"the shawshank redemption"(1994)
இந்த படம் வெளியாகி பதினைந்து வருடம் கழித்துப் பார்த்ததை எண்ணி ஆறாத வேதனைப்பட்டேன்.மிகப்பெரிய இழப்பே.
"த ஷஷாங்க் ரெடேம்ப்ஷன் "(ஷஷாங்கில் தண்டனைக்காலம்)வட அமெரிக்காவின் 180 வருட பழமை வாய்ந்த ஆறடி கனமுள்ள,
சுவர் கொண்ட காற்று கூட புக முடியாத ஒரு கொடுஞ்சிறை. உள்ளே வந்தால் நரகம் தான்.
அரக்கத்தனமான சிறை அதிகாரிகள்.
உள்ளே உலவும் இன வன்முறையாளர்கள்.
ஓரினச் சேர்க்கையாளர்கள்.
என்று.சாமானியனால் தாக்கு பிடிக்க முடியாத கொடும் சூழல்...
இந்த கதை 1947 ஆம் ஆண்டு பயணிக்கிறது.
ஆண்டி டூப்ரேன் (tim robbins)என்ற வங்கி அதிகாரி தன மனைவியை கள்ளக் காதலனுடன் உல்லாசமாய் இருக்கும் போது இருவரையும் சுட்டுக்கொன்றதாக வழக்கு நடந்து,
அவருக்கு எதிரான சந்தர்ப்ப சாட்சியங்கள் வலுவாக ,இருந்தமையால் செய்யாத குற்றத்திற்கு இரண்டு ஆயுள் தண்டனைகளை அடுத்தடுத்து அனுபவிக்க ஷஷாங்க் சிறைச்சாலைக்கு வருகிறார்.
அங்கு "ரெட் "(morghan freeman)என்னும் 20 வருட தண்டனையை அங்கு கழித்த சக கைதி யுடன் நண்பனாகிறார்.
இவருக்கு சிறையில் உள்ள சந்து பொந்து,மற்றும் என்ன பொருள் கேட்டாலும் வெளியில் இருந்து வரவழைத்து தன் கமிஷன் 20 சதம் மேலே வைத்து விற்க்கும் தந்திரமும் அத்துப்படி.
இவரிடம் டூப்ரேன் பத்து டாலர் தந்து ஆறு அங்குலம் உயரமுள்ள சிறிய "ஜாக் ஹம்மேர்"கேட்டு வரவழைக்கிறார்.
தனது சிற்பம் குடையும் வடிக்கும் பொழுது போக்கிற்கு என்று சொல்லுகிறார்.
பல அறிய கல்லால் ஆன பொக்கிஷங்களை வடிக்கிறார்.
பின்னர் அப்போது ஹாலிவூட்டில் மிக பிரபலமான கவர்ச்சிக்கன்னி "rita hayworth" இன் "a0" அளவு போஸ்டரும் வரவழைக்கிறார்.
அதை சுவற்றில் ஒட்டிக்கொள்கிறார்.
ஓய்வு நேரங்களில் சிறையில் தரப்பட்ட பைபிளை படிக்கிறார்.
பைபிளும் கையுமாகவே காணப்படும் இவரை சிறை அதிகாரிகளுக்கும் பிடிக்கிறது.
1949 ஆம் வருடம் சிறைக்கு உள்ளேயே இருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு கூரையில் தார் பூசும் வேலைக்கு போகையில்,
சிறை அதிகாரி "hadley" நாட்டின் வருமான வரியை குறை கூறி அங்கலாய்த்து பேசுவதை காண நேரிடுகிறது.
இவருக்கு வரி ஏய்ப்பு கைவந்த கலை ஆதலால்
இலவசமாக வலிய போய் வரி ஏய்ப்பு ஐடியா கொடுத்து மயிரிழையில் உயிர் பிழைக்கிறார்.
இதற்கு பலனாக அவர்கள் சகா அனைவருக்கும் பீரும் ,
சிறிது சுதந்திரமும் கிடைக்க செய்கிறார்.
இதன் மூலம் இவரின் நட்பு வட்டம் மேம்படுகிறது.
