எழுத்தாளன், கட்டிடக்கலைஞர் பின்னணியில் சென்னையில் பத்து வருடங்கள் அமீரகத்தில் பதினைந்து வருடங்கள் பணியில் இருந்தேன், தற்போது மூன்று வருடங்களாக சென்னையில் கட்டிடக்கலை வாஸ்து ஃபெங் ஷூய் வடிவமைப்பாளராக DFD Dial for Design என்ற online design சேவையைத் துவக்கி கட்டிடக்கலை வாஸ்து ஃபெங்ஷூய் குறித்த சிறப்பு ஆலோசனைகள் வரைபடங்கள் வழங்கி வருகிறேன் .
ஓய்வில் அரிய உலக சினிமாக்களையும், கலை, சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியம், வாஸ்து,கட்டுமானத்துறை கட்டிடக்கலை பற்றி அதிகம் எழுதுகிறேன்.
நண்பர்களே வரும் ஆகஸ்டு மாதம் 21 ஆம் தேதி அமேரிக்காவில் வெளியாக இருக்கும் பிராட் பிட் நடித்த.குவென்டின் டோரண்டினோவின் மிக எதிர்பார்ப்புகளை தூண்டிய படமான Inglourious Basterds இங்ளூரியோஸ் பேஸ்டர்ட்ஸ் திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி இதோ கீழே .
படத்தின் இன்னொரு சிறப்பம்சம்
நாம் கண்டு லயித்த ஹாஸ்டல் பட இயக்குனர் எளிரோத் இதில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று அடிதடியிலும் இறங்கியுள்ளார்.ரணகளம் தான்.
இரண்டாம் உலகப்போரில் நடந்த சம்பவத்தை மையமாய் வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு CANNES திரைவிழாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கண்டிப்பாக உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
நம் டாரண்ட் உலகிற்கு செப்டம்பர் முதல் வாரத்தில் நண்பர் AXXO அவர்களால்
தர வேற்றப்பட்டு நம் போன்ற விசிறிகள் பார்வைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாரும் தயவுசெய்து மொக்கை திரையரங்குகளில் சென்று இந்த படத்தை
பார்க்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நல்ல திரையரங்குகளில் மட்டும் பார்க்க வேண்டிய படம்.
இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஹாலிவூடின் "perfection" வகை திரைப்பட பிரம்மாக்கள்.பளாக் ஹுயூமர் ராஜாக்கள்.
சகோதர இயக்குனர்கள் .கோயேன்பிரதர்ஸ்,இவர்கள் படைப்புகள் நம்மை யூகிக்க தூண்டுபவை. அப்படி இருக்குமோ?
இப்படி இருக்குமோ? என்று நம்மை குழப்புபவை,ஆனால் பிடிப்பவை.
என்ன அழகாக செயற்கை பின்னணி இசையே இல்லாமல்,
கார்மக் மெக்கார்த்தியின் நாவலை சுவை குறையாமல் படமாக்கியுள்ளனர்?
ஷூ ஓசை,வாகன உறுமல்,நாய் உறுமல்,ரேடியடர் சத்தம், போன்றவை மட்டும் உபயோகித்து இந்த அற்புத படைப்பை தந்து 4ஆஸ்கரும் வாங்கியிருக்கிறார்கள்?
நம்மை கதை செல்லுமிடமெல்லாம் கூட்டி செல்லும் காமிரா கோணங்கள்.
அருமையான எடிட்டிங்.என்று ஒவ்வொரு பிரேம்களையும் பார்த்து பார்த்து
செதுக்கிய தரம்.
ஓய்வு பெற்ற முன்னாள் ஷெரீப் டாம் பெல் (Tommy Lee Jones) தாம் கண்ட மிக கொடூரமான சம்பவங்களை நமக்கு பகிர்வது போல (narration storyline)அமைந்துள்ளது.
எண்பதுகளின் மேற்கு டெக்சாஸ் மாகணத்தில் படம் துவங்குகிறது.
முன்தினம் இரவு பாரில் நடந்த கொலைக்காக சந்தேகத்தின் பேரில் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட சிகர் (javier bardem)
ஒரே போலீஸ்காரர் கொண்ட போலீஸ் ஸ்டேஷனில்
போலீஸ்காரர் தன் மேலதிகாரிக்கு தொலைபேசுகையில் தன் கை விலங்கால் அவர் கழுத்தை நெரித்து கொன்று பின்னர் தன் பிரதான ஆயுதமான cattle கன்
( அமேரிக்காவில் இறைச்சிக்காக மாடுகளை அறுத்துக் கொல்வதற்கு பதில் ஒரு தீயணைப்பான் போல உள்ள இதை வைத்து மாட்டை தொட்டு க்ளிக்கினால் மாடு பரலோகம் போய்விடும்)
எடுத்துக் கொண்டு போலீஸ் காரை திருடிக் கொண்டு அகல்கிறான்.
நெடுஞ்சாலையில் முன்னே சென்ற காரை கடந்து மறித்து நிப்பாட்டி,
வயது முதிர்ந்தவரை வெளியில் வருமாறு அன்புடன் பணிக்க,
அவர் பயத்துடன் என்னயா?ஆபீசர் என்கிறார்.
இவன் அவரை அன்புடன் நெருங்கி கொஞ்சம் தலையை நிமிருங்கள்,
கொஞ்சம் என்று பணிக்க
அந்த குழாயை அவர் நெற்றியில் வைத்து அழுத்த பால்ரசு குண்டு வெளியேறி அவருக்கு நெற்றிக்கண் திறக்கிறது.
இப்போது அந்த காரில் டல்லாஸ் நோக்கி போகிறான் அந்த வித்தியாச சைக்கோ.
காட்சிமாறி:-
வறண்ட பாலைவனம்
ஓநாய் வேட்டைக்கு வந்த பிளம்பர் மாஸ்(ஜோஷ் ப்ரோளின்) தன் தொலைநோக்கியில் தூரத்தில் ஒரு
உயர்ரக வேட்டை நாய் (பிட் புல்) குண்டடியுடன் நொண்டியடிப்பதை பார்த்து,அங்கு விரைய.
நிறைய வேட்டை நாய்களும்,ஹெராயின் போதை மருந்து பரிமாற்றத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவர் உடலுமாய் காட்சி தர,ஈ மொய்க்கிறது.
ஒரு ஹெராயின் பார்சல்கள் நிறைந்த பிக்கப் காரில் இருந்த டிரைவர் குற்றுயிராய் இருக்க, அவரிடம் நெருங்கி அவரின் விசை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு.
அவரிடம் பணம் எங்கே?
மற்றவர்கள் எங்கே?
என்று வினவ.
அவர் அக்வா (தண்ணீர்) என்கிறார்.இவன் விலகி,
மரத்தடியில் ஒருவன் ஒரு லெதர் சூட்கேசுடன் அமர்ந்திருப்பதை கண்டு,
நோட்டமிட்டு,நீண்ட நேரம் அசைவின்றி இருக்கவே ,அவன் இறந்திருக்க கூடும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நெருங்கி சென்று.அவனின் சில்வர் துப்பாக்கி எடுத்துக் கொண்டு அவனருகில் இருந்த லெதர் சூட்கேசை திறக்க அதில் இரண்டு மில்லியன் டாலர் புதிய நோட்டுக்கள் இருப்பதை காண்கிறான்.
(உள்ளே பணம்செல்லுமிடம் சொல்லும் டிரான்ஸ்மீட்டர் இருப்பதை உணராமல் )அதை எடுத்துக் கொண்டு போய் தன் ட்ரெயிலரில் பதுக்குகிறான்.
தன் மனைவியிடம் பணம் எப்படி வந்தது என்று சொல்லுகிறான்.மனைவி கார்லா மருள்கிறாள்.
இரவு தூங்குகையில் அந்த கார் டிரைவர் நீர் கேட்டு தான் நீர் இல்லாததால் கொடுக்க இயலாமையை நொந்துகொண்டு அவருக்கு நீரளிக்க கேன் தண்ணீருடன்
பாலைவனம் விரைய.
அங்கே டிரைவர் சுடப்பட்டு இறந்திருக்க.
இவன் சுதாரிப்பதற்குள் அங்கே மற்றொரு காரின் வெளிச்சத்திட்டு தெரிய ,அது நகர்ந்து இவனை துரத்த.
விழுந்து எழுந்து முட்டிபெயர்ந்து பல் உடைந்து தலை தெறிக்க ஒரு ஆற்றில் உருண்டு நீந்தி மறுகரை அடைந்து தன்னை கடைசிவரை பின்னால் துரத்தி வந்த வேட்டை நாயை நனைந்த துப்பாக்கியை சூடாக்கி ஊதி சுட.
அப்பா குண்டு கிளம்பி நாய் சுருள்கிறது.பொழுதும் விடிகிறது.
உடம்பை துளைத்த சிறு கற்களையும் ,முள்ளையும் எடுத்து சட்டையை கிழித்துகாயத்திற்கு கட்டி வீடு வருகிறான்.
மனைவியை மெக்சிக்கோவில் இருக்கும் அவள் அம்மா வீட்டிற்க்கு பஸ் ஏற்றிவிட்டு அகல்கிறான்.
புதையல் காத்த பூதமாகிறான்.
காட்சிமாறி
டெக்சாஸின் ஒரு பெட்ரோல் பங்கில் கல்லாவில் இருந்த முதியவர் சிகரை நோக்கி நட்புடன் உங்களை டல்லாசில் பார்த்திருக்கிறேன் என்று வாயை விட.
