தீன் தீவாரெய்ன்,[3 Deewarein]மூன்று சுவர்கள்[2003 ][இந்தியா[15+]

தீன் தீவாரின் என்னும் ஹிந்திமொழியின் மாற்றுசினிமா திரைப்படத்தைக் காண சமீபத்தில் தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது, இது இயக்குனர் நாகேஷ் குக்குனூர் என்னும் மாற்று சினிமா  இயக்குனரின் முத்திரை படைப்பு, இவரின் படைப்புகள் அதிகம் மொழிஅபிமானம் இல்லாமல் இருக்கின்றன. இவரின் கதாபாத்திரங்கள் அநேகம் பேர் பெருநகர மாந்தர்கள். இந்தி, ஆங்கிலம், தெலுங்கு என கலவையாக திரையில் பேசுவர். நாம் அன்றாடம் வாழ்வில் எதிர்கொள்ளும்  கதாபாத்திரங்களே இவரின் கதையின் மாந்தர்களாக உலா வருகின்றனர். இவரின் படைப்புகள் உண்மைக்கு வெகு அருகே பயணித்து யதார்த்தத்தை அதிகம் பறைசாற்றும்.

வரை நாம் ஹைதராபாத் ப்ளூஸ் பாகம் -1&2 , இக்பால் போன்ற படங்களில் இருந்து பார்க்கத்துவங்கவேண்டும். நானும் அப்படிப் பார்த்ததின் விளைவாகவே இந்த தீன் தீவாரின் என்னும் சிறைச்சாலையை சுற்றி பின்னப்பட்ட ஒப்பற்ற படைப்பையும் காண நேரிட்டது. நம் நாட்டிலும் அந்நியப்படங்களை சொறியாமல்,உருவாமல்,திருடாமல் நேர்த்தியான படைப்புகளை வழங்க முடியும் என்பதறகான உதாரணம் இந்த படம். முதலில் ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் போன்றதொரு படைப்போ? என்று எனக்கு அயற்ச்சி ஏற்பட்டதென்னவோ உண்மைதான். 

னால் ,படத்தின் அசைக்கமுடியாத பலமான திரைக்கதை,நம் எண்ணத்தை தவிடுபொடியாக்கி அடுத்து என்ன நிகழுமோ? என்று ஆவல் மேலிட வைக்கிறது. ஏன் ? ஒரு கட்டத்தில் ஷஷாங்கையே மிஞ்சப்பார்க்கிறது என்பேன். யாருக்கு தெரியும்? கமல்ஹாசன் இந்தப்படத்தை பார்த்துவிட்டு கூட விருமாண்டி என்னும் ஒப்பற்ற படைப்பை உருவாக்குவதற்கான உத்வேகம் கொண்டிருக்கக்கூடும். ஏனெனில், அப்படி ஒரு வீச்சு உள்ள கதையும், நேர்த்தியான திரைக்கதையும் நான் லீனியர் உத்தியைக்கொண்டிருக்கும் காட்சியமைப்புகளும் கொண்டுள்ளதே!!!, தரமான படம் பார்க்க  விழைவோர்  விரைந்து தேடிக்காணவேண்டிய ஒப்பற்ற படைப்பு.

ந்தப்படம் ஓர் முண்ணணி கதாநாயகனுக்காக எழுதப்படவேவில்லை என்பேன்,அதனால் தான் எத்தனை ஆறுதல்?, கதைக்கான நாயகர்களாக இதில் நஸ்ருதீன் ஷா [இவர்,என்ன ஒரு அபார நடிகரப்பா?!!!] , ஜாக்கி ஷராஃப்,நாகேஷ் குக்குனூர் மற்றும் முக்கிய பாத்திரமாக ஜூஹி சாவ்லாவும் உண்டு,[ஜூஹி சாவ்லா தன் வாழ்வில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த படம்]மிகப்பெரிய நிம்மதி பாடல்களே இல்லை,ஆயினும் பிண்ணணி இசை பிரமாதமான ஒன்று.இது போல நல்ல படங்கள் தமிழிலும் உரிமை வாங்கி எடுக்கப்படவேண்டும் என்பதே உள்ளக்கிடக்கையாயுள்ளது.

டத்தின் கதையை சொல்ல மிகுந்த ஆவல் எழுகிறது, ஆனால் அது படம் பார்க்கும் நண்பர்களின் ஈடுபாட்டை, ஆர்வத்தை குலைத்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். ஆகவே மையக்கதையை மட்டும் சொல்கிறேன்.

கைதி-1.ஜக்கு[ஜாக்கி ஷராஃப்] இவர் ஒரு வக்கீல்,மனைவியின் கள்ளக்காதல் தெரிந்தும் அவளை மிகவும் நேசிக்கிறார். அந்த கிராதகி ஒருநாள் இரவு ஓட்டமெடுக்கப்போவதை தொலைபேசியில் ஒட்டுக்கேட்டவர்,விரைவாக வீடு திரும்புகிறார். முதுகுகாட்டித் துங்கும் அவளை வெறியுடன் கத்தியால் பலமுறை குத்துகிறார். பின்னர் பிணத்தைக்கட்டிக்கொண்டு கிடந்து அழுது தேற்றுகிறார். ஜக்குவுக்கு அவருடைய ஒப்புதலின் பேரிலேயே தூக்கு தண்டனை தாமதமின்றி கிடைக்க மரணவாயிலுக்கு காத்திருக்கிறார், 

கொலைபாதகத்துக்கு ஜக்கு  உண்மையிலேயே வருந்தியதாலும், மனைவியின் மீதான அபாரமான நேசத்தாலும் மேல்முறையீடே செய்யவில்லை, ஒரே தங்கை மிகவும் கெஞ்சுகிறாள் பலனில்லை,அம்மாவோ அவமானத்தால் தூக்கில் தொங்கிவிடுகிறாள். இவர் சிறையில் தரப்படும் தண்டனையைக்கூட விரும்பி அனுபவித்து வாழ்கிறார், இவரின் கைப்பக்குவத்தில் உருவாகும் பருப்பு சாம்பாரும், பொரியலும் மிகப் பிரசித்தம். சிறையில் இப்படி ருசியான உணவா? என்று, அதை சில தொழிற்சாலைகளும் தங்கள் தொழிலாளர்களுக்கு என்று பணம் தந்து வாங்கிக்கொள்கின்றன.

கைதி-2.[நாகேஷ் குக்குனூர்],நாக்யா என்னும் நாகேந்திர ரெட்டி ஒருசாதாரண தெலுங்கு மீடியம் படித்த அக்கவுண்டண்ட், நீதிபதியின் மகளான பணக்கார காதலியை கைபிடித்தவர் . அவளிடம் அனுதினமும் இருவரும் வேலைக்கு செல்லும் போது சாலையிலேயே திட்டுக்கள் வாங்குகிறார். அம்மாவைப் பற்றியும் குடும்பத்தினரைப்பற்றியும் அவள் பிராது வாசிக்க, செய்வதறியாது திகைப்பதே வாடிக்கை, அன்றும் அது போலவே அவள் மடைபோன்ற வாயை திறந்து திட்ட ஆரம்பிக்கிறாள். திடீரென வேகமாய் வந்த டாட்டா சுமோவில் விழுந்து தூக்கி வீசப்பட்டவள், சம்பவ இடத்திலேயே மண்டை ,முகம் உடைந்து சாகிறாள்.
வர் அவளின் துப்பட்டாவை பிடித்து காப்பாற்ற கைதூக்கியதை பார்த்த பொதுமக்கள், தர்ம அடி போட்டு,போலீஸில் ஒப்படைக்க, நீதிபதி மாமனாரின் பழிவாங்கும் நடவடிக்கையால், போலீஸ் காவலில் த்ரி டிகிரி ட்ரீட்மெண்ட் கிடைத்து, நான் தான் அவளைத் தள்ளிவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்து, தூக்கும் கிடைத்து, இப்போது சிறையில், இதுவரை மன்னிப்புக்கு எத்தனை அப்பீல்கள் எல்லாம் இருக்குமோ? அத்தனைக்கும் மனு செய்திருப்பார். எல்லாமே சுவற்றிலடித்த பந்தாய் திரும்பி வந்துவிடுகின்றன. சிறையில் தூக்கம் வராப்பொழுதுகளில் நிலவைப்பார்த்துக்கொண்டே புல்லாங்குழல் வாசித்தும் நண்பன் ஜக்குவிடமிருந்து பிரவாகமாக ஊற்றெடுக்கும் ஆங்கிலக்கவிதைகளை கேட்டும் ரசிக்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் அப்படி நட்பு பாராட்டுகின்றனர்.

