எழுத்தாளன், கட்டிடக்கலைஞர் பின்னணியில் சென்னையில் பத்து வருடங்கள் அமீரகத்தில் பதினைந்து வருடங்கள் பணியில் இருந்தேன், தற்போது மூன்று வருடங்களாக சென்னையில் கட்டிடக்கலை வாஸ்து ஃபெங் ஷூய் வடிவமைப்பாளராக DFD Dial for Design என்ற online design சேவையைத் துவக்கி கட்டிடக்கலை வாஸ்து ஃபெங்ஷூய் குறித்த சிறப்பு ஆலோசனைகள் வரைபடங்கள் வழங்கி வருகிறேன் . ஓய்வில் அரிய உலக சினிமாக்களையும், கலை, சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியம், வாஸ்து,கட்டுமானத்துறை கட்டிடக்கலை பற்றி அதிகம் எழுதுகிறேன்.
பைசா கோபுரத்தின் கரைந்த படிகள்
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள், சுற்றுலா பயணிகள் தான் இங்கே கரைப்பார், இத்தாலியின் உலக அதிசயம் பீஸா நகரின் சாய்ந்த கோபுரத்தின் மணிக்கூண்டின் 294 பளிங்கு படிகளும் இப்படி கரைந்து போய் தான் உள்ளது,4° பாகை சாய்வு மட்டுமே அதன் குறையல்ல, இது போல பல குறைகள் கொண்டது தான் பீஸா கோபுரம்.