இன்றைய தமிழ் சினிமாவில் படைப்பு சுதந்திரம்


டாகுடர் விஜய் தலைவா ரிலீசுக்காக தமிழ்நாட்டை தங்கநாடாக மாற்ற அயராது உழைக்கும் அம்மாவுக்கு நன்றி என்று வீடியோ மெசேஜில் சொன்னாலும் சொன்னார், அதையே பின்பற்றி எல்லா புதுப் படங்களுக்கும் அதை முகேஷ் விளம்பரத்துக்கு அடுத்தபடியாக தேங்ஸ் கார்டாக போட ஆரம்பித்து விட்டனர்,

இது நையாண்டி படத்தின் தேங்க்ஸ் கார்ட்.ஆக இயக்குனர்கள் இத்தனை தொடைநடுங்கிகளாக இருக்கின்றனர் ,தம் படம் ரிலீசாக என்னத்தை வேண்டுமானாலும் செய்வார்கள் எனப் புரிகிறது. கோடம்பாக்கத்தில் இதை டெம்ப்ளேட் போலவே வைத்திருப்பார்கள் போலிருக்கு,இது செக்லிஸ்டில் இருந்தால் தான் சென்சாரில் படம் அப்ரூவல் ஆகும் என அதிகாரிகள் காதை கடிப்பார்கள் போலிருக்கு, என்ன கொடுமை சார்?

தமிழ் நாட்டை தங்க நாடாக மாற்ற முடியுமா?கோலாரில் இருந்த ஒரு தங்க வயலும் கர்நாடகாவுக்குப் போய்விட, அதையும் செலவு அதிகம் என மூடி விட்டார்கள்,யார் இந்த கருமத்தை எல்லாம் யார் எழுதித் தருவது?முதலில் தமிநாட்டை துக்க நாடாக மாற்ற என படித்து விட்டேன்,என்னா தைரியம் என்று கண்ணை சுருக்கிப் பார்த்தால்,தங்கநாடு,அடேங்கப்பா?காலில் விழுவது போய்,இந்த நிலைக்கு சுயமரியாதை இழந்திருக்கிறோம்.  இந்த அடிப்படை கருத்து  சுதந்திரத்தையே பேணாத இயக்குனர் எப்படி படைப்பில் சுதந்திரத்தை பேணுவார் ? அயோ அயோ