கைதி-3. [நஸ்ருதீன் ஷா] இஷான் என்னும் பலே திருடன், சில பல ஏமாற்று, மோசடிகள் செய்தவர். ஒரு பெரிய தொகையை தேற்றிக்கொண்டு ஊரைவிட்டே ஓட்டமெடுக்கும் நோக்கத்துடன் ஓர் சிறிய வங்கிக்கு சென்று விக், ஒட்டு மீசை அணிந்திருந்தவர் துப்பாக்கி முனையில் பெண் கேஷியரிடமிருந்து பணக்கட்டுகளை வாங்கி பையில் அடுக்குகிறார், வேகம் வேகம் என்று மென்மையாக அவளை அதற்றியவர். பிரபல கிஷோர்குமாரின் ஹிந்திப் பாடலையும் பாடுகிறார்.
கீழே மக்கள் கூட்டம் பயந்து நடுங்கியபடி படுத்திருக்க, பணப்பையை எடுத்துக்கொண்டு இவர் பாடியபடியே நகர, கேஷியர் பெண் சரியாக அலாரத்தின் பொத்தானை அமுக்குகிறாள். இவர், மென்மையாக கோபித்தவர், துப்பாக்கியைக் காட்டி ச்சும்மா  லுல்லுல்லாயிக்கு மிரட்ட மட்டும் செய்கிறார். இவர் விதி வலியதாயிருக்க, கீழே படுத்திருந்தவனின் காலை பதட்டத்தில் மிதித்துவிட, கைவிரல் விரல் தவறி துப்பாக்கியின் ட்ரிக்கர் அமுக்கப்பட்டு, தோட்டா லேமிடேட் செய்யப்பட்ட பிளைவுட்டை துளைத்து கேஷியர் பெண்ணின் வயிற்றையும் துளைத்து அவளைக் கொல்கிறது,
தில் இவரது விதி இன்னும் மோசமாயிருக்க,அவளின் பிரேதப் பரிசோதனையில் அவள் வயிற்றிலிருந்து இரு குழந்தைகளும் அறுத்து எடுக்கப்பட, இவருக்கு ஆப்பு இறுகுகிறது, ஒரு கலக்கலான சந்தர்ப்பத்தில் போலீசிடம் சிக்கிய இவருக்கு ”குழந்தைக் கொலையாளி” என்று உடனடியாக தூக்கு தண்டனையும் கிடைக்கிறது. இருந்தும் இவர் தான் சுடவேயில்லை, ஆகையால் வருந்தவுமில்லை என்கிறார், ஆகையால் நிறைய மேல் முறையீடுகள்  செய்கிறார்.வக்கீல்களையும் மாற்றுகிறார்.இந்த முறை இவரின் கேஸை விசாரிக்க ஒரு பெண் நீதிபதி அமர்கிறார்.அவர் இவரின் வக்கீலை அழைத்து கடுமையாக எச்சரித்தமையால் அவரும் வழக்காட முடியாது என்று விலகிகொள்ள ,இவர் தன் கையே தனக்குதவி என்று முடிவெடுக்கிறார்.

ஷான் தான் கொள்ளை அடித்த பணத்தை தன் மாமாவிடம் கொடுத்து பதுக்கிவைத்தும் உள்ளார், இதுவரை 6 முறைக்கு மேல் சிறையிலிருந்தும் தப்புகிறார். இவரின் சாதுர்யமான சாந்தமான பேச்சால் காண்போரையெல்லாம் நட்பாக்கிக் கொள்கிறார். போலீசாரில் பலருக்கு லஞ்சம் கொடுத்து அடுத்த தப்பித்தலுக்கும் அடிகோலுகிறார். அது என்ன? எங்கே? எப்படி? என்று நீங்களே பாருங்கள். இப்போது மெல்ல ஜக்கு மற்றும் நாக்யாவிடம் நட்புடன் நெருங்குகிறார். நாக்யாவிடம்  புல்லாங்குழல் வாசிக்கவும் கற்றுக்கொள்கிறார்.அது ஏன் என்றும் கவனித்துப்பாருங்கள். 
பார்க்கும் யாரிடமும் உன்னை இதற்கு முன் உங்களை எங்கோ ? பார்த்திருக்கிறேன் என்று சொல்லியே நண்பனாகிவிடும் சாமர்த்தியமும் கைவரப் பெற்றிருக்கிறார். அவ்வபோது சிறைக்கு வரும் பார்வையாளர் வழியே, ஊறுகாய்க்குள் பாலீத்தினில் மடிக்கப்பட்டு ரூபாய் நோட்டுக்களை லஞ்சம் கொடுக்க தருவிக்கிறார். இவரை கெட்டவன் என்றே ஒதுக்கமுடியாதபடிக்கான ஒரு கதாபாத்திரம், அத்தனை அழகு இவர் அதை ஏற்றுச் செய்தவிதம், இவர் என்ன பாத்திரம்? ஏற்று நடித்தாலும் நஸ்ருதீன் ஷா தெரியமாட்டார், அந்த கதாபாத்திரம் தான் தெரியும், அப்படி ஒரு வித மாயவித்தை வாய்த்தவர்.[இவரின் மான்சூன் வெட்டிங் என்னும் படத்தின் தந்தை பாத்திரம் அத்தனை அழுத்தமானது,இதுவரை பார்க்காவிட்டால் விரைந்து பார்த்துவிடுங்கள்]

டுத்ததாக சந்திரிகா என்னும் கதாபாத்திரம் [ஜூஹி சாவ்லா] அடடா!!! இதுவரை, இத்தனை அழுத்தமான, மனதில் பதியும், உண்மைத்தன்மையுள்ள, பாத்திரம் ஏற்று இவர் நடித்து பார்த்ததில்லை, அதற்காகவே இவரைப் பாராட்டலாம்.  40களில் இருக்கும் அழகிய குடும்பப்பெண் சந்திரிகா ஒரு பத்திரிக்கையாளர், சிறைச்சாலை பற்றியும் மரணதண்டனை பெற்று தம் முடிவு நாளுக்கான பயணச்சீட்டை கையில் வைத்துக்கொண்டு  கடைசி ரயிலுக்காக காத்துக்கொண்டிருக்கும் கைதியின் மனநிலையை பற்றியும் அறிய பெரும்பாடுபட்டு , ஜெயில் வார்டனிடம் அனுமதி வாங்கிக்கொண்டு சிறைக்குள் வருகிறார்.  நல்லவேளையாக கைதிகள் யாரும் இவரிடம் பிரா சைஸ் கேட்கவில்லை,[!] 
ரணதண்டனைக்கைதிகள் மூவரும் நான் லீனியர் பாணியில் இவரிடம் பேட்டியளிக்கும் அந்த நீண்ட நெடும் காட்சி மிகவும் உற்சாகம் அளிக்கிறது. அது புதிய உத்தியாக எனக்கு தோன்றி அட சொல்லவும் வைத்தது. சந்திரிகா கைதிகளிடம் நம்பிக்கையை பெறுகிறார்.ஜக்கு தான் செய்த கொலையப்பற்றிய குற்ற உணர்வு மிகுந்திருப்பதால் தன்னால் பேட்டியளிக்க முடியாது தன் கேஸ் ஃபைலை பார்க்கச்சொல்லி பிடிவாதம் பிடிக்கிறார்.

நாக்யா தான் நிரபராதி என்று மட்டும் சொல்கிறார்.இஷானோ தான் செய்தது கொலையல்ல,ஒரு விபத்து,அப்படி அறியாமல் செய்த விபத்துக்கு தான் எப்படி? பொறுப்பாவேன் என்கிறார். நான் எதிர்பார்க்கும் விடுதலையை சட்டம் தராத பட்சத்தில் அதை தேடி எடுத்துக்கொள்வேன்,மூன்று உயிர்கள் போனது பற்றி நினைக்கையில் தனக்கு எந்த வருத்தமுமே உள்மனதில் ஏற்படவில்லை. என்கிறார்.  என்கிறார். எதற்கு பொய்யாக அனுதாபப்படவேண்டும் என்கிறார். 
தே நேரத்தில் ஜெயிலர் சந்திரிகாவிற்கு சீஃப் ஜஸ்டீஸ் என்று ஒருவரை அறிமுகப்படுத்த, அவர் , நாக்யா என் மருமகன்,அவன் வாயால் நான் தான் என் மனைவியை கொன்றேன் என்று வாக்குமூலம் சாதுர்யமாக வாங்கி வீடியோகேசட்டில் பதிந்து கொடுத்துவிடு!!!, பின்னர் உன் கண்வன் உனக்கு கொடுக்க மறுக்கும் விவாகரத்தை நேரம் விரயமில்லாமல்,உன்னை அலைக்கழிக்காமல் நொடியில் வாங்கி கொடுக்கிறேன், என்கிறார்.

