா? நிச்சயம் வரவே வராது.

முன்பே இதைப்பற்றி மேலோட்டமாக படித்திருந்தாலும் , விரிவாய் தெரிந்துகொள்ள உதவியது குரல் வலை என்னும் வலைதளம் தான், இதில்  வெளிவந்த யார் முழித்திருக்கப் போகிறார்கள்? என்னும் தொடரின் 9 பாகங்களும் அந்த 1984 ஆம் ஆண்டு காலகட்டத்திற்கே உங்களை கைபிடித்து கூட்டிச்சென்று நடந்ததை நீயும் பார் என காட்டி உருக வைக்கும்.

தை நீங்களும் படித்து பல உண்மைகளை உணருங்கள். விஷவாயுவின் கோரப்பிடியால் பலியான அப்பாவி உயிர்களுக்கு இந்த தருணத்தில்அஞ்சலி செலுத்துவோம், நம் குடியிருப்புப் பகுதியில் எதேனும் இடர் விளைவிக்கும் நிறுவனம் இருந்து,சமூக நிறுவனங்கள் அதை எதிர்த்து போராடுமே ஆனால் அதில்  நாமும் முடிந்தவரை பங்கெடுத்துக்கொள்வோம். இனியொரு விஷவாயு தாக்குதல் தவிர்ப்போம்.

தை இப்போது  ஹெரால்ட் & குமார் புகழ் கல்பென் மோடி நடிப்பில் Bhopal: Prayer for Rain என்னும் பெயரில் ஆங்கிலப்படமாகவும் எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம், அதை ஸ்லம் டாக் மில்லியனர் போல கேவலமாக எடுக்காமல் நடந்ததை நடந்தது போல எடுத்தால் நலம். எனக்கு எப்போதுமே அன்னிய தயாரிப்பில் நம் தேசத்தைப்பற்றி எடுக்கும் திரைப்படங்கள் என்றாலே ஒரு வித ஒவ்வாமை உண்டு, விதிவிலக்கு  காந்தி. கல் பென் இந்தியாவின் குஜராத் பூர்வாங்கம் கொண்டவர். ஒபாமாவின் அரசவையில் வெள்ளை மாளிகையின் மக்கள் தொடர்பு இலாகாவில் துணை இயக்குனராக அங்கம் வகிக்கிறார். ஒபாமாவுடன்  தேர்தல் பிரசாரத்தில் இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. எதோ தாய் தேசத்துக்கு  உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாவிட்டால் சரி.

போபால் விஷவாயு பேரழிவு-மரித்த உயிர்களுக்கு 25 ஆம் ஆண்டு  நினைவு அஞ்சலி செலுத்துவோம், இது பற்றிய மேலதிக தகவலகள் தெரிந்தால் மூத்த பதிவர்கள் நினைவு கூர்ந்து பின்னூட்ட்மிடுங்கள். அப்போது எனக்கு ஐந்து வயது. நாங்களும் அதை நன்கு உணர ஏதுவாய் இருக்கும்.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\


//////////////////////////////////////////////////

இது தொடர்பான பதிவர் ஜோதியின் சிறப்பான பதிவு -

இது தொடர்பான பதிவர் zero to infinity ன் சிறப்பான ஆங்கில பதிவு:-

இது தொடர்பான பதிவர் மணற்கேணியின் சிறப்பான பதிவு:-

இது தொடர்பான பதிவர் அதியமானின் சிறப்பான பதிவு:-மேற்கண்ட அனைத்து பதிவுகளையும் தவறாமல் படித்து வாக்களித்து பின்னூட்டமிட்டு இந்த நினைவஞ்சலியில் பங்கெடுத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.
===============
நம் நாட்டின் நீதியரசர்கள் மீது எனக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை,ஒவ்வொருவனுக்கும் ஆழ்மனதில் பழிவாங்கும் உணர்வு இருந்துகொண்டே இருக்கும்,சிலர் அதை தட்டி எழுப்பி இழைக்கப்பட்ட அநீதிக்கு பழி வாங்கிவிடுவர்,பலர் இந்த உலக மகா நீதியரசர்களை நம்பி 26 வருடம் காத்திருப்பர்,இந்த கொலை பாதகத்தை ஒருவன் இஸ்ரேலில்
நிகழ்த்தியிருந்தால் கொலைகாரர்கள் எங்கே போய் பதுங்கினாலும் முனிக் படத்தில் வருவது போல அவனை தேடிப்போய் கருவருத்திருக்கும்.இது பாரத தேசமாயிற்றே!ஃப்ரீ கண்ட்ரி ஃபார் ஆல் சார்ட் ஆஃப் க்ரைம்.பெஸ் ஆஃப் லக்,கரப்டட் கார்பொரேட்ஸ்.
=========
இதையும் வலியுடன் படித்து விடுங்கள்,என் மனதுக்குள் அசிங்க அசிங்கமாய் திட்டுவதற்கு எந்த கொம்பனும் புடுங்கமுடியாது.


