புன்னகை மன்னன் படமும் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாடலும்


இயக்குனர் பாலசந்தருக்கு சில்ஹவுட் [Silhouette ] போட்டோக்ராப்பியில் மிகுந்த ஆர்வம் உண்டு, இந்த நிழல் ஓளிப்பதிவு தொழில்நுட்பத்தை தன் அக்னிசாட்சி [1982]படத்தில் மிக அருமையாக கையாண்டிருப்பார்,

அதில் ஒளிப்பதிவாளர் லோகநாத்,மிக அருமையாக சிவகுமார் மேடையில் இயக்கும் தொழில்முறை நிழல் நடனங்களை திரையில் அருமையாக கொண்டு வந்திருப்பார்.ஏக் துஜே கேலியே படத்தின் ஒளிப்பதிவும் லோக்நாத் தான்.

1985 ஆம் ஆண்டு வெளியான சிந்து பைரவி படத்தில் , இயக்குனர் கே.பாலச்சந்தரின் மனம் கவர்ந்த விசாகப்பட்டினம் கடற்கரை லொக்கேஷனில் சிவகுமார் தோன்றும் ஆதித்ய ஹ்ருதயப் பாடல் காட்சியை அதிகாலை சூர்யோதயத்தின் போது சில்ஹவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்திருப்பார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரகுநாதரெட்டி
http://www.youtube.com/watch?v=Wj9-Y00wN6M&index=1&list=PLA5DA77CF13B6999E

பின்னாளில் 1990ல் ஒருவீடு இருவாசல் திரைப்படத்திற்கும் ரகுநாதரெட்டி தான் ஒளிப்பதிவு, குறைந்த முதலீட்டில் உருவான திரைப்படம் என்பதால் சூப்பர் 16 எம் எம் ஃப்லிம் ஸ்டாக் கொண்டு எடுத்திருப்பார்,அதில் குற்றாலம் அருகே உள்ள குத்துவலசைப்பாறைக் குன்றில் அமர்ந்து நாயகன் கணேஷ் [குமரேஷ்] வயலின் வாசிப்பார்,அவர் நிஜ வயலின் மேதையும் கூட,அங்கும்  சூரிய அஸ்தமனத்தின் போது கே.பாலச்சந்தர்+ ரகுநாதரெட்டியின் சில்ஹவுட் ஒளிப்பதிவின் மீதான காதல் மிக அருமையாய் வெளிப்பட்டிருக்கும்.அப்படம் தமிழ் சினிமாவின் அதிசயம்,பொக்கிஷம் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

இனி புன்னகை மன்னன் படம் பற்றி:-
 புன்னகை மன்னன் படத்தின் டைட்டில் பாடலான ஏதேதோ எண்ணம் வளர்த்தேனில்,ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி மிக அருமையாக சில்ஹவுட் சினிமேட்டோக்ராப்பியில் மிக அருமையாக இப்பாடலை சிருஷ்டித்திருப்பார்.


இப்பாடலுக்கு முக்கியமான சிறப்புகள் பல உண்டு,முதன்மையாக இந்த பெயர் போடும் பாடல் படம் துவங்கி 23 நிமிடங்கள் கழித்து தான் வருகின்றது.வேறு எந்த சினிமாவிலும் இப்படி முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகமாகி ,முக்க்கியமான கதை விவரிக்கப்பட்டுவிட்டு,துணிந்து படத்தின் பெயர் போடும் பாடலை நுழைத்ததேயில்லை,அந்த வகையில் இது முக்கியமான கட்டுடைத்தல்.

பாடல் முழுவதும் அதிகாலை ஒளியில் சில்ஹவுட் ஒளி அமைப்பு செய்து,முகத்தின் டீடெய்ல் எதுவுமே தெரியாத படிக்கு  படமாக்கப்பட்டது இந்திய சினிமாவில் இப்பாடலாகத்தான் இருக்கும்.

இப்பாடலில்   குமரி முனையின் சூர்யோதயமும்,அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் சூர்யோதயமும்,நம் சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் இருக்கும் Karl Schmidt Memorial சூர்யோதயமும்,குற்றாலம் அருகே உள்ள பைம்பொழில் திருமலைகுமாரஸ்வாமி கோவிலின் சூர்யோதயமும்,சென்னை ஸ்டுடியோ ஒன்றுக்குள் கமல் மூட்டை நிறைய புறாக்களை பறக்க விடுகையில் அங்கே தெரியும் சூர்யோதயமும் மிக அருமையாக காட்டப்பட்டிருக்கும்.ஜோடிப் புறாக்களுக்கு மட்டும் க்ளோஸப் போட்டு டீடெய்ல் செய்திருப்பார்கள்.

இத்தனை சிறப்புகள் பொருந்திய முக்கியமான இப்பாடலை சினிமா விற்பன்னர்கள் யாருமே கண்டுணர்ந்து பாராட்டி எழுதாதது மிகப்பெரிய குறையே.

http://en.wikipedia.org/wiki/Silhouette , சில்ஹவுட் பற்றி இங்கே படியுங்கள்.

