இப்பூமி மனிதன் மட்டுமே வாழப் படைக்கப்பட்டதல்ல!!!

 
Ecoduct Kikbeek in Hoge Kempen National Park, Belgium. Photo credit
இந்தியாவை வல்லரசாக்குவதற்கு காடுகளை அழித்து அதன் நடுவே மாநிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் அமைத்தால் மட்டும் போதாது, அங்கே இரண்டாகப் பிரிக்கப்பட்ட காடுகளில் வசிக்கும் விலங்குகள் இரை தேட, துணை தேட, ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு செல்ல பாலங்கள் அவசியம் அமைக்க வேண்டும்.இவற்றை ஆங்கிலத்தில் எகோடக்ட் என்றும் அழைப்பர்.

நெதர்லாந்து நாட்டில் இது போல 600க்கும் மேற்பட்ட பாலங்கள் [
wildlife crossing ] இருக்கின்றன. அதனால் அங்கே யானைகள் ரயில் பாதையில் கடக்கையில் ரயிலில் அடிபட்டுச் சாவதில்லை,நெடுஞ்சாலையில் அதிவேக வாகனங்களில் , ட்ரெய்லர் லாரிகளில் சிக்கியும் சாவதில்லை.
Elephant underpass in Kenya.

நம் இந்தியாவைத் தவிர எல்லா வளர்ந்த நாடுகளிலுமே இந்த விலங்குகளுக்கான மேம்பாலங்கள் புழக்கத்தில் இருக்கின்றன. நம் நாட்டில் அனுதினமும் யானைகளும் ,சிறுத்தைகளும், புலிகளும் வன அழிப்பினால் ஊருக்குள் புகுவதும், வாகனங்களில் அடிபட்டுச் சாகும் நிலையில், அவற்றுக்கான மேம்பாலங்கள் அமைப்பது அவசியமாகின்றன.
Ecoduct Borkeld in the Netherlands. Photo credit

விலங்குகளின் வசிப்பிடத்தை அவற்றிடமிருந்து பிடுங்கும் பொழுது, அதற்கு சிறு பரிகாரமாவது செய்யுங்கள். பேராசை பெருநஷ்டம். இந்நிலை நீடித்தால் அடுத்த நூறாண்டுகளுக்குப் பின்னர் யானைகளையும் புலிகளையும் புகைப்படங்களில் மட்டுமே பார்க்க முடியும். 
இப்பூமி மனிதன் மட்டுமே வாழப் படைக்கப்பட்டதல்ல!!!

மங்கோலியா நாட்டில் இருக்கும் ஒரு விலங்குகள் பாலம் பற்றிய விழிப்புணர்வு ஆவணப்படம்,அவசியம் பாருங்கள் பகிருங்கள்