தமிழ் திரையுலகின் அருமையான நடிகர் முரளிக்கு அஞ்சலி

தேச்சையாக ,மிகுந்த பணிச்சுமைக்கு இடையில் தினமலர் இணையதளம் திறந்தால் நடிகர் முரளி மரணம் என்றிருக்க, அவர் [மலையாள நடிகர்] தான் ஏற்கனவே  இறந்துவிட்டாரே? என ஒருவித பதட்டம் ஆட்கொள்ள நடுங்கியபடி காணொளியை திறந்தால், ஆம்,அவரே தான், இதயம் முரளியே தான். அடக்கடவுளே!!! .வெறும் 46 வயது தான். 100 ஆவது படம் நடிக்க கையெழுத்திட்டிருந்தாராம். கடவுளுக்கு கருணையே இல்லையா? என்று தான் தோன்றியது.என் அப்பாவுக்கு இறக்கையில் 50 வயது, அம்மாவுக்கும் அப்படியே.அதுவே சிறிய வயது என நினைத்த எனக்கு, இவர் இன்னும் சீக்கிரமாக போய்விட்டாரே! என்றே தோன்றியது.

ந்த பாத்திரம் எடுத்து செய்தாலும் அழுத்தமாக மனதில் நிற்பார். கடைசியாக இவரை அள்ளித்தந்த வானம் படத்தில் வெகுவாய் ரசித்தது. அதன் பின் வடிவேலுவுடன் சுந்தரா ட்ராவல்ஸில் பார்த்து வெகுவாய் ரசித்தேன். எதோ நெருங்கிய சொந்தத்தில் யாரோ தவறிப்போனது போல சோகம் தோளை அழுத்துகையிலேயே இதை எழுதுகிறேன்.

யாரோ சில வருடங்கள் முன்பு காம்பவுண்ட் சுவரெங்கும்,கடவுள் முரளி வாழ்க! என்று எழுதிவைத்தனர். ஏன் செய்தார்கள் எனத் தெரியாது, ஒருவேளை இளம் வயதிலேயே இறைவனடி சேர்வார் என்று எழுதியிருப்பார்களோ? இன்னும் இசைஞானியின் குரலை இவர் பாட ரசிப்பதில் எனக்கு நீங்கா ஆனந்தம். இனி யூ ட்யூபில் இவரை, நிறையபேர் நிச்சயம் அதிகம் தேடிப்பார்ப்பார்கள். அவரின் லட்சியங்கள் மகன் அதர்வா மூலம் நிறைவேறட்டும். அன்னாரின் குடும்பத்துக்கு என்  அஞ்சலிகள்.
======0000======

நடிகர் முரளியின் சமீபத்திய காஃபி வித் அனு நிகழ்ச்சியின் யூட்யூப் வீடியோ;-
நன்றி:-4fun6