கமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்

https://youtu.be/yt_4XWGOiy8

இங்கேயும் அங்கேயும் ஒரே முகம் இரட்டை வேடம் போடுமா?!!!

சத்யா [1988] படத்தில் வெளிவராத பாடல் இது , இசைஞானிக்கு எல்லா பாடல்களுமே செல்லம் தான்.வெளிவருமா வராதா?என்று தெரியாத ஒரு நம்பருக்கும் என்ன ஒரு ஸ்பெஷல் கவனம் பாருங்கள்.இது நாயகனை நினைத்து நாயகி ஏங்கிப் பாடும் பாடல் என்று கமல்ஹாசனோ சுரேஷ் கிருஷ்ணாவோ இசைஞானியிடம் சிச்சுவேஷன் சொல்லி பிறந்த பாடலாக இருக்கும்.

வாலியின் வரிகளை லதா மங்கேஷ்கர் பாடி தூள் செய்திருக்கிறார்.படத்தின் கேசட்டில்கூட இப்பாடல் இடம் பெற்றிருக்காது.

ஆலோலம் பீலிக்காவடி சேலில் என்ற பரீட்சார்த்த பாடல்

https://youtu.be/l4AE-oNbG54

ஆலோலம் , பீலிக்காவடி சேலில் நீலமாமல மேலே ஆலோலம்!!! என்ற தாஸேட்டா பாடலை கேட்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது, காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

இந்த  டைட்டில் பாடல் ஆலோலம் மலையாளத் திரைப்படத்தில் வருகிறது, இது 1980 ஆம் ஆண்டு வெளியானது, இசைஞானிக்குள் இருந்த பரீட்சார்த்த வேட்கை தீயாக வெளிப்பட்ட பாடல் இது,

இந்த நாலரை நிமிட பாடலில் இடையே ஜெயதேவர் இயற்றிய கீத கோவிந்தத்தில்  நாராயணனைப் பாடும் அஷ்டபதியில் இருந்து இரண்டு துதிகள் கவனமாக தேர்ந்தெடுத்து  கவளம் ஸ்ரீகுமாரால் பாடப் பட்டன,

உடன் ஒலிக்கும் உடுக்கைச் சத்தம் நம்மை இறைவன் சந்நிதியின் முன்பாக மானசீகமாக நிறுத்தும் தன்மை கொண்டது.

இப்பாடலின் சிச்சுவேஷன் அலாதியானது, நீண்ட காலம்  பிள்ளையில்லா தம்பதிகளான பரத்கோபியும், கே.ஆர்.விஜயாவும் மகன் பிறந்த சந்தோஷத்தில் நாராயணன் சந்நதியில் நேர்த்திக் கடன் செலுத்துகையில் வரும் பாடல், இப்படத்தின் ஒளிப்பதிவு ராமச்சந்திர பாபு.இயக்கம் மோகன்.

முதல்  பல்லவியில் வரும் அஷ்டபதியில் இருந்து அவர் சேர்த்த
சகிஹே கேஷி

சரணத்தில் அஷ்டபதியில் வரும்

ப்ரியே சாரு ஷீலே

என்ற அடிகளைக் கேளுங்கள் , வேறு மொழி, வேறு கலாச்சாரம், இசைஞானிக்கு எத்தனை வேட்கை? எத்தனை ஆர்வம் ? அது இத்தனை இனிமையான பாடலாக ஒரு வெகுஜன சினிமாவில் உருமாறியுள்ளதைப் பாருங்கள்.

கீத கோவிந்தம் பாடலை படிக்க இங்கே
https://gitagovinda.wordpress.com/2012/11/22/ashtapadi19/

ஹெய்ல் ஸீஸர் பிடித்த காட்சி2

https://youtu.be/gRT-KZwOLLQ
இது ஹெய்ல் ஸீஸர் படத்தில் வரும் மிக அருமையான காட்சி, ஸ்டுடியோ அதுவரை தங்கள் கவ்பாய் படத்தில் நடித்து வந்த ஹோபி டோய்ல் (Alden Ehrenreich) என்ற நடிகரின் ஆக்‌ஷன் நடிகர்  இமேஜை ஒரே இரவில் மாற்றி அவரை பால் நியூமேன் போல மெத்தட் ஆக்டிங் வல்லுனராக மாற்ற தீர்மானிக்கிறது.

அவரை ஸ்டுடியோ தயாரிக்கும் மற்றொரு காதல் தோல்வி அடைந்தவன் கதையில் பிரதான நாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்கிறது.

இதன் இயக்குனர் லோரென்ஸ் நம்முடைய மனம் கவர்ந்த ரால்ப் ஃபியான்ஸ், இதில் ரோமன் பொலன்ஸ்கி போன்ற ஒரு அமெரிக்காவில் படம் இயக்கும் ஜரோப்பிய இயக்குனர், இவர் தலையில் இந்த கவ் பாய் நடிகர் ஹோபி டோய்ல் கட்டப்பட அவருக்கு வசன உச்சரிப்பை சொல்லித் தரும் இந்த காட்சி அபாரமானது, எத்தனை அழகாக படமாக்கப்பட்ட காட்சி இது?!!!

