உலக சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத வீடியோ ப்ளேயர் - bsplayer

அருமை நண்பர்களே!!!

நலம் தானே?!!! 2013 ஆம் வருடத்தின் கடைசி தினத்தில் இருக்கிறோம், இன்னும் சில மணி நேரங்களில் 2014 ஆம் வருடம் பிறக்க இருக்கிறது, இத்தருணத்தில் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.புத்தாண்டு எல்லா செல்வங்களையும் அள்ளித் தரட்டும்,லோகம் ஷேமம் அடையட்டும்.தரித்திரம் இன்றோடு ஒழியட்டும் என்று இறைவனை வேண்டி புத்தாண்டை துவக்குவோம்.

====000====


முன்பு நான்  KM playerல் தான் படங்களை கணிணியில் பார்த்துக்கொண்டிருந்தேன், அதன் தற்போதைய எடிஷன் சீரழிந்து விட்டது, ஓயாமல் விளம்பரங்கள்,தேவையில்லாத ஸ்கின்கள் என பாதியிடத்தை அடைத்துக்கொண்டது,பழைய வெர்ஷனுக்கு திரும்பினாலும் ,அதில் நிறைய BUGS கொடுத்து அதை உபயோகிக்க விடாமல் செய்தனர்,VLC மீடியா ப்ளேயர் உபயோகித்தால் அதில் toggle keys உபயோகித்து படத்தை முன்னேயோ பின்னேயோ தள்ள முடிவதில்லை,மவுஸைக் கொண்டு ஸ்க்ரோல் அப் டவுன் செய்தால் வால்யூம் கூட்டவோ குறைக்கவோ முடியவில்லை,வேறு என்ன ப்ளேயர்? இதை சரி கட்டும் எனப் பார்த்ததில் இதே போன்ற சிறப்பம்சத்தை கொண்ட GOM ப்ளேயர் இருந்தது,ஆனால் அதில் சப்டைட்டில்கள் தோன்றுகையில் அப்படியே நின்றுவிடும்,அதனால் அடுத்து வரும் சப்டைட்டில்கள் ஒன்றுடன் ஒன்று ஓவர் லாப் ஆகி பெரிய தொல்லையைத் தரும்.

இப்போது மிக அருமையாக அதே கே எம் ப்ளேயரின் சிறப்பம்சங்களைக் கொண்ட BS player ஐ உபயோகிக்கிறேன்,மிக அருமையாக இருக்கிறது,இதில் ஒரு சாதகமாக,படம் துவக்கிய உடனே இது அதற்கான சப்டைட்டிலை தானே தேடி,ரிசல்டுகளை காட்டி,மிகவும் பொருந்தி வருவதை நம்மிடம் காட்டி ,அதை செக் செய்ய சொல்கிறது,நாம் செக் செய்த உடனே அது தானே அதை நீநேம் செய்து,படத்தை சப் டைட்டிலுடன் ப்ளே செய்கிறது,மிகவும் ஒர்த்தான  இலவச ப்ளேயர்,படத்தை ஃபுல் ஸ்ட்ரெட்ச் செய்யலாம்,ஸ்பேஸ் பார் தட்டி பாஸ் / ப்ளே செய்யலாம்,

மவுசை ஸ்க்ரால் செய்து வால்யூம் கூட்டலாம்/குறைக்கலாம்,மவுஸ் ஸ்க்ராலை உபயோகித்து படத்தின் அளவை கூட்டலாம் குறைக்கலாம், டாகிள் கீ உபயோகித்து படத்தை ரிவைண்ட் ஃபார்வர்ட் செய்யலாம்,சப் டைட்டிலை படத்தின் மீது போடாமல்,அது படத்தின் கீழே உள்ள பேக்ரவுண்டில் தான் தெரிய வைக்கிறது, உலக சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத ப்ளேயர் இது. இதை எப்போதுமே ஃபைல் ஹிப்போ .காமில் சென்றே தரவிறக்கவும்,ஒன்ஷாட் டவுன் லோடுக்காக இந்த தளம்.
http://www.filehippo.com/download_bsplayer/

வொர்க்கிங்மேன்ஸ் டெத் - கோஸ்ட்ஸ் [Workingman's Death - Ghost's][ஆஸ்திரியா][2005][16+]



Workingman's Death என்னும் ஆவணப்படத்தில் Ghosts என்னும் இரண்டாம் பகுதி பார்த்தேன், இது  Ijen என்னும் ஊரில்,இந்தோநேசிய எரிமலையின் சல்ஃபர் சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளின் கதை. எரிமலை கக்கும் கந்தகத்தின் வெப்பம் எத்தகையது என சொல்ல வேண்டியதில்லை,ஏதோ ஒரு தர்மத்துக்கு கட்டுப்பட்டோ,எதனாலோ உந்தப்பட்டோ இத்தனை கடினமான வேலையை லயித்து செய்கின்றனர்.

இந்தப் படத்தில் இருப்பவர்கள் மூங்கில் கூடைகளில் தம் தோளில் சுமந்திருப்பது ஸல்ஃபர் பாறைகள்,ஒரு சுரங்கத் தொழிலாளி சராசரியாக 70 கிலோ முதல் 115 கிலோ வரை ஸல்ஃபரை இந்த எரிமலை சுரங்கத்தின் அடிவாரத்தில் இருந்து அதன் முகட்டிற்கு சுமந்து வருகிறார்,இது சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மிகவும் அபாயகரமான பாதை,போகும் வழியில் இந்த தொழிலாளிகள் பாரத்தை அங்கங்கே தென்படும் பெரிய கல்லின் மீது இறக்கி வைத்து இளைப்பாறுகின்றனர்.


செஞ்சி மலையில் நாம் ராஜா ராணிக் கோட்டைக்குச் செல்ல ஏறியிருப்போம்,அதைவிட மிகக் கடினமான பாதை அது,கரணம் தப்பினால் மரணம் என்னும் நிலை,தவிர காலை தவறி வைக்க அவர்கள் எரிமலைக் குழம்புக்குள் மூழ்கி விடும் அபாயமும் உண்டு, இந்த இந்தோநேசிய உழைப்பாளிகள் அன்றைய வேலை முடிவில் பெறுவது சொற்ப கூலியே,இவர்கள் சுமக்கும் அந்த இரு மூங்கில் கூடைகளும் அதை இணைக்கும் கடினமான நன்கு வளையக்கூடிய சீசன் செய்த இரு மூங்கில் பட்டைகளும் என இதன் எளிய ஆனால் உறுதியான வடிவமைப்பு பிரமிக்க வைக்கிறது,கூடை எத்தனை ஆடினாலும் வளைந்தாலும் உடைத்துக் கொண்டு தெரிப்பதில்லை என்பது அதிசயம் தான்.
 
மலையடிவாரத்திலிருந்து முட்டி தெரிக்கும் கடும் பயணத்தின் முடிவில் மலை முகட்டிற்குச் செல்லும் இவர்கள் அங்கே மலை முகட்டின் மேலே குழுமியிருக்கும் டூரிஸ்டுகள்,இவர்களின் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று போட்டோ எடுத்துக் கொள்வதை  பொருட்படுத்துவதில்லை, முகம் சுளிப்பதில்லை,அவர்களைப் பார்த்து பொறாமைப் படுவதில்லை.ஸல்ஃபர் ஸ்லாபுகளை சிந்தாமல் சிதறாமல் எடைபோடும் மையத்தில் கொண்டு சென்று எடைபோட்டு,அதை காத்திருக்கும் லாரிகளில் கொண்டு சென்று கொட்டும் வரை,இவர்களின் கவனம் எங்கும் சிதறுவதில்லை,

சுமைதூக்கும் தொழிலாளிகளில் சிலர் டூரிஸ்டுகளுக்கு உதவிகள் கூட செய்கின்றனர், டூரிஸ்டுகள் ஸல்ஃபர் நிரம்பிய கூடைக்காவடியை தாங்கள் புஜபலம் கூட்டி தூக்குவது போல பாவனை செய்ய,அதை அந்த சுமை தாங்கிகள் அவர்களிடமிருந்து கேமரா பெற்று போட்டோ எடுத்தும் தருகின்றனர்,அதற்கு டூரிஸ்டுகள் விருப்பப்பட்டு தருவதை வாங்கிக்கொள்கின்றனர்.

அப்படி இவர்கள் ஸல்ஃபர் ஸ்லாபுகளை லாரியில் கொண்டு கொட்டியவுடன் ,அன்றைய தின வேலை முடிவில் இவர்கள் அந்த காவடிக் கூடைகளை ஒரு பெரிய மரத்தின் கிளைகளை நோக்கி வீச,அது அங்கே போய் மாட்டிக்கொள்கிறது,மறுநாள் யாராவது ஒருவர் ஏறி அதை எடுத்து கொடுப்பார் என நினைக்கிறேன். இந்த ஸல்ஃபர் சுமைதாங்கிகளில் ஒரு குற்றவாளி தன் மாநிலத்தில் தன்னை போலீஸ் தேடுவதால் இங்கே இங்கே ஒளிந்து மறைந்து ஸ்லஃபர் சுமப்பதாக சொல்கிறார்,

அவர் சுமை தூக்கும் நேரத்திலேயே, இதே சல்ஃபர் பாறை குழம்புகளை  அழகாக பெட் பாட்டில்களின் அடியை நறுக்கி அதில் மெழுகு போல வடிய விட்டு base போல செய்து  அந்தக் குழம்பில் சல்ஃபர் பாறைகளை சிற்பம் போல உடைத்து ,அதை அந்த base ல் சொருகி விற்கிறார்,இதன் மூலம் இவருக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.ஒரு சிற்பம் 20 ருப்யா எனச் சொல்லும் இவரிடம்,ஒரு  வெளிநாட்டுப் பயணி 10 ருப்யாவைக் காட்டி, தருவாயா? என கறாராகக் கேட்க,இவர் மறு பேச்சு பேசாமல் கொடுக்கிறார், பின்னர் அந்த சிற்பத்துடன் தன்னை ஒரு போட்டோ எடுக்கச் சொல்லி தன் சிற்றின்பத்தையும் தணித்துக் கொள்கிறார்.

இன்னொருவர் bon jovi  பேண்டின் ஆதர்ச ரசிகர், அந்த பேண்டின் நால்வர் பெயரை Jon Bon Jovi, David Bryan,Tico Torres,Richie Sambora என மனப்பாடமாக சொல்கிறார்,பேண்ட் என்றால் என்ன என இன்னொரு சுமைதாங்கிக்கு விளக்குகிறார் பாருங்கள்,மிக அருமையான இடம் அது,உலகில் நாம் தான் வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கும் மாந்தர், நம்மை தான் கடவுள் மிகவும் சோதிக்கிறார்,  என நினைத்திருக்கும் யாரும் இந்த ஆவணப்படத்தை அவசியம் பார்க்க வேண்டும், வாழ்வில் கிடைத்ததைக் கொண்டு திருப்தியுற நல்ல தெளிவு கிடைக்கும்.

இது தவிர  4 ஆபத்தான தொழில்கள் இந்த ஆவணப்படத்தில் வருகின்றன, ஒவ்வொன்றாக எழுதுகிறேன்.இதில் முதல் பகுதியான ஹீரோஸ் பற்றி படிக்க இங்கே செல்லவும்.

அவசியம் இந்த ஆவணப்படத்தைப் பாருங்கள்,உங்கள் 22 நிமிடம் பயனுள்ளதாக செலவாகும்.

வொர்க்கிங்மேன்ஸ் டெத் - ஹீரோஸ் [Workingman's Death - Heroe's][ஆஸ்திரியா][2005][16+]

வொர்க்கிங்மேன்ஸ் டெத் ஆவணப்படத்தின் முதல்பகுதியான ஹீரோஸ் மீண்டும் பார்த்தேன், இந்தப் படம் உக்ரெய்னின்  Donets Basin என்னும் பகுதியில் இயங்கும் சட்டவிரோதமான நிலக்கரிச்சுரங்க தொழிலாளிகளின் கதையை விரிவாகப் பேசுகிறது, Michael Glawogger இயக்கிய இந்த ஆவணப்படம் உலக சினிமா ரசிகர்கள்,ரசிகரல்லாதோர் எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய படைப்பு. இயக்குனரின் நெஞ்சுரத்தை ஒவ்வொரு சினிமா இயக்குனரும் ரோல்மாடலாகக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்பேன். உயிரைக் கொடுத்து படம் எடுப்பது என்று நான் இதைத் தான் சொல்லுவேன்.