இவன் அவரை நெருங்கி சூரிய காந்தி விதைகளை மென்று கொண்டே
நீங்கள் எவ்வளவு காலம் இங்கே இருக்கிறீர்கள்?
டல்லாசில் எவ்வளவு காலம் இருந்தீர்கள்?
எப்போது தூங்க போவீர்கள்?
எப்போது கடை அடைப்பீர்கள்?
இப்போது கடை சாத்துவோமா?
என்று மிரட்டல் தொனியில் கேட்டுவிட்டு.
இதுவரை எவ்வளவு அதிகமான தொகையை பிணையாக வைத்திருப்பீர்?
கிழவர்.நான் பிணையே வைத்ததில்லை.
சரி இப்போ வையுங்கள்.
இதில் தான் உங்கள் வாழ்வே அடங்கியுள்ளது.
பிரெண்டோ என்கிறான்.
நாணயத்தை சுண்டி போட்டு பூவா தலையா?
சொல்லுங்கள் என காசை விரல்களால் பொத்த.
(இந்த காட்சிக்கே இந்த படத்திற்கு ஆஸ்கர் கிடைத்திருக்கும்.
எவ்வளவு ஆங்கில படம் பார்த்தாலும் இது போன்ற ஒரு நடிப்பு முன் நிறுத்தப்படவில்லை.ஈடு செய்ய முடியவில்லை .
என்ன தெனாவெட்டு.சிரிப்பை வெளியிடா கண்களில் குறும்பு.தாடையை மென்று கொண்டே "கால் இட்" என்று கேட்பது (ஜேவிஎர் அருமைங்க )
அந்த கிழவர் (gene jones) என்றும் யாராலும் மறக்க முடியாத "கால் இட்" காட்சி.
அந்த கிழவர் தான் வாழ்ந்த வாழ்விற்கு அர்த்தமாக இந்த ஒரு காட்சியை சொல்லிக் கொள்ளலாம்.
அப்படி ஒரு மருட்சியை கண்களில் காட்டியிருப்பார்.
இது போல சின்ன சின்ன விஷயங்களால் தான் இது படம் பார்த்த அனைவரையும் கவர்ந்தது.
முடிவில் கிழவர் தலை என்று சொல்லி உயிர் பிச்சை பெறுகிறார்.
குறும்பன் சிகர் அவரிடம் தான் தந்த காசை கல்லாவில் போடாதீர்,
என்று சொல்ல,
அவர் திகைத்து ,வேறு எங்கே போட?
இது உங்கள் உயிரை காத்த காசு.
இதை கல்லாவில் போடாதீர் என்று சொல்லி அகல்கிறான்.
இப்போது ஹெராயின் கடத்தல் முதலாளி
பணத்தை தேட
சிகரை வாடகை கூலியாக அமர்த்துகிறான்.
அவனுக்கு சம்பவ இடத்தை காட்ட சொல்லி தன் ஆள் இருவரை அனுப்ப
அங்கு விரைந்த சிகர் மாஸ் காரின் vid tag(காரை அடையாளம் காணும் பட்டை) நெம்பி எடுத்துக் கொண்டு,
பணம் இருக்கும் இடம் காட்டும் டிரான்ஸ் பாண்டரையும் பெற்றுக் கொண்டு பின்னர் நன்றி கூறி அவர்கள் இருவரையும் சுட்டு கொல்கிறான்.
பின்னர் தான் திருடிய காரை கொளுத்திவிடுகிறான்.
காட்சிமாறி
பொழுது விடிகிறது.
ஷெரீப் டாம் பெல்
தன் குதிரையில் ஏறிக்கொண்டு கூட தன் சக அதிகாரியையும் கூட்டிக் கொண்டு.
சம்பவ இடம் சென்று துப்பு துலக்குகின்றனர்.
பின்னர் மாஸின் வண்டி எண்ணை வைத்து அவனை நெருங்குகின்றனர்.
இப்போதுசிகர் மாஸ் அலுவலகம் செல்கிறான்.அங்கு எதுவும் விபரம் கிடைக்காமல் போக அங்கே அஞ்சல் பெட்டியில் அவனுக்கு வந்த கடிதங்களை பார்க்கிறான்.
பின்னர் சிகர் மாஸ் வீடு செல்கிறான்.
அங்கே டெலிபோன் பில்களை சோதனை இடுகிறான்.
பில்லில் இருந்த எண்களை வைத்து மாஸின் சொந்த ஊர் மெக்சிக்கோ என்று அறிகிறான்.அங்கிருந்து அகல்கிறான்.
பின்னர் ஊரை சல்லடை போட்டு அலசுகிறான்'
இதே நேரத்தில் ஷெரிப் மாஸின் வீடு வந்து அப்போது தான் உடைக்கப்பட்ட
கதவின் லாக்கை பார்த்து சிகர் வந்து போனதை கண்டு பிடிக்கின்றனர்.
இப்போது இருவரையும் தீவிரமாக தேடுகின்றனர்.
இப்போதுஆரம்பிக்கிறதுபூனைசுண்டெலிஆட்டம்
மாஸ் ஒரு மோட்டல் சென்று இரண்டு அறை எடுத்து ஒன்றில் தான் தங்கி,
மற்றொன்றில் பணத்தை ac ஷாப்டில் கிரில்லை கழற்றி உள்ளே தள்ளி ஒளித்து வைக்கிறான்.
கூடாரம் அடிக்கும் இரும்பு குழாய் வாங்கி வந்து அதில் யாருக்கும் சந்தேகம் வாரா வண்ணம் நவீன குழல் துப்பாக்கி தயாரிக்கிறான்.
தன்னை துரத்தி வரும் வில்லனுக்கு காத்திருக்கிறான்.
காட்சிமாறி
டெக்சாஸின் செரிப் டாம் பெல் மெக்சிக்கோவில் இருக்கும் மாஸின் மனைவியை சந்தித்து
உன் கணவனை சரணடைய சொல்
அவர்கள் மிக பொல்லாதவர்கள்.
உனக்கு நாங்கள் தான் பாதுகாப்பு.
மாஸ் எப்போது போன் செய்தாலும் எனக்கு தெரிவி.
என அட்டையை கொடுத்து விட்டு செல்கிறார்.
காட்சிமாறி
இப்போது ஹெராயின் கடத்தல் முதலாளி
பணத்தை தேட
கார்சன் வெல்ல்ஸ் (woody harrellson- செவென் பவுண்ட்ஸ் ) இடம் பொறுப்பை ஒப்படைக்க அவன் சிகரையும் மாஸையும் தேடி புறப்படுகிறான்.
அவன் போனதும் அதே பொறுப்பை மெக்சிக்கர்களான நான்கு பேர் கும்பலிடம்
விட்டு அவன் மனைவியை கண்காணி என்று சொல்லுகிறான்.
காட்சிமாறி
சிகர் இப்போது மாஸ் தங்கியுள்ள மோட்டலை கடக்க டிரான்ஸ்பாண்டர்அலற
காரை உள்ளே செலுத்தி பார்க் செய்கிறான்.
இப்போது கையில் நவீன சைலன்சர் குழல் துப்பாக்கியும் வைத்திருக்கிறான்.
பணம் இருக்கும் அறை அருகே செல்ல சத்தம் அதிகரிக்க.
ஒரு அறைக்குள் நுழைகிறான்,கட்டிலில் அமர்ந்து ஷூக்களை கழற்றி சாக்சுடன்
குளியலறை கதவை திறந்து நுழைகிறான்.
அங்கே குளியல் தொட்டியில் ஒன்றாய் இருந்த ஹோமோக்கள் இருவரிடம் பணம் எங்கே? என கேட்டு பதிலுக்கு காத்திராமல் சரமாரியாக சுடுகிறான்.
மர சுவற்றை கூட சுட்டு பிரித்து கடாசுகிறான்.
பின்னர் அங்கு பணத்தை வெறியுடன் தேட,
பக்கத்து அறையில் இருந்த மாஸ் சுதாரித்து பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு டாக்சி பிடித்து தொலைவில் உள்ள இன்னொரு ஹோட்டல் சென்று அறை பதிவு செய்து.அதிக பணம் தந்து என்னை தேடி யார் வந்தாலும் எனக்கு தெரிவி.
என்கிறான்.
பணம் வந்ததும் தூக்கம் போன கதை தான்.
கதவையே குறி வைக்கிறான்.
இப்போது சிகர் இங்கும் வந்து விடுகிறான்.
ஹோட்டல் மனேஜரை கொன்றுவிட்டு.
மெல்ல காரிடாரில் நடந்து கருவியின் உதவியுடன் ஒவ்வொரு கதவாக
மோப்பம் பிடிக்கிறான்.
இவன் அறை கதவிடுக்கில் காலடி தெரிகிறது
மாஸ் ஆயத்தமாகிறான்.
சிகர் லாவகமாக அடுத்த கதவின் அருகே சென்றுவிட,
இவன் அப்பா என்று மூச்சு விட ,
அப்போது தான் சூட்கேசில் இருக்கும் அந்த டிரான்ஸ்பாண்டர் எமனை
செயலிழக்க செய்கிறான்.
அப்போது சிகர் கதவின் லாக்கை cattle gun வைத்து பிளக்க அந்த லாக்
பறந்து இவன் மேல் விழ,
இவன் பணத்துடன் எஸ்கேப்.
அவன் துரத்த
இவன் சுதாரித்து சிகரை தொடையில் சுட,
சிகர் மாஸை தோள்பட்டையில் சுட ,
இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிக்க
மாஸ் இப்போது அருகில் சென்ற காரை மடக்கி ஏறி எல்லையில் விடுமாறு சொல்ல,சிகர் தொடர்ந்து சுட்டு கார் டிரைவரை நெற்றியில் சுட்டு கொல்கிறான்.
