எழுத்தாளன், கட்டிடக்கலைஞர் பின்னணியில் சென்னையில் பத்து வருடங்கள் அமீரகத்தில் பதினைந்து வருடங்கள் பணியில் இருந்தேன், தற்போது மூன்று வருடங்களாக சென்னையில் கட்டிடக்கலை வாஸ்து ஃபெங் ஷூய் வடிவமைப்பாளராக DFD Dial for Design என்ற online design சேவையைத் துவக்கி கட்டிடக்கலை வாஸ்து ஃபெங்ஷூய் குறித்த சிறப்பு ஆலோசனைகள் வரைபடங்கள் வழங்கி வருகிறேன் .
ஓய்வில் அரிய உலக சினிமாக்களையும், கலை, சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியம், வாஸ்து,கட்டுமானத்துறை கட்டிடக்கலை பற்றி அதிகம் எழுதுகிறேன்.
கால்ஷியம் கார்பைடு கற்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?,!!!அது ஏற்படுத்தும் சுகாதார சீர்கேட்டை,நோய்களைப் பற்றி அறிவீர்களா?!!! இன்றைய சமூகத்தில் பேராசை பிடித்த வியாபாரிகளின் பணம் சம்பாதிக்கும் வெறிக்கு அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருவது கண்கூடாயிருக்கிறது, நம் நாட்டில் தான் படிக்காதவர்கள் கூட கேடுவிளைவிக்கும் ரசாயனங்களையும், கனிமங்களையும் கையாள்வது வாடிக்கையாகியுள்ளது. நம் நாட்டில் தான் மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லாத நிலை நிலவிவருகிறது. இது அவசர யுகம், எல்லாவற்றிற்குமே அவசரம் தான்,விதைப்பதற்கும் அவசரம், விளைச்சலுக்கும் அவசரம், அறுவடைக்கும் அவசரம், அதை பழுக்க வைப்பதற்கும் அவசரம், இதன் பின்னால் இருப்பது அருவருக்கத்தக்க பணம் சம்பாதிக்கும் வெறியன்றி வேறில்லை.இன்றைய ஏனைய பழ வியாபாரிகள் ஈசி மனி செய்ய நாடுவது கால்சியம் கார்பைட் கற்களைத்தான்.
பழவியாபாரிகளது மண்டிகள் அல்லது கிடங்குகளில் வாழை, பலா,பப்பாளி, கொய்யா,சீதாப்பழம்,மாங்காய்களை குவியல் குவியலாக கொட்டி வைத்து , அந்த குவியலுக்குள்ளே சின்னத் துளையிட்ட பாலித்தீன் பைகளில் இந்த கால்சியம் கார்பைடு கற்களைப் போட்டு வைத்து விடுவார்கள் . கால்சியம் கார்பைடில் ஆர்சனிக் , பாஸ்பரஸ் இரண்டும் கலந்திருக்கும் . இது மிகவும் நச்சுத் தன்மை உடையது . இதிலிருந்து வெளிவருகிற அசெட்டிலின் வாயு காய்களின் மீது பரவி , பழுத்தது போன்ற தோற்றத்தை உண்டாக்கும் . ஆனால் , உண்மையில் உள்ளூக்குள் பழுத்திருக்காது . நூறு கிலோ காய்களைப் பழுக்க வைக்க நாற்பது கிராம் கால்சியம் கார்பைடு கல்லே போதுமானது என்றால் எவ்வளவு பெரிய கொடிய நச்சுவை நாம் இது வரை உட்கொண்டிருக்கிறோம் என விளங்கும். . In the ripening of fruit, calcium carbide is used as source of acetylene gas, which is a ripening agent. (similar to ethylene which has the IUPAC name of ethene and the chemical formula of C2H4)[ஆதாரம்-விக்கிபீடியா]
செயற்கையாக பழுக்க வைத்த பழங்களை ஒருவர் பார்த்தவுடன் கண்டறிய முடியாது என்பதால், அதை வாங்கும் பொதுமக்களாகிய நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு ருசித்து பார்த்து பழுத்ததற்கேற்ற இனிப்பு இருந்தால் மட்டுமே வீட்டு உபயோகத்துக்கு வாங்கலாம், அல்லது வீட்டில் நேரடியாக விளைவதை வாங்கி சாப்பிடலாம். தமிழகம் முழுக்கவே சில வருடங்களாக கால்சியம் கார்பைட் கற்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழம், மாம்பழங்களையும் கொய்யா,பப்பாளி திராட்சைகளையும் கூட பரவலாக விறபனை செய்து வருவது கண்கூடு, திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது!!!,அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது!!!.ஆனால் நடவடிக்கைகள் தான் கடுமையாக இல்லை என்பேன், வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்கத்தக்கது,இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.ஏழைகளின் பழம் என்றும் சொல்லுவர்,ஆனால் இதைக்கூட சதிகாரர்கள் கார்பைட் கற்கள் கொண்டே பழுக்க வைக்கின்றனர்.
இப்பழத்தை உண்போருக்கு வயிற்றுப்போக்கு, பேதி, கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இயற்கையானவற்றை விட "மினுமினுப்பு' கூடி, நன்கு பழுத்த பழம் போல, மக்களை கவரும் இந்த பழங்கள் மிக விஷமானவை. பழங்களின் தோலில் சுருக்கம் இருந்தால் அது இயற்கையான பழம் என வாடிக்கையாளர்கள் நினைக்கின்றனர். அது முழுவதும் சரியானதல்ல. இயற்கையான மாம்பழம் தோல் சுருக்கம் இல்லாமலும் உள்ளன. அதேபோல செயற்கையான மாம்பழங்களின் தோலில் கறுப்பு புள்ளிகள் இருக்கும் என கூறப்படுகிறது. அதுவும் தவறானதே. ஏனெனில் நோய் தாக்குதலாலோ, மாங்காய்களின் பால் படுவதாலோ கூட கறுப்பு புள்ளிகள் தோன்ற வாய்ப்புள்ளன. எனவே செயற்கையாக பழுத்த பழங்களை கண்டு பிடிப்பது கடினமான காரியம்.
கால்சியம் கார்பைடு வெளியிடும் அசெட்டிலின் வாயுவை சுவாசித்தாலே உடல் நலம் பாதிக்கும் . இதனால் முதுமைத் தோற்றம் , இதய நோய் , புற்று நோய் கூட வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் . வெல்டிங் செய்ய உபயோகிக்கும் கால்சியம் கார்பைடு , தடை செய்யப்பட்ட ரசாயனம் .ஆனாலும் மனசாட்சியே இல்லாத சில ரசாயன வியாபாரிகள் கள்ளச்சந்தையில் இது போன்ற பழவியாபாரிகளுக்கு கால்சியம் கார்பைடை சப்ளை செய்கின்றனர்.இவர்களை ஜாமீனில் வெளிவரமுடியாத கடுமையான சட்டங்களில் சிறையினால் தள்ளினாலே ஒழிய ,இது தொடந்து கொண்டுதான் இருக்கும்,இது போல சில பணத்தாசை பிடித்த வியாபாரிகளால் சமூகத்தில் இருக்கும் சில நல்ல வியாபாரிகளுக்கும் கெட்ட பெயர்.நீங்கள் எந்த பழ வியாபாரியிடமாவது இதுபோல கார்பைட் கற்களால் பழுக்கச்செய்யப்பட்ட பழங்கள் வாங்கி ஏமாந்திருந்தால் உடனே சுகாதாரத்துறை ஆய்வாளருக்கு 1913 என்னும் எண்ணில் புகார் தெரிவிக்கவும். சுட்டியை அழுத்தி மேல்விபரங்கள் பெறலாம்
3 Short exposure could cause serious temporary or moderate residual injury (e.g., chlorine gas)
Flammability (Red)
3 Liquids and solids that can be ignited under almost all ambient temperature conditions (e.g., gasoline). Liquids having a Flash point below 23°C (73°F) and having a Boiling point at or above 38°C (100°F) or having a Flash point between 23°C (73°F) and 38°C (100°F)
Instability/Reactivity (Yellow)
Undergoes violent chemical change at elevated temperatures and pressures, reacts violently with water, or may form explosive mixtures with water (e.g., phosphorus, potassium, sodium)
நண்பர்களே!!! ஃப்ளாஷ் பேக்ஸ் ஆஃப் ய ஃபூல் [ஒரு முட்டாளின் மலரும் நினைவுகள்] என்னும் மிகச்சிறந்த படத்தை இன்று பார்த்தேன்,மிகவும் நல்ல கதையும், டேனியல் க்ரெக் மற்றும் பலரின் ஒப்பற்ற நடிப்பும், அபாரமான சுற்றுப் புறங்களையும், ஒளிப்பதிவையும் தன்னகத்தே கொண்டிருக்கும் படம், இயக்குனர் பெய்லி வால்ஷுக்கு இது முதல் படம் என்றால் நம்புவது கடினமே, நல்ல நேர்த்தியான கதை,திரைக்கதை இயக்கம் இவருடய பங்களிப்பில்.இது போல நல்ல படங்கள் பார்ப்பதற்கு பல மொன்னை மொக்கை படங்களை கடந்து போகவேண்டியிருக்கிறது.உலக சினிமா ரசிகர்கள் வாழ்வில் தவறவிடக்கூடாத படம் இது. ஒரு போதை அடிமை,ஸ்த்ரிலோலன், & குடிகாரனது வாழ்க்கையின் முடிவு மிக கோரமானதாக இருக்கும் இன்னும் வழமையை மீறி அவன் வாழ்வை புதுப்பொலிவுடன் எதிர்கொள்வது போன்ற முடிவை நான் மிகவும் ரசித்தேன்.மனதுக்கு இதமான படம்.
படத்தின் கதை:-
நம் அன்றாட உலகில் சாதாரண மாந்தர்களுக்கே வாழ்ந்து கெடுதல் என்பது மிகவும் கொடுமையானது,அப்படி இருக்கையில் ஒரு நடிகன் வாழ்ந்து கெடுதல் லைம்லைட்டில் இருந்து சுத்தமாக வழக்கொழிந்து போதல் என்பது எத்தனை சித்திரவதையானது?!!!.அப்படி வாழ்ந்து கெடுதலின் துவக்கத்தில் சோபையிழந்து கொண்டிருக்கும் ஓர் ஹாலிவுட் நடிகன் ஜோ [ டேனியல் க்ரேக்] இவனின் குடி,போதைமருந்து பழக்கங்களினால் இவனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் பறிபோகின்றன, இவன் வாழும் கடற்கரையை ஒட்டிய பெரிய க்ராண்ட் ஹவுஸ் வீடு மட்டுமே சம்பாத்தியத்தில் உருப்படியாக தங்கியது. இவனின் அநேக சொத்துக்கள் இவனின் ஊதாரித்தனமான குடி, ஹெராயின் போதை, மற்றும் தினப்படி பல மாதுக்களுடனான 3ஸம் ஆர்கி கும்மாளம் என கரைந்து கொண்டே வருகின்றன, யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போல இவன் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்வதை ரசிக்கிறான்,ஆகையால் எதிர்காலத்தைப்பற்றி சிந்தையே இல்லாமல் இருக்கிறான். இவனை நாளடைவில் அயலாருக்கு கூட பிடிக்காமல் போகிறது, இவன் வெளியே வந்தாலே இவனிடம் வம்பிழுத்து தூற்ற அலைகின்றனர் சிலர். இவனிடம் வலிய வந்து விருந்தாகும் மாடல் பெண்கள் கூட இவனிடம் பணத்தை கறக்கவே பார்க்கின்றனர், இது போன்றதொரு சூழலில் இவனின் ஒரே நம்பிக்கை கருப்பின பெண் காரியதரிசி ஒபேலியா மட்டுமே, அவள் இவனுக்கு புத்திமதி சொல்லிச் சொல்லியே அலுத்தும் போய்விடுகிறாள், வேறு வேலை மாற உத்தேசித்தவளுக்கு ஜோ மாதம் 700டாலர் சம்பள உயர்வும் தருகிறான்.
ஜோவிற்கு அவ்வப்போது சிஸ்டர் ஜேன் என்னும் ஒரு பெண் வந்து உயர்வகை ஹெராயின் போதை மருந்தை விற்றுவிட்டுப் போகிறாள். அன்று அவள் ஜோவை வந்து சந்திக்கையில் வரும் வழியில் நடைபாதையில் ஒருவன் இறந்து கிடந்தான் என்கிறாள், நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, இயற்கை சீற்றம், பேரழிவு, நாமே படத்தில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறோம், என்று அங்கலாய்க்கிறாள், ஒரு போதை மருந்து விற்பவள் சமுதாய சீர்கேடுகள் குறித்து பெரிதும் கவலைப்படுவதை ஜோ அவஸ்தையோடும் சகித்துக்கொண்டுமே கேட்கிறான், அவளிடமிருந்து ஐநூறு டாலருக்கு ஐந்து ஹெராயின் பொட்டலங்களைப் பெறுகிறான்.அவளை வழியனுப்பி வைக்கிறான்.