இவர் தான் குடிப்பதை விட்டு விட்டதால் தன பங்கு பீரையும் சகாக்களுகே கொடுக்கிறார்.
ஆனால் சிறை வாழ்வில் ஒரு அவமானமாக அங்கு உலவும் ஒரு "ஓரின சேர்க்கையாளர் "குழுவான "சிஸ்டேர்ஸ் கேங் கிடம் அவ்வபொழுது மாட்டி குதப் புணர்ச்சிக்கு ஆளாகிறார்.
வாய்ப் புணர்ச்சிக்கும் ஆளாக்கப்படுகிறார்.
ஒரு சமயம் இவர் அவர்களை எதிர் தாக்குதல் செய்தும் பயனின்றி கடுமையாக தாக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற.
இவர் மேல் மனிதாபிமானம் கொண்ட சிறை அதிகாரி "hadley" அந்த "சிஸ்டேர்ஸ் கேங் " தலைவன் "பாப்" ஐ அவன் இருக்கும் வெளிச்சமில்லா சிறைக்கு சென்று இரும்புத்தடியால்.அடித்து நொறுக்கி
அவன் மொத்த உடம்பையே செயலிழக்க செய்து
நடை பிணமாக்கி மாநில மருத்துவமனைக்கு அனுப்ப,
சிறையில் இவருக்கு செல்வாக்கு கூடுகிறது.
அனைவருக்கும் நிம்மதி பிறக்கிறது.
இவர் தொடர்ந்து சிறை அதிகாரிகளுக்கு வருமான வரி கணக்கு தாக்கல்,
இதர விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல்,
இலவச வரி ஏய்ப்பு சட்ட உதவி என்று இரவு பகல் பாராமல்
பணி செய்து தர,
இவருக்கு தனி அறை,நூலகர் பதவி.சிறையின் வார்டன் "norton"இன் கணக்கு வழக்கை பார்க்கும் வேலை,
மற்றும் அளவுக்கு அதிகமான சேமிப்பு பொருட்கள் (personnel items)வைத்துக்கொள்ள அனுமதி என கிடைக்கிறது.
காலம் உருண்டோட இப்போது ஹாலிவூட்டில் மிக பிரபலமான கவர்ச்சிக்கன்னி "மர்லின் மன்றோவின் " "a0" அளவு போஸ்டரும் வரவழைக்கிறார்.
அதை சுவற்றில் ஒட்டிக்கொள்கிறார்.
இவர் சிறை நூலகத்திற்கு உதவி கேட்டு அரசு மற்றும் இதர மாகான நூலகங்களுக்கு சிறை அதிகாரியின் அனுமதியுடன் வாரத்திற்கு ஆறு கடிதங்களாவது எழுத ,
அவருக்கு மலை போல பழைய புத்தகங்கள் இசைத்தட்டுகள் மற்றும் பண உதவிகள் வந்துசேர்கின்றன.
சிறையில் நூலகத்தை அருமையாக நிர்மாணித்து பாராட்டுக்களும் விருதுகளும் பெறுகிறார்.
இதற்கிடையில் சிறை வார்டன் "norton" சிறைக்கைதிகளை அரசு பொதுப்பணித்துறையில் வேலைக்கு அனுப்பி,அதில் பெரும் பங்கை ஒப்பந்த தாரர்களிடமிருந்து லஞ்சமாக பெறுகிறார்.
அதற்கும் இவரே கணக்கர்."randel stephens" என்னும் பெயரில் தானே கையொப்பமிட்டு ஒரு பொய்க் கணக்கை ஆரம்பித்து
(அதற்க்கு போலி ஓட்டுனர் உரிமம் ,போலி பிறப்பு சான்று தரப்படுகிறது)அதில் வரி ஏய்ப்பு செய்து லஞ்சப் பணத்தை கணக்கு வைத்து தினமும் டெபாசிட் செய்யப்படுகிறது.
வார்டனுக்கு இவனின்றி ஒரு அணுவும் அசையாமல் போகிறது.
இருந்தும் அந்த கொடுங்கோல் வார்டன் இவரிடம் தன் ஷூவுக்கு கூட பாலீஷ் போட்டு வாங்கிக்கொள்கிறார்.
