இப்போதெல்லாம் டிவி சீரியல்களில் அவுட் டோர் காட்சிகள் மிகவும் லைவ்வாக எடுக்கின்றனர்,கேமராவும் அத்தனை சிறியதாகவும் எடை குறைவாகவும் வந்து விட்டது,இன்னும் கொஞ்ச நாள் போனால் அதை டார்ச் போல தலையில் கட்டிக்கொண்டு எடுக்கும் அளவுக்கு சிறியதாகிவிடும் போல.
இன்று ஒரு தமிழ் சீரியலில் திருச்சூர் நகரத்தில் ஒரு ஆதர்ச அப்பாவும் மகனும் ஒற்றை ஒயின் ஷாப், கள்ளுக்கடை பாக்கியில்லாமல் சல்லடை போட்டு தம் குடிகார மாப்பிள்ளையைத் தேடினர்,
முன்பே படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கியிருப்பார்கள் போலும், நம்மூர் போல யாரும் கேமராவை வெறிக்கவில்லை,யாரும் அட்மோஸ்பியர் ஆர்டிஸ்ட் கிடையாது, பகல் நேரக்குடிகாரர்கள், முழுநேர குடிகாரர்கள், பகுதிநேர குடிகாரர்கள்,ஆஃபீஸ் விட்டு வீட்டுக்கு வாங்கிப் போகும்,ஒரு லார்ஜ் ஏற்றிக்கொண்டு போகும் குடிகாரர்கள் என எத்தனை விதம்? உபரித் தகவலாக ஒரு முழு பாட்டில் கள்ளின் விலை 40 ரூபாய், ஹாஃப் பாட்டில் கள்ளின் விலை 20 ரூபாய் என அறியத் தந்தார் இயக்குனர். தன் பங்குக்கு ரசனையாக ஷாட் கம்போஸ் செய்திருந்தார் ஒளிப்பதிவாளர்.
இதன் மூலம் கேரள ஒயின் ஷாப்புகள் நன்றாக பராமரிப்பதை உணர முடிந்தது, அவர்கள் கள்ளுக்கடை கொட்டகையில் இயங்கினாலும் கூட மிகச் சுத்தமாக இருப்பதையும் மிகக்குறைந்த விலைக்கு தரமான கள்ளை அரசே விற்பனை செய்வதையும் உணர முடிந்தது, இதைப் பார்த்தாவது டாஸ்மாக் நிர்வாகம் சுத்தத்தை பேணுமா?இந்த அயல்நாட்டு பிராந்தி விஸ்கி ஜின் ஒயின் வோட்கா வகையறாக்களுக்கு கள்ளு எத்தனையோ தேவலாம்.தமிழ்நாட்டு குடிமகன்கள்,குடிமகள்கள் அவர்கள் உரிமையை போராடிப் பெற வேண்டிய நேரம் வந்து விட்டது.
மேலும் ஒரு விஷயமும் புரிந்தது,டிவி சீரியல்களில் இருக்கும் நல்லதையும் உணர்த்தியது,அவற்றில் பெரும்பாலானவை வெளிப்புற படப்பிடிப்பு செய்வதால்,ஒரு நகரம் 2013 ஆம் வருடம் எப்படி இருந்தது,2009 ஆம் வருடம் எப்படி இருந்தது என ஒரு தெளிவு பிறக்கிறது.1970,80 களில் இந்த நிலை இல்லை,பெரு வாரியான நாடகங்கள் ஸ்டுடியோக்களில்,டிவி ஸ்டேஷன்களில் எடுத்திருப்பார்கள். தவிர அவை இணையத்தில் அவை ஆவணக்காப்பு செய்யப்பட்டதில்லை, பாலு மகேந்திராவின் தரமான கதை நேரம் போன்றவை ஒரு விதிவிலக்கு.இன்றைய டிவி சீரியல்கள் அவை ஆரம்பித்து 750 நாட்கள் ஆனாலும் அதன் 1 ஆம் நாள் எபிசோடைக் கூட இணையத்தில் பார்க்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு,உதாரணத்துக்கு 2019 ஆம் ஆண்டு ஒரு படம் எடுக்க ஆர்ட் டைரக்டர்கள் மிகவும் மெனக்கெட வேண்டாம் ,இந்த ஹெச்டி ஒளிபரப்பின் மூலத்தை வாங்கி அப்படியே வீடியோ மாண்டேஜ் செய்து விடலாம்,மெகா சிரியல்களில் எத்தனையோ கெட்டவை இருந்தாலும் தன்னகத்தே நல்லவற்றையும் கொண்டுள்ளதை எண்ணி வியக்கிறேன்.
சம்மந்தப்பட்ட என் இன்னொரு பதிவு:-