மேலும் இது ஒரு நெஞ்சை உருக்கும் படைப்பு , உக்ரைன் அரசு தன் நிலக்கரிச் சுரங்க தொழிலாளிகளுக்கு பல மாத சம்பள பாக்கி வைத்துள்ளதால், அவர்களால் அங்கே தொடர்ந்து வேலை செய்ய விரும்பாத, முடியாத நிலையில், கடும் குளிரில், கணவன் மனைவி சகிதமாக ,அங்கே அந்த நிலக்கரிச் சுரங்கத்துக்குள் நிலக்கரி உடைத்து அள்ள சட்டவிரோதமாக ஊடுறுவுகிறார்கள்,

இவர்களால் வெடி வைத்தோ , பெரிய ட்ரில்லிங்,பொக்லைன் எந்திரங்களைக் கொண்டோ சுரங்கம் தோண்ட முடியாது, முதல் காரணம் வசதியின்மை, இரண்டாவது இவர்கள் செய்வது சட்ட விரோதம். ஆகவே இவர்கள் மலையை வெளிப்பார்வைக்குப் பார்த்தால் உடைத்தது போலத் தெரியாத வண்ணம், மலையை படுக்கை வாட்டில் குடைகின்றனர், சுமார் ஒன்றரையடி உயரத்துக்கு பெருச்சாளி வலை பறிப்பது போல மெல்ல கையுளி, சுத்தியல்,சம்மட்டி கொண்டு நாள் ஒன்றுக்கும் சுமார் 8மணி நேரம் படுத்த, ஊர்ந்த வண்ணம் வேலை செய்கின்றனர். ஒருவர் வியர்த்தாலோ,அரித்தாலோ திரும்பக் கூட முடியாது,

உள்ளே வெளிச்சத்துக்கு தங்கள் தலையில் அணிந்திருக்கும் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட டார்ச்சையே பெரிதும் நம்பியிருக்கின்றனர், அங்கேயே படுத்த வண்ணம் குழுமி சிகரெட் புகைக்கின்றனர், நீரும் உணவும் அருந்துகின்றனர், நிலக்கரியை ஒருவர் வெட்டி பாளம் பாளமாக விழுந்ததை, உடனே பின்னால் நகர்த்த அதை அடுத்தவர் பின்னே நகர்த்துகிறார்,இப்படியே அது சவப்பெட்டி போன்ற ஒரு பெட்டியில் சேருகிறது,இப்படி 4 தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு நாளைக்கு 4 சாக்குப் பை வரை நிலக்கரியை வெட்டி எடுத்து, அதை அந்த குன்றின் முகட்டுக்கு மேலே உள்ள கை ராட்டினத்தைச் சுற்றி இயக்கி மேலே ஏற்றுகின்றனர்,

பின்னர் அதை அங்கே இருக்கும் ஸ்டெப்னி கொண்ட யூகால் ரக மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்குச் செல்கின்றனர்,எல்லாவற்றிலுமே குழுவாகவே ஈடுபடுகின்றனர்,பாகம் பிரிப்பதையும் சரிசமமாக பங்கிட்டுக்கொள்கின்றனர்,இந்த ஆபத்தான திருட்டின் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தான் இவர்கள்,இவர்களின் குடும்பம் வயிறு வளர்க்க வேண்டும் என்பது துயரம்.

இதில் பெரும்பாலானோர் பட்டப்படிப்பு படித்தவர்கள் என்பது வேதனையான விஷயம்,தாங்கள் செய்யும் வேலைக்கு தாங்கள் ஓவர் குவாலிஃபைட் என்னும் உண்மையை நன்கு அறிந்தும் இருக்கின்றனர், வேலையில்லாத் திண்டாட்டத்தால் குடும்பம் பட்டினி கிடப்பதற்கு இது மேல் என்கின்றனர், இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டஆண்டு 2004,அனைவருமே நன்றாக வாழ்க்கையை வாழ்ந்தவர்கள்,ஆனால் சேமிக்க மறந்தவர்கள்.அரசு வேலை தந்த அனைத்தையுமே அன்றாட வாழ்க்கையை ஓட்டவும்,குழந்தைகள் கல்விக்கு,கேளிக்கைக்கு  என்று  செலவிட்டு வந்திருக்கின்றனர்,

பல நிலக்கரி சுரங்க தொழிலாளர் குடும்பங்களில் இது தான் நிலைமை, உயிரை பணயம் வைத்து உழைத்தால் தான் நாள் ஒன்றுக்கு தலைக்கு 100கிலோ நிலக்கரி கிடைக்கும். என்னால் இந்த குறும்படத்தை நிம்மதியாக பார்க்க முடியவில்லை, மூச்சு திணறல் வருவது போன்றும்,நானே அந்த நிலக்கரி குன்றின் பரணுக்குள் மாட்டியது போன்றும் உணர்ந்தேன், இவர்கள் வாழ்க்கை எத்தகைய பேரிடரைக் கொண்டிருக்கிறது?,

 ஆனால் இவர்கள் அதிலும் அருகியிருக்கும் நல்லவற்றை தேடிப்பிடித்து அந்த தருணத்தையும் கொண்டாடுகின்றனர் என்பது தான் யதார்த்தமாக இருக்கிறது.
பழைய வீர்யமிழந்த ஓட்காவும்,கரியால் மூடிய தேகத்தை தேய்த்துக் கழுவ மனைவியால் வைத்துத் தரப்படும்  வெந்நீரையும், பசித்த வேளைக்கு கிடைக்கும் ப்ரட் துண்டங்களும், ஆறிய, எண்ணெய்யில் பொரித்த அரிசிக்கொழுக்கட்டைகளையும் இவர்கள் பெரிதும் கொண்டாடுகின்றனர்.

இதில் இன்னொரு நகை முரண்,அரசு 1930களில் தொழிலாளிகள் வர்க்கத்தை ஊக்கப்படுத்தி,அதில் கிளம்பிய தொழிற்புரட்சியைக் கொண்டு உற்பத்தியைக் பெரிதும் ஊதிப் பெருக்கி , உக்ரைனின் கனிம வளங்கள் ஏகத்தை வாரிவிட்டிருக்கின்றனர்,நாடு கடும் பொருளாதார வீழ்ச்சியும் கண்டாயிற்று, நாடும் சிதறுண்டும் போயாயிற்று,இருந்தும் அங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் நிலக்கரிச் சுரங்க தொழிலாளி Alexey Stakhanov ன் ராட்சத சிலை, அங்கேயே பல தொழிலாளிகளின் துயரக் கதைகளுக்கு சாட்சியாக நின்றபடி இருக்கிறது, Alexey Stakhanov என்பது அசகாய சாதனை செய்த ஒரு நிலக்கரிச் சுரங்க தொழிலாளியாம்,அவரைப் பற்றிப் படிக்க இங்கே செல்லவும்

 இன்றும் நிறைய சுரங்கத் தொழிலாளர்கள், உழைப்பே கடவுள், ஆலையே கோவில், வேலையே உய்வு தரும், என நம்புகிறவர்கள் தங்கள் திருமணத்தை அங்கே அந்த சிலைக்கு முன்னர் நின்று செய்துகொள்கின்றனர்.அந்த சிலைக்கு மாலை மட்டும் தான் யாரும் அணிவிக்கவில்லை.ஆனால் அதன் பீடத்தில் மலர்கொத்துக்களை சொருகி பூரிக்கின்றனர்.

60 வயதைக் கடந்த நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி ஒருவர் முறையாக ஓய்வு பெறுவதை நாம் வியந்து பார்க்கிறோம், அத் தொழிலாளி தன் சுரங்க சீருடை, தொப்பி, பூட்ஸுகள், கவசங்கள், போன்றவற்றை அந்த சதுக்கத்தில் வைத்து நீண்ட பிரயத்தனத்துக்குப் பின்னர் கொளுத்த, சகாக்கள்,அவருக்கும் தங்களுக்கும் ஓட்காவை ஊற்றிக்கொண்டு சியர்ஸ் சொல்ல,அந்த கதகதப்பில் அந்த முதிய தொழிலாளி ஓய்வு பெறுகிறார்.

வேலை செய்கிறவனுக்கே சாப்பாடும் உறைவிடமும் கேள்விக்குறி என்னும் நிலையில்,ஓய்வு பெற்றவர் நிலை என்ன ஆகும்? என நாம் கவலைப் படுகிறோம்,ஆனால் அவர் அதைப்பற்றி கவலைப்படாமல் ஓட்காவை ரசித்துப் பருகுகிறார்.அவசியம் இந்த ஆவணப்படத்தைப்  பாருங்கள்,உங்கள் 22 நிமிடம் பயனுள்ளதாக செலவாகும்.

ஷார்ட்ஸ் [ Shorts][2013][ஹிந்தி] அனுராக் காஷ்யப்



ஷார்ட்ஸ் திரைப்படம்   அனுராக் காஷ்யபின் தயாரிப்பில் ஐந்து புதுமுக இயக்குனர்கள் இயக்கிய ஐந்து குறும்படங்களின் தொகுப்பாகும். ஐந்து கதைகளுமே  மும்பை நகர வாழ்கையை சொல்லும் படைப்புகள். ஐந்துமே சமுதாயத்தில் பெண் எதிர்கொள்ளும் அவலத்தை சொல்லும் படைப்புகள் என்பது இவை கொண்ட ஒற்றுமையாகும்.

1.முதல் குறும்படம் இயக்குனர் ஷ்லோக் ஷர்மாவின்  சுஜாதா, இன்செஸ்ட் சகோதரன் [பெரியம்மா மகன்] காமப் பிடியில் மாட்டிக்கொண்டு சிறுவயது முதல் அவன் மிரட்டலுக்கும்,  அடிக்கும் பயந்து ஒவ்வொரு நொடியும் நடுங்கிக்கொண்டிருக்கும் இளம் பெண் சுஜாதாவின் கதை, சுஜாதாவின் தூரத்து சகோதரி புனேவுக்கு போகிறாயா? அங்கே நல்ல  வேலை வாங்கித் தருகிறேன் எனக் கேட்டும் போக மறுத்து, வாழ்க்கையை அதன் போக்கிலேயெ எதிர்கொள்ள நினைக்கிறாள்,


இப்போது 2 வருடங்களாக சகோதரனின் பார்வையிலேயே படாமல் மும்பையின் நெரிசலான ஸியோன் பகுதியில் வீடு எடுத்து தனியே இருக்கிறாள். வீட்டிலேயே பின்னால் இருக்கும் திறந்த வெளி மொட்டை மாடிப்பகுதியில் சமையல் தொழில் செய்து கேரியர் கட்டிக்கொடுத்து பஞ்சம் பிழைக்கிறாள், சமூகத்தில் பெண்ணை வேட்டையாட தயாராக இருக்கும் வல்லூறுகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறாள். இங்கும் அந்த தருதலை ஒரு மழைநாளில் மோப்பம் பிடித்து வந்தவன், இவளை மீண்டும் சித்திரவதை செய்யத் துவங்குகிறான், சம்பாத்தித்த பணத்தை திருடிக்கொள்கிறான்,

மூன்று வேளையும் ஆக்கி வைத்ததை வக்கனையாக தின்று விடுகிறான், இவளை சமையல் செய்ய விடாமல், உடலெங்கும் அவன் கைகள் ஊறுகின்றன, இவள் தூரத்து சகோதரி வெர்சோவா என்னும் பகுதியில் இருக்கும் தெரிந்த போலீஸ்காரனிடம் நீ போய் உதவி கேள் நானும் அவனிடம் சொல்கிறேன் என்கிறாள், ஆனால் அவன் இவளுக்கு உதவுவதில்லை, ஸியோன் என் சரகமல்ல, இது பெட்டி கேஸ்,தவிர உறவு முறை,அவன் அம்மாவிடம் சொல்லி கண்டிக்கச்சொல் என விட்டேத்தியாக சொல்லி அனுப்புகிறான்.

அன்றும் அதே போல வாடிக்கையாளருக்கு ஆக்கி பூட்டி வைத்த டிஃபன் கேரியரை திறந்து உண்ணத் துவங்கியவனை,பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்த சுஜாதா என்ன செய்தாள்? என்பது தான் மீதிக் கதை,பெண்கள் என்று துணிகிறார்களோ? அன்று தான் அவர்களின் மீதான வன்முறை ஓயும், என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உளமாற சொல்லி வருகிறார் அனுராக் காஷ்யப் , ஹ்யூமா குரேஷி தான் இதில் சுஜாதா, ஐந்தில் எனக்கு மிகவும் பிடித்த கதை.

ஹ்யூமா மிகத்தேர்ந்த நடிகை, உழைத்து கண்ணியமாக வாழ எண்ணும் கதாபாத்திரம், மனுஷி அசத்தியிருக்கிறார். ஒரு காட்சியில் அவரின் சகோதரிக்கு குதிகால் மஸாஜ் செய்யும் காட்சி, எந்த ஒரு நடிகையும் செய்ய யோசிக்கும் ஒரு காட்சி அது, ஹ்யூமா குரேஷி தன் பற்கலால் அவரின் சகோதரியின் குதிகாலை அழுந்தக் கவ்வி ஒத்தடம் கொடுக்கிறார்,எந்த லஜ்ஜையுமில்லாமல் மிக அருமையாக செய்திருக்கிறார்,

இவர் சமையல் செய்யும் காட்சிகள் ,நன்கு தீஸீஸ் செய்து தொழில் முறை சமையல்காரி போலவே தோன்றியது சிறப்பு, ஹ்யூமா  தொளதொளவென ஒரு நைட்டி போட்டுக்கொண்டு, அதனுள்ளே சல்வார் பேண்டும் அணிந்து மேலுக்கு ஒரு துப்பட்டாவும் அணிந்தே காணப்படுகிறார்.  ஆண் வக்கிரத்தால் இளமையைக் கொன்று நடைபிணமான ஒரு கதாபாத்திரத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார்  . படத்தின் வசனங்கள் ஒரே ஒரு A4 பேப்பர் தான் இருக்க வேண்டும். டே லைட்டில் எடுக்கப்பட்ட நீண்ட காட்சிகளைக் கொண்ட படம்.தேவையான இடங்களில் மட்டுமே கச்சிதமாக ஒலிக்கும் பிண்ணனி இசை, லைவ் ரிகார்டிங், மற்றும் கெரில்லா  படப்பிடிப்பு யுத்திகளை தன்னுள் கொண்ட குறும்படங்கள் இவை,


2.இரண்டாம் படமான சித்தார்த் குப்த் இயக்கிய  எபிலாக் [முடிவுரை] இது படத்துக்கு மிகவும் பொருத்தமான பெயர், மும்பையின் ஒரு மேல்தட்டு வர்க்கம் வசிக்கும் டூப்ளே ஃப்ளாட் ஒன்றில் ரிலேஷன் ஷிப்பில் இருக்கும் தம்பதிகள், உறவு கசந்துவிட்ட பின்னரும் பிரியாமல் வாழ்கின்றனர், காதலனுக்கு  ஈகோ பிரிவை அவள் முதலில் சொல்லட்டும் என்றிருக்கிறான், அவளிடம் முகம் கொடுத்தே பேசுவதில்லை, அவள் பேசினாலும் பதில் பேசுவதில்லை, காதலிக்கு அவன் மீது கண்மூடித்தனமான பொசஸிவ்னெஸ் , அவன் விலக விலக  சீண்டிக்கொண்டே இருக்கிறாள்,

அடி வாங்கினாலும் மீண்டும் சீண்டுகிறாள்,அவனின் கவனத்தை திசை திருப்ப தொடர்ந்து கிறுக்குத்தனங்கள் செய்கிறாள்,உதாரணத்துக்கு அவன் சட்டை மாட்ட வார்ட்ரோபை திறந்தால் இவள் அத்தனை துணிகளையும் அள்ளி பக்கெட் தண்ணீரில் அழுத்தி ஊறவைக்கிறாள்,அவன் சிகரட் பற்ற வைக்க எண்ணிணால் அவள் ஊதி அணைக்கிறாள், இப்படி தீப்பெட்டியே காலியாகிவிட, அவள் இப்போது லைட்டரால் பற்ற வைக்க வர அவன் விலகிப் போகிறான், அவன் சிறுநீர் கழிக்கையில் அவன் முதுகில் குதிரை ஏறுகிறாள்.அவன் சொக்கட்டான் ஆடுகையில் காய்களை கலைக்கிறாள். அவள் அவனின் ஸ்காட்ச் பாட்டில்களை உடைக்கிறாள், படங்களை நொறுக்குகிறாள்,கிடாரை அடித்து உடைக்கிறாள். படம் 20 நிமிடங்கள் நீளம் அதில் ஒரு வசனமும் கிடையாது.