அவ்வப்பொழுது தன் கோட்டு சூட்டுகளையும் துவைத்து அயன் செய்து வாங்கிக் கொள்கிறார்.
நாட்கள் உருண்டோட 1965 ஆம் வருடம் ,
இப்போது ஹாலிவூட்டில் மிக பிரபலமான கவர்ச்சிக்கன்னி ""raquel welch"இன் "a0" அளவு போஸ்டரும் வரவழைக்கிறார்.
அதை சுவற்றில் ஒட்டிக்கொள்கிறார்.
துடிப்பான இளம் திருட்டு குற்றவாளி "tommy williams" என்பவன் சிறைக்கு வருகிறான்.
இவரிடம் நட்புடன் பழகுகிறான்.
தன் கர்ப்பிணியான காதலியை விட்டு வந்தவன் இனி திருந்தி வாழ்வது என்ற முடிவில் ,
இவரிடம் தனக்கு கல்வி கற்றுத்தரச் சொல்லும் படி கேட்டு ஆர்வமாக படித்து பரிட்சையும் எழுதுகிறான்.
ஒரு நாள் சக சிறைக்கைதிகளுடன் பேசிக்கொண்டிருக்கையில் டூப்ரேன் சிறைக்கு வந்த காரணத்தை கேட்க ,
ரெட் சொன்னவுடன் கேட்டு அதிர்கிறான்.
தன் முன்னாள் சக சிறைக்கைதி "elmo blatch" என்பவன் தன்னிடம் குடித்து விட்டு தான் செய்த கொலை ,கொள்ளை கற்பழிப்புகளை பற்றி பெருமை பொங்க
விவரிப்பான் என்றும்,அவன் கிளப் காவலாளியாக இருந்த போது அறைகதவை உடைத்து உள்ளே சென்று அங்கே சல்லாபம் செய்து கொண்டிருந்த கள்ளக் காதலர் இருவரை பணத்திற்க்காக சுட்டுக் கொன்றதையும்,
அதில் ஒரு வங்கி அதிகாரி மாட்டிக்கொண்டதையும் விவரித்ததை சொல்கிறான்.
டூப்ரேன் குற்றமற்றவர் என்று சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறான்.
இதை அனைவரும் டூப்ரேன் வந்ததும் சொல்ல இவருக்கு தலை சுற்றுகிறது.
பத்தொன்பது வருடங்கள் கழிந்த பின்னா?இந்த செய்தி வர வேண்டும் என்று கண்ணீர் விடுகிறார்.
நம்பிக்கையுடன் சிறை வார்டன் "norton" இடம் சென்று உண்மைகளை விளக்கி தனக்காக பரிந்துரை செய்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உதவுங்கள் என்று கெஞ்ச,
அவர் சிறிதும் ஆர்வமில்லாமல்,அவன் சின்ன பையன் எதோ உளருகின்றான்.
அதை நம்பாதே.இன்றைய கணக்கை எழுது. என்று ஏவ,
இவன் ஆத்திரமாகி கத்த,
அவர் உன் நிலைமை மறந்து பேசாதே என்று மிரட்டுகிறார்.
இவன் மேலும் அவரிடம் என்னை வெளியே விட்டால் உங்களைபற்றியும் உங்கள் பினாமி பணம் பற்றியும் மூச்சு கூட விட மாட்டேன் என்று சொல்ல,
இவர் கடும் சினத்துக்கு உள்ளாகி,பணம் என்னும் சொல்லை இனி ஒரு முறை உச்சரித்தால் அவனை தான் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார் ,
இவனை ஒரு மாதம் தனிமை-இருட்டு சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார்.இதற்கிடையில் இளம் சிறைக்கைதி
"tommy williams" க்கு பரீட்சை முடிவுகள் வருகிறது,
தொலை தூர பள்ளி இறுதியில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற
சான்றிதழும் வருகிறது.
இவனுக்கு இருட்டு சிறைக்கு சாப்பாடு வருகையில் இந்த செய்தியும் வர இவர் உயரே பறக்கிறார்.
