டெல்லி பெல்லி [Delhi Belly][18+][2011]


டெல்லி பெல்லி படத்தை தமிழில் எடுக்கப்போவதாக கேட்ட உடனே, இதென்ன டெல்லிக்கு வந்த சோதனை? என்றிருந்தது,படத்தை கொத்துகறி போட்டு கந்திரகோலம் செய்து விடுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை, இது வழமையான பாலிவுட்டின் திருட்டு மசாலா படம் இல்லை, தனித்துவமான டார்க் காமெடி ஜானர் படம்,அபூர்வமாக வரும் வகை. படத்தை தமிழில் ஒரிஜினாலிட்டியுடன்  இயக்க எந்தக் கொம்பனாலும் முடியாது என்பேன்,ஏனினில் இங்கே கலாச்சாரக்காவலர்கள் கொண்டே புடுவர்,மேலும் டார்க் ஹ்யூமரை எதிர்கொள்ள திராணியில்லாத ரசிகர்க் கூட்டமே இங்கே அநேகம் உண்டு.

டெல்லி பெல்லி படத்தை பாலிவுட்டில் வெளியிட்டதற்கே  அத்தனை கெடுபிடி, படத்தின் உள்ளடக்கம் அப்படிப்பட்டது, நான் கதையெல்லாம் சொல்லப்போவதில்லை, சர்ச்சைக்குள்ளான காட்சிகளை மட்டும் இங்கே பகிர்கிறேன், அவை எப்படியும் சேட்டை என்னும் மலினமான நகலில் வரப்போவதே கிடையாது, ஏற்கனவே இதன் இயக்குனர் கண்ணனுக்கு என்ன ப்ரிக்வாலிஃபிகேஷன் என எனக்கு தெரியவில்லை,  ஆனால் தமிழுக்கு திரைக்கதையை இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் எழுதியுள்ளதாக விக்கி சொல்கிறது. நான் சேட்டை எப்படியும் பார்க்கப்போவதில்லை, பாடல்கள் கேட்டேன் எனக்கு எதுவும் ஒட்டவில்லை.

சரி ஒரிஜினலை பார்ப்போம்,படத்தின் மூன்று நண்பர்கள் கூட்டணியாக டஷி [இம்ரான் கான்] சினிமா நிருபர், நிதின்[குனால் ராய் கபூர்] ஒரு பிலிம் ரோல் போட்டு போட்டோ பிடிக்கும் சினிமா போட்டோக்ராபர்,மேலும் சோடா புட்டி கண்ணாடி அணிந்த, புதர் போல சுருள் முடி கொண்ட அப்பாவித்தனமான அருப் [வீர் தாஸ்] இவர் ஒரு அட்வர்டைசிங் கம்பெனியின் காப்பிரைட்டர். மூவர் கூட்டணியிலேயே கொஞ்சம் சீரியஸ் ஆசாமி என்றால் இவர்தான். இவர்களுக்குள் நடக்கும் நான்,நீ போட்டியில் தான் படமே நகரும்.டெல்லி பெல்லி என்பது டெல்லி வாசிகளுக்கு உஷ்ணத்தால் வரும் கடும் வயிற்றுப்போக்கு தான்.

படத்தில் கெட்டவார்த்தைகள் மிகச் சரளமாக புழங்கும்,காம்ப்ரமைசே கிடையாது, இலை மறைவு காய் மறைவு சோலியே இல்லை,இதில் போட்டொகிராபர் நிதினுக்கு டஷியின் காதலி சோனியா மீது ஒரு கண் உண்டு, செல்லமாக டஷியை லக்கி பாஸ்டர்ட் ஷீ ரியல்லி லவ்ஸ் யூ மேன் என்பான். ஒரு சமயம் இவர்கள் குடியிருக்கும்  வீட்டு ஓனர் ஜெயினுக்கு வாடகை கொடுக்காமல் ஏய்ப்பதற்கு வேண்டி, அவர் விலைமாதுவின் வீட்டுக்கு விஜயம் செய்கையில் ஜன்னல் வெளியே கேமரா வைத்து படங்களாக சுட்டுத்தள்ளுவான் நிதின்,அங்கே ஒரு பாடலும் உண்டு,பாடல் முடிந்தவுடன் கேமராவை எடுத்து வைத்து விட்டு விலைமாதுவுக்கு 100 ரூபாய் கொடுப்பான் நிதின். அவள் விலை ஏறிப்போச்சு என்று சலித்துக்கொண்டே வாங்கிவைப்பாள், நிதின் இல்லை ஸ்வீட் ஹார்ட் என்று விலைமாதுவின் மார்பகத்தை பிசைந்துவிட்டு வருவார்.இது போல தமிழில் காட்சி வைக்க முடியுமா?

