சென்னையில் தொடரும் தரமற்ற கட்டுமானங்களும் விபத்துக்களும்

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் சென்னை, கொரட்டூரில் ஒரு மழைக்கு புதிதாகக் கட்டப்பட்ட நான்கு மாடிக்கட்டிடம் தரை மட்டமானது. விசாரணையில் அது ஒரு ஏரியின் மீது பொருத்தமில்லாத ஃபவுண்டேஷன் நிறுவி கட்டப்பட்ட கட்டிடம் என நிரூபனமானது, பின்னர் ஆழ்வார்பேட்டையில் நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான கட்டிடம் விரிசல் விடத்துவங்க, அதில் அரசு தலையிட்டு சுமார் 3மாதத்துக்கும் மேலாக மாநகராட்சி ஆட்கள் அக்கட்டிடத்தை இடித்துத் தள்ளினர்.
கட்டிடம் கட்டி முடித்த பின் கிடைக்கும் பெர்ஸ்பெக்டிவ் வியூ

இன்று பெய்த சில மணி நேர அடைமழையில் , சென்னை முகலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்தது, அந்த கட்டுமான நிலத்தில் இரண்டு டவர்கள் தலா 13 மாடிகள் கட்டப்பட்டுக்கொண்டிருக்க,ஒன்று மட்டும் இன்று அப்படியே பொலபொலவென இடிந்து விழுந்திருக்கிறது, 

ஆனால்   இடிந்து விழுந்த 13 மாடிக் கட்டிடத்தின் பெயரையும்,அதன் நிறுவனத்தின்  பெயரையும் விலாசத்தையும் வெளியிட தினசரிகளுக்கும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் இன்னும் என்ன தயக்கம்?,எனப் புரியவில்லை,  பத்திரிக்கை  தர்மத்தை இப்படியெல்லாம் காப்பாற்றியே ஆக வேண்டுமா?யாருக்கு பயம்? என்ன கவர் வாங்கி  விட்டார்களா?கொஞ்சமும் வெட்கமாக இல்லையா?
கட்டுமானப் படம்
 புதிய தலைமுறை தொலைக்காட்சி தவிர்த்த வேறு எந்த  ஊடகத்திலும் இடிந்து விழுந்த 13 மாடிக் கட்டிடத்தின் பெயர் ட்ரஸ்ட் ஹயிட்ஸ் ,ப்ரைம் ஷ்ரிஷ்டி டெவலப்பர் என்பதைக் குறிப்பிடவேயில்லை, அதன் Prime Sristi இணையத்தளத்தில்  இது பூகம்பம் தாங்கும் கட்டுமானம் [RCC Framed Structure with seismic design.]  என பொய் சொல்லியுள்ளனர், 

ஆனால் ஒரு மணிநேரம் பெய்த அடைமழையைக்  கூட இது தாங்கவில்லை. இதற்கு ஸ்ட்ரக்சுரல் கன்சல்டண்ட் [ structural consultant ] என ஒருவன் இருந்தால்? காவல்துறை ஏன் இன்னும் அவனை கைது செய்யவில்லை? ஏரி நிலத்தில் அடுக்ககம் கட்டுகையில் பைல் ஃபவுண்டேஷன் [pile foundation] மட்டுமே நிறுவி கட்ட வேண்டும்.அதுவும் ஒவ்வொரு பைலும் அந்த நிலத்தடியில் ஊடுறுவி பாறையைத் தொட்டு [ hard strata] முட்டி நிற்கும் வரை சம்மட்டி போன்ற எந்திரத்தால் அடிக்கப்பட்டு அதன் மேலே பைல் கேப் அமைத்து தூண்கள் [columns] அமைக்க வேண்டும், இவர்கள் ,என்ன விதமான ஃபவுண்டேஷன் அமைத்தார்களோ?இறைவனுக்கே வெளிச்சம்.
 