அவனுடைய முந்தைய மாத செலவு கணக்கு வழக்குகளை பார்த்த உதவியாளப் பெண், நீயே ஒரு செக்ஸ் சிம்பல்,நீ ஏன் 1000 டாலர் பணத்தை 976 ப்ரீமியம் போன் செக்ஸ் லைனுக்கு கட்டி பேசுகிறாய்?என்கிறாள்,அதற்கு ஜோ, நான் என் அடையாளத்தை மறைத்து வாழ விரும்புகிறேன்,ஆகவே என் எண்ணம் போல இருக்கிறேன்,என்னை நான் உன் கண்களால் பார்ப்பதை வெறுக்கிறேன்,என்று தத்துவங்கள் பேசுகிறான். அன்று ஜோ தன் வீட்டிற்குள் ஒரு ப்ரூஸ்ஸெல்ஸ் க்ரிஃப்ஃபான் [Brussels Griffon]வகை குள்ளசாதி நாய் அலைவதைப்பார்த்து விட்டு கடுப்பாகிறான்,அது முந்தைய நாள் இரவை அங்கே கழித்த ஆப்பிள் என்பவளுக்கு சொந்தமான நாய் என அறிந்து இன்னும் கடுப்பாகிறான், இது ஒன்றும் பெட் க்ரீச் அல்ல என்று அரற்றுகிறான், தான் இப்போது தன் ஏஜெண்டை அடுத்த பட விஷயமாக சந்திக்க கடற்கரை ஓட்டலுக்கு செல்கிறேன் அங்கே வந்து தன் காரில் இருக்கும் நாயை கொண்டு சென்றுவிடு என ஆப்பிளை எச்சரிக்கிறான் ஜோ .
நாயைத் தொட்டால் அதன் முடி தன்னுடைய விலையுயர்ந்த உடையில் ஒட்டிக்கொள்ளும் என்று அருவருத்த ஜோ, ஒபேலியாவிடம் சொல்லி அதை காரின் பின்னிருக்கையில் விடச் சொல்ல, அந்த நாய் ஒபேலியாவின் மூக்கை கீறி விடுகிறது, அதே நேரம் பார்த்து அங்கே விரைந்து வந்த பக்கத்து வீட்டு கிழவி வேறு போலீசுக்கு போன் செய்து ஜோ உதவியாளரை அடித்ஹ்டு விட்டான் என சொல்ல எத்தனிக்க,ஒபேலியா அவளை தடுக்கிறாள். அவளுக்கு முதலுதவி செய்கையிலேயே அவருக்கு அவரின் அம்மாவிடமிருந்து போன் வருகிறது, முதலில் எப்படி சொல்லுவது? என தயங்கிய அம்மா, ஜோவின் பால்ய நண்பன் பூட் மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்து இறந்து விட்டான் என்றுச் சொல்ல, அதிர்ச்சி அடைகிறான் ஜோ.
அச்செய்தியை ஜோவால் ஜீரணிக்கவே முடியவில்லை, அது தந்த சோகத்துடனே கடற்கரை ஓட்டல் உணவகத்தில் அவனது ஏஜண்ட்டையும் தான் நடிக்கப்போகும் அடுத்த படத்தின் இளம் இயக்குனரையும் சந்திக்கிறான், இவனிடம் நேருக்கு நேர் பேச பயந்த அந்த இளம் இயக்குனர் கழிவறைக்கு செல்வதாய் ஏஜெண்டுக்கு கண்ணைக் காட்டிச் செல்ல,அந்த ஏஜெண்ட் புதிய படத்தின் கதையில் ஒரு மாற்றம் இருப்பதாகவும்,கதாபாத்திரத்திலும் மாற்றம் செய்யப்பட்டதாகவும்,அந்த நாயகன் வேடத்துக்கு இளமையான நடிகரை நடிக்க வைக்க எண்ணுவதாகவும் இழுத்தவண்ணம் இருக்க, தொடர்ந்து அந்த ஏஜெண்ட் அடுத்தடுத்து தனக்கு வந்த செல்ப்போன் அழைப்புகளை ஏற்றுப்பேசிய வண்ணம் இருக்கிறான்.
ஆத்திரம் முற்றிய ஜோ,அந்த போனை பிடுங்கியவன் தூக்கி ஜன்னலுக்கு வெளியே இருக்கும் கடலை நோக்கி எறிகிறான்.ஆத்திரம் முற்றிய ஏஜண்ட், இனி உனக்கு சினிமா வாய்ப்புகள் எதுவுமே பிரகாசமாக இல்லை, இத்துடன் முடிந்தாய், உன்னுடன் பணியாற்ற யாருக்குமே பிடிக்கவில்லை,நீ உன் ஏஜெண்டை உடனே மாற்றிக்கொள், என்று கழற்றி விட்டு விடுகிறான். மிக அவமானகரமாக உணர்கிறான் ஜோ, வெளியே வந்தால் வேலட் பார்க்கிங்கில் இவனது ரேஞ்ச் ரோவர் காரை ஓட்டி வந்து தந்த ஒரு ட்ரைவர், இவரின் நாயை சிலாகிக்கிறான்,ஜாக் நிக்கல்சன் அது போன்ற நாயை ஒரு படத்தில் வாக்கிங் கூட்ட்ச் செல்வார் என புகழ,அப்போது தான் இவனது காரில் இருக்கும் நாயை அந்த மாடல்பெண் ஆப்பிள் வாங்கிச்செல்லாததும் ஜோவுக்கு தெரிகிறது, ஆத்திரம் முற்றிய ஜோ,அவளை அழைத்து எச்சரிக்க,அவள் இன்னும் சில தினங்கள் மட்டும் நாயை பார்த்துக்கொள் என்று உதவி கேட்கிறாள்,இவன் ஏச ஆரம்பிக்க,அவள் போனில் சிக்னல் இழப்பதாய் சொல்லிவிட்டு துண்டித்தும்விடுகிறாள். நாயை அந்த ஹோட்டலின் ட்ரைவருக்கே வலுக்கட்டாயமாக பரிசளித்த ஜோ, மிக அதிகமாக மது அருந்தியவன், கடற்கரைக்கு சென்று போதையிலேயே அபாயகரமாக நீந்துகிறார்.இப்போது அவருக்கு சிறுவயது நினைவலைகள் தொடர்ந்து வந்த வண்ணமிருக்கிறது.இப்போது ஒரு அழகிய சிற்றூரின் கடற்கரை பார்த்த வீட்டில் வசிக்கும் 16 வய்து ஜோவை நாம் ,பார்க்கிறோம்,விதவைத்தாயும்,அழகிய சிறுமி ஜெஸ்ஸி என்னும் தங்கையும்,மணம் செய்து கொள்ளாத பெரியம்மாவும், உண்டு,பக்கத்தில் இருக்கும் வீடுகளின் ஒன்றில் திருமதி ரோஜர்ஸ் என்னும் கிழவியும்,அடுத்த வீட்டில் இளம் மனைவி இவலினும்,அவளது கணவனும்,அவர்களின் அழகிய மகள் சிறுமி ஜேனும் வசிக்கின்றனர்.
ஜோவும் நண்பன் பூட்டும்[boot] அவ்வூரில் இணை பிரியாமல் சுற்றித் திரிகின்றனர், வீடியோ கேம் ஆடும் கடையிலும், ஊருக்கு அருகே இருக்கும் குட்டையில் மீன்பிடித்த வண்ணமும், இருக்கின்றனர்.அவ்வப்போது சினிமாவுக்கும் போய் வருகின்றனர். ஜோவின் நண்பன் பூட்டுக்கு சிறு வயதிலேயே எபிலிடிக் ஃபிட்ஸ் என்னும் வலிப்பு வந்துள்ளது, ஆயினும் அவன் மிகவும் ஆரோக்கியமாகவே காணப்படுகிறான், இப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் இவலின் கணவனுடனான தாம்பத்தியத்தில் அதிருப்தியுற்றவள், இளைஞனாக பார்த்து வளைத்துப்போட அலைகிறாள், ஆனால் அவளின் எண்ணம் ஜோவின் வீட்டாருக்குத் தெரியவில்லை,ஜோவின் வீட்டுக்கு அடிக்கடி வரும் இவாலின் ஜோவை முத்தம் தந்தும் தரவும் பழக்குகிறாள், தன் வீட்டுக்கு வரச்சொன்னவள் ஒரு சமயம் அவன் வந்து விட, முயங்க எத்தனிக்கையில் கணவன் திரும்பி வேலையில் இருந்து வர, இவனை அவசரமாக வெளியேற்றுகிறாள். பின்னொரு நாள் வரப்போகும் வாய்ப்புக்காக காத்திருக்கிறாள்,
அதே ஊரைச்சேர்ந்த ரூத் என்னும் சக வயதிலிருக்கும் பெண்ணை ஜோ சந்தித்தவன், அவளுடன் நட்பை வளர்த்துக் கொள்கிறான், அவளுக்கும் இவனுக்கு ரசனை ஒத்துப்போகின்றது, முதல் நாள் சந்திப்பிலேயே அவளின் அனுமதி பெற்று முத்தமிட்டவன், மறு நாள் சந்திக்க அனுமதி கேட்க, அவளும் 7-00 மணிக்கு வீடியோ கேம் பார்லருக்கு வரச் சொல்லுகிறாள், மறுநாள் மிகவும் ஆனந்தத்துடன் குளித்து, எல்விஸ் ப்ரெஸ்லீ போன்றதோர் அட்டைகளை அணிந்துகொண்டு புறப்படத் தயாராகிறான் ஜோ, அவன் அம்மாவிடம் விடைபெற்றுப்போகின்றான், அவனின் அம்மா அவனுக்கு அந்த நாள் [டேட்டிங்] நல்லபடியாக நிகழ வாழ்த்துகிறாள். வெளியே கடலலைகள் மிகுந்த சீற்றத்துடன் ஆரவாரம் செய்கின்றன, பலத்த மழை பெய்யும் அறிகுறியும் தெரிகிறது, ஜோ போகும் வழியில் வீட்டு வாசலில் இவாலினை பார்க்க, அவள் ஜோவை ஒரு ஐந்து நிமிடம் வந்துபோ என்கிறாள்,
இவன் டேட்டிங்கிற்கு போகிறேன் என்று சொல்லியும் கேளாமல், பெண்ணை காக்க வைப்பது நன்மை பயக்கும் என்று அறிவுறையும் கூறுகிறாள், வீட்டுக்குள் கூட்டிப் போனவள் அவனுடன் வெறியுடன் முய்ங்குகிறாள். எதோ ஒரு உள்நோக்கத்துடன் அவனின் கழுட்தில் பற்களால் கடித்து பற்குறி வரவழைக்கிறாள், இவன் கூடி முடித்ததும் அவளை வீடியோ கேம் பார்லரில் சென்று பார்க்கிறான், தன் அம்மாவுக்கு உதவியதால் வர தாமதானது என்று ரூத்திடம் உளறுகிறான், ஆனால் ரூத் இவனின் கழுத்தில் இருக்கும் களவி பற்குறிகளை கண்டவள், வெகுண்டெழுகிறாள், அகன்றும் விடுகிறாள், கூடவே அவனது நண்பன் பூட் இருக்க, ஜோவின் கோபம் அவன் மேல் திரும்புகிறது, பூட் தான் தன்னைப் பற்றியும் தன்னை பக்கத்துவீட்டு இவாலின் முயங்க எத்தனிப்பதையும் ரூத்துக்கு சொல்லியிருக்கக்கூடும் என சந்தேகிக்கிறான். அவனை அடிக்கவும்ஆரம்பிக்க,அவன் திருப்ப தாக்க, இவர்களின் நட்பு முறிந்து விடுகிறது. அன்று தான் அவனை ஜோ அதன் பின்னர் சந்திக்கவேயில்லை.
வீட்டுக்கு கொட்டும் மழையில் நனைந்தபடியே வருகிறான் ஜோ, மறுநாள் வீட்டின் வெளியே கால்பந்தாடிய படி இருக்கும் ஜோவை, இவாலின் பார்க்கிறாள், டேட்டிங் எப்படி நடந்தது? என்று குறுகுறுப்பாக கேட்டவள், அவன் தன் கழுத்தை காட்டி, இந்த பற்கடிகளால் என் காதலி என்னை விட்டுப்போய்விட்டாள், திருப்தியா? என்கிறான், ஜோவை சமாதானப்படுத்திய இவாலின், நான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை, நீ நன்றாகவே என்னை திருப்திபடுத்திய உற்சாகத்தில் என்னையும் மீறி அப்படி கடித்து வைத்து விட்டேன், என்னை மன்னித்துவிடு, என் வீட்டுக்கு வருகிறாயா?!!! கணவன் வேலைக்கு போயுள்ளான் என மீண்டும் மாய வலை விரிக்கிறாள்.