இப்போது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாக.
அப்போதும் மாஸ் விடாமல் லெதர் சூட்கேசை எடுத்துக் கொண்டு மெக்சிக்கோ
எல்லைக்கு சென்று சேர்கிறான்.
எதிர்பட்ட சிறுவரிடம் பத்து டாலர் தந்து அவர்கள் உட்கொண்ட பீரை வாங்கி
அருந்தி தாக சாந்தி செய்கிறான்.காயத்திற்கு கட்ட அவர்களிடம் மேலும் ௨௦ டாலர் தந்து அவர்களின் டி ஷர்ட் வாங்கி கட்டுகிறான்.
மெதுவாக பாலத்தின் தடுப்பு வேலியில் ஏறி அங்கு இருக்கும் ஆற்றங்கரையில் லெதர் சூட்கேசை அடையாளம் வைத்துக் கொண்டு வீசுகிறான்.
மெல்ல இறங்குகிறான்.
இவனருகில் ஒரு பிச்சைக்காரன் கிடார் இசைத்து பிச்சை கேட்கிறான்.
இவன் அவனுக்கு பணம் தந்து என்னை மருத்துவமனைக்கு கூட்டிப்போ என்று.
வாந்தி எடுக்கிறான்.
எல்லையில் மயங்கி சரிகிறான்.
போலீஸ்காரர்கள் இவனை மாகாண மருத்துவமனையில் அனுமதித்து
சிகிச்சை அளிக்கின்றனர்.
காட்சிமாறி
சிகர் இப்போது அடிப்பட்ட சிங்கமாக வலியில் துடிக்கிறான்.
எந்த மருத்துவமனைக்கும் போக முடியா சூழ்நிலை.
ஒரு மருந்துகடை முன்னே நின்ற காரின் பெட்ரோல் டாங் மூடியை
திறந்து.தன் பேன்ட் கிழிசலை கிழித்து அதை பெட்ரோல் டாங்கில் முக்கி தீ வைக்க சிறிது நொடியில் கார் வெடிக்கிறது.கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க
மருந்து கடை உள் சென்று மிக சரியாக பார்த்து மரத்து போகும் ஊசி,பஞ்சு,கிருமி நாசினி,ஆல்கஹால் கத்தி எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் உள்ள கிளீனிக்கில் நுழைந்து
நோயாளி அறையின் கழிவறையில் புகுந்து தமக்கு தாமே ஊசி போட்டுக் கொண்டு கால்களை நீட்டி அம்மணமாக அமர்ந்து கத்தியை வைத்து குண்டை கீறி, லாவகமாக நெம்பி எடுத்து
அந்த காயத்தில் கிருமி ஆல்கஹால் விட்டு கொளுத்தி பின்னர் அணைத்து
கிளினிக்கில் இருந்த பேஷன்ட் ஒருவரின் உடையை அணிந்து வீறு கொண்டு கிளம்புகிறான்.
காட்சிமாறி
கார்சன் வெல்ஸ் மாஸை சந்தித்து பணம் எங்கே?
அதை என்னிடம் தந்துவிடு,உனக்கு அதில் பங்கும் சிகரிடமிருந்து பாதுகாப்பும் தருகிறேன் என்று சொல்கிறான்.மாஸ் தன்னிடம்இருந்த பணம் அன்று நடந்த துப்பாக்கி சூட்டில் காணமல் போய் விட்டது.என்று சொல்லிமழுப்பி அனுப்பி விடுகிறான்.
இதை நம்பாத கார்சன் மாஸ் மயங்கி விழுந்த இடம் சென்று சோதனையிட
போலீசுக்கு தெரியாமல் எப்படி? அந்த எல்லையோர வேலியை தாண்டி ஆற்றை அடைவது என யோசிக்கிறான்.தன் ஹோட்டல் அறைக்கு போகிறான்.
பின்னாலேயே சிகர் நிற்கிறான்.
மனதிற்குள் தன் கதை இன்று முடிந்தது என்று சொல்லி ரூமுக்கு நுழைகிறான்.
சிகர் அவனிடம் மாஸின் இருப்பிடம் கேட்டு அறிகிறான்.
இன்னும் இருபது நிமிடத்தில் எனக்கு அந்த பணம் என் காலடியில் வைக்கணும்.இல்லை என்றால் நான் உன் உயிரை எடுப்பேன் என்றும்
இன்னும் எத்தனை பேர் அந்த பணத்தை தேடி அலைகிறீர்கள் ?
என்று கேட்கிறான்.அவன் மெக்சிக்கோ காரர்களும் தேடுவதை சொல்கிறான்.
அப்போது போன் மணியடிக்க
சிகர் கார்சனை அவன் எதிர்பாரா நொடியில் சைலன்சர் துப்பாக்கியால் சுடுகிறான்.ரிசீவரை எடுத்து ஹலோ சொல்கிறான்.
போனில் எதிர்முனையில் மாஸ் பேச.
அவனிடம் உன் மனைவி உனக்கு உயிருடன் வேண்டும் என்றால் அந்த பணத்தை என்னிடம் கொண்டு வந்து கொடு என்று மிரட்ட.
(சிகர் போன் பேசுகையில் தன காலடியில் ரத்தம் நகர்ந்து வருவதை கண்டு தன கால்களை தூக்கி மேசை மேல் வைப்பான்,மீண்டும் பேச்சை தொடர்வான் -மிக நல்ல நடிப்பு. )
மாஸ் நான் உன்னை கொன்று பின்னர் தூக்கில் போட்டு விடுவேன் என பதில் சொல்லி போனை பலமுறை அடித்து சாத்துகிறான்.
காட்சிமாறி
சிகர் இப்போது ஹெராயின் கடத்தல் முதலாளி யை சந்தித்து
இனி அந்த பணத்தை மறந்துவிடு என மிரட்ட ,முதலாளி மறுக்க
அவனை சுட்டு கொல்கிறான்.
அங்கு இருந்த கணக்காளனிடம் துப்பாக்கி முனையில் மெக்சிக்கோ காரர்களின்
விபரம் வாங்கி அவர்களின் கதையையும் மாஸின் கதையையும் முடிக்க கிளம்புகிறான்.போகும் வழியில் கார் பழுதாகிவிட.
அங்கு உதவிக்கு வந்த ஒரு கோழி வண்டி டிரைவரை கொன்று அந்த காரில்
எல் பாசோ போகிறான்.
காட்சிமாறி
மாஸ் இப்போது மருத்துவமனையில்
மனைவி கார்லாவிடம் தொலை பேசியில் உரையாடி தாம் எல் பாசோவில் இருப்பதாகவும் அம்மாவை கூட்டிக் கொண்டு இங்கு வந்து விடு என்றும் கூறுகிறான்.தான் தங்கப்போகும் ஹோட்டல் முகவரியை கூறுகிறான்.
அவள் பக்தி சிரத்தையுடன் செரிப் டாம் பெல்லிற்கு தகவல் சொல்ல
அவர் அங்கு வர விழைகிறார்.
காட்சிமாறி
மெக்சிக்கர்களான நான்கு பேர்
கார்லாவை தொடந்து எல் பாசோ வர ,
அவர்கள் செல்லுமிடம்,ஹோட்டல் விலாசம் கேட்டு
நாங்களும் அந்த பகுதி வாசிகள் தான் என்று,அன்புடன் இவர்களை ஒரு டாக்சியில் ஏற்றி அனுப்புகின்றனர்.
இவர்களும் எல்பாசோ காரர்கள் தான் எவ்வளவு நல்லவர்கள்?
என வியக்கின்றனர்.
இவர்களுக்கு முன் அந்த ஹோட்டலுக்கு மெக்சிக்கர்கள் விரைகின்றனர்.
காட்சிமாறி
இப்போது மாஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஹோட்டல் அறையில் குதூகலமாய் மனைவிக்கும் அவள் அம்மாவுக்கும் காத்திருக்கிறான்.
பணத்தை ஒரு வழியாக மீட்டு கொண்டு வந்து ஹோட்டல் அறையின்
ac ஷாப்டின் உள்ளே வைத்தாகி விட்ட மகிழ்ச்சி வேறு,
மனைவியை எதிர்பார்த்து ஜாலிமூடில் இருந்தவனுக்கு பக்கத்து அறை அழகி நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டே மது அருந்த கூப்பிட ,
இவன் ஜோதியில் ஐக்கியமாகையில்
அங்கு வந்த மெக்சிக்க கும்பல் அவனை அடித்து உதைத்து பணம் எங்கே ?
என கேட்டு துன்புறுத்தி ,பதில் வராததால் சுட்டும் கொன்று நீச்சல் குளத்தில் வீசிவிட்டு செல்கின்றனர்.
இப்போது மனைவியும் அவள் அம்மாவும் ஹோட்டலுக்குள் நுழைய
தன் கணவன் பிணமாய் மிதக்கும் காட்சியை கண்டு வெடித்து அழுகிறாள்.
அப்போது தான் அங்கு வந்த ஷெரிப் டாம் பெல் கார்லாவை தேற்றுகிறார்.
அன்று இரவு ஒரு அனுமானத்தில் சிகர் கண்டிப்பாக மாஸின் அறையில்
பணம் தேட வருவான் என நினைத்தபடி நுழைய
அதே போல ac கிரில் கழற்றி வைக்கப்பட்டுள்ளது.