Would that it were so simple?

என்ற இவ்வசனமே கோயன் சகோக்களின் இப்படத்துக்கு டாக்லைனாக இருந்திருக்க வேண்டும்,தங்கள்   ஒவ்வொரு படத்திலும் ஒரு சிக்னேச்சரான வசனத்தை வைப்பார்கள் , இதில் வுட் தட் இட்வேர் ஸோ ஸிம்புள்? என்ற டங் ட்விஸ்டர்.

கடைசியாக பொறுமை இழந்த இயக்குனர் லோரென்ஸ்,வசனத்தை that was complicated என்று மாற்றி ஹோபியை பேச வைத்து, தன்னை சமாதானம் செய்து படமாக்கியவர் ஸ்டுடியோவை திருப்தி  செய்வார்.

ஹெய்ல் ஸீஸர் பிடித்த காட்சி1

https://youtu.be/qJzZK5eMrfo

கோயன் சகோதரர்களின் ஹெய்ல் ஸீஸர் படம் ஹாலிவுட்டின் ஸ்டுடியோக்களை துணிவுடன் விமர்சனம் செய்யும் படைப்பு,

இது 1959 ஆம் ஆண்டு நடக்கும் கதைக்களம், இதன் முன்பே ஸ்டுடியோக்களை சித்தரித்து ஹாலிவுட்டில் படங்கள் நிறைய வந்திருந்தாலும் இது போல ஸ்டுடியோக்களின் முகத்திரையை கிழித்து விமர்சனம் செய்ததில்லை.

கோயன் சகோதரர்களின் முந்தைய படைப்பான பார்ட்டன் ஃபிங்க் படத்தில் ஸ்டுடியோக்கள் தமக்கு திரைக்கதை உருவாக்கும் வழமையான போக்கை வெகுவாக கிண்டல் அடித்திருப்பார்கள்.

இதில் ஸ்டுடியோ சம்மந்தப்படிருக்கும் ஒவ்வொரு துறையையும் கிண்டல் செய்து விமர்சித்துள்ளனர்.

இதில் ஹாலிவுட்டின் பிரம்மாண்டமான  ஸ்டுடியோவின் ஃபிக்ஸர் கதாபாத்திரத்தில் ஜோஷ் ப்ரோலின் நடித்திருக்கிறார்,

இவர் கோயன் சகோக்களின் ஆஸ்தான கம்பெனி நடிகர் போன்றவர், இதன் முன்பு நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென் , மற்றும் ட்ரூ க்ரிட் படங்களில் வந்தவர்,

கார்ஜ் க்ளூனி இப்படத்தில் ஸ்டியோவின்  ஆஸ்தான வளர்ந்த கம்பெனி நடிகர்,இவர் தற்போதைக்கு ஸ்டுடியோவின் பந்தயக் குதிரை போன்றவர். ஸடு்டியோ தற்போது இவரை வைத்து ஹெய்ல் ஸீஸர் என்ற சரித்திரப் படத்தைத் தயாரிக்கிறது, ஸ்டுடியோ பிடித்த பிடிக்கெல்லாம் உருமாறும் களிமண் போல தன்னை அற்பணித்திருக்கிறார் க்ளூனி.

அன்று கார்ஜ் க்ளூனி படப்பிடிப்பில் மன்னன் ஸீஸராக நடித்துக் கொண்டிருக்கையில் , அவர் அருந்தும் டம்மி ஒயினில் , படப்பிடிப்பில் நடிக்கும் எக்ஸ்ட்ராக்கள் இருவரால் மயக்க மருந்து கலக்கப்படுகிறது,

அதை வசனம் பேசிய படி முழுவீச்சில் அருந்திய க்ளூனிக்கு மயக்கம் வருகிறது, அவர் பேச வேண்டிய வசனமும் ஸ்டுடியோ நிர்வாகத்தால் மாற்றப் பட, அவர் வசனத்தை உரு போட்டபடி வெளியேறி கழிவறை சென்று திரும்புகையில், எக்‌ஸ்ட்ராக்கள் இருவரால் கடத்தப்படுகிறார்,

அந்த எக்ஸ்ட்ராக்களுக்கு கம்யூனிஸ்ட்களுடன் தொடர்பிருக்கிறது, அவர்களின் சித்தாந்தத்தால் பீடிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவில் கம்யூனிஸம் வேரூன்ற வேண்டும் என்ற நல்ல நோக்கில் இந்த கடத்தலுக்கு உதவுகின்றனர்,