ஜோவும் உடன் செல்ல, அங்கே அறைக்குள் தொலைக்காட்சி பார்க்கும் மகள் ஜேன்னை தன் இழிசெயலுக்கு இடைஞ்சலாக வீட்டுக்குள்ளே இருக்கிறாள் என்ற காரணத்துக்காக அவளை எந்நேரமும் தொலைக்காட்சி பார்க்காதே!!!, போய் விளையாடு என்று, அவள் மறுக்க ,மறுக்க ,கதவை திறந்து வெளியேற்றுகிறாள். பின்னர் வெறியுடன் ஜோவை புணர ஆரம்பிக்கிறாள். அவள் இளைஞன் ஜோவை ஆதர்ச புருஷனாகவே வரித்துக் கொள்கிறாள். வெளியே கடற்கரையில் விளையாடிக்கொண்டிருக்கும் ஜேன் கடற்கரையில் முந்தைய நாள் இரவு மழையில் கரை ஒதுங்கிய ஒரு நீர் மிதவை கண்ணி வெடியை கண்ணுறுகிறாள், அது பார்க்க ஒரு ராட்சதப்பந்து போல இருக்க அதன் மேலே சிரமப்பட்டு ஏறியும் விடுகிறாள், அது தலையாட்டி பொம்மை போல ஆட, மகிழ்ச்சி கொள்கிறாள், தூரத்தில் இதைப் பார்த்த திருமதி ரோஜர்ஸ் என்னும் பக்கத்து வீட்டு கிழவி, பதட்டம் கொள்கிறாள், ஜேன் இறங்கு!!! எனக் கதறுகிறாள், ஜேனுக்கோ எப்போதும் திட்டும் அந்த பாட்டி, மைன் மைன் என்று கத்துவதை, என்னுடையது இறங்கு இறங்கு என அர்த்தம் கொண்டவள், இறங்காமல் வீம்பாக இது என்னுடையது!!! என்று இன்னும் பலமாக ஆட,அந்த கண்ணி வெடியின் பூட்டு விடுவிக்கப்பட்டு பலத்த சத்தத்துடன் வெடிக்கிறது,
வீட்டினுள்ளே ஆவேசத்துடன் முயங்கிக் கொண்டிருக்கும் ஜோவும் இவாலினும் திடுக்கிடுகின்றனர், திருமதி.ரோஜர்ஸ் ஜேன் கண் முன்னே வெடித்து சிதறியதை கண்டவர் மிகவும் கதறுகிறார், சிற்றூரில் இருக்கும் அனைவரையுமே இச்சம்பவம் நிலை குலைக்கிறது, எல்லோரும் வெடித்த இடத்துக்கு வந்து பார்க்க,இவாலினும் அவள் பின்னர் ஜோவும் அதிர்ச்சியுடன் ஓடிவருவதை ஜோவின் பெரியம்மா பார்த்து விடுகிறாள், அவளால் ஜோ இவாலினுடன் என்ன செய்து கொண்டிருந்தான் என கிரகிக்க முடிகிறது. அவனை நோக்கி திருமதி,ரோஜர்ஸை வீட்டுக்கு கூட்டிச்செல் என்று அதட்ட மட்டுமே முடிந்தது பெரியம்மாவால்.அந்த சிறுமி ஜேனின் சாவு.அன்று எவ்வளவு தேடியும் ஜேனின் சடலமோ எலும்போ யாருக்கும் கிடைக்கவில்லை, கப்பலையே தகர்க்க கடற்படையால மிதக்கவிடப்படும் கண்ணி வெடியாயிற்றே?!!!இவாலின் ஜோவின் அம்மாவிடம் கதறுகிறாள், ஜேன் பிறந்தது முதலே தன்னிடம் வரமாட்டாள்,தான் தூக்கினால் அழுவாள்,அவளுக்கு எப்போதுமே அப்பா தான் பிடிக்கும்,தன்னை கடைசி வரை வெறுத்தாள் ஜேன்,இப்போது ஜேனின் சாவுக்கு அவளின் கணவன் தன்னை தான் குற்றம் சுமத்துவான், என உடைந்து அழுகிறாள்,இவற்றை மிகுந்த குற்ற உணர்வுடன் பார்க்கிறான் ஜோ,அவனால் இயல்பான வாழ்க்கையை இதே ஊரில் வாழமுடியும் என்று தோன்றவில்லை, வீட்டை விட்டு வெளியேறியவன், லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறான், அங்கே வைத்து சினிமாவில் மிகுந்த போராட்டத்துக்கு பின்னர் சாதித்தவன்,அங்கிருந்த படியே தன் வீட்டாருக்கு ஆற்றவேண்டிய கடமைகளை ஆற்றி வருகிறான், பின்னர் அவனின் அம்மா மூலம் ரூத்துக்கும் பூட்டுக்கும் மணமானது என்று மட்டும் அறிந்திருக்கிறான்.
இப்போது இருபத்தி ஐந்து வருடத்துக்கு பின்னர் தன் சொந்த ஊருக்குப் போக அவனுக்கு விருப்பமாயிருக்கிறது. வீறு கொண்ட ஜோ கடலின் கோர அலைகளினூடே இருந்து வெளியேறுகிறான், அங்கிருந்து வீடு வந்தவன் விமானம் பிடித்து சொந்த ஊரும் வருகிறான், இப்போது அம்மாவும் பெரியம்மா, அவன் தங்கை மூவரும் இவன் புதிதாக கட்டித்தந்த வீட்டில் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறான். இப்போது தான் வீட்டையும் நேரில் பார்க்கிறான். வீட்டில் பூட்டின் சாவுக்கு பெண்கள் இறந்தால் கிடைக்கக்கூடிய பொக்கேக்களை விட நிறைய பொக்கேக்கள் குவிந்தது என்கின்றனர். பூட் ஒரு நல்ல தந்தை , அவனின் முதல் மகனுக்கு 15 வயது, அவனின் பெயரும் ஜோ என்றும் அறிகிறான், அது தவிர பூட்டுக்கு 2 மகனும், ஒரு மகளும் உண்டு , கடன்களும் கட்டுக்கடங்காமல் உண்டு, அதனால் அவனது வீடும் நிலமும் கூட எந்நேரமும் ரூத்தின் கையை விட்டுப்போகக்கூடும், அதன் பின் ரூத் என்ன செய்வாள்?!!! என்றே தெரியவில்லை என்றறிகிறான்,
மறுநாள் நண்பன் பூட்டின் வீட்டுக்கு துக்கம் கேட்கச் செல்கிறான் ஜோ, அதே வீட்டுல் தான் ரூத்துக்கும் ஜோவுக்கும் முதல் நாள் டேட்டிங் செய்தனர்.இசைகேட்டனர். ரூத் ஜோவுக்கு ராக்ஸி என்னும் இசைக்குழுவின் பாடகன் போல ஆடை அணிவித்து,பின்னர் ஆடியும் மகிழ்ந்தது நினைவுக்கு வந்தது,இவனுக்குள் என்னவோ செய்கிறது.ரூத் தன்னுடைய மனைவியாக இருக்க வேண்டியவள் என்னும் ஆதங்கமும் எழுகிறது. அங்கே உள்ளே செல்ல தயங்கி தங்கையை அனுப்ப,அவள் ரூத் ,பூட்டின் கல்லறையில் வந்த பூங்கொத்துக்களில் இருக்கும் அனுதாப அட்டைகளை எடுத்து வர சென்றிருக்கிறாள்,என சொல்ல ,இருவரும் கல்லறைக்கே செல்கின்றனர், தங்கை ஜெஸ்ஸி அவளின் தோழி ஜேனின் கல்லறைக்கு பூங்கொத்து வைக்க செல்கிறாள், அங்கே இன்னொரு பகுதியில் ரூத்தை 25 வருடம் கழித்து பார்க்கிறான் ஜோ, ஜோவுக்கு மிகுந்த குற்ற உணர்வு,ஆனால் ருத் ஜோவிடம் நன்றாக பேசுகிறாள்,தான் பூட்டை மிகவும் நேசித்ததாகச் சொல்லுகிறாள். முரணாக அவளால் வாழ்வின் பெரிய துக்கத்துக்கு தன்னால் அழமுடியவில்லையே?!!! என்றும் வெடிக்கிறாள்.ஜோ, அவளிடம் ஏதேனும் உதவி தேவைப்படுமா? எனக்கேட்க அவள் அடியோடு மறுக்கிறாள். இவன் 3 நாட்கள் தாமதமாக வந்தமைக்கு மன்னிப்பு கேட்டு அகல்கையில். ரூத், நண்பனின் சவ அடக்கத்துக்கு கூட ஜோ 3 நாள் தாமதமாக வந்ததற்கு பூட்டின் ஆவி கூட சிரித்திருக்கும் என்று சிரிக்கிறாள்.
தங்கை ஜெஸ்ஸியுடன், நீர் கண்ணி வெடி வெடித்து உயிரிழந்த ஜேனின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த, அருகே அவளின் அம்மா இவாலினின் கல்லறை இருக்க திடுக்கிடுகிறான், ஜெஸ்ஸியிடம் ஆர்வமாய் என்ன நடந்தது?!!! எனக்கேட்டவன் உறைகிறான், ஜேன் இறந்த பின்னர் இவாலின் வேறொரு இளைஞனுடன் கள்ள உறவில் ஈடுபட்டதை அவளது கணவன் பார்த்து விட்டவன், அவளை பிரிந்தும் விட்டிருக்கிறான், அவளோ குற்ற உணர்வே இன்றி வயதில் சிறிய ஒரு எமகாதகனான அந்த இளைஞனையே திருமணமும் செய்திருக்கிறாள், அவன் அவளை மெல்ல சித்திரவதைகளால் சாகடித்த வண்ணம் இருந்திருக்கிறான், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அவனின் காரை திருடிக்கொண்டு போனவள்,கார் நடு ரோட்டில் பழுதாயிருக்க, ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி தலை துண்டாடப்பட்டும் இறந்தாள் என அறிகிறான். உள்ளே சமாதியில் முண்டம் மட்டுமே அடக்கம் செய்யப்பட்டது , தலையை எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை, தலையை அந்த காட்டுக்குள்ளே ஒரு நரி தூக்கிக்கொண்டு போய் தின்றும் விட்டதாக போலீஸ் பின்னர் சொன்னது என்று கண்கள் விரிய விவரிக்கிறாள் ஜெஸ்ஸி, இவனால் அந்த இடத்தில் நிற்கக்கூட முடியவில்லை, இவாலின் ஓர் ஊர் மேயும் பேர்வழி, இழிவர்க்கம், அவளுக்காக இனி வருந்தவேண்டாம் என்று அன்றே முடிவெடுக்கிறான் ஜோ.
தன் வீட்டுக்கு சென்றவன் நண்பன் பூட்டின் கடன்களை அடைக்க முடிவெடுக்கிறான், இதன் மூலம் தன்னுடைய நண்பனுக்கு உதவியும், தன்னுடைய குற்ற உணர்வை சிறிதளவேனும் களைய முடியும் என்று நினைக்கிறான். ,ரூத்துக்கும் இவனுக்குமான முதல் நாள் டேட்டிங்கின் போது அவர்கள் வீட்டில் கேட்ட ராக்ஸி என்னும் இசை குழுவின் பாடலில் இருந்து ஒரு பாடலின் பகுதியை கடிதமாக எழுதுகிறான்,மிகப்பெரிய தொகைக்கான காசோலையையும் அதனுடன் இணைக்கிறான்.தன் தங்கையிடம் கடிதத்தை கொடுத்து விட்டு அகல்கிறான் ஜோ.அவன் விமானத்தில் பயணிக்கையிலேயே அவனின் மனம் மிகவும் லேசானதாக உணர்கிறான்,தன்னால் மீண்டும் தலையெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உத்வேகம் விதையாக விழுந்திருப்பதாக நினைக்கிறான்,தன் நண்பன் பூட்டுக்கு உதவியதன் மூலம் தனக்கே இவன் உதவிக்கொண்டதாக நினைக்கிறான்,விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கும் உதவியாளப்பெண்ணை புதுப்பொலிவுடன் சென்று சந்திக்கிறான் ஜோ,வீட்டுக்குச் செல்கையிலேயே எதிர்கால திட்டங்களை பேசிய வண்ணம் செல்வது போல படம் முற்றுப்பெறுகிறது,நம்பிக்கை விதையை நம்முள்ளே விதைக்கும் ஒரு ஒப்பற்ற படம்.
திரைப்படத்தின் காணொளி யூட்யூபிலிருந்து:-
திரைப்படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
''நான் இளையராஜா ஆனது எப்படி?'' ஆக்கம் :ந.வினோத்குமார்
படம் : பொன்.காசிராஜன்
''முன்பெல்லாம் இருப்பதை அப்படியே அச்சடித்ததுபோல வரைபவர்கள் தான் ஓவியர்கள். அப்படி ஒரு ஓவியராக வேண்டும் என்றுதான் 'ரியலிஸ்ட்டிக் ஓவிய முறையில்’ வரையத் தொடங்கினேன். இப்பவும் ஓவியக் கலையின் அடிப்படை யைக்கூட அறிந்துகொண்டதாக நான் உணர வில்லை. ரெம்ப்ரான்ட்டின் லைட்டும், வெர்மியரின் டீட்டெயிலும் நான் இன்னும் எவ்வளவு விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என என் மூளைக்குள் அலாரம் அடித்துக்கொண்டே இருக்கிறது!'' - தன் அனுபவங்களைக் குழைத்து, வார்த்தைத் தூரிகையால் தன் பயணத்தைப் பதிவு செய்கிறார் ஓவியர் இளையராஜா.
சமீப நாட்களாக விகடனின் கதை, கவிதைப் பக்கங்களை அலங்கரிக்கும் புதிய தலைமுறை ஓவியர். மாநில விருது, லலித் கலா அகாடமியின் தேசிய ஃபெல்லோஷிப், உலகப் பிரசித்தி பெற்ற கேலரிகளில் கண்காட்சி என சர்வதேச அங்கீகாரம் பெற்ற தமிழர்!
''கும்பகோணம் அருகில் செம்பியவரம்பல்... என் பூர்வீகம். விவரம் தெரிந்த நாளில் இருந்தே எதையாவது வரைஞ்சுட்டே இருப்பேன். அப்பாவுக்கு, தச்சுத் தொழில். மாட்டுவண்டிகளுக்கான சக்கர வேலைகள் வரும். சக்கர வடிவத்தை முதலில் 'ஃப்ரீ ஹேண்ட்’ ஆகப் பென்சிலில் வரைந்து, அதன் பிறகு உளிகொண்டு மரத்தைச் செதுக்கி, சக்கர வடிவத்துக்குக் கொண்டுவருவார் அப்பா. அதைப் பார்த்துட்டே இருப்பேன். என் ஏழு வயதிலேயே அப்பாவுக்குப் போட்டியாக நானும் சக்கரம் செய்ய ஆரம்பித்தேன்.