இன்னொரு காட்சியாக டஷியின் காதலி சோனியாவின் பணக்கார பெற்றோர் டஷிக்கும் சோனியாவுக்கும் சேர்த்து சொகுசு அபார்மெண்டை பரிசாகத் தருவர், அங்கே திருமணத்துக்கு முன்பே இருவரும் சேர்ந்து உறவு கொள்வர், அப்போது சோனியாவின் முனகல் மட்டும் உச்சஸ்தாயியில் காட்டப்படும்,தஷி போர்வைக்குள் இருந்த படி வாய்ப்புணர்ச்சி தருவான், அப்போது படத்தில் இரண்டாம் முறையாக ,உன் தாடி என்னை கிழிக்கிறது, டஷியை சோனியா நீ தாடியை ஷேவ் செய்தே ஆகனும் ஹனி என்று செல்லமாய் கடிந்துகொள்வாள், இது போல தமிழில் காட்சி வைக்க முடியுமா?

சோனியாவின் பெற்றோர் டஷிக்கு திருமணப்பரிசாக ஹுண்டாய் ஐ10 ரக கார் ஒன்றையும் பரிசளிப்பர். அதை அருவருப்புடன் வாங்கும் டஷி தன் நண்பர்களிடம் "This car is so bad that it looks like something that would result if a donkey f**ked a rickshaw." அதாவது கழுதை ஆட்டோ ரிக்‌ஷாவை புணர்ந்து உண்டான ஜந்து போல இது உள்ளது என்று ஒரு வசனம், இதற்காக அமீர்கான் வழக்கு ஒன்றை சந்தித்தார் என கேள்விப்பட்டேன், இது போல தமிழில் காட்சி வைக்க முடியுமா? சொல்லுங்கள்?

இப்போது இன்னொரு காட்சியாக அருப் தன் காதலியால் ஏமாற்றப்படுகிறான், ஒருநாள் அவளின் வீட்டுக்கு போய் பெல் அடிக்க ஒரு அமெரிக்க மாப்பிள்ளை கதவை திறக்கிறான், இவனுக்கு கையறுநிலை,காதலியோ மிக ஈசியாக குட்லக் வித் யுவர் கார்டூன் என எள்ளி நகையாடி குட்பை சொல்லுகிறாள், கதவும் சாத்திவிட்டாள். உடனே ஒரு ப்ரில்லியண்ட் கனவுக்காட்சி பகலில் நின்றபடிக்கே அருப் காணுகிறான்.

அருப்பின் காதலியின் திருமணத்தன்று அருப் மண்டபத்துக்கு போய் கல்யாணத்தை நிறுத்து, நான் அவளின் காதலன், நான் மில்லேனியம் மேன், நான் அவளுக்கு வாய்ப்புணர்ச்சி அளித்து ஆர்கசம் வரவழைத்துள்ளேன். அவள் எனக்கு வாய்ப்புணர்ச்சி தந்து விரைப்பூட்டியவள். என்று நடனம் ஆடுகிறான், ஆச்சாரமான அந்த பெற்றோர் வெட்கி தலைகுனிகின்றனர், காதலி கெஞ்சுகிறாள், மன்றாடுகிறாள் என நினைத்து சிரிக்கும் அருப் மீது மழை பெய்கிறது. இது போல தமிழில் காட்சி வைக்க முடியுமா? சொல்லுங்கள்?

மேலும் சோமையாஜுலு என்னும் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரமாக விஜய் ராஸ் [டெல்லி6 ல் வரும் எலும்பு போலீஸ்] கலக்கியிருப்பார், வெல்வெட் துணியில் வைரம் என்று நினைத்து புட்டியை கவிழ்க்க, வைரத்துக்கு பதில் மலம் கொட்டுகிறது. என்ன ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார் பாருங்கள்?,கூடவே வரும் அல்லக்கைகள் கொட்டம் வேறு,இவர் ஒன்று சொல்ல அவர்கள் வேறு செய்ய என்று,கலாசலாக இருக்கும்.இதை நாசர் செய்வார் என நினைக்கிறேன். நல்ல தேர்வுதான்.