காதலன் காதலியிடம் மட்டுமல்ல கட்டிடத்தில் தன் முன் எதிர்ப்படும் ஒரு வாட்ச்மேனிடம் கூட  பேசுவதில்லை, பேசாநோய் கொண்டிருப்பான் போல, கடைசியில் தனிமை வாட்டிய காதலி என்னவாகிறாள்? என்று பாருங்கள்.இது குறும்படத்தில் வித்தியாசமான முயற்சி, இது கொண்டிருக்கும் கேமரா கோணங்கள், காதலியாக ரிச்சா சட்டா, அவருக்காக ஒரு பெண்ணின் மன கோபம்,பிடிவாதம்,மன அழுத்தம்,விரக்தி போன்றவற்றை இதைவிட அருமையாக யாரும் சொல்லிவிட முடியாது,ஒரு காட்சியில் காதலனிடம் மல்லுக்கட்டும் ரிச்சாவின் பேண்டி கழண்டு விழுகிறது, பாலிவுட் படத்தில் இப்படியெல்லாம் காட்சி வைக்க ஆரம்பித்துவிட்டனர் என எண்ணி எண்ணி வியக்கிறேன். ஒரு காட்சியில் பெரிய க்ளாக் ஒர்க் ஆரஞ்ச் படப் போஸ்டர் கூட இதில் கனென்ஷனாக வருகிறது.

3.மூன்றாவதாக மெஹ்ஃபுஸ்[உருதுவில் பாதுகாப்பு] ,நம் அபிமான நவாசுதீன் சித்திக்கி இதில் சுடுகாட்டின் வெட்டியான்,பலனே எதிர்பாராமல் கடமையைச் செய்கிறார்,சவக்கிடங்கில் இருந்து ஓய்வே இல்லாமல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட பிணங்கள் சிப்பந்திகளால் இவரிடம் எரியூட்ட தரப்படுகின்றன, 2013ன் முசாஃபராபாத் ,1984ன் கிழக்கு தில்லி,1984ஆம் ஆண்டின் போபால், 1993ஆம் ஆண்டின் கலவரமும்பை போன்றவை என் நினைவுக்கு வந்து போனது, அரசே கலவரக்காரர்களை அடக்காமல் வேடிக்கை பார்க்கும் ஒரு அவலத்தை என்னவென்று சொல்ல?,


ஒரு நாள் தெருவில் வைத்து அழகிய பெண்ணைப் பார்க்கிறார்,உடன் அவளின் காதலனும் இருக்கிறான், இருவரும் வீட்டை விட்டு ஓடிச் செல்ல திட்டமிடுகின்றனர் எனப் புரிகிறது, அவளை விழுங்குது போல சித்தன் பார்வை பார்க்கிறார் இவர், அவள் இவரின் தோற்றத்தால் அருவருப்படைந்து தலையை திருப்பிக்கொள்கிறாள்,நண்பன் சகிதமாக காரில் புறப்படுகின்றனர், மறுநாள் முதல் வேலையாக பக்கத்தில் துவைக்கும் பெண்ணிடம் துணி சோப்பு வாங்கி தன் முகத்தை நன்கு துணிசோப்பு போட்டு தேய்த்துக் கழுவுகிறார் சித்தன். அறைக்கு வந்தவர் கண்ணாடி விழுந்த கண்ணாடி ஃப்ரேமை அணிந்து கொண்டு,முகம் பார்க்கும் கண்ணாடியை தேடி எடுத்து முகம் பார்க்கிறார், முகம் தெளிவாயுள்ளது, ஆனால் பற்கள் கறை படிந்துள்ளதை பார்க்கிறார், தன் முகம் தனக்கே சகிக்கவில்லை என்றிருக்கிறார்.

அன்றும் மினி வேனில் எரியூட்ட இரண்டு பிணப் பொதிகள் தரப்பட, மண்ணெண்ணெய் தீர்ந்து போய் விட்டதாகவும்,வாங்கித் தரும்படியும் கேட்கிறார், அவர்கள் நன்றாக சிரித்து விட்டு மண்ணெண்ணெயெல்லாம் எதற்கு? நீயே துண்டு போட்டு சாப்பிடலாமே? என லந்து செய்கின்றனர். இருந்தும் கடமை தவறாதவர், மண் வெட்டியால் கடினமான மண்ணில் குழி பறிக்கிறார். தன்னிடம் வரும் பிணங்களை அதுவரை பிரித்துப் பார்க்காதவர்,முதல் முறையாக ஒரு பொதியைப் பிரித்துப்பார்க்க அது ஒரு இளைஞன் பிணம், அவனை நேற்று இரவு பார்த்தது நினைவுக்கு வர ,அவனின் ஷூக்களையும் பார்த்து உறுதி செய்கிறார், அவனே தான், மற்றொரு பிணத்தை வேகமாகப் பிரிக்க, நேற்று பார்த்த அந்த அழகிய இளம்பெண், அவளின் அழகிய ஹேர் க்ளிப் பார்த்து உறுதி செய்கிறார்,

 ஊரே பற்றி எரியும் போதும் கூட கௌரவக் கொலைகள் முன்னெப்போழுதும் போலவே நடப்பதை நாம் இதன்மூலம் அறிகிறோம், இப்படி அனாதையாக வீதியில் சாக விட்டாலும் விடுவோம், விரும்பியவனோடு பெண்ணை வாழவிடமாட்டோம் என்றிருக்கும் சமுதாயத்தை மௌனமாக  நக்கல் செய்கிறது படம்.  சவக்குழிக்கு அருகே அவளைக் கிடத்தி அவள் அருகே இவரும் படுத்துக்கொள்கிறார், ஆதூரமாக அவளை அணைத்தும் கொள்கிறார், இப்போது அவள் இவரை தள்ளவில்லை. இந்தப் படமும் 20 நிமிடங்கள் நீளம், இரவுக்காட்சிகளில் கேமரா புகுந்து விளையாடுகிறது, கேங்ஸ் ஆஃப் வாஸிபூரீல் நடித்த ஏனைய நடிகர்கள் இந்த ஐந்து குறும்படங்களிலுமே தோன்றியுள்ளனர் என்பதும் கூடுதல் சிறப்பு.

 4,AUDACITY [ஆடாசிட்டி] [தில்]  அனிர்பின் ராய் இயக்கிய குறும்படம், மும்பையில் கொல்கத்தா குடும்பங்கள் வசிக்கும்  அடுக்குமாடிக் குடியிருப்பில்  நடக்கும் கதை, கணவன் குடிகாரன்,மனைவி இன்சோம்னியாவால் பாதிக்கப்பட்டவள், தூங்க அரும்பாடு படுகிறவள் தூக்க மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்திருக்கிறாள், இவர்களுக்கு ஒரு பதின்ம வயது மகள் எந்நேரமும் அமெரிக்க இசை கேட்பதை விரும்புகிறாள்,பள்ளிப் பாடம் அவளுக்கு கசக்கிறது, குடும்பத்தலைவர் தினமும் வேலையை விட்டு வந்ததும் குடிக்க அமர்ந்து விடுகிறார்,

கஜல் இசை கசிந்து கொண்டே இருகிறது, மனைவியின் நிழல் கூட இவர் மீது படுவதை  விரும்பவில்லை, அவளுடன் பேசுவதையே கௌரவக் குறைச்சலாக எண்ணுகிறார், ஒவ்வொரு மாலையும் அவரின்  அண்டை அயலார் நண்பர்கள், ஒவ்வொருவராக பெல் அடித்து உள்ளே வந்து அவருடன் தனியறையில் குடித்துக்கொண்டே நடுநிசி வரை ரம்மி ஆடுகின்றனர், மனைவி தடையின்றி குடிப்பதற்கு தன்னால் முடிந்த வரை சைட் டிஷ் சமைத்து தீரத்தீர வைத்துக்கொண்டே இருக்கிறாள்,கணவர் மனைவியை மதிக்காத நன்றி கெட்ட ஒரு பிறவி எனப் புரிகிறது, மகள் இப்படிப்பட்ட மூர்க்கமான சுயநலமி அப்பாவை திருத்துவதற்கு தன் அமெரிக்க இசையையே லாவகமாக பயன்படுத்தும் அருமையான கதை இது. கொல்கத்தா வாசிகளின் சமூகம்,பழக்க வழக்கங்கள் இக்குறும்படத்தில் மிக அருமையாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

5,ஷோர் [Shor]-நீரஜ் கைவான் இயக்கிய குறும்படம், காசியில் இருந்து மும்பையின் தாராவி போன்ற பெரிய சேரிக்குள் பஞ்சம் பிழைக்க வந்த கணவன் மனைவிக்குள் நடக்கும் மிக யதார்த்தமான கதை,கணவன் வேலை செய்த மில்லை மூடிவிட வேலையில்லா கணவனை எதுவுமே சொல்லாத உத்தம மனைவி, அவனை எதிர்த்து பேசுவதோ? அவன்  இயலாமையை குத்திக்காட்டும் குணமோ அற்றவள், வேலைக்கு போவதையே விரும்பாதவள், கணவன், மாமியார்,4 வயது மகன் சாப்பாடு,வீட்டு வாடகை போன்றவற்றை சமாளிக்க வேலைக்கு சேர்ந்து ஓவர்டைம் பார்த்து கடுமையாக உழைக்கிறாள்,

கணவனுக்கு மொபைலுக்கு டாப் அப் கூட அவள் தான் செய்கிறாள், மாமியார் இவள் தங்கள் உயர்ந்த சாதியின் ஆச்சாரத்தை மீறுகிறாள் என அனுதினமும் மகனிடம் புகார் வாசிக்கிறாள்,அம்மாவின் பேச்சை மீறாத மகன் மனைவியை விஷ சொற்களால் துளைக்கிறான்,அம்மா வீட்டில் ஒரு பாத்திரத்தைக் கூட நகர்த்தாதவள், வீட்டிலேயே பணம் திருடி புகையிலை, லாகிரி வஸ்துக்கள் வாங்குபவள் என மனைவி சொல்லும் எதையும் நம்ப தயாரில்லை,ஆண் என்னும் தடித்திமிரில் மனைவி ஆக்கியதை உண்டு விட்டு அவளையே வார்த்தையால் அடிக்கிறான்,

அன்றும் அப்படி அம்மா மூட்டி விட,அவள் வேலைக்கு சீக்கிரமே கிளம்பி ரயிலில் செல்கையில் செல் போனில் அழைத்து அவளின் கற்பு நெறியை சந்தேகித்தும்,மிக அசிங்கமான சொற்கள் சொல்லியும் அவளை வீழ்த்துகிறான்,இறுதியாக ஆண் என்னும் திமிரில் அவளை விவாகரத்து செய்யப் போகிறேன்,உன் பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு காசிக்கே போ என மிரட்டுகிறான்,ரயிலில் மிகவும் அழது அனத்தியவள் ,அவன் மீண்டும் செல் போனில் அழைக்க பொறுத்தது போதும் என வெடிக்கிறாள்,தான் வீட்டுக்குச் சென்று மகனையும் கூட்டிக்கொண்டு வெளியேறப்போகிறேன்,

உன் தயவு எனக்கு போதும்,நான் சமூகத்தில் தனியே வாழ்ந்துகொள்கிறேன்,நீ ஆட்டோ வாங்க கடனுக்கு முன்பணத்துக்காக அலைகிறாய் எனத் தெரியும்,அதற்கு 12000 ரூபாய் சேர்த்து வைத்துள்ளேன்,அதை பக்கத்து வீட்டில் சென்று வாங்கிக்கொள், நான் இனி உன்னை பார்க்கப் போவதில்லை என்கிறாள். இவன் வெலவெலத்தவன்,கண் இருண்டுவிட்டது,உயிரே போய்விடுவது போன்ற நிலை, இனி என்ன ஆகும் எனப்பாருங்கள்?,கணவன் மனைவிக்குள்ளான ஊடல் நீண்ட காலம் நீடிப்பது அவர்களின் உறவுக்கு நல்லதல்ல என்னும் உண்மையை மிக அருமையாக விளக்குகிறது படம், இதில் மனைவியாக வந்த ரத்னபாலி பட்டாசார்ஜி எக்ஸலண்ட் பெர்ஃபார்மர், அனாசயமாக நடிக்கிறார், இது இவருக்கு முதல் திரைப்படம்,இவர் ஏற்கனவே மும்பை காலிங் என்னும் டீவி சீரீஸ்களில் தோன்றியுள்ளார்.