சந்திரிகாவோ தன் சொந்த விவகாரம் எப்படி? இவருக்கு தெரியும் என திகைக்க, அவர், நாக்யா என்னும் கொலைக்காரன் சம்பந்தப்பட்ட எந்த விஷயமும்?  என் விஷயம் தான் என்கிறார். இப்போது தான் சந்திரிகாவின் வயது முதிர்ந்த கணவனை நாம் பார்க்கிறோம், திருமணத்துக்கு வரன் பார்க்கும் விடயத்தில் எப்படித்தான்?  பெற்றோர்கள் சொதப்புகிறான்களோ ? என்றொரு கேள்வி நம்மில் அநேகம் பேருக்கு, நெட்டை குட்டையான, பொருத்தமில்லாத ஜோடிகளைப் பார்க்கையில் தொக்கி நிற்கும் பாருங்கள்?!!!. 
ப்படி நமக்கும் இந்த ஜோடியைப்பார்க்கையில் எரிச்சல் வருகிறது, ஈனத்தனமான குடிகாரன் அவன், சந்திரிகா அவனுக்கு தேநீர், பலகாரங்கள் தயாரித்துத்தர சிறிதும் அதை மதியாதவன், டீவீ பார்க்கிறேன் என்று தெரியலையா? என்கிறான். நடுநிசியில் சந்திரிகாவை கட்டிலில் நைட்டியில் பார்த்ததும் குடிபோதையில் கிறுக்கேற  அப்படியே நொறுக்கியவன்,அவளை அவள் விருப்பமின்றி கூடுகிறான்.
வளை சமைத்துபோட்டு, துவைத்துப்போட்டு எனக்கு தேவைப்படுகையில் காலை விரித்துப்படு என்று பட்டவர்த்தனமாக சொல்லும் ஒரு படைப்பு இந்த கணவன் பாத்திரம், ஆனால் அதுதானே? பல பெண்கள் வாழ்வில் இந்த கொடுமையான சமுதாயத்தில் நிதர்சனம். அப்படிப்பட்டவன் சந்திரிகா வேலைக்குப்போகிறாள் என்று கேள்விப்பட்டால் என்ன ஆகும்? மேலும் அந்த சீஃப் ஜஸ்டீஸ் வேறு சந்திரிக்காவைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக பற்றவைக்க,கணவன் அவளை அடித்து துன்புறுத்துகிறான்.சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல ,தன்னை கேவலமாக மிருகத்தனமாக நடத்திவரும் கணவனுக்கு இவள் எப்படி பாடம் புகட்டினாள்?கணவனை எப்படி மறுநாளே ,முழுஒப்புதலுடனான விவாகரத்தை பதிய வைத்தாள் போன்றவற்றை ஒருவர் தவறவிடவே கூடாது.

ன்னொரு முக்கிய கதாபாத்திரத்தைப்பற்றி இங்கே எழுதவே கூசுகிறது,ஆனால் எழுதாமல் விடமுடியாது,ஆம்!!! அவன் பெயர் தான் கௌதம், அவனின் அண்ணன் ஒரு ஆளும்கட்சி எம் எல் ஏ, தீவிர ஓரினச்சேர்க்கையாளனான  கௌதம் , சிறைக்குள் வரும் புதிய அப்பாவி கைதிகளை கண்கட்டி வித்தை செய்து, கை கால்களைக் கட்டி கதவடைத்து குதப்புணர்ச்சியும் செய்து விடுகிறான்,அதில் என்ன ஒரு கோரம் என்றால்,இந்த இழி குடி வந்தவன் ஒரு ஹெச் ஐ வி பாசிட்டிவ்,ஏற்கனவே இருவருக்கு இவன் எயிட்ஸை பரிசளித்திருந்தாலும்,எம் எல் ஏ அண்ணனின் தயவால் அரசு டாக்டரிடம் இருந்து ஹெச் ஐ வி நெகட்டிவ் என்று,சான்றிதழ் வாங்கி பொது செல்லிலேயே சுகபோகமாக கழிக்கிறான்,
ட்டிக்கேட்பார் யாருமில்லாததால் அவன் ஒரு தண்டல்காரந்தான்.தன்னை சகித்து கொண்டு,உடன்பட்டால்,சுதந்திரதின சிறைவிழாவில் முதலமைச்சரிடம் இருந்து மன்னிப்பு வாங்கித்தருவேன் என்று மார்தட்டும் ஒரு இழிபிறவி, சிறைக்கு வந்த அப்பாவி இளைஞன் மல்லியை  ஒருநாள்,ஏமாற்றி, குதப்புணர்ச்சி செய்துவிட, போலீசார் தீவிர யோசனைக்கு பின்னர் அவனை லட்டி சார்ஜ் மட்டும் செய்கின்றனர்,மல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட,டாக்டர் மல்லிக்கும் நோய்தொற்றுக்கான சாத்தியம் அதிகம் என்கையில் நமக்கு தூக்கிவாறிப்போடுகிறது,சமுதாயத்தில் இப்படித்தான் எயிட்ஸ் நோய் அதிகம் பரவுகிறது என்னும் சுடும் உண்மை ,முகத்தில் அறைகிறது.நல்ல மனம் கொண்ட வார்டன் ஒரே வழிதான் உள்ளது என்று மல்லிக்கு மனநிலை பிழறிவிட்டது என்று சான்றிதழ் வாங்கி,அவனை மனநல மருத்துவமனைக்கு அனுப்பும் காட்சி நெஞ்சை பிசைகின்றது. சிறைச்சாலை என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று புடம் போட்டுக்காட்டிய படம் இதுவாகத்தான் இருக்கும்.

ன்ன தான் இஷான் [நஸ்ருதீன் ஷா] ஒரு சுயநலமியாக இருந்தாலும் அவர் மனதிலும் இரக்கம் இருக்கிறது என்பதற்கு சான்றாக,மல்லிக்காக சிறை வார்டனிடம் மன்றாடும் இஷான் மனதில் நிற்கிறார்,மல்லி மனநல மருத்துவமனைக்கு மாறிச்சென்றுவிட்டாலும்,கௌதமால் இன்னொரு அப்பாவிக் கைதி பாதிக்கப்படக்கூடாது என்னும் எண்ணத்தால், முகத்துக்கு சோப்பு போட்டுக்கொண்டிருக்கும் கௌதமை பனியனில் கல்லைக்கட்டி அவன் முகத்தில் தாக்கி நிலைகுலையச்செய்தபின்னர் ,அவனின் பிறப்புறுப்பையும், விதைக்கொட்டையையும் நசுக்கித் தாக்கும் தீவிரம் படு யதார்த்தம்.

ன்னும் சொல்லாமல் விட்டது மோகன்[குல்ஷன் க்ரோவர்] என்னும் ஒரு சிறைவார்டன் கதாபாத்திரம்,என்னே ஒரு பங்களிப்பு?!!!எல்லா சிறைகளிலும் இவரைப்போல முன்மாதிரியாக சிறை வார்டன் இருந்துவிடவேண்டும் என்பேன்,முடிந்தவரை கைதிகளை மனிதனாக நடத்துகிறார்,ஒழுக்கத்தை தன்நம்பிக்கையை வளர்க்கிறார்,பல அரசியல் மாமாக்கள் குறுக்கீடுகள் இருந்தும் நேர்மை,நிதானம் கடைபிடிக்கிறார்.எல்லாவற்றிற்கும் மேலாக அரசாங்கத்திடம் நிதியுதவி கோராமல்,கைதிகளின் உழைப்பிலேயே பயிர்கள்,பழங்கள்,காய்கறிகள் விளைத்து,அவற்றை விற்று,நல்ல மளிகை பொருட்கள்,சிக்கன்  என்று நல்ல சாப்பாடு போடுகிறார்.கைதிகளுக்கு நல்ல சுதந்திரம் கொடுத்து,வெளியுலகைப்பற்றிய நினைவே வரவிடாமல் செய்கிறார்.

ப்படி தன்  சிறை தண்டனையை ஏறத்தாழ கழித்துவிட்ட,வயதான கைதி  ஒருவர் வெளியே சென்றால் தனக்கு உறவினர் என்று யாரும் இல்லை,ஆகவே தனக்கு நன்னடைத்தைக்கு வழங்கப்படும்,ரெமிஷன் வேண்டாம் என்று கெஞ்சும் விந்தையும் இங்கே நடக்கின்றது. ஆனால் வெளியேற விரும்பியவன் மனம்போல வெளியேறுவதும்,வெளியேற விரும்பாதவன் மனம்போல சிறையினுள்ளேயே தங்கிவிடுவதும் என்ன சாத்தியமா,சிறையில்?அதற்கு ஏற்ப ,சுதந்திர தின சிறை விழாவில் வெளியேற ஏங்கும் நாக்யாவுக்கும்,இஷானுக்கும் முதலமைச்சரின் மன்னிப்பும்,விடுதலையும் கிடைக்காமல்,வெளியேற விருப்பமேயில்லாத அந்த வயதான சிறைக்கைதி மன்னிப்பு பெறுவது நிகழ்கிறது,கூடவே ஓரினச்சேர்க்கையாளன் கௌதமிற்கும் மன்னிப்பு கிடைக்கிறது,அதுதானே வாழ்க்கை?
னவே அந்த வயதான கைதி,மிகவும் நொந்தவர்,மண்ணள்ளிக்கொட்டும் சம்மட்டியைக்கொண்டு கௌதமை பின்மண்டையில் அடித்து,மூளையை பிளக்கிறார்,போலீசாரைப் பார்த்து இப்போது நான் இங்கே தானே இருக்கவேண்டும் என்கிறார்.மிக அருமையான காட்சியது.ஒரு சில திரைப்படங்கள் அர்த்தமற்ற எரிச்சலைடய வைக்கும் ட்விஸ்டுகளைக் கொண்டிருக்கும்,தமிழில் ஏகம் உதாரணம் உண்டு,அவற்றில் இருந்து மிகவும் மாறுபட்ட கதைக்கு தேவையான ட்விஸ்டுகளை இப்படம் கொண்டிருப்பதாலேயே எனக்கு இப்படம் மிகவும் பிடித்தது என்பேன். படத்தின் முடிவு என்பதை ஒருவர் அவ்வளவு எளிதாக கணித்துவிடவே முடியாதது என உறுதியாகச் செல்வேன்,அது தான் ஒரு நேர்த்தியான திரைக்கதையின் பலம்,

