தாஸேட்டாவுக்கு 75 ஆம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்




நம் வாழ்வில் மிக முக்கியமான அங்கம் தாஸேட்டாவின் இசை,அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடனும்,மனநிம்மதியுடனும் முழு ஆயூள் வாழ ,இன்று அவரின் 75 ஆம்  பிறந்தநாளில் பெரிய கடவுள் அவரைக் காத்து  அருள்செய்யட்டும்

தாஸேட்டா பற்றிய குறிப்பு:-
ஏழு முறை தேசிய விருது பெற்றவரும் கான கந்தர்வன் என அழைக்கப்படுபவருமான கே ஜே யேசுதாசுக்கு இன்று 75 வது பிறந்த நாள். கட்டச்சேரி ஜோசஃப் யேசுதாஸின் (கே.ஜே. யேசுதாஸ்) கேரள மாநிலம், கொச்சியில் பிறந்தவர். தந்தை பிரபல இசைக் கலைஞர் மற்றும் நடிகர்.

ஐந்து வயதிலேயே தனது ஆரம்ப இசைக் கல்வியை தந்தையிடம் கற்றார். திருப்புனித்துறை இசை அகாடமியில் இசை கற்றார். சிறிது காலம் வேச்சூர் ஹரிகர சுப்பிரமணிய அய்யரிடமும், செம்பை வைத்தியநாத பாகவதரிடமும் இசை பயின்றார். 
 முதன் முதலில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் 1960-ல் பின்னணி பாடினார். தமிழில் எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை' பாடலின் மூலம் அறிமுகமானார். 1970-களில் இந்தித் திரைப்படங்களில் பல புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார்.
 மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட 12 மொழிகளிலும், மலாய், ரஷ்ய மொழி, அரபி, லத்தீன், ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளையும் சேர்த்து, 17 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். ஏழுமுறை தேசிய விருது பெற்றுள்ளார்.
 5 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்க மாநில அரசுகளின் சிறந்த பாடகருக்கான விருதை மொத்தம் 45 முறை பெற்றுள்ளார். சங்கீத சிகரம், சங்கீத சக்ரவர்த்தி, சங்கீத ராஜா, சங்கீத ரத்னா, கான கந்தர்வன்... இவையெல்லாம் யேசுதாசுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள். 
 இன்றும் தன் குரல் வளத்தை அப்படியே வைத்திருக்கும் 'தாசேட்டன்', தாமாகவே பாடுவதைக் குறைத்துக் கொண்டார். முக்கியமான பாடல்களை மட்டும் மறுக்காமல் பாடித் தருகிறார்.

  http://tamil.filmibeat.com/news/k-j-yesudass-turns-75-today-032700.html

தாஸேட்டாவின் தெலுங்குப் பாடல்களின் ஆச்சர்யமூட்டும் தொகுப்பு இது