அப்போது எல்லாம், தூர்தர்ஷனில் நிஜந்தன், சுந்தரராஜன் போன்றவர்கள் செய்தி கள் வாசித்து முடிப்பதற்குள் அவர்களை நான் படமாக வரைந்துவிடுவேன். சாமி படங்கள், சினிமா நடிகர்கள் என வரைந்து கொண்டே இருந்தேன். படிப்பில் ஆர்வம் இல்லை. கால்பந்து விளையாடுவேன். என்.சி.சி-யில் இருந்தேன். துப்பாக்கி சுடுதலில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றேன். எதிர்காலத்தில் நான் ஒரு ராணுவ வீரனாக வருவேன் என்று என் குடும்பத்தினர் எதிர்பார்த்தார்கள். பத்தாவது முடித்த நேரத்தில், என் ஓவிய ஆசிரியர் துரை, அமுதா டீச்சர் இருவரும்தான், 'நீ ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படி. ஓவியத் துறையில் நீ நன்றாக வருவாய்!’ என்று நான் பயணிக்க வேண்டிய பாதையைக் காட்டினார்கள்.
வீட்டில் என் விருப்பத்தைச் சொன்னதும், 'நீ ரோட்ல சுண்ணாம்பு அடிக்கத்தான் போற!’ என்று அதட்டினார்கள். அவர்களுடன் கோபித்துக்கொண்டு என் ஓவிய ஆசிரியர் வீட்டில் தங்கினேன். தற்போது கும்பகோணம் ஓவியக் கல்லூரியின் முதல்வராக இருக்கும் மனோகரன் சார், அப்போது அந்தக் கல்லூரியில் வாத்தியாராக இருந்தார். அவரிடம் என்னை ஒப்படைத்தார் என் ஆசிரியர்.
ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன். சிறு வயதில் இருந்தே மனித உருவங்களை வரைந்து வந்தேன் என்றாலும், கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் அனாடமி பற்றி முழுமையாக அறிந்துகொண்டேன். கண்களையே ஸ்கேல் ஆக வைத்துக்கொண்டு மனித உடலை அளந்து வரையக் கற்றுக்கொண்டேன்.
கும்பகோணக் கல்லூரியில் படிப்பு முடிந்ததும் சென்னை ஓவியக் கல்லூரியில் முதுகலை படிக்க இடம் கிடைத்தது. அதே சமயம், ஒரு அனிமேஷன் நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. நான் முதுகலைப் பட்டப் படிப்பைத் தேர்வு செய்தேன். எங்கள் கல்லூரியில் லொகேஷன் பார்க்க கலை இயக்குநர் ஜே.கே. சாருடன் இயக்குநர் பார்த்திபன் வந்திருந்தார். அப்போது பத்து நிமிடங்களில் பார்த்திபனை 'போர்ட்ரைட்’ வரைந்து கொடுத்தேன். பாராட்டியவர், சில நாட்கள் கழித்து என்னை அழைத்தார். 'இவன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார். 'எதிர்கால இயக்குநர்கள்’ என்று டைட்டிலில் என் பெயர் வந்தபோது, அதுவரை நான் உணராத உற்சாகம்!
இளம் சாதனையாளர் ஓவியர் இளையராஜாவின் இணையத்தளம் அவசியம் சென்று பாருங்கள் நண்பர்களே!!!. நவீன பாணியில் அமைந்த அவரது பாரம்பரியமான குடும்பப்பெண்களின், தாவணி அணிந்த இளம் பெண்களின் ஓவியங்களை ஒருவர் வாழ்வில் தவறவிடவே கூடாது என்பேன்!!!அதில் மிளிரும் பழமையும் புதுமையும் இணைந்த முகம்,உடை,சுற்றுப்புறம்,பாரம்பரியம்,ஒளியமைப்புக்கு இவர் தரும் துல்லியமான பங்களிப்பை கவனியுங்கள்.கலையையும் கலைஞர்களையும் வாழ்த்திப் போற்றுவோம்,
இவரின் ஓவியங்களைப் பார்த்துவிட்டு இவரைப் பாராட்ட விழைவோருக்கு இவரது மின் அஞ்சல் முகவரி:-
Mobile : 98411 70866, 94882 21569
E-mail: artistilayaraja@gmail.com
“Nature has created the form, not me.
Unlike the ‘trained’ fine artist who is fussy
about anatomical and technical details,
I make a quick job of the thing…”
—Nek Chand—
அருமை நண்பர்களே!!!
பிறவி மேதைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்,அவர்களுக்கு உலகமே பள்ளிக்கூடம்,இயற்கையே அவர்கள் கற்கும் பாடம்,இயற்கையே அவர்களின் ஆசான். அவர்களுக்கு சம்பிரதாயமான ஏட்டுக் கல்வியில் அறவே ஈடுபாடு இருக்காது, அப்படிப்பட்ட பிறவி மேதை பத்மஸ்ரீ. நேக் சந்த் ஸெய்ணிஎன்பவரை நீங்கள் அறிவீர்களா?!!!இவரே சண்டிகரின் ராக்-கார்டனை நிர்மானித்தவர் ஆவார். இவருக்கு சம்பிரதாயமான கட்டிடக்கலையில்,சிற்பக்கலையில்,ஊரக நிர்மாணிப்பியலில் தேர்ச்சியோ, பட்டயமோ கிடையாது,ஆனால் இவரது படைப்புகள் உலகமே போற்றும் இத்துறை மேதைகள் வியக்கும் வண்ணம் விஞ்சி நிற்கின்றது. நீண்ட நாளாய் இவரைப்பற்றி எழுதவேண்டும் என நினைத்தும் எழுத முடியவில்லை,எல்லாவற்றுக்கும் நேரம் வரவேண்டுமே?!!!
நேக் சந்த் குர்தஸ்பூரில் [இன்றைய பாகிஸ்தான்] பிறந்தவர். இவரின் 23 வயதில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது, இவரின் குடும்பம் சண்டிகருக்கு மிகுந்த துயருக்கு பின்னர் குடியேறியது, அதே சமயம் சண்டிகரின் ஊரக வளர்ச்சிப்பணிகள் லெ-கார்ப்யூஷர் என்னும் புகழ்பெற்ற ஃப்ரெஞ்சு கட்டிடக்கலை வல்லுனரால் வடிவம் பெறத் துவங்கியது, அந்த ஊரக வளர்ச்சிப்பணிகளில் ஒரு சாதாரண சாலை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார் நேக் சந்த். அவர் தன் பணிக்குப் பின்னான ஓய்வு நேரத்தை எப்படி கழித்தார் தெரியுமா?!!! ஒரு வருடமில்லை, இரு வருடமில்லை, 18 வருடங்கள், இவர் 18 வருடமாக ஊருறங்கும் நேரத்தில், ஊரார் யாருமறியா வண்ணம் தன் மனதில் உதித்த கனவுபுரியான சுக்ராணி என்னும் ராஜ்ஜியத்தின் ராக் கார்டனை தனி ஆளாக வடிவமைத்து நிர்மாணித்தார். அது 18 ஆண்டுகளுக்கு பின்னர் தான் ஊராரின் கண்ணில் பட்டு அம்பலமானது.
இவருக்கு கிடைத்த மூலப்பொருட்கள் என்ன தெரியுமா?!!! பழைய பீங்கான் சுவர் மற்றும் தரை ஓடுகள். மின் விளக்கு பொருத்தும் பீங்கான் ஹோல்டர்கள், உடைந்து போன வாஷ் பேசின்கள்,கழிவறை கோப்பைகள்.பாட்டில்கள்,அந்த பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு குப்பைகள் மலைபோல குவிக்கப்பட்டிருக்க இவர் இடிபாடுகளுக்கிடையில் துழாவி, குடைந்து தேவையானவற்றை பொறுக்கி எடுத்து சேமித்தும் வந்தார், அவற்றை மெல்ல இவரின் கனவு புரிக்கு கடத்தினார். அப்போது சண்டிகர் ஒரு சிற்றூர். மூலைக்கொன்றாக சில வீடுகள், பொது கட்டிடங்கள், திட்ட அலுவலகங்கள் மட்டுமே அங்கே உண்டு.
மிகப்பெரிய சுக்னா ஏரிக்கு அருகில் வானமே தெரியாத வண்ணம் பசுமையான புதர்கள் மண்டி இருந்த குன்றுப்பகுதியில் தான் தன் சேகரித்த கட்டிடக் குப்பைகளை நேக்சந்த் கொட்டி வைத்தார். எத்தனை பெரிய உழைப்பு தேவைப்பட்டிருக்கும்?!!! மாஸ்டர் ப்ளான்கள், விஷன் ப்ளான், மிஷன் ப்ளான், ஸ்கெட்சுகள் அறவே கிடையாது, நாளுக்கு நாள் இவருக்கு உள்மனதில் கற்பனைகள் ,யோசனைகள் உதிக்க உதிக்க அதைக் கொண்டே சிற்பங்களும் , வால் ம்யூரல்கள் என்னும் சுவர் சுதைகளும் ,கோட்டை அரண்களும், நீர்வீழ்ச்சிகளும் மெல்ல உருவாக்கியபடியே இருந்தார். நாளாக ஆக இவர் ஏற்கனவே படைத்து வைத்த சிற்பங்களையும், கலைப்பொக்கிஷங்களையும் பார்க்க பார்க்க கற்பனை வளம் கூடுக்கோண்டே போயிற்று.அழகிய மிருகங்கள், மனிதர்களின் பலவிதமான பாவனைகள், என சிருஷ்டித்துவிட்டார். இந்த இடம் ஏரிக்கு தண்ணீர் வரும் தடமாக இருப்பதால் அரசு இதை பாதுகாக்கப்பட்ட இடமாகவே கருதி வந்தது. ஊருக்கு மிகவும் ஒதுக்குப்புறமாக இருந்த இப்பகுதி யார் கவனமும் பெறாமலே போனது.
1975ஆம் ஆண்டின் ஒருநாள் யாரோ சில பொதுப்பணித்துறையின் நில சர்வேயர்கள் இந்த ராக் கார்டனை கண்டுபிடித்து அரசுக்கும் அறிவித்துவிட. நேக் சந்த் 1957ஆம் வருடத்தில் துவங்கி படைத்த சிற்பங்களின் பெருக்கம் பதினெட்டு வருடத்துக்குள்ளே 12 ஏக்கர் இடப்பரப்பை ஆக்கிரமித்திருந்தது.அது ராட்சத வேகம், உதவ யாருமே கிடையாது, அபார,அசராத கலைத்திறனும் இவரது குருதியில் இரண்டரக் கலந்து இதை சாதிக்கவைத்திருக்கிறது என்றால் மிகையில்லை. இவர் மீது வழக்கும் பதியப்பட்டது, வேலைக்கும் ஆபத்து வந்தது, அரசாங்க இடத்தையும் , கட்டிட மூலப்பொருட்களை தன் சொந்த கனவு புரிக்கு பயன்படுத்தியது சட்ட விரோதம் ,என்று அந்த ராக் கார்டனையே இடித்து, நொறுக்கி அப்புறப்படுத்த வேண்டுமென்று உத்தரவாயிற்று.
நேக் சந்த் யாருடைய பாராட்டையும் எதிர்பார்த்தவரில்லை, படிக்காத மேதையான அவர் தன்னுள் உள்ளக்கிடக்கையாக பீரிட்டுக்கிளம்பிய கலைத் திறனை,வீணாய் கிடக்கும் ஓரிடத்தை தெரிவு செய்து சிற்பமாக வடித்ததை தவிர என்ன தவறு செய்தார்?!!! அரசின் உத்தரவால் அவர் மிகவும் மனம் நொறுங்கினார். அச்சமயம் இந்த ராக் கார்டனுக்கு சண்டிகர் பொதுமக்கள் தந்த ஆதரவு அபாரமானது, அத்தனை அற்புதமான எளிமையான் சிற்பங்களைக் காணும் ஒருவர் தன் வாழ்வில் தாஜ்மஹாலுக்கு அடுத்தபடியாக இன்னோர் செயற்கை பிரம்மாண்டத்தை கண்டதாகவே பெருமூச்சு விட்டனர்.
இதை இடிக்கவே கூடாது, முறையாக பாதுகாக்கப் படவேண்டும் என வாதிட்டனர். இவருக்கு ஏகோபித்த மக்கள் ஆதரவு திரண்டவண்ணமிருந்தது. இவ்வளவு மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களை கணக்கில் எடுத்துக்கொண்ட சண்டிகர் அரசு இதை பொதுமக்கள் பார்வைக்கு முறைப்படி திறந்து வைக்கலாம் என்று 1976 ம் ஆண்டு புதுப்பொலிவுடன் திறந்து வைத்தது. நேக் சந்துதிற்கு 'ராக் கார்டன் சப் டிவிஷனல் பொறியாளர் என்ற சிறப்பான அரசுப் பதவியையும் வழங்கி மாத சம்பளமும் , படிகளும் 50 உதவியாளரும் அவருக்கு வழங்கியது குறிப்பிடட்தக்கது. இப்போதும் தன் 86 வயதில் மிகவும் சுறுசுறுப்பாக முழுநேரமும் சிற்பங்கள் வடிப்பதும் நிர்மாணிப்பதும் பயிற்சியளிப்பதுமே இவருக்கு தொழில்,இவர் பல உலகநாடுகளுக்கும் சென்று இதுபோல மறுசுழற்சி கட்டிட கழிவுப்பொருட்கள் கொண்டு சிற்ப பூங்காக்களை ஸ்தாபிதம் செய்திருக்கிறார். 1983ஆம் வருடம் இந்த ராக் கார்டனை மிகவும் பாராட்டிய மத்திய அரசு ஒரு சிறப்பு தபால்தலையைக் கூட வெளியிட்டு நேக் சந்தை கௌரவித்தது.1984ஆம் வருடம் இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் அளித்து அழகுபார்த்தது மத்திய அரசு.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் உடைந்த பீங்கான் , கண்ணாடித்துண்டு , மறு சுழற்சிக்கான கட்டிட பொருட்கள் ,சிப்பி,தேங்காய் ஓடுகள் எல்லாவற்றுக்கும் இவர் சேகரிப்பு நிலையங்களைத் துவங்கினார். இந்தத் தோட்டம் முழுக்க முழுக்க மண்ணில் மக்கக்கூடிய மறுசுழற்சி -கட்டிட மூலப்பொருட்கள் கொண்டே வடிவமைக்கப்பட்டது. 1996 ஆம் வருடம் இவர் ஃப்ரான்சு நாட்டுக்கு கருத்தரங்கங்களுக்கு சொற்பொழிவு ஆற்ற பாடங்கள் சொல்லித்தரவும் அவர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் சென்றார். அச்சமயம் தேசவிரோத-விஷமிகள் இவரின் ராக்-கார்டனுக்குள் புகுந்து நாசம் விளைவித்தனர்.