ரு பொருளின் தரத்தை மதிப்பிட ஒப்பீடுகள் தேவையாக இருக்கிறது,அந்த கருமத்துக்காகத்தான் நாம் ஒன்றுடன் இன்னொன்றை ஒப்பிடுகிறோம்,அந்த வகையில் இந்த படத்துக்கு ஈடான ஒப்பீடு எது என்றால் அப்படி ஒன்று இல்லை எனச்சொல்லவேண்டியிருக்கிறது,இது அப்படி ஒரு படைப்பாக மிளிர்கிறது.
ஜக்குவுக்கு தூக்கு தண்டனைக்கான தேதி முடிவாகிறது,நாக்யாவுக்கு துக்கம் மிகவும் தொண்டையை அடைக்கிறது,இஷான் சிறையிலிருந்து தப்பிக்க நாளும் குறித்தாகிவிட்டது,சந்திரிகா தன் கொடுமைக்கார கணவனிடமிருந்து விடுதலை கிடைக்கப்போகிறதை எண்ணி மகிழ்ந்தவள்,தனக்கு உள்ளத்துக்குள் குறுகுறுப்பாய் ஒன்றை உணர்கிறாள்,ஆம்! அவளுக்குள் காதல் பூத்துள்ளது,அது யார் மீது?நாளையே தூக்கில் தொங்க இருக்கும் ஜக்குவின் மீதா?நிச்சயம் சந்திரிகா இந்த டாகுமெண்டரி படத்தை வைத்து தனக்கு விடுதலை வாங்கிகொடுப்பாள் என நம்பும் நாக்யாவின் மீதா?அல்லது சிறையிலிருந்து தப்பி மனம் போல வாழ்க்கை வாழத்துடிக்கும் கோட்டிக்கார இஷான் மீதா?

யிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை,ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிறார்களே?அது இந்த ஜக்கு,மற்றும் நாக்யா விஷயத்தில் நடக்குமா?!!!பட்டர்ஃப்ளை எஃபெக்ட் என்கிறார்களே? [கமலின் தசாவதாரத்தை சொல்லவில்லை] அப்படி ஒன்று இருக்கிறதா? விடையில்லா கேள்விகளுக்கு இயக்குனர் நாகேஷ் குக்குனூர் எப்படி விடையெழுதினார் என்று காணத்தவறாதீர்கள்.நிச்சயம் நான் முடிவை சொல்லாமல் போனதற்காக என்னை பாராட்டுவீர்கள் என நம்புகிறேன்.

ந்தப்படம் சிறைக்குள்ளே கிடைத்த இயற்கை வெளிச்சம்,மற்றும் இரவில் குண்டு பல்பு வெளிச்சத்தில் படம் பிடித்தமையால்,பச்சை மற்றும் பழுப்பு நிற டோன்களிலேயே காட்சிகள் அமைந்திருக்கின்றன,ஆயினும் ஒளிப்பதிவு இயக்குனர் அஜயன் வின்செண்ட் தன் பங்கை சிறப்பாக ஆற்றியிருக்கிறார். இப்படம் 36 நாட்களில் மிகவும் வேகவேகமாக படம் பிடிக்கப்பட்டதாம், ஏன் தெரியுமா?இப்படம் எடுத்தது ஹைதராபாதின் பழைய சிறைச்சாலையில்,அது இடிக்கப்படப்போவதை அறைந்த குழு அங்கே சென்று அனுமதி கேட்க,மிகுந்த கெடுபிடிக்கு பின்னர் அனுமதி கிடைத்ததாம்,

வ்வொருவரும்  மிகுந்த அற்பணிப்புடன் பங்காற்றியதால்,படம் விரைந்து முடிக்கப்பட்டதாம்,பின்னர் சிறைச்சாலை தரை மட்டமாகி இப்போது அங்கே ஆஸ்பத்திரி திறக்கப்பட்டுள்ளது எனப்படித்தேன்.சலீம் சுலைமானின் பிண்ணணி இசை மிகமிக நேர்த்தி,ஒரு பிண்ணணி இசை எங்கு ஒலிக்கவேண்டும், எங்கே அடக்கிவாசிக்கவேண்டும்? என்று எண்ணி பங்காற்றியுள்ளனர். அற்புதம்!!!.இதுபோல நல்ல படைப்புகள் வணிகரீதியாக நன்றாக ஓடாமல் போவது தவறே அல்ல, யாரும் பாராமல் போவது தான் தவறு என்பேன், ஆகவே இதையும் இதைப்போல மாற்று சினிமாக்களையும் தேடிப்பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தீன் தீவாரின்=சீனப்பெருஞ்சுவர்

படம் தரவிறக்க சுட்டி:- 
திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
=====0000=====
திரைப்படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Nagesh Kukunoor
Produced by Metalight Productions (Elahe Hiptoola, Sanjay Sharma)
Written by Nagesh Kukunoor
Starring Nagesh Kukunoor
Naseeruddin Shah
Jackie Shroff
Juhi Chawla
Music by Salim-Sulaiman
Cinematography Ajayan Vincent
Editing by Sanjib Datta
Distributed by Shemaroo Video Pvt. Ltd.
Release date(s) 1 August 2003
Country India
Language Hindi
Budget Indian Rupee ₹2.1 crore (US$455,700)
Gross revenue INR 4,703,000 (India) (15 August 2003) (sub-total)
 =====0000=====

சரசம் சல்லாபம் சாமியார்-சாரு நிவேதிதா-உயிர்மை வெளியீடு

ருமை நண்பர்களே!!!

சாருவின் 'சரசம் சல்லாபம் சாமியார்' புத்தகம் தடை செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, இதுவரை படிக்காதவர்கள், அதனை வாங்கிப் படித்து, நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள். ஏனெனில், தடை செய்யப்பட்டு விட்டால், அப்புத்தகம் இனிமேல் எங்கும் கிடைக்காது.  நூலகங்களிலும் படிக்கக் கிடைக்காது, மறு பதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.  

ந்த புத்தகம் படிக்கும் போதே நம் குடும்பத்தில் ஒருவர் இதுபோல ஆன்மீக காலிகுலாவின் ஆசிரமத்தில் மாட்டியிருந்தால் என்னாவா யிருக்கும்?!!! என்ற பதட்டம் ஆட்கொள்வதை தவிர்க்க இயலாது. அவ்வளவு நிஜமான சுவையான எழுத்து நடையைக் கொண்டது. ஆனால் இந்த உலகத்தில் யாரும் உண்மையை பேசவே கூடாதே? !!!! யாரையாவது விமர்சித்தால் கூட சார் போட்டு தானே விமர்சிக்க வேண்டும். ஐயகோ!!!

கேட் வின்ஸ்லேட் நடித்த ஹோலிஸ்மோக் என்னும் படம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ஆஸ்திரேலிய இளம்பெண்  இந்திய போலி சாமியாரிடம் மாட்டிக்கொள்வாள், சாமியாரிணியும் ஆகிவிடுவாள். அவளை அவளின் பெற்றோர்கள் ஆஸ்திரேலியா அழைத்துச் சென்று பகீரதபிரயத்தனம் செய்து டீ-ப்ரோக்ராமிங் கவுன்சிலிங் செய்வார்கள், அது எத்தனை கடினமானது?  கொடுமையானது? அவமானகரமானது? என்று படம் பார்த்தால் மட்டுமே ஒருவருக்கு புரியும். இந்திய போலிச் சாமியார்களால் ஆட்கொள்ளப்படும் வெளிநாட்டு இளம் பெண்களை திருத்துவதற்கே அமெரிக்காவில் நிறைய டீப்ரோக்காமர்கள் ஆஃபீஸ் போட்டு அமர்ந்திருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா? !!!