வாழ்வில் தான் கூட ஒரு நல்ல விஷயம் சாதித்து விட்டதாக பெருமை கொள்கிறார்.
அன்று இரவே "tommy williams" ஐ வார்டன் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று கூறி ,
சிறை காம்பவுண்டுக்கு வெளியே கூட்டிவரச் செய்து அவனுக்கு அன்பான வார்த்தைகளை பேசி ,
இவனுக்கு சிகரட் கொடுத்து பற்ற வைத்து ,
இவன் டூப்ரேன் குற்றமற்றவர் என்று சொன்னது உண்மையா?
அதை எங்கு எந்த கோர்ட்டில் கேட்டாலும்,
எந்த நீதி பதி முன் கேட்டாலும் சொல்ல முடியுமா?
பின் வாங்க மாட்டாயே?
என்று கேட்க,இவன் அவ்வளவும் கடவுள் மேல் ஆணையாக உண்மை,
அதை எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்ல தயாராக இருக்கிறேன் என்று சொல்ல,
இவர் ஆர்வமாக அவனை தட்டிகொடுத்து ரொம்ப மகிழ்ச்சி என்று சொல்லிக்கொண்டே மேலே பாதுகாப்பு கோபுரத்தில் நின்ற சிறை காவலாளிக்கு கண்ணைக் காட்ட,
இவனை அவர்கள் சரமாரியாக சுட்டு கொல்கின்றனர்.
மறுநாள் டூப்ரேன் இருட்டு சிறைக்கு வார்டன் வந்து "tommy williams" சிறையில் இருந்து தப்பிக்கும் போது காவலர்கள் சுட்டதில் இறந்து விட்டான்,என்று சொல்ல ,
மேலும் இவன் தன்னிடம் பழையபடி வந்து கணக்கு எழுதினால் தொடர்ந்து தனி அறை,பாதுகாப்பு, நூலகர் பதவி,கிடைக்கும்,இல்லையேல் மரண அடி, கக்கூசு கழுவும் வேலை,இவன் நூலகம் கொளுத்தப்படும் ,
என்று மிரட்ட ,இவன் பூனையாக பணிகிறான்.
பழையபடி கணக்கு எழுதும் வேலை செய்கிறான் ,
நாற்பது வருடங்களை சிறையில் கழித்த தன் நண்பன் ரெட்டிடம் பேசுகையில் தான்
இந்த சிறையை விட்டு வெளியேறினால் மெக்சிகோவின் அருகே உள்ள "zihuantanejo"என்னும் கடற்கரை கிராமத்தில் போய் நிரந்தரமாக தங்கி உல்லாசக்கப்பலுடன் ஓட்டல் வைத்து பிழைக்க திட்டமிட்டிருக்கிறேன். என்று சொல்ல ,
ரெட் சிரிக்கிறார்,
அது ஒரு போதும் நடவாது,நம்பிக்கைகளே வீண்.அது ஒரு மணல் கோட்டை எளிதில் தகர்ந்து விடும் என்று சொல்கிறார்.
இவர் பயம் மனிதனை சிறை வைக்கும் ,
வாழும் போதே கொன்று விடும்.
ஆனால் நம்பிக்கை ஒருவனை சிறையில் இருந்து விடுதலை ஆக்கிவிடும் என்று கூற ,
மேலும் நீ எப்போது விடுதலை ஆனாலும் "பக்ஸ்டன்"என்னும் ஒரு சிற்றூரில் வடக்கே சென்றால் ஒரு வயல் வரும்,
அதில் உள்ளே நடந்து போனால் தனியாக ஒரு பெரிய மரம் காணப்படும்,
அங்கே பலவித கற்களானால் ஆன ஒரு குட்டி சுவர் உண்டு ,
அங்கே மரத்தினருகே "எரிமலை"கல் ஒன்று இருக்கும்,
பளபளப்பை வைத்து நீ அதை உணர்வாய்.
அதை தூக்கி பார்த்தால்,ஒரு தகர பெட்டியும்,அதில் பிளாஸ்டிக் பையில் உள்ளே நான் உனக்கு எழுதிய கடிதமும்,
இருநூறு டாலர் பணமும் இருக்கும்.
