கிளி போயி [Kili Poyi] [மலையாளம்] [2013] [15+]

கிளி போயி [getting mad] மலையாள திரைப்படம் பார்த்தேன்,இது  ஒரு முழு நீள ஸ்டோனர் மூவி என்கிறார்கள், நல்ல லீனியரான டார்க் காமெடி படம். சம்பத் ஆரண்ய காண்டம் படத்தில் கூட இப்படி கெட்ட வார்த்தைகள் பேசவில்லை,அதுவும் மலையாளிகளைப் பார்த்து மலையாளத்தில் ஒரு தமிழ் கார கெட்ட போலீஸ் ராணா பாத்திரம் தேவடியா பசங்களா!!! என்று முழங்குகிறது,இது முற்றிலும் புதுமையான இண்டிபெண்டண்ட் வகை படங்களில் மட்டுமே சாத்தியம்,மேலும் இது காம்போசிட் லிங்குஸ்டிக் படம் என்பதால் நேடிவிட்டியுடன் ஆங்கிலம், மலையாளம் தமிழ், கன்னடம் என பிழையில்லாமல்  வசனம் பேசச்செய்து படம் எடுத்ததற்கே ஸ்பெஷலாக பாராட்டவேண்டும். கோவாவை மையமாக வைத்து எத்தனையோ படம் வந்தாலும் அநேகம் குப்பையாக உள்ளது, இது விதிவிலக்கு.

பெங்களூர் லைஃபை லைம்லட்டில் நன்றாக கொண்டு வந்துள்ளனர். வாழ்க்கை திரைப்படத்தின் ராஜா சாரின் மெல்ல மெல்ல டிஸ்கோ பாட்டுக்கு அதே ரவீந்தரை வயதான கெட்டப்பில் டிஸ்கோ டக்ளஸாக ஆடவிட்டுக் காட்டியுள்ளனர். அவர் 80களில் தலையில் ஒரு பேண்ட் கட்டிக்கொண்டு ,கையில் மைக்குடன் டிஸ்கோ ஆடி எத்தனை பேரை கடுப்பேத்தியிருப்பார்?, அத்தனைக்கும் சேர்த்து வைத்து நொங்கு எடுக்கின்றனர், இவரை இயக்குனர் செம வாரு வாரியுள்ளார் சம்பத் பாத்திரம் மூலமாக!!!,

இங்குள்ள ரீமிக்ஸ் நாதாரிகள் போல பாடலை கெடுத்து பாழாக்கி நாறடிக்காமல் அப்படியே ஒலிக்க வைத்து மரியாதை செய்துள்ளனர். முக்கியமாக நல்ல தமிழில் நேட்டிவிட்டியுடன் சம்மந்தப்பட்ட கதாபாத்திரங்கள் பேசுவது பாராட்டத்தக்கது. இயக்குனர் லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்தது அவருக்கு நல்ல நேட்டிவிட்டியுடன் தமிழ் வசனம் உச்சரிக்க வைக்க கைகொடுத்துள்ளது.  பெங்களூர் பார்ட்டி லைஃபை, கார்பொரேட் கல்ச்சரை நன்றாக பிரதிபளித்துள்ளார் இயக்குனர். படத்தில் ஆங்காங்கே பிங்க் ஃப்ளாயிட், பல்ப் ஃபிக்‌ஷன், டாக்ஸி ட்ரைவர் படத்தின் ராபர்ட் டிநீரோவின் துப்பாக்கி ஏந்திய ஸ்டில் கோண்ட தோள் பையில் அடைக்கப்பட்ட கோகெயின் என நிறைய குறியீடுகளும், ரசனையான கனெக்‌ஷன்களும் படத்தில் உண்டு.இது டேவிட் போல நான் லீனியர் அல்ல,ஆகவே எளிதாக ஒன்றிப் பார்க்க முடியும்.

படத்தில் முக்கியமாக அந்த மலையாள போலீஸ் இன்ஸ்பெக்டர் தோன்றும் காட்சி செம ரகளை,எப்போதும் ரவுடி வேடத்திலேயே வரும் ஸ்ரீஜித் ரவியை இத்தனை சுய எள்ளலான ஒரு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள், ஒரு டெரர் லுக் கொடுத்து விட்டு,யார் என்ன என்று முன்பே விசாரித்து விட்டு,உள்ளே கூட்டிக்கொண்டு போய் லாடம் கட்டப்போகிறான் போல என எண்ண வைத்துவிட்டு,மெதுவாக கையை பற்றிக்கொண்டு,நாமெல்லாம் ஒரே கம்யூனிட்டி,மலையாளிகள் கம்யூனிட்டி,அதற்கு களங்கம் வரலாமா?சத்தியம் செய் என கையை காட்டும் பாத்திரம்,கலக்கல்.

மலையாள சினிமா வாழ்கிறது ,அடுத்தடுத்து ஜாக்பாட் போல நல்ல படங்கள் பார்க்க கிடைத்தது,என்னமாய் ஒரு சுதந்திரத்துடன் படம் எடுக்கிறார்கள் சமீபத்தில் பார்த்த நாதொல்லி ஒரு செரிய மீனல்ல,அன்னாயும் ரசூலும், ஆமென், டேவிட் & கொலியாத், பாப்பின்ஸ் என ஒவ்வொன்றும் வித்தியாசமான முயற்சிகள். இங்கே தமிழில் படம் டெல்லியில் நடந்தாலும் பார்வையாளர்களின் வசதிக்காக கதாபாத்திரங்கள் தமிழிலேயே பேசுவார்களென்று டைட்டில் கார்டு போடுகிறார்கள்.நாம் போக வேண்டிய தூரம் மிக அதிகம் உண்டு.

25 வயதான இயக்குனர் வினய் கோவிந்த் நிச்சயம் பிழையில்லாத ஒரு படைப்புக்காக பாராட்டப்படவேண்டியவர்.சம்பத்தின் பிழையில்லாத தே.பய்யா!!!ல.பால் ,இன்னும் பிற வார்த்தைகள் சம்பிரதாயமாக வெளிப்படாமல் உயிரோட்டமாக வெளிப்பட்டுள்ளது,உதயம் nh4 ல் வரும் அந்த குண்டான இளைஞன் ம்ரிதுள் நாயர் மலையாளி ஆட்டோ ஓட்டுனராக வருகிறார். ரவீந்தரை மீண்டும் காண நன்றாக இருந்தது.லீட் ரோலில் வந்த ஆசிஃப் அலியும் அஜு வர்கீஸும் வளர்ந்து வரும் நடிகர்கள் நல்ல பெர்ஃபார்மென்ஸை வழங்கியுள்ளனர், கிளி போயி நீண்ட நாட்களுக்கு பின்னர் மலையாளத்தில் Aசர்டிஃபிகேட் வாங்கிய படம் என்று படித்தேன்.கதை எல்லாம் இங்கே சொல்லத் தோன்றவில்லை,வித்தியாசமான மேக்கிங்கிற்காகவேனும் இப்படத்தை ஒரு முறை பார்த்துவிடுங்கள், நண்பர்களே!!!வித்தியாசமான மலையாளம் படங்கள் பார்க்கத்துவங்க  விரும்பும் நண்பர்கள் முதலில் ஆரம்பித்து துவக்க ஏற்ற படம்.
===========
படத்தின் காணொளி யூட்யூபில் இருந்து