சிகர் இவரை பார்க்கிறான்.ஆனால் சுடவில்லை.
இவருக்கும் சிகர் உள்ளே தான் இருக்கிறான் என தெரியும்
ஆனால் அவனை பிடிக்கவில்லை.
இன்னும் மூன்று நாளில் ஓய்வு பெரும் தமக்கு எதற்கு? இந்த வீண் உயிர் பணயம் என கதவை மூடிவிட்டு நல்ல பிள்ளையாக ,தன் மாமா வீட்டிற்கு சென்று தாம் ஓய்வு பெறப்போகும் செய்தியை சொல்கிறார்.
அவரும் அதை அமோதித்து.
உன் அப்பா கடமையை செய்கையில் சமூக விரோதிகள் சுட்டு வீட்டு வாசலிலேயே இறந்தார்.நல்ல வேலை உனக்கு அப்படி ஏதும் ஆகவில்லை
என்று சொல்கிறார்.
காட்சிமாறி
வித்தியாச சைக்கோவான சிகர் ,
தன் தாயையும் சமீபத்தில் இழந்த வேதனையில் இருக்கும் கார்லாவை
அவள் வீட்டில் சந்திக்கிறான்.மென்மையான குரலில் அவளிடம்
உன் கணவனிடம் நான் சொன்ன படி உன்னை கொல்லப்போகிறேன்.
என்று கூறி புன்னகைத்து காசை சுண்டி போட்டு
பூவா தலையா? என கேட்கிறான்.
அவள் துக்கத்தில் மவுனித்திருக்க
அவளை சுட்டு கொல்கிறான்.
பின்னர் பதட்டத்தில் வண்டியை விரட்டிக் கொண்டு நான்கு ரோடு கூடும் சந்திப்பில் வேகமாய் செல்ல அங்கு ஒரு காரில் மோதி அந்த எதிர் வண்டி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பரலோகம் போக ,இவனுக்கு முழங்கை உடைந்து எலும்பு வெளியே துருத்திக் கொண்டு வலிக்கத் தொடங்க.
அங்கு வந்த சிறுவர்களிடம் முப்பது டாலர் தந்து சிறுவன் அணிந்திருந்த
இங்கு முழு படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி தந்திருக்கிறேன் என்று
நினைப்பவர்கள்,நினைப்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்.
காரணம்:-
முன்பு நான் ஆங்கில படத்தின் உச்சரிப்பு புரியாமல் அதை முழுமையாக புரிந்து ஊன்றி பார்க்க முடியாமல் போனது.அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்னும் சிறு முயற்சி. இதை குறை சொல்லி நான் எடுக்கும் இந்த நல்ல முயற்சியையும் கெடுக்க வேண்டாம்.எல்லாவற்றிர்க்கும் மேல் பாணி என்று ஒன்றிருக்கிறது.
இது என் பாணி.
இது எனக்கு எழுத்து பயிற்சியும் அளிக்கிறது.
imdb தளத்தில் விசிறிகள் ஒரு படத்தில் லயித்தால் அதை பற்றி "trivia" மற்றும்
faq,goofs,synopsis,plot எழுதி அந்த படத்தின் வெற்றிக்கு உதவுவதுண்டு.
அது போல ஒரு சிறு முயற்சி தான் இது.
ஒரு படத்தை விமர்சனம் படித்துவிட்டு போய் யாரும் கட்டாயம் பார்ப்பதில்லை.
நண்பர்களே,வெறும் நாலேகால் நிமிடத்தில் ஒரு உணர்ச்சி காவியம் படைத்தல் சாத்தியமா?
ஆம் என்கிறார்.கிரேக்க மொழி இயக்குனர் "constantin pilavious" ,
இவர் எடுத்த மிககுறும் படமான 2007 வெளிவந்த
"what is that?" நாம் பெற்றவர்களை நன்றாக நடத்துகிறோமா?
அவர்களை உண்மையிலேயே நேசிக்கிறோமா? போன்ற
நமக்கு நாமே எழுப்பிக் கொள்ள வேண்டிய வினாக்களை
தோற்றுவிக்கிறது.மிக நல்ல கருத்து சொன்ன படம்.
கண்டிப்பாய் பாருங்கள் (4-17mins)
நண்பர்களே எனக்கு தெரிந்து குறும்படங்கள் நமக்கு நல்ல படிப்பினைகளையும்,அருமையான ரசனையையும்,பொன்னான நேர சேமிப்பையும் அளிக்கிறது.ஆகவே குறும்படங்களை ஆதரியுங்கள்
This a Greek short film made in 2007 Father and son are sitting on a bench. Suddenly a sparrow lands across them. You will love it
நான் முன்பு சென்னையில் வேலை பார்த்தது ஒரு தனியார் ஆர்கிடெக்ட் நிறுவனத்தில்,அது அனைவருக்கும் நல்ல சம்பளம் கொடுத்து (2006 ஆம் வருடம் ஆபிஸ் பாயின் சம்பளமே 12000,அவர்களுக்கு ப்ரீமியம் பைக்கும் உண்டு ,அது தவிர மொபைல் போன் ,லோன் ,இன்னும் பல ,அப்படிஎன்றால் ஒரு ஆர்கிடேக்டோ அல்லது இஞ்சினியரோ ,என் போன்ற டெக்நிஷியன்களோ எவ்வளவு வாங்குவர் ?என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
வருடத்திற்கு குறைந்த சம்பள உயர்வே 5000.அங்கிருந்து கழுத்தை பிடித்து வெளியில் தள்ளினாலும் யாரும் அடுத்த கம்பனிக்கு போக மாட்டர்கள்.(ஐடி கம்பெனிகள் காலூன்றும் முன்பிருந்தே இப்படி FANCY சம்பளமும் காரும் உணவும் 3 மாத போனசும் கொடுத்தவர் எங்க முதலாளி. ,பத்து வருடம் அங்கே பணிபுரிந்தவர்களுக்கு முதலில் மாருதி கார்,பிறகு சென் என்று மாறும்,போதாத குறைக்கு பெட்ரோல் கார்டு வேறு அங்கே ரிசெப்ஷனில் உண்டு,அதை கொண்டு போய் பக்கத்து ரோட்டில் உள்ள பங்கில் பெட்ரோலோ டீசலோ நிரப்பி கையொப்பமிட்டு கொண்டு வந்து மேசை டிராயரில் வைத்தால் போதும். (அளவுகளோ வரைமுறையோ கிடையாது)
மதியம் சுடச்சுட மதராஸ் மீல்ஸ் ஹாட் பாக்ஸில் மொட்டை மாடியில் தயாராக இருக்கும்.சப்பாத்தியில் ஆரம்பித்து மில்க் சுவீட் வரை. முதலாளி தொடங்கி கடைசி தொழிலாளி வரை அது தான் உணவு . அங்கு வேலை கிடைப்பது என்பது அமெரிக்கன் தூதரக நேர்முக தேர்வில் பாஸாவது போன்று தான். அதிர்ஷ்டம் மற்றும் சிபாரிசு + திறமை.
வருடத்திற்கு கண்டிப்பாக குடும்பத்துடன் கூடிய சுற்றுலா ஒரு வாரத்திற்கு கூட்டி போவார்கள்.எல்லாம் அவர்கள் செலவு. ஒரு முறை அனைவரையும் இலங்கை அழைத்துச் சென்றனர். (அங்கு மாமேதை ஜெப்ரீ பாபா -இந்த நூற்றாண்டின் தலை சிறந்த ஆர்கிடெக்ட் ,அவர் வடிவமைத்த கட்டிடங்களை காண அனைவரையும் இலவசமாக கூட்டிச் சென்றனர்.) இதை எல்லாம் குறிப்பிட்டு விட்டபடியால் என் முதலாளியை பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.
இப்படி பட்ட அலுவலகத்தில் உலவும் எச்சைப்பயல்கலாய் சுரண்டல் பேய்கள் அலைந்தன,அலைந்து கொண்டு இருக்கின்றன. 1.தண்ணீர். அங்கு வேலை பார்க்கும் சூபர் சீனியர்களின் அடாவடி இருக்கிறதே? .. வரும் போதே காரில் 2 அபோல்லோ தண்ணீர் காலி கேனுடன் வருவர். ஆபிஸ் விட்டதும் பேன்ட்ரி சென்று 2 கேனிலும் தண்ணீர் பிடித்துக் கொண்டு செல்வர்.இருக்கும் சீனி,பால் பவுடர் என சகலத்தையும் கபளீகரம் செய்வர்.
2. ஸ்டேஷநேரி. இவர்கள் யாரும் தன் குழந்தைகளுக்கு தேவையான பென்சில் பேனா ஸ்கெட்சு,நோட்டு,அழி ரப்பர்,ஷார்பெநேர் ,கலர் பென்சில்,சார்ட்டு,இங்க் , பைல்கள்,டைரிகள் ,டேப்பு,பசை ,வெளியே வாங்குவதில்லை.எல்லாம் அலுவலகத்திலிருந்து திருட்டுத்தனமாகத்தான்.இதை புதியவர்கள் கண்டும் காணாமலும் போவது நலம் ,இல்லையேல் சீட்டு கிழிக்கப்படும். மேலும் பிளாட்டர்,ப்ரின்டேர் இங்க் cartridge, போன்றவற்றை களவாடி வெளியில் விற்பது,தன் வீட்டில் பயன் படுத்துவது. தன் சொந்த வேலைக்கு நூற்றுக்கணக்கில் பிரிண்டுகள் ஆபீசிலேயே எடுத்து ஆபீஸ் செலவிலேயே ,ஆபீஸ் பாயை வைத்தே அதை டெலிவரி செய்வது. ஆபீசில் வாங்கும் தினசரியை கூட லவட்டிச் செல்வது. காண்ட்ராக்டரிடம் கமிஷன் வாங்கிக் கொள்வது. ரகசிய தகவல்களை பரிமாறுவது. காண்ட்ராக்டரிடம் தங்கள்வீட்டு மராமத்து வேலைகளுக்கு இலவசமாக கட்டுமான பொருட்கள்,இலவசமாக வேலை ஆட்கள் (work force) பெறுவது..