க்ளூனி ஸ்டுடியோவுக்கு திரும்ப வேண்டும் என்றால் 100000 டாலர் பிணையாகக் கேட்கின்றனர், அவரை மாலிபு என்ற இடத்தில் கடற்கரை சொகுசு மாளிகை ஒன்றில் கொண்டு சேர்க்கின்றனர்,

அங்கே கண்விழிக்கும் க்ளூனி, அங்கே நடக்கும் ரகசிய கம்யூனிஸ்ட் அனுதாபிகளின் ஒன்று கூடல் நிகழ்வில் கலந்து கொள்கிறார்,

அந்தக் குழுவில் ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கு சொற்ப வருமானத்துக்கு வேலை செய்யும் சிறந்த கதாசிரியர்கள், துணை நடிகர்கள், தொழிற்நுட்பக் கலைஞர்கள் திரண்டிருப்பதைப் பார்க்கிறார்,

ஸ்டியோக்கள் அவர்களை உபயோகித்து பல மில்லியன் டாலர்கள் ஈட்டியதையும், தன்னையும் சுரண்டிக் கொண்டிருப்பதையும் மெல்ல அறிகிறார், அவர்களுள் ஒருவராக மாற எத்தனிக்கிறார்.கடத்தலுக்கு ஒத்துழைத்து உடன் படுகிறார்.

ஒரு வழியாக ஸ்டுடியோவின் சக வீர தீர நடிகர் ஒருவர் துப்பறிந்து க்ளூனியை மீட்டு வருகிறார், ( வழமையான கோயன் படங்களின் கோட்பாடின் படி ஸ்டுடியோவால் தரப்பட்ட பிணைப்பணமான 100000 டாலர்கள் கொண்ட பெட்டி யாருக்கும் பயனின்றி கடலுக்குள் போய்விடும்)

ஸ்டியோவுக்குள் வந்து ஃபிக்ஸர் ஜோஷ் ப்ரோலின் மேசையின் மீது கால் வைத்த படி கம்யூனிச சித்தாந்தங்களை வியந்த படி பேசுகிறார் க்ளூனி, அக்காட்சியில்  தன் ஸ்டுடியோ முதலாளியும் ஸ்டுடியோவும் இவரால் சீண்டப்பட்டு காயப்பட்டதில் வெகுண்டு எழுந்த ஜோஷ் ப்ரோலின் கார்ஜ் க்ளூனி என்ற மக்கள் மனதில் பிரம்மாண்டமாக பதிந்த ஒரு நட்சத்திர நடிகரை ஆறு முறை அழுத்தமாக அறைவதைப் பாருங்கள் ,

அதுவும்   டைட் க்ளோஸப்பில் படமாக்கப்பட்ட காட்சி இடையே அவருக்கு க்ளூனியை முழு வீச்சில் எச்சரித்து இயல்பு வாழ்க்கைக்கு திருப்பும் வசனங்களும் உண்டு, க்ளூனி கௌரவவே பார்க்காமல் ஏற்ற பாத்திரமாக மாறும் மகா நடிகர் என்பதற்கான மற்றொரு சான்று,

இது கோயன் சகோக்களுடனான இவரின் நான்காம் படம்,இவருக்கு கோயன்கள் வழங்குவது எல்லாமே ஒரு மாதிரி மறை கழன்ற, அல்லது விட்டேர்த்தியான மைய நாயகன், அல்லது துணை கதாபாத்திரங்களே.(ஓ ப்ரதர் வேர் ஆர்ட் தோ?, இன்டாலரபிள் க்ரூயல்டி, பர்ன் ஆஃப்டர் ரீடிங்)

ஜோஷ் ப்ரோலினுக்கு இதில் ஸ்டுடியோவின் பிரதான ஃபிக்ஸர் வேடம், அதை திறம்பட செய்திருக்கிறார், நம் சென்னை ஸ்டுடியோக்களிலும் இவர் போல எத்தனை ஃபிக்ஸர்கள் இருந்திருக்க வேண்டும்,ஸ்டுடியோக்கள் கோலோச்சிய காலத்தில்  எத்தனை நடிகர் , நடிகைகளை , பிற வல்லுனர்களை ஆட்டுவித்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

கோயன் சகோக்களின் ரசிகர்கள் தவறவிடக் கூடாத படம்,

கபாலி

எங்கள் மூன்று பேருக்காக கபாலி ,மகிழ்வதா? வேதனைப்படுவதா? ,நான் hand rest ஐ தூக்கிவிட்டு படுத்துக் கொண்டு பார்த்தேன்.பக்கத்து திரையிலும் கபாலி தான் அது அதிகாலை 1.30 மணிக்கு ஆரம்பித்தது , ஆனால் அக்காட்சிக்கு அரங்கு நிறைந்ததா தெரியவில்லை,இன்று  பகல்காட்சிக்கு சீட் ஹவுஸ் ஃபுல் அதற்கு டிக்கட் கிடைக்கவில்லை.

