என்னது?இனி சன் டிவியில் சனிக்கிழமையும் சீரியலா?

த்திப்பூக்கள்,அழகி,பைரவி,பொம்மலாட்டம்,தெய்வமகள்,தேவதை,இளவரசி,கார்த்திகைப் பெண்கள், மஹாபாரதம், மருதாணி, முந்தானை முடிச்சு,முத்தாரம், நாதஸ்வரம், பாசமலர்,பொண்டாட்டி தேவை, பொன்னூஞ்சல், பிள்ளை நிலா, ராமாயணம், சிவசங்கரி, சொந்த பந்தம், தென்றல், தேன்நிலவு, திருமதி செல்வம், திருவிளையாடல், தியாகம், உறவுகள், உதிரிப்பூக்கள், வள்ளி, வம்சம், வாணி ராணி,வெள்ளைத் தாமரை....ஸ்ஸப்ப்பா,

என்ன கண்ணைக் கட்டுகிறதா?!!!

இவை சன் டிவியில்[ஹெச்டி தரத்தில்] மட்டுமெ ஒளிபரப்பாகும் சீரியல்கள்,எத்தனை பேர் பார்ப்பார்கள்? எத்தனை விளம்பர வருவாய்?இயக்குனர்களுக்கு எத்தனை கற்பனை வறட்சி ஏற்படும்? மக்களுக்கு சீரியல் பிடிக்காமல் டிஆர்பி ரேட்டிங் குறைந்தால் என்ன ஆகும்.

அது தான் தினமும் கள்ளக்காதல், கொலை, கொள்ளை, சூனியம், பிகமி, பாலிகமி,வல்லுறவு, ஆம்புலன்ஸ் காட்சி,ஆஸ்பத்திரி காட்சி, இழவுக்காட்சி, போலீஸ் ஸ்டேஷன் காட்சி, மனமுறிவு, மனமுறிவுக்கு பின்னர் முன்னாள் கணவனை கருவருத்தல், முன்னாள் மனைவியை கருவருத்தல்,என எல்லா சீரியல்களிலுமே காட்சிகளை மாற்றி மாற்றி வைக்கின்றனர். மனமுறிவு என்பதை மிகச்சாதாரணமாக எடுத்துக்கொள்ள  நம் ஆட்களை பழக்கி வருகின்றனர்,அதே சமயம் பெண்ணடிமைத்தனத்தையும் காட்சிகள் மூலம் ஆழமாக ஊன்றி வருகின்றனர்.இது போல பலதும்   காட்டி நம் வீட்டு வரவேற்பறையையே நாறடிக்கின்றனர்.

தினமும் யூட்யூபுக்குள் சென்று பாருங்கள்  நாதஸ்வரம் துவங்கி ஒவ்வொரு சீரியலின் எபிசோடும் குறைந்தது 50000 ஹிட் அடிக்கிறது, சில பெண்கள், ஆண்கள் சீரியலை தவறவிட்டுவிட்டால் கையும் ஓடாது காலும் ஓடாது, டாஸ்மாக் கதைதான், மெல்ல குடும்ப தலைவர்களும் பார்க்கத் துவங்குகின்றனர்,  ஆட்டோமேட்டிக்காக குழந்தைகளும்,சீரியலை தவறவிட்டுவிட்ட மாந்தர்க்கென்றே  அதை HD தரத்தில் ரெகார்ட் செய்து சீரியல் முடிந்த 1மணிநேரத்தில் அப்லோட் செய்துவிடுகின்றனர் சில ரசிக சிகாமணிகள்,

அவர்களுக்கு அதன் மூலம் யூட்யூபில் விளம்பர வருவாயும், லைக்குகளும்,கமெண்ட்களும் கிடைக்கின்றன,இதில் என்ன ஒரு கூத்து என்றால் சீரியல் ஆரம்பித்து 750 வாரம் ஆனாலும் அதன் 1 ஆம் நாள் எபிசோடைக் கூட பார்க்க முடியும் என்பது தான் இதன் சிறப்பு,இன்னும் சிலர் சீரியல் நேரத்தில் விளம்பரங்களுடன் அதைப் பார்க்க வேண்டுமா என்று ,தாங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட் டிவியில் யூட்யூப் கனெக்ட் செய்து விரும்பிய நிகழ்ச்சியை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு தெளிவாக உள்ளனர்.எல்லா விளம்பரங்களும் வடிகட்டப்பட்டு வருகின்றன அல்லவா,அது ஒரு கூடுதல் சிறப்பாம்,இதனாலேயே நிறைய பேர் தங்கள் நல்ல எல் ஈ டி யைக்கூட மாற்றிவிட்டு  ஸ்மார்ட் டிவி வாங்குகின்றனர்.

இது வரமா?சாபமா?!!! மாற்றம் என்பது ஒருவர் மனதுக்குள் இருந்து துவங்க வேண்டும்.இது குடி நோய் போல மெல்ல பீடித்து நம் ஆரோக்கியமான குடும்ப சூழ்நிலையையே நாளடைவில் தகர்த்து விடும் என்பது கண்கூடு, இன்று  நிறைய பெண்கள்,அவரைப் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள விதிக்கும் முதல் நிபந்தனை, திருமணத்துக்குப் பின்னர் தனிக்குடித்தனம்,கொழுந்தனார்,நாத்தனார் இருக்க கூடாது,பெண் வீட்டு வேலை செய்ய மாட்டாள்,வேலைக்காரி இருக்க வேண்டும்,வாரம் 2 சினிமா பார்க்கும் மாப்பிள்ளை வேண்டும்,கார் வைத்திருக்க வேண்டும்,பார்ட்டி அனிமலாக இருந்தால் கூடுதல் சிறப்பு,அவருக்குத் தான் சொசைட்டி பற்றி தெரிந்திருக்குமாம்.பழம் பெரிசுகள் கூடவே இருக்க கூடாது,என்பது போல நீளுகிறது,நல் ஒழுக்கமுள்ளவனுக்கு பெண் கிடைப்பதில்லை,அயோக்கிய சிகாமணிக்கு தாம்பால தட்டில் எல்லாம் படைக்கின்றனர்.மனமுறிவு என்பதை மிகச்சாதாரணமாக எடுத்துக்கொள்ள பழகி விட்டனர்,இந்த டிவி சீரியல்களின் குளவி கொட்டுவது போன்ற விஷ ஊடுருவலால் எதிர்கால சந்ததிகள் எதிர்கொள்ளப்போகும் பின் விளைவுகளை நினைத்தாலே கசக்கிறது.ஆண்டவா!!