கிண்டி கத்திபாரா மேம்பாலம்


நமது கிண்டி கத்திபாரா மேம்பாலம் க்ளோவர் லீஃப் வடிவ மேம்பாலம் ஆகும். இது க்ளோவர் செடியின் இலை [அம்மைக்கொடி] வடிவில் இருப்பதால் இந்தப் பெயர்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய க்ளோவர் லீஃப் மேம்பாலம் ஆகும். ஆசியா என்பது எத்தனை பெரிய கண்டம்,நாம் எவ்வளவு பெருமைப் பட வேண்டும்?இதை நாம் எத்தனையோ பேர் அனுதினம் உபயோகிக்கிறோம். இனி இதன் பெருமையை தெரிந்து உபயோகிப்போம்.எத்தனை பெருமை இருந்தாலும் இதை முறையாக பராமரிக்காவிட்டால் பலனில்லை.
க்லோவர்லீஃப் [அம்மைக்கொடி]
 இரவு வேளைகளில் இதன் மீது பொருத்தப்பட்டிருக்கும் மின் விளக்குகள் பாதி எரியாது[மின் நிலையங்களின் எல்லை வரையறை பிரச்சனை போலும்], நம் வண்டியில் விளக்கு எரியாவிட்டால் போயிற்று. பயந்தபடி ஓட்டிச் செல்ல வேண்டும். மேலும் மேம்பால பராமரிப்பு சுத்த மோசமாக இருக்கும். வண்டல் அப்படியே தேங்கியிருக்கும்.அதை அள்ள மாட்டார்கள். எனவே மழை பெயதால் வடிகால்களில் மண் சென்று அடைத்துக் கொண்டு ,பாலமே வெள்ளக்காடாக காட்சியளிக்கும்,

பாலத்தின் தரையில் பதிக்கப்பட்ட ரிஃப்லக்டர்கள் முறையான பராமரிப்பின்றி ஏகம் உடைந்து விட்டன.எனவே அவற்றால் பிரயோசனமே இல்லை,வண்டியின் டயரை தான் அவை கிழிக்கின்றன.

தவிர பாலத்தின் தடுப்பு சுவர்களுக்கு இடையே எக்ஸ்பேன்ஷன் ஜாயிண்ட் வரும் இடங்களில் அதை முறையாக ஃபினிஷ் செய்யாமல் விட்டிருப்பார்கள்.அந்த இடம் பார்க்க விகாரமாக காட்சியளிக்கும்.

கட்டி முடித்து 6 வருடங்களிலேயே பாலத்தின் பல இடங்களில் குண்டும் குழியுமாக இருக்கும்.எந்த கட்டிடமோ மேம்பாலமோ பராமரிப்பு இல்லை என்றால் 10 வருடங்களில் பல்லிளித்து விடும்.இனியேனும் மாநகராட்சி இதை சரியாக பராமரிக்க வேண்டும்.
தொடர்புடைய சுட்டிகள்
http://en.wikipedia.org/wiki/Kathipara_Junction
http://en.wikipedia.org/wiki/Cloverleaf_interchange
http://en.wikipedia.org/wiki/Asia
http://en.wikipedia.org/wiki/Clover