3.பெட்ரோல் ஐயோ,இது ரொம்ப விலை உயர்ந்த வஸ்து வாயிற்றே என்ற கவலை இல்லாமல்.ஒவ்வொருவரும் இஷ்டத்திற்கு நிரப்பிக்கொண்டு,கையொப்பமிடாத வெற்று பில்களை வைத்துவிட்டு போய்விடுவர்.என்ன கொடுமை என்றால் அக்கா வண்டி,அண்ணன் தம்பி வண்டி என நாளொரு வண்டியில் வந்து பெட்ரோல் நிரப்பிச் செல்வார்கள்.
4.ஆபிஸ் பழைய ஏசி டிவி நாற்காலி,மேசை,கம்ப்யூடேர் என்று அவ்வப்பொழுது புதுப்பிக்கும்,அப்போது பழையவற்றை லாவகமாக சூறைத் தேங்காய் பொறுக்குவது போல பொறுக்கிச் சென்று விற்றோ, அல்லது வீட்டிலோ வைத்து விடுவர். கம்ப்யூடரில் இருக்கும் ram களை கூட திருடி விடுவர். யாராவது விடுப்பில் போனால் தீர்ந்தது.மெயில் செக் பண்ணுகிறேன் என்று அவர்கள் கம்ப்யூடரில் அமர்ந்து mouse,ram,ஸ்பீக்கர் போன்றவற்றை திருடுவது. யாரேனும் முதலாளியிடம் பெயர் வாங்கி விட்டால் அவர்கள் கம்ப்யூடரில் உள்ள போல்டர்களை ,வேலைகளை அழிப்பது. முதலாளியிடம் வைரஸ் என்று பூச்சி காட்டுவது.
5.கார் டயர் கார் டயரைகூட இவர்கள் விடுவதில்லை,பல சமயங்களில் காரை கைகாசு போட்டு சர்வீஸ் செய்ததாய், மாற்றாத டயரை மாற்றியதை பில் வாங்கி வந்து ஏய்ப்பார்.
6.ஒருத்தர் மேல் ஒருத்தர் அவ்வளவு பொறாமையோடும் காய்ச்சலோடும் இருப்பார்,நாய் பல்லைக்காட்டிக்கொண்டு உறுமும் ,ஆனால் சண்டை போடாது.அது போல.நாளொரு கூத்து தான்.இவர்கள் எல்லா களவாணித்தனத்தையும் சேர்ந்தே செய்வதால் முதலாளிக்கு விஷயம் போகவே போகாது.இவர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக செயல்படுவர்.புதியவர்களை ராக்கிங் செய்வது.முதலாளியிடம் போட்டுக்கொடுப்பது,சம்பள உயர்வு சமயத்தில் நன்கு போட்டுக்கொடுத்து சம்பளத்தை குறைத்தோ அல்லது எதுவுமோ இல்லாமல் செய்வது.தங்கள் பணிகளை குறிபார்த்து புதியவர் தலையில் வைத்துவிட்டு ஓடிவிடுவது.எதாவது பெரிய பிரச்சனை வந்தால் பழியை புதியவர் மேலும்,எதாவது பாராட்டுக்கள் வந்தால் குனிந்து தன கழுத்தை நீட்டிக்கொல்வதும் எக்ஸ்ட்ரா அசிங்கங்கள்.அதில் புதிய ஆண் ஊழியருக்கு தினமும் தரப்படும் இரவுப்பணி,(வாரத்தில் 4 நாள்)வராவிட்டாலோ மறுத்தாலோ போட்டுத்தருதல்.வேலைநீக்கம். முதலாளி தலை தென்பட்டால் குனிந்து குப்பையை பொறுக்குவது(அவர்களே போட்டுவிட்டு)ஒருவன் ஒருபடி மேலே போய் முதலாளியின் ரொம்ப சுத்தமான டாய்லெட்டை அவர் அறிய ஹார்பிக் போட்டு கிளீன் செய்தது,முதலாளி என்னப்பா இதெல்லாம் ?என்று பீல் பண்ணி கேட்க .. எப்போவும் வரும் ஹவுஸ் கீபிங் ஆள் சரியாக க்ளீன் செய்யவில்லை என்றும் முதலாளி டாய்லெட்டை வாடிக்கையாளரும் உபயோகிப்பதால் தானே இறங்கி சுத்தம் செய்ததாய் பீற்ற.(முதலாளி பின் வரும் நாட்களில் யாருக்கேனும் உபதேசம் செய்ய ''அவனைப் பாருடா ...நான் சொன்னா அவன் என் கக்கூசைக்கூட கழுவுவான் என்று சொல்லுவார்.''
7. பிளஸ் 2 பெயிலான ஒருவன் தன சாமர்த்தியத்தாலும் குள்ள நரித்த்தனத்தாலும் அட்மின் டேமேஜராகி 70000 சம்பாதிப்பாநேன்றால் அது இங்கு தான். அதை விட கொடுமை என்றால் அவன் போடும் 15 ரூபாய் சென்ட்ரல் பிளாட்பார ஜெட்டியையும் மீறி அவன் புட்டமும் வெளியே தெரியும்படி பேன்ட் அணிவான்.பெல்ட் வாங்க மனமில்லாமல் சணல் கயிறு போட்டு கூட பேண்டை கட்டும் அந்த கபோதி.லீவு நாளில் கூட வீட்டு மனிதர்களோடு ஆபீஸ் வந்து ஓசி ஏசி ஓசி டிவி ஓசி டெலிபோன் கால்கள் ,ஓசி உணவு பண்டம் என குதூகளிப்பான். இதெல்லாம் விட ஒரு கொடுமை ஆபீஸ் விட்டு கிளம்பும் முன் வீட்டில் பொண்டாட்டிக்கு அவள் அம்மாவுடன் 3 மணி நேரம் பேசிக்குலாவ STD லைன் போட்டு லிங்க் கொடுத்து விட்டு தான் கிளம்புவான். என்ன தலை சுற்றுகிறதா?
8. இது எல்லாம் கடைந்தெடுத்த உண்மைகள்,இன்றும் நடப்பவை.
9.இவர்கள் பூர்வ புண்ணியஸ்தானம் நன்றாக இருப்பதால் திருடினாலும் மாட்டாமல் ,எங்கள் நல்ல முதலாளியின் பூர்வ புண்ணியஸ்தானம் நன்றாக இருப்பதால் ஆபீஸ் இன்னும் போண்டியாகாமலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
10.இதில் ஒரு சில கழிசடைகள் சம்பளத்தை ஆபீஸ் இலும் உழைப்பை தன் சொந்த கட்டுமான வடிவமைப்பு செய்யவும் உபயோகிக்கும்.எல்லோரும் சொந்தமாக வேறு ப்ராஜெக்ட் எடுத்து அதிலும் லாபம் பார்ப்பார்.எல்லாம் ஆபீஸ் நேரத்தில். அன்றாடம் அலுவலகத்தில் பேப்பர், குண்டூசி, ஸ்டேப்ளர் பின்,டாய் லேட் பேப்பர்,காபியர் பேப்பேர்,இங்க் cartridge ஹார்பிக்,பாச்சா உருண்டை,சாம்பிள் வந்த கட்டுமான வடிவமைப்பு பொருட்கள்,இசை சீடிக்கள்,விலை உயர்ந்த கட்டுமான வடிவமைப்பு புத்தகங்கள் (குறைந்த விலை ரூ 3000), ஒடோனில்,hand வாஷ் லிக்விட் சோப்பு போன்றவற்றையும், காபி இயந்திர ரெடிமெட் காபித்தூள், சர்க்கரை போன்றவற்றையும், குடிப்பதற்கு வைத்திருக்கும் மினரல் வாட்டரையும், "ஆட்டை'யைப் போடும் இதுபோன்ற அல்பங்கள் எப்போது தான் திருந்துமோ?
அதிகாரம்,ஜாதிவெறி,பணத்தாசை,இல்லாத அந்த மனிதர் எங்க முதலாளி ஒரே குறியுடன் தான் இயங்குகிறார்.அது தன்னிடம் வேலை பார்ப்பவன் தன்னைப்போலவே வசதியுடன் வாழ வேண்டும் என்பது தான்.அதை இவர்கள் என்றாவது புரிந்துகொண்டு ஊழலில் இருந்து வெளிவந்தால் அதுவே இந்த கட்டுரைக்கு கிடைத்த வெற்றி.
என் பள்ளிபருவத்தை பற்றி எழுத அழைத்த வினோத் கவ்தமிற்க்கு நன்றி.
1982 ஆம் வருடம் நான் பொழிச்சலூரில் இருக்கும் (இப்போ இருக்குமா?)வெங்கடேஸ்வரா வித்யாலயாவில் எல்கேஜி சேர்ந்தேன்.
அலுமினியம் பெட்டியும் சிகப்பு ட்ரவுசர் மற்றும் வெள்ளை சட்டை ,சிகப்பு டை என குதிரை வண்டியில் போய் வந்த நினைவுகள்,
முதல் முதலாக கழுதை பார்த்தது.