19 comments:

சென்ஷி சொன்னது…

:(

ஜீவன்பென்னி சொன்னது…

:-(

கலையரசன்.. சொன்னது…

இடுகைக்கு...
:-(

போட்டாச்சு...
:-)

பேநா மூடி சொன்னது…

இவர்கள் செய்தது எல்லாம் இரண்டே தவறு தான் ஒன்று இந்தியனாய் பிறந்தது .., இன்னொன்று ஏழையாய் பிறந்தது..., பார்மாலிடியாச்சு...

கண்ணா.. சொன்னது…

//அந்த யூனியன் கார்பைட் நிறுவன சண்டாளன் தன் மொத்த நிர்வாகத்தையும் வசதியாக Dow Chemical ற்க்கு 2001 ஆம் ஆண்டில் விற்று விட்டானாம்.இது எப்படி இருக்கு?//

:(

சீரியஸான ஃடாபிக்கை உங்களிடமிருந்து முதலில் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் எளிமையாக எல்லாருக்கும் புரியும்படி சொல்லிருக்கீங்க..

☀நான் ஆதவன்☀ சொன்னது…

:(

பின்னோக்கி சொன்னது…

மிகக் கொடுமையான விஷயம்.
சில மாதங்களுக்கு முன், இதைப் பற்றிய ஒரு ஆவணப்படம் பார்த்தேன்.
எனக்கு சின்ன வயது அப்பொழுது அதனால் இந்த விஷயம் அப்பொழுது என்னை பாதிக்கவில்லை. இதைப் பற்றி இப்பொழுது படிக்கும் போது பயங்கரமாக இருக்கிறது.

pappu சொன்னது…

அவன் இன்னும் சந்தோஷமா சுத்துறது ஒரு மாதிரி வெறுப்பா இல்ல? கஸாப் இப்ப நான் சுடவே இல்ல. எனக்கு தீவிரவாத பயிற்சி கொடுக்க படல. யாரையும் தெரியாது. நான் வீட்டுல சண்ட போட்டு ஓடி வந்த பையங்கிறான். அநியாயம்.

வினோத்கெளதம் சொன்னது…

Still he is alive? Wat a shame..
He should be punished severly by the law..:(

wat hpnd to tamilish link!?
Sorry bro, Tamil font is nt working.

செ.சரவணக்குமார் சொன்னது…

வரலாற்றின் பக்கங்களில் தீராத கறையான ஒரு துன்பியல் நிகழ்வை நினைவு கூர்ந்திருப்பதற்கு நன்றி கார்த்திக்கேயன்.
'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற மகாகவியின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

jothi சொன்னது…

நன்றாக தொகுத்து உள்ளீர்கள். இதன் வலி பட்டவனுக்குதான் தெரியும். இதே தலைப்பில் முடிந்தால் என் பதிவை பாருங்கள்

http://jothi-kannan.blogspot.com/2009/12/25-03-1984.html

Zero to Infinity சொன்னது…

There is another part of this story...check from below blogspot
http://zero2infiniti.blogspot.com/2009/12/reason-why-us-is-out-sourcing-job-to.html

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

ரொம்ப கனமா இருக்கு

jothi சொன்னது…

குரல் வலை பற்றி தகவலிற்கு மிக்க நன்றி. அவரின் கடின உழைப்பும், சமூகப் பொறுப்பும் அந்த பதிவுகளில் தெரிந்தது.

இதே தலைப்பில் இத்தனை பதிவுகள் வந்தாலும் நீங்கள் அழகாக இணைப்பு கொடுத்ததால்தான் என்னால் படிக்க முடிந்தது. மிக்க நன்றி.
//
போபால் விஷவாயு பேரழிவு-மரித்த உயிர்களுக்கு 25 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவோம்//

நீங்கள் சொன்னதுபோல் இதை மட்டுமே நம்மால் இப்போது செய்ய முடியும்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

தல... என்ன இது??!