அதை எடுத்துக் கொண்டு "zihuantanejo" அவசியம் வரவேண்டும்
வந்து விடுவேன் என்று இந்த நண்பனுக்கு சத்தியம் செய் என்று ,
சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.
இவர் அதை ஏற்கவில்லை,
ஏமாற்றத்திலும் விரக்தியிலும் இருக்கும் ஒருவனின் வார்த்தைகளின் வெளிப்படாகேவே கருதி விட்டு நகர.
அன்று வழக்கம் போல சிறை வார்டனுக்கு கணக்கு எழுத ,
இவரிடன் வார்டன் தன் ஷூவிற்கு நன்கு பாலீஷ் போட்டு வைக்கும் படியும்,
தன் கோட்டு சூட்டுகளை நன்கு அயன் செய்து வைக்கும் படியும் சொல்லிவிட்டு ,
இவரிடமிருந்து கணக்கு புத்தகத்தை (அது ஒரு பைபிளின் அட்டையைக் கொண்டிருக்கும்)வாங்கி
கூடவே இவர் தந்த சில காகிதங்களுடன் இவரை தன் முன்னாலே
"safe" இற்கு உள்ளே வைக்க விட்டு பூட்டி,
தன் மனைவி வரைந்த பெயிண்டிங்கை பெட்டக கதவை மறைத்து பழைய படி மாட்டிவிட்டு வீட்டுக்கு கிளம்ப,
டூப்ரேன் ஷூவுக்கு ரொம்ப நேரம் பாலீஷ் போட்டு மெருகேற்றுகிறார்.
வார்டுரோபை திறந்து கோட்டு சூட்டுகளை தடவிப் பார்க்கிறார்.
ரெட் இரவு உணவு நேரத்தில் சக கைதிகளுடன் உணவருந்த டூப்ரேன் மட்டும் காணவில்லை,
அதில் சக கைதி டூப்ரேன் தன்னிடம் ஆறடி நீளமுள்ள தாம்புக்கயிறு கேட்டதாகவும் தான் தந்ததாகவும்,
ஏன்? என்று தெரியாது என்றும் சொல்ல ,
ரெட்டிற்கு எங்கோ பொறி தட்டுகிறது.
இரவு எல்லோரும் அவர்கள் அவர்களின் சிறை கூடங்களுக்கு திரும்ப பெயர் வாசிக்கப்படுகிறது,
இவர் பெயர் பதிவாகிறது,
இரவு ரோந்து அதிகாரி வந்து ஒவ்வொரு அறையை சோதனையிட்டு பெயர் பட்டியல் சரிபார்க்க ,
இடியுடன் கூடிய
பலத்த மழை பெய்கிறது.
மறுநாள் இவர் சிறை அதிகாரிகள் பெயர் படிக்க அனைவரும் வெளியே வந்து அட்டன்டன்ஸ் கொடுக்கின்றனர்.
இவர் பெயர் படிக்க குரல் இல்லை.அதிகாரிகள் கீழிருந்த படி மிரட்டி வெளியே வுமாறு சொல்ல ,
இவர் வரவில்லை,பொறுமை இழந்த அதிகாரிகள் சிறை கதவை திறந்து பார்க்க அதிர்கின்றனர்.
ஒரு ஆள் வெளியே போனதற்க்குரிய எந்த சுவடும் இல்லாமல் தப்பித்திருக்கிறார்.எப்படி?
யாருக்கும் விளங்கவில்லை.
விஷயம் கேள்விப்பட்டவுடன் வார்டனுக்கு பேதி யாகி விட்டது .
நம்பாமல் நேரில் வந்து இவரது அறையில் ஒவ்வொரு பொருளாக துருவிப் பார்க்க,
சில கருங்கல் வேலைபாடுகளும்,அழகிகள் போஸ்டரும்,சில புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன.
கருவுகிறார்,
எல்லா போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் பறக்க அவன் எனக்கு உயிருடன் வேண்டும் என்று கருவுகிறார்.