ஆனால் பொதுமக்களின் பலத்த ஆதரவாலும் ராக் கார்டன் பாதுகாப்பு ஆணையம் மூலமாகவும் சிதைக்கப்பட்ட எல்லா சிற்பங்களையும் நேர்ப்படுத்தி, பழுது நீக்கி காட்சிக்கு மீண்டும் வைத்தனர். அப்போது 12 ஏக்கராக துவங்கிய ராக் கார்டன் இப்போது 40 ஏக்கராக வளர்ந்து கண்ணுக்கு விருந்தாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே எழில் கொஞ்சும் இயற்கையுடன் ஒத்த நீர்வீழ்ச்சிகள், அழகிய குளங்கள், விதவிதமான சிற்பங்கள்,சுவர் சுதைகள், சுட்ட களிமண் பொம்மைகளுக்கு பீங்கானால் பல வண்ண ஆடைகள்ன்னு ஒரே அட்டகாசம். ப்ரோக்கன் டைல்கள் என்று நம்மிடத்தில் கேவலமாக பார்க்கப்படும் மூலப் பொருட்களைக் கொண்டு இவர் மொசைக் ஓவியங்கள் அசாதாரணமான பின்நவீனத்துவ பாணியிலும் அசகாய மேதமையுடன் வடிவமைத்ததை கொண்டாடாத, எண்ணி போற்றாத படித்த மேதைகளே இவ்வுலகில் இல்லை.
இந்த ராக் கார்டன் முதலில் சுட்ட களிமண், சிறு கற்பாறைகளால், சிமெண்ட் மற்றும் சுண்ணாம்பு காங்க்ரீட் பொம்மைகள் என வடிவம் பெற்றது, பின்னாளில் அரசின் உதவியுடன் நீர்நிலைகள், வண்ண பீங்கான் மிருகங்கள்,விதவிதமான கலாச்சார மனிதர்கள் என நீண்டு தற்போது பொழுது போக்கு, விளையாட்டுப்பகுதிகள் என ஓங்குதாங்காக வளர்ந்திருக்கிறது .உடைந்த பலவண்ண கண்ணாடி வளையல்களை அபாரமாக தொகுத்து இவரின் ஆண் பெண் சிற்பங்களுக்கு புடவைகள் ,மேலாடைகளை இவர் போர்த்தியிருக்கிறார்.
அழகிய அலங்கார வளைவுகளுடனான வாசல்களுடன் வண்ண மீன் காட்சியகமும் , குழந்தைகளுக்கான ஒட்டகச்சவாரியும், கோட்டை அரண்கள். வரிசை வரிசையான ஊஞ்சல்கள், அன்றாட நிகழ்வுகளுக்கு ,கலாச்சார, கலை நிகழ்ச்சிகள் நடக்கையில் அமர்ந்து பார்க்கும் திறந்தவெளி அரங்குகள், என கண்களுக்கு விருந்தாக உள்ளது. முதல்வன் திரைப்பட - ஷங்கரின் ரண்டக்கா, ரண்டக்கா பாடலுக்கு தோட்டா தரணி நாட்டுப்புற அமைப்பில் பிரம்மாண்டமாக மலைக்கு பெயிண்ட் அடித்து மிரட்டியிருப்பார், அதற்கெல்லாம் முன்னோடி ராக் கார்டன், தன்னலமில்லாத கலைத்தொண்டர். தான் சாதித்திருக்கிறோம் என்ற கர்வம்,தன்னிறைவு, திருப்தி கூட இன்னும் அடையாத ஒப்பற்ற,உன்னத பிறவிமேதை தான் இந்த நேக் சந்த் ஸெய்ணி,இவரின் வாழ்க்கையை ஒரு ஆவணப்படமாகவோ, வணிகரீதியான படமாகவோ எடுத்துத்தொலைந்தால் கூட தேவலை, அமீர்கான் போன்றோர் தான் மனதுவைக்கவேண்டும்.வாய்ப்பு கிடைக்கையில் அனைவரும் ஒருமுறை சென்று பார்க்கவேண்டிய இடம்,இதைப்பார்த்தாவது இனியேனும் ஒருவர் பாதுகாக்கப்பட்ட புராதான நினைவுச் சின்னங்களை,புராதான கோயில்களை கரி,மசி,மை,உளி கொண்டு பாழாக்காமல் இருக்கட்டும். நிறைய கருங்கல் சிற்பங்களில் ஆன்மிக பழங்களும் காதலர்களும் கரியில் தம் ஜோடிகளின் பெயர்களையும், தேர்வு எண்ணையும்,எழுதியும் விளக்கேற்றுகின்றேன் பேர்வழி என்று எண்ணையை பீடத்தில் ஊற்றி ஊற வைத்தும் விடுகின்றனர்,நாளடைவில் பாறைக்குள் இறங்கிவிடும் எண்ணையை எதைக்கொண்டும் நீக்க முடியாமலே போகிறது, நேக் சந்த் போல ஒருவருக்கு படைக்க துப்பில்லாவிட்டாலும் படைத்தவற்றை பாழடிக்காமலிருந்தாலே புண்ணியம் கிட்டும்.
தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் வாட்டர் கேன் வாங்காத நடுத்தர குடும்பங்களே கிடையாது, கோடை காலம் துவங்கியதை அடுத்து, இதைப்பற்றி நீண்டநாட்களாகவே ஒரு விழிப்புணர்வு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்தும் முடியாமலே போனது. இன்றைய தமிழகத்தின் மூலை முடுக்கெங்கிலும், அசுர லாபநோக்கம் ஒன்றையே கண்ணாகக்கொண்டு தனியார் மினரல் வாட்டர் சப்ளை நிறுவனத்தினர் தரமற்ற குடிநீரை தமிழகமெங்கிலும் விற்பனை செய்வது நாமறிந்த ஒன்று . தமிழ் நாட்டின் எல்லா நடுத்தரக் குடும்ப வீடுகளிலும் நாம் நுழைந்தவுடன் பார்ப்பது வெள்ளை நிற வாட்டர்கேனை தான், அந்த அளவுக்கு வாட்டர் கேன் நீர் உபயோகம் மக்களுடன் இரண்டரக் கலந்துவிட்டது.
வேவ், யோகா, ஸ்பைஸ் அக்வா, சியெலெரி, பாலார், ஹைடெக், மேஜிக், ப்ரின்ஸ்,சூரியா, ஷ்ரீ பாலாஜி, கூல் ப்ரீஸ், ரிப்புள்,ட்ரஸ்ட் அக்வா, டால்பின், வி ஜி ஆர், ப்ரைம் லைஃப், ஐஸ் டச், லிங்கம், ஈகிள், அர்ஜுன், அக்வா சிட்டிடெய்லி, ஈகிள், மானட்ஸா, அக்வா , ஃபாஸ்ட், ட்ரினிட்டி, சிட்டிசன், அப்பொல்லோ, க்ளாஸ், அக்னி, ப்ரைம் லைஃப், சரவணா ஸ்டோர்ஸ், வி எக்ஸ் எல் அக்வா, அபூர்வா, கபில், அல்பா, என்று புற்றீசல் போல பெருகிவிட்ட இந்த வாட்டர் கேன் மற்றும் வாட்டர் பாக்கெட் கம்பெனிகள் சென்னை மாநகராட்சியால் தடைசெய்யப்பட்டவை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?!!! , இன்னும் பல கேள்விப் படாத பெயர்கள் பட்டியலில் உண்டு, பலவற்றுக்கு ஐ எஸ் ஐ முத்திரை வேறு எப்படியோ வாங்கி விடுகின்றனர். இதை முறைப்படுத்த் வேண்டிய சுகாதாரத்துறையினரோ கையூட்டு வாங்கிக்கொண்டு வாட்டர் கேன்களைப் பற்றி தனக்கெதுவும் தெரியாது, என்று மிகுந்த அலட்சியம் காட்டுவதால், நகருக்குள் பல்வேறு நோய்கள் பரவி வருகிறது.எங்கேயும் சென்று ஒருவர் இந்த வாட்டர் கேனில் வரும் குடிநீரை நம்பி குடிக்க முடியாது, தொண்டை கட்டிக்கொள்ளும்,காய்ச்சல் பின்னாலேயே தொடரும்.தொடர்ந்து ஒருவாரத்துக்கு மருத்துவசெலவும்,பணிக்கு மருத்துவ விடுப்பும் இதன் பின் விளைவுகள் ஆகும்.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நீர் ஆதாரங்கள் கேள்விக்குறியானதால் சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பொது மக்கள் அவற்றை வீட்டு தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர்.அது கூட வாரம் ஒரு முறை தான் வருகிறது,லாரிகளில் வரும் அசுத்தமான குடிநீரைப்பற்றி கேட்கவே வேண்டாம்,நகர தெருக்களில் நிறுவப்பட்டிருக்கும் சிண்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளை கழுவவோ பராமரிப்பதோ அறவே கிடையாது,
இதனால் மிகவும் நொந்துபோன மக்கள் அநேகம் பேர் குடிப்பதற்கு தனியார் வட்டார் சப்ளை நிறுவனத்தினரிடம் இருந்து 20 லிட்டர் கொள்ளவு கொண்ட கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். குறிப்பாக நகராட்சிக்குட்பட்ட டவுன் பகுதியில் நடுத்தர மற்றும் உயர்தர மக்கள் குடிநீருக்கு தனியார் வாட்டர் சப்ளை நிறுவனத்தையே நம்பியுள்ளனர்.வாட்டர் கேன்களில் தான் எத்தனை எத்தனை ப்ராண்டுகள்,அநேகம் போலியான நிறுவனங்கள் தான்.மாசுபட்ட ஏரிகளில் இருந்து நீர் இறைத்து அதை கொண்டு போய் மிகவும் அற்பத்தனமாக ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ் செய்து,அந்த சுகாதாரமற்ற நீரே கழுவாத,கிருமிநாசம் செய்யப்படாத வாட்டர் கேன்களில் நிரப்பப்படுகிறது.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன் வெறும் 15 ரூபாய் இருந்த 20 லிட்டர் வாட்டர் கேன், தற்போது "கிடுகிடு'வென உயர்ந்து 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தமிழகமெங்கிலும் கடந்த காலத்தில் அங்கீகாரம் பெற்ற தனியார் குடிநீர் தயாரிப்பு கம்பெனிகள் மூலம் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, இந்த குடிநீர் விற்பனை தொழிலில் நல்ல வருமானம் கிடைப்பதால் ஏராளமான போலி வாட்டர் சப்ளை நிறுவனத்தினர் அரசு அங்கீகாரம் பெறாமல் தரமற்ற குடிநீரை விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். இவற்றை வாங்கி குடிக்கும் பொதுமக்கள், பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக பேக்கரி கடைகள், பெட்டிக்கடைகள், பஸ் ஸ்டாண்ட் கடைகளில் சிறு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தண்ணீர் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் தண்ணீர் தாகத்திற்காக அவசர கோலத்தில் இவற்றை வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி போலி வாட்டர் சப்ளை நிறுவனத்தினர், சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் லாபநோக்கில் தரமற்ற குடிநீரை தயாரித்து விற்பனை செய்கின்றனர். கடைக்காரர்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் அவற்றை வாங்கி விற்பனை செய்கின்றனர்.
வீடுகளில் வினியோகிக்கப்படும் தரமற்ற வாட்டர் கேன், கடைகளில் விற்பனை செய்யப்படும் தரமற்ற குடிநீரை வாங்கி குடிக்கும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது அடிக்கடி காலரா, டெங்கு மற்றும் வாந்தி, பேதி நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக தனியார் வாட்டர் சப்ளை கம்பெனிகள் சுகாதார விதிமுறைப்படி நிலத்தடியில் போர்வெல் போட்டு, அவற்றில் கிடைக்கும் தண்ணீரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத்துறை அறிவுரைப்படி சுத்திகரித்து ஆய்வுக்குட்படுத்தி விற்பனை செய்ய வேண்டும்.
ஆனால், தமிழகமெங்கிலும் தனியார் வாட்டர் சப்ளை நிறுவனத்தினர் சுகாதாரத்துறை அதிகாரிகளை,கவுன்சிலரை,போலீசாரை, லஞ்சத்தால் குளிப்பாட்டி விட்டு புறநகர் கிராமங்களில் உள்ள மாசுபட்ட ஏரி, குளம், அணை மற்றும் குட்டைகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, அவற்றை அனுமதிக்கப்பட்ட விதிமுறைகள் படி சுத்திகரிக்காமல் சுவை தரும் வேதியியல் பொருட்களை கலந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவது கண்கூடு.