காலை 5 மணிக்கு படம் முடிந்தது, இது அதிகாலை 2-00 மணிக்கு துவங்கியக் காட்சி, ஆன்லைனில் புக் செய்கையில் இந்த இரண்டும் கெட்டான் காட்சிக்கு 400 சீட்களில் 100 ஆவது புக் ஆகியிருந்த்து,

ஆனால் ஏன் புக் செய்தவர்கள் வரவில்லை எனத் தெரியவில்லை ?, இணைய விமர்சனங்களால் நொந்து போய் ஏன் ரெண்டும் கெட்டான் காட்சிக்கு போக வேண்டும் என நினைத்தனரா? தெரியவில்லை.

இது போல அரங்கு நிறையாத காட்சிகள் மிகவும் ஆபத்தானவை, முழுப்படத்தையும் ஒரு விஷமி தன்  மொபைல் போனில் பதிவு செய்து இணையத்தில் ஏற்றி விட வழி வகுப்பவை, இனிவரும் நாட்களில் இதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் திரையுலகம்.
=====

கபாலி நல்ல படம், இந்த பில்லா1 , 2 ,மங்காத்தா போன்ற படங்களையே ஹைப் ஏற்றி விட்டு வேடிக்கைப் பார்ப்பவர்கள் இந்த நல்ல படத்தை முதல்நாளே கழுத்தைத் திருகிக் கொல்லத் துடிப்பது ஏன் ? எனத் தெரியவில்லை,

படத்தை வாய்ப்பு கிடைத்தவர்கள் தியேட்டரில் மட்டும் பாருங்கள், அது தான் இந்த கம்ப்ளீட் ஆக்‌ஷன் த்ரில்லரை  முழுதாய் ரசிக்கும் வழி, படம் முழுக்க ரஜினி,படம் முழுக்க ஸ்டைல், படம் முழுக்க ஆக்‌ஷன், படம் முழுக்க டீடெய்ல் என கபாலிக்குழுவே நன்கு உழைத்துள்ளது, அதை மதித்தால் தான் தமிழ் சினிமாவின் தரம் உயரும், இனி ரஜினி படம் என்றால் தளபதி அல்ல, கபாலி தான் பெஞ்ச் மார்க்.

தவிர இது வேற்று நாடான மலேசியாவில் தமிழர் இரண்டாம், மூன்றாம் குடிமக்களாக நடத்தப்படுவதை, அதற்கான துணிச்சலான எதிர்ப்பை திறம்பட இப்படி ஒரு முழுமையான தமிழ் சினிமாவில் பதிவு செய்துள்ளது,ரஜினி போன்ற ஒரு நடிகர் தமிழர் பிரச்சனையைப் பேசுவது, இப்பிரச்சனை என்ன? என்று தெரியாதவர்களுக்கும் இதைக் கொண்டு சேர்த்துள்ளது.

நம் தமிழ் நாட்டுக்கு டாஸ்மாக் போல மலேசியாவில் போதை மாத்திரை, பவுடர் ஆகியவை பொது மக்களுக்கு கடும் அச்சுருத்தல் என்பதை புரிந்து படம் பாருங்கள், அதன் காரணமாக அங்கே பல நூறு மறுவாழ்வு மையங்கள் உண்டு, பல்லாயிரம் சோகக் கதைகள் உண்டு, அங்கே உள்ள கேங்ஸ்டர்கள் எண்களால் தான் அழைக்கப் படுகின்றனர் என்பதையும் அறிக,இதில் வரும் 43 கேங் என்பதும் அப்படி ஒன்று தான்.

கூடவே திருமணத்துக்கு முந்தைய பாலுறவு,டீன் ஏஜ் குழந்தைப்பேறு, பெண் கேங்க்ஸ்டர்கள், எட்டாக்கனி உயர் கல்வி,தமிழருக்கு மறுக்கப்படும் வேலைவாய்ப்பு,  சமத்துவமற்ற வாழ்க்கை முறை, போன்ற தலையாய அச்சுருத்தல்கள்.

அவற்றை ஆனவரை ஒரே திரைப்படத்தில் நம்பகத் தன்மையுடன்  கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்  ரஞ்சித்.கூடவே மிதமான தலித்தியமும் உண்டு.ரஜினியின் உயிர் நண்பர் அமீர் (ஜான் விஜய்) கதாபாத்திரத்தின் நடை உடை பாவனை அனைத்தும் திருமாவளவன் பாதிப்பிலேயே உருவாகியுள்ளது.

மலேயத் தமிழர் கலாச்சாரம் நம் நாட்டைப் போன்றதே, கடல் கடந்தும் அந்த விளக்கு அணைந்து விடாமல் நூற்றாண்டுகளாக காத்து வருகின்றனர்,அங்கும் மாரியம்மன் கோவில்கள், தீமிதி, கிடாவெட்டு, படையல், குறி சொல்லுதல்,முதல் மரியாதை, மசானக் கொள்ளை, ஜோதிடம்,  சூனியம் வைத்தல் ,தீட்டுக் கழித்தல் என எல்லாம் உண்டு. அதைக் கூட சிறப்பாக அந்தந்த இடங்களில் காட்சிப் படுத்தியுள்ளார் ரஞ்சித்.