எப்படிடா?ஒரு மனிதன் ஒரு குசு போல காற்றில் கரைய முடியும் என்று ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று,
அங்கு இருந்த அழகியின் போஸ்டரைப் பார்த்து உனக்கு ஏதேனும் தெரியுமா?
என்று கேட்டு,கல்லை எடுத்து அந்த போஸ்டரை அடிக்க ,
அது போஸ்டரைக் கிழித்து உள்ளே சென்று விடுகிறது,
இவர் அரண்டு போய்
அந்த போஸ்டரை கிழித்து ஏறிய,
அங்கே ஒரு ஆள் மட்டுமே நுழையும் ஒரு துளை,
ஆறு அடி கணம் கொண்ட சுவற்றில்,ஆடிப்போகிறார்.
அங்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ரெட் அவர் எப்படி தப்பியிருக்கக்கூடும் என்றுமனக் கண்ணிலேயே காண்கிறார்.
ஐயோ அற்புதம்,
விவரிக்க வார்த்தை போதவில்லை.
என்ன நெஞ்சுரம்.?என்ன விவேகம்,?
பத்தொன்பது வருடம் சுவற்றை சிறிது சிறிதாய் குடைந்திருக்கிறார்,
அன்றாடம் அந்த மண்ணை தன் ஜீன்ஸ் பேண்டின் கால் மடிப்புகளில் கொட்டி அதை வெளியே கொண்டு போய் தள்ளி இருக்கிறார்.
வார்டனின் அறைக்கு சென்று கணக்கெழுதும் போது,
பாஸ் புக்கிற்கு பதில் வேறு ஒரு வெற்று அட்டை
(உரை இட்டது)கணக்கு புத்தகத்திற்கு பதிலாக தான் உபயோகிக்கும் பைபிள்) ,
ஆறு காசோலைகளுக்கு பதிலாக,
வேறு சில காகிதங்கள் என்று.
லாவகமாக வார்டன் அவசரமாக பூட்ட எத்தனிக்கும் போது,
அசல் புத்தகங்களை முதுகு பக்கம் பேன்ட்டில் சொருகி ,
போலி புத்தகங்களை அவர் கண் முன்னே வைப்பது போல பாவனை செய்து..அடடா.?
அதன் பின்னர்,பாலீஷ் போட்ட ஷூவை அணிந்துகொண்டு,
தன் ஷூவை அந்த ஷூ அலமாரியில் வைத்துவிட்டு ,
தன் சிறை கைதி உடைக்குள் கோட் ,சூட்டுகளை அணிந்து கொண்டு
தன் அறைக்கு பூனை போல வந்து தூங்கி,
மழை வரும் போது எழுந்து,
ஆறடி கயிறும் பிளாஸ்டிக் பையும் கொண்டு,
தன் பாஸ் புக்,மற்றும் காசோலைகள்,தான் வடித்த செஸ் போர்டும் ,காய்களும் ,எடுத்துக் கொண்டு காலில் கட்டிக் கொண்டு ,
திறம்பட அந்த சிறு துளைக்குள் ஊர்ந்து.
நான்கு மாடிகள் உயரம் பைப் பிடித்து இறங்கி ,
கீழே போகும் இரண்டடி விட்டம் கொண்ட ஸ்டோன் வார் கக்கூசு பைப்பை இடி இடிக்க காத்திருந்து இடிக்க,
கல்லை கொண்டு பைப்பை உடைக்க அது உடையாமல்.
மூன்றாவது இடிக்கு காத்திருந்து உடைக்க ,
கழிவு நீர் இவர் முகத்தில் கொப்பளிக்கிறது,
பின்னர் அந்த சாக்கடை குழாய்க்குள் இறங்கி மலம் நாற்றம்,சேறு,அருவருப்பு எதை பற்றியும் கவலை படாமல்,
ஒரு மைல் தூரம் ஒரு பெருச்சாளி,கரப்பாம் பூச்சியைப்போல ஊர்ந்து ஆற்றில் கலக்குமிடம் வந்ததும் ஆற்றில் குதித்து ,
மழையில் நனைந்து சுதந்திர தாகம் தீர மழை நீரை குடிக்கிறார்.