முதல் முதலாக எங்கள் சாலிடர் டிவி வாங்கி ஊரே வந்து நிகழ்ச்சி பார்க்க நான் அவர்களை முறைக்க,என் அம்மா என்னை அடிக்க
அந்த கால மழை நாள் பொழிச்சலூர் முக்கால் வாசி மூழ்கி விடும்,
அந்த தவளை சத்தம்,பாம்பு சட்டை உரித்த வாசத்தை உருளை கிழங்கு சமைத்துள்ளார்கள் என எண்ணியது.
ரப்பர் பந்தை கழிவறை கோப்பையில் போட்டு எடுக்க முயன்றது.
என் அக்காவுடனும் பக்கத்து வீட்டு சிறுவருடன் ரிங்கா ரிங்கா ரோசெஸ் ஆடியது
பூப்பறிக்க வருகிறோம் ஆடியது
அப்படியே காட்சி மாறி
1983 கோம்பை,ஏதோ பேர் நினைவில்லா பெரிய ஹாஸ்டல்
வீட்டில் பெரும் பிரச்சனை வந்து
யுகேஜி படிக்கிறேன்,என் அக்கா ஒன்றாம் வகுப்பு.
ஹாஸ்டலில் எங்கள் ட்ரங்கு பெட்டியை ஆறாம் வகுப்பு பசங்கள் நெம்பி திறந்து நெளித்து வைக்க ஆற்றாமல் அழுதது.
கன் மேன்(gun man) டி ஷர்ட் ,பெல் பாட்டம் பேன்ட் போட்டது.
முதல் முதலாக படிப்பில் முதல் ரேங்க் வாங்கியது.
முதல் முதலில் அசைவ உணவு வாசனையை முகர்ந்தது.
தினமும் முட்டையும் , நீல அலுமினிய லோட்டாவில் பாலும் குடித்தது.
இரவு எங்கோ கத்தும் கழுதை புலிக்கு பயந்தது.
பெருசாளியிடம் இரவு கடி வாங்கியது
எல்லோருக்கும் லீவு விட்டதும் ஹாஸ்டலே காலியாகிவிட எங்களை கூட்டிப் போக ஆள் வருவார்களா? என ஏங்கியது.
செம்பருத்தி பூ மொக்கை தின்றது .
வாரா வாரம் பேன் மருந்து தலைக்கு தேய்த்தது.
முதல் முதலில் திரை அரங்கம் சென்று திருட்டு ராஜாக்கள் என்னும் படம் வரிசையாக வாழ்க்கை (மெல்ல மெல்ல பாடல் ) ,வெள்ளை ரோஜா,தங்கைக்கோர் கீதம் பார்த்தது.
என்னை எப்படி சினிமா பைத்தியம் ஆக்கி இருக்கின்றனர்?
வீட்டில் இப்போது பிரச்சனை பூதாகாரமாக
1984
மதுரைக்கு பாட்டி வீட்டிற்கு அம்மா தங்கை அக்கா சகிதம் வந்தது
டவுன் ஹால் ரோடு சந்தில் இருக்கும் ரோசரி சர்ச் ஸ்கூலில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தேன்.தமிழ் மீடியம்,
எவ்வளவு முயன்றும் எழுத மட்டும் வரவில்லை.
அம்மாவிடம் மரண அடி வாங்கி தமிழ் கற்றேன்.
இப்போது தான் நண்பன் இபுராகீம் கிடைத்தான் (எங்கேப்பா இருக்கே?)
அந்த டவுன் ஹால் ரோடு காசெட்டு கடைகள் ராஜாவின் அப்போதைய ஹிட்டுகள் மூன்றாம் பிறை தொடங்கி குங்குமச்சிமிழ்,தென்றலே என்னை தொடு ,விக்ரம்,படிக்காதவன் ,மிஸ்டர் பாரத் வரை
மதுரை பள்ளி வாசம்.
படிப்பில் நான் மூன்றாம் ரேங்க் எடுத்துக் கொண்டிருந்தேன்.
என் சகோதரிகள் அருமையாக படித்தனர்.
நான் பள்ளி விட்டதும் இபுராகீமின் அப்பாவின் பெட்டிக்கடை சென்று அங்கிருந்து அவன் வீட்டு மாடிக்கு சென்று பெட்டிக்கடையில் அவன் திருடிய பீடியை பற்றவைக்க நான் நீண்ட தயக்கத்துக்கு பின் இழுக்க.(வில்லன் என்ட்ரி) நான் தான்ப்பா.
மூன்றாவது படிக்கும்போதே புகைத்தவன் என்ற பெருமையை யாராவது முறியடிக்க வருகிறீர்களா? (விளையாட்டுக்கு)
மதுரையில் எனக்கிருந்த பெரும் அசவுகரியங்களில் ஒன்று
அப்போதைய ஓவர் டு டெல்லி ஹிந்தி ஒலிபரப்பு.
தமிழ் நிகழ்ச்சிகளே தெரியாது.
நாங்கள் பக்கத்து வீட்டில் எகிறி குதித்து டிவி பார்ப்போம்.
அப்போது விக்ரம் வேதாளம்,சனிக்கிழமை போடப்படும்
கண்ணாடி போட்ட அசோக் குமார் நடித்த படங்கள்,
புற்று நோயால் மாண்ட சஞ்சீவ் குமார் நடித்த படங்கள்.
புதன்கிழமை போடப்படும் சித்ரஹார்.
வாரா வாரம் நியூ சினிமா ,சென்ட்ரல் தியேட்டர் பட ரிலீசு பேண்டு வண்டிகள்,கோகோ மிட்டாய்,ராஜாபார்லீ சூச்பரி,நேவி பேனா,ஈகா ஐஸ்கிரீம்,
சேட்டு கல்யாண ஊர்வல கூட்டத்தில் கொடுக்கப்படும் ரஸ்னா ,
சித்திரை திருவிழா கொண்டாட்டம்,அழகர் ஆற்றில் இறங்குகையில் தொலைந்து போய் மீண்டும் கிடைத்தது.
கோச்சடையில் வைகையில் குளித்தது.
வளையல் கார தெருவில் கண்ணாடி கல் பொறுக்கியது.
ஆடி வீதியில் ஓடி விளையாடியது.
கோவில் மியூசியத்தில் டிக்கெட் எடுக்காமல் டபாய்த்து உள்ளே சுற்றியது.
சித்திரை பொருட் காட்சி.
மாடர்ன் ரெஸ்டாரண்டு சாம்பார் வாசம்.
நேதாஜி ரோடு அரசியல் மீட்டிங்
விபூதி குங்குமமிட்ட காபிக்கடை வெண்கல பாய்லர் .
இரவு மொட்டைமாடியில் கேட்கும் தியேட்டர் வசனங்கள்.
காலையில் எழுப்பிவிடும் அடிபம்பு சத்தம்
மீனாட்சியம்மன் கோவில் கடையில் மோட்டார் போட் வேடிக்கை பார்த்தது.மதுரையின் மண் வாசம்,செருப்பு போடா மனிதர்கள்.
ஐம்பது டெயிலர் கடைகள் கொண்ட பாட்டி வீட்டு தெரு
(யார் தைக்க கொடுப்பார்?)
ஈழதமிழர் படுகொலை ஓவியங்கள் சுண்ணாம்பு கார தெருவில் பார்த்து அரண்டது.
அதை பற்றி யாரிடம் கேட்டும் பதில் கிடைக்காமல் போனது.
ராஜாவின் இசையுடன் கூடிய சிறு பருவம்
என் உயிர் போனாலும் என் நினைவை விட்டு நீங்கா என் மதுரை டவுன்.
இன்னும் கூட நீளும்,
நீளம் கருதி...
வீட்டுக்கு வந்த யாரோ ஒரு சொந்தக்காரர் என் ஸ்லேட்டில் யானை வரைய,
அதன் மேல் நான் வரைந்து பழக ஒரு கட்டத்தில் விடுதலை பட ரஜினியையே வரைந்திருந்தேன்.
1986 சென்னைக்கு மீண்டும் பஞ்சம் பிழைக்க வந்தோம்.
சானடோரியத்தில் பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியில் அதே மூன்றாவது (மூணாப்பு என்றவனை பார்த்து வகுப்பே கொல்லென்று சிரித்தது,)
இங்கே தான் என் வாழ்வில் நான் நினைவில் கொள்ள தகுதியுள்ள ரோசலின் டீச்சரை பார்த்தேன்.
எனக்கு இங்கு முதல் ரேங்க் போட்டு பிழைக்க வைத்தார்.
என் நினைவில் இன்னும் அந்த ஒளியும் ஒலியும் ,அம்லு, நாயகன்,
புன்னகை மன்னன் படங்கள்.
அங்கிட்டு போ,இங்கிட்டு வா என்றால் சிரிப்பவர்கள்.
இட்டுகினு வா என்று பேசியதும்,
இசு (இழு) என்றதும்
புதிய கெட்ட வார்த்தைகளான (ஆண் குறி) (பிட்டம்)
போன்றவற்றின் அறிமுகமும்.
ஆட்டு மந்தையை கிட்டத்தில் பார்த்தது,ஆடு குட்டி போடுவதை பார்த்தது,
மரத்தில் போய் மாடு பிடித்தது.
கல்லா மண்ணா ,பம்பரம்,ஐஸ் பாய்,
பாண்டி ,காத்தாடி,கோலி,
வாயிலேயே பைக்,ஒட்டி பள்ளி சென்றது,பார்க் செய்தது.