படத்தின் கதாபாத்திரங்கள் அனைவருமே நாம் அன்றாடம் வாழ்வில் சந்திக்கக் கூடிய மாந்தர்களே,தலைசிறந்த நடிகர்களின் பங்களிப்பு,மிக அருமையான படைப்பாக மிளிர்கிறது. தோபிகாட் , மும்பை மெரி ஜான் போன்றே ரத்தமும் சதையுமான ஒரு படைப்பு. படம் டாரண்டில் கிடைக்கிறது,  சப்டைட்டிலுடன்  யூட்யூபில் கிடைக்கிறது,காபி ரைட் பிரச்சனைகளுக்கு பயந்து அதை யாரேனும் அழிக்கும் முன்னர்  பார்த்து விடுங்கள்.குறும்படங்கள் எடுப்பவர்கள் பேணவேண்டிய தரத்துக்காக அவசியம் பார்க்க வேண்டிய ஸ்டடி மெட்டீரியல் இப்படம்.

குமா [KUMA][2012][ஆஸ்திரியா][ஜெர்மனி&துருக்கி]


குமா ஆஸ்திரிய நாட்டுத் திரைப்படம்,ஜெர்மனி மற்றும் துருக்கி மொழியில் வெளியானது. ஐரோப்பிய அரபு வாழ்வியல் யதார்த்தங்களை மிக அற்புதமாக வெளிப்படுத்தும் படைப்பு, குமா என்றால் துருக்கியில் சிற்றன்னை என்று அர்த்தம்,துருக்கி நாட்டில் அழகிய மலைக் கிராமத்தில் ஏழை பேரழகி   ஆயிஷா[] ,அண்டை நாடான ஆஸ்திரியாவில் குடியேறிய துருக்கியர்களின் குடும்பத்துக்கு அவசர அவசரமாக வாக்கப்படுகிறாள். மாப்பிள்ளை வீட்டாரே திருமண செலவை ஏற்றுக்கொண்டதால் மகள்களைப் பெற்ற ஏழை அப்பாவுக்கு பெரிய நிம்மதி. மாப்பிள்ளை வேறு வியனாவில் நிர்வாகம் படிப்பவர்,பெரிய கௌரவமான குடும்பம்,ஒரு பெரிய மனபாரம் இறங்கியது ஆயிஷாவின் அப்பாவுக்கு,இனி அவர் அடுத்த சகோதரிகளின் திருமணத்தைப் பற்றி யோசிக்கலாம்.


திருமணம் நடந்த அன்றே வியன்னாவுக்கு டெம்போ வேனில் புறப்படுகின்றனர். அங்கே வீட்டில் அடியெடுத்து வைத்த உடனேயே ஆயிஷாவுக்கு அதிர்ச்சிகரமான அந்த உண்மையை உரைக்கின்றனர். ஆயிஷா திருமணம் முடித்ததோ மகன் ஹசனை, ஆனால் அவனின் தந்தை முஸ்தஃபா [] தான் அவளை பெண்டாள காத்திருக்கிறார், மிகவும் கட்டுப்பெட்டியாக வளர்க்கப்பட்ட ஏழைப் பெண்ணான ஆயிஷாவை திருமணம் முடித்து கூட்டி வந்த அன்றே மாப்பிள்ளை வீட்டார் குழுமி, இந்த கேவலமான ரகசியத்தை அவளுக்கு எந்த கால அவகாசமும் தராமல் போட்டு உடைக்கும் இடம் மிக நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது,அதற்கு ஆயிஷா வெளிப்படுத்தும் திரை மொழி அபாரம்.
 
இதற்கு அவ்வீட்டு குடும்பத்தலைவர் முஸ்தஃபாவின் கேன்சர் வியாதி முற்றிய மனைவி ஃபத்மாவே[Nihal G. Koldas] முக்கிய காரணம், அவளுடைய கட்டாயம் மற்றும் மிரட்டலின் பெயரில் தான் இந்த அவலம் நடந்திருக்கிறது, தன்னை தியாகியாக காட்டிக் கொள்ள ஒரு இளம் நாற்றை வயல் மாற்றி நட்டிருக்கிறாள்.  தான் கீமோதெரபி &அறுவை சிகிச்சை  பலனளிக்காமல் இறந்து விட்டால் தன் கணவனும் குழந்தைகளும் கவனிப்பாரற்று போவரே, என்னும் சுயநலமே இதற்கு முக்கிய  காரணமாக இருக்கிறது, அன்றே அவளின் முடிவைக் கூட கேட்காமல் மேலும் ஒரு அதிர்ச்சியாக கிழப்புருடருடன் முதலிரவும் நடக்கிறது, ஏற்கனவே முதல் மனைவி மூலம் 6 வாரிசுகள் உள்ள குடும்பத்தலைவர், மகள் வயதில் இருக்கும் ஆயிஷாவையும் ஒரே வருட காலத்தில்  தன் மகளுக்கு தாயாக்குகிறார்.

 குடும்பத்தில் மூத்த மனைவியையும் கணவரையும் தவிர இது யாருக்கும் இந்த புதிய உறவை பிடிப்பதில்லை,ஆயிஷா தன் பிறந்த வீட்டார் யாருமே நடந்த அநீதியை அறிய விடுவதில்லை, தனக்கு கிடைத்த கிழப்புருடனை பாக்கியமாகக் கருதுகிறாள். ஒரே வீட்டில் முதல் மனைவியும் இரண்டாம் மனைவியும் அத்தனை ஒற்றுமையாக இருக்கின்றனர்,சக்களத்தி சண்டை என்றால் என்ன?என்னும் அளவுக்கு அந்நியோன்யம் நிலவுகிறது. முதல் மனைவிக்கு வேண்டிய அத்தனை சிருஷைகளையும் முகம் சுளிக்காமல் செய்கிறாள் ஆயிஷா, அவளுக்கு கழுவி குளிப்பாட்டுவது வரை ஒன்றுவிடாமல் செய்கிறாள்,

இவளை ஊரார் முன்பாக மணம் முடித்த மகன் ஹசன் ஆயிஷாவை மட்டுமல்ல எந்தப் பெண்ணையுமே திரும்பிப் பார்ப்பதில்லை,அவன் ஒரு ஹோமோ செக்ஸுவல், இந்த ரகசியத்தை அவன் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை, அவனின் இந்த ரகசியத்தை அறிந்தது போல் யாரும் வெளிக்காட்டிக் கொள்வதுமில்லை, ஆயிஷாவுக்கு மட்டும் இந்த ரகசியத்தை யாரும் தெரிய விடுவதில்லை, அவன் வியன்னாவில் படித்துக்கொண்டே பகுதிநேர வேலயும் பார்த்து தன் கல்விக்கட்டணத்தை கட்டிக்கொள்கிறான், வீட்டுக்கும் முடிந்ததை கொடுத்து வருகிறான், மூத்த மகன் ஜெர்மனியில் குடியேறியவன்,மணம் முடித்து மனைவியுடன் வசிக்கிறான்,ஆனால் வீட்டுக்கு எதுவுமே தந்து உதவுவதில்லை, அவன் இந்த விசித்திர திருமணத்துக்கு  ஜெர்மனியில் இருந்து வரவுமில்லை.

ஆஸ்திரியாவில்- வியன்னாவில் இருக்கும் அந்த  புறநகர் பகுதி மக்களின் பார்வைக்கு ஆயிஷா அவ்வீட்டின் மருமகள் மட்டுமே, ஆயிஷாவின் குழந்தையை அந்த குடும்பத்தலைவரின் பேத்தி என்றே எல்லோரும் நினைக்கின்றனர். ஆயிஷா போன்ற அழகியை தங்கள் மகனுக்கும் திருமணம் செய்ய ஆசைப்படுகின்றனர்,அதற்காக துருக்கிக்கு தூது விடுகின்றனர்.


ஆயிஷாவை அந்த குடும்பத்தலைவரின் கடைசி மகன் ,அவனின் பதின்ம வயது சகோதரி தவிர யாருமே பொருட்டாகக் கூட மதிப்பதில்லை. அவளை பட்டிக்காடு என்று புறம் பேசி கேலி செய்கின்றனர், நம்மூரில் எப்படி ஆங்கிலம் தெரியாததை ஒரு குறையாக கருதி கேலி பேசுவரோ, அதே போல ஆயிஷாவுக்கு ஜெர்மன் மொழி பேசத் தெரியாததை திருமணமாகி குழந்தையும் பெற்ற மூத்தமகளும்,பள்ளிப் படிப்பு முடித்த அடுத்த மகளும் கூட ஒரு பெரிய குறையாகவே குத்திக்காட்டுகின்றனர்.அவர்களுக்கு முன் ஆயிஷா  கூனிக்குறுகிப் போனாலும், கடைக்குட்டிகளின் அன்பினால் அந்த அவமானத்தை ஈடுசெய்கிறாள், அவர்களுடைய பள்ளிப் பாடங்களை யாருக்கும் தெரியாமல்   மெல்ல எழுத்துக் கூட்டிப் படித்து ஜெர்மன் மொழியை எழுதவும் படிக்கவும் கற்கிறாள்.

ஆயிஷா தன்னிடம் யார் எப்படி நடந்தாலும் அவள் அனைவரிடம் மிகவும் அன்பாக இருக்கிறாள், தனக்கு நிகழ்ந்த அநீதியைக்கூட இயல்பாக எடுத்துக்கொண்டு அத்தனை ஒட்டுதலுடன் அவ்வீட்டில் இளைய எஜமானியாக வலம் வருகிறாள், மூத்த மனைவி, தன் கணவரை தினமும் இரவில் அவளுடன் அனுப்பி உறங்கச் செய்கிறாள்.ஆயிஷாவும் ஃபத்மாவும் இருவருக்குள்ளும் எந்த ஒளிவு மறைவுமே வைத்துக் கொள்ளுவதில்லை, மகுடிக்கு மயங்கிய பாம்பைப்போல ஆயிஷா அந்த குடும்பத்தலைவனுடனும், முதல் மனைவியுடனும் அந்யோன்யமாகி விடுகிறாள்.நாம் கண்ணுறூவது சினிமாவா அல்லது நிஜவாழ்க்கையா?என்னும் குழப்பத்தை தோற்றுவித்துவிடுகின்றனர்.

மூத்த மனைவி கேன்சருக்காக எடுத்துக் கொள்ளும் கீமோ தெரபி சிகிச்சைகள், அவளை மிகவும் உருக்குலைக்கிறது, வீட்டின் மொத்த நபர்கள் 9பேருமே அவள் தேறி வர பிரார்த்தனை செய்கின்றனர்,கீமோ தெரபி முடிந்தவுடன் அவளுக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது,வீட்டார் அனைவருமே அறையின் வாசலில் குழுமியிருக்க,முஸ்தஃபா ஆயிஷாவின் கைகளை கோர்த்துக் கொண்டு அவருக்கு இவளும் ,இவளுக்கு அவரும் ஆறுதல் வழங்கிக் கொள்கின்றனர்,கடைக்குட்டி மகன் அம்மாவுக்கு என்ன ஆகும் என அழுதபடி வர,அவனை ஆயிஷா மார்புறத் தழுவி உனக்கு நான் இருக்கிறேன் என தேற்றுகிறாள்.

டாக்டர்கள் 80 சதவிதம் தான் அவள் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதையும் மீறி ஃபத்மா  கேன்சரை வென்று விடுகிறாள், ஆனால் அவளின் கணவர் முஸ்தஃபா, அந்த பெரிய குடும்பத்தின் தலைவர் எல்லோரையும் விட்டு விட்டு மாரடைப்பால் அகால மரணமடைகிறார்.

அது ஒரு பெரிய கல்லறை, வானெங்கும் ஆயிரக்கணக்கில் பறவைக்கூட்டம், சவ அடக்கம் நடந்து கொண்டிருக்கிறதும்,பெண்கள் அனைவருமே ஓரமாக நின்றபடி அழுகின்றனர்,சற்றுத் தள்ளி முஸ்தஃபாவின் சவ அடக்கம் நடந்து கொண்டிருக்கிறது. ஆயிஷா கணவர் இறந்ததற்கு ,அவரைக் ஊரார் முன்னர் கட்டி அழக்கூட வழியின் ,அக்கூட்டத்தில் நின்றபடி கேவி கேவி அழுகிறாள். முன்னர் மனிதர்களால் ஏமாற்றப்பட்டவள், இப்போது கடவுளாலும் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி அழுகிறாள்.