இங்கே கீழே உள்ள படத்தில் இருப்பது ஹிட்ச்காக்கின் வெர்டிகோ[1958] படத்தில் சில்ஹவுட் ஒளிப்பதிவில் வரும் ஒரு பிரசித்தி பெற்ற காட்சி,மற்றும் மைக்கேல் ஜாக்சனின் மை ஸ்மூத் க்ரிமினல் ஆல்பத்தில் வரும் ஒரு பிரசித்தி பெற்ற சில்ஹவுட் ஸ்டில்.

இந்த பாடலைப் பாடிய சித்ராவிடம் மழலைக்குரல் மீதமிருப்பதை ஒருவர் உணரலாம்,கேட்பவர் ஜீவனில் இரண்டறக் கலக்கும் மிக அற்புதமான பாடல் இது, அப்போது நீதானே அந்தக்குயில் படத்தில் அவர் பாடிய பூஜைக்கேத்த பூவிது தான் அவரின் முதல் பாடல்,அதைத் தொடர்ந்து இசைஞானியின் frequent collaborator ஆகவே மாறிப்போனார் சித்ரா.
மைக்கேல் ஜாக்சனின் மை ஸ்மூத் க்ரிமினல் சில்ஹவுட்

இப்பாடலுக்கு கிடைக்க வேண்டிய தேசிய விருது சிந்து பைரவியில் வரும் பாடறியேன் படிப்பறியேனுக்கு கிடைத்து விட்டது,என்று சொல்லும்படியான பாடல்,ஆனால் இரண்டுமே ஒன்றை ஒன்றும் விஞ்சும் பாடல்.புன்னகை மன்னன் படம் தான் இசைஞானியும் பாடலாசிரியர் வைரமுத்துவும் கடைசியாக இணைந்து பணியாற்றிய படம்,

இப்பாடலை நான் 1986ல் ஒரு தீபாவளி கழிந்து சென்னை வந்து ஒரு ஒண்டுக்குடித்தன வீட்டில் போடப்பட்ட ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் டைட்டில் ஸ்க்ரோல் நீக்கப்பட்ட வடிவத்தில் பார்த்தேன்,அதுவரை நான் இருந்த மதுரையில் சென்னை தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சிகள் தெரியாது,தூர்தர்ஷன் மட்டும் தான் தெரியும்,[அப்போது கொடைக்கானல் ரிசீவர் நிலையம் துவக்கவில்லை] எனக்கு சென்னையை இந்த ஒரு காரணத்துக்காகவே பிடித்தது.
ஹிட்ச்காக்கின் வெர்டிகோ[1958] சில்ஹவுட்

இப்படம் 25 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது,இப்படத்தின் வெள்ளி விழாவில் பாலச்சந்தர் கமலுக்கு புரட்சி மன்னன் என்னும் பட்டத்தை சூட்டினார்,நாம் என்ன புரட்சி செய்தோம் என தன்னை நிஜமாக புடம் போட்டுக் கொண்டாரோ என்னவோ?அந்தப் பட்டத்தை அவர் உபயோகப்படுத்தியதேயில்லை.

இப்பாடலை ராஹ பஹடி [raha pahadi] ராகத்தில் இசைஞானி உருவாக்கினார்.இந்த ராகத்தைப் பற்றி இங்கே சென்று படியுங்கள்,கேளுங்கள். http://www.soundofindia.com/raaga_details.asp?raaga=72

இந்தப் படம் வந்த 1986 ஆம் ஆண்டில் மட்டும் இசைஞானியின் இசையமைப்பில் 38 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன,அதில் தீபாவளி ரிலீஸ் படங்கள் மட்டும் 12,அதன் முந்தைய ஆண்டான 1985ல் இசைஞானியின் இசையில் 51 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன,அதில் தீபாவளி ரிலீஸ் படங்கள் சுமார் 15,யாராலேனும் இந்த சாதனையை நெருங்கத்தான் முடியுமா? மேலும் இது பற்றி விளக்கமாக அறிய
http://ragadhevan.blogspot.ae/2010/05/blog-post.html

இப்படத்தில் தான் இந்திய சினிமாவில் முதன் முறையாக கம்ப்யூட்டர் ம்யூசிக் என்று சொல்லப்படும் Music sequencer தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது,அது கவிதைகேளுங்கள் பாடலிலும்,ஒன் டூ த்ரீ என்னும் பாடலிலும் நுட்பமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர் ரெஹ்மான் இசைஞானியுடன் இணைந்து பணியாற்றியிருப்பார்.கமல்ஹாசன் பாலச்சந்தர் இயக்கத்தில் பணியாற்றிய 25 ஆம் படம் புன்னகை மன்னன்.

இந்த புன்னகை மன்னன் டைட்டில் பாடலை இங்கே பாருங்கள்
https://www.youtube.com/watch?v=QMRI8tUkWZI