சுகாதாரத்துறை அதிகாரிகள் எப்போதாவது விழிக்கும் அரசு உத்தரவிடும் போது மட்டுமே பெயரளவுக்கு சோதனை செய்து, தரமற்ற வாட்டர் கேன், பாக்கெட்டுகளை பறிமுதல் செய்கின்றனர். பத்திரிக்கைக்கு செய்தி தருகின்றனர். மற்ற நேரத்தில் இவர்கள் தனியார் வாட்டர் சப்ளை நிறுவனத்தினருடன் மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதால், பொதுமக்கள் நலன் கேள்விக் குறியாகியுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகளின் இந்த கேடுகெட்டத்தனம் மிகவும் கண்டிக்கத்தக்கது, மக்களின் உடல் ஆரோக்கியத்துடன் விளையாடும் இந்த கயவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும், இது போனற தருதலைகளுக்கு தற்காலிக பணிநீக்கம் எல்லாம் ஒன்றுமே கிடையாது, வேலையை நிரந்தரமாக பறிக்கப்படவேண்டும். நீரினால் வரும் கொடிய வியாதிகள் இந்த கொடியவர்களை ஒன்றும் செய்யமாட்டேன் என்கிறது என்பதே பெரிய முரண்.
சரி குடிநீருக்கு எங்கள் வீட்டில் என்ன செய்கிறோம் என்று சொல்கிறேன்:-
என்வீட்டில் கடந்த ஐந்து வருடத்தும் மேலாக அக்வாகார்டின் ரிவைவா என்னும் ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ் சாதனம் பொருத்தி அது தரும் குடிநீரைத்தான் பயன்படுத்தி வருகிறோம். [இது இந்தியாவின் மிகத் தரமான பொருளுக்கான வாய்வழி விளம்பரம் என்று எடுத்துக் கொள்ளுங்கள்]. இந்த ப்ராண்டிற்கு நிகரே கிடையாது, இப்போது புதிதாக ஸீரோ-பி நிறுவனமும் ஆர் ஓ சாதனங்களை தயாரித்து சந்தையில் விற்றுவந்தாலும் அதன் விலை அக்வாகார்டை விட அதிகம் என்பேன், தண்ணீரின் கொள்ளளவும் ஏனைய பிற சிறப்பம்சங்களும் இது போல கிடையாது, இது நீரில் இருக்கும் தீங்குவிளைவிக்கும் கந்தகத்தை நீக்குகிறது, நீரால் வரக்கூடிய தொற்று வியாதி பாக்டீரியாக்கள், வைரஸ்கள், ப்ரொடோசோக்கள், அமிலங்கள், தேவைக்கதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகளையும் அறவே வடிகட்டிவிடும்,இதற்கு நீர் சுத்திகரிக்கும் போது மட்டுமே இயங்கும் குறைந்த 25 வாட்ஸ் மின்சாரம் மட்டும் தேவை.
இதை நிலத்தடிநீரில் கலந்துள்ள உப்பு மற்றும் கனிமங்கள் அளவு 500mg/ltr(min)-2000 mg/ltr (max)-RO , 100 mg/ltr(min)-500 mg/ltr (max)-NF வரை உள்ள எந்த ஒரு பகுதியிலும் நிறுவலாம், நீங்கள் இதை வாங்க முடிவெடுத்து அக்வாகார்ட் குழுவை அழைக்கும் போதே அவர்கள் வீட்டுக்கு வந்து இலவச டெமோ செய்து காட்டுவர்,நீரையும் சோதிப்பர், அப்போது உங்கள் வீட்டு நிலத்தடி நீரின் உப்பு/கடினத்தன்மை குறைவாக இருப்பின், அதற்கேற்றாற்போல குறைந்த ஸ்டேஜ் கொண்ட சாதனத்தை பரிந்துரைப்பர், அதன் மூலம் ஒருவரின் உடல் ஆரோக்கியத்துக்கு இயற்கையாகவே தேவைப்படும் பொட்டாசியம்,கால்சியம் போன்ற பொருட்கள் குறைவின்றி கிடைக்கும். 8 லிட்டர் நீரை இதில் தேக்கி வைக்கலாம், மணிக்கு 8லிட்டர் நீரை சுத்தீகரித்தும் தரும். இது தரும் தண்ணீரை குடிக்கப் பழகி விட்டால் , வேறெங்குமே நீரருந்த மாட்டீர்கள்.மினரல் வாட்டர் கூட ருசிக்காது.
இதையும் ஹிந்துஸ்தான் லீவர் 1400ரூபாய்க்கு கூவிக்கூவி விற்கும் வாட்டர் ப்யூரிஃபையரையும் ஒன்று படுத்தி பலர் குழப்பிக் கொள்கின்றனர், அது வெறும் கிருமி நீக்கி மட்டுமே, இது கிருமி நீக்கி + நீரின் கடினத்தன்மையை நீக்கி சுவை மிகுந்த குடிநீராக்கித் தருகிறது. பிஸ்லெரி,கின்லே நிறுவன மினரல் வாட்டரை விட இந்த குடிநீர் மிகவும் சுவையானது,ஒரு முறை நிறுவ சுமார் 11,000 ரூபாய் [விலை குறைந்துவிட்டது] தேவைப்படும். இப்போது சுற்றுவட்டாரத்தில் 6000 ரூபாய்க்கு லோக்கலில் கிடைக்கும் கண்ட தரம் குறைந்த சீனத்தயாரிப்பு ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் சாதனங்கள் வாங்கி காசை கரியாக்காதீர்கள்,அவை வெறும் இரண்டே மாதத்தில் பல் இளித்து விடும்,நேராக இதையே தேர்வு செய்யுங்கள்.அதன் பின்னர் உங்கள் இல்லத்தின் நீர் உபயோகத்துக்கு ஏற்ப குறைந்தது ஒருவருடம் மெம்பரேனின் ஆயுட்காலம் இருக்கும்,
மூன்றுபேர் உள்ள குடும்பத்துக்கு சுமார் 2வருடங்கள் இந்த மெம்பரென் நீடிக்கும், அதன் பின்னர் நீரின் சுவை மாற ஆரம்பிக்கும், அப்போது நீங்கள் மெம்பரேனை மாற்றிக் கொள்ளலாம்,அதன் விலை சுமார் 3500 ரூபாய். தயவு செய்து உடல் ஆரோக்கியத்தில் விளையாடாதீர்கள் நண்பர்களே. உங்கள் வீட்டில் பிறந்த குழந்தை இருக்கலாம், வயதான அம்மா ,அப்பா, தாத்தா பாட்டி இருக்கலாம், நம் அன்றாட குடிநீர் உபயோகத்துக்கு பாதுகாப்பான தேர்வையே நாடுங்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, சுமார் ஆறு வருடம் முன்பு அக்வாகார்ட் ஆர் ஓ வாங்க ரூபாய் 14000 ஆனது, அவ்வளவு பணம் புரட்ட முடியாத நிலையில் க்ரெடிட் கார்டிலேயே வாங்க முடிவு செய்து அவர்களிடம் கேட்டேன், அவர்கள் வீட்டுக்கே வந்து க்ரெடிட் கார்டை ஒரு கார்பன் பேப்பரில் வைத்து ஸ்வைப் செய்து கொண்டு போனதும், பின்னர் அதை நான் 12 மாத தவணையில் மாற்றி கட்டியதும் இன்னும் நினைவிருக்கிறது .நான் வாழ்வில் முதலில் வாங்கிய உருப்படியான,விலைஉயர்ந்த பொருள் என்றால் இது தான்.
இன்றும் என் சென்னை வீட்டில் பாலாறு நீர் இணைப்பு கிடையாது,போர்வெல் நீர்தான். ஒரு நாளைக்கு பாலில் கலந்து பயன்படுத்த, உணவு சமைக்க, ஃப்ரிட்ஜில் வைக்க, குளிர் பானம் கலக்க என சுமார் 20 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. 365x20 =7300லிட்டர் ஆண்டுக்கு செலவாகிறது . மெம்பரேனின் செலவு ஒரு ஆண்டுக்கு 1750 ரூபாய் போல வருகிறது. கேன் வாட்டரை விலைகொடுத்து வாங்கி,வைத்தியத்துக்கு அழுவதற்கு பதிலாக உங்கள் குடுமபத்தாரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டால் இந்த தொகை பெரிதாகத் தெரியாது. நண்பர்கள் வேறு ஏதேனும் நல்ல ஆலோசனைகள் இருந்தாலும் இங்கே பகிருங்கள். தண்ணீர் கொள்ளையர்களை கூட்டு முயற்சியால் ஒழிப்போம்!!!.
ஜி.வி.பிரகாஷ்குமார் , இவருடைய பெயருக்கேற்ப மிகவும் பிரகாசமான வாய்ப்புகளைப் அடுத்தடுத்து வாங்கி குறுகிய காலத்தில் தகுதிக்கு மீறிய புகழைப் பெற்றவர். சுருக்கமாக ஓவர்ரேட்டட் இசையமைப்பாளர் எனலாம். இவரின் இசையுலக குருநாதர்களான சங்கர் கணேஷ் என்கிற இரட்டையர்கள் ஒருமுறை எந்த ஒரு இசையையும் கேட்டாலும் அப்படியே உள்வாங்கி அடுத்த படத்தில் அதை எதிரொலிப்பர், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட, மலையாளம் என அசுரவேகத்தில் பணியாற்றும் இவர்கள் மொழியாபிமானம் இல்லாதவர்கள்,வெறும் 5ந்தே நாளில் ஒரு படத்தின் பாடல்களுக்கான இசையமைப்பயும் பிண்னணி இசையமைப்பையும் முடித்து விடுவார்கள். வாய்ப்பு இல்லாத போது கச்சேரிக்கு வாசித்து ப்ராக்டிஸும் செய்வார்கள் . இவர்களுக்கு குவாலிட்டி மேட்டர் அல்ல க்வாண்டிட்டி தான் மேட்டர்.
அது போலவே இளைய இசைப்புயல் ஜிவி.பிரகாஷ்குமாரும் ஒரு நிலைக் கண்ணாடி சூரிய ஒளியை உள்வாங்கி எதிரொளிப்பது போல மேற்கத்திய ஆல்பங்கள், உலகசினிமா திரை இசைக்கோர்வைகள், இந்துஸ்தானி இசைக்கோர்வைகள் என இவர் சமீபத்தில் தருவித்து கேட்டதை மற்றவருக்கு கரைத்து புகட்டாமல் விடவே மாட்டார், இவரை பொருத்தவரை இசைக்கு எல்லை, வரைமுறையே இல்லை, இவர் சென்னையில் உட்கார்ந்து கொண்டு இந்தியாவின் ஏன் உலகின் அத்தனை மொழிகளிலும் வெளிவந்த இசைவடிவங்களை ஒருங்கிணைத்து கொலாஜ் ஓவியம் படைப்பதில் அத்தனை ஆர்வம் கொண்டவர் , இசைக்கோர்வையை மறுஆக்கம் செய்வதில் சகலகலா வல்லவரும் இவரே, இவருக்கு அப்புறம் தான் பழம் தின்று கொட்டை போட்ட தென்னிந்திய இசையமைப்பாளர்கள் கூட வரிசைகட்டி வருவர்.
இவருக்கு காப்பி ரைட் பற்றிய எந்த சமாச்சாரமும் தெரியாது, ஏனென்றால் இவர் இளம்கன்று - மிகவும் இளைய வயதிலேயே இசைத்துறைக்கு வந்துவிட்டார். இன்னும் படிக்க வேண்டியவை எவ்வளவோ உள்ளது. ஆகவே காப்பி ரைட் பற்றிய அறிவு இவருக்கு இன்னும் எட்டவில்லை. அது குறித்த ஒரு வழக்கை கூட இவர் இன்னும் சந்திக்கவுமில்லை, இவரிடம் எல்லா இயக்குனர்களுக்கும் பிடித்ததே புதுமணப்பெண்ணைப் போன்ற அந்த குனிந்த தலையுடனான தன்னடக்கம் தான். எந்த ஒரு இசையமைப்பாளர் ஒரு படத்துக்கு இசையமைக்க மறுத்தாலும், அந்த காலி இடத்தில் இவர் பெயரை எழுதிக்கொள்ளலாம், இவரைக் கேட்கக்கூட வேண்டாம், இசையமைக்கும் படத்தின் எண்ணிக்கை கூடும் என்றால் ஒருவருக்கு கசக்குமா?!!! இவர் லபக்கென்று அவ்வாய்ப்பை பற்றிக் கொள்வார். அந்த வாய்ப்பை சபேஷ் முரளியே மறுத்திருந்தாலும் இவருக்கு கவலையில்லை. அத்தனை ஆர்வம் இசை மறுஆக்கத்தில் .கூடிய சீக்கிரம் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் சுமார் 40 ஆண்டுகளாக செய்த திரை இசை சாதனையை இவர், ஐந்தே வருடங்களில் நிகழ்த்திவிட வேண்டும் என்று நாமும் அவரை வாழ்த்துவோம்!!!.