ஆயிஷா என்ன ஆனாள்?!!! வருமானம் ஈட்டும் குடும்பத்தலைவர் முஸ்தஃபா இறந்ததும் அந்த பெரிய குடும்பம் என்ன ஆனது? அவர்களுக்கு ஆஸ்திரியா பென்ஷன் தந்ததா? குழந்தைகள் படிப்பை தொடர்ந்தனரா? ஃபத்மாவுக்கும் ஆயிஷாவுக்கும் முன்பைப் போன்றே தோழிகளைப் போன்ற உறவு நீடித்ததா? ஃபத்மா தன் வாழ்க்கையை நன்கு வாழ்ந்தவள், தன் நாற்பதுகளில் இருக்கும் அவள் அடுத்தடுத்து 6 குழந்தைகளைப் பெற்றவள், அவள் கணவர் முஸ்தஃபாவுடனான நீண்டகால குடும்ப வாழ்க்கையின் நினைவுகளுடனே வாழ்க்கையை ஓட்டிவிடுவாள்,
 ஆனால் ஆயிஷா,பச்சை இளம் தளிர்,அவள் எதிர் கொள்ளப் போகும் வலி என்ன?!!!வீட்டுக்கு இளம் விதவை,ஆனால் ஊருக்கு அவள் விதவை இல்லை,அவளுடைய இக்கட்டான நிலை,அன்புக்கு ஏங்கியும்,தன் உள் மன ஆசைகளால் அவள் உள்ளாகும் அவஸ்தைகள் போன்றவற்றை அவசியம் படத்தில் பாருங்கள்,இயக்குனர் ன் ஒரு ப்ரில்லியண்டான இயக்கம், மிக அருமையான ஒளிப்பதிவும்,கதாபாத்திரங்களின் மிகவும் அற்புதமான நடிப்பு, அபாரமான நடிகர்கள் அத்தனை பேருமே.யாரும் தவறவிடக்கூடாத ஒரு படம். படம் மிகவும் மெதுவாக சென்றாலும் பார்வையாளர்களை லயித்துப் போகச் செய்யும் கதை இது. எத்தனையோ உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களையும் விருதுகளையும் வாங்கிய படம், நாம் கேள்வியுற்றிராத ஐரோப்பிய + அரபு தேசத்தின் யதார்த்தமான கதை இது.

படத்தின் காணொளி யூட்யூபிலிருந்து:-




படத்தின் குழுவினர் விபரம் விக்கியிலிருந்து:-
Directed by Umut Dag
Produced by Veit Heiduschka
Michael Katz
Screenplay by Petra Ladinigg
Story by Umut Dag
Music by Iva Zabkar
Cinematography Carsten Thiele
Editing by Claudia Linzer
Studio Wega Film
Running time 93 minutes
Country Austria
Language German
Turkish

ரேபிஸ் [Kalevet ][2010][இஸரேல்]



ரேபிஸ்[Kalevet (2010)]என்னும் இசரேலிய நாட்டுப் ஹீப்ரூ மொழிப் படம் பார்த்தேன்.இது இசரேலிய சினிமாவின் முதல் ஹாரர் ஜானர் படமாம். கோவணம் போன்ற நிலப்பரப்பைக் கொண்ட இசரேலை நான் எப்போதும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறேன். அதன் நிலப்பரப்பை நன்கு புரிந்து கொண்டு,எந்த விதமான செயற்கைத்தனமான செட்டும் இல்லாமல், இசரேலிய சினிமாவில் ஒரு ஹாரர் படத்தை முயன்றிருக்கிறார்கள் ரேபிஸ் படக்குழுவினர். 

மனிதனுக்குள்ளே இருக்கும் மிருகமும்,அது சக மாந்தர்கள் மீது நல்லவர் தீயவர் எனப்பாராமல் வெளிப்படுத்தும் கொலைவெறியும் தான் படத்தின் தீம். ரேபீஸ் நோய்க் கிருமி எப்படி விரைந்து பரவுமோ அது போலவே கொலை வெறியும் சக மனிதர்களின் மீது நல்லவர் ,கெட்டவர் எனப் பாராமல் சகட்டுமேனிக்கு இப்படம் முழுக்க ஏதோ வகையில் பிரயோகிக்கப்படுகிறது. அதை இந்தப்படத்த்தில் கையாளப்பட்டதைப் போல வேறெதிலுமே நான் பார்த்ததில்லை.

கோயன் சகோதரர்களின் பெர்ஃபெக்‌ஷன்,க்வெண்டின் டாரண்டினோவின் டார்க் ஹ்யூமர், சிக்,கோர் காட்சியாக்கம் போன்றவற்றிற்கு ட்ரிப்யூட் செய்து உருவாக்கப்பட்ட தரமான படைப்பு இது , ஒளிப்பதிவும், பிண்ணனி இசையும், டார்க் ஹ்யூமர், ரொமாண்டிக்,ஃப்ளர்டிங் பாணி வசனங்களும் படத்துக்கு பெரிய பலம். படத்தில் 10 கதாபாத்திரங்கள், ஒரே நாளின் பகலில் எடுக்கப்பட்ட கதை இது , இஸரேலின் ஒரு தடைசெய்யப்பட்ட ரிசர்வ் காடு தான் இதன் கதைக்களம்.

காடு என்றால் சூரிய ஒளி உட்புகாத காடு அல்ல,மெடிட்டேரியன் பிரதேசத்துக்கே உரிய வரண்ட நிலத்தில் அமைந்த காடு அது ,பல ஆண்டுகால இஸரேல் பாலஸ்தீனப் போரில் அக்காடுகள் முழுக்க நிலக்கன்னி வெடிகளும் ,எலிப்பொறியைப் போன்றே மனிதர்களைப் பிடிக்கும் கூண்டுப் பொறிகளும் , கரடியைப் பிடிக்க பதிக்கப்பட்ட இரும்பு கண்ணிகளும் நீக்கமற நிரம்பியிருக்கும் காடு அது. 

அப்பா தகாத உறவை கண்டித்ததால் வீட்டை விட்டு ஓடிவந்து காட்டில் தங்கும் இன்செஸ்ட் சகோதரி ,சகோதரன் ஜோடிகள் ஒரு புறம். இக்காட்டின் சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவ்வப்பொழுது பொறியில் சிக்கும் அபலைகளை குரூரமாக வதைத்துக் கொல்லும் ஒரு சைக்கோ மறுபுறம்.

அக்காட்டின் அருகே வசிக்கும் ஒரு கணவன் மனைவி,காட்டுக்குள் முயல் வேட்டையாடத் தன் அல்சேஷன் நாயுடன் செல்லும் கணவன். அவன் மனைவியும் அவனும் அன்று காலை முதலே மிகவும் களித்து திளைத்திருக்க, மனைவி ஒரு ரகசியத்தை கணவன் வேட்டைக்குச் சென்று திரும்பியதும் சொல்லலாம் என பூரித்துக் காத்திருக்கிறாள்,அவ்வப்போது கணவனுக்கு வயர்லெஸ் ரேடியோவில் காதல் வசனங்கள் பேசி களிப்பூட்டுகிறாள் சந்தேக புத்தி கொண்ட மனைவி.

 அதே சமயம் வார இறுதியை உல்லாசமாகக் கழிக்க காரில் புறப்படும் இரு ஆண்கள், இரு பெண்கள் கொண்ட டென்னிஸ் வீரர்கள் ஜோடிகள்.காரில் செல்கையில் மேப் கையில் இருந்தும் கவனம் பிசகி அக்காட்டுக்குள் வழி தவறி நுழைய நேரிடும் துர்பாக்கிய நிலை. இப்போது ஒரு அபாயகரமான சூழலில்,இரு பெண் டென்னீஸ் வீராங்கனைகளும் உதவி கோரி உள்ளூர் போலீஸை காட்டுக்குள் வரவழைக்க ,அங்கே வந்த ஒரு முழு கெட்ட ,ஒரு நல்ல+கெட்ட குணம் கொண்ட போலீஸ்காரர்களால்  அந்த ,டென்னிஸ் வீராங்கனைகள் எதிர்கொள்ளும் சோதனைகள்,வேதனைகள்.

 அங்கே அத்தருணத்தில் காட்டுக்குள்ளே அடுக்கடுக்கான எதிர்பாராமல் நிகழும் திருப்பங்கள். ஒருவர் மிச்சமில்லாமல் கொலைகாரர்கள் ஆகும், ஆக்கும் சம்பவங்கள். அவை  மிகவும் விறுவிறுப்பானவை. எத்தனையோ ஹாரர், ஸ்லாட்டர் ஜானர் படங்கள் பார்த்திருந்தாலும். நேர்த்தியான மேக்கிங்கினால் இந்த இஸரேலிய லோ பட்ஜெட் படம் தனித்து நிற்கிறது. படம் டாரண்டில் கிடைக்கிறது, சப்டைட்டில் தனியாக தரவிறக்கிக் கொள்ளுங்கள். படம் அவசியம் பாருங்கள் நண்பர்களே.

முழுப்படமும் யூட்யூபிலும் சப்டைட்டிலுடன் கிடைக்கிறது, யாராவது அழிக்கும் முன் பார்த்துவிடுங்கள்
படக்குழுவினர் விபரம் விக்கியிலிருந்து
Directed by Aharon Keshales
Navot Papushado
Produced by United Channel Movies
Written by Aharon Keshales
Navot Papushado
Starring Lior Ashkenazi
Ania Bukstein
Danny Geva
Yael Grobglas
Music by Frank Ilfman
Cinematography Guy Raz
Editing by Aharon Keshales
Navot Papushado
Distributed by Image Entertainment (USA)
Release dates
  • October 17, 2010
Running time 90 minutes
Country Israel
Language Hebrew
Budget $500,000 (estimated

கற்களுக்குள் ஒரு காந்தி - லாரி பேக்கர் (லாரி பேக்கர் பற்றிய விரிவான பதிவு ) கட்டுரை -சுகி

 நான் பென்னி குரியகோஸ் என்னும் கன்சர்வேஷன் கன்சல்டன்டிடம் 1999-2000 காலகட்டத்தில்  ட்ராஃப்ட்ஸ்மேனாக வேலை செய்துள்ளேன், அவர் ஏழைகளின் ஆர்கிடெக்டும்,குறைந்த பொருட்செலவில் தரமான அழகிய வீடுகள் என்ற குறிக்கோளை கடைசி வரை கடைபிடித்த லாரி பெக்கரிடம் உதவியாளராக இருந்தவர். சென்னை முட்டுக்காட்டில் அமைந்துள்ள பண்பாட்டு கலாச்சார மையமான தக்‌ஷின் சித்ராவின் எக்ஸிகுயூஷன் ஆர்கிடெக்டும் ஆவார். 

அந்தந்த ஊர்களுக்கே இருக்கும் வெர்னாகுலர் பாணியை பிரதிபலிக்கும் தக்‌ஷின் சித்ராவின் இந்து-திருவனந்தபுரம் வீடு,இந்து மனக்காவு-கோழிக்கோடு வீடு, தானியக்கிடங்கு கொண்ட கோட்டயம்-கூத்தாட்டுக்குளம் வீடு, புதுப்பள்ளி-கோட்டயம்-சிரியன் கிருஸ்துவர் வீடு மற்றும் ஏனைய வீடுகளுக்கு முழுமையான வரைபடங்கள் தயாரித்துள்ளேன்,அப்போதே பென்னி குரியகோஸ் மூலம் லாரி பெக்கர் பற்றி நிறைய கேட்டும்,தொடர்ந்து தேடிப் படித்தும் உள்ளேன். அந்த வகையில் சுகி எழுதிய இந்தக் கட்டுரையை மனதுக்கு நெருக்கமாக உணருகிறேன்.


 (குறிப்பு – இக்கட்டுரை அரவிந் குப்தா பேக்கர் குறித்து எழுதிய அறிமுக கட்டுரை மற்றும் தக்ஷின் சித்ராவை வடிவமைத்த பேக்கரின் சீடர்களின் ஒருவரான பென்னி குரியகொஸ் பேக்கரின் மறைவை ஒட்டி எழுதிய அஞ்சலி கட்டுரையையும் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது)
-சுகி



சிறுவனாக அடுமனையில் தன் கையிருப்பை கொண்டு ரொட்டிகள் வாங்கி உண்பது அவருடைய வழக்கம். ஒரு மாபெரும் ரகசியத்தை அவர் அப்படித்தான் கண்டடைந்தார். ரொட்டிகள் வாங்க அவர் வழக்கமாக செலவழிக்கும் அதே தொகைக்கு இருமடங்கு அதிகமாக, ருசியில் எவ்வகையிலும் குறைவில்லாத உடைந்த ரொட்டிகளை வாங்க இயலும்.! அந்த வாழ்க்கை பாடத்தை என்றுமே அவர் மறக்கவில்லை.