கீரி பிள்ளை பார்த்தது.பெரிய கிணற்றை எட்டிப் பார்த்தது.
கிணற்றில் குதித்து இறந்த பெண்ணின் பிரேதத்தை அருகில் பார்த்தது.
போலீசை வெகு அருகில் பார்த்தது.
வண்ண தொலைக்காட்சியை பார்த்தது.
வைக்கோல் போருக்கு தீ வைத்தது.
அதை அக்கம்பக்கத்தார் அணைத்து .வேலைக்கு போய் திரும்பிய அம்மா வந்ததும் சொல்லித்தர அம்மா என் கையை உடைத்தது.
காட்சி மாறி
பல்லாவரம்
பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளி.
நான்காம் வகுப்பு, பவானி டீச்சர்.
பேரை சொல்லும் போதே எனக்கு ஒன்னுக்கு வருது (சாரி)
பேர்தான் பவானி
ஆனால் கிருஸ்துவர்
நல்ல பசங்களை மட்டும் தேடிபோய் அடிக்கும் ஒரு வித கிராக்கு,
வெள்ளையாய் இருப்பவன் உண்மை சொல்லமாட்டான்
என்பது இவரின் வாதம்.
புதுபேட்டை கேப்ஷன் "survival of the fittest" இந்த பள்ளிக்கு தான் பொருந்தும்
அரக்கத்தனமான மாணவர்கள்.
ரவுடிகளின் பிள்ளைகளோ என எண்ணக்கூடிய சூழல்.
அங்கு தான் ரௌதிரம் பழகினேன்.
இங்கு ஐந்தாம் வகுப்பு முடிக்கையில் எனக்கு தெரியாத கெட்ட வார்த்தைகளே இல்லை.
இங்கு தான் என் உயிர் நண்பன் சீனுவை பார்த்தேன்.
முதலில் கடுமையான சண்டை ,அவன் முகத்தை நான் பூரிய தடங்கள்,இன்னும் நினைவிருக்கிறது,
ராஸ்கல் இப்போ கூட கேட்டால் ஒத்துக் கொள்ள மாட்டான்.
அவன் தான் ஜெயித்தேன் என்பான்.
இருவரும் காசு கிடைத்தால் வாடகை சைக்கிள் எடுப்பது.
சிகரெட் குடிப்பது,சுருட்டு புகைக்க முயல்வது.
பாட்டு புத்தகம் வாங்கி படிப்பது.
பிராந்தி பாட்டில்,பீர் பாட்டில்,துண்டு கம்பி பொறுக்குவது.
காயலான் கடை சென்று போட்டு காசாக்குவது.
இப்போது தான் நான் மாமிசம் உண்ண கற்றேன்.
அவன் வீட்டில் தினமும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டேன்.
என் அம்மா வேலைக்கு சென்ற காரணத்தால் என்னை ஒழுங்காக கண்காணிக்க முடியவில்லை.
என் சகோதரிகள் பாட்டி வீட்டில் படித்தனர்.
யாரும் கேட்க முடியாத சூழல்.
அதில் ஒரு அதிசயம் இன்னும் நானே முதல் ரேங்க் வாங்கியது.
1990
ஆறாம் வகுப்பு ,அடுத்த காம்பவுண்டு.
மறைமலை அடிகள் அரசினர் உயர்நிலை பள்ளி.
எந்த விதத்திலும் முன்னுக்கு சற்றும் மோசமில்லாத பள்ளி.
நுழைவு தேர்வில் வென்று இப்போது ஆங்கில மீடியத்தில்.
ஒரே கனவுதான் போங்கள்.அஷ்...பிஷ்.... என இங்கிலீஷ் பேசபோறோம் என்று.
விட்டனரா பாவிகள்?.
முதல் நாளே
அழகிய டீச்சரை எதிர்பார்த்து போன எனக்கு
ஆனந்த விகடனில் வந்த அப்புசாமியும் கார்டூன் பாத்திரத்தின் மனைவி போன்றே தோற்றமளிக்கும் மரகதம் டீச்சர்.
கடவுளே,அந்த கிழவிக்கு என் மேல் எந்த ஜென்ம பகையோ?
முதல் நாள் வருகை பதிவேட்டில் பெயர் படிக்கிறது.
எல்லோரும் "ப்ரெசென்ட் டீச்சர்" என்கின்றனர்.
என் நாக்கில் சனியன் புகுந்து "வணக்கம் டீச்சர்" என்றதே பார்க்கணும்?
என் மேல் நிலை பள்ளி வாழ்க்கை அன்றே ஆட்டம் கண்டது.
எந்த ஸ்கூல்?
சொன்னேன்..
ஏன் இங்கிலீஷ் மீடியம்?
சொன்னேன்.
அம்மாவை வரச் சொல்..
நிலைமையை சொன்னேன்.
முகத்திலேயே நெருப்பை கொண்டு வந்தது அந்த கிழ டயனோசார்.
அன்று முதல் பின்னேர்றமே.
பாடமும் புரியாது.
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஒரு பீமபுஷ்டி அல்வாவை போன்ற ஒரு நிலை.
ஒரு வழியாக 35 ஆம் ரேங்க் வந்து அதுவும் நின்றே போனது.
ஏழாம் வகுப்பு
எனக்கு ஏழாம் உலகம் தான் நினைவுக்கு வருகின்றது.
coed கிலாஸ் ஆதலால் மாணவிகள் தாவணி போட்டு வர ஆரம்பிக்க,
அப்போது தான் உதித்த இதெல்லாம் தவறில்லையாம்பா ரக பெண்களை பற்றிய சிந்தனைகள்,வர்ணனைகள் (இப்போது என் குடும்பம் ஸ்மூத் ஆக செல்வதால் இங்கு தடங்கலுக்கு வருந்துகிறேன் போடுகிறேன்.)
விடாத சினிமா பைத்தியம்,போக்கிரித்தனம் என்னை படிக்க
விடாமலே செய்தது.
வகுப்பை கட்டடித்து விட்டு பல்லாவரம் மலைக்கு தினமும் போய் ஷூட்டிங் பார்ப்பது,மிலிடரி கிணற்றில் போய் நீச்சல் பழகுவது
(இன்னும் பழகவில்லை)
எனக்கென ஏற்கனவே காத்திருந்த நண்பர்கள் கூட்டம்,
பெயிலாகி மீண்டும் படிக்க வந்த மாணவ நண்பர்கள் என என்னை பொறுக்கியாகவே மாறியது
என் சகோதரிகள் அருமையாக படித்தனர்.
நான் பள்ளியில் படிக்கும் போது செய்த ஒரே சாதனை
தீபாவளி நேரத்தில் பள்ளி இயங்குவதை கண்டித்து
எரியும் ஊதுபத்தியில் அடியில் பெரிய ஐந்து ருபாய் அணுகுண்டு வைத்து பிணைத்து,அதை 1964 முதல் மூத்திரம் ஊறிய கழிவறை சுவற்றில் வைத்து அந்த குண்டு பத்து நிமிடம் கழித்து வெடிக்க அந்த சுவர் சாய்ந்தது. ,சக நண்பர்கள் ராஜகோபால்,ராஜேஷ்,ராமசேஷன்,பிலிப், ஸடாலின்,ஜோதீஷ்
ஜெயகுமார் எனக்கு ஊக்கமும் பக்கபலமுமாக இருந்தனர்.
நாய்மகனே என மாணவர்களை கூப்பிடும் ஒரு வாத்தியை முறைத்து.
நாங்கள் எல்லோரும் "தாய் மகன் "என்றது.
சங்கரலிங்கம் என்னும் கேடுகெட்ட வாத்தியானுக்கு சப்போர்ட் செய்து காளிதாஸ் என்னும் உயர்நிலை வாத்தியாரை கும்பலாக முறைத்தது.
செருப்பு தூக்கி அடித்தது.
எதிரில் இருந்த போலீசு ஸ்டேஷனில் வாசலில் நடக்கும் திருடர் கொலைகாரர் போட்டோ செஷனை அடிக்கடிபோய் வேடிக்கை பார்த்தது.
பொங்கல் வாழ்த்து கரும்பு பானை அடுப்பு ,மற்றும் தீபாவளி நேர புசு வானத்தை ஒவ்வொரு வகுப்பு கரும்பலகையிலும் போய் வரைந்தது.
எச்சை பொறுக்கி கணக்கு வாத்தியாருக்கு எச்சில் துப்பி காபி கைகாசு போட்டு வாங்கி தந்தது.பீர் குடித்து விட்டு வகுப்புக்கு பெருமையாக போனது.
பான்பராக் மானிக் சந்த் மென்று திரிந்தது.
எலெக்ட்ரிக் ட்ரைனில் வித்தவுட் டிக்கட்டில் நினைத்த இடமெல்லாம் போனது.
அப்போது பார்த்த alexandra,two moon junction,point of seduction,cave girl island,emma,
போன்ற கருத்தாழமிக்க ஆங்கில படங்கள்.
மருதம்,பருவகாலம்,முதல் டிபோநேர்,பாண்டசி,வரை மறைத்து படித்தது ,ஒரே நாளில் பிள்ளையார் படம் கேட்போருக்கு பிள்ளையார் படமும்
நிர்வாண படங்கள் கேட்போருக்கு நிர்வாண படமும் என்று வரைந்து தந்தது.
அடி அடியென அடிக்கும் பால்ராஜ் வாத்தியாரிடம் ட்யூஷன் சேர்ந்து பரீட்சை நேரத்தில் மட்டும் படித்து ,பிட் அடித்து பாஸ் செய்தது.