இதில் மற்றுமோர் முரண்நகை என்னவென்றால்,ஒரு கட்டிடத்துக்கு த ஃபெய்த் [இடிந்த கட்டிடம்] ,என்றும் மற்றொரு கட்டிடத்துக்கு த பிலீஃப் என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் சத்தியமும் நம்பிக்கையும் பொய்யர்களிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதைத் தான் நாம் பூடகமாக இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும், விஞ்ஞான வளர்ச்சியும் கட்டுமான தொழிற்நுட்பமும் கோலோச்சும் காலத்தில் தரமற்ற கட்டுமானத்தாலும் கவனக்குறைவாலும் விளைந்த வெட்கக்கேடு இது.
கீப்ளானும் திட்ட முகவரியும்

இந்தக் கட்டுமான நிறுவனம் சென்னையில் இதற்கு முன்னர் எந்த கட்டிடமும் கட்டவில்லை,ஆக எந்த முகாந்தரமுமோ, ப்ரீக்வாலிஃபிகேஷனுமோ இல்லாமல் சென்னையில் சிம்மாசனமே இட்டிருக்கின்றனர் என்பது புலனாகிறது.இதற்கு எத்தனை அரசியல் பலம் கொண்டு உதவியிருக்க வேண்டும்?,இந்த கட்டிடத்துக்கு எத்தனை தனியார் வங்கிகள் கடன் வசதிகள் செய்து தந்திருக்கும்?அந்த வங்கிகள் மூலம் கடன் பெற்ற எத்தனை பேரின் தவணைகள் ஏற்கனவே துவங்கியிருக்கும்?அத்தனை பேரின் கனவுகளும் பாழ். எல்லாவற்றுக்கும் மூல காரணம் பேராசை,அது பெரு நஷ்டத்தில் முடிந்திருக்கிறது. இதே நிறுவனத்தார் மதுரையில் ஐந்து கட்டுமானங்களை முடித்துக் கொடுத்துள்ளனர்,அவற்றில் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.  
அவை பின்வருமாறு,
  • Seetha Apartments,BB Kulam Madurai
  • Rajkamal Apartments,KK Nagar Madurai.
  • Lake view Homes,KK Nagar Madurai.
  • Lake view Hotel,KK Nagar,Madurai (www.lakeviewhotel.in)
  • Tatwa Darshan,P&T Colony,Madurai.  
நம்மூரில் மட்டுமே இது போன்ற அக்கிரமங்கள் நிரம்ப நடக்கும். தடி எடுத்தவன் தண்டல்காரன்,சாராய வியாபாரியெல்லாம் கல்வித்தந்தை, ரியல் எஸ்டேட் புரோக்கர் மற்றும் கொத்தனார் மேஸ்திரி எல்லாம் இன்றைய ப்ரொமோட்டர். எத்தனை வெட்கக்கேடு? .

இடிபாடுகளில் சிக்கி இன்னுயிரை ஈந்து,எதிர்காலத்தில் அங்கே யாரும் எந்தக் குடும்பமும் சிக்கி சாகாமல் காத்த தமிழகம்,ஆந்திரா மற்றும் வடமாநில கட்டுமானத் தொழிலார்களுக்கு நல்ல நீதி கிடைக்கட்டும்,அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.

இவர்களின் கட்டுமான சிறப்பம்சங்களின் ஸ்க்ரீன் ஷாட்டைப் பாருங்கள்,இணையதளத்தை விரைவில் முடக்கிவிடுவர் என்பதால் தான் இங்கே ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டுள்ளேன்.
  • இவர்களின் இணையத்தளத்தின்  எந்த பக்கத்திலும் இதன் ஆர்கிடெக்ட் யார்?
  • இதன் ப்ராஜக்ட் மேனேஜர் யார்?
  • இதன் ஸ்ட்ரக்சுரல் கன்சல்டண்ட் யார்?
  • இதன் சாயில் ரிபோர்ட் கன்சல்டண்ட் யார்?
  • இதன் ஃபையர் ஸ்ட்ரேடஜி கன்சல்டண்ட் யார்?
  • இதன் பைலிங் காண்ட்ராக்டர் யார்?
போன்ற முக்கிய விபரங்கள் குறிப்பிடவேயில்லை,அப்படி ஒரு வல்லுனர் குழு இருக்குமேயானால் அவர்கள் அனைவருமே பிணையில் வரமுடியா சட்டத்தில் கைது செய்ய்ப்பட வேண்டியவர்கள் ஆவர். மேலும் இக்கட்டிடம் காசு மிச்சம் செய்ய மேலே சொன்ன  வல்லுனர்களின் ஆலோசனையின்றி கட்டப்பட்டதா? என்னும் சந்தேகமும் வலுக்கிறது.