மதங்கள் தங்களது வராலாற்றுப் பாத்திரத்தை இழந்த பிறகு புதிய வழிபாட்டுக் குழுக்கள் அந்த இடத்தை கைப்பற்றிக் கொள்ள விழைகின்றன. கடவுள்கள் மனிதர்களிடமிருந்து அன்னியமான பிறகு மனிதக் கடவுளர்கள் எங்கெங்கும் அவதரிக்கின்றனர். என்ற மனுஷ்யபுத்திரனின்  பலம் வாய்ந்த மதிப்புரையைக் கொண்டிருக்கிறது

லகில் மிகக்கொடியது எந்த வகையிலேனும் பிறரால் ஏமாற்றப்படுதலே ஆகும், ஆன்மீக பிராது நித்யானந்தன் போன்றவர்கள் இன்று ஆன்மீகத்தை ஒரு மாபெரும் வர்த்தக நிறுவனமாக மாற்றிவிட்டனர் என்றால் மிகையில்லை. சாமியார்களது புனித முகமூடிகளுக்குப் பின்னே நிகழ்த்தும்  காமக்களியாட்டங்கள், சாமியாரின்  ஊருக்கே உபதேசம் ரக  அபாயகரமான நிழல் நடவடிக்கைகள் . சொத்துக்குவிப்புகள்.

வை அப்பாவி குடும்பஸ்தர்கள், மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகளது நம்பிக்கைகளை.வாழ்வில் எதிலும் நாட்டம் போய் நிம்மதி தொலைத்தவர்களின் அந்தரங்கங்களை வெகு ஆழமாய் காயப்படுத்துவது மட்டுமல்ல அவர்களை எவ்வாறு? சுய பச்சாதாபமுடையவர்களாக, மனப்பிறழ்வு  கொண்டவர்களாகவும் மாற்றுகிறது என்பதை சாருநிவேதிதா இந்த நூலில் விரிவாக எடுத்தாண்டிருக்கிறார். இப் புத்தகம் பற்றி மேலோட்டமாக சொல்லிவிட்டுப்போய் விடக்கூடாது என்பதாலேயே அதைப்பற்றி  எழுத அவசரம் காட்டவில்லை. ஆனால் இந்த புத்தகம் ஆளும் கட்சியினரின் மிரட்டலின்  பேரில் மிகுந்த கெடுபிடிக்குள்ளாயிருக்கிறது .


மிழில் மிக அபூர்வமான நெஞ்சுரத்துடன் எழுதப்பட்ட புத்தகம், கண்மூடித்தனமாக சாமியார்களின் மகுடிக்கு பாம்பாய் ஆடும் கார்பொரேட் பக்தர்களுக்கு இதை நான் பலமாய் சிபாரிசு செய்கிறேன். சாரு நித்தியானந்தனிடமிருந்து நிறைய பணம் வாங்கிக்கொண்டு அவனுக்கு கொபச வேலை செய்தார் என்று பழி வந்தது, ஆனால் புத்தகம் படிக்கும் ஒருவருக்கு அது எவ்வளவு வடிகட்டிய பொய் என்று தெரியவரும்.

ந்த புத்தகம் படித்து முடித்த பின்னர் வாசித்தவருக்கு ஏற்படும் நித்தியின் மீதான் கொலைவெறி அடங்க நாளாகும், அவனுக்கு கால் கழுவிவிட கட்டணம் எவ்வளவு? அவனை வைத்து தங்கத்தேர்   இழுக்க கட்டணம் எவ்வளவு?அவன் ஆசிரமத்தில் சேர வாங்கப்படும் உறுதிமொழிப்பத்திரம் எவ்வளவு பயங்கரமானது? பிடதி ஆசிரமத்தில் விடிய விடியப் பாடப்படும் ? டாடி மம்மி வீட்டில் இல்லே,தடைபோட யாருமில்ல.? மெட்டிலமைந்த பிரச்சாரப்பாடல்களைப் பற்றிய அலசல்கள்.

வன் பிரித்த குடும்பங்கள் எத்தனை? ஆசிரமத்துக்கு வரும் தம்பதிக்கு அவனின் ஆஸ்தான வழக்கறிஞர் வழக்காடி  விவாவகத்து வாங்கித்தர எவ்வளவு கட்டணம்? அவன் சாமியாரினியாக்கிய அழகிய, நன்கு படித்த பெண்கள் தான் எத்தனை? இதில் நித்தியானந்தன் தன் மோசடியை எப்படி துவங்கினான்? எப்படி நடிகைகளை வசமாக்கினான்?,

ன் தமிழகத்தில் ஆசிரமம் துவங்காமல் பெங்களூருவின், பிடதியில் ஆசிரமம் துவங்கினான்? பிரம்மச்சரியம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டு சுமார் 5000 குடும்பங்களை சின்னாபின்னமாக்கிய கொடியமிருகத்தை எத்தனை முறை தூக்கில் போட்டாலும் தகும் என ந்மக்கு தோன்றவைக்கும்.

சாருவின் மனைவி மற்றும் 300 பேர்,நித்தியானந்தனுடன் கும்பமேளாவுக்கு தலைக்கு 1லட்சம் கொடுத்து மாட்டிக்கொண்டது எப்படி? எல்லோரிடமும் ஓசியிலேயே ஓ** **** நித்தியானந்தனுக்கும் ,ஏனைய மகா அவதார் பாபாஜி, காசி மாநகரத்தின் அகோரிகள், சாய்பாபா,போன்ற மகான்கள் எப்படி வேறுபடுகின்றனர்?என்று அடி ஆணிவேரையே உருவி ஆராய்ந்திருக்கிறார். 

து குமுதம் ரிப்போரில் வெளிவந்திருந்தாலும் தொகுப்பாக படிப்பதில் உள்ள சுகமே தனி, படிக்காத தொடர்களை அருமையாக தொடர்ச்சியாக படிக்க முடியும்.புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தில் இடையே நம் நண்பர் கருந்தேள் ராஜேஷைப்பற்றியும் அவரின் மனைவியை பிடதி ஆசிரமத்திலிருந்து மீட்க உதவியதாக மறக்காமல் குறிப்பிட்டிருந்தார்.

ல்லவற்றிற்கும் மேலாக கடைசி 29வது அத்தியாயத்தில்  சாரு நித்தியானந்தனுக்கு முன்வைத்த 25 சாட்டையடி கேள்விகள், நித்தியானந்தனுக்கு நாக்கு என ஒன்றிருந்தால் அதைபிடுங்கிக்கொண்டு சாகட்டும், அவனை நடைபிணமாக்கும் இந்த சரசம் சல்லாபம் சாமியார் புத்தகம், இதற்கு யாரும் முன்னுரை எழுதாது என்பது மாபெரும் இழுக்கு, இதை ஆங்கிலத்தில் அதன் சாரம் கெட்டுப்போகாமல் மொழி பெயர்க்கவேண்டும் என்பதே என் அவா.நடக்குமா பார்ப்போம்?!!!!

தை என் உறவினர்கள் அத்தனை பேருக்குமே சிபாரிசு செய்தேன், அத்தனை பேருமே அதை கண்கள் அகலக் கேட்டு நித்தியானந்தனை அஷ்டோத்திர கெட்டவார்த்தைகளால் திட்டி  மனதில் உள்ள பாரத்தை இறக்கினர், ஒரே புத்தகத்தை பல வருடங்களுக்கு பிறகு எங்கள் வீட்டிற்குள்  போட்டிப் போட்டு பறித்து படித்தோம் என்றால் அது இந்த புத்தகம் தான்.

ன்றைய தேதியில் இத்தனை தைரியமாக ஒரு ஆன்மீக பிராதுவை விமர்சித்து  இவ்வளவு ட்ரான்ஸ்பிரன்ஸியாக அதுவும் ஒரு தமிழ் இலக்கிய உலகில் எழுதுவது துர்லபமே, சாரு இந்த புத்தகம் எழுதியதற்கு அவருக்கு கோடானு கோடி நன்றிகள்,இதை மிகுந்த நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் பதிப்பித்த கவிஞர், மனுஷ்யபுத்திரனின் உயிர்மை வெளியீட்டிற்கு மிக்க நன்றிகள்.புத்தகம் விலை-ரூ85

எழுத்து சுதந்திரம் இல்லா ஜனநாயகம் ஒரு போலி ஜனநாயகம்?!!!
======00000=======

மகிழ்ச்சி [Magizhchi][2010]


ண்பர்களே!!!,
நேற்று தான் மகிழ்ச்சி திரைப்படம் காண வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த நிறைவை அது அளித்தது, இதை ஏன் சினிமா ஆர்வலர்கள் அதிக அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க தவறிவிட்டார்கள்? என்னும் கேள்வியும் தொக்கி நின்றது.
எழுத்தாளர் நீல.பத்மநாபனின் தலைமுறைகள் என்னும்  நாவலை நண்பர் செ.சரவணகுமாரின் அறிமுகம் மூலமே நான் அறிவேன், அதன் கதையையும் அவரின் இந்த பதிவின் மூலமே அறிந்திருந்த எனக்கு அதை உடனே பார்க்க ஆவல் எழுந்தது.