நான் அங்க ‘ஹண்டர்’-ன்னு போட்டு கொடுமை பண்ணிகிட்டு இருக்கேன். நீங்க இங்க சீரியஸ் ஆய்ட்டீங்களே!!!

அருமையான பதிவு! இதை.. 2-3 முன்னாடி படிச்சேன். யாராவது விரிவா எழுதுவாங்கன்னு நினைச்சா... நீங்க!!

படத்தை விடுங்க. செண்டிமெண்டா புழிஞ்சி தள்ளப் போறாங்க.

K.R.அதியமான் சொன்னது…

இது எமது பழைய ஆங்கில பதிவு :

http://athiyaman.blogspot.com/2007/05/question-about-economic-polices-in.html

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@சென்ஷி வருகைக்கு நன்றி மாம்ஸ்
=================================
@ஜீவன் பென்னி வருகைக்கு நன்றி நண்பா
=================================
@கலையரசன் வருகைக்கு நன்றி மாப்பி
=================================
@பேநாமூடி வருகைக்கு நன்றி நண்பா
=================================
@கண்ணா வருகைக்கு நன்றி நண்பா
=================================
@பின்னோக்கி வருகைக்கு நன்றி நண்பரே
=================================
@நான் ஆதவன் வருகைக்கு நன்றி மச்சி
=================================
@பப்பு வருகைக்கு நன்றி நண்பா
=================================
@வினோத்கவுதம் வருகைக்கு நன்றி நண்பா
=================================
@சரவணகுமார் வருகைக்கு நன்றி நண்பா
=================================
@ஜோதி வருகைக்கு நன்றி நண்பரே,உங்க பதிவுக்கும் லின்க் குடுத்தாச்சி
=================================
@சீரோ டு இன்ஃபினிடி வருகைக்கு நன்றி நண்பரே,உங்க பதிவுக்கும் லின்க் குடுத்தாச்சி
=================================
@சுந்தரராமன் வருகைக்கு நன்றி சுந்தர்சார்
=================================
@ஹாலிவுட்பாலா வருகைக்கு நன்றி தல அங்க தான் வந்து பெரிய கும்மியபோட்டோமே நாங்க
=================================
@அதியமான் வருகைக்கு நன்றி நண்பரே,உங்க பதிவுக்கும் லின்க் குடுத்தாச்சி
=================================

மயில்ராவணன் சொன்னது…

நல்லதொரு இடுகை.சரியான நேரத்தில். உச் கொட்டுறத தவிர என்ன செய்ய முடியும்.

ஜோதிஜி சொன்னது…

எதையும் படித்து உள்வாங்கிக் கொள்வதுண்டு. உணர்ச்சி வசப்படுவதில்லை. ஆனால் படத்தை மிதித்து படிக்கவும் என்ற இந்த வரி எத்தனை தார்மீக கோபத்தை வெளிக்காட்டி உள்ளது. இடுகையினால் எழுதினால் ஆச்சா? என்பவர்களுக்கு கண்ணாயிரம் கூட மனம் மாறினேன் என்று கூறும் அளவிற்கு உங்கள் அறச்சீற்றம் அவரை மாற்றியுள்ளதே உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

மூவாயிரம் காவல்துறையினர் மூன்று லட்சம் மக்களுக்கு. ஒழுக்கமாகவே நடந்து கொள்வர். காரணம் பயம்.

மூவாயிரம் கோடி திருடிவிட்டான் என்பதை படித்து மறந்து விடுவோம். காரணம் சகிப்புத்தன்மை.

இதுவே தொடர்ந்து போபால் விஷவாயு வரைக்கும் அதற்கும் 26 வருடங்கள் தாமதிக்கப்பட்ட தரங்கெட்ட நீதி?

நாளை தமிழ்நாடு முழுக்க ஒரு பன்னாட்டு நிறுவன கட்டுப்பாட்டில் வந்து நிற்கப்போகிறது என்று செய்தித்தாளில் வரும். அப்போது நாம் அவசரமாக செயல்படுவோம்.

அவர்களிடம் வேலை கிடைக்காதா என்று????

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)