சிறை சீருடையை அவிழ்த்து வீசிவிட்டு அகல்கிறார்.
மறுநாள் போலீஸ் தேடும் முன் எல்லா வங்கிகளிலும் சென்று கணக்கை முடித்துக் கொண்டு ,
பணம் சுமார் 370000 டாலர் களை எடுத்துக் கொண்டு ,
ஒரு வங்கியில் ,
ஜெயில் அதிகாரியின் கணக்கு பேரேடு புத்தகத்தை "the portland"என்னும் நாளிதழுக்கு அனுப்பி விட சொல்லி விட்டு அகல,
அவர்கள் உடனே அனுப்ப அவர்கள் அதை தலைப்பு செய்தியாக வெளியிட,
அது "irs"மற்றும் "fbi" வசம் வலுவான குற்றமாக விசாரிக்க சொல்லி அதிகாரிகள் சிறையை நோக்கி புறப்பட்டு வந்து,
சிறை அதிகாரிகளை கைது செய்து,
வார்டனை நோக்கி அவர் அறைக்கு வர.
வார்டன் முன்பே நாழிதழில் வெளியான செய்தியை படித்திருந்த படியால்,தயாராக இருந்தார்.
கைத்துப்பாக்கியை லோடு செய்தார்.
கடைசி ஆசையாக அந்த லாக்கரில் என்ன தான் உள்ளது என பார்க்க திறக்க,
அவர் அந்த லாக்கரில் தான் உபயோகித்த பைபிளில் அந்த ஜாக் ஹம்மேரை புதைத்து பாதுகாத்து வந்திருக்கிறான்.
அட்டையில் இனி இது நீங்கள் உங்கள் தவறுகளை உணர்ந்து கம்பிக்கு பின்னே படிக்க உதவும்,
என்று அவர் எழுதியிருக்க.
தன் வேலை முடிந்ததும் அவர் வார்டனுக்கே கொடுத்து வெறுப்பேற்ற நினைத்திருக்கிறார்.
வார்டனுக்கோஅவமானத்தால். முகம் கருத்தது.
வார்டன் ஒரு நிமிடம் கூட தாமதிக்கவில்லை.
நாற்காலியில் வந்து அமர்ந்தார்.
தான் எடுத்த பெயரை கவுரவத்தை இனி ஒரு போதும் திரும்ப வாங்க முடியாதென்று தெரிந்து கொண்டார்.
போலீஸ் கதவை தட்டஇவரின் பேரை சொல்லி மிரட்ட.
இவர் துப்பாக்கியை தன் தாடைக்கு கீழே அழுத்தி ட்ரிக்கரை அழுத்த மூளை வெடித்து கண்ணாடி சன்னலையும் உடைத்து தோட்டா வெளியேறுகிறது.
ரெட் சொல்லுகிறார்.
துளைத்து வெளியேறியது தோட்டா அல்ல ..
ஆண்டி டூப்ரேன் என்னும் மாமனிதனின் நம்பிக்கை தான்..
பின்னர் ரெட் பத்து வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் விடுதலை கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு விரக்தியுடனும் திமிராகவும் உண்மையை உரைக்க ,
அரண்டு போன குழு இவருக்கு விடுதலை அளிக்கிறது.
இவர் மிக மகிழ்ச்சியுடன் சிறையை விட்டு வெளியேறி,
வழக்கமாக சிறை தண்டனை கைதிகள் வேலைக்கு அமர்த்தப்படும் சூபெர் மார்க்கெட்டில் வெளிக்கு சேர,
அனுதினமும் முன்னாள் கைதி என்பதால் அவமானப்படுகிறார்.
தன் சகா தூக்கு மாட்டி செத்துப்போன அறையே தனக்கும் ஒதுக்கப்பட்டிருப்பதை நினைக்கிறார்.
.வெகுண்டு எழுகிறார்.தான் வாழ வேண்டும் என்று ஆசை கொள்கிறார்,
அச்சம் தவிர்த்து எல்லை தாண்டுகிறார்.
