கே.பாலசந்தரின் கல்கி திரைப்படம் மற்றும் ரோமன் சாரிட்டி என்னும் ரோம் இலக்கியக் கதை

பாலச்சந்தரின் கல்கி திரைப்படத்தில் வேலைக்காரி ஃபாத்திமா பாபு, எஜமானி கீதாவிடம் பட்டினி செத்துக் கொண்டிருப்பவனுக்கு ஒருத்தி தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய சம்பவத்தை மேற்கோள் காட்டி ,நாயகி சுருதி ஒரு அந்நியனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவத்துக்கு நியாயம் கற்பிப்பார்.

அனந்து அவர்கள் கே.பாலச்சந்தருடன் பணியாற்றிய எல்லா படங்களிலுமே உலக இலக்கியங்களிலிருந்தும் உலக சினிமாவிலிருந்தும் இது போன்ற உதாரணங்கள் காட்டுவதைக் காண முடியும். அதற்கு நாம் கே.பாலச்சந்தரின் படங்களின் வசனத்தை உற்று நோக்க வேண்டும்.அவ்வளவு தான்.

இதைப்  பற்றி இணையத்தில் தேடினால் ரோமன் சாரிட்டி என்னும் ரோம் நாட்டின் உதாரணக்கதை படிக்க கிடைத்தது, அக்கதை ரோமில் பட்டினி கிடந்து சாகுமாறு தண்டனை விதிக்கப்பட்ட சிமோன் [Cimon] என்னும் தன் தந்தையைக் காக்க பெரோ [Pero]  என்ற மகளே அவரின் சிறைக்குத் தேடிச் சென்று தினமும் தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றி வந்த சம்பவத்தைப் பேசும் படைப்பு.

அப்படி ஒரு நாள் பால் தந்து கொண்டிருக்கையில் சிறைக்காவலனிடம் பிடிபட்டவள், நீதிமன்ற விசாரணையில் அவளின் தன்னலமில்லா கருணை உள்ளம் அனைவராலும் புரிந்துகொள்ளப்பட்டு பொது மன்னிப்பும் தரப்பட்டு ,தந்தை சிமோனும் விடுதலை செய்யப்படுகிறார் . இது போல ஆபத்துக்கு பாவமில்லை வகை இன்ஸெஸ்ட் கதைகள் ரோம் சரித்திரத்தில் ஏராளம் உண்டு என்று படித்தேன்,அவற்றை nine books of memorable deeds and sayings என்னும் படைப்புகளில் விவரித்துள்ளனர்.
இக்கதையைத் தழுவி படைக்கப்பட்ட பண்டைய /நவீன ஓவியங்கள், சிற்பங்கள், உலக இலக்கியம் மற்றும் சினிமா என ஏராளம் உண்டு. கலைக்கு ஆபாசம் கிடையாது என்னும் படியான படைப்பு ரோமன் சாரிட்டி.
அப்படித் தேடியதில் துருக்கி நாட்டு இயக்குனர் Ferhat Özgür என்பவரின்   ‘cimon and pero’_a room of emotion என்னும் 4 நிமிடக் குறும்படம் பார்க்கக் கிடைத்தது. இக்குறும்படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது.


ரோமன் சாரிட்டி பற்றி இங்கே.


nine books of memorable deeds and sayings  பற்றி இங்கே


இயக்குனர் Ferhat Özgür பற்றி இங்கே
குறும்படம் இங்கே.