இதெல்லாம் ரஜினியின் படங்களில் முன்பு அவர் செய்யாதது, அவரை வைத்து படம் இயக்கிய எந்த மூத்த இயக்குனருமே இதன் முன் யோசிக்காதது,

மிகுந்த துணிச்சலான,  மலேய ,சீன பிரதிநிதிகளை எதிர்க்கும்  வசனங்கள் , காட்சிகள்,அதில்  சற்றும் சமரசம் கிடையாது, படம் பிடிக்க உதவினார்களே என்று அவர்களுக்கு முதுகு சொறியவில்லை, மிகுந்த ப்ரொஃபஷனலிஸம் ததும்பும் காட்சிகள், செய்நேர்த்தி,

கோட்டூர்புரம் அடையார் ஹவுஸின் உள்ளே முதன் முறையாக ஒரு காட்சி படமாக்கியுள்ளனர், பாண்டிச்சேரி ஆலோவில்லின் மண் சாலையில் முதல் முறையாக படமாக்கியிருக்கின்றனர், இது போல நிறைய தீஸிஸ் உண்டு, சிறு குறைகள் இருந்தாலும் வெளியே தெரிவதில்லை.

இதையே மெதுவான படம் என்பவர்கள் ரீனோ சீசன் படத்தின் ஆமை வேகத்தில் படம் எடுத்திருந்தால்   என்ன சொல்லுவார்கள்?

நாம் அந்நிய உலகப் படங்களான 22 புல்லட்ஸ், ரீனோ ஸீஸன்,ட்ஜாங்கோ அன்செயின்ட், கில்பில்,  ப்யூட்டிஃபுல் , 21 க்ராம்ஸ் ,அமோர்ரஸ் பெர்ரோஸ், , Rosario Tijeras  போன்றவற்றைத் திரும்பத் திரும்பப் பார்த்து வியப்போம், ஆனால் நம் தமிழில் அதே தரத்தில் ஒரு நல்ல படம் வந்தால் அதைக் கொண்டாடாமல் சேறு வாரிப் பூசுவோம்.என்ன மாதிரி நண்டுகள் நாம்?!!!

யானைகள் ஏன் தேவை? தி இந்து சிறப்பு கட்டுரை

சிறப்புக் கட்டுரைகள்
யானைகள் நமக்கு ஏன் தேவை?
Updated: June 29, 2016 09:46 IST | டி.எல்.சஞ்சீவிகுமார்
  

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வன மண்டலத்தில் ஆறு யானைகளை இழந்திருக்கிறோம். ஐந்து இறந்துவிட்டன. ஒன்று பிடிபட்டு முதுமலை முகாமில் இருக்கிறது. வனத் துறையால் பிடிக்கப்பட்டு வளர்ப்பு அல்லது ‘கும்கி’ யானைகளாக மாற்றப்படும் யானைகளையும் நாம் இழப்புகளாகத்தான் கொள்ள வேண்டும். இறந்துபோன யானைகளின் துயரங்களைக் காட்டிலும் பிடிபட்ட யானைகளுக்கான துயரங்கள் மிக அதிகம். காட்டின் நினைவுகளூடாக அலையும் அடிமை வாழ்க்கை அது.

யானை - மனிதன் எதிர்கொள்ளல் சம்பவங்கள் மற்றும் விபத்தில் சிக்கி யானைகள் இறப்பது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கரை - எட்டிமடை இடையே பெண் யானை ஒன்று ரயில் மோதி இறந்தது. அதற்கு முந்தைய நாள் இதே பகுதியில் பிடிபட்டு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒற்றை யானையும் கடந்த 21-ம் தேதி இரவு இறந்துவிட்டது. இந்த துயரம் ஆறுவதற்குள் 24-ம் தேதி கேரள எல்லையில் அட்டபாடி பகுதியில் சிகிச்சைக்காக மயக்க ஊசி செலுத்தப்பட்ட இன்னொரு யானை இறந்துவிட்டது. இந்த மூன்று யானைகளின் இறப்புகளை ஆராய்வதன் மூலம், நாட்டின் மொத்த யானைகளின் நிலையையும் மதிப்பிட முடியும்.



யானைகள் ஏன் குடியிருப்புகளுக்குள் வருகின்றன?

வனத்தை அழித்துக் குடியிருப்புகள் உருவாக்கப் பட்டுவிட்டன என்பதே இதற்கான பதில். தவிர, வனங்களுக்குள்ளும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டன. வன விலங்குகளுக்கான இந்திய அறக்கட்டளை அமைப்பு, நாடு முழுவதும் 166 வன இணைப்புப் பாதைகளை அடையாளம் கண்டுள்ளது. யானைகள் காலம் காலமாக வலசை செல்லும் மரபு வழிப் பாதைகள் இவை. இவற்றில் 88 இணைப்புப் பாதைகள் மட்டுமே தற்போது இருக்கின்றன.