இனியேனும் அடுக்குமாடிக்குடியிருப்பில் வீடு வாங்குவோர் அதன் ஆர்கிடெக்ட் யார்?ஸ்ட்ரக்சுரல் கன்சல்டண்ட் யார்? நல்ல திட்ட மேலாண்மை  மற்றும் ஒழுங்கான கட்டுமான வரைபடங்களுடன் தான் தான் வாங்கும் கட்டிடம்  கட்டப்படுகின்றனவா?என்பதை சோதித்து அறியுங்கள். வரும் முன் காத்துக்கொள்ளுங்கள்.உங்கள் உரிமைகளை போராடியேனும் பெறுங்கள்.

 
கட்டிடத்தின் பெயரைப் பாருங்கள்? நகை முரணின் உச்சம்

இந்த உதவாக்கரை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த கவுன்சிலர்கள், அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்,இதன் உரிமையாளர் பாலகுருவை மிகக் கடுமையாக பிணையில் வரமுடியாத சட்டத்தில் தண்டிக்க வேண்டும்,உயிர்வலியை உணரவைக்க வேண்டும்,இதன் மூலம் எதிர்காலத்தில் கட்டுமானத்தின் போது கடைபிடிக்க வேண்டிய அவசியமான விதிகளையும் ஏற்பாடுகளையும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

இடி விழுந்ததால் தான் இக்கட்டிடம் தரைமட்டமானதாம்,அதனால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்கிறான் இதன் நிறுவனர் பாலகுரு என்னும் மடையன். ஆடத்தெரியாத தேவரடியாள் கூடம் கோணல் என்றாளாம், வெட்கம் கெட்ட பிணம் திண்ணி பாலகுருவுக்கு,உயர் அடுக்குமாடிக் கட்டிடத்தின் கட்டுமானத்தின் போது கட்டிடத்திலும் ,அதற்கு உதவும் க்ரேனிலும் இடிதாங்கி வைக்க வேண்டும் என்று தெரியாதா? !!! கேட்கிறவன் கேனையனானால் எருமைமாடு ஏரொப்ப்ளேனில் போகுமாம்.

 எதிர்காலத்தில் இது போல கட்டிடங்கள் சடுதியில் தரைமட்டமாகாமல் அந்த கடுமையான கட்டுமான விதிகளும் பாலகுரு போன்றோர் அடையும் தண்டனைகளும் துணைநின்று காக்கட்டும், இது பூனைக்கு மணி கட்ட வேண்டிய தருணம். உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்,அரசு இதில் உடனடி நடவடிக்கை எடுக்கட்டும்.

இனியேனும் அடுக்குமாடிக்குடியிருப்பில் வீடு வாங்க எண்ணுவோர் , L&T போன்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குங்கள். அவர்களின் கட்டிடங்களில் அவர்கள் தம் ஸ்பெஸிஃபிகேஷனில் சொன்னது போல மிகக்கடுமையாக விதிகள் பின்பற்றப்பட்டிருக்கும்.
இந்த உதவாக்கரை திட்டத்திற்கு கடனுதவி செய்த ஐசிஐசிஐ அயோக்கியர்கள்

L&T நிறுவனத்தின்  கட்டுமானத்தில், செண்ட்ரிங் ஷீட் அடிப்போம் அல்லவா? அதற்கு கூட எத்தனை தடிமனில் ப்ளைவுட்டும், ப்ரேசிங்கும், ஜாக்கும் அமையவேண்டும் என டிசைன் செய்வார்கள், வெவேறு வடிவமைப்புக்கென்றே மனப்பாக்கத்தில் உள்ள அவர்களில் அலுவலகத்தில் சுமார் 1000 பொறியாளர்கள் வேலை செய்கின்றனர்.