திருவனந்தபுரம் ரயில்வே நிலையத்தையோ அல்லது பேருந்து நிலையத்தையோ கடந்து செல்லும் எவரும் அந்த இந்தியன் காஃபி ஹவுஸ் கட்டிடத்தின் மீது விழி பதிக்காமல் கடக்க முடியாது. நான் திருவனதபுரத்திற்கு செல்லும்போதெல்லாம் பிரம்மாண்டமான கலோசியத்தின் ஒரு பகுதி போலிருக்கும் அந்த கட்டிடத்தில் சென்று தேங்காய் எண்ணெயில் சுடப்பட்ட மைதா பூரியையும், தொட்டுக்கொள்ள பீட் ரூட் உருளை குருமாவையும் ஒரு ஜன்னலோரம் அமர்ந்து அவசரகதியில் இயங்கும் உணவகத்தில் கொஞ்சம் நிதானமாக வேடிக்கை பார்த்தப்படி உண்டபடி அமர்ந்திருப்பது வழக்கம். அது லாரி பேக்கர் கட்டிய கட்டிடம் என்று அவரை பற்றி அண்மையில் வாசித்த போது தான் அறிந்துகொண்டேன். லாரி பேக்கர் எனும் வரலாற்று ஆளுமையை அறிந்து கொண்டதும், நான் உணவருந்திய எனக்கு பிடித்தமான கட்டிடம் அவர் கட்டியது என்று அறிந்து கொண்டதும் எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.
பேக்கர் மனைவி எலிசபெத்துடன்
லாரி பேக்கர் மிக முக்கியமான அதைவிட சுவாரசியமான ஆளுமை. 1917 ல் இங்கிலாந்தின் பிர்மிங்காமில் பிறந்த அவர் கட்டிடக் கலை பயின்று இரண்டாம் உலகப்போரின் போது க்வாக்கர் அமைப்பில் தன்னை இணைத்து கொண்டு சீனாவில் காயம்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றியுள்ளார். ஊர்திரும்ப முடியாமல் பலகாலம் பம்பாயில் சிக்கிக்கொள்ள நேர்ந்தபோது ஒரு க்வாக்கர் நண்பர் வழியாக அவர் காந்தியை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த சந்திப்பு அவருடைய வாழ்க்கையையே மாற்றியது. 1943 ல் காந்தியை சந்தித்தார் பேக்கர். “நீங்கள் மேற்கிலிருந்து அறிவையும், தகுதியையும் கொண்டு வருகிறீர்கள், ஆனால் எங்கள் தேவைகளை உங்களால் புரிந்துகொள்ள இயலாமல் அதனால் எந்த பயனும் இல்லை. உண்மையில் பம்பாய் போன்ற பெருநகரங்களில் அல்ல, கிராமத்தில் அதிலும் எளிய மக்களுக்கு தான் நீங்கள் அதிகம் தேவை படுவீர்கள்” என்றார் காந்தி. ஏதோ ஒருவகையில் காந்தியின் மீது ஈர்ப்புகொண்டு மீண்டும் 1945 ல் இந்தியாவிற்கே திரும்பினார் பேக்கர்.

பழைய கட்டிடங்களை மருத்துவமனைகளாக மாற்றும் பணி அவரிடம் அளிக்கப்பட்டது. மிகக் குறைந்த நிதியே அவருக்கு அதற்கு ஒதுக்கப்பட்டதால், மூங்கில், கீற்று, லேட்டரைட், என்று அவர் பிர்மிங்காமில் கற்ற கட்டிடக் கலைக்கு சம்பந்தமில்லாத எளிய செலவற்ற பொருட்களை கொண்டு கட்டிடங்களை நிர்மாணிக்க வேண்டியிருந்தது. அங்கு பொறியாளருக்கும், கட்டிடகலை நிபுனருக்கும் பெரிதாக வேலையில்லை என்று உணர்ந்தார். கட்டிடகலையின் அடிப்படை கோட்பாடுகள் எல்லா இடங்களுக்கும் பொருந்தும் என்றாலும் அவர் கையாளவுள்ள புதிய பொருட்களின் இயல்பை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. அவர் தொழு நோய் மருத்துவமனை ஒன்றை அப்படித்தான் நிர்மாணித்தார்.

கோடை காலங்களில் லாரி பேக்கர் திபெத் செல்வது வாடிக்கை. பேக்கர் அங்கு தான் எளிமையான பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் இந்திய கட்டிடவியல் பற்றி ஒரு புரிதலை எட்டினார். 1962 சீன போர் அவர்களுக்கு இடையூறை உருவாக்கியது. அதற்கு பின்னர் கேரள மேற்கு தொடர்ச்சி மலையில் வாகைமான் அருகில் அவர்களுடைய வசிப்பிடம் மாறியது. கேரளத்தில் அவருடைய ஐம்பதாவது வயதில் தான் முறையாக கட்டிடகலை நிபுணராக தொழில் தொடங்குகிறார். 1950 – 70 வரையிலான காலகட்டங்களில் அவர் கட்டிய பல கட்டிடங்கள் ஆவணபடுத்தபடவில்லை. தமிழகத்தின் அழகியபாண்டியபுரத்தில் அவர் ஒரு தேவாலயம் கட்டினார். ஹோஷங்காபாத்தில் ஒரு அரசு சாரா அமைப்பிற்கு கட்டிகொடுத்த அலுவலக கட்டிடம், அலகாபாத் பல்கலைகழக கட்டிடங்கள், வேளாண்மை கல்லூரி கட்டிடங்கள், லக்னோவின் மாநில அருங்காட்சியகம் போன்றவை அதில் அடங்கும்.


எழுபதுகளில் பேக்கர் கேரளாவிற்கு வரும்போது வளைகுடா நாட்டில் பணிபுரிந்த மலையாளிகள் பெரும் தொகை செலவிட்டு பிரம்மாண்டமான கட்டிடங்களை கட்டுவது தான் வாடிக்கையாக இருந்தது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் ஒரே மாதிரியான வசிப்பிடம் கட்டிகொடுக்க முடியும் என்பதை பேக்கர் உணர்ந்தார். புது போக்குகளை உருவாக்கினார். “ இன்றைய இந்திய மக்களின் தேவைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், அந்த தேவைகளை ஈடு செய்ய வேண்டும் எனில் பிரம்மாண்டமாக சிந்திப்பதை நிறுத்திவிட்டு ‘சிறியதே அழகு’ எனும் அடிப்படையை நோக்கி நகர வேண்டும்” என்று அவர் கருதினார்.

பேக்கர் பணி செய்யும் பாணி அலாதியானது. வீடு கட்டுவதற்கு அவசியமான பொருட்கள் வீடு கட்டப்படும் இடத்திலிருந்து ஐந்து மைல் சுற்றளவிற்குள் இருந்து பெறப்பட வேண்டும் என்பதே காந்தியின் எண்ணமாக இருந்தது. பேக்கர் இந்த கொள்கையை முழுவதுமாக இல்லையென்றாலும் முடிந்தவரை பின்பற்றினார் என்றே சொல்லவேண்டும். பிற கட்டிடக்கலை நிபுணர் போல் இல்லாமல், அவர் எந்த முன்வரைவையும் வைத்துகொள்வதில்லை, கட்டிடம் எழுப்பும் இடத்திற்கே சென்று நேரடியாக பணியாற்றி, பயன்படுத்தப்பட்ட கடித உரைகள், திருமண அழைபிதழ்கள் போன்ற உபயோகமற்ற துண்டு காகிதங்களில் அப்போதைக்கு அப்போது வடிவமைத்து கட்டிடத்திற்கு உயிர்கொடுப்பார்.

எதிரில் தச்சரோ கொத்தனாரோ நின்று வரைபடம் உருவாவதை வசதியாக பார்ப்பதற்கு ஏதுவாக அவரால் தலைகீழாக வரைய முடியும். அவர் தனக்கு கீழே பணிபுரிய சம்பளம் கொடுத்து எவரையும் அமர்த்திகொண்டதில்லை, ஏனெனில் அதற்கான செலவை நுகர்வோரிடமிருந்து பெற வேண்டியதிருக்கும், அது செலவீனத்தை அதிகரிக்கும்.

பேக்கரின் வரைபடங்கள் கட்டுமான களத்திலேயே உருவாகும் கையால் வரைந்த படங்களே
அவருடைய திட்டத்தை செயல்படுத்த பொறியாளரின் துணையை அவர் நாடியதில்லை, மாறாக நேரடியாக அவர் பயிற்றுவித்த கொத்தனார்களும் வேலையாட்களும் தான் பணியாற்றுவார்கள். அவரை பொறுத்தவரையில் கட்டிடக் கலை நிபுணர் கட்டுமானத்தில் ஈடுபடுவதில் ஒன்றும் தவறில்லை. பிகாசோவை வெறும் முன்வரைவுகள் வரைய சொல்லி, எப்படி வரைய வேண்டும் எனும் கட்டளைகளை பெற்றுக்கொண்டு, ஓவியம் படைக்க கூடாது என அறிவுறுத்த இயலுமா? என்று கேட்டார். மேலும் அவர்கள் பேக்கர் கட்டிடம் வேண்டும் என்பதாலேயே தன்னை நாடி வருகிறார்கள் என்பதால் தானே நின்று செய்து கொடுப்பது தான் முறை என்று எண்ணினார். பிற நிபுணர்கள் போல் பேக்கர் தாள்களில் கோடுகள் வரைவதுடன் நிறுத்திகொள்வதில்லை, தன்னளவில் அவர் சிறந்த தச்சனும், கொத்தனாரும் கூட.

அபரிமிதமான சூழலியல் பிரக்ஞை அவருக்கு உண்டு, அதிக ஆற்றலை உறிஞ்சும் முறுக்கு கம்பிகளையும் சிமிண்டையும் கண்ணாடிகளையும் அவர் பெரும்பாலும் பயன்படுத்தாமல் தவிர்த்தார். பல வண்ண உடைந்த கண்ணாடி குப்பிகளை சுவர்களில் பதித்து விதவிதமான வர்ண ஒளிகளை பிரதிபலிக்க செய்வது அவருக்கு பிடிக்கும். அவர் ‘எலிப் பொறி’ (rat trap model) பாணியில் கற்களை பயன்படுத்தியதால் 25% கற்கள் சேமிக்க முடிந்தது மட்டுமின்றி, சுவர் வெவ்வேறு பருவங்களுக்கும் தட்ப வெப்பங்களுக்கும் பொருந்துவதாக இருந்தது.

பேக்கருக்கு மறு சுழற்சியின் மீது பெரும் நம்பிக்கை உண்டு. மண்ணால் ஆன இந்திய வீடுகளை மீண்டும் கட்ட முடியும். உடைந்து போன கண்ணாடி சில்லுகளை தனது குளியலறையில் தரைக்கு பயன்படுத்தினார். மேற்கூரையில் உடைந்த டைல்ஸ்களை பொருத்தியதன் மூலம் முப்பது சதவிகிதம் கான்க்ரீட் பயன்பாடை அவரால் குறைக்க முடித்து. அதுவே பேக்கர் பாணி வீடுகளின் அடையாளமாக மாறிவிட்டது. இரும்பிற்கு பதிலாக மரக்கட்டைகளையும் மூங்கிலையும் பயன்படுத்தினார். அதன் மூலம் செலவு ஐந்தில் ஒரு பங்காக குறைந்தது. அத்துடன் நில்லாமல் செலவு குறைப்பது குறித்தும், வேறு சிலவற்றை குறித்தும் எளிய செயல் விளக்க புத்தகங்களை கைப்பட வரைந்த ஓவியங்களுடன் வெளி கொணர்ந்தார்.


“நாம் இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு நாம் இந்தியர்களாக சிந்தித்து வடிவமைக்க வேண்டும்” என்பார். “நவீன இந்திய கட்டிடக்கலை என்று தனியாக ஒன்று உண்டா என்றால்! இல்லை. சீனா, ஜெர்மனி, பெரு மற்றும் இந்திய நாட்டில் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களை ஒரு பாலைவனத்தில் வைத்தால் அவைகளுக்கு இடையே ஏதேனும் வேறுபாடி உணர இயலுமா என்ன? இவைகளில் எது இந்தியாவிலிருந்து வந்தது? எது பெருவிலிருந்து வந்தது என பிரித்தறிய முடியுமா? ஆனால் இடு பொருட்கள் வேறானவை, வேறு மாதிரியான வானிலை கொண்டவை, வாழ்க்கை முறையும் வேறானவை”

“நான் பணி செய்ய தொடங்குவதற்கு முன், அவர்களுடைய கட்டிடம் எழபோகும் மனையை காண வேண்டும். அது எத்தகைய நிலம் என்பதை அறிய வேண்டும் என்பது மட்டுமல்ல (மேட்டு பகுதி, சரிவு போன்றவை), அங்கு என்ன மரங்கள் இருக்கின்றன என பார்க்க வேண்டும். மேலும் அவர்கள் நல்ல பார்வை கோணங்கள் வேண்டுகிறார்களா? தோட்டம் போடும் திட்டமுண்டா? பிராணிகள் வளர்ப்பதுண்டா? தண்ணீர் வசதி எப்படி? காற்றின் திசை மற்றும் மழையின் திசை எது? என பலவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் தான் இந்த கட்டிடத்தை பயன்படுத்த போகிறார்கள் நான் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”

பேக்கர் தன் பங்கிற்கு பல எதிர்ப்புகளையும் சந்தித்தார். ஒரு கேரள பொறியியல் கல்லூரியில் உரையாற்ற சென்ற போது அவர் அந்த கல்லூரி பேராசிரியர் வடிவமைத்த கட்டிடத்தை விமர்சித்தார் எனும் காரணத்திற்காக அவரை அதற்கு பின்னர் அழைக்கவே இல்லை. கேரள அரசு 1986 ல் செலவு குறைந்த கட்டிடங்களை எழுப்ப திட்டமிட்ட போது பேக்கர் பாணியிலான கட்டிடங்களை நிராகரிக்கும் போக்கையே பெரும்பாலான கட்டிடக்கலை நிபுணர்கள் முன்வைத்தனர். அதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் பகிரங்கமாக ஒரு கட்டிடக்கடை வல்லுநர் எழுந்து ‘இந்தக் கட்டிடங்கள் இன்னும் ஓராண்டு தாங்கினால் கூட அதிசயம் தான்’ என்றார், ஆனால் பேக்கர் எழுபதுகளில் கட்டிய கட்டிடங்கள் இன்றும் ஆரோக்கியமாக நின்று கொண்டு தான் இருக்கின்றன.