அப்படி அந்த கேங்ஸ்டர் கேங் ஒரு நட்சத்திர ஓட்டல் ரூமில் தங்கியிருக்கும் ரஷியக் கடத்தல்காரன் விளாடிமிரை வைரம் எங்கே எனக்கேட்டு விசாரிப்பார்கள், அப்போது விளாடிமிரின் வாயின் அருகே  போன் இருக்கும், ஆசன வாயில் ஒரு பட்டாசு சொருகப்பட்டிருக்கும், எரியூட்டப்பட்டும் விடும், இவர் ஒவ்வொரு எண்ணாக முயன்று கடைசியில் சரியாக விமானப் பணிப்பெண் சோனியாவின் எண்ணை சொன்னவுடன், சூடான காபியை சோமையாஜுலுவின் சகா ஒருவன் விளாடிமிரின் ஆசனவாயில் எரியும் பட்டாசை நோக்கி விசிறுவான், அப்படி துடிப்பார் விளாடிமிர்,

அங்கே அறையின் ஒரு கோடியில் சோமையாஜுலுவின் கேங் ஆட்கள் விளாடிமிர் தனக்கு ஆர்டர் செய்த பண்டத்தை மிச்சம் வைக்காமல் தின்றுவிடுவர், இதைப் பார்த்து டென்ஷன் ஆகும் விஜய் ராஸ்,அப்படி ஒரு ரியாக்‌ஷன் தருவார். இதை எல்லாம் தமிழில் சரியாக பயன்படுத்துவரா? பார்ப்போம்.

மேலும் நண்பர்கள் மூவர் இருக்கும் அழுக்கு அபார்ட்மெண்டின் மாடியில் கதக் வகுப்பெடுக்கும் ஒரு மஹ்ராஜ் ,கூரையில் ஏற்பட்ட விரிசல்,அதன் மேலே தய்யாதக்கா என குதிக்கும் பெண்கள்,கீழே இருந்து நண்பர்கள் மஹ்ராஜை பார்த்து உதிர்க்கும் கெட்டவார்த்தைகள்,எழுத முடியாது.அதற்கு மஹ்ராஜ் சொல்லும் பதில் எல்லாம்,சான்சே இல்லை.

இம் மூவரும் மாடிவீட்டு மஹ்ராஜின் நடன வகுப்பால் கடைசி காட்சியில் காப்பாற்றப்படுவர்,அப்போது கூரை உடைந்து நடனமாடும் பெண்ணின் கால் மட்டும் கீழே கூரையில் மாட்டிக்கொள்ளும்,மேலே அவளை மஹ்ராஜ் பிடித்து இழுக்க,ஒட்டு மொத்த கூரையும் கொட்டும் காட்சி,அமேசிங்.இதையெல்லாம் நல்ல படியாக எடுக்க முடிந்தால்,சிறப்பு தான்.

இதில் ஒரு துணிவான வசனம் ஒன்றை நிதின் பேசுவான், நீ ஏன் இன்னும் ஃப்லிம் போட்டு படம் எடுக்கிறாய்?டிஜிட்டல் உபயோகிப்பது தானே?என ஒருவன் கேட்க , அதற்கு நிதின், டிஜிட்டல் கேமரா எல்லாம் சூத்தியாக்களுக்கு தான்  என்று முடிப்பான், இப்படி எல்லாம் தமிழில் எடுக்க முடியுமா?   தமிழில் டீசரில் ஆர்யா நிகான் டிஜிட்டலில் படமெடுக்கிறார்,ஆக யார் போட்டொக்ராபர்? சந்தானம் இல்லையா? பின்னர் ஒரு காட்சியில் சந்தானம் லாம்பி ஸ்கூட்டரை வயிற்றுப்போக்குடன் ஒட்டிவருவதை பார்த்தேன், ஆக படத்தின் தலையாய அடிப்படையே மீறப்பட்டிருக்கிறது,

ஒரிஜினல் படத்தின் நித்தின் கேரக்டரை பாருங்கள்,குளிக்காமல் அழுக்கு வடிந்து ஒரு பழைய நம்பர் ப்ளேட் கூட இல்லாத ப்ரியா ஸ்கூட்டரை உதைத்து ஸ்டார்ட் ஆகாமல், பிரம்ம பிரயத்தனத்துடன் தள்ளி ஏறி ஸ்டார்ட் ஆனவுடன் அதற்கு முத்தம் வைப்பார். எங்கே போனது அந்த கண்டினியூட்டி?.நம் ஆட்கள் ஒன்று திருடுகிறார்கள், அல்லது அதிகப்பிரசங்கித்தனம் செய்கிறார்கள் என்று வருத்தத்துடன் இங்கே எழுதவேண்டியிருக்கிறது.