இளைய இசைப்புயல் ஜிவி பிரகாஷ்குமார்
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடலை நாம் அறிவோம், அதை இவர் எவ்வளவு பாடுபட்டு நமக்காக கான்ஃப்லூயன்ஸ் என்னும் ஆலபத்தில் வரும் டுகெதர் என்னும் இசைக்கோர்வையை அப்படியே உருவி இசைவிருந்தாக சமைத்துள்ளார். இதைப் படைத்த ஹிந்துஸ்தானி பாரம்பர்ய இசைக்கலைஞர் ராஹுல் ஷர்மாவும் &ரிச்சர்ட் க்ளேடர்மேன் என்னும் பியானிஸ்டும் கேட்டால் ஸ்தம்பித்தே போய்விடுவார்கள். நீங்களே கேட்டுவிட்டுச் சொல்லுங்கள். இதைக் கண்டறிந்து சொன்ன கவிஞர் நேசமித்திரனுக்கு நன்றி,அவரது பணி மென் மேலும் சிறக்கட்டும்.
ஐ ஆம் சாம் [I Am Sam][2001].ஹாலிவுட்டின் ஐ ஆம் சாம் என்னும் சித்திரம், இதுவரை வந்த தந்தை மகள்/மகன் கதைகளை தூக்கி சாப்பிட்டு காண்போர் மனதை நகர்த்தும் தன்மை பொருந்தியது. ஷேன் பென்னின் நடிப்பை பற்றி எழுதுவதற்கு ஒரு கட்டுரை போதாது. மனநிலை பாதிக்கப்பட்ட சாம் என்ற ஒரு முப்பது வயது "சிறுவனுக்கும்" அவனது மகளுக்கும் இடையே நிகழும் சம்பவங்களை மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாய் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிப்பார் இயக்குனர் ஜெஸ்ஸி நெல்சன் [Jessie Nelson]. படத்தில் மனநிலை சரியில்லாத "சாம்" ஆகவே கதைக்குள் தொலைந்து போயிருப்பார் "ஷேன் பென்" (Sean Penn). மிச்செல் ஃபீபரும் [Michelle Pfeiffer], படத்தில் சாம்மின் பெண்ணாக நடித்திருந்த டாகோடா ஃபான்னிங்கும் [Dakota Fanning] மனதில் ஆழமாகப் பதிந்து விடுவார்கள். மனதை ஆழமாக ஈர்த்த மிகச் சில படங்களில் இதுவும் ஒன்று. படத்தின் முடிவு சுபமானதாய் இருந்தாலும் படம் முடிந்ததும் நம் மனதில் மிகுந்த பாரம் குடிகொள்வதை தடுக்க இயலாது.சாமின் பாத்திரம் பலநாட்களுக்கு மனதை விட்டு அகலாது.ஆகவே பிரதிகளைப் பார்க்கும் முன்னர் மூலத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.[ஒரு முறை புளித்த மாவு தோசையை தின்றுவிட்டால் எப்படி நல்ல அருமையான சுவையான தோசையை உங்களால் சந்தேகப்படாமல் சாப்பிட முடியாதோ?[என்னா உதாரணம்]அதே போலதான்.மூலத்தை சிதைத்து செய்யப்படும் அலங்கோல முயற்சிகளால் பின்நாளில் காணக்கிடைக்கும் மூலத்தின் அருமையும் பெருமையும் ஒருவருக்கு தெரியாமலே போகிறது.]
நம் தமிழ்சினிமா வித்தகர்களுக்கு ஒரு பழக்கமிருக்கிறது, எந்த படைப்பு திருட்டையும் நேரடியாக அரங்கேற்றிவிடமாட்டார்கள். பாலிவுட் பகல்கொள்ளையர்கள் அதை திருடும் வரை காத்திருந்துவிட்டு அதன் பின்னர் இவர்கள் அதைத் திருடுவார்கள். ஒருவேளை மாட்டிக் கொண்டால் அவனை நிறுத்தச்சொல்லு நிறுத்தறேன்!!! என்று வியாக்கியானம் பேசலாம் அல்லவா?!!! பச்சைகிளி முத்துச்சரம் ஒரு உதாரணம். இப்போது இது!!!. இந்த நேரத்தில் தன் படைப்புக்கு உந்துதல் அளித்த மூலத்தின் படைப்பாளிகளுக்கு மரியாதை அளித்து, அவர்களின் பெயர்களை டைட்டில்கார்டில் போடும் வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களை எண்ணிப்பார்த்து நாம் ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது!!!. வாழ்க படைப்புத் திருட்டு.
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையாக தெய்வத்திருமகன் படம் இருக்கும் என்று உணர்ச்சி பொங்க கூறுகிறார் படத்தின் நாயகன் விக்ரம். [நல்ல வேளையாக உலக சினிமாவில் முதல்முறையாக என்று சொல்லலை அந்த வகையில் லாபம்]
/div>
எப்படிபட்ட கதாபாத்திரத்தையும் ஏற்று அதில் திறம்பட நடிப்பவர் சீயான் விக்ரம். சேது படத்தில் தொடங்கி காசி, பிதாமகன், அந்நியன் என்று வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர். தற்போது விக்ரம் தெய்வத்திருமகன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரமுடன் அனுஷ்கா, அமலபால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மதராசப்பட்டினம் படத்தை இயக்கிய டைரக்டர் விஜய் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.[எல்லா திருட்டு படங்களுக்கும் பட்டி பார்த்து டிங்கரிங் பார்க்க ஜிவி பிரகாஷுக்கே ப்ரி குவாலிஃபிகேஷன் உண்டு என்பது ஏறகனவே நாம் நன்கறிவோம்]
இப்படத்தின் பத்ரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அதில் பேசிய நடிகர் விக்ரம், இந்தபடத்திலும் எனக்கு வித்யாசமான கதாபாத்திரம். இப்படத்தின் கதை தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதை. டைரக்டர் விஜய் அருமையாக இப்படத்தை இயக்கி இருக்கிறார். [இவர் ஒரு நல்ல மிக்ஸர்,எல்லா ரக மிக்ஸிங்குமே இவருக்கு கைவந்த கலை என்பதை நாம் மதராஸபட்டணத்திலேயே அறிவோம்]அதேபோல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிக அருமையாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா[பொருத்தமான ஆளு]. ஜி.வி.பிரகாஷின் இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. இவர்கள் தவிர படத்தில் பணியாற்றி இருக்கும் மற்ற கலைஞர்களுக்கும் இப்படம் நிச்சயம் நல்ல பெயர் வாங்கி தரும். இவ்வாறு அவர் பேசினார்.
படத்தின் சூட்டிங் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதால் ஆடியோவை ஏப்ரல்14ம் தேதியும், படத்தை மே மாதமும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர். [சீக்கிரம் ஆடியோவை வெளியிடுங்க, நல்லா இருங்கய்யா, வாழ்க படைப்பு திருட்டு !!! ஆனாலும் பரவாயில்லை பில்டப் கம்மியாத்தான் இருக்கு!!!!, இதே இது ஆழ்வார்பேட்டை ஆண்டவராயிருந்தா, இந்த படத்துக்கு ஆஸ்கார் கொடுக்காவிட்டால் தமிழர்கள் ஆஸ்காரை புறக்கணிக்கவேண்டும் என்று மைக் பிடித்து இருமாந்திருப்பார்]
தோபிகாட் சமகாலத்தில் வந்த மிக நல்ல உள்ளடக்கம் கொண்ட இந்திய சினிமா!!!. பெண் இயக்குனர் கிரண் ராவுக்கு இது முதல் படம் என்றே என்னால் நம்ப முடியவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் அபாரமான ரசிப்புத் தன்மையும், பார்வையாளனின் ரசனைக்கு மதிப்பளிக்கும் பாங்குமே மிளிர்கிறது, நான்லீனியர் கதையமைப்புக்கள் அற்புதமான காட்சிகளாய் விரிகின்றது. இது போல யதார்த்த சினிமாக்கள் நம் நாட்டில் வரத்துவங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இப்படத்துக்கு ஆரம்பத்தில் கிடைத்த முதிர்ச்சியில்லாத பல திரைவிமர்சனங்களால் இவ்வளவு நல்ல படத்தை கையில் வைத்திருந்தும் பார்க்காமல் தவறவிட்டிருந்தேன். நேற்று சாருவின் நிகரற்ற விமர்சனத்தை படித்த பின்னர் உடனே பார்க்கத்துவங்கினேன், தோபி காட் இந்திய இயக்குனரின் மிக மிகத்தரமான , நிகரில்லாத, ஒரிஜினலான படைப்பு என்பேன். படத்தில் ஒரு வீடியோவுக்குள் வரும் கடந்தகால பாத்திரமான யாஸ்மினை ஒருவர் ஆயுளுக்கும் மறக்கமுடியாது, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலியின்-துர்கா, சாருலதாவின் - சாருலதா, ஜாப்பனீஸ் வைஃப் படத்தின் ஸ்நேஹமோய் போன்ற ஒப்பற்ற திரைக் கதாபாத்திரங்களைப் போல யாஸ்மினும் காண்போர் நெஞ்சில் கரைந்தேவிடுவார்.
இந்திய சினிமா ரசிகனின் ரசனையை, உள்வாங்கும் திறனை நன்கு மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கிலேயே எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. இப்படத்தை ஒருவர் ரசித்து ஒன்றி விட்டாரேயானால் எக்காலத்திலும் அவர்களின் கவனத்தை ரசனையை கமல்ஹாசன் ,மணிரத்னம் போன்ற சிரிப்பு திருடர்களின் படைப்புகள் சிதைக்கவே சிதைக்காது என்பேன். உலகநாடுகள் அனைத்திலும் திரைப்பட திருவிழாக்களுக்கென்றும், பேரலல் சினிமா ரசிகர்களுக்குமென்றே தனித்துவம் பொருந்திய படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை படைப்பவர்கள் ஆட்டியர்கள் என்றழைக்கப்படுவார்கள், அந்த கோஷ்டிக்குள் மணிரத்னம் போன்ற போலிகள் ராவணன் போன்ற நச்சுக்குப்பைகளை அங்கே தூக்கிப் போட்டு உட்கார இடம்பெற பார்ப்பர். அதற்கென்றே இயங்கும் சில ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவன முதலைகள் இந்த போலிகளுக்கு துணை நிற்கும்.
இந்த அதிமேதாவி போலிகளால் சமகாலத்தின் உண்மையான ஆட்டியர்களான பான் நலின், தேவ் பெனகல், நாகேஷ் குக்குனூர், தீபா மேத்தா, மீரா நாயர், அபர்னா சென், சுதிர் மிஷ்ரா போன்றோர் படங்களுக்கு கிடைக்கவேண்டிய ராஜ மரியாதை கிடைக்காமலேயே போகிறது, ஒரு ஆட்டியர் என்பவர் தன்னை எதன் பொருட்டும் சமாதானம் செய்துகொள்ளாதவர். அவர் முழு ஈடுபாட்டுடன் படைக்கும் ஒரு திரைப்படம் ஏகபோக வசூலை மட்டும் எதிர்பார்த்து செய்யப்படுவதேயில்லை, நல்ல கலையை, ரசனையை ,சமூக மாற்றத்தை வளர்க்க, நிகழ்த்த வேண்டுமென்ற உயரியநோக்கிலேயே இதுபோல திரைப்படங்களைத் அவர்கள் தயாரிப்பார்கள்,உலக நாடுகளில் இதற்கென்றே பல மாற்று சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் உண்டு. உலகெங்கிலும் மாற்று சினிமாவுக்கு என்று தேர்ந்த ரசிகர்கூட்டமும் உண்டு.
இந்தியாவில் அது போல நிறுவனங்கள் அதிகம் இல்லாத நிலையில். தன் சொந்த பணத்தில் ஆமிர்கானின் திரைப்பட நிறுவனம் இது போல மாற்று சினிமா முயற்சிகள் செய்வது மிகவும் பாராட்டத்தக்கது. படத்தில் கிரண் ராவின் இயக்கம் , உலகப்புகழ் பெற்ற இயக்குனர் அலஜென்ரோ கொன்சலேசின் ஆகச்சிறந்த படைப்புகளுக்கு நிகரான தரத்தை கொண்டிருக்கிறது. நடிப்பு என்றால் நடித்துக்கொட்டுவது என்றிருப்பவர்கள் இதைப் பார்த்து நடிப்பு பழகவேண்டும். மொத்தத்தில் இது இந்திய சினிமா சூழலில் முதலில் வெளிவந்த முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் என்பேன்.