எனக்குத் தெரிந்து சென்னையில் L& T ஈடென் பார்க்,L& T எஸ்டான்ஷியா, ஹிராநந்தானி போன்றவை காலத்தை கடந்து நிற்கும், 15 வருடங்களுக்கு முன்னர் L& T அரிஹந்துடன் இணைந்து கோயம்பேட்டில் மெஜஸ்டிக் டவர் என்னும் 16 மாடிக் கட்டிடம் கட்டினர், அது இன்றும் எந்த சூழலையும் தாக்குப்பிடித்து நிற்கிறது. இப்போது அவர்கள் சொன்ன பூகம்பம் தாங்கும் தொழிற்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தியிருப்பார்கள் என்னும் முழு நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

திருமண மண்டபம், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், ஹாஸ்டல்கள், கார்மெண்ட் ஃபேக்டரி,ஆலைகள், போன்ற அதிக மக்கள் புழங்கும் கட்டிடங்களின் ஸ்ட்ரக்சுரல் டிசைனிங்கை எப்போதும் ஸ்ட்ரக்சுரல் எஞ்சினியரிங்கில் பிஎஹ்டி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள் வடிவமைப்பதே சரியாக இருக்கும். அதை 3rd party ஸ்ட்ரக்சுரல் கன்சல்டன்ட் ஒருவர் சோதித்து சான்றளிப்பது மிகவும் பலனளிக்கும்,இரட்டைப் பாதுகாப்பாக இருக்கும் , அதன் உரிமையாளர் மனநிம்மதியுடன் தூங்கலாம்.

ஆனால் இங்கே கம்பிகட்டும் தொழில் செய்யும் மேஸ்திரியே தங்கள் அனுபவத்தில் கம்பி வடிவமைப்பு செய்வதையும் பீம்கள் காலம் அளவுகளை முடிவு செய்வதையும் சிற்றூர்களிலும் கிராமப்புறங்களிலும் அதிகம் காண முடிகிறது.

முதலில் பணம் செலவாகிறதே என மண்பரிசோதனை செய்யாமல் மிச்சம் பிடிக்கின்றனர்.
பின்னர் நீர் பரிசோதனை செய்யாமல் மிச்சம் பிடிக்கின்றனர்,
பின்னர் கம்பிகள் பரிசோதனை செய்யாமல் மிச்சம் பிடிக்கின்றனர்,
பின்னர் காங்க்ரீட் பரிசோதனை செய்யாமல் மிச்சம் பிடிக்கின்றனர்,
column to column spanஐ ஏகத்துக்கும் அதிகமாக்குகின்றனர்,Slab thicknessஏகத்துக்கு குறைத்து மிச்சம் பிடிக்கின்றனர்.
அதே போன்றே cantileverஐயும் ஏகத்துக்கும் அதிகமாக்குகின்றனர்,
இதெல்லாம் சேர்ந்து மொத்தமாக வினையாக முடிகின்றது.

இந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கென்றே சிறப்பு வல்லுனர்கள் உள்ளனர்.

Repair, Structural strengthening மிகவும் நுட்பமாக செய்ய வேண்டிய வேலை,அதற்கு உதாரணமாக இங்கே இந்த மங்களூர் கல்லூரியின் கேஸ் ஸ்டடியின் பிடிஎஃப் ஃபைலை இணைத்துள்ளேன் http://www.drfixitinstitute.com/.../KVG%20case%20study... உங்கள் ஊரின் பெருநகரில் இருக்கும் ஸ்ட்ரக்சுரல் கன்சல்டன்டை அணுகினால் அவர்களே ப்ரீக்வாலிஃபிகேஷன் உள்ள ஸ்பெஷலிஸ்ட் கான்ட்ராக்டரை பரிந்துரை செய்வார்.மக்கள் பாதுகாப்பிற்கு பணம் செலவிட தயங்காதீர்கள்.
 


இங்கே அமீரகத்தில் துபாயில் எல்லா 8 மாடிக்கும் மேற்பட்ட டவர்களுக்கும் 3rd party check அமலில் இருக்கிறது,அங்கே இந்தியாவில் இது வந்ததென்றால் மிகவும் பாதுகாப்பான கட்டிடங்களை பெறலாம், ஸ்ட்ரக்சுரல் கன்சல்டண்ட் அலுவலகங்களுக்கும் வேலை இருந்து கொண்டே இருக்கும்,தங்களை அப்டேட் செய்த்து போலவும் இருக்கும்