சென்னையில் எங்கு தேடியும் இந்த படத்தை பற்றிய தகவலே இல்லை.நிறைய பேர் இந்த படத்தை பார்க்க விரும்பியதையும் நான் அறிவேன்.யாரும் இவ்வளவு நல்ல திரைப்படத்தை வாங்கி திரையிடுவதில் ஆர்வம் காட்டாதது வியப்பையும் வேதனையையுமே தந்தது. மக்களின் ஆர்வம் டிவி சீரியல்கள் மீது அதீதமாக படிந்துவிட்டதால் இன்றைய இயக்குனர்கள் யாரும் ஒரு சமூகத்தாரை மையமாக வைத்து பின்னப்படும் குடும்பக்கதைகளை எடுக்க துணிவதேயில்லை, மாயாண்டி குடும்பத்தார், வம்சம் போல விதிவிலக்குகள் இருந்தாலும் அவை சாதிச்சண்டை, பங்காளிகளுக்குள் அடிதடி போன்றவையையே முன்னிறுத்தி பயணிக்கும்,

து போல அதிகம் கொண்டாடப்பட்ட  படைப்பிலக்கியத்தை திரையில் வடிக்கும் போது கூட எழுத்தாளரின் அசலான படைப்பை திருத்தியோ மாற்றியோ செய்யத்துடிக்கும் இயக்குனரின் அதிமேதாவித்தனமே தெரியும், இதில் அதிர்ஷ்டவசமாக தலைமுறைகள் நாவலே தெரிகிறது, இது எழுத்தாளர் நீல.பத்மனாபனுக்கு கிடைத்த மரியாதையாகவே கண்டேன். அவருக்கு முழுமையாக க்ரெடிட்டும் கொடுத்திருப்பது,இயக்குனர் வி.ஏ கௌதமனின் நேர்மையை பறை சாற்றுகிறது.  மேலும் இவர் தமிழில் பேசப்பட்ட இது போன்ற படைப்புகளை  திரையில் வடிக்கவேண்டும், இவரின் ப்ரொடக்‌ஷனுக்கு பெயரே அதிர்வு திரைப்பட்டரையாம், இயக்குனர் எல்லாவற்றையுமே சிறந்த கலை நுணுக்கத்துடன் அணுகியிருக்கிறார் என்பது படம் பார்த்தால் ஒருவருக்கு புரியும்.

டம் உண்மைச்சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது ,என்ற குறிப்புக்கு பிறகு வண்ண ஓவியங்களை வைத்துச் சொல்லப்படும் பலநூற்றாண்டு வருடத்துக்கு முன் வாழ்ந்த தங்கம்மை, தாயம்மை என்னும் நாட்டார் தெய்வங்கள் பற்றிய நேரேஷன் ஃப்ளாஷ்பேக்கை நாம் பார்க்கிறோம், இது மிக எளிமையும் அருமையாகவும் எடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம்  அரசனுக்கே குலஅபிமானத்தால் பெண் தரமறுத்து  தங்கம்மை, தாயம்மை  இருவரையும் உயிருடன் புதைத்த நகரத்தார் வம்சம் பற்றியும் அவர்களுக்கு தங்கள் சாதி எவ்வளவு உயரியது? என்றும் அறிகிறோம்.அதன் பின்னர் சமகாலத்தில் காவிரிப்பூம்பட்டிணத்திலிருந்து இரணியல் என்னும் சிற்றூரில் வந்து குடியேறிய ஏழூர்ச்செட்டி வம்சத்தின் மூன்றாம் தலைமுறையில் உண்ணாமலை ஆச்சியின் [சுகுமாரி] குடும்பத்திற்குள் நாம் நுழைகிறோம்.

ண்ணாமலை ஆச்சியின் பேரனாக திரவி என்னும் பாத்திரம்,டீச்சர் ட்ரெயினிங் முடித்துவிட்டு வேலைக்கு காத்திருக்கிறார்.,அவரைவிட ஒன்றரை வயது மூத்த அன்பு சகோதரி நாகு என்ற நாகம்மை  எனும் மற்றொரு பாத்திரம். திரவிக்கு தங்கையாக விசாலம் என்னும் இன்னொரு பாத்திரம். இயக்குனர் கௌதமனே திரவி என்னும் பிரதான பாத்திரத்தில் நடித்ததும் அழகு. ஏனைய நகரத்தார் இன ஆண்கள் ஆடை அலங்காரங்களில் ஆர்வமின்றி எளிமையாகவே இருப்பர். அவர்களுக்கு முக்கியம் குடும்பம், தொழில், இறைவழிபாடு. அதற்கு எளிய தோற்றமுள்ள இவர் பாந்தமாய் பொருந்தினார். 

குழலி என்னும் பாத்திரத்தில் நடிகை அஞ்சலி திரவிக்கு முறைப்பெண்ணாக வந்தார் நல்ல அழகும் குறும்புத்தனமான நடிப்பையும் இவர் கண்ஜாடைகளாலேயே வெளிக்காட்டியிருந்தும், அவருடன் நீரில் நனைந்து இயக்குனர் இரண்டு பாடல்களை செய்தும் தானே கதாநாயகன் எனும் ஆசையில், கதாநாயகியை நனையவிட்டு தோலுரித்து காட்டியும், தொன்று தொட்டு இயக்குனர்கள் செய்யும் தவறையே செய்துள்ளார்.இடுப்பு தொப்புள் காட்டினால் தான் விரசம் கிடையாது, கதைக்கு அவசியமில்லாத, அஞ்சலி  முதல் மரியாதை ராதா போல சீலை அணிந்து  ஆற்றில் அருவியில் நனைந்து புரண்டு பாடி ஆடும், இரண்டு பாடல்களுமே எனக்கு அநாவசியமாய் பட்டது, வினியோகஸ்தர்களுக்காக கூட வைத்திருக்கலாம், அதற்கு பதில் நாவலில் வரும்  சின்ன  சின்ன டீடெய்ல்களை படமாக்கியிருக்கலாம் என்பதே என் ஆதங்கம். விட்டுவிடுவோம். 

முக்கியமாக சொல்ல வேண்டிய இன்னொரு பாத்திரம் கூணாங்கனிப்பாட்டா [வி.எஸ்.ராகவன்] இவரை எல்லோரும் பாட்டா என்கிறனர்,அப்படி ஒரு அன்பான யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார் மனிதர், இவரை பாலச்சந்தர் தயாரித்த டீவி சீரியல்களில் பார்த்து எனக்கு  மிகவும் பிடிக்கும் ,மூத்த தலைமுறை மனிதராக இருந்தாலும் இளையதலை முறையின் கருத்துக்களுக்கு மிகவும் மதிப்பளிக்கிறார். இவரின் தங்கை தான் உண்ணாமுலை ஆச்சி. புதிய தலைமுறையின் முற்போக்கு கருத்துக்களே சற்றும் ஒவ்வாத ஆச்சிக்கு மெதுவாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கும் மைய பாத்திரம் பாட்டாவுக்கு. பாட்டாவிற்கு பொணமு ஆச்சி, அணஞ்சிப்பிள்ளை ஆச்சி என இரு மனைவிகளும், ஊருக்கு வெளியே அம்முக்குட்டி எனும் மலையாளிப் பெண்மணியின் தொடர்பும் உண்டு. அம்முக்குட்டியின் மூலம் ஒரு அழகியபேத்தியும் உண்டு. அந்தப்பெண் திரவியை ஒருதலையாகக் காதல் செய்கிறாள். திரவி தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் செத்துவிடுவேன் என்றிருக்கிறாள். தாத்தா பாட்டா தன் இளமைக்காலங்களில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு, தன் சொத்துக்க்களை பெண்சுகத்திலேயே அழித்திருக்கிறார். இப்போது மத்தளம் போல இரண்டு மனைவிகளிடமும் ஏச்சுபேச்சுடன் அடிவாங்குகிறார்.

யக்குனர் சீமானுக்கு நடிப்பு மிக இயல்பாய் வருகிறது, அவர் இனிமுழுநேர குணச்சித்திர நடிகராகவே ஆகலாம். இதில் திரவியின் தாழ்த்தப்பட்ட சமூக நண்பன் குற்றாலமாக வருகிறார். ஒரு காட்சியில் இன்று மொச்சை மூட்டை சகாயவிலைக்கு கிடைத்தது அதுதான் வாங்கிவந்து தெருத்தெருவாய் போய் கூவி விற்றேன், என்று திரவியிடம்  சொல்லியபடி மொச்சை மூட்டை கட்டப்பட்ட சைக்கிளை தள்ளிக்கொண்டே சட்டையை அணிவார். நாவலை முழுக்க ஒன்றி படித்திருந்தால் ஒழிய , இப்படி கதாபாத்திரமாக  மாறமுடியாது. தன் ஆடி அடங்கிய பக்கவாதம் தாக்கிய அப்பாவை தனிஆளாக பார்த்துக்கொள்கிறார். சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சுயமரியாதையுடனான முற்போக்கு சிந்தனைகளுடன்  வாழும் பாத்திரம் இவருக்கு மிகவும் பொருந்தி வந்துள்ளது.கஞ்சா கருப்பும் உண்டு, இரண்டு மூன்று காட்சிகளில் வருகிறார்.அவ்வளவுதான்.