தமிழக, கேரள, கர்நாடக மாநிலங்களில் கல்லாறு - காந்தப்பள்ளம், நிலம்பூர் - அமரம்பாளையம், சிங்காரா - மசினக்குடி, மாயார் - அவரஹல்லா, கல்லட்டி - சிகூர், அவரஹல்லா - சிகூர், கனியன்புரா - மாயாறு, தலமலை - குத்தியாளத்தூர், தாளவாடி - முத்தஹள்ளி, சாம்ராஜ் நகர் - தலமலை, கரடிக்கல் - மாதேஸ்வரா, தளி, எடையரஹள்ளி, அட்டபாடி, பெரியா, திருநெல்லி - பிரம்மகிரி, பெரியா - கொட்டுயூர், அட்டகட்டி - ஆழியாறு, அய்யர்பாடி நீர்வீழ்ச்சி எஸ்டேட், சிலுவைமேடு - காடாம்பாறை ஆகிய 20 இணைப்புப் பாதைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தியாவில் இருக்கும் சுமார் 30,000 யானைகளில் சுமார் 15,000 யானைகள் இந்த 20 இணைப்புப் பாதைகளில் மட்டுமே வசிக்கின்றன. தற்போது இவற்றில் சுமார் 15 இணைப்புப் பாதைகள் கடும் ஆக்கிரமிப்புகளில் சிக்கியிருக்கின்றன. எனவே, வேறு வழியின்றியே யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன.

தண்டவாளங்களில் எப்படிச் சிக்குகின்றன?

யானைகள் உயரமான மலைச் சரிவுகளையும் மிகக் குறுகிய பாதைகளையும் பெரும் பள்ளங்களையும் அனாயாசமாகக் கடக்கக் கூடியவை. விலங்குகளில் யானைகளே அதிகளவு நுண்ணுணர்வு கொண்டவை. தமிழகத்தில் நடந்த மூன்று ரயில் விபத்துச் சம்பவங்களிலும் யானைகள் சில மணி நேரங்களுக்கு முன்புதான் விரட்டியடிக்கப்பட்டுள்ளன. கடைசியாக நடந்த விபத்தும் அப்படியே.

விபத்து நடப்பதற்கு முந்தைய தினம் இரவு 10 மணிக்கு குருமலை வனத்திலிருந்து மதுக்கரை மரப்பாலம் பகுதிக்கு குட்டியுடன் 6 யானைகள் வந்துள்ளன. மக்களும் வனத் துறையினரும் அவற்றைப் பட்டாசு வெடித்தும் மேளங்களைத் தட்டியும் விரட்டியுள்ளனர். பீதியும் குழப்பமும் அடைந்த அந்த யானைக் கூட்டம் நாலாபுறமும் சிதறி ஓடியிருக்கிறது. இந்தக் களேபரத்தில்தான் அந்தப் பெண் யானை தண்டவாளத்தைக் கடக்கும்போது விபத்தில் சிக்கிவிட்டது.

மதுக்கரையிலிருந்து கேரள மாநிலம் கஞ்சிக்கோடு வரையிலான 25 கி.மீ. தூரம் கொண்ட வனப் பகுதிக்குள் செல்லும் ரயில் தண்டவாளத்தில் ரயில் மோதி யானைகள் இறப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே இரு வேறு விபத்துகளில் ஏழு யானைகள் இறந்திருக்கின்றன. இப்போது இறந்திருப்பது எட்டாவது யானை. இந்த விபத்து நடந்த பிறகு அறிக்கை வெளியிட்டிருக்கும் ரயில்வே நிர்வாகம், ‘ரயில் 35-45 கி.மீ. வேகத்தில்தான் சென்றுள்ளது’என்று சொல்கிறது. ஆனால், ஒருபோதும் அங்கே குறைந்த வேகத்தில் ரயில் சென்றதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள். தவிர, ரயில் 35 கி.மீ. வேகத்தில் சென்றிருந்தால் யானை இறக்கும் அளவுக்குச் சேதம் ஏற்பட்டிருக்காது என்கிறார்கள் வன மருத்துவக் குழுவினர்.