தளபதி,குணா பார்த்து யார் பெரியவர்? என அடித்துக்கொண்டது.
1994
கடவுளின் பரிபூரண ஆசியினால் பொது தேர்வில் 55 சதம் எடுத்து பாஸ் பண்ணியது.
(என் சகோதரிகள் இருவருமே மாவட்டத்திலேயே முதலாக வந்தவர்கள்.)
அந்த பள்ளியில் படிக்காமல் டிசி வாங்கிக்கொண்டு
கண்டிப்பில் சீர்திருத்த பள்ளியையும் மிஞ்சும்
ஜெயின் தொழிற்பயிற்சிகூடத்தில் போய் இரண்டு வருடம் draftsman civil படித்தது.
1996
பதினேழு வயதில் draftsman வேலைக்கு போனது.
2001
பார்ட் டைம் டிப்ளோமா சேர்ந்து படித்தது,என ..
2009
இப்போது நினைக்கையில் வலிக்கிறது
Professional degree முடிக்காததால்.
அன்று மட்டும் நன்றாய் படித்திருந்தால்?
என மூச்சு வாங்க முடிக்கிறேன்.
இந்த வருடங்களில் எங்கள் இசைஞானியை இடையிடையே மறந்தும் போனேன்.
நண்பர்களே மிக நீண்ட நடை ஆகவே என்னை மன்னித்துக் கொண்டே படிக்கவும்.
நான் கேள்விப்பட்டவரையில் எல்லோருமே இந்த தொடர்பதிவை எழுதிவிட்டமையால் யாரை கூப்பிடுவது? என தெரியாமல்,
இப்போதைக்கு ஆறப் போடுகிறேன்.
இது ஒரே மூச்சில் எழுதியபடியால் அவசர நடையில், படிக்க முடியாமல்
போகக் கூடிய வாய்ப்பு உண்டு.
இருந்தும் நண்பனுக்காக படியுங்கள்.
ஃப்ளாஷ் ஆஃப் ஜீனியஸ் படம் டெட் ராய்ட் டில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவியது,
ஃபோர்ட் கம்பெனியின் நயவஞ்சகத்தனத்தை வெளிசத்திற்க்கு கொண்டுவந்துள்ளது,
படம் 1953 ஆம் வருடம் துவங்குகிறது. ஒரு கண் பார்வையுடன் வாழ்வில் முன்னேற துடிக்கும் எஞ்சினீரிங்க் ஃபிஹெச்டி டாக்டர் கியென்ஸ்,(Greg Kinnear)
அவர்மீதும் அவர்களது 6 குழந்தைகள் மீதும்
உயிரையே வைத்துள்ள காதல் மனைவிPhyllis (Lauren Graham) ஒரு நாள் தன் கண்ணின் செயல்பாட்டை கிரகித்து, உள்வாங்கி,
கார்களில் மழை நீரை வழிக்கும் வைப்பரின் மேம்பட்ட மாதிரியை கண்டு பிடிக்கிறார்,தனது பெயரும் வைக்கிறார்,
நண்பர் உதவியுடன் ஃபோர்ட் கம்பெனிக்கு செயல் முறை விளக்கம் அளித்து ஆர்டரும் கேட்கிறார்,
ஃபோர்ட் கம்பெனியோ முதலில் ஆர்டர் தருவது போல் தந்து.
பின் அவரை கழற்றி விட்டு விடுகிறது ,
அவரது கண்டுபிடிப்பை சிறிது நாளில் திருடி தனது அடுத்த மாடல் மஸ்டாங் ரக கார்களில் பயன்படுத்தி கொழுத்த லாபம் அடைகிறது ,
ஒரு வருடம் கழித்து அவருக்கு அது தெரிய வரும்போது வாழ்கையே இருண்டு விடுகிறது,
வக்கீலை அமர்த்தி வழக்கு தொடுக்க பணிக்க,
அவர் 400ஆயிரம் டாலர் பணம் ஃபோர்ட் தர முன்வருவதாகவும்,
அதற்கு ஒப்புக்கொள்ள வக்கீல் அவரை நிற்பந்திக்கிறார்,
மறுக்கும் டாக்டர் பல போராட்டங்களை சந்திக்கிறார்,
இடையில் மனம் பேதலித்து,
2மாதம் மன நல காப்பகத்தில் தங்கி ,சிகிச்சை முடித்து,
வீடு திரும்பி ,கோர்டில் வழக்கு தொடுக்கிறார்.
அவர் கண்டுபிடிப்பு தனது என்பதை நிலை நாட்ட அரும்பாடு படுகிறார், மனைவியும் 6 குழந்தைகளுடன் நட்போடு பிரிகிறாள்,
டாக்டர் நூலகத்தில் சட்ட புத்தகங்களை படித்து கை தேர்கிறார்,
தன் வழக்கை நீதி மன்றத்தில் தானே பதிந்து,
ஃபோர்ட் கம்பெனியை சந்திக்கு இழுக்கிறார்,
வருடங்கள் 12 உருண்டோடுகிறது,
வழக்கு நடந்து வருகிறது,அவருக்கு சாதகமாக கீழ் கோர்டில் இந்த வழக்கை மாற்ற,
அவர் தன் பெரிய மகனின் உதவியுடன் தெம்புடன் ஆதாரங்களையும் ,சாட்சிகளையும்,சேர்க்கிறார்,
இடையில் ஃபோர்ட் ன் பிரதிநிதி டாக்டரைத் தேடி வந்து ஃபோர்ட் 30மில்லியன் டாலர் தர முன் வந்துள்ளதாகவும்,
வழக்கை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறும் வினவ,
டாக்டர் கன்டுபிடிப்பு தனது என்று ஃபோர்ட் விளக்கம் தருமா?
என கேட்க,
அவர் மறுத்து வெளியேற,
மறு நாள் வழக்கு விசாரணை ,
டாக்டர் தெளிவாக வாதாடி எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கிறார்,
எதிர் தரப்பு வாதங்களை வெளுத்து வாங்குகிறார்,
அதற்கு மறு நாள் தீர்ப்பு,
நீதிபதி தீர்ப்பு நகலை வாசிக்க துவங்கும் போதே எல்லோருக்கும் விளங்கி விடுகிறது, மக்கள் ஆனந்த வெள்ளதில் திளைக்க,
கை தட்டி ஆரவாரம் செய்கின்றனர்,
ஃபோர்ட் இன் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்கள் 18மில்லியன் டாலர் அபராதத் தொகை கட்ட பணிக்க படுகின்றனர்,
டாக்டர் கண்டுபிடிப்பே செல்லும்,
அவரே பேடென்டிற்க்கு சொந்தக்காரர் என நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது,
போர்டு நிறுவனம் $10.1மில்லியன் அபராதமாக இவருக்கு தருகிறது.
பின்னர் இவரின் கண்டுபிடிப்பை "Chrysler Corporation" இற்கு விற்று
$18.7 மில்லியன் பெறுகிறார். டாக்டர் மகனை ஆரத் தழுவுகிறார்,
மனைவி வருகிறாள்,கை குலுக்கி ,நீங்கள் விரும்பியது எல்லாம் உங்களுக்கு கிடைத்து விட்டது,என்கிறாள்,
அவரோ,ஒன்றைத் தவிர ,
இன்னும் நீ எனக்கு கிடைக்க வில்லை,எனக்கூற
மனைவி கண்ணீருடன் வேகமாக சென்றுவிடுகிறாள்.
பணம் வந்தபின் வந்து இணைவது அழகல்ல என்ற கொள்கையுடன்
படத்திற்கு இசையும்,ஒளிப்பதிவும் இருகண்களாக இருந்தன.
ஒவ்வொருவரும் நடிப்பில் தங்கள் பங்கை நிறைவாக செய்திருந்தனர்.
கோர்ட் சீன்கள் இன்னும் வராதா?என ஏக்கத்தை வரவழைத்தன.
அவ்வளவு விறுவிறுப்பு.
நகைச்சுவை உணர்வு பிரதிபலிக்கும் வாத,பிரதி வாத காட்சிகள் காண்பவரை உற்சாகம் கொள்ளச்செய்யும்.
நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி கூகுள் தாழ்மையான விண்ணப்பம் :-
இங்கு முழு படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி தந்திருக்கிறேன் என்று
நினைப்பவர்கள்,நினைப்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்.
காரணம்:-
முன்பு நான் ஆங்கில படத்தின் உச்சரிப்பு புரியாமல் அதை முழுமையாகபுரிந்து ஊன்றி பார்க்க முடியாமல் போனது.அந்த நிலை யாருக்கும் வரக்கூடாதுஎன்னும் சிறு முயற்சி. இதை குறை சொல்லி நான் எடுக்கும் இந்த நல்லமுயற்சியையும் கெடுக்க வேண்டாம்.எல்லாவற்றிர்க்கும் மேல் பாணி என்றுஒன்றிருக்கிறது.
இது என் பாணி.
இது எனக்கு எழுத்து பயிற்சியும் அளிக்கிறது.
imdb தளத்தில் விசிறிகள் ஒரு படத்தில் லயித்தால் அதை பற்றி "trivia" மற்றும்
faq,goofs,synopsis,plot எழுதி அந்த படத்தின் வெற்றிக்கு உதவுவதுண்டு.
அது போல ஒரு சிறு முயற்சி தான் இது.
ஒரு படத்தை விமர்சனம் படித்துவிட்டு போய் யாரும் கட்டாயம்பார்ப்பதில்லை.
நாம் லயித்ததை பிறருக்கு சொல்கிறோம் அவ்வளவே.
நன்றி