டத்தில் வரும் கொடியபாத்திரம் என்றால் அது புத்தன் தெருவைச் சேர்ந்த செவந்த பெருமாள் [சம்பத்] பாத்திரமே, இவன் திரவியின் சகோதரி நாகுவை  ஆறு மாதத்திற்கு முன்பு  தான் விமரிசையாக,சீர் செனத்தி வலியக்கேட்டு வாங்கி திருமணம் முடித்தான். மளிகைக்கடை நடத்தும் இவன் மைனர் போல உடுத்திக்கொள்கிறான், புல்லட்டிலும் வலம் வருகிறான். ஒரு நடிகன் வரைந்து கொள்வது போன்ற மீசையுடன்  இருக்கும் ஒரு தடிப்பயல், ஆண்மைக் குறைபாடுமுள்ளவன்.  ஊரார் முன்னர் தன் குறை எடுபடக்கூடாது என்று, நாகம்மையை வெறும் எட்டே மாதத்தில் வாழாவெட்டியாக திருப்பி அனுப்பிவிடுகிறான்.  நகரத்தார் சமூகத்தில் ஆணுக்கு என்ன உரிமை இருக்கிறதொ அதே போன்றே பெண்ணுக்கும் சம உரிமை உண்டு.ஆண் தொழிலை கவனித்தால்,பெண் வீட்டு நிர்வாகத்தை கவனிப்பாள்,விவாகரத்து என்பதே கேட்க முடியாத சமூகம்.அப்படி ஒரு சமூகத்தில் கட்டிய மனைவிக்கு செவந்த பெருமாள் கூசாமல் வன்கொடுமை செய்கின்றான்.

திரவியின் தந்தை நாகரு பிள்ளை எவ்வளவோ கெஞ்சியும் ஊரைக்கூட்டி பேசியும் நாகுவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறான் இந்த கிராதகன். அவன் அம்மாவோ படு கிராதகி, கொலைபாதகி,அரிசியில் கற்களை பொறுக்காமல்  தான் சோறு வடித்துவிட்டு, பழியை மருமகள் மேல் கூசாமல் சுமத்தி அடியும் சித்திரவதையும் மகனிடமிருந்து வாங்கித்தரும் இழிபிறவி. நாகம்மை பிள்ளை பெறவே தகுதியில்லாதவள் என்றும்,அவள் ஒரு பெண்ணே அல்ல,  என்றும் அவளை புண்படுத்தி நடைபிணமாக்கும் இவனின் பாத்திரம் , காணும் யாருக்கும் கோபம் பொத்துக்கொண்டு வரும். திரவிக்கு அவன் படித்த அரசுப்பள்ளியிலேயே ஆசிரியர் வேலை கிடைக்கிறது, அதுவும் அவனுக்கு பாடம் நடத்திய   மோசஸ் வாத்தியார்[பிரகாஷ்ராஜ்] தலைமையிலேயே கிடைக்கிறது, அவருக்கும் பெருமையோ பெருமை. அது முதலே திரவிக்கு மிகுந்த பக்கபலமாய் ஆகிறார் மோசஸ் வாத்தியார்.

ரு நாள் மோஸஸ் வாத்தியாரும் திரவியும்  நாகுவை  ஊரின் பெண் மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துப்போகிறார்கள். மருத்துவர் சகோதரி நாகுவை நன்கு பரிசோதித்த பின்னர்  நாகுவிடம் எந்த குறையும் இல்லை, செவந்தபெருமாள் தான் ஆண்மையற்றவன். என்னும் சுடும் உண்மையை இருவக்கும் உரைக்க கொதிக்கின்றனர். அதன் பின்னர் அக்காவின் கணவன் செவந்த பெருமாளிடம் வீறுகொண்டு எகிறும் திரவியின் கோபம் மிக மிக யதார்த்தம். பெண்களின் மீது படத்தில் பிரயோகிக்கப்படும் காலால் நெஞ்சில் மிதிப்பது, சோற்றில் கண்டெடுத்த கல்லைக்கொண்டே நாகுவின் கையை கீறி ரத்தம் வர காயப்படுத்துவது, உயிரோடு மண்ணை தள்ளிமூடுவது, போன்ற வன்முறை மிகுந்த ஆயாசத்தை தருகிறது, இருந்தாலும் நாவலில் இருக்கும் டீடெய்லை அவர் பின்பற்றியிருக்கக்கூடும் என்பதால் விட்டுவிடுவோம்.

வாழாவெட்டியான மூத்த சகோதரி நாகுவை மறுமணம் செய்து கொண்டு நல்லபடியாக வைத்து வாழத்துடிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நண்பன் குற்றாலம். இதை துணிந்து ஏற்றுக்கொண்ட திரவியும் சகோதரி நாகுவும்.  இதை அறவே ஏற்றுக்கொள்ள மறுக்கும் மூத்த தலைமூறை பெரிசுகள் உண்ணாமுலை ஆச்சி, பாட்டா, நாகரு பிள்ளை அவர் மனைவி ஆகிய நால்வரும். அடுத்து திருமணத்துக்கு காத்திருக்கும் வயதுக்கு வந்த தங்கை விசாலம் வேறு,  நாகுவின் திருமணம் செய்ய வாங்கிய கடனில் அடமானத்தில் இருக்கும் வீடு ஒரு பக்கம்,  தன் பெண் குழலிக்கு திரவியுடன் உடனே திருமணத்தை நடத்தத்துடிக்கும் தாய்மாமன் மறுபக்கம், பொய்த்துப் போகும் அபாயத்தில் திரவி குழலியின் காதல்,!!! ....

இனி என்ன ஆகும்?!!! அருமையாக திரைப்படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.  ஒருவருக்கு நாவலை படிக்கும் அனுபவம் வாய்க்கிறது. சில குறைகள் இருந்தாலும் பெரிதாக தெரியவில்லை. தமிழில் இது போல படைப்புகள் எழுத்தாளர்களுக்கு மரியாதை செய்து வருவது, இது போன்ற படங்களுக்கு மக்களாகிய நாம் கொடுக்கும் வரவேற்பை பொறுத்தே அமைகிறது.   படத்தின் ஒளிப்பதிவும் ,இரண்டு பாடல்களும்,இசையும் பிண்ணணி இசையும்  மிகமிக நன்றாக இருந்தது,நாம் வித்யாசாகரை மிகவும் இழக்கிறோம் அவர் இப்போது மலையாளத்தில் கோலோச்சுகிறார்.,  ஆகமொத்தத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் தவறவே விடக்கூடாத ஒரு குடும்பப்படம்.


ந்த பொருளுக்குமே விளம்பரம் அவசியமாகிறது, உணவுப்பண்டத்தை தவிர இன்றைய உலகில் எல்லாவற்றையுமே கூவிக்கூவி விற்க வேண்டியதாயுள்ளது. இலக்கியம் நிறைய மக்களை சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் இப்படி பாடுபட்டு படம் எடுத்துவிட்டு அதற்கான மார்க்கெட்டிங்கை, விளம்பரத்தை அளிக்கத் தவறியது விந்தையும் வேடிக்கையாயும் உள்ளது, தமிழ் திரையுலகின் பகாசுரர்களான சன் குழுமம், அல்லது ரெட் ஜெயண்ட்டிடம் இதை விற்றிருந்தாலும் நிறைய மக்களை சென்று சேர்ந்திருக்குமே!!! என்ற ஆதங்கம் எழுந்தது . அவர்கள் நினைத்தால் காக்கை குருவியைக் கூட ஊர்ப்பருந்தாக்கி உயரப்பறக்கவைப்பார்களே?!!!, உலகமகா சாமர்த்தியசாலிகள்.

இது நண்பர் செ.சரவணகுமார் எழுதிய தலைமுறைகள் புத்தக விமர்சனத்தின்   சுட்டி. இதில் நாவலைப்பற்றிய சீரான அலசலையும் கதையையும் ஒருவர் படிக்கலாம்.
மகிழ்ச்சி=பெருமகிழ்ச்சி
=======00000=======
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
=======00000=======

அமீரகம் வந்தாச்சு!!!

ருமை நண்பர்களே!!!

நண்பர் கருந்தேளுடன்
லம் தானே?நான் இன்று அதிகாலை தான் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் துபாய் வந்தேன்,இரவு 9-40 கிளம்ப வேண்டிய விமானம் இரவு 10-15க்கு தான் கிளப்பினர்.சென்னை விமான நிலையத்தில் ஏசியையே அணைத்து வைத்துவிட்டனர்.ஒரே வேக்காடு.அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் முதன் முறை வாசித்தேன்.மிக அருமையாக துவங்கியது நாவல்.சினிமா புரொடக்‌ஷன் கம்பெனி மேனேஜரை மையமாக வைத்து சரியான வீச்சில் எழுதப்பட்டது, நண்பர் சரவணகுமார் மிகவும் சிலாகித்து விமர்சனம் எழுதியிருப்பார்.விரைவில் அதை ஆழ்ந்து படித்தும் முடிக்க வேண்டும்.