பேக்கரின் பிரத்யேக ரேட் ட்ராப் பாண்ட்மேசனரி [Rat Trap Bond] 

நுகர்வோர் நேரமாகிவிட்டது என அவரை நச்சரிக்கும் போது ‘ஏன் எனக்கு மாறுபட்டு சிந்திக்க கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க கூடாது?’ என வருந்துவார். ஒருமுறை ஒரு மேஸ்திரியை கடுமையாக கோபித்து கொண்டு பின்னர் அவரிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதிய தருணங்கள் கூட உண்டு. பொதுவாக கட்டிடக்கலை நிபுணர் கட்டுமானத்தில் ஈடுபடும் போது அதிக எண்ணிக்கையிலான கட்டிடங்களை கட்ட முடியாது என்றொரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் 85 வாக்கில் கேரளத்தில் மட்டும் அவர் சுமார் ஆயிரம் கட்டிடங்கள் எழுப்பியிருந்தார். அலுவலகத்தில் அமர்ந்து நுணுக்கமாக வரைய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் நேரம் மிச்சமாகிறது, மேலும் களத்திற்கு செல்வதால் நுகர்வோருக்கு தகுந்த மாற்றங்களை அப்போதைக்கு அப்போது பெரும் நஷ்டங்கள் ஏதுமின்றி செய்ய இயலும். கேரளம் தவிர வெளி மாநிலங்களிலும் நிறைய கட்டிடங்கள் எழுப்பியிருக்கிறார்.

மண்ணை கொண்டு பேக்கர் அதிக கட்டிடங்கள் கட்டவில்லை. மண்ணை கட்டியாக்கி அவர் கட்டியவற்றில் முக்கியமான கட்டிடங்களில் திருநெல்வேலி காது கேளோதோர் – வாய் பேசாதோர் பள்ளியும் ஒன்று. “எல்லோரையும் மண் வீடு கட்டிகொள்ள வேண்டும் என நான் கோரவில்லை, எல்லோரும் வீடு கட்டிகொள்ள வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன், அந்த இலக்கை மண்ணை கொண்டு மட்டுமே அடைய முடியும். கிராமங்களில் நாம் காணும் இல்லங்கள் குறைந்தது எழுபது என்பது வருடங்கள் பழமையானவை. மண் எளிதாக கிடைக்க கூடியது, அதிக ஆற்றல் தேவைபடாதது. இரும்பையும் கான்க்ரீடையும் கொண்டு தான் நாம் அத்தனை வீடுகளையும் கட்ட போகிறோம் என்றால் அது நம்மால் முடியவே முடியாது. இருபது முப்பது மில்லியன் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் அது மண்ணால் மட்டுமே முடியும்.”

நமது வீடுகளில் நமக்கு தங்குவதற்கு இடம் வேண்டும், தூங்குவதற்கு மூன்று இடங்கள் வேண்டும், தந்தையும் தாயும் உறங்க வேண்டும், ஆண் பிள்ளைகள் உறங்க வேண்டும், பெண் பிள்ளைகள் உறங்க வேண்டும். சமையலுக்கும் ஒரு இடம் வேண்டும். இவற்றில் சின்ன சின்ன மாறுதல்கள் தேவைப்படலாம். மண், லடேரிட், மூங்கில் கல் என பலவற்றை கொண்டு சாதிக்கலாம். கட்டிடவியல் என்பது எவை நல்லவையோ, எவை பயனுள்ளதோ, எவை நடைமுறைக்கு உகந்ததோ அவைகளை பற்றிய விதிமுறைகளின் தொகுப்பு தான். இவ்வகையில் இசைக்கு அது மிகவும் நெருக்கமானதும் கூட” என கருதினார்.

“அழகு என்பது உண்மையை பொருத்த ஒன்று தான். கல் கல்லை போல் இருக்க வேண்டும். செங்கல் அதைப்போல் இருக்க வேண்டும்.நாம் பொருட்களை அதன் இயல்புக்கு ஏற்ப பயன்படுத்தினால், பிரம்பு, மூங்கில், செங்கல், கல் என எது பயன்படுத்தினாலும் அதுவே அழகாக இருக்கும்.” எவ்வித அழகியலும் இல்லாத தட்டையான கான்க்ரீட் வீடுகள் செல்வாக்குடன் இருந்த காலத்தில் பேக்கர் முகப்பு சரிவுகளை அமைத்தார். மழை அதிகம் பொழியும் கேரளத்தில் மரபான வீடுகளின் கூரைகள் சரிவுடன் தான் கட்டப்பட்டன. அதையே பேக்கரும் கையாண்டார். இந்திய கட்டிடங்களின் மகத்தான பாரம்பரியங்களை அவர் உணர்ந்தே இருந்தார். திருவனந்தபுரத்தில் பழங்கால கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்ட ஆவன செய்யப்பட்ட போது அவர் அதை எதிர்த்தார். இங்கு கட்டப்படும் நவீன கட்டிடங்களுக்கும் கேரள சூழலுக்கும், அங்கு கிடைக்ககூடிய பொருட்களுக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் எவ்வித தொடர்பையும் தன்னால் காண முடியவில்லை என்றார்.

பேக்கர் அகில உலகில் பல அங்கீகாரங்களை பெற்றிருந்தாலும், 1988 ல் இந்திய குடிமகனாக அங்கீகரிக்கபட்டதை மிகப் பெரிய பெருமையாக கருதினார். அதன் பின்னர் பத்ம ஸ்ரீ விருது அளித்து கவுரவிக்கபட்டார். பேக்கரும் அவர் மனைவி எலிசபெத்தும் மூன்று குழந்தைகளை தத்தெடுத்தனர். திலக் எனும் ஆண் பிள்ளையையும், வித்யா ஹெய்டி எனும் இரு பெண் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்தனர். ஏப்ரல் ஒன்று, 2007 அன்று தன்னுடைய தொண்ணூறாவது வயதில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தார்.

பேக்கரின் மிக முக்கியமான பங்களிப்பு என்பது நவீன கட்டிடவியலில் உள்ள இந்தியத்தன்மை என்ன என்பதை இந்தியர்களுக்கு உணர்த்தியது. சூழலியல் பிரக்ஞையுடன், இயற்கையின் நீட்சியாக அதே சமயம் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் விதமாக, சிக்கனமாக மனிதர்களின் வசிப்பிடங்களை உருவாக்க முடியும் என உணர்த்தியது இந்தியர்களுக்கும் உலக மக்களுக்கும் அவரளித்த மகத்தான பங்களிப்பு என உறுதியாக கூறலாம்.

லாரி பேக்கர் வடிவமைத்து கட்டிய 3 மாடிகள் கொண்ட வீடு
 அவருடைய இரண்டு மேற்கோள்களை நினைவு கூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும்..“உயர் குடி, மத்திய வர்க்கம், ஏழை, பழங்குடிகள், மீனவர்கள் என வெவ்வேறு வர்க்கத்தினருக்காக நான் கட்டிடங்கள் கட்டுவதில்லை. நான் ஒரு மேத்யுவிற்கும், ஒரு பாஸ்கரனுக்கும், ஒரு முணீருக்கும், ஒரு சங்கரனுக்கும் தான் கட்டிடம் கட்டுகிறேன்.”

“இன்னும் எத்தனையோ மக்கள் கட்டிடம் என்று அழைக்கப்படும் ஒன்றுக்கு அருகில் கூட இல்லை என்பதை எண்ணி நாம் வெட்கப்பட வேண்டாமா? நாம், கட்டிடகலை நிபுணர்களாக, உயர்ந்த தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்களாக, இந்த பிரம்மாண்ட தேவையை போக்க மிகக் குறைவாகவே செயல்படுகிறோம். கட்டிடத்தை விட்டுவிடுங்கள், சிறிய குடிசை கூட இல்லாமல் இருபது மில்லியன் குடும்பங்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள். நாமும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதித்து கொண்டிருக்கிறோம் என்பது வெட்கக் கேடானது.”

பேக்கர் கவலைபட்டது நியாயம் தான். புள்ளி விவரங்களில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம். அந்த கேள்வி இன்னும் வீர்யமுடன் தான் இருக்கிறது. விடையை நோக்கிய பயணம் இன்னும் நெடுன்தொளைவை அடைய வேண்டியிருக்கிறது. 


====0000====
நண்பர்களே கட்டுரையை முழுதும் படித்து விட்டீர்களா?உங்களுக்கும்,லோ காஸ்ட் ஹவுசிங்,சஸ்டய்னபிள்,ஈகோ ஃப்ரெண்ட்லி ஹவுசிங் பாணியில் வீடு கட்டிக்கொள்ள ஆசை எழுந்தால் பாண்டிச்சேரியின் அருகே இருக்கும் ஆரோவில் எர்த் இன்ஸ்டிட்யூட்டை அணுகலாம்.
இந்த நிறுவனம் நம் கட்டுமானம் நடக்கும் இடத்தில் இருக்கும் மண்ணை வெட்டி எடுத்து சுத்தம் செய்து அதை அவர்களின் சிறப்பு பயிற்சி பெற்ற கட்டுமானக்குழுவினரால், கம்ப்ரெஸ்ட்  எர்த் ப்ளாக்குகளாக தயாரித்து, அதை நீரில் மூழ்கவிட்டு க்யூரிங் செய்து, கட்டுமானத்துக்கும் பயன்படுத்துகின்றனர், மிகவும் அவசியமான  இடங்களில் லின்டெல்கள், ரூஃப் ஸ்லாப்பிற்காக சிமென்ட் காங்கிரீட் பயன் படுத்துகின்றனர்,
இரும்புக் கம்பிகளும் அப்படியே, தவிர வீட்டின் கூரைகளுக்கு இவர்கள் ஃபில்லர் ஸ்லாப் மட்டுமே பயன் படுத்துகின்றனர், ஃபில்லிங்கிற்காக மங்களூர் ஓடுகளை யோ,அல்லது பான் ஓடுகளையோ கம்பிகளுக்கு இடையே அடுக்கி கூரைக்கு காங்கிரீட் ஜல்லி போடுகின்றனர்,இவர்களே 800 சதுர அடி முதலான நகரும் வீடுகளுக்கு [movable houses] டிசைன் செய்து கட்டுமானமும் மிக துரிதமாக செய்து தருகின்றனர்.http://www.earth-auroville.com/ மேலும் இந்த சிறப்பு பயிற்சியையும் அவ்வப்பொழுது ஆரோவில்லில் 15 நாள் பாடமாக வழங்குகின்றனர்.சுட்ட செங்கல்லை விட கம்ப்ரெஸ்டு மட் ப்ளாக் இன்னும் பலம் வாய்ந்தது,அளவு பெரியது,சுற்றுப்புறச் சூழலை கெடுக்காதது.இவர்களுடைய குழு தான் தியானலிங்கம் இருக்கும்,மேசன்ரி டோமை கட்டியவர்கள். http://www.earth-auroville.com/moveable_house_en.php

ராஜீவ் கொலைக்கு நியாயம் கேட்டு புழுவாய் துடிக்கும் வஞ்சமில்லா உள்ளங்களே!!! ஐந்து நிமிடம் ஒதுக்கி இதைப் படியுங்கள்.


பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்
பேரறிவாளன் பேட்டரி தேவைக்கான காரணத்தை அறிந்தே தான்  வாங்கித் தந்தாராம்,ஆனால் தெரியாது என பொய் சொல்கின்றாராம்,வயதான தாயை வைத்து மக்களிடம் இரக்கம் சம்பாதிக்கிறாராம். அதனால் அவரை அவசியம் தூக்கில் போட வேண்டுமாம்,மீண்டும் அறிவு ஜீவிகள் பிதற்ற ஆரம்பித்து விட்டனர்,ஆனால் அவர்கள் கீழ்கண்டவற்றை வசதியாக மறந்துவிடுவார்கள், கண்ணை திறந்து கொண்டே தூங்குவார்கள்,

இவர்களுக்கு யாராவது தூக்கில் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும், 1800களில் சதி என்னும் உடன்கட்டையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களே?!!! மூடர்கள் ,அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?ஃப்ரெஞ்சுப் புரட்சியின் போது ஜில்லெட்டினில் வீழ்த்தப்பட்ட அறிஞர்கள் , எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள்,அவர்கள் மனைவி குழந்தைகள்  தலைகளை சதுக்கத்தில் கூடி குரூரமாக வேடிக்கை பார்த்தார்களே பெர்வெர்ட்டுகள், அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?!!! நாட்டில் எது எப்படி நடந்தாலும் இந்த 3 பேரை அவசியம் தூக்கில் போட வேண்டும்.

ராஜிவ் கொலை வழக்கை,சரியாகவே விசாரிக்கவில்லை என்பது தானே நடந்த உண்மை,ராஜீவ் கொலை குறித்து பேரறிவாளனுக்கு மட்டும் தான் முன்கூட்டியே தெரியுமா? ஏன் அப்போதைய ஜனதா தள சென்ட்ரல் மினிஸ்டர் சுப்பிரமணியசாமிக்கு தெரியாதா? ஆர்டிஎக்ஸ் பெல்ட்பாம் பூஜை செய்து ஆசியளித்த அரசியல் ப்ரோக்கர் கம் போலிச் சாமியார் சந்திராசாமிக்கு தெரியாதா?

ஒரு முக்கிய அரசியல்வாதி டில்லியில் இருந்து வந்தால் எப்படி ஜால்ரா அடிப்பார்கள்? லோக்கல் அல்லக்கைகள்,ஆனால் அன்று அங்கே ஸ்ரீபெரும்புதூரில் 1991மே21 நடந்தது என்ன?ஒரு முன்னாள் பிரதமர்,அதுவும் புனிதப்பசு குடும்பத்தின் ஒரே வாரிசு,அவர் மனது வைத்தால் கிடைக்கும் ராஜயோகம்,இரவு 10-00 மணி வேறு , கொடிய கத்திரி வெயில் புழுக்கம் வேறு,திசைக்கொன்றாக விசிறிக்கொண்டே இருக்க மாட்டார்கள் அல்லக்கைகள்?