படத்தில் ஆர்யாவுக்கும் ஹன்சிகாவுக்கும் அல்லது அஞ்சலிக்கும் மேலே சொன்ன போர்வைக்குள் வாய்ப்புணர்ச்சி காட்சிகள் வைக்க முடியுமா? நம்மாட்கள் நேராக ஸ்விட்சர்லாந்துக்கு ஆடப்போய்விடுவார்கள், நிஜ வாழ்க்கையில் லட்டு போல ஃபிகர் கிடைத்தால் ஆடவா போவோம்?சும்மா  டவுட்டு தான் சார்.


படத்தில் டஷியுடன் வேலை பார்க்கும் விவாகரத்தான பெண் மேனகா என்னும் கதாபாத்திரம் உண்டு,அவளை உடன் பணிபுரியும் பெண்கள் பொறாமை மிகுதியால் லெஸ்பியன் என வதந்தியை பரப்புவர்.அது அவளின் முன்னால் கணவனுக்கும் எட்டும், அவள் டஷிக்கு ஒரு பார்ட்டியில் வைத்து  நூல்விடுவாள், தன் முன்னாள் கணவனை வெறுப்பேற்ற, டஷி தான் இப்போது கம்பேனியன் என புழுகப்போய், அந்த ரியல் டெல்லி எருமை, துப்பாக்கியுடன் டஷியையும் மேனகாவையும் காரின் பின்னே துரத்துவான்,இது போல மேனியாக்குகள் டில்லியில் சகஜம்,சென்னையில் உண்டா துப்பாக்கி கலாச்சாரம்?,

 மறு காட்சியில் டஷியும் மேனகாவும் நட்சத்திர ஓட்டலுக்குள்ளே யாருடைய அறைக்கோ போய் தஞ்சம் புகுந்து போனில் காஃபி ஆர்டர் செய்துவிட்டு, அந்த அறையில் தங்கும் வயதான வெளிநாட்டு ஜோடி கதவை வெளியே இருந்து திறக்க, மேனகா சத்தமாக யெஸ்ஸ் யெஸ்ஸ் யெஸ் ரைட் தேர் என பொய்யாய் முழங்கிக் கத்துவாள், வெள்ளைக்கார கிழவர்,இது நம் ரூம் தான் எனக்கு தெரியும்  என்பார், கிழவியோ உன் அல்செய்மருக்கு அளவில்லை, என்று வெளியே கூட்டிப்போவாள், அது போன்ற இன்னோவேட்டிவ் காட்சிகள் தமிழில் இருக்கவே இருக்காது என நினைக்கிறேன், அதற்கு பதிலாக குத்தாட்டப் பாடலும் உபரி நம்பர்களும் இடைச்சொருகலாக இருக்கும்,

மேலும் மேனகாவுக்கும் டஷிக்கும் கடைசியில் காருக்குள் வைத்து ஒரு ஈர்ப்பு வரும், இருவருமே  முஸ்லீம் பெண்மணி போல பர்தா அணிந்திருப்பர், அப்போது தான் ஒரு குறும்பான கொள்ளையை வேறு நிகழ்த்தியிருப்பர், மேலும் சாதிக்க நினைத்து இருவரும் பர்தாவை விலக்கிவிட்டு நீண்ட முத்தம் தருவர், இதை தமிழில் படமாக்க முடியுமா? நீங்களே சொல்லுங்கள். படத்தின் நிறைய வசனங்கள் பார்க்கும் போது மட்டுமே நினைவில் நின்று சிரிக்கவைக்கும், அவற்றையும் மிஸ் செய்யாதீர்கள்.

  
குட்லக் ஆடியன்ஸ், ஆனால் தமிழில் படம் பார்ப்பதற்கு முன்னர் ஒரிஜினலை பார்த்துவிடுங்கள். டோண்ட் மிஸ் இட். டார்க் ஹ்யூமர் ரைடுக்கு உடனே தயாராகுங்கள்.

படத்தின் முன்னோட்ட காணொளி ( நன்றி விக்கிப்பீடியா, ஐஎம்டிபி, கூகுள், யூட்யூப்)