மயக்க மருந்தால் இறக்கவில்லை மகராஜ்

‘ஓசை’ அமைப்பின் காளிதாசன் இதற்கான விளக்கத்தைத் தருகிறார். “மகராஜ் என்று பெயரிடப்பட்ட இந்த யானை, டாப்ஸ்லிப் முகாமில் இறந்தது பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. மயக்க ஊசி அதிகம் போடப்பட்டதால் இறந்துவிட்டது என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன. உணர்ச்சிவசப்படாமல் அறிவியல்பூர்வமாக யோசித்தால் இந்த விஷயத்தில் மருத்துவக் குழுவின் மீது தவறு இல்லை என்பதை அறியலாம். மகராஜ் யானைக்குப் போடப்பட்டது மயக்க ஊசி அல்ல. இதுபோன்ற மருந்துகளில் இருவகை உண்டு. ஒன்று, யானையை அரைத் தூக்கத்தில் ஆழ்த்தும். இரண்டாவது, யானையை முற்றிலுமாக மயக்கத்தில் ஆழ்த்தும். இதில் இரண்டாவது வகையை அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளின்போது மட்டுமே செலுத்துவார்கள். மேலும், இதனைச் செலுத்தி மயக்கமடையச் செய்தால் யானையை இடம்பெயரச் செய்ய இயலாது. கிரேனில் கட்டி தூக்கிச் சென்றாலும் யானை இறக்கும் ஆபத்து உண்டு. எனவே, மகராஜ் யானைக்குச் செலுத்தப்பட்டது அரைத் தூக்க மருந்துதான். இந்த மருந்து அதிகபட்சம் 4 மணி நேரம் மட்டுமே வீரியத்துடன் இருக்கும். ஆனால், அந்த யானை பிடிபட்ட 60 மணி நேரம் கழித்தே இறந்திருக்கிறது” என்கிறார் அவர்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட யானைகளை ‘க்ரால்’எனப்படும் பெரிய கூண்டில் அடைத்து வைப்பார்கள். அங்கு மீண்டும் ஒரு ஊசியைச் செலுத்தி அதன் தூக்கத்தைக் கலைப்பார்கள். கான்கிரீட் மற்றும் உறுதியான மரத்தில் கட்டப்பட்ட கூண்டில் வைத்துதான் ‘மாவுத்து’கள் எனப்படும் பயிற்சியாளர்கள் யானையை ‘கும்கி’அல்லது வளர்ப்பு யானையாக மாற்றுவார்கள். சொல்லப்போனால், யானையின் சுயத்தை அழிக்கும் வதை முகாம் இது. இங்கு அடைக்கப்பட்ட யானைகளுக்கு ஆரம்பத்தில் உணவு தர மாட்டார்கள். கடும் பசியில் யானை துடிக்கும் நிலையில் உணவு கொடுப்பார்கள். இப்படியாக ஒரு மாதத்தில் அந்த யானையை வழிக்குக் கொண்டுவருவார்கள்.

பொதுவாக, கூண்டில் அடைக்கப்பட்ட யானைகள் மிரண்டு அலைபாயும். கடுமையாகப் பிளிறும். ஆக்ரோஷமாகத் தும்பிக்கையை வீசிக் கூண்டை உடைக்க முயற்சிக்கும். வேகமாக ஓடி வந்து நெற்றியாலும் தந்தத்தாலும் கூண்டை முட்டும். போர்க்களம்போல் இருக்கும் அந்த இடம். ஜீவ மரணப் போராட்டம் அது. அனுபவம் மிக்க மாவுத்துகளே அருகில் செல்ல அஞ்சுவார்கள். மகராஜ் யானை நெற்றியில் பலமுறை மோதியதால் மரணம் நேர்ந்திருக்கிறது. யானை மோதியதில் அதன் நெற்றியும் தந்தமும் உடைந்திருக்கின்றன. நெற்றியிலும் தந்தத்திலும் பச்சை நிற பெயின்ட் ஒட்டியிருக்கிறது. கூண்டின் உறுதியான மரம் உடைந்திருக்கிறது. ஆனாலும், உண்மையான காரணம் உடல் கூறாய்வுக்குப் பின்பே உறுதியாகத் தெரியவரும்.

மூன்றாவதாக, கேரள எல்லைக்குள் மயக்க ஊசி செலுத்தப்பட்ட யானை ஒன்று தமிழக எல்லைக்குள் வந்து விழுந்து இறந்திருக்கிறது. இந்த யானையின் வயிற்றுப் பகுதியில் பெரிய காயம் ஒன்று இருந்திருக்கிறது. அதற்குச் சிகிச்சை அளிக்க மயக்க மருந்து செலுத்தியிருக்கின்றனர். இதுகுறித்துப் பேசும் வனத் துறையினர், “காட்டு மாடு போன்ற கொம்புள்ள விலங்குகள் ஏதேனும் குத்தியிருக்கலாம். அதேசமயம், துப்பாக்கிக் குண்டு துளைத்தது போன்றும் இருக்கிறது. ஆனால், உடல் கூறாய்வின்போது குண்டு எதுவும் கிடைக்கவில்லை. காயம் காரணமாகக் கிருமிகள் பரவி, நோய் முற்றிய நிலையில் இதற்கு மரணம் நேரிட்டிருக்கிறது” என்கின்றனர்.

தீர்வுகள் என்ன?