 போலீசாரின் பாதுகாப்பை விட அல்லக்கைகள் பாதுகாப்பு ஒரு அரசியல்வாதிக்கு எத்தனை அவசியம்?,தலைவரின்  கடைக்கண் பார்வைக்கு எப்படி ஏங்குவார்கள் அல்லக்கைகள். யாராவது அந்தண்டை இந்தண்டை அவரை விட்டு விலகுவார்களா? பிரியாணி இலைக்கு அடித்துக்கொள்ளும் நாய் போல அல்லவா?  நான் நீ என போட்டி போட்டு அவரை சுற்றி ஈயாக மொய்த்து எடுப்பார்கள்?

ஆனால் நடந்த உண்மை நிலவரம் என்ன? அங்கே பெங்களூர் நெடுஞ்சாலையில்,இரவு 10மணி வாக்கில் புதிதாய் இந்திரா சிலையை திறக்கும் வரை உடன் இருந்துவிட்டு ராஜிவ் மேடையை நோக்கி நடக்கையில் கமுக்கமாக, லாவகமாக, கழண்ட விஐபிக்கள் மூப்பனார்,ஜெயந்தி நடராஜன்,வாழப்பாடியார்,இத்யாதி, அவர்கள் யாருக்குமே தெரியாதா? ராஜிவ் சாகப்போகிறார் என்று? அன்று கூட்டத்துக்கு வராமல் போன கூட்டணித் தலைவி அம்மா, அவருக்கு தெரியாதா? ராஜிவ் சாகப்போகிறார் என்று?

அப்படி அவர்களுக்கு அந்த உண்மை தெரியாமல் போயிருந்தால்,இந்திய பொதுவுடமைக் கட்சி தலைவரான தா.பாண்டியன் போல அவர்களும் குண்டுவெடிப்பில் சிக்கி பலத்த காயமடைந்திருப்பார்கள் அல்லவா?. பொதுவுடமைக் கட்சியின் கூட்டணித்தலைவர் தா.பாண்டியன் ராஜீவ் பேசுவதை மொழிபெயர்க்க உடன் வந்து பலத்த காயமடைகிறார்,ஆனால் ராஜீவின் கட்சியைச் சேந்த முத்த தலைவர்களுக்கு எந்த கிறலுமே இல்லை.நகைப்புக்கிடமாக இல்லை?

ஹரிபாபு எடுத்த புகைப்படத்தில் தற்கொலைப் போராளி தணுவின் நெற்றியில் பொட்டு கிடையாது,ஆனால் இறந்து போன  தணுவின் நெற்றியில் இருக்கும் பொட்டு எப்படி வந்தது? அந்த துக்க கரமான நேரத்திலும்,மரண ஓலத்துக்கிடையே ,நேரம் ஒதுக்கி பொட்டு வைத்த மேக்கப் ஆர்டிஸ்ட் யார்?[குற்றத்தை இழைத்தவர்களை  தமிழ் இந்து கொலையாளியாக சித்தரிக்க நடந்த வேலை என்று தெரியவில்லையா?]

கொலைக்கான சூத்திரதாரி ஒற்றைக்கண் சிவராசன்  விடுதலைப்புலிகள் குழுவை சேர்ந்தவன் என்று சுப்ரமணியஸ்வாமி பரப்பிய அவதூறின் ரீதியிலேயே குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டன, சிவராசனின் சாயல் தமிழனுக்கு உரிய சாயலே அல்ல.சிங்களனுக்கு உரிய தோற்றம் கொண்டவன் சிவராசன்.அவன் படத்தை உற்றுப் பார்த்தால் ராஜபக்சேவின் சிங்கள் தோற்றம் நன்கு புலப்படும்,சிவராசன் விடுதலைப் புலிகள் குழுவை சேர்ந்தவன் என்பதற்காக சிபிஐ முன்வைக்கும் வலுவான ஆதாரம் தான் என்ன?சிவராசனுக்கும் சந்திராசாமிக்கும் சுப்பிரமணியஸ்வாமிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தான் என்ன?இதை குறித்து வாக்குமூலம் கொடுத்த 26ஆம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பெங்களூர் ஜெயராம் ரங்கநாத்தின் முக்கிய சாட்சியத்தை நீர்த்துப் போகச் செய்ததன் மர்மம் தான் என்ன?
http://www.outlookindia.com/article.aspx?204696

இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள்,குண்டு வெடிக்கப்போவது தெரியாமல் அன்று ஒற்றைக்சிவராசனால்  தினக்கூலி பேசி பஸ்ஸில் கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட லோக்கல் போட்டோக்ராப்பர் ஹரிபாபு போடோக்களாக எடுத்துத் தள்ளியியபடியிருந்தார், கடைசி ஐந்து நிமிடம் முன் சிவராசன், நளினி எல்லோருமே அகன்றும் ஹரிபாபுவுக்கு இது தெரிவிக்கப்படவில்லை, அதனால் அவர் மிகவும் பரிதாபமாக பலியானார், அதே போன்றே பேரறிவாளனுக்கும் ராஜீவ் கொலைக்கான சதி தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா?!!! இல்லையா?!!!

ஏன் திருச்சி வேலுச்சாமியின் மனுவின் ரீதியில் சிபிஐ வழக்கை விசாரிக்கவில்லை? சந்திராசாமிக்கு ஏன் அப்படி ஒரு விஐபி அந்தஸ்து? வேண்டுமென்றே சுப்பிரமணியசாமி+சந்திராசாமியை ஏன் தப்பவிட்டனர்? அவர்களை ராஜீவ் மீது விசுவாசம் கொண்ட காங்கிரசார் கூட எதுவும் செய்யவில்லையே? ஏன் அந்த பயம்?

 சரி ,மே 2009 சுப்ரீம் கோர்ட்டு சந்திராசாமியின் மீதான வெளிநாட்டு பயணத்தடையை ஏன் திடீரென விலக்கிக்கொண்டது?அவருக்கு ஜவாப்தாரி கையெழுத்து போட்டது யார்?  2009 மே மாதமே,போபால் கொலைகாரன்,வாரன் ஆண்டர்சன் போல நாட்டை விட்டு தப்பி ஓடிய சந்திராசாமி  இப்போது எங்கே இருக்கிறார்? அது யாரைக் கேட்டால் தெரியும்? தகவல் அறியும் சட்டத்தில் கேட்டால் தெரியுமா?!!!

ராஜீவுடன் சேர்த்து 14 பேர் பலியானர் என அரசின் கணக்கு சொல்கிறது, ராஜீவாவது இலங்கையிலும் ,கிழக்கு தில்லியிலும் விதைத்ததற்கு அறுவடை செய்தார் எனலாம், ஆனால் அந்த அப்பாவிகள்  13 பேர் செய்த பாவம் என்ன?அவர்களுக்காக வேண்டியேனும் இவ்வழக்கின் உண்மையான குற்றவாளிகளை விசாரித்து தண்டனை தரக்கூடாதா?

இன்னும் ஒரு விஷயத்தை தயவு செய்து யோசியுங்கள், விடுதலைப் புலிகள் (LTTE)  இயக்கம் போன்றே சுமார் 40க்கும் மேற்பட்ட போராட்டக் குழுக்கள் தனி தமிழீழம் வேண்டி துப்பாக்கியுடனும் சயனைட் குப்பியுடனும் போராடி வந்தன,அவற்றை சாம,பேத,தண்டம் ஆகிய மூன்று நெறிமுறைகளையும் பிரயோகித்து ஒரே குடைக்குள் கொண்டு வந்தவர் மேதகு [ஒரே] புரட்சித்தலைவர் பிரபாகரன்.இவர் சேகுவாரேவையும் மிஞ்சும் நெஞ்சுரம் கொண்ட வீரர் என்றால் மிகையில்லை.

இந்த 40க்கும் மேற்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த எல்லோருக்கும் ஏன் சிங்களர்களுக்கும் கூட ராஜிவ் அனுப்பிய அமைதிப்படை மீதும் ராஜிவ் மீதும் அளவு கடந்த வெறுப்பு இருந்தது, அதில் எஞ்சிய வீரர்கள் யாரேனும் கூட ராஜீவ் படுகொலை என்னும் அகில உலக சதிக்கு துணை போயிருக்க வாய்ப்பிருக்கிறதா? இல்லையா? ஒரே கல்லில் ராஜீவையும் வீழ்த்தி ஆறாத பழியையும் பிரபாகரன் மீது சுமத்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கலாமா? இல்லையா?!!!
 தமிழீழ போராட்டத்துடன் தொடர்புடைய  ஈழ இயக்கங்கள் பட்டியல்
http://ta.wikipedia.org/wiki/தமிழ்_ஈழம்
http://ta.wikipedia.org/wiki/ஈழ_இயக்கங்கள்

  1. தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)
  2. தமிழர் விடுதலை இயக்கம் (TLO - 1974-1978)
  3. இந்திய இலங்கை இணைப்பு இயக்கம் (ICMM - 1971-1980)
  4. தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1977 - 1983) (TPDF)
  5. தமிழர் விடுதலைக் கூட்டனி (TULF) அரசியல் கட்சி
  6. தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)
  7. தமிழீழ விடுதலை இயக்கம் (TELO)
  8. ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (EROS)
  9. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (EPRLF)
  10. ஈழ தேசிய விடுதலை முன்னணி TELO.EROS.EPRLF.LTTE (ENLF)
  11. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
  12. தமிழீழ விடுதலை இராணுவம் (TELA)
  13. தமிழீழ இராணுவம் (TEA)
  14. புர‌ட்சிக‌ர‌ ஈழ விடுத‌லை இய‌க்க‌ம் (RELO)
  15. தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT)
  16. தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (PLFT)
  17. தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை (TPSO)
  18. த‌மிழீழ‌ விடுத‌லை தீவிர‌வாதிக‌ள் (TELE)
  19. தமிழீழ புரட்சி அமைப்பு (TERO)
  20. தமிழீழ விடுதலை கெரில்லாக்கள் (TELG)
  21. த‌மிழீழ‌ செம்ப‌டை (RFTE)
  22. த‌மிழீழ‌ தேசிய‌ இராணுவ‌ம் (TENA)
  23. ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENDLF)
  24. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)
  25. த‌மிழீழ‌ பாதுகாப்பு ப‌டை (TEDF)
  26. ஈழ விடுத‌லை புலிகள் (ELT)
  27. தமிழீழ மக்கள் கட்சி (TEMP)
  28. த‌மிழீழ‌ கொரில்லா இராணுவ‌ம் (GATE)
  29. தமிழீழ புதிய சனநாயகக் கட்சி (NDPT)
  30. த‌மிழீழ‌ க‌ழுகு முன்ன‌ணி (TEEF)
  31. இல‌ங்கை விடுத‌லை த‌மிழ் இராணுவ‌ம் (IFTA)
  32. ஈழ‌ புர‌ட்சி கம்யூனிஸ்ட் கட்சி (ERCP)
  33. த‌மிழீழ புர‌ட்சிக‌ர ம‌க்க‌ள் விடுத‌லை இராணுவ‌ம் (TERPLA)
  34. க‌ழுகு ப‌டை (EM)
  35. த‌மிழ‌ர் பாதுகாப்பு பேர‌வை
  36. த‌மிழீழ‌ விடுத‌லை நாகம் ப‌டை / கோப்ராக்க‌ள் (TELC)
  37. த‌மிழீழ‌ கொமாண்டோக்க‌ள் (TEC)
  38. ஈழ விடுதலை பாதுகாப்பு முன்னணி (ELDF)
  39. தமிழ் மக்கள் பாதுகாப்பு முன்னணி (TPSF)
  40. மக்கள் விடுத‌லை கட்சி (PLP)
  41. ச‌மூக‌ புர‌ட்சி ச‌மூக‌ விடுத‌லை (SRSL)
2000 ஆண்டுகளுக்கு பின் உருவாகிய இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்
  1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) அரசியல் கட்சி
  2. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP)
  3. சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (Sri TELO)
  4. தமிழ் தேசிய மக்கள் முன்னனி (TNPF) அரசியல் கட்சி
  5. தமிழ் தேசிய முன்னணி (TNF)

http://rajivgandhi-assassination.blogspot.ae/ மக்கள் எளிதில் மறப்பவர்கள்,அதனால் தான் ராஜிவ் கொலை வழக்குக்கென்றே செயல்படும் இந்த பிரத்யேக புக்மார்க்கிங் தளம்,அதில் உள்ள பதிவுகளையும் அவசியம் படியுங்கள்.

இந்த திருச்சி வேலுச்சாமி சூர்யகதிருக்கு தந்த முக்கியமான பேட்டியை அவசியம் படியுங்கள்
இன்று மின்னஞ்சலில் பரபரப்பாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் என்ற செய்தியாகும். இந்த மின்னஞ்சல் அப்படியே இங்கே தரப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.

உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்..

என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?

1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரே… தெரியுமே.. என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை. இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.

அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’

சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..

நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம்.

பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார்.

நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’ என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’

அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?

இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள். படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.

மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.

வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன்.

என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டு ‘சரி போய் வாருங்கள்’ என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்’ என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன்.

அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’

சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?

அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.

நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.

பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’

சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது?

ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லை’ என்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார்.

சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.

மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை.

அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.

இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.
எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.

தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.

ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?

அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.

சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.

சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.

என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அந்தளவிற்கு அது முட்டாள்தனமான இயக்கமும் அல்ல. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து!

நன்றி – சூரியகதிர்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)