பொய் சாட்சி (1982)

இயக்குனர் நடிகர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு, சின்னவீடு (அம்மா) போன்ற திரைப்படங்களில் கோவை சரளா நடித்திருப்பார்.

நடிகர் பாக்யராஜின் பொய்சாட்சி (1982) திரைப்படத்தில் சிறு வயது பாக்யராஜுக்கு கோவை சரளா தான் அக்கா, இவர்கள் பெற்றோரை இழந்தவர்கள் , ஊர் பண்ணையார் கோவை சரளாவை தோப்பிற்குள் வைத்து வல்லுறவு செய்ய எத்தனிக்கையில் பண்ணையாரை தலையில் தாக்கிவிட்டு தப்புகிறார் கோவை சரளா,பண்ணையாருக்கு உதவியாக ஊரே இவர்களை துரத்தி வர , தம்பியை தாவணி முந்தானையில் கட்டி வெள்ளப்பெருக்கெடுக்கும் ஆழம் மிகுந்த நெல்லித்துறை ஆற்றில் தள்ளி தானும் குதித்து விடுகிறார், தம்பி ஒரு கரையில் இவர் ஒரு கரையில் ஒதுங்கி ஒருவரை ஒருவர் இறந்ததாகவே பல வருடங்கள் கருதி வாழ்கின்றனர்,அதன் பின் நிகழ்காலத்தில் படம் நகர்கிறது.

வளர்ந்த அக்கா கதாபாத்திரத்தில் நடிகை சுமித்ரா நடித்துள்ளார், அக்கா கணவர் பீலி சிவத்தை கொலை வழக்கில் சிக்க வைக்க பொய் சாட்சி சொன்னதை நெல்லித்துறை வந்ததும் அறிகிறார் பாக்யராஜ்.

 நெல்லித்துறை சனிக்குளத்தில் பாக்யராஜ் தான் பொய்சாட்சி சொல்லி சம்பாதித்த பணம் பத்தாயிரம் ரூபாயை அப்படியே குற்ற உணர்வில் வீசி எறிகிறார்,

ஆனால் அக்கா குடும்பம் வாடகை வீட்டை விட்டு இடம்பெயர்ந்து போக்கிடம் இன்றி நெல்லித்துறை வனபத்ரகாளி அம்மன் அரசமரத்தடி நாகர் மண்டபத்தில் தங்கியிருப்பதை பார்த்து இவரும் உடன் தங்கி தான் தம்பி என்பதை மறைத்து உதவுகிறார்.

 தன் அக்கா , அக்கா மகள் ,அக்கா மகன் மூவரை காப்பாற்ற வேண்டி வேலை தேடுகிறார், பல பல பொய்கள், பல பல நகைச்சுவை அட்டகாசங்கள் செய்கிறார்,முடிவில் வேலை  கிடைக்காத கொடுமையால் சனிக்குளத்தில் முங்கி ஐந்து பைசா பத்து பைசா சில்லரை திருடுகிறார் பாக்யராஜ், அவருக்கு போட்டியாக ராதிகாவும் சனிக்குளத்தில் குதித்து  மூச்சடக்கி மூழ்கி சில்லரை திருடுகிறார்.

இப்படத்தில் பாக்யராஜ் வேலை தேடுகையில் 
பசுமாட்டை ஏரில் பூட்டி உழுவார்.

சைக்கிள் கடையில் வேலைக்கு சேர்கையில் தன் புத்தி சாதுர்யத்தை காட்டுகிறேன் என்று கருதி சாவி தொலைந்த சைக்கிள் பூட்டை முதலாளிக்கு உடனே திறந்து தருவார், உடனே வேலையும் போய்விடும்.

கொல்லன் பட்டறையில் வேலைக்கு சேர்ந்தவர் புரட்சி சமத்துவம் பேசிக்கொண்டே சம்மட்டி அடிக்கையில் கொல்லனின் கையை உடைத்து விடுவார்.

இப்படத்தில் பாக்யராஜ்  கண்ணாடி அணியாமல் நடித்துள்ளார்.

இந்த படத்தில் வரும் சனிக்குளம் சம்மந்தமான காட்சிகளை திருவிடந்தை கோயில் திருக்குளத்தில் வைத்து படமாக்கியுள்ளனர்.