யானைகளின் இணைப்புப் பாதைகளில் இருக்கும் கல்வி நிறுவனங்கள், ஆசிரமங்கள், சுற்றுலா விடுதிகள் என சுமார் 2000-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக, வனங்களில் உணவு ஆதாரங்களை அதிகரிக்க வேண்டும். இதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறார் யானைகள் ஆய்வாளர் டாக்டர் அறிவழகன். “மூங்கில், உன்னு, உசிலம், வெட்பாலை, மறுக்காரை, இருவாட்சி, வெட்டாலம் ஆகிய நமது நாட்டு மரங்கள் மற்றும் புற்களே யானையின் உணவு ஆதாரங்கள். ஆனால், கடந்த காலங்களில் வனத் துறையின் தவறான முடிவுகளால் நடப்பட்ட அந்நிய மரங்களான சீகை, தைலம், பைன் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வேலிக்காத்தான் ஆகிய மரங்களின் தீவிர விதைப் பரவலால், நமது நாட்டு மரங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. அழகுக்காக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட அந்நிய செடிகளான லேண்டினா கேமிரா, ஸ்காட்ச் ப்ரூம், ஈப்படோரியம், பார்த்தீனியம் ஆகிய புதர்ச் செடிகள், புல்வெளிகளின் மீது படர்ந்ததால் சூரிய வெளிச்சம் பெற முடியாமல் கணிசமான அளவு புல்வெளிகள் அழிந்துபோயின. இதனால், யானைகளின் உணவாதாரம் சுருங்கிப்போனது. தற்போது அந்நிய மரம், செடிகளை அழிப்பதற்காக வனத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மிகச் சிறிய அளவிலேயே செயல்படுத்தப்படுகின்றன. போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. இதனைப் போர்க்கால நடவடிக்கை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்” என்கிறார் அவர்.

கோவையின் நகர விரிவாக்கம் தவிர்க்க இயலாதது. ஆனால், அது மேற்கு நோக்கி விரிவடைவதுதான் ஆபத்து. கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களைக் குறி வைத்து நகர்கின்றன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். அங்கு நிலத்தின் விலையும் போட்டியும் மிக அதிகம். அதேசமயம், கோவைக்குத் தெற்கேயும் கிழக்கேயும் ஏராளமான நிலங்கள் கிடக்கின்றன. காட்டை ஒட்டி, மலையை ஒட்டி, நீரோடைகளை ஒட்டி வாழ ஆசைப்படும் உல்லாச மனப்பான்மை இது. தமிழகத்தின் பெரும்பான்மைப் பகுதிகளுக்கு நீராதாரங்களை அளிக்கக் கூடிய பவானி, சிறுவாணி, நொய்யல், மோயாறு ஆகிய ஆறுகளின் பிறப்பிடம் மேற்கண்ட மலைகள்தான். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களில் நகர விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் தமிழகம் பாலைவனமாவதைத் தடுக்க இயலாது.

விவசாயிகள் தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலையடிவார மக்களின் வெறுப்புக்குள்ளாகி வருகின்றன யானைகள். இந்த நிலையில், யானைகள் ஏன் நமக்குத் தேவை என்று தெரிந்துகொள்வது அவசியம். இயற்கையின் உயிர்ச் சங்கிலியில் யானை எனும் கண்ணியின் இருப்பு அத்தியாவசியமானது. அடர்ந்த காடுகளில் தங்களது இடப்பெயர்ச்சியின் மூலம் வழித்தடங்களை ஏற்படுத்தித் தருவதே யானைகள்தான். யானைகள் ஏற்படுத்தித் தரும் வழித்தடங்களால்தான் இன்ன பிற உயிரினங்கள் இடம்பெயர முடிகிறது. இனப் பெருக்கம் செய்ய இயல்கிறது. எனவே, யானைகள் இல்லை எனில், பெரும்பாலான வன விலங்குகளும் இல்லை.

யானைகள் கடும் கோடைகளில் காடுகளில் பூமிக்கடியில் இருக்கும் தண்ணீரைக் கண்டறிந்து பள்ளம் தோண்டி உறிஞ்சுகின்றன. இதன் மூலம் பிற உயிரினங்களுக்குத் தண்ணீர் கிடைக்கிறது. யானையின் கழிவு குரங்குகள், இருவாச்சிப் பறவை, கீரிப்பிள்ளை, பட்டாம்பூச்சி உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவாகின்றன. யானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 30 கி.மீ. இடம்பெயர்வதன் மூலம், அங்கெல்லாம் தனது கழிவுகளால் ஊட்டச் சத்துடன் கூடிய விதைப் பரவல் செய்கிறது. எனவே, வனத்தின் வளர்ச்சியில் யானையின் பங்கு மிகமிக முக்கியம். வனம் இல்லை எனில் தண்ணீர் இல்லை. தண்ணீர் இல்லை எனில் நாம் இல்லை. எனவே, யானைகள் நமக்கு தேவை!

டி.எல்.சஞ்சீவிகுமார்- தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)