சங்கர் கணேஷையே மிஞ்சும் ஜி.வி.பிரகாஷ்குமார்!!!!

இசையமைப்பாளர் சங்கர் [கணேஷ்]
ஜி.வி.பிரகாஷ்குமார் , இவருடைய பெயருக்கேற்ப மிகவும் பிரகாசமான வாய்ப்புகளைப் அடுத்தடுத்து வாங்கி குறுகிய காலத்தில் தகுதிக்கு மீறிய புகழைப் பெற்றவர். சுருக்கமாக ஓவர்ரேட்டட் இசையமைப்பாளர் எனலாம். இவரின் இசையுலக குருநாதர்களான சங்கர் கணேஷ் என்கிற இரட்டையர்கள் ஒருமுறை எந்த ஒரு இசையையும் கேட்டாலும் அப்படியே உள்வாங்கி அடுத்த படத்தில் அதை எதிரொலிப்பர், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட, மலையாளம் என அசுரவேகத்தில் பணியாற்றும் இவர்கள் மொழியாபிமானம் இல்லாதவர்கள்,வெறும் 5ந்தே நாளில் ஒரு படத்தின் பாடல்களுக்கான இசையமைப்பயும் பிண்னணி இசையமைப்பையும் முடித்து விடுவார்கள். வாய்ப்பு இல்லாத போது கச்சேரிக்கு வாசித்து ப்ராக்டிஸும்  செய்வார்கள் . இவர்களுக்கு குவாலிட்டி மேட்டர் அல்ல க்வாண்டிட்டி தான் மேட்டர்.


து போலவே இளைய இசைப்புயல் ஜிவி.பிரகாஷ்குமாரும் ஒரு நிலைக் கண்ணாடி சூரிய ஒளியை உள்வாங்கி எதிரொளிப்பது போல மேற்கத்திய ஆல்பங்கள், உலகசினிமா திரை இசைக்கோர்வைகள், இந்துஸ்தானி இசைக்கோர்வைகள் என இவர் சமீபத்தில் தருவித்து கேட்டதை மற்றவருக்கு கரைத்து புகட்டாமல் விடவே மாட்டார், இவரை பொருத்தவரை இசைக்கு எல்லை, வரைமுறையே இல்லை, இவர் சென்னையில் உட்கார்ந்து கொண்டு இந்தியாவின் ஏன் உலகின்  அத்தனை மொழிகளிலும் வெளிவந்த இசைவடிவங்களை ஒருங்கிணைத்து கொலாஜ் ஓவியம் படைப்பதில் அத்தனை ஆர்வம் கொண்டவர் , இசைக்கோர்வையை மறுஆக்கம் செய்வதில் சகலகலா வல்லவரும் இவரே, இவருக்கு அப்புறம் தான் பழம் தின்று கொட்டை போட்ட தென்னிந்திய இசையமைப்பாளர்கள் கூட  வரிசைகட்டி வருவர்.

வருக்கு காப்பி ரைட் பற்றிய எந்த சமாச்சாரமும் தெரியாது, ஏனென்றால் இவர் இளம்கன்று - மிகவும் இளைய வயதிலேயே இசைத்துறைக்கு வந்துவிட்டார். இன்னும் படிக்க வேண்டியவை எவ்வளவோ உள்ளது. ஆகவே காப்பி ரைட் பற்றிய அறிவு இவருக்கு இன்னும் எட்டவில்லை. அது குறித்த ஒரு  வழக்கை கூட இவர் இன்னும் சந்திக்கவுமில்லை, இவரிடம் எல்லா இயக்குனர்களுக்கும் பிடித்ததே புதுமணப்பெண்ணைப் போன்ற அந்த குனிந்த தலையுடனான தன்னடக்கம் தான். எந்த ஒரு இசையமைப்பாளர் ஒரு படத்துக்கு இசையமைக்க மறுத்தாலும், அந்த காலி இடத்தில் இவர் பெயரை எழுதிக்கொள்ளலாம், இவரைக் கேட்கக்கூட வேண்டாம், இசையமைக்கும் படத்தின் எண்ணிக்கை  கூடும் என்றால் ஒருவருக்கு கசக்குமா?!!! இவர் லபக்கென்று அவ்வாய்ப்பை பற்றிக் கொள்வார். அந்த வாய்ப்பை சபேஷ் முரளியே மறுத்திருந்தாலும் இவருக்கு கவலையில்லை. அத்தனை ஆர்வம் இசை மறுஆக்கத்தில் .கூடிய சீக்கிரம் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் சுமார் 40 ஆண்டுகளாக செய்த திரை இசை சாதனையை இவர்,  ஐந்தே வருடங்களில் நிகழ்த்திவிட வேண்டும் என்று நாமும் அவரை வாழ்த்துவோம்!!!.
இளைய இசைப்புயல் ஜிவி பிரகாஷ்குமார்
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடலை நாம் அறிவோம், அதை இவர் எவ்வளவு பாடுபட்டு நமக்காக கான்ஃப்லூயன்ஸ்  என்னும் ஆலபத்தில் வரும் டுகெதர் என்னும் இசைக்கோர்வையை அப்படியே உருவி இசைவிருந்தாக சமைத்துள்ளார். இதைப் படைத்த  ஹிந்துஸ்தானி பாரம்பர்ய இசைக்கலைஞர் ராஹுல் ஷர்மாவும்  & ரிச்சர்ட் க்ளேடர்மேன் என்னும் பியானிஸ்டும் கேட்டால்  ஸ்தம்பித்தே போய்விடுவார்கள். நீங்களே கேட்டுவிட்டுச் சொல்லுங்கள். இதைக் கண்டறிந்து சொன்ன கவிஞர் நேசமித்திரனுக்கு நன்றி,அவரது பணி மென் மேலும் சிறக்கட்டும்.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை -அசல் வடிவம்[2008]
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை -தமிழ் வடிவம்[2010]