எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ மால் இழிபிறவிகளின் மனித உயிரின் மீதான அலட்சியம் !!!

நண்பர்களே!!! சாலை விபத்திலோ அல்லது எந்த ஒரு விபத்திலோ யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில், தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது ....முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்...தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்!!!கண்முன்னே உயிர் பிரிவதை பார்த்தபடி இருப்பதும் ஒருவிதமான சைக்கோத்தனம் தான்.நீங்கள் தோள் கொடுத்தால் சந்திக்கப்போவது போலீஸ் மற்றும் மருத்துவர்கள், குடும்பத்தாரின் விசாரணைகள் தான், ஆபத்துக்கு தோள் கொடுக்காவிட்டால் ஆயுளுக்கும் குற்ற உணர்வு வாட்டும்.

தர்மம் தலை காக்கும் என்பார்கள்!!!... எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ மால்   இழி பிறவிகளின்   மனித உயிரின் மீதான அலட்சியத்தை கீழே உள்ள இந்த கானொளியில் அவசியம் பாருங்கள்,ஒரு மனிதனின் மரணத்தின் பின்னால் ஒரு நிர்வாக குறைபாடு, மனிதாபிமானமற்ற பணியாளர்களின் அலட்சியம், காவல்துறையின் அதிகார வர்க்கத்திற்கு வளைந்து கொடுத்த அடக்குமுறை அவசியம் பாருங்கள் , மால் நிர்வாகம் என்னும் எமகதகர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். பணத்துக்காக எதுவும் செய்யும் கூட்டம் அது, காணொளியில் நியாயத்துக்கு போராடிய பெண்மணி போல நாமும்   துணிந்து போராடவேண்டும்,நியாயம் கேட்பது அசிங்கம் அல்ல, அநியாயத்துக்கு  எதிராய்  போராடாவிட்டால் தான்  அசிங்கம்!!! என்பதை ஒருவர் உணர வேண்டும் , முதலில்  போலீசாரை மக்கள் சார் என்று அழைப்பதை நிறுத்த வெண்டும், போலீசார் பொதுமக்களை ஏக வசனத்தில் நீ ,வா, போ என அழைப்பதை உடனே  தடை செய்ய வேண்டும் ,எப்படி போலீசார் மக்களிடம் மரியாதையை எதிர்பார்க்கிறாரோ  ?அதே போல மரியாதையை கொடுக்கவும் கடமை பட்டவரே!!! ,கேட்காமல் கிடைக்காது மரியாதை .அனைவரும்  அதை கேட்டாவது பெறுவோம் . !!!