ஒரு நடிகையின் சாபம்!!!


பத்தினி சாபம் பலிக்குமா?தெரியாது,ஆனால் ஒரு நடிகையின் சாபம் நிச்சயம் பலிக்கும் போல, 63 வயதாகும் ஜீனத் அமன் 70,80 களின் பாலிவுட்டின் கனவுக்கன்னி,

நடிகர் சஞ்சய் கானுக்கு [திப்பு சுல்தான் நாடகம் புகழ்] ஏற்கனவே மணமாகி 3 குழந்தைகள் இருந்த நிலையில் இவர் இரண்டாம் மனைவியாக வாழ்க்கைப் பட்டார்,அவரிடம் அப்படி அடி வாங்கியிருக்கிறாராம்,

1985ல் மும்பை தாஜ் நட்சத்திர ஓட்டல் அறையில் வைத்து இவரை நாற்காலியில் கட்டி வைத்து முதல் மனைவி ஸரீன் சகிதமாக சஞ்சய்கான் ஜீனத்தை அடித்து சித்திரவதை செய்ததில் இவருடைய வலது கண் பார்வையே பறிபோய்விட்டது,

ஒரு புகழின் உச்சியில் இருந்த நடிகைக்கு நேர்ந்த தேர்ட் டிகிரி ட்ரீட்மெண்ட் அது, எத்தனை அவமானம்? ,எப்படி வெதும்பியிருக்க வேண்டும், சூட்டோடு சூடாக எந்த மீடியாவும் அதுபற்றி கேட்கவில்லை,இவர்களது உறவே சட்டபூர்வமானதல்ல என்பதால் ஒரு சட்டபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் அவர் அன்று கொடுத்த சாபம்,அதன் பின்னர் சஞ்சய் கானை அதளபாதாளத்துக்கு வீழ்த்திவிட்டது. இந்த தரித்திர நடிகர் நடித்து தயாரித்த திப்பு சுல்தான் மைசூர் படப்பிடிப்பில் 8 February 1990 அன்று மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டு,இவர்   உடல் எரிந்து போய்.உடல் முழுக்க 73 இடங்களில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.

சனிப்பிணம் தனிப்போகாது என்பது போல சஞ்சய்கானை பீடித்த பெண் சாபம் 52 பேரை அந்த தீவிபத்தில் காவு வாங்கியது.சஞ்சய் கான் இன்றும் நடைபிணமாக வாழ்கிறார்.

ஜீனத் அமன் Femina Miss India, Asia Pacific 1970, Miss Asia Pacific 1970 அழகிப் பட்டங்களை வென்றவர்,இவர் நடிகைகளில் யுனிவர்சிட்டி ஆஃப் சதர்ன் கலிஃபோர்னியா முன்னாள் மாணவி என்னும் புகழும் உண்டு.வெற்றிகரமான மாடலும் ஆவார்.

இவர் பாலிவுட்டின் தாராளமயமாக்கப்பட்ட கவர்ச்சி சினிமாவுக்கு அடித்தளமிட்டவர். இவரின் முதல் படம் தாகலாக் [பிலிப்பைன்ஸ்]  மொழிப்படமாகும், அதில் தேவானந்துக்கு ஜோடியாக The Evil Within (1970) படத்தில் அறிமுகமானார்.

அதன் பின்னர் Hulchul, Hare Rama Hare Krishna.Yaadon Ki Baaraat, என உச்சத்திற்குச் சென்றவர் சுமார் 100 படங்கள் நடித்துள்ளார்,ராஜ் கபூரின் சத்யம் சிவம் சுந்தரத்தில் இவர் செய்த எக்ஸ்போஷர் இன்றும் 2015ல் எந்த வளரும் நடிகையும் செய்ய முடியாது,அமெரிக்க படிப்பும் வளர்ப்பும் அதை சாத்தியமாக்கியது என நினைக்கிறேன்.