உலகப்புகழ் பெற்ற இயக்குனர் அலஜென்ரோ கொன்சலேசின் ஆஸ்தான இசையமைப்பாளரான குஸ்டவோ சண்டவோலல்லா இருமுறை ஒரிஜினல் ஸ்கோருக்காக ஆஸ்கர் விருது வாங்கியவர், அமெர்ரோஸ் பெர்ரோஸ், பாபெல், 21 க்ராம்ஸுக்கு இசையமைத்து உலகப்புகழ் பெற்றவர் அவர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். நம் இந்திய திரைவல்லுனர்கள் உலகப்புகழ்பெற்ற பன்னாட்டு கலைவல்லுனர்களை, இந்தியப் படைபுகளில் பணியாற்ற அழைப்பது மிகவும் பெருமை என்பேன். இந்த 59வயது தென் அமெரிக்க இசையமைப்பாளர் இப்படத்தில் ஓர் இந்தியராக மும்பைவாசியாகவே சிந்தித்து இருக்கிறார், ஒரு இந்திய சூழலுக்கான இசையை உலகத்தரத்தில் வழங்கியிருக்கிறார். படத்தில் பாடல்கள் அறவே இல்லை. அவர் அமைத்த இசையை அது தரும் சுகானுபவத்தை ஒருவர் ஆயுளுக்கும் மறக்க முடியாது. இசையமைப்பாளரைத் தேர்வு செய்ததிலேயே இயக்குனர் கிரண் ராவ் ஜெயித்திருக்கிறார்.ஒவ்வொரு துறையிலும் புதுமையை புகுத்தியிருக்கிறார்,இருந்தும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கவில்லை என நினைக்கையில் இனி இப்படிப்பட்ட முயற்சிகள் பொய்த்துவிடுமோ?என்று கலக்கம் ஏற்படுகிறது. இனி ஐந்து கோடி கொடுத்தால் தான் உலகத்தரமான இசை கிடைக்கும் என்று யாரும் காத்திருக்கவேண்டியதில்லை .இந்திய படைப்புகளுக்கு வேலை செய்ய பன்னாட்டு கலைஞர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
இந்தப் படத்தை சாருவின் விமர்சனத்தை படித்துவிட்டு ஒருவர் பார்க்கத் துவங்கவேண்டும். படத்தின் சுவாரஸ்யம் கூடுமே தவிர குறையாது. உங்களுக்காக அந்த வரிகள்அப்படியே:-
இது போன்ற துயரமான அனுபவங்கள் எதுவும் இந்தி சினிமாவில் பொதுவாக நேர்வதில்லை. அதனால் தைரியமாக டோபி காட் என்ற படத்துக்குச் சென்றேன். கிரண் ராவ் என்பவரின் முதல் படம்; ஆமிர் கான் நடித்தது என்ற இரண்டு காரணங்களைத் தவிர இந்தப் படத்தின் பெயரும் என்னைக் கவர்ந்தது. மும்பை தாராவியில் இந்த டோபி காட்டை நேரில் பார்த்திருக்கிறேன். மறக்கவே முடியாத ஒரு அனுபவம் அது. நம் கூவத்தை ஒத்த ஒரு தண்ணீர்த் துறையில் நூற்றுக் கணக்கான துணி வெளுக்கும் தொழிலாளர்கள் கல்லில் துணிகளை அடித்துக் கொண்டிருந்தார்கள். பயந்து போய் ஓடி வந்தேன்.
டோபி காட்டின் ஒருசில நிமிடங்களிலேயே ஒரு சர்வதேசத் தரம் வாய்ந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. படத்தைப் பார்த்த பின்னர் அது பற்றிய விமர்சனங்களைப் படித்த போதுதான் கிரண் ராவ் ஆமிர் கானின் மனைவி என்ற விபரமும், டோபி காட் கிரணின் முதல் படம் என்பதும் தெரிந்தது. படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது அதன் இசையமைப்பாளர் யாராக இருக்கும் என்ற கேள்வி என்னை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. காரணம், இப்படி ஒரு பின்னணி இசையை இந்திய சினிமாவில் வெகு அரிதாகவே கேட்டிருக்கிறேன். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வந்த ஸ்லம்டாக் மில்லியனர், 127 hours ஆகிய படங்களில் கூட பாடல்கள் உண்டு. ஆனால் டோபி காட்டில் பாடல்கள் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்பு இருந்தும் சேர்க்கப்படவில்லை என்பதோடு பின்னணி இசை ஒரு தேர்ந்த ஐரோப்பியப் படத்தைப் பார்ப்பது போல் இருந்ததால் அதன் இசையமைப்பாளர் யார் என்று ஆர்வம் கொண்டேன். கடைசியில் என் யூகம் சரிதான். அமோரெஸ் பெர்ரோஸ், பாபெல் போன்ற அற்புதமான படங்களுக்கு இசையமைத்த – இரண்டு முறை ஆஸ்கர் பரிசு பெற்ற, அர்ஜெண்டினாவைச் சேர்ந்த Gustavo Santaolallaதான் டோபி காட்டின் இசையமைப்பாளர். ஒரு படத்தின் பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு டோபி காட் ஒரு உதாரணம்.
இப்படி ஒரு படம் தமிழில் இன்னும் கால் நூற்றாண்டு ஆனாலும் சாத்தியம் இல்லை என்று தோன்றுகிறது. ஏனென்றால், ஒரு சூப்பர் ஸ்டார் அளவில் உள்ள ஆமிர் கான் தன் ஹீரோ அந்தஸ்தை விட்டு விட்டு படத்தில் வரும் நான்கே பாத்திரங்களில் ஒருவராக வருகிறார். அதிலும் அந்த நான்கு பாத்திரங்களிலேயே ஆமிரின் ரோல்தான் ஆகக் கடைசியான – சாதாரண பாத்திரமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே சினிமாதான் என் உயிர் மூச்சு என்று சொல்லிக் கொள்ளும் ஹீரோ நடிகர்கள் தங்கள் ஈகோவை விட்டு விட்டு ஒரு நல்ல சினிமாவில் இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க சம்மதிப்பார்களா? ஆனால் அப்படி அவர்கள் சம்மதித்தால் அந்தக் கணத்திலேயே உலகப் புகழ் பெற்று விடலாம் என்பது மட்டும் நிச்சயம். ஏனென்றால், ஆமிர் நடித்த படங்களிலேயே டோபி காட்தான் அவருக்கு சர்வதேசப் புகழை வாங்கிக் கொடுத்திருக்கிறது.
தமிழில் கதை இல்லை என்று சொல்லி நூற்றுக் கணக்கான ஹாலிவுட், ஜப்பான், கொரியப் படங்களிலிருந்து இங்கே கள்ளக் காப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் டோபி காட்டின் கதை நாலே வாக்கியங்களில் அடங்கி விடக் கூடியது. முன்னா என்ற இளைஞன் சினிமாவில் சேருவதற்காக கிராமத்திலிருந்து மும்பை வந்து டோபியாக வேலை செய்கிறான். தற்செயலாக அவன் ஷாய் என்ற பெண்ணை சந்திக்கிறான். ஷாய் அமெரிக்காவிலிருந்து மும்பை வந்து அந்த நகரத்தைப் புகைப்படங்களாக எடுக்கும் ஒரு அமெச்சூர் புகைப்படக்காரி. அருண் (ஆமிர்) ஒரு ஓவியன். விவாகரத்து ஆகித் தனியாக வாழும் அவன் ஒரு புதிய வீட்டுக்குக் குடி போகும் போது அங்கே ஒரு விடியோ கேஸட்டைப் பார்க்கிறான். அது அந்த வீட்டில் முன்பு குடியிருந்த யாஸ்மின் என்ற பெண் தன் குடும்ப வாழ்க்கையைப் பற்றித் தன் சகோதரனுக்குச் சொல்லும் விடியோ டேப். யாஸ்மினாக நடிக்கும் க்ரித்தி மல்ஹோத்ரா கடைசி வரை படத்தில் நேரடியாக வருவதே இல்லை. அவளே தன்னுடைய கைக்கேமராவில், பிம்பம் நகராமல் ஒரே கோணத்தில் எடுக்கப்பட்ட விடியோ டேப்பின் மூலம் அருணின் தொலைக்காட்சிப் பெட்டியில் மட்டுமே வருகிறாள். (நினைவு கூரவும்: LSD என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட லவ், செக்ஸ் அவ்ர் தோக்கா: அந்தப் படம் முழுவதுமே Static shots மூலம் எடுக்கப்பட்டது). ஷாய், முன்னா, அருண், படத்தில் நேரடியாக வராத யாஸ்மின் இந்த நால்வரின் வாழ்வில் நடக்கும் சுவாரசியமற்ற சம்பவங்களே டோபி காட்.
சுவாரசியமற்ற சம்பவங்கள் என்று கூறியதன் காரணம், நம்முடைய அன்றாட வாழ்வு ஒன்றும் சினிமாவில் வருவதைப் போன்ற திடீர் திருப்பங்களைக் கொண்டிருக்கவில்லை. ஒரு டோபியின் வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்? ஆனாலும் டோபி காட் எப்படி ஒரு அற்புதமான கலாசிருஷ்டியாக உருவாகியிருக்கிறது என்பதுதான் கலையின் மேஜிக். அது சினிமாவில் பல்வேறு காரணிகளால் சாத்தியமாகிறது. முதலில், தேர்ந்த நடிப்பு. நடிகர்கள் பாத்திரமாக மாறாமல் தங்களுடைய சொந்த அடையாளத்தை முன்னிறுத்துவது தேர்ந்த நடிப்பு அல்ல. கமல் ஒரு நாஸ்திகர். அதனால் கமல் நடிக்கும் படத்தின் ஹீரோ கமல் நாஸ்திகராக இருப்பார். கமல் நல்ல டான்ஸர். அதனால் அவருடைய படத்தில் சம்பந்தமே இல்லாமல் சில காட்சிகளில் டான்ஸ் ஆடுவார். (மன்மதன் அம்புவில் ஒரு ஐரோப்பிய நகரின் தெரு ஒன்றில் டான்ஸ் ஆடிக் கொண்டே போவார். நாம் இப்படிச் செய்தால் அதைக் காண்பவர்கள் நம்மை என்னவென்று சொல்வார்கள்? டோபி காட்டில் இந்த அசட்டுத்தனம் எதுவும் கிடையாது. அருணாக வரும் ஆமிர் அமெரிக்காவிலிருந்து வந்த ஷாய் என்ற அழகான பெண்ணைக் காதலிப்பதில்லை. ஏன்? நம்முடைய நேர் வாழ்வில் நாம் காணும் அழகான பெண்களையெல்லாம் காதலிக்கிறோமா?
ஒரு சினிமா கலாசிருஷ்டியாக மாறுவதற்கான இன்னொரு காரணம், அந்தப் படைப்பின் எந்த அம்சத்திலும் மிகைத்தன்மை இல்லாதிருப்பது. டோபி காட்டின் நான்கு கதாபாத்திரங்களும் அவரவர் போக்கில் ஒருவரை ஒருவர் வெவ்வேறு தளங்களில் சந்திக்கிறார்கள். அதிலும் யாஸ்மின் என்ற பாத்திரம் வெறும் ஒளிப்பதிவு நாடாவில் தெரியும் ஒரு பிம்பம் மட்டுமே. அவள் கதையை அருண் கேட்பதும் பார்ப்பதும் கூட அவளுக்குத் தெரியாது. டோபி காட் சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரு படைப்பாக மாறியதற்கு மற்றொரு காரணம், இதில் வரும் இன்னொரு பாத்திரம். அது, மும்பை என்ற நகரம். இதுவரை இந்திய சினிமாவில் ஒரு ஊர் இவ்வளவு உயிர்ப்புடன் காண்பிக்கப்பட்டதில்லை. மீரா நாயரின் மான்சூன் வெட்டிங்கையும் மனதில் வைத்துக் கொண்டே இதை எழுதுகிறேன். தில்லியை வெகு கவித்துவமாகக் காண்பித்த படம் அது. டோபி காட்டில் வரும் நான்கு பாத்திரங்களை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து மும்பை நகரை அதன் அத்தனை அழகோடும் அசிங்கத்தோடும் காண்பித்திருக்கிறார் கிரண் ராவ். அவர் இந்தப் படத்திற்கு இரண்டு தலைப்புகளைக் கொடுத்திருக்கிறார். ஒன்று, டோபி காட்; இன்னொன்று, Mumbai Diaries. இந்தப் படத்தைப் பார்த்த போது என்றாவது ஒருநாள் சென்னை நகரமும் இவ்வளவு உயிரோட்டத்துடன் தமிழ் சினிமாவில் இடம் பிடிக்குமா என்ற ஏக்கம் ஏற்பட்டது.
டோபி காட்டின் மற்றொரு சிறப்பு, இது மிகக் குறைந்த செலவில், கெரில்லா படப்பிடிப்பு என்ற உத்தியின் மூலம் எடுக்கப்பட்டது. அதாவது, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், ஒரு குட்டி ராணுவ அணிவகுப்பு அளவுக்கு ஆள் படை அம்புகளும் விளக்குகளும் ஜெனரேட்டர்களும் இல்லாமல், இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே, நிஜமான சூழலில், படம் எடுக்கப்படுகிறது என்ற விஷயமே யாருக்கும் தெரியாமல் எடுப்பதுதான் கெரில்லா ஷூட்டிங். ஸ்டார்ட், ரோலிங், கட், இடையில் இயக்குனர் போடும் சுத்தத் தமிழ் வார்த்தைகள் என்ற எந்த சத்தமும் இருக்காது. ட்ராலிகள் இயங்காது. பூதாகாரமான விளக்குகள் இல்லை. சினிமா படப்பிடிப்பு என்று நாம் அறிந்திருக்கும் எந்த அடையாளமும், paraphernaliaவும் இல்லாமல் ரகசியமாக எடுக்கப்படுவதே கெரில்லா ஷூட்டிங். இப்படி எடுப்பதால் மட்டுமே ஒரு நகரத்தை அதன் உயிர்த்தன்மை கெடாமல் காண்பிக்க முடியும். அந்த வகையில் டோபி காட்டை எல்.எஸ்.டி.க்கு அடுத்தபடியாக இந்திய சினிமாவில் நடந்திருக்கும் புரட்சி என்று சொல்லலாம். உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளரான குஸ்தாவோ சந்த்தாவோலால்யாவை வைத்து எடுக்கப்பட்டும் டோபி காட்டின் பட்ஜெட் 11 கோடிதான். வசூல், படம் வெளிவந்த இரண்டே தினங்களில் 11 கோடியைத் தாண்டி விட்டது. ஆனால் இங்கே 150 கோடியில் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக குப்பைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
இடைவேளை இல்லாமல் 95 நிமிடம் ஓடும் டோபி காட் நல்ல சினிமாவை நேசிப்பவர்களுக்கு ஒரு அற்புத அனுபவம்.
மிக்க நன்றி :- உயிர்மை
மிக்க நன்றி :- சாரு ஆன்லைன்
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-