(முன்னாள் கைதி எக்காரணம் கொண்டும் எல்லை தாண்டக்கூடாது என்பது சட்டமாம் )
டூப்ரேன் தன்னிடம் சொன்னதும் தான் அவருக்கு செய்த சத்தியமும் நினைவுக்கு வர ஒரு திசை காட்டும் கருவி வாங்குகிறார்.
அவர் சொன்ன அந்த
"பக்ஸ்டன்"என்னும் ஒரு சிற்றூர் சென்று,
வடக்கே செல்ல ஒரு வயல் வர ,
அதில் உள்ளே நடந்து போக ,
தனியாக ஒரு பெரிய மரம் காணப்பட ,
அங்கே பலவித கற்களானால் ஆன ஒரு குட்டி சுவர் இருக்க ,
அங்கே மரத்தினருகே "எரிமலை"கல் ஒன்று தனித்துத் தெரிய ,
பளபளப்பை வைத்து அதை ரெட் உணர,.
அதை தூக்கி பார்த்தால்,
ஒரு தகர பெட்டியும்,அதில் பிளாஸ்டிக் பையில் உள்ளே இவர் ரெட்டுக்கு எழுதிய கடிதமும்,
இருநூறு டாலர் பணமும் இருக்கிறது ,
ஆனந்த கண்ணீருடன் தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொள்ள சுவரில் சாய்ந்து கொண்டு படிக்க,
ஆனந்தம் பீறிடுகிறது.
.அதை எடுத்துக் கொண்டு "zihuantanejo" செல்ல டிக்கேட் எடுத்து பஸ் ஏறி அந்த கடற்க்கரை கிராமம் வருகிறார்.
அங்கு ஒரு மைல் நடந்ததும் டூப்ரேன் தன் உல்லாச படகை நிர்மாணிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து இவர் மகிழ்ச்சியில் குரல் கொடுக்க,
டூப்ரேன் வந்து கட்டி தழுவிக் கொள்கிறார் ..
என்ன ஒரு படம்?
.இதை யாகூ குழு வாழ்வில் நிச்சயம் பார்க்க வேண்டிய நூறு படங்களில் ஒன்றாக குறிப்பிட்டதில் ஆச்சர்யம் இல்லை என்றே தோன்றியது.
அற்புதம்..
இவர்களின் நடிப்புக்கு இணை என்று எதை அளவுகோலாய் காண்பிப்பது?உலகத்தரம்...
இதில் குருதிப்புனலில் வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் உண்டு என்னும் வசனத்தை கேட்டேன்.(சிறை அதிகாரி நார்டன் டூப்ரேனை தேட ஆளை அனுப்பும் போது சொல்லுவார்)
நம்ம கமலகாசன் சுட சூட தூக்கிட்டாருன்னு நினைச்சு விட்டுட்டேன்.
திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி இதோ.
நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி கூகுள்
தாழ்மையான விண்ணப்பம் :-
இங்கு முழு படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி தந்திருக்கிறேன் என்று
நினைப்பவர்கள்,நினைப்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்.
காரணம்:-
முன்பு நான் ஆங்கில படத்தின் உச்சரிப்பு புரியாமல் அதை முழுமையாக புரிந்து ஊன்றி பார்க்க முடியாமல் போனது.அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்னும் சிறு முயற்சி. இதை குறை சொல்லி நான் எடுக்கும் இந்த நல்ல முயற்சியையும் கெடுக்க வேண்டாம்.எல்லாவற்றிர்க்கும் மேல் பாணி என்று ஒன்றிருக்கிறது.
இது என் பாணி.
இது எனக்கு எழுத்து பயிற்சியும் அளிக்கிறது.
imdb தளத்தில் விசிறிகள் ஒரு படத்தில் லயித்தால் அதை பற்றி "trivia" மற்றும்
faq,goofs,synopsis,plot எழுதி அந்த படத்தின் வெற்றிக்கு உதவுவதுண்டு.
அது போல ஒரு சிறு முயற்சி தான் இது.
ஒரு படத்தை விமர்சனம் படித்துவிட்டு போய் யாரும் கட்டாயம் பார்ப்பதில்லை.
நாம் லயித்ததை பிறருக்கு சொல்கிறோம் அவ்வளவே.
நன்றி