நண்பர் மயில்ராவணனுடன்
ந்த முறை சரியாக நான்காம் தேதி கிளம்பியதாலும்,அதே நாள் புத்தக கண்காட்சி துவங்கியதாலும் புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியவில்லை.சாருவின் 7புத்தகங்களையும் படித்து முடித்திருந்தேன்.அதில் ஏனைய புத்தகங்கள் அவர் இணையத்தில் இருந்து தொகுத்தவையாகவே இருந்தது.சரசம் சல்லாபம் சாமியார் மிகவும் பிடித்தது.ஏனைய புத்தகங்களை ஒத்த சிந்தனையுடைய நண்பர்களிடம் கொடுத்து படிக்க சொல்லியிருக்கிறேன்.ஊரில் அவ்வப்போழுது நல்ல மழையை எதிர்கொண்டதும் நல்ல நினைவுகள்.ஊரில் 100 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்களை அதிகம் பார்க்க முடிவதில்லை,ஊரில் அதிகம் புழங்குவது 1000 ரூபாய் நோட்டுக்கள் தான்,முன்பெல்லாம் 1000 ரூபாய்க்கு சில்லரை கிடைப்பதே படு சிரமம்,இப்போது கோவில் பூக்கடையில் கூட கிடைப்பதை வைத்து சொன்னேன்.இது அடுக்குமா?எங்கே செல்லும் இந்த பாதை?ஊருக்கு நிரந்தரமாக திரும்பவே விலைவாசியை நினைத்து பயமாக வருகிறது.

ந்த விடுமுறையில் செலவு செய்த பணத்துக்கு [தலைக்கு 20 ரூபாய்] பிரயோசனமாக இருந்த ஒன்று என்று!!! எனப் பார்த்தால் வண்டலூர் மிருககாட்சி சாலையில் [செவ்வாய் விடுமுறை] லயன் சஃபாரிக்கு [தலைக்கு 20 ரூபாய்]  சென்று வேனில் போய் 3 அடி தொலைவில் இருந்து ஆண்சிங்கம்,பெண்சிங்கம் இரண்டையும் பார்த்தது,[ஹைதராபாதின் மிருககாட்சி சாலை எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்]வெண் புலிகளின் விளையாட்டையும் பார்த்தது,பின்னர் தலைக்கு நூறு ரூபாய் தந்து யானை மீது குடும்பத்துடன் சவாரி செய்தது[4-00 முதல் 5-30வரை மட்டுமே]மிக அருமையான அனுபவம் என்பேன்,

துவரை கோவில் யானையிடம் ஆசி மட்டும் வாங்கியிருந்த எனக்கு அது மிகப்புதிது, 2008ல் இருந்தே யானை சவாரி புழக்கத்தில் உள்ளதாம்,என் முறை வர சுமார் 3 வருடமாகியிருக்கிறது, உள்ளே சுற்றிப்பார்க்கச் செல்ல சைக்கிள் வாடகைக்கு கிடைக்கிறது[டெபாசிட்-200ரூபாய்] மணிக்கு 15ரூ முதல் 30 ரூ வரை.[கியர் சைக்கிள்] ,மிருக காட்சி சாலையை பணியாளர்கள் ஓரளவுக்கு நன்றாகவே பராமரிக்கிறார்கள். நான் சிறு வயதில் பார்த்திருந்த ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் மிகவும் வளர்ந்து ஆஜானுபாகுவாயிருந்தது புகைப்படங்களை பிகாசாவில் ஏற்றிய பின்னர் பகிர்கிறேன், விடுமுறைக்கு பின்னான காலகட்டம் மிகவும் சோம்பேரித்தனமாய் உள்ளது. இன்று காலை சரியாக 8-30 மணிக்கு வேலைக்கு வந்தேன்.எதோ சோளப்பொரி போல வேலைகள் இருந்தது,5-30க்கே அவற்றை முடித்த பின்னர் இதோ தட்டச்சுகிறேன். இனி மேல் தான் ஒவ்வொன்றாக அசைபோட்டு எழுதவேண்டும்.

ருமாத விடுமுறையில் கண்டுகளித்தவை தான் எத்தனை?சென்ற பயணங்கள் தான் எத்தனை?.என் செல்போனில்  நிறைய மிஸ்கால்கள் இருந்தன, கோவிலில் உள்ளே இருந்ததால் எடுத்திருக்க முடியாமல் போயிருக்கும்,திரும்ப அழைத்துப்பார்த்தால் அநேகம் ஏர்டெல் காலர் ட்யூன் எண்ணாக இருந்து தொலைத்தமையால் நிறைய எண்களை திரும்ப அழைக்கும் எண்ணத்தை கைவிட்டேன்,நண்பர்கள் தவறாக எண்ண வேண்டாம். அதாவது பரவாயில்லை!!! வண்டியில் போய்க்கொண்டே இருக்கும் போது போன் வருகிறது, ஆனால் ஒன்றும் கேட்க வில்லை,சரி என்று கட் செய்ய எண்ட் பட்டன் ப்ரெஸ் செய்தால்,எதோ ஒரு சர்வீஸ் ஆக்டிவேட் ஆகிறது, எப்படியெல்லாம் கிளம்புறாங்கப்பா!!?இது வரை நான் காலர் ட்யூனே வைத்ததில்லை.வைக்கவும் போவதில்லை.

ன்வீடான பம்மலில் இருந்து பல்லாவரம் [2கிமீ தூரம்]போக LPG ல் ஓடும் ஆட்டோவிற்கு 1மாதம் முன்னர் 40 ரூபாய் வாங்குவார்கள்,இப்போது பெட்ரோல் 3 ரூபாய் விலை உயர்ந்ததால் அத்துடன் 10 ரூபாயை அடாவடியாக உயர்த்தி 50 ரூபாய் ரவுண்டாக வாங்குகின்றனர்.இதற்காகத்தான் குடும்பத்துடன் வெறும் 10கிமீ போனாலும் ஃபாஸ்ட்ட்ராக் அல்லது சென்னை கால் டாக்ஸி சொல்லி தருவித்து அதிலேயே செல்கிறோம்.ஆட்டோ அராஜகத்துக்கு முன் துபாய் டாக்ஸியே தேவலைப்பா!!!


ருமுறை ஃபாஸ்ட் ட்ராக் டாக்ஸியில் என் வீடு இருக்கும் பம்மலில் இருந்து தாம்பரம் செல்ல என்னிடம் 173 ரூபாய் வாங்கிவிட்டான்[மீட்டர் காட்டிய தொகை].என் மனைவியோ போனில் பேசுகையில்,130 ரூ தான் வரும் முதல் ஐந்து கிலோமீட்டர் சென்றதும் தான் மீட்டரே ஓட ஆரம்பிக்கும் என்றாள்.அப்போது தான் கால் டாக்ஸி மூன்று கிலோமீட்டருக்கு முன்பே அதாவது அவன் ஏர்போர்டிலே இருந்து வருகையிலேயே, மீட்டரை போட்டுக்கொண்டு வந்தது புரிந்தது,எப்படியெல்லாம் நம்மை ரூட் கேட்டும்,பல கேள்விகள் கேட்டும்,எஃப் எம் கேட்டும்,காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டியும் திசை திருப்புகின்றான்கள்?.

து தான் நான் சென்னையில் அடைந்த ஒரே ஏமாற்றம். அதன் பின்னர் கால் டாக்ஸி பிடிக்கும் போது மீட்டரை ஃப்ரெஷாக கண்முன்னரே போட சொன்னேன். இதாவது தேவலை, ஒரு முறை எக்மோருக்கு ரயில் பிடிக்க,கால் டாக்ஸியில் செல்லும் போது கிண்டி ஸ்பிக்கின் எதிரே உள்ள கூட்டமான ஒரு பெட்ரோல் பங்கில் சொல்லாமலே நுழைந்த கால் டாக்ஸி பெருங்கூட்டத்தில், நுழைந்து கேஸ் ஃபில் செய்தான்,10 நிமிடம் ஆகியிருந்தது,அதற்கு வருத்தம் கூட படவில்லை,எக்மோரில் மீட்டர் தொகை செலுத்துகையில் 10 நிமிடம் வெயிட்டிங் தொகை 8 ரூபாயை சரியாக கழித்துக்கொண்டே செலுத்தினேன். எப்போதும் டிப் கொடுப்பவன், அன்று கொடுக்கவில்லை. நீங்களும் கண்முன்னர் நடக்கும் தவறுகளை விடாமல் கேளுங்கள்,அப்போது தான் சிலரேனும் திருந்துவார